• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

21 prefinal நிழலின் காதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
அன்றைய நாள் காலை யாருக்கும் காத்திராமல் வேகமாக விடிந்தது... அருளின் வீட்டில் அருள், பாப்பா, இந்திராணி, பன்னீர் மற்றும் பாப்பாவின் பெற்றோர் ஆறுமுகம், ஜோதி கூடியிருந்தனர்... அனைவரும் டேவிட்க்காக வெயிட் செய்துக்கொண்டு இருந்தனர்...

சரியாக சரவணனும் அங்கு வந்து சேர்ந்தவன், அருளிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி தனியே அழைத்துச் சென்றான்...

"பிரசாந்த்... டேவிட் ஒன்பது மாதத்துக்கு முன் இந்தியா வந்துள்ளான் அவன் மனைவியுடன்... அன்று இரவு நடந்த ஆக்ஸிடென்ட்டில் அவன் மனைவியின் கர்ப்பம் கலைந்துள்ளது... மூன்று வருடங்கள் கழித்து உருவான கர்ப்பம் அது... பாப்பா டேவிட்டுடன் தான் US போய் இருக்கிறாள்... அதுமட்டுமின்றி அந்த நான்கு நாட்கள் டேவிட்டின் மனைவியிடம் பேச மருத்துவ மனைக்கு, பாப்பாவும் வந்து போய் இருக்கிறாள்" என அவசர அவசரமாக கூறினான் சரவணன்...

ஏதோ யோசித்தபடியே அருள் "சரவணா, தவறான யூகங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம்... இதோ இன்னும் சிறிது நேரத்தில் பாப்பாவே கூறி விடுவாள்... வா போகலாம்" மிகவும் பொறுமையாக பேசும் தன் நண்பனை வியந்து பார்த்தபடியே பின்தொடர்ந்தான் சரவணன்...

அதற்குள் டேவிட்டும் வந்திருக்க, டேவிட்டே ஆரம்பித்தான்... "உங்களுக்கு பல குழப்பங்கள் இருக்கும் என்னால்... என்ன நடந்தது என்று கூறுவதற்கு பல நாட்கள் முயற்சி செய்து இருக்கிறேன்... மாளவிகா என்னை அனுமதிக்கவேயில்லை... ஆனால் இன்று அவளே என்னை, 'உண்மையைக் கூறு' என அழைத்தது வியப்பாக இருக்கிறது...

நான் ஒரு மருத்துவன்... மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்பவன் என்ற முறையில் எனக்கு மாளவிகாவுடன் பழக்கம்... இவள் என் மனைவி சுதா... சுதாவும் மாளவிகாவும் நல்ல தோழிகள்... அப்படித்தான் நான் சுதாவைக் காதலிக்க ஆரம்பித்தேன்...

எவ்வளவோ மறுத்த சுதா, ஒருநாள் என் காதலை ஏற்றுக் கொண்டாள்... அதன் பின் சுதாவின் வீட்டில் எவ்வளவோ போராடினோம்... அவர்கள் 'நீ இனி என் மகளே கிடையாது... உன் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட உருவாகாது... உன்னால் நிம்மதியாகவே இருக்க முடியாது... வெளிநாட்டுக் காரனுடன் வாழ சென்ற நீ, அவன் ஏமாற்றி விட்டான் என்று அழுது தான் திரும்ப வருவாய்... அப்போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்... நினைவில் வைத்துக்கொள்' என்று கடுமையாக பேசினர்...

அதன்பின்னர் தான் நாங்கள் அமெரிக்கா சென்றோம், ஆஸ்திரேலியாவில் இருந்து... என்னைப் பொறுத்தவரை 'காரணமின்றி விட்ட சாபம் செல்லாது... ஆனால் ஆசைஆசையாய் வளர்த்த மகள் துரோகம் செய்து விட்டாள் என்ற எண்ணத்தில் அவர்கள் விட்ட சாபம் எங்களைப் பாதிக்குமோ' என்று மிகுந்த பயம் எனக்கு... சுதாவுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை மாறி, சுதா என்னைத் தேற்றும் நிலை வந்தது... எனக்குத் தாயாகவே மாறினாள் சுதா...

