16 மீண்டும் பிறந்தேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

Author
Author
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,756
Points
93
Location
chennai
இரவில் அபி தியாவுக்கு கால் செய்ய, ரிங் போனதே தவிர எடுக்கவே இல்லை... 'ஏதேனும் வேலையில் இருப்பாள், மீண்டும் கால் செய்வாள்' என நினைத்து எதிர்பார்த்து இரவு தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டு இருந்தான் அபினவ்...

'ஒருவேளை மீண்டும் உடல்நிலை சரியில்லையோ? என்ன ஆகி இருக்கும்? அவளுக்கு ஏதேனும் பிரச்சனையா?' என மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டு இருந்தான் அபினவ்...

அங்கு பிந்தியாவோ, 'மூவி மாரத்தான்' என்ற பெயரில், இரவு மூன்றாவது படத்தை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தாள் சிந்துவுடன்...

பிந்தியாவைப் பொறுத்தவரை அபியுடன் இருக்க வேண்டும்... ஆனால் அபி தன்னைக் காதலிக்க வேண்டும்... எனவே தான் அவனுடன் அவ்வப்போது கண்ணாமூச்சி விளையாடினால், ஏக்கத்தில் காதல் மலராதா? என திட்டமிட்டவளாக அபியை அவாய்டு செய்து கொண்டு இருக்கிறாள்...

மறுநாள் காலை, தூங்காமல் சிவந்த விழிகளுடன் வந்த நண்பனைப் பார்த்த முரளிக்கு வருத்தமாக இருந்தது... 'எப்படியாவது பிந்துவுடன் பேசி, அபியைப் பற்றிக் கூறி, ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்' என நினைத்துக் கொண்டான்...

காலையில் சிம்பிளாக, "இன்னும் வீட்டில் பேசவில்லை... நேற்று இரவு தூங்கி விட்டேன்... வீட்டில் பேசிவிட்டு அழைக்கிறேன்" என்ற மேசேஸ் மட்டும் ரிசீவ் ஆனது அபிக்கு... நொந்து போனான் அபினவ்... 'எப்படியேனும் அவளிடம் பேசி நண்பனாகலாம் என்றால், அவள் என்னைக் கண்டு கொள்ளவே' இல்லையே என்ற வருத்தம் அபிக்கு...

இருநாட்கள் கடக்க, உண்மையாகவே தனது வீட்டில் உள்ளவர்களிடம் பேசினாள் பிந்து... 'தனது முன்ஜென்ம கதையைக் கூறினால் நம்புவார்களா?' என்ற யோசனையோடே, அவள் கூற, "உன் விருப்பமே எங்கள் விருப்பம்" என பச்சைக்கொடி காட்டினர் பெற்றோர்...

அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் திரும்பியவளிடம் பிந்துவின் தாய், "உன் கதையை அன்றே சிந்துவின் மூலம் அறிந்து கொண்டேன்... நாங்கள் காதலுக்கு எதிரி அல்ல... அத்தை மாமா ஓகே சொன்னால் எங்களுக்கும் ஓகே என்று இருந்தோம்... சிந்து உன் நிலையை எடுத்துக் கூறி, அவள் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து விட்டாள்... இப்போது எங்களுக்கு ஓகே தான்" என புன்னகை முகமாகக் கூறினார்...

ஆம் சிந்துவும் பிந்துவும் அத்தை மாமன் மகள்கள்... சிந்துவின் அப்பா ஸ்டீபன் மத்தாய், ராபர்டின் தங்கை ஸ்டெல்லாவைத் தான் திருமணம் செய்து உள்ளார்... ஸ்டீபன் மத்தாய்- ஸ்டெல்லா மத்தாய் திருமணத்தின் போது, ஸ்டெல்லாவின் அண்ணன் ராபர்ட், ஸ்டீபனின் தங்கை அனுமோல் மத்தாய் மீது காதல் கொள்ள, அடுத்த மாதமே இவர்கள் திருமணமும் நடந்து, ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்...

