• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யது வெட்ஸ் ஆரு 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
ஹாய் கண்மணிஸ் அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்…படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க...
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
அத்தியாயம் 3



முதல் நாள் இரவு….



"இந்தா பிடி...வேகமா போட்டுக்கோ...கிளம்பலாம்..."என்று யாதவின் கையில் ஹூடெட் வகை கொசுவுசட்டையை (T shirt ) கொடுத்துவிட்டு வேகமா மாட்டிட்டு கிளம்பு என்பதுப் போன்று அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஷா...

ஷாவை ஒரு புரியாதப் பார்வை பார்த்தவன் கண்களை சுருக்கி அவளை வெளியேச் செல்லுமாறு கண்களாலே கூறினான் யாதவ்...அவனின் செய்கையை உணர்ந்துகொள்ள முடியாதவள் என்ன என்பது போல் தலையை ஆட்டி கேட்டாள்…

"வயசு பையன் டிரஸ் சேன்ஞ் பண்ணப் போறேன்..ஒன்னு வெளிய போய் நில்லு...இல்லை கண்ணை மூடு... இப்படி குறுகுறுன்னு பார்த்தா என்ன அர்த்தம்..."

யாதவ் கூறிய வார்த்தைகளில் கடகடவென்று சிரித்தவள்"சீரியஸ்லி...படத்துல ஐஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவை சட்டையை கழட்டிட்டு என்னையும் பாரு என் சிக்ஸ் பாக்கையும் பாருன்னு அலைவ... இப்ப வந்து கண்ணை மூடு காதை மூடுண்ட்டு இருக்க...வாயை மூடிட்டு மொத சட்டையைப் போட்டுட்டு கிளம்பு மேன்...இல்லாட்டி உன் சோ கால்டு பெண் ரசிகைகள் வண்டியைப் பார்த்துக் கண்டுபிடிச்சுட்டு செல்பி...கிஸ்ன்னு அலப்பறை பண்ண போறாளுக..."என்று நக்கலாகச்சொல்லவும் ஷாவை முறைத்தவன்

"அது நடிப்பு...இது நிஜம்...நடிக்குறவனா இருந்தாலும் எனக்கும் கூச்சம்...நாச்சம்...கற்பு எல்லாமே இருக்கு மா….நீ வளவளன்னு பேசாம வெளியே போய் நில்லு..."என்று யாதவ் கூறவும்...

"முடியல டா சாமி...உனக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது..மூடிட்டு போடு.."என்றவள் தன் பார்வையை வேறுபுறம் திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டாள்…

"இப்ப நீ போகமாட்ட..."

"எப்பயும் போக மாட்டேன்..."சிறிது நொடிகள் அமைதியாக இருந்தவன்.....தோரணையாக "டக் இன் பண்ணி ஷர்ட் போட்ருக்கேன்...அதை கழட்டிட்டு போடணும்னா...ஜிப் எல்லாம்..."என்று அவன் முடிக்கக்கூட வில்லை கார்க்கதவை திறந்து வெளியேப் போய் நின்றுக் கொண்டாள்…

"சொன்னா கேட்கணும்..."என்று நக்கலாக சிரித்தவன்...உடையை மாற்றிவிட்டு அவளை உள்ளே வருமாறு கார்க்கண்ணாடியை இறக்கி சைகை செய்தான்...

ஷா அமர்ந்ததும் வண்டி பயணத்தை தொடர்ந்தது…

வழியில் முதலில் வந்த பப்பை இவள் வேண்டாமென்று சொல்ல... அடுத்துவந்ததை இவன் வேண்டாம்மென்று சொல்ல...இப்படி மாற்றி மாற்றி வேண்டாம் என்றுச் சொல்லிக் கடைசியாக சென்னையின் புறநகரில் இருந்த சகல வசதிகளையும் கொண்டிருந்த ஹோட்டலிற்கு சென்றனர்....ஆடம்பரமாக அமைதியாக இருந்தது அந்த இடம்...

