• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானவில் வாழ்க்கை 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
ஹாய் சாக்லேட் பேபீஸ் அனைவருக்கும் வணக்கம். வானவில் வாழ்க்கைக் கதையை இது வரை படித்து ஆதரவும் ஊக்கமும் கொடுத்த சகோதர சகோதரிகளுக்கு நன்றிகள். தொடர்ந்து கதையைப் படித்து தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வானவில் வாழ்க்கை 6
பலராமன் தன் மனதில் யாழினியின் பெற்றோர்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் யாழினிக்கு தைரியம் கொடுக்கவே அப்படி கூறினார். மறு நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் மூன்று பேரும் தஞ்சையை நோக்கிக் காரில் கிளம்பினர். யாழினிக்கு உள்ளூர மனதில் பயமிருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் வந்தாள்.
காரைப் பலராமன் தான் ஓட்டி வந்தார். பத்து மணி அளவில் வழியில் இருந்த ஒரு மோட்டல் முன் காரை நிறுத்தி மூன்று பேரும் மோட்டலுக்குள் சென்றனர். சர்வர் வந்தவுடன் அவரவருக்குப் பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அமுதா தன் தட்டில் இருந்த பொங்கலை கொஞ்சம் எடுத்து இருவருக்கும் ஊட்டினாள்.
அதே போல் யாழினி செய்ய சிரித்து விட்டார் பலராமன். அங்கே ஐஸ்கீரீம் இருப்பதைப் பார்த்து “ யாழினி அப்பா ஐஸ்கிரீம் “ என்றாள். அவரும் இருவரையும் அழைத்துக் கொண்டு போய் என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். இருவரும் இரண்டு ‘பட்டர் ஸ்காட்ச் ‘வாங்கிக் கொண்டு காரில் ஏறினர். பலராமன் காரை தஞ்சையை நோக்கி ஓட்டினார்.
யாழினி “பலராமனிடமும், அமுதாவிடமும் நீங்கள் இருவரும் தஞ்சைக்கு இதற்கு முன் வந்திருக்கிறீர்களா”? என்று கேட்டாள். “ அமுதா எங்கே, இங்கு சென்னையிலேயே பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கு. அதையே இன்னும் பார்க்க முடியலை”, என்று நொடித்துக் கொண்டாள்.
யாழினி பார்த்துடி, 'கழுத்து சுளுக்கிக்கப் போகுது “, என்று கூறினாள். அப்படி சொல்லுடா என் செல்லக் குட்டி என்றார். அமுதா இருவரையும் வெட்டவா, குத்தவா என்பது போல் பார்த்து வைத்தாள். ஆனால் “ யாழினி, ஏன்ப்பா நீங்க போக முடியலைனா, இவளை மட்டுமாவது அவள் தோழிகளுடன் அனுப்பி வைத்திருக்கலாமே” என்று கேட்டாள்.
அப்படிச் சொல்லுடி செல்லம் என்று அமுதா யாழினியைக் கட்டிக் கொண்டாள். எங்கேமா எனக்கு என் வேலையே சரியா இருக்கும். இவளை எங்கும் அழைத்துப் போக முடியவில்லை. சின்னக் குழந்தையாக இருந்த போது, இவளை அழைத்துக் கொண்டு “பார்க், பீச் என்று சுத்தினேன்மா.”
அதற்கப்புறம் இவளுக்கு ஸ்கூல், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ்” என்று போகவும், வீட்டில் வந்து ஹோம் ஒர்க் முடிக்கவுமே சரியாக இருக்கும். அப்புறம் எங்கே இவளைக் கூட்டிக் கொண்டு செல்வது என்றார். எனக்கும் ஆசைதாம்மா. சில ஊர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. முக்கியமாக “ தஞ்சாவூர், திருச்சி” இரண்டையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால் முடியவில்லை. தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலைப் பார்க்க ஆசை. எப்படி இராஜ இராஜ சோழன் இப்படிக் கட்டினான். எத்தனை பேர் வேலை செய்திருப்பார்கள் என்று நிறையக் கேள்விகள் என் மனதில் எழும். ஆனால் இவளை விட்டுப் போக முடியவில்லை என்று கூறினார்.