நான் பயந்தபடியே, இரண்டு வருடங்களாக சுதா கர்ப்பந் தரிக்கவில்லை... நான் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளன் அல்லவா? நானே எங்களைப் பரிசோதித்தேன்... என்னென்ன சோதனைகள் மேற்கொள்ள வேண்டுமோ எல்லாவற்றையும் செய்தேன்"

அதற்குள் பொறுக்காமல் இடையே பேச ஆரம்பித்தான் சரவணன்... "அது என்ன சோதனை? நீங்களும் சயின்டிஸ்ட் ஆ?"

"ம்ம்ம்ம்... நீங்க தான் சரவணா அண்ணாவா?"

"ஆமா... உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"இந்த 9 மாதங்களும் உங்கள் பெயரைக் கூறாமல் மாளவிகா இருந்ததே இல்லை... 'நீ ஏதாவது அவருடன் பேசு... உன்னைக் கேள்விகளால் குடைந்து எடுப்பார்... நிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்ள அண்ணாவுக்கு ஆர்வம் அதிகம்' என மாளவிகா என்னிடம் கூறி இருக்கிறாள்... அதை வைத்து தான் கெஸ் செய்தேன்"

கொஞ்சம் பெருமையாகவும், கொஞ்சம் கர்வமாகவும் பிரசாந்தைப் பார்த்தான் சரவணன்... "என் தங்கச்சிடா" என்ற பெருமிதம் இருந்தது அவன் பார்வையில்... பிரசாந்த் சிரித்துக் கொண்டான்...

"சரி சரி... நீங்க சொல்லுங்க... கொஞ்சம் டீப்பா ஆனா மொக்கை போடாம சொல்லனும்... சரியா?" அதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான் சரவணன்... பிரசாந்த் தலையில் அடித்துக் கொண்டான்...

டேவிட் தொடர்ந்தான் " ஒரு தம்பதிக்கு கர்ப்பம் தங்கவில்லை என்றால்,
பெண்களுக்கு ஸ்கேனின் மூலம் 3ஈ, 4ஈ டாப்லர் (ரத்த ஒட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் மூலமாக கர்ப்பப் பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை "ஹிஸ்டீரோ சால்பின்கோக்ராம்" (H‌y‌s‌t‌e‌r‌o Sa‌l‌p‌h‌i‌n‌g‌o‌g‌ra‌m) எனும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர் கோர்த்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறையில் மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம்.
மருந்துகள் மூலமும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

இயற்கையான முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தை பெறும் சூழல் இல்லாத நிலையில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறைக்கு சோதனைக் குழாய் சிகிச்சை அல்லது டெஸ்ட் டியூப் பேபி என்று பெயர்... இதுல என்னென்ன பிராசஸ் இருக்குன்னா,
1.முன் பரிசோதனைகள்
2.கருமுட்டை வலுவூட்டல்
3.கருமுட்டை சேகரித்தல்
4.தகுதியானவற்றை தேர்ந்தெடுத்தல்
5.ஆய்வகத்தில் உயிரணு, கருமுட்டையை ஒன்றுசேர்த்தல்
6.சினைக் கருவை வளரச் செய்தல்
7.சினைக் கருவை கருப்பைக்குள் செலுத்துதல். – Embryo transfer

"எம்ப்ரியோஸ்கோப்' என்பது மிகவும் அதிநவீன கருவி. இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிஷமும் பதிவு செய்ய முடியும்.
இதனால் கருவின் வளர்ச்சியில் குறை இருந்தால் அதைக் கண்டுபிடித்து கருப்பையில் செலுத்தும் முன் சிறந்த கருவைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. அந்த சிறந்த கருவை, கருப்பைக்குள் அனுப்பறோம்...

இந்த மாதிரி பிராசஸ்க்காக நான் சுதாவோட கருமுட்டையையும், என்னோட விந்தணுவையும் எம்ப்ரியோஸ்கோப்ல வளர்த்து, ஒரு சினைக் கருவை சுதாவோட கருப்பைக்குள் செலுத்தி, மற்றதை எதற்கும் இருக்கட்டும் என்று, ஃப்ரீஸ் பண்ணி வைத்திருந்தேன்... இதுக்கு எம்ப்ரியோஃப்ரீஸ்னு சொல்வாங்க...

