• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

1.Thamarai poo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அந்த அதிகாலை நேரத்தில் சென்னை நகரம் இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் தந்தையும் மகளுமாக இருவர் ஆளில்லாத கடற்கரையில் மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தனர். உதயா என்ற அந்த இளம் பெண்ணுக்கு வயது 23 அல்லது 24 இருக்கலாம். சற்றே நிறம் குறைவு அதோடு மேக்கப் என்பதன் சாயலே இல்லாத முகம். வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருந்த அவளைப் பார்த்தால் மரியாதை வருமே அன்றி வேறு எந்த உணர்வும் யாருக்கும் வராது. அவளது தந்தை பெயர் சுப்பு ரத்தினம் நல்ல கம்பெனியில் பெரிய வேலையில் இருக்கிறார். மகளுக்கு சமமாக அவரும் ஓடிக்கொண்டே இருந்தார். இருந்தாலும் சற்றே வயதானதால் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

"என்னப்பா இவ்வளவு மெதுவா வரீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?"

"வயசாச்சேம்மா? இந்த பங்குனி வந்தா எனக்கு 55 முடிஞ்சிடும். ஆனா அதைப் பத்தி நீ கவலையே பட மாட்டேங்குறி?" சற்றே கடுமையாக.

"உங்க மேல அக்கறை இல்லாமத்தான் உங்களைக் கூட்டிக்கிட்டு தினமும் ஜாகிங் வரேனா?"

"நான் அதைச் சொல்லல்ல! கல்யாணப் பேச்சை எடுத்தாலே சீறி விழறியே?"

"நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலியே? நான் இன்னும் நிறைய சாதிக்கணும்ப்பா! அதுக்கப்புறம் தான் கல்யாணம்"

"நீ சாதிக்குறதை கல்யாணத்துக்கு அப்புறம் செய்யேன். உன்னை யாரு வேண்டாம்னு சொல்லுறாங்க?"

சற்று நேரம் மௌனமாகி பின் பேசினாள்.

"இதைப் பாருங்கப்பா நடந்துக்கிட்டோ ஓடிக்கிட்டோ பேசுற விஷயமில்ல இது. வீட்டுக்குப் போயிப் பேசிக்கலாம் என்ன?" என்று சொல்லி விட்டு மீண்டும் ஓடுவதில் முனைந்தாள். தொடர்ந்து ஓடிக்கொண்டே சிந்தித்தார் சுப்பு ரத்தினம்.

"இவளுக்கு என்ன பிரச்சனை? ஏன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன் என்கிறாள்? ஒருவேளை யாரையாவது காதலிக்கிறாளோ? அதைத் தெளிவாகக் கேட்டு விட வேண்டும். அப்படி இருந்தால் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அதை அவளிடம் சொல்ல வேண்டும். " என்று நினைத்துக்கொண்டார்.

சுப்புரத்தினம் பார்வதி தம்பதியின் மூத்த மகள் காவ்யா. அவளால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஹோம் சயின்ஸ் படித்தாள். முடித்ததும் நல்ல மாப்பிள்ளை பார்த்து இவரே கல்யாணத்தை செய்து வைத்து விட்டார். இதோ இப்போது முதல் பிரசவத்துக்கு தாய் வீடு வந்திருக்கிறாள் நல்ல கணவன் நிம்மதியான வாழ்க்கை என்று மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால் உதயா தான் எப்போதுமே பிரச்சனை செய்வாள். படிப்பிலும் எனக்கு ஹோம் சயின்ஸ் வேண்டாம் நான் பொறியியல் அதிலும் சிவில் தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து படித்தாள். சரி ஏதோ படித்தோம் கல்யாணம் செய்து கொள்வோம் என்றில்லாமல் சாதிக்க வேண்டுமாம். என்ன பெரிய சாதனை? பெண் என்றால் காலா காலத்தில் கல்யாணம் செய்து கொள்வதை விட்டு என்ன இது?" என்று யோசித்துகொண்டே வந்தார்.

தந்தையும் மகளும் காரை அடைந்தனர் அதனை திறமையாகச் செலுத்தியபடி வீடு வந்தாள் உதயா. பாதையில் எதுவுமே பேசவில்லை சுப்பு ரத்தினம். அவருக்கு உதயா மேல் சற்றே கோபம் என்பதைப் புரிந்து கொண்டாள் மகள். அதனால் அவளும் மௌனமாகவே காரைச் செலுத்தியபடி வந்தாள். வீட்டுக்குள் நுழைந்தது தான் தாமதம் பிடித்துக்கொண்டார் தந்தை.

"இப்ப சொல்லு! ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? நீ யாரையாவது காதலிக்குறியா? அப்படி இருந்தா சொல்லு. நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் என்ன பார்வதி? என்று மனைவியை துணைக்கழைத்தார்.

அம்மா கொடுத்த ஜூசைக் குடித்துக்கொண்டிருந்த உதயா அப்படியே அதை வைத்து விட்டு அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

"உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு என் கல்யாணத்தைப் பத்தியே பேசுறீங்க?" என்றாள்.

