மறுமணம்

#1
இதுவும் அதே போட்டிக்கு எழுதின கதை தான் 😍😍😍
படிச்சிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்
71dc3fcde3064d4027f8bfd0bf2d0e9726602133.jpeg

"மாதவி கையில் இருக்குற மருதாணி சிவக்கிறதை வைத்து தான் உங்க காதலின் அளவை பார்க்கனும் மாப்பிள்ளை சார்!" என்று ராகவனை கேலி செய்தது அந்த தோழியர் பட்டாளம்.

மாதவி வீட்டில் அவர்கள் காதலை ஏற்காமல் வேறு மாப்பிள்ளைக்கு மணமுடித்து ஒரு வருடத்திலேயே விதவையாய் நின்றார் கைக்குழந்தையுடன்.

மாதவியின் பழைய காதல் கதையை முதல் வாரம் அவர் சொல்ல மறுவாரம் திருமணத்தை ஏற்பாடு செய்தனர் அவரின் பக்கத்து வீட்டிற்கு புதிதாய் வந்த கல்லூரியில் பயிலும் தோழியர் நால்வர். ராகவனும் காதல் தோல்வியில் வேறு மணமுடிக்காததால் எல்லாம் சுமூகமாக நடந்தேற, மாதவிதான் தன் மகள் சித்ரா இந்த திருமணத்தை ஏற்பாளா என்று பயத்துடனேயே ராகவன் கரங்களில் தாலியேற்றார்.

திடீரென அங்கு அழகு தேவதையாய் ஓர் சுட்டிப்பெண் இளஞ்சிவப்பு நிற பாவாடை சட்டையில் வந்து நேராக மாதவியிடம் சென்று கையிலிருந்த பரிசை நீட்டி, "ஹேப்பி மேரீட் லைஃப் அம்மம்மா!" என்று முத்தமிட முயல, மாதவி குனியும் முன்னர் அந்த வாண்டை தூக்கி முத்தமிட வைத்தார் அவளின் தாயும் மாதவியின் மகளுமான சித்ரா.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top