• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெண்பாவின் ‘குயிலி’ விமர்சனம் @Venba

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வெண்பாவின் ‘குயிலி’ என் பார்வையில்​

ஹாய் நட்பூஸ்,

உங்களை எல்லாம் ஒரு ரிவ்யூடன் பார்க்க வந்திருக்கிறேன்.. இவங்க ரொம்ப குட்டி எழுத்தாளர். வெண்பாவின் ‘குயிலி’ தான் ஸ்டோரி. கடுகு சிறுத்தாலும் கரம் குறையாது இந்த பழமொழிக்கு ஒப்பான எழுத்தாளரும் கூட..!

‘குயிலி’ என்ற பெயர் என்னை ரொம்பவே கவர்ந்திழுத்தது.. அப்பொழுது அவளிடம் இந்த குயிலி யார் என்று கேட்டேன்.. வேலுநாச்சியார் படையில் இருந்த வீர மங்கையின் பெயர் தான் குயிலி அக்கா என்று சொன்னாள்..

வேலு நாச்சியாரை எதிர்த்து நின்ற ஆங்கில படைவீரர்களை போர்க்களத்தில் எதிர்த்து நின்ற வீர மங்கை. அந்த ‘குயிலி’ தான் முதல் மனித வெடிகுண்டு. அந்த குயிலிக்கும் இந்த குயிலுக்கும் என்ன தொடர்பு இதுதான் என்னை இந்த கதையைப் படிக்க தூண்டியது..

வெண்பாவின் கை வண்ணத்தில் உருவான குயிலி ஒரு கலெக்டர்.. பெண்களுக்கு ஒன்று என்றால் அவளால் அமைதியாக இருக்க முடியாது..! சிரிக்காத முக தோற்றமும், எப்பொழுதும் குறையாத கம்பீரமும் அவளை நமக்கு வித்தியாசமாக காட்டும்..!

ஏன் சிலநேரத்தில் இவள் சிரிக்கவே மாட்டாளா என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.. தவறு என்றால் அதை உடனே தட்டிக் கேட்கும் பெண். ஆனால் அவளின் பின்னணி என்ன..?!

இந்த கதையின் ஹீரோ யாரு யாரு என்று எங்களை கொஞ்சநாள் உயிரை வாங்கிய குட்டி ராச்சசி.. அவனா ஜோடி இவனா ஜோடி இல்ல இவனாக இருக்குமோ என்று எங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தாள்..

மயில்வாகனன் நிஜமாக குயிலிக்கு ஏற்ற ஜோடி.. ஒரு விவசாயி..! அவன் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் இப்படி சிலர் இருக்காங்களா என்று தோன்றும்.. கடைசி சில பதிவுகளில் காதல் மன்னனாக மாறியிருக்கிறான் என்று சொன்னால் அது மிகையில்லை..

மற்றபடி இந்த கதையில் வரும் கிருபா என்னை ரொம்பவே கவர்ந்தாள்.. இன்றைய பெண்களின் நவநாகரிகம் எப்படி என்பதற்கு சின்ன எடுத்துக்காட்டு இந்த கதையில் வந்த கிருபா. நாம் அணியும் உடை நமக்கு பாதுக்காப்பாக இருக்க வேண்டும்.. அது தமக்கு ஆபத்தாக இருக்க கூடாது என்று அழகாக சொல்லியிருப்பாள்..

குயிலியின் தங்கையாக வந்த செல்லா அவளின் தங்கை. குறும்பு பெண்ணும் கூட..! அவளோடு மங்காவும்..! இப்படி பல பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் குயிலி அன்று தம் நாட்டு மக்களுக்காக தன்னை போர்க்களத்தில் பலி கொடுத்த குயிலிக்கு ஒப்பானவள்..!

பெண்களுக்கு நடக்கும் அநியாயம் அதை குயிலி எவ்வாறு தட்டி கேட்கிறாள்..? ஏன் குயிலி மட்டும் தட்டிக் கேட்கிறாள்..? அவளின் பின்னணி என்ன..? இவ்வளவு கதை நகர்கிறது..!