தாய் பார்வதி இடை புகுந்தாள்.

"இதைப் பாரு உதயா! பெண்களுக்கு காலாகலத்துல ஆக வேண்டியது ஆகணும். இல்லைன்னா பிரச்சனை தான். அப்பா கேட்டா மாதிரி நீ யாரைக் காதலிச்சாலும் சொல்லு. நாங்க பேசி முடிச்சு வெக்கிறோம். என் அண்ணன் மகன் ரவியைத்தான் பண்ணிக்கணும்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்."என்றாள் அழுத்தமாக.

"ஐயோ! அப்படி எதுவுமே இல்ல! நான் யாரையும் காதலிக்கல்ல! போதுமா?"

"அப்ப ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கற?"

"ஏம்ப்பா! நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லலியே? இன்னும் நாலஞ்சு வருஷம் போகட்டும். அதுக்குள்ள நானும் என் தொழில்ல சாதிச்சிடுவேன். அப்புறம் ரவி அத்தானையோ இல்லை வேற யாரைச் சொல்றீங்களோ அந்தப் பையனையே பண்ணிக்கறேன். போதுமா?" என்றாள்.

"அன்னைக்கு சொன்னியே ஏதோ கட்டிடக் காண்டிராக்டரா வேலை செய்யப் போறேன்னு. அதை நிஜமாவே தான் சொன்னியா?"

"ஆமாம்ப்பா! அது என்னோட கனவு லட்சியம் எல்லாமே! கட்டிடக் கலை லேசுப்பட்டது இல்லப்பா! நான் கட்டப் போறது வெறும் செங்கல் மணல் சிமிண்டு வெச்சுக் கட்டற கட்டிடங்க இல்ல. வீடுங்க மனுஷங்க சந்தோஷமா வாழுற வீடுங்க, அவங்களை மகிழ்விக்கக் கூடிய விளையாட்டு அரங்கம் இதெல்லாம் தான் நான் கட்டப் போறேன். நான் இன்னும் நிறைய சாதிக்கணும்மா. இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லாதே" என்றாள் கெஞ்சலாக.

"இதைத்தான் பார்வதி அவ சொல்லிக்கிட்டே இருக்கா. நான் என்ன கேட்டேன்னா அவ கல்யாணம் செஞ்சுக்கிட்டு சாதிக்கலாமே? அதுக்கு பதில் சொல்ல மாட்டேங்குறா" என்றார் அவரது குரலில் எரிச்சல் இருந்தது.

"அப்பா! பிளீஸ் புரிஞ்சிக்கோங்க! நான் பார்க்கப் போற வேலை ஒம்பது மணிக்கு ஆரம்பிச்சு ஆறு மணிக்கு முடியுற ஆபீஸ் வேலை இல்ல. பல நாட்கள் நான் சைட்டுலயே ராத்திரி 8 மணி வரை இருக்க வேண்டியது வரும். சில நாள் மார்பிள் பார்க்கவும் இன்னமும் சில வேலைக்காகவும் டெல்லியோ ஜெய்ப்பூரோ போக வேண்டியது வரலாம். இதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்ட சரியா வருமா?" என்றாள்.

"நீ ஏண்டி இப்படி ஒரு கஷ்டமான வேலை பார்க்கணும்? உனக்கென்ன தலையெழுத்தா? அப்படியே வேலை பார்க்க ஆசைப்பட்டா ஏதவது ஒரு ஆபீசுல போய் பார்க்க வேண்டியது தானே? நல்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தே அதை விட்டுட்டு இப்ப என்னென்னவோ சொல்றியே?"

"நான் மாத்தி மாத்தி ஏதும் சொல்லையே? நான் சொந்தமா ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்கணும். அது நல்லா பிக்கப் ஆகட்டும். அப்புறம் நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்" என்றாள் முஇட்வாக.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கோபம் வந்தது.

"இவ எப்பவுமே இப்படித்தான். எல்லாரும் ஒரு வழியில போனா இவ இன்னொரு வழியில போவா! ஆரம்பத்துல இருந்தே நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க கேக்கவே இல்ல. செல்லம் குடுத்து இவ இப்படி ஆட்டம் போடுறா. சொந்தமா பிசினசாம் செய்யப் போறாளாம். இதெல்லாம் ஆம்பிளைத் துணை இல்லாம செய்யுற காரியமா? ஏங்க அவ சொல்றான்னு நீங்க ஏன் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? நாலு அடி போட்டு இவனைத்தான் கட்டிக்கணும்னு சொல்லி கட்டி வைங்க." என்றாள்.

"அம்மா! அப்படி எதுவும் செய்யப் பிளான் பண்ணுனீங்கன்னா நான் இந்த வீட்டை விட்டே போயிருவேன். எனக்கு என் லட்சியம் முக்கியம். என்னால எல்லாரையும் மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு வாழற சராசரி வாழ்க்கை வாழ முடியாது. என்னை விட்டிருங்க!" என்றாள்.

பல் தேய்த்து முகம் கழுவி வந்த அக்கா காவ்யா பிடித்துக்கொண்டாள்.