வரவேற்பில் பாரில் "snug" உள்ளதா என்றுக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டவர்கள்...அதில் ஒன்றை பதிவு செய்துவிட்டு அங்குச்சென்றனர்...

"snug " என்பது சிறிய தனிப்பட்ட கண்ணாடியாலான அறை...மிகவும் வசதிவாய்த்தவர்கள் மட்டும் உபயோகிக்க கூடிய இடம்...இதில் இருப்பது மூலம் உள்ளிருப்பவர்களை யாராலும் பார்க்கமுடியாது...யாதவ் ஒரு செலிபிரிட்டி என்பதால் அதை தேர்ந்தெடுத்தான்....

இல்லாவிடில் எவனாவது வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டுவிட...மது மாதுவுடன் வளர்ந்து வரும் நடிகர் சல்லாபம் என்று செய்தித்தாள்களிலும்...இந்த நடிகர் செய்யும் காரியத்தை பாருங்களேன் என்று யு டுப்பிலும்... இவனுக்காகவா உங்கள் நேரம் மற்றும் பணத்தை செலவழித்து படம் பார்க்குறீர்கள் என்று முகப்பக்கத்திலும் போராளிகள் பொங்க ஆரம்பித்துவிடுவார்கள் அதை தடுக்கவே இதை செய்தான்...



பணியாளரை வரவழைத்து தனக்கு manhattan னும் ஷாவிற்கு என்ன வேண்டும் என்று விசாரித்து அவளுக்கு bloodymary ஆர்டர் செய்தான்....ஒரு நான்கைந்து ரவுண்டு நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது....வந்தப் பணியாளரை கூப்பிட்டு புதிதாக நன்றாக போதை ஏறுமாறு ஏதாவது காக்டெய்ல் இருக்கிறதா என்று யாதவ் கேட்கவும்...அந்த பணியாளர் "இருக்கு சார்...கொண்டு வரவா சார்..."என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டுவிட்டு இரு கோப்பையில் அந்த பானத்தைக் கொண்டுவந்தான்...



ஷா வேண்டாம் என்று சொல்லிவிட யாதவ்வே இரண்டையும் குடித்துவிட்டு அடுத்துக் கொண்டு வரச்சொல்லி குடித்துக்கொண்டிருந்தான்...



"போதும் டா…வெள்ளை பன்னி..."என்று ஷா கூறிக்கொண்டிருக்க அடுத்த கோப்பையை அவன்குடிக்க போக அதை அவனிடம் இருந்து பறித்து ஷா குடித்துவிட்டாள்...



"அடியேய் பஜாரி...ஏன் டி குடிச்ச...குடு டி.."



"டேய் இடியட் இது காக்டெய்ல் இல்லை டா...வேற ஏதோ ட்ரக் போல..."என்று குடித்துவிட்டு கையில் வைத்திருந்த கோப்பையை முகர்ந்து பார்த்தவாறு கூறினாள் ஷா…



"என்னவா இருந்தா என்ன டி….கொடு டி குடிச்சுட்டு செத்துப்போறேன்...தனா...தனா...என் அஞ்சலை டி அவ...”



"முண்டம் இதுக்கெல்லாம் நீ செத்துப்போக மாட்ட...வேணும்னா விஷம் வாங்கித்தரேன் குடிச்சுட்டு செத்துரு...நீ எல்லாம் படமா டா நடிக்குற...பார்க்க முடில...கருமசண்டாளம்...உனக்கும் சிலிர்த்துபோய் சில்லறையை சிதற விடுறாங்க பாரு...."