புத்தகத்தில் படித்தே கற்பனையில் கண்டு மகிழ்வேன். தமிழனைப் போல் யாராலும் எல்லாக் கலைகளிலும் கற்றுத் தேர்ந்தவர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைத் தமிழன் மறந்து விடுகிறான். அது தான் வருத்தம் என்றார். அது என்னவோ உண்மை தான் அப்பா. எவ்வளவு இலக்கியங்கள், இரண்டு இதிகாசங்கள் நம் தமிழ் மொழியில் உண்டு. எதில் தமிழன் தாழ்ந்து போனான்.
“ மருத்துவம், வானவியல், சிற்பம், ஓவியம், இலக்கணம், நெசவு, உழவு, கலை எல்லாவற்றிலும் முன்பே அறிந்து அதை சிற்பமாகவும், ஏடுகளிலும் எழுதிச் சென்றுள்ளார்கள் நம் முன்னோர். ஆனால் இப்போது நமது நாட்டில் இயற்கை வளங்களை எல்லாம் அழித்துக் கொண்டு வருகிறோம். எங்கும் லஞ்சம், ஊழல் தான் பேயாட்டம் ஆடுகிறது.
எனக்கு ஒவ்வொரு தடவையும் பிரகதீஸ்வரர் கோவிலைப் பார்க்கும் போதும் பிரமிப்பு இருக்கும். கருப் பையில் இந்த மாதத்தில் இந்த நிலையில் குழந்தை இருக்கும் என்றும், கம்பிகளைத் தட்டினால் அதில் வரும் ராகங்கள், யாழியைப் போன்ற உருவம், எப்படிச் சுற்றினாலும் சிங்கத்தில் வாயில் இருக்கும் கல்லை அகற்ற முடியாமல் இருப்பது போன்ற அதிசயங்கள் தமிழ் நாட்டில் தான் உண்டு.
சூரிய ஒளி ஈசன் மேல் விழுவது, வெயில் காலத்தில் கோவிலின் உள்ளே குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் இருக்குமாறு கட்டிய அந்த ஆளை மட்டும் இப்போது நான் பார்த்தால் யார் தடுத்தாலும் அவனையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினாள். அமுதா “ யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ” என்று பாட இருவரும் சிரித்து விட்டனர்.
நம் தமிழ் பாட்டைக் கேட்க கடவுளே நேரடியாக வந்தது எவ்வளவு பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நாம். ஏம்மா உனக்குத் தமிழ் மீது ரொம்பப் பற்றோ என்று கேட்டார் பலராமன். ஆமாம் அப்பா. அப்பா, அம்மா, நான், அண்ணண் நால்வரும் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நான்மறைகளைத் தினமும் நான்கு வரி பாடாமல் இருக்க மாட்டோம் என்றாள் யாழினி.
இப்படிப் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்த போது மதியச் சாப்பாட்டிற்காக ஒரு மோட்டல் முன் நிறுத்தினார் பலராமன். மூவரும் இறங்கி சாப்பிட்டு விட்டு காரில் ஏறினர். இப்போது காரை அமுதா ஓட்டத் தொடங்கினாள். மூவரும் ஏதேதோ பேசிச் சிரித்தபடி வந்தாலும், மூவரின் மனத்திலும் யாழினியின் நிலையை எண்ணிக் கலங்கத் தான் செய்தனர். ஆனால் அதை வெளிக் காட்டவில்லை. திடீரென்று யாழினி , “ அப்பா, நீங்களும் அம்மாவும் லவ் மேரேஜா, அரேன்ஜ்டு மேரேஜா என்று கேட்டாள்.