ஸ்டீபனும் ராபர்ட்டும் பெரிய தொழில் அதிபர்கள்... தங்களது கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள்... எனினும் எந்த முடிவு எடுப்பதாயினும் இரு குடும்பமும் கலந்து பேசி தான் எடுப்பர்... அவர்களுக்கு காதல் தவறில்லை, ஆனால் ஒரு வயதானவனுக்கு பிள்ளையைக் கட்டிக்கொடுக்கப் போகிறோமோ? என்ற தயக்கம் இருந்தது... ஆனால் சிந்து அபினவ்வின் புகைப்படத்தைக் காட்டவும், அவனது வயதைக் காட்டாமல் கட்டுக்கோப்பான உடலில் இருந்த அவனது தோற்றம் அவனைப் பிடிக்க வைத்து விட்டது வீட்டினருக்கு... அனைத்திலும் மேலாய், முன்ஜென்மம் என்ற ஒன்று அவர்கள் காதலின் ஆழத்தை சொல்லாமல் சொல்லியது... எனவே தான் இரு குடும்பமும் ஒத்துக் கொண்டன...

தனக்காக உதவிய சிந்துவை எண்ணிப் பார்த்தவளுக்கு, 'இதைத்தவிர இனி ஒரு சந்தர்ப்பம் வருமா எனத் தெரியாது... சந்தர்ப்பங்கள் தானாக உருவாகாது, நாம்தான் உருவாக்க வேண்டும்' என்று எண்ணியவள், "எனக்கு சந்தோஷம் தான்... ஆனால் சிந்துவைப் பிரிந்து என்னால் இருக்க முடியாதே"

"அதற்காக ஒரு மாப்பிள்ளைக்கா கட்டி வைக்க முடியும்?"

"அப்படிக் கூட செய்யலாமோ?"

"அடி செருப்பால... பேச்சைப் பாரு... சரி உனக்கு சிந்து உன் கூட இருக்கனும்... அவ்வளவு தானே... அவளுக்கும் திருநெல்வேலி மாப்பிள்ளை பார்த்து, நாங்களும் அங்கேயே வந்து செட்டில் ஆகி விடுறோம்... ஓகேவா?"

"நீங்க திருநெல்வேலில மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொல்றீங்க... நான் அபி வீட்லயே மாப்பிள்ளை பார்த்துட்டேனே"

"அப்படி யாருமா உனக்குத் தெரிந்தவர்?"

"என் அண்ணன்... முரளிக்கண்ணன்"

"இல்லை... அப்படி எல்லாம் கொடுக்க முடியாது... நீங்கள் இருவரும் நல்ல ஒரு கிறிஸ்தவ முறையில் வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள்... அப்படி எல்லாம் கட்டிக்கொடுக்க முடியாது... உன் விஷயத்தில், உன் முந்திய பிறவி மட்டும் தான் எங்களை ஒத்துக்கொள்ள வைத்தது... சிந்துவை எல்லாம் அப்படிக் கொடுக்க முடியாது" பிந்தியாவின் அப்பா மறுத்தார்...

"ஏன் அப்பா? எனக்கு பழைய ஞாபகங்கள் வந்ததும் நான் உங்களுக்கு மகள் இல்லாமல் போய் விட்டேன் அல்லவா?"

"யார் கூறியது அப்படி? நான் சுமந்து பெற்றெடுத்த உன்னை அப்படி எல்லாம் நினைப்போமா?"

"அப்படியானால், சிந்து என்றால் அந்த மாப்பிள்ளை வேண்டாம்... எனக்கு என்றால் ஓகே... சிந்துவுக்கு மட்டும் தான் வீட்டில் உரிமையா? என்னை யாரிடம் தள்ளுவது என்று இருக்கிறீர்களா?"

அப்படி இப்படி பிட்ட போட்டு, இப்போது தான் வீட்டார் இறங்கி வந்துள்ளனர்... "நாங்கள் அந்த இருவரையும் விசாரிப்போம்... எங்களுக்குப் பிடித்தால் மட்டுமே உங்கள் இருவருக்கும் திருமணம்" என்று ராபர்ட்டும் ஸ்டீபனும் கூற, தைரியமாக ஓகே சொன்னாள் பிந்தியா...