"ஏய்...என் படத்துக்கு என்னடி...தென்னிந்திய பொண்ணுங்களோட கனவு கண்ணன் டி...கோலிவுட் இம்ரான் ஹஷ்மி டி..."என்று எழுந்துநின்று இருக்கைகளை விரித்து தன்னை தானே புகழ்ந்துக்கொண்டான்…

"ஆமாம் டா...நானும் உன் முதல் படம் பார்த்ததுல இருந்து ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்..."

"கேளு டி கேளு...எப்படி இப்படி ஹண்டசம்மா இருக்கேனு தானே கேட்க போற...கேளு..."

"அதெல்லாம் இல்லை...ஏன் டா கூட நடிக்குற பொண்ணுங்களோட வாயை பிடிச்சு கடிச்சு வைக்குற...பாவம் டா...அதுவும் கனிஷ்கா பிள்ளை எல்லாம் ரொம்ப பாவம்...ஒரு படத்துக்கு 5 லிப் லாக் சீனா டா வைப்பாங்க..."என்று ஷா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே

கேட்கவும்



"நீ வரம்பு மீறி போற டி...இதையே சொல்லி தான் தனாவும் என்னை வேணாம்னு போய்ட்டா தெரியுமா...ஏன் டி நடிக்குறதுக்கும் வாழ்றதுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது...சொல்லு டி... " என்று தொண்டை இடற கண்ணீருடன் பேசினான் யாதவ்



“என்ன பொண்ணு தெரியுமா டி...பொண்ணுன்னா அப்படி இருக்கனும்...எப்பயும் புடவை கட்டி...தலைநிறய மல்லிப்பூ வைச்சு சிரிச்ச முகத்தோட...நீயும் தான் இருக்கியே..."என்று யாதவ் கூறியவுடன்



யாதவ் கண்ணீருடன் பேசவும் அவனுக்காக பரிதாப்பட்டு கொண்டு பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னை அந்த ஆராதனா கூட இணைத்து பேசவும் சிவா சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்து "அடிச்சு வாயை உடைச்சுருவேன் சொல்லிட்டேன்...என்ன டா பொண்ணுங்கன்னா வீட்டு குள்ளையே கிடக்கணும்...புருஷன் வந்தவுடனே ஓடி போய் கட்டிக்கணும்...ஏன் எங்களுக்குனு லட்சியம் எல்லாம் இருக்கக்கூடாதா….நீயும் அவனை மாதிரி தான் சொல்ற...டேய் சிவா..டேய் சிவா..."என்று உணர்ச்சிவசப்பட்டு எழுந்திருக்கவும் "ஐய்யயோ...உட்காரு டி..."என்று எழுந்துவந்தவன் அவளது இடுப்பை பிடித்து அமரவைத்தான்….



இன்று



என்று நேற்று இரவு நடந்ததை பற்றி நினைத்து பார்த்து வந்து கொண்டிருந்த இருவரும் ஒரே நேரத்தில் "டேய் இன்னைக்கு தான் சிவாக்கு கல்யாணம் டா..."



"இன்னைக்கு தான் ஆராதனாக்கு கல்யாணம் டி..."என்று கத்திக்கொண்டு இருவரும் படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்து நின்றனர்…



"ஐய்யயோ...செத்தேன்...போச்சு...போச்சு...எங்க அப்பன் வளந்துகெட்டவன் பேசியே கொல்லுவானே..."என்று புலம்பிய யாதவ்...அப்பொழுது தான் அலைபேசியை தேடினான்…



ஷாவோ கடிகாரத்தை பார்த்துவிட்டு"இன்னியராம் கல்யாணம் முடிச்சுருக்கும் டா...வா...வேகமா கிளம்பலாம்..."



"ஐய்யயோ போன் செத்துப்போச்சு டி...சார்ஜ்ர் எங்கே..."என்று யாதவ் சார்ஜரை தேட தொடங்க...



