• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வினாத்தாள் - இ.க. போட்டி தொடங்கியது...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இலக்கணத்தில் கலக்கனும்
வினாத்தாள்
(மொத்த மதிப்பெண்கள்: 100)

[நீங்கள் பங்கேற்பது ‘காலக்கெடு முறை’யிலா (Timed Mode) அல்லது ‘ஆரவமர முறை’யிலா (Casual Mode) என்பதைக் குறிப்பிட்டு விடைகளை அனுப்புக.]
பகுதி - அ: ஒற்றுப்பிழைகளைக் களைந்தெழுதுக
(ஒவ்வொரு தொடரிலும் ஒரு பிழை மட்டுமே இருக்கும்.
சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள்
15 * 2 = 30 மதிப்பெண்கள்)​
1. போட்டி களைகட்ட தொடங்கியது.
2. தளநாளை கொண்டாடித் திளைத்தனர்.
3. அழைப்பைத் துண்டித்தவள் அடுத்த பத்தாவது நிமிடம் அவன் வீட்டிலிருந்தாள்.
4. புரியாமல் எழுதுறதுப் பேர்தான் இலக்கியம்.
5. புத்தகத்தைத் திறந்துப் படித்துச் சிரித்தான்.
6. வெப்பவியலின் ஒரு முக்கியச் சாதனை குளிர்நிலை விஞ்ஞானம்.
7. சிறப்பியல்பு தன்வயத்தனாதல் முதலியச் சிற்குணங்கள்.
8. உண்மையை பேசி உயர்வு பெறுக.
9. கடைக்குச் காய்கறி வாங்குவதற்கு சென்றனர்.
10. தேர்சக்கரத்தைப் போலச் சுழன்றது வாழ்க்கை.
11. முகிலன் சென்னைக்கு சென்று சேர்ந்தான்.
12. அவள் பார்த்திபனை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.
13. வானம்பாடி பறவை குளிர்மழைத்துளியை உண்டு பசியாறும்.
14. இதில் இல்பொருளுவமை உள்ளதாக அவர் உரைக் கூறுவார்.
15. பாட்டாளியுட்பட பல தொழிலாளர் பரவலாக இருந்தனர்.
பகுதி - ஆ: எழுத்துப்பிழைகளைக் களைந்தெழுதுக.
(ஒவ்வொரு தொடரிலும் ஒரு பிழை மட்டுமே இருக்கும்.
சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள்.
15 * 2 = 30 மதிப்பெண்கள்)​

16. பத்மினி அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்தால்.
17. குமரன் விளையாடிக் கலைத்துப் போனான்.
18. கருப்புசாமி கறடுமுரடான பாதையில் சென்றுகொண்டிருந்தான்.
19. அக்கரையில் வண்ணமயமான இரத்திணங்கள் தெரிந்தன.
20. தினைமாவைக் கிளறிக்கொண்டிருந்த கிளவி திரும்பிப் பார்த்தாள்.
21. நெற்களஞ்சியத்தின் சுவற்றில் மஞ்சள் பூசியிருந்தனர்.
22. நன்னன் உளியால் உரளைக் கொத்தித் துளைத்துக்கொண்டிருந்தான்.
23. சமணர் கொல்லாமை ஊணுண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தினர்.
24. சந்திப்பிழைகளைக் கலைய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
25. திருமங்கையாழ்வாரின் பாசுறங்களின் அடிநாதம் நாராயணன் என்பதே.
26. குலசேகரன் மணிகளை மாலையாகக் கோர்த்தான்.
27. ‘குசுடுதுபுறு’ என்ற வல்லிணக் குற்றியலுகரங்களை அடுத்து ஒற்று மிகும்.
28. ஒருவரின் உறுவத்தைக் கொண்டு அவரை எள்ளக் கூடாது.
29. அவள் அந்த ஒற்றையடிப் பாதையில் நல்லிரவின் இருளைக் கூட மதியாமல் நடந்தாள்.
30. சோமு என்ன பன்னப் போகிறான் என்று அவள் கவலைப்பட்டாள்.