பெரியவர்கள் பார்த்துத் திருமணம் செய்தது தாம்மா. ரொம்ப அமைதியானவள்மா. அப்போ தான் நான் கடையை விரிவுபடுத்தி இருந்தேன். கொஞ்சம் கஷ்டமான நிலைமை தான். ஆனால் அவள் கொஞ்சம் கூட முகம் சுணங்கியது கிடையாது. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தோம். என் முகத்தைப் பார்த்தே என் நிலையைப் புரிந்து கொள்ளக் கூடியவள். யார் கண் பட்டதோ “ காலையில் நன்றாகத் தான் இருந்தாள். என்னைக் கவனித்து குழந்தையையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
கோவிலுக்குச் செல்வதாக ஆயாவிடம் குழந்தையை விட்டுவிட்டு சென்றிருக்கிறாள். இவள் ரோடைக் கிராஸ் பண்ணும் போது எவனோ காரை வேகமாகச் செலுத்த இவள் சுதாரித்து விலகும் முன் கார் இவளைத் தூக்கி எறிந்திருக்கிறது. அங்கு இருந்தவர்கள் எனக்கு தகவல் கொடுத்து நான் போய்ப் பார்ப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.
அதற்கப்புறம் உறவினர்கள் எல்லாம் என் பணத்தைப் பார்த்து எனக்கு பொண்ணு தர முயன்றனர். ஆனால் அவர்களின் புத்தியை அறிந்து எனக்கு என் மகள் போதும். எல்லாரும் கிளம்புங்க என்று கத்தி விட்டேன். அதற்கப்புறம் என் மகள் தான் எனக்கு எல்லாம். அதுவும் ஒருத்தனின் சூழ்ச்சியால் அழிந்து விட்டது என்று அழுதார். அதற்குள் கார் தஞ்சையை அடைந்தவுடன் அமுதா யாழினி வீட்டிற்கு வழி கேட்டாள். இவள் சொல்ல சொல்ல அவள் வீட்டை அடைந்தனர்.
யாழினி இறங்கிப் போய் காலிங் பெல்லை அழுத்த ஒரு இளைஞன் கதவைத் திறந்து, யார் நீங்கள்? என்று கேட்டான். இங்கே இராஜேந்திரன் என்றவர் இருந்தாரே என்று கேட்கவும், உள்ளே இருந்து ஐம்பத்தைந்து வயதுடைய பெரியவரும் வெளியில் வந்தார். “யார்மா நீ? என்று கேட்டார். இந்த வீடு பிரபல வழக்கறிஞர் இராஜேந்திரன் வீடு தானே” என்று கேட்டாள். ஆமாம்மா, ஆனால் இந்த வீட்டை அவர் பையன் விற்று விட்டாரே.
என்னது! விற்று விட்டாரா? என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டாள். ஆமாம்மா அவர் பெயர் கூட “தெய்வேந்திரன்” தானே என்று கேட்டார். ஆமாம் சார் என்றாள். எப்போது விற்றான்? என்று கேட்டாள். ஒரு வாரம் முன்பு தான் வாங்கினேன். அதற்குள் அங்கு வந்த பலராமன் “ என்னம்மா, என்ன ஆச்சு என்றார். இவள் பேசாமல் கண்களில் கண்ணீர் வடிய நின்றிருந்தாள்.
சார் இந்த வீட்டை இந்தப் பொண்ணுடைய அண்ணன் எங்களிடம் விற்றுவிட்டான். அதுவும் இவ்வளவு பெரிய வீட்டை நீங்க உங்களால் முடிந்த தொகையைக் கொடுங்க என்று சொன்னார். எனக்கும் மனசாட்சி இருக்கு தம்பி என்று சொல்லி இந்த வீட்டிற்குப் பெறுமானமுள்ள தொகையைக் கொடுத்தேன். எல்லா சாமானையும் அந்தப் பையனும், அவன் நண்பர்களும் தான் எடுத்துச் சென்றார்கள்.
கடைசியில் அந்தப் பையன் ஒரு அறையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் அழுதான். பின் அவன் நண்பர்கள் தான் அவனை அழைத்துச் சென்றார்கள் என்றார். அதைக் கேட்ட யாழினி தன் அறையில் தான் அண்ணண் அழுதிருக்கிறான் என்று புரிந்து அடக்க முடியாமல் கதறிவிட்டாள். அமுதாவும் பலராமனும் அவளைச் சமாதானம் செய்தனர். அந்த வீட்டின் தலைவி உள்ளே வந்து உட்காரும்மா என்றார்கள். ஆனால் யாழினி வேண்டாம் ஆன்ட்டி என்று கூறினாள். அப்பா வாங்க போகலாம் என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றாள்.