அந்த நேரத்தில் சுற்றி அறையைப் பார்த்த ஷா ஒரு முடிவுடன் இண்டர்காம் மூலம் தொடர்புக்கொண்டு இந்த ஹோட்டலின் மானேஜரை வரச்சொன்னாள்…



எப்படியும் இவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் சேதங்களுக்கு பதில் சொல்லாமல் வெளியே விடமாட்டார்கள்...அதனால் முன்பே அழைத்து அனைத்திற்கும் கட்டணம் செலுத்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டு செய்தாள்…



இவ்வளவு நேரமும் யாதவ் அலைபேசிக்கான மின்னேற்றியை தான் தேடிக்கொண்டிருந்தான்...யாதவை திரும்பி பார்த்தவள்...தனது தலையில் தானே அடித்துக்கொண்டு..."சார்...ஹீரோ சார்...இங்கே திரும்பி பாருங்க..."என்று ஷா கூப்பிடவும் என்ன என்பதுப் போல் திரும்பிப்பார்த்தான் யாதவ்…



"சார்ஜ்ர் அப்பறம் தேடலாம்...போய் கொஞ்ச நேரத்துக்கு பாத்ரூம்ல இருங்க...இல்லை குளிச்சுட்டு இருங்க….போங்க"



"ஏன்...ஏன்...நீ சொன்னதை எல்லாம் கேட்டு கேட்டு தான் இந்த நிலமைல நிக்குறேன்...இனிமேயும் கேட்கமாட்டேன்...எனக்கும் மூளை அதுல யோசிக்குற திறமையும் இருக்கு டி..."



"ஏதாச்சும் அசிங்கமா திட்டிற போறேன்...மரியாதையா சொன்னதை கேளு...இந்த ஹோட்டல் மானேஜரை இங்கே வர சொல்லிருக்கேன்...உடைஞ்ச திங்ஸ் எல்லாம் பே பண்ண..."என்று ஷா கூறவும்...ஓஹ் என்று தலையசைத்த யாதவ் ஒய்வு அறையை நோக்கிச் சென்றான்…



நிஜமாவே இவன் இவனுக்கு முப்பத்திரண்டு வயசு தானா….ஒரு விவரமும் இல்லை….என்று ஷா முடிப்பதற்குள்…



"அடியே ஷா...இங்கே வாடி..."என்று ஓய்வறையின் கதவை திறந்தவன் அதிர்ச்சியில் கத்தினான்…



"இப்ப என்ன டா…."என்று கேட்டவாறு வந்த ஷா உள்ளே இருந்ததை பார்த்து பேச நாஏழாமல் நின்றாள்...இருவரும் திரும்பி ஒருவர் ஒருவரது முகத்தை பார்த்துக்கொண்டு "சீரியஸ்லி…." என்று முகத்தை சுளித்துக்கொண்டு மேலும் கீழும் தலையாட்டிக்கொண்டு கூறினர்….



அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம் பாத் டப்பில் பல நிறங்களில் மீன்கள் ஓடிக்கொண்டிருக்க...ஒரு ஓரத்தில் பழுப்பு (பிரவுன்) நிற நாய் ஒன்று தனது பழுப்பு நிற முட்டைக்கண்களை விரித்து இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தது…



"இன்னைக்கு இதுக்கு மேல ஒரு அதிர்ச்சியை கூட என்னால தாங்க முடியாது டி….அடுத்து ஏதாவது நடந்துச்சு நேரா பரலோகம் தான்..."





"எனக்கும் தான் டா...இதெல்லாம் எங்கே இருந்து பிடிச்சுட்டு வந்துருப்போம்...முருகா முருகா...நாம நேரா குடிச்சுட்டு இங்கே வந்துட்டோம்லன்னு தானே நினைச்சேன்...இது என்ன டா...கொடுமை..."