பகுதி - இ: ஒற்று / எழுத்து / தொடரமைப்புப் பிழைகளைக் களைந்தெழுதுக.
(இரண்டு பத்திகள் கொடுக்கப்படும், இரண்டிலும் சரியாகப் பத்துப் பிழைகள் இருக்கும்.
ஒவ்வொரு பிழையைக் கண்டறிந்து களைவதற்கும் 2 மதிப்பெண்கள்.
20 * 2 = 40 மதிப்பெண்கள்)​

31. பத்தி - 1:

”ஆம் தேவி! நான் கடலுக்கப்பால் உள்ள செண்பக தீவில் வசிப்பவன். இரத்திண வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்” என்று மலமலவென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப் போல் மறுமொழிக் கூறினான் இரத்தின வியாபாரி.
அவனுடைய படப்படப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “எந்தத் தீவு என்று சொன்னீர்?” என்றாள். “செண்பகத் தீவு!”
”செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே! அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ?”
”செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்”
இவ்விதம் சொன்னபோதுக் குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஸ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்! ஆனால் இவள் யார்? இவ்வளவு முகக் காந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை...? அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று.


32. பத்தி - 2:

திருக்கயிலாய மலையில் வீடு பேரடைந்த ஆதிநாதராகிய விடப தேவருடைய பரிவாரத் தெய்வங்களில் கோமுக யட்சர் முதன்மையானவர் என்று சமன சமய நூல்கள் கூறுகின்றது. கோமுக யட்சன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யட்சன் என்பது பொருள். கோமுக யட்சன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப்படுகின்றன. சைவ சமயத்தவர் சிவபெருமானுடையப் பரிவாரத் தெய்வங்களில் நந்திதேவரை முதன்மையாக கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமணரின் கோமுக யட்சனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்தி வாகனச் சேவை சிறந்ததாகக் கருதப்படுகிறது. அன்றியும், சமணர்களில் நந்திக்கனம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் ’நந்தி’ என்னும் பெயரைச் சூட்டிக்கொல்வர். அச்சநந்தி, ஆரிய நந்தி, பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்தச் சத்தியஞான தரிசினிகள் என்பவர் மெய்கண்டாருக்கு சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களின் பண்டைய தொடர்பு அறியப்படும்.


விடைகளை அனுப்பும் முறை:
திருத்தங்களை இக்கோப்பிலேயே செய்து, அவற்றுக்கு விளக்குவண்ணம் (highlight) கொடுத்துக் கோப்பைச் சேமித்து எனக்கு மின்ன்ஞ்சலில் அனுப்பவும்.
அல்லது, எஸ்.எம். தளத்தில் உள்ள செய்திப் பெட்டியில் விடைகளை எனக்குத் தனிச் செய்தியாக அனுப்பலாம்.
கவனிக்க: கோப்பை உங்கள் பெயரிலேயே சேமிக்கவும்.

எ-டு: vijayanarasimhan.docx / vijayanarasimhan.doc


வினாத்தாளின் வோர்டு கோப்பு வடிவை இவ்விணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்:

https://drive.google.com/open?id=1itSimJnhialPDvskOzV6UIxkiJfbhABm

என் மின்னஞ்சல்: vijay10.n@gmail.com
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நான் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் ஆசிரியரே...
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
நான் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் ஆசிரியரே...
பேபி இவ்வளவு வேகமா????:eek: நான் இன்னும் வினாக்களையே பார்க்கவில்லையே:unsure::unsure:
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
எனக்கு நேரம் வேண்டும்.
நேரம் எடுத்துகோ அம்மு இங்க நம் தமிழ் பிழை களைவது பற்றி கற்றுகொள்வதுதான் முதன்மை
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
வகுப்பில் வினாத்தாள் கொடுப்பது மாதிரியே இங்கையும் பகுதி பகுதியாக கொடுத்துள்ளார் நம் ஆசிரியர்
அதில் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி போல் தெரிகிறது மணி மா☺☺☺☺
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பேபி இவ்வளவு வேகமா????:eek: நான் இன்னும் வினாக்களையே பார்க்கவில்லையே:unsure::unsure:
ஆர்வக் கோளாறு தான் பேபி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top