"அம்மா இவ என்னைத்தான் மறைமுகமா சொல்றா! ஆமா! நான் சராசரியானவ தான். உன்னைப் போல புத்திசாலித்தனம் உண்டா இல்லை அழகு தான் உண்டா? நான் மக்கு போதுமா?" என்றாள் கோபமாக.

"ஏண்டி உங்க அக்கா வம்புக்குப் போற? அவ உன்னை என்ன செஞ்சா? மாசமா இருக்குற பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டியா நீ?" என்றாள் அம்மா.

உதயாவின் மனம் வேதனைப் பட்டது. நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? அக்காவைக் குறித்து நான் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னதை அவள் பெரிதாக்குகிறாள். அதற்கு அம்மாவும் சப்போர்ட் செய்கிறாள். எப்போதுமே இப்படித்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு என்னை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். பள்ளியில் படிக்கும் போதும் சரி கல்லூரியிலும் சரி அக்காவின் சாதனைகள் பேசப்பட்ட அளவுக்கு என் சாதனைகளை அம்மா கண்டு கொள்ளவே இல்லையே? ஏன் இந்த பாரபட்சம்?" என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.

"நீ இத்தனை சொல்ற! ஆனா அவ எப்படி பதிலே பேசாம இருக்கா பாரு! ஆனாலும் ரொம்ப அழுத்தம் தான்." என்றாள் அம்மா.

"அக்கா நான் தெரியாம உன் மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுக்கோ. நான் வேணும்னே பேசல்ல" என்று சொல்லி விட்டு மற்றவர்களின் பதிலுக்கூடக் காத்திராமல் மாடியில் இருந்த தன் அறைக்குச் சென்று விட்டாள். அந்த அறை அவளுக்குப் பிடித்தமானது. தனது ரசனைக்கேற்ப அதனை வடிவமைத்திருந்தாள் அவள். ஜன்னல் இள நீலம், சுவர்கள் ரோஜப்பூ நிறம் ஷெல்ஃபுகள் அலங்காரமாக இருந்தன. அந்த அறை தான் உதயாவின் சரணாலயம். மனம் வருந்தினால் அங்கே வந்து விடுவாள். அங்கே ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு அதிலிருந்து வரும் மெல்லிய காற்றை அனுபவித்தால் மனதுக்கு இதமாக இருக்கும் அவளுக்கு.

ஜன்னலைத் திறந்தாள். அன்று ஏனோ அவளது மனம் போல காற்றோட்டமே இல்லாமல் இருந்தது. மனம் தன்னிச்சையாக யோசித்துக்கொண்டிருந்தது.

"நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? அக்கா எதற்காகக் கோபப்பட வேண்டும்? அவள் தான் ஏதோ சொன்னாள் என்றால் அம்மாவும் அவளுக்கு சப்போர்ட் செய்கிறார்களே? அப்பாவும் ஒரு வார்த்தை பேசவில்லையே? அப்படியானல் நான் என்ன இந்த வீட்டில் ஒரு அழையா விருந்தாளியா? என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? சொந்தமாக தொழில் தொடகுவது என்பது என் கனவு. இன்று நேற்று வந்ததல்ல! சிறு குழந்தையாக நான் இருந்த போது அப்பா இந்த வீட்டைக் கட்டும்போதே பிறந்த ஆசை. செங்கல் மணல் ஜெல்லி சிமிண்டுஇவை என்னை இழுத்தன. ஒவ்வொரு செங்கல்லாய் வைத்து ஒரு வீடு உருவாகும் அதிசயத்தை என்னால் வர்ணிக்கவே முடியவில்லை. அது கொடுக்கும் சந்தோஷத்துக்கு இணையாக எதுவுமே இல்லை. அப்போதே என் மனதுள் புகுந்த ஆசை இது. அதை மாற்றிக்கொள்ள என்னால் முடியாது. என்ன ஆனாலும் சரி. நான் சொந்தமாகக் கட்டிட கம்பெனி ஒன்று தொடங்க வேண்டும். பிறகு தான் மற்றவை" என்று சிந்தித்தவாறிருந்தாள்.

நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவோமா? எனது ஆசைகள் நிறைவேறுமா? அம்மா, அக்கா என்னைப் புரிந்து கொள்வார்களா? அப்பா என்றாவது எனக்கு சப்போர்ட் செய்து பேசுவாரா? என்று எல்லாவற்றையும் சிந்ததித்தப்படி நின்றிருந்தாள் உதயா.
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,316
Reaction score
2,534
Sengal pookkalnu ithai padichen.title matheeteengala.anyway all the best srija
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
பெண்களுக்கு காலாகலத்துல ஆக வேண்டியது ஆகணும். இல்லைன்னா பிரச்சனை தான். அப்பா கேட்டா மாதிரி நீ யாரைக் காதலிச்சாலும் சொல்லு
oruthan kaila pidichu kodukrathu mattum than parentsoda latchiyama irukku........ athukapparam neriya compromises:):):):)nice start(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top