"அதானே டி...இத்தனை சத்தம் எவனுக்கும் கேக்கலையா டி.."என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கையிலே அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது…

"ஐயோ...இதுக்கு என்ன சொல்ல போறாங்களோ...நீ உள்ளே போடா..."என்று ஷா கூறவும் "வேணாம் டி..."என்றவன் அவனே சென்றுக் கதவை திறந்தான்…
 




revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
அங்கு ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்றிருந்தார்...அவர் நடை உடை பாவனையிலே அவர் தான் manager என்று தெரிந்துப்போனது…



அந்த பெண்மணியோ இவனை பார்த்தவுடன் முதலில் அதிர்ந்தவர் மீண்டும் கண்களை தேய்த்துக்கொண்டு யாதவை பார்த்தார்…



"யா...யா..யாதவ் கிருஷ்ணா..."என்று அந்த பெண்மணி திக்கி திக்கி கேட்கவும்...அதிலே அவர் தனது தீவிர விசிறி என்று தெரிந்துக்கொண்டவன் மிதப்பாக "உள்ளே வாங்க மேடம்..."என்று கதவை திறந்து வழிவிட்டவன் "யாதவ் தான் மேடம்..."என்று அவர் கைகளை பிடித்து குலுக்கினான்...



சரியாக திட்டு விழப்போகிறது..இல்லை எதுவும் பிரச்சனையாகப் போகிறது….என்று நினைத்துக்கொண்டு எப்படி இதைச் சமாளிப்பது என்று மனதிற்குள் யோசித்தவாறு இருந்தாள் ஷா...ஆனால் அங்கு நடந்த நிலைமையே வேறு…



முன்னாடி வந்த யாதவ் ஷாவை சென்று ஒளிந்துக் கொள்ளுமாறு கையை கையை ஆட்டினான்…



"இப்ப இவன் என்னத்துக்கு கையை கையை ஆட்டுறான்..."என்று நினைத்தவள் என்ன டா என்று தலையசைப்பிலே கேட்டாள்…

வரண்டாவிலிருந்து அந்த பெண்மணி அறைக்குள் வருவதற்குள் வேகமாக சென்றவன் "மேடம் கதவு மூடலைன்னு நினைக்குறேன்...மூடிட்டு வரீங்களா...ப்ளீஸ் மேடம்..."என்று யாதவ் கெஞ்சவும்...இந்த பிறவி எடுத்ததே இவனின் சொல்பேச்சு கேட்பதற்காக தான் என்பது போன்று அந்த பெண்மணி கதவை மூடச் சென்றார் ...



அவர் திரும்பியவுடன் வேகமாக ஓடிவந்தவன் அவளை இழுத்துக்கொண்டு பெரிதாக இருந்த அலமாரியில் வைத்து கதவை அடைத்தான்…



"மூடி தான் இருக்கு..."என்றவாறு வந்தவர் அவனைப் பார்த்து லேசாக நெளிந்தார்...அவருக்கு யாதவை தவிர அந்த அறையில் இருந்த ஒன்றும் தெரியவில்லை போல...நிறக்குருடு போல இவருக்கு யாதவ் visible போல…



யாதவ் தான் "மேடம் அது வந்து..."என்று ஆரம்பிக்கவும்..."என் பேர் காஞ்சனா...எல்லாரும் காஞ்சு காஞ்சு னு தான் கூப்பிடுவாங்க ...நீங்களும் அப்படியே கூப்பிடுங்க..."



இதெல்லாம் ஷாவை அடைத்து வைத்திருந்த அலமாரிக்கு அருகில் தான் நடந்துக்கொண்டிருந்தது...ஷாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை...வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்…..



"ஹான்...காஞ்சு மேடம்..."



"சொல்லுங்க யாதவ்..."



"ஆஹா...என்ன ஒரு கொஞ்சல்...ஐயோ..."இது ஷா…

"அது வந்து காஞ்சு மேடம்….ரூமை கொஞ்சம் பாருங்களேன்…."என்று யாதவ் கூற...காஞ்சுவோ அவனை மட்டுமே பார்த்துக்கொண்டு "பார்த்துகிட்டு தான் இருக்கேன் யாதவ்..."