இதுவரை நடந்ததற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிந்து அமைதியாக நிற்கவும், "உனக்கு இஷ்டம் இல்லை என்றால் இப்போதே கூறி விடலாம்" என்றார் பிந்தியாவின் தந்தை...

"நான் என்றுமே பிந்துவுடன் இருப்பதைத் தான் விரும்புவேன் மாமா... நீங்கள் விசாரித்து விட்டுக் கூறுங்கள்" அமைதியாக பதிலளித்தாள் சிந்து... 'உலக மகா நடிப்புடா சாமி' மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் பிந்து...

'இருநாட்களாக போனும் இல்லை, மெசேஜும் இல்லை... என்னதான் செய்கிறாள்? ஒரு சிறுபெண் என்னை இப்படி ஆட்டிப் படைக்கிறாளே... நான் என்ன செய்வது? அவள் சிறுபெண்ணா? அவள் என் தீபு... தீபுக்குட்டி... போன் பண்ணுமா...' மனதினுள் கொஞ்சிக் கொண்டு இருந்தான் அபினவ்...

ஏனோ, இப்போதெல்லாம் தீபாவின் போட்டோவில் மாலை போட பிடிக்கவில்லை அபிக்கு... 'தீபு தான் என்னுடன் இருக்கிறாளே' என்ற எண்ணம் மனதில் பதிய ஆரம்பித்தது...

இரு நாட்கள் கழித்து, அன்று இரவில் போன் செய்தாள் பிந்தியா, அபினவ்விற்கு...

"என்ன அபி... நல்லா இருக்கீங்களா?"

"ஏன் போன் பண்ணவில்லை தீபு?"

அவன் தன்னை தீபு என அழைத்ததை அறிந்தும், அறியாதவள் போல், "இப்போ தானே வீட்டில் ஓகே சொல்லி இருக்காங்க... அந்த மடப்பயல் என்ன சொன்னார்?"

"அவன் கொஞ்சம் தயங்குகிறான்"

"ஐயோ... என் மாமா கிட்ட நிறைய பிட்ட போட்டு சம்மதம் வாங்கி இருக்கேன்... சொதப்பிட மாட்டாரே?"

"மாமாவா?"

"ஆங்... சிந்துவோட அப்பா"

"அப்படியானால் நீங்கள் இருவரும் கசின்ஸ்... ரைட்?"

இப்போது தான் முரளி எதற்காக தயங்கி இருப்பான் என்று பிந்துவுக்கு புரிந்தது... தன் அண்ணனை எண்ணி கண்ணில் குளம் கட்டியது... எதையும் வெளிப்படுத்தாமல், அமைதியாக தங்கள் உறவு முறையை எடுத்துக் கூறினாள் பிந்தியா...

உற்சாகமடைந்த அபினவ், "நாளை கால் செய்கிறேன்" என்றவாறே போனைக் கட் செய்து, முரளியிடம் ஓடினான் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள...

முரளிக்குமே சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை... ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தான்... ஏனெனில் இன்னுமே அதே உறுதியுடன் இருக்கிறான்... அபியின் திருமணம் முடிந்தால் தான் தனக்குத் திருமணம் என...

சந்தோஷமான மனநிலையில் இருந்த அபிக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது... முரளி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதை விட, தானே முரளியின் விருப்பத்திற்கு தடையாக இருக்கிறோம் என்பதை நினைத்தவன் மனம் நொந்து போனான்... அனுஷ்யாவோ பெண் தேடலில் இன்னும் தீவிரமாக இறங்கி உள்ளார்...
 
Shakthi R

Well-known member
Joined
Feb 4, 2019
Messages
4,243
Reaction score
12,512
Points
113
Location
Madurai
Anusha ma neenga romba kastapattu ponnu theda venam. Already abhi istapatta ponnu vanduta. ini avangalukku dum dumdum thaan
 
Shamina Sarah

Author
Author
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,756
Points
93
Location
chennai
Anusha ma neenga romba kastapattu ponnu theda venam. Already abhi istapatta ponnu vanduta. ini avangalukku dum dumdum thaan
பாவம்... அனுஷ்யா க்கு தெரியலையே... அவள் வந்தது
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top