அவள் அப்படி அழுவதைப் பார்த்து நான்கு கண்கள் வேதனைப்பட்டன. அனைவரும் காரில் ஏறவும் அமுதாவையும், பலராமனையும் தள்ளிவிட்டு அவளே காரை ஓட்டினாள். அவள் தோழிகள் வீடு, அவள் அண்ணனின் நண்பர்கள் வீடு, அப்பா, அம்மாவின் நண்பர்கள் வீடு, அப்பா அம்மாவிற்கு ட்ரீட்மென்ட் கொடுத்த ஹாஸ்பிட்டல் என எல்லா இடத்திலும் தேடி ஓய்ந்து போனாள். அதிலும் அவளைச் சந்தேகப்பட்டு அசிங்கமாகப் பேசிய வார்த்தைகளே அவளைக் கொன்றன.
அவளின் நிலை அறிந்த பலராமனும், அமுதாவும் அவளுக்கு ஆறுதல் கூறினர். இனி யார் வீட்டிலும் தேட வேண்டாம்மா. அவர்களுக்கா நினைவு தெரிந்து வந்து கூப்பிடட்டும். இன்று இரவு மட்டும் ஏதாவது லாட்ஜில் தங்கிவிட்டு நாம நாளைக்குக் கிளம்பலாம் என்றார். ஆமாம்ப்பா, நாளைக்கு நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி விடலாம் என்றாள். அவர் யோசனையாகப் பார்க்கவும் நாம இந்த ஊருக்குள் நுழைந்ததிலிருந்து யாரோ நம்மை பாலோ பண்றாங்கப்பா என்றாள்.
என்னம்மா சொல்றே! என்று கேட்டார். ஆமாம்ப்பா நாம போற ஒவ்வொரு இடத்திற்கும் அவன் நம்மைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்றாள். பின்னர் ஒரு லாட்ஜில் போய் இரண்டு ரூம் புக் செய்து சாவியை வாங்கிக் கொண்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். நீங்கள் குளிச்சிட்டு இருங்க. நான் பக்கத்து அறையில் குளிச்சிட்டு டிபன் ஆர்டர் பண்றேன். நாம இங்கேயே சாப்பிடலாம் என்று கூறிச் சென்றார். சரி என்று கூறி குளித்து விட்டு இலகுவான ஆடைக்கு மாறினர். கதவு தட்டும் சத்தம் கேட்கவும் அமுதா யாழினியை நிறுத்தி விட்டு இவள் போய்க் கதவைத் திறந்தாள்.
சர்வர் டிபன் பால் எல்லாம் கொண்டு வந்தார். பலராமனும் வந்து விட்டார். அனைவரும் அமைதியாகவே சாப்பிட்டு முடித்தனர். “ பலராமன், யாழினியிடம் உன் தாத்தாக்கள் இருக்கும் ஊர் தெரியுமா?” என்று கேட்டார். எதுக்குப்பா அங்கேயும் போய் நான் இன்னும் அசிங்கப்பட வேண்டுமா என்று கேட்டாள். விடுங்கப்பா நாளைக்குக் காலையில் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவோம்.
இங்கே இருந்தால் என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்குப்பா. இப்போ மட்டும் என் அப்பாவும் அம்மாவும் கிடைத்தால் அவர்களை அடித்தே கொன்று விடுவேன். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த கேஸை எடுத்தது அவர் தவறு. அதுக்கு நான் பலிகடாவா. இது என்னப்பா நியாயம் என்று அழுது கதறிவிட்டாள். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் பலராமன் போய்க் கதவைத் திறந்தார். ஒருவன் தலையில் ஹெல்மெட்டுடன் கையில் இரண்டு பேக்கை ருமில் கொண்டு வந்து வைத்து விட்டு நாளைக் காலையில் நான்கு மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பி விடுங்கள்.. இல்லை நடப்பதே வேறு என்று கூறி விட்டுச் சென்றான். அனைவரும் திகைத்துப் போய் கேள்வி கேட்கும் முன் அவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.
வானவில் வளரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பானுமதி கருணா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top