"அடி ஆத்தி...காதல் பார்வையாலே இருக்கு..."ஷா



"இல்லை காஞ்சு மேடம்..கொஞ்சம் நேத்து மனசு சரி இல்லை..."



"ஐய்யயோ என்னாச்சுங்க யாதவ்..."என்று அவன் பக்கத்தில் சென்று கையைப் பிடித்தார்…



"ஆத்தி..ஏமா காஞ்சு அவன் மேலே இருந்து கையை எடு மா...அப்பறம் அவன் பாலிதீன் பை போட்டு மூடிவைச்சுருந்த கற்பு காணாமப்போச்சுனு உயிரை எடுப்பான் மா..."ஷா



"அதுனால...கொஞ்சம் ரூம் டேமேஜ் ஆகிருச்சு..."என்று யாதவ் அந்த பெண்மணி கைகளை பிடித்துக்கொண்டு கூறவும்…



"ஐயோ உங்களுக்கு ஒன்னு ஆகலையே யாதவ்..."



"ஹா ஹா ஹா...டேய் உன்னை என்னமோனு நினைச்சேன் டா...ஆனால் இப்படி நினைக்கல டா..."ஷா



"எனக்கும் ஒன்னும் ஆகலை காஞ்சு மேடம்...டிவி உடைச்சுருச்சு...சுவர் எல்லாம் கொஞ்சம் கறை...பாத்ரூம்க்குள்ள நாய்...நேத்து குளிருல வெளியே கத்திகிட்டே இருந்தது...அதான் உள்ளே கூட்டிட்டு வந்தேன்...இதுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு பெ பண்ணனும்னு சொல்லுங்க...பண்ணிரலாம்..."என்று யாதவ் கூறவும்…



"உங்களுக்கு ரொம்ப இரக்க குணம் யாதவ்..."



"ஆஹா...ஆஹாஹா என்ன ஒரு புரிந்துணர்வு…."



"சரிங்க யாதவ்...மொத்தமா பாத்துரலாம்...சரி நான் போய்ட்டு கிளீன் பண்றவங்களை அனுப்பி வைக்குறேன் யாதவ்...'என்று அந்த பெண்மணி கூறியவர்



"ஒரே ஒரு favour ...ஒரு செல்பி மட்டும்..."என்று காஞ்சு ஒரு மாதிரி குழைந்துக் கொண்டு கேட்டார்...



"கண்டிப்பா காஞ்சு மேடம்..."என்றவன் அவர் அலைபேசியை பிடிக்க தடுமாறுவதை பார்த்துவிட்டு அவனே வாங்கி எடுத்தான்…



வாவ்...மேடு போர் ஈச் அதர்...pair ... ஷா



காஞ்சு வெளியே சென்றவுடன் உப்ப் என்று மூச்சை இழுத்து வெளியிட்டவன் ஷாவின் சிரிப்புக்குரலில் அவள் நியாபகம் வந்து அலமாரி கதவை திறந்தான்…



வெளியே வந்த ஷாவோ விழுந்து விழுந்து சிரித்தாள்...அவனின் தோளில் தனது இரண்டு கையையும் வைத்து அவன் நெஞ்சில் சாய்ந்தவாறு சிரித்துக்கொண்டே இருந்தாள்…

அவளது கள்ளம் கபடமற்ற சிரிப்பு அவனையும் புன்னகைக்க வைத்தது…



"என்னனு சொல்லிட்டு சிரி...நானும் சிரிப்பேன்ல…."



"நான் நிறைய anti ஹீரோ பார்த்து இருக்கேன்டா...ஆனா உன்னை மாதிரி ஆண்ட்டி ஹீரோவா பார்த்தது இல்லை டா...ஐயோ...முடியலை..."



"காஞ்சு...காஞ்சு...ஹா ஹா ஹா..."