விக்ரம் சிடுசிடுப்பு, அர்ஜுனின் கடுப்பு, தாஸின் மரியாதை எல்லாம் கதைக்கு பக்கபலம். இறுதியாக விக்ரம் - செல்லா, அர்ஜுன் - ஷாமளா, தாஸ் - மங்கா எல்லோரையும் ஒன்றிணைத்த விதம் அருமை. மயில்வாகனின் காதல் ரசிக்கும் வண்ணம் இருந்தது..

இறுதியில் அவளின் மனதில் காதல் வருகிறது. அவள் அப்படியிருக்க என்ன காரணம்..? அவள் பின்னாளில் அந்த இறுக்கத்தில் இருந்து வெளியே வந்தாளா..? மயில்வாகனின் காதல் வெற்றி பெற்றதா..? என்று நீங்களே கதையைப் படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சமூக கருத்தை உள்ளடக்கிய கதை அண்ட் கதாப்பத்திரம். நீண்ட நாட்கள் இடைவெளி எடுத்து கதையைக் கொடுத்தாலும் அதில் ஒரு திருப்தியை உணர்ந்தேன்.. இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துகள்..!

எந்த இடத்திலும் தொய்வு இன்றியும், சுவை குறையாமல் கொடுத்தது தான் எழுத்தாளரின் திறமை என்று சொல்லலாம்.. உன்னோட எழுத்துகள் பாராட்டியே ஆகவேண்டும். எந்த இடத்திலும் மிகையில்லாத எழுத்து...!

வாவ் கனி செல்லம் நீங்க சூப்பராக எழுதி இருக்கீங்க.. இதில் வந்த குயிலி என் மனதில் அதிகமாக இடம் பிடித்தாள். நாட்டை திருத்த இப்படியும் சில கலெக்டர் வேண்டும் என்று நினைக்க வைத்த குயிலியின் கதாபாத்திரத்திற்கு ஒரு பாடல் டெடிகேட் இந்த பாடல்..

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்...
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்..?
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்...

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்..
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்..
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்..
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அனைக்கின்ற நெருப்பு..
நான் கொண்ட நெருப்பு அனைக்கின்ற நெருப்பு..
யார் அனைப்பாரோ..? இறைவனின் பொறுப்பு..

என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு..
கண்கள் தான் அறியும்..
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நான் ஒரு ராணி மங்கையில் ஞானி
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்

கோடையில் ஒரு நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்..
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்..?

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்குத் தெரியும்..?

அடுத்து இந்த பாடல் மயில்வாகனனுக்கு டெடிகேட் பண்றேன்..

“உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது”

சிலநேரத்தில் உன்னை வாட்ஸ் ஆப்பிலும், கலெக்டரிடம் மனு கொடுத்து உன்னை இம்சை செய்த இந்த சந்தியா அக்காவின் சின்ன அன்பு பரிசு இந்த ரிவியூ. இந்த கதை சீக்கிரமே புத்தகமாக வெளிவர என்னோட மனமார்ந்த வாழ்த்துகள் வெண்பா.

அடுத்த ஸ்டோரியுடன் உங்களை சீக்கிரமே எதிர்பார்க்கிறேன் வெண்பா.

இந்த ஸ்டோரி படிக்க படிக்க ரொம்ப இண்டரஸ்ட்டாக இருக்கும்.. நேரம் செல்வதே தெரியாது.. டைம் இருந்தால் கண்டிப்பாக எல்லோரும் படிங்க பிரிண்ட்ஸ்..

இப்படிக்கு

சந்தியா ஸ்ரீ
veeramangai-kuyili-e0aeb5e0af80e0aeb0e0aeaee0ae99e0af8de0ae95e0af88-e0ae95e0af81e0aeafe0aebfe0...jpg
 




Last edited:

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Super review sandhya akka...????Thank uu????????????????????????????????????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
எனக்கு மிகவும் பிடித்த பாடலை குயிலுக்கு ஒப்புமை செய்த்தும் அருமை
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான விமர்சனம் அக்கா..கதை படிக்கப் போகிறேன்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top