"எனக்கு உங்களைப் பார்த்து ஒரு செம கதை தோணுது...சொல்லவா...நீ எனக்கு காபியை ரைட் கூட தர வேண்டாம்...முதல் மரியாதை படத்தை பெண்ணியம் பேசுற மாதிரி உங்க ரெண்டு பேரையும் வைச்சு முதல் மரியாதை பார்ட் டூ எடுத்தா என்ன..."என்று சிரித்துக்கொண்டே கூறினாள்…



"கிர்ர்ர்ர்ர்….போதும் டி...வேணாம்...மூடிட்டு கிளம்பு டி...மணி ஆச்சு..."என்று யாதவ் கூறும் பொழுதே சுத்தம் செய்ய ஆட்கள் வரவும் அவர்களிடம் காசு கொடுத்து இருவருக்கும் உடை எடுத்துவர அனுப்பினான் …



அவர் கொண்டு வந்த உடையை குளித்துவிட்டு மாற்றியவர்கள் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி வந்தனர்….



ஷா எப்பொழுதும் போல் ஒரு டாப் மற்றும் வெளுத்துப்போன ஜீன்ஸ்...அவளின் ஆஸ்தான மேசி பன் கொண்டை...கருப்பு சட்டமிட்ட கண்ணாடி என்று இருந்தாள்…

யாதவ் அடர் நீல நிற சட்டை...கருப்புநிற ஜீன்ஸ்...என்று இருவரும் கிளம்பி கல்யாணமண்டபத்தை நோக்கி சென்றனர்…



முன்வாசல் வழியாக செல்லாமல் பின்வாசல் முன்பு காரை நிறுத்தியவர்கள் அதே போன்று குதித்து உள்வந்தனர்…



"சரி...யாதவ்...நான் போய்ட்டு வரேன்...இந்த நிமிசத்துல இருந்து நீ என் கனவை அழிச்ச கடன்காரன்...நேத்து பாவமெனு உன்னை கொஞ்ச நேரம் நண்பனா வைச்சுருந்தேன்..."என்றவள் அவனை திரும்பி பார்க்காமல் மண்டபத்திற்குள் செல்ல திரும்பினாள்…



"நேத்து நைட் என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியவேணாமா….பஜாரி..."



"வேணாம் டா வெள்ளை பன்னி...அதான் எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டு வந்துட்டோம்ல அப்புறம் என்ன நடந்துருந்தா என்ன...ஆனால் உன் கற்புக்கு ஒன்னும் ஆகலை...சரியா..."என்றவள் மண்டபத்தினுள் சென்று விட்டாள்…



"அதானே...நாம கற்புக்கு ஒன்னும் ஆகல...என்ன நடந்திருந்தா என்ன...இவ கூட போனதுக்கு ஒரு யூஸ் நிறைய பிரச்சனையை கொடுத்து ஆராதனாவை மறக்க வைச்சுட்டா..."என்று நினைத்தவன் மண்டபத்திற்குள் நுழைந்தான்…



அதே தான் ஷாவும் நினைத்துக்கொண்டு சென்றாள்…



இருவரும் உள்ளே செல்லும் முன்பே ஒரு உருவம் ஷாவையும்...இன்னொரு உருவம் யாதவையும் இழுத்துக்கொண்டு எதிர் எதிர் அறையில் நுழைந்திருந்தது...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
Me Second,
ரேவதி கயல் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கயல்விழி டியர்
 




Last edited:

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
ஹா....ஹா.... சத்தியமா முடியலடா... ஆண்ட்டி ஹீரோவும், ஷாவும் செஞ்சு வச்சிருக்கற கூத்துக்கு... ஆனா இதெல்லாம் விட பெருசா ஏதோ நடந்திருக்கும் போலவே... பாலிதீன் கவர்ல போட்டத பத்திரமாவே வச்சிரு ஹீரோ.. தேவை படலாம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top