சுதாவோட அம்மா தவறிட்டாங்கனு தெரிந்து, நாங்க இந்தியா வந்தோம்... அன்னைக்கு நைட் ரொம்ப நேரமா தூக்கம் வரவில்லை... சும்மா ஒரு வாக் போகலாம்னு, நான் தான் சுதாவைக் கம்பெல் பண்ணி, நைட்வாக் வந்தோம்...

அப்போதான் ஒரு கார், வேகமாக வந்தது, வந்த வேகத்துல சுதாவை இடித்து தள்ளிட்டு, அது போய்டுச்சு... நான் பார்த்த வரை, அந்த டிரைவர் மூச்சு முட்டக் குடித்து இருந்தான்... சுதாவைத் தள்ளினது கூட அவனுக்குத் தெரியலை...
அவனுடைய கார் நம்பரை நோட் பண்ணிய நான், அப்றோம் தான் சுதாவைத் தேடினேன்... ஓரத்தில் இருந்த கல் வயிற்றில் கிழித்து இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள்...

மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்று, அங்குள்ள மருத்துவரின் உதவியோடு, நானே செக் செய்தப்போ, சுதாவோட கர்ப்பப்பை அளவுக்கதிகமா டேமேஜ் ஆகி இருந்தது... நிச்சயமாக இனி அவளால் கருவைத் தாங்க முடியாது என்பது தெரிந்தது...

மறுநாள் வெளியே என்னைப் பார்த்த மாளவிகா, 'டேவிட் இந்தியாவுல எப்படி?' என யோசித்து, மருத்துவ மனைக்கு வந்தது நடந்ததைத் தெரிந்து கொண்டாள்...
அதற்குள் செக்யூரிட்டி ஒருவர் வந்து, மாளவிகாவின் கார் நம்பரைக் கூறி, 'பார்க்கிங்கில் நிறுத்துமா' என அழைத்துப் போனதும் ஆடிப்போய் விட்டேன்... அதே கார் தான் அதிகாலையில் என் சுதாவை இடித்தது என்று..." கூறினவன் அழ ஆரம்பித்தான்...

ஆறுதலாக டேவிட் தோளைத் தட்டிக் கொடுத்த மாளவிகா, பேச ஆரம்பித்தாள்...

"அன்று தான் அருள், நானும் மாலினியும் பேசுவதைக் கேட்டு தவறாக நினைத்துக் கொண்டார்... என் மீது உள்ள கோபத்தில், குடித்து விட்டு வண்டி ஓட்டி வரும் போது, தெரியாமல் தான் சுதா மீது இடித்து உள்ளீர்கள்... இது தெரியாமல், அதிக கோபத்தில், என்ன செய்வது என்று தெரியாமல், என்னிடமும் தவறாக நடந்தீர்கள்" மாளவிகா கூறியதும், பன்னீர்

"பாப்பா சொல்றது உண்மையாடா? என் பையன் குடிப்பானா?" என சட்டையைப் பிடித்துக் கேட்க, இந்திராணியோ தலையில் அடித்து அழுதார்... அருளோ, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான்... மீண்டும் மாளவிகா தொடர்ந்தாள்,

"அன்று மருத்துவ மனையில், சுதாவின் நிலை அறிந்ததும் நான் தான், 'வேற ஃப்ரீஸ் பண்ணி வைச்சிருக்கியா டேவிட்?' எனக் கேட்டேன்... அவன் ஆம் எனக் கூறவும் தான், 'நானே உங்கள் குழந்தையைப் பெற்றுத் தருகிறேன்' எனக் கூறினேன்... டேவிட் எவ்வளவோ மறுத்தும், நான் பிடிவாதமாக இருந்தேன்... நான் எப்படியும் ஒரு வருடம் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைத்தேன்... அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டேன்"

"எல்லாம் சரி... ஆனால் ஏன் டேவிட்டைக் கல்யாணம் பண்ணியதா பொய் சொன்ன பாப்பா? சரவணன் கேட்க,

"ஒருவேளை நான் வேறொருவருக்கு குழந்தை பெற்றுக் கொடுப்பதை அவர் விரும்ப மாட்டார் என்று நினைத்தேன்... ஏற்கனவே அவர், எங்களுக்கு பிறக்கும் குழந்தையை மாலுவுக்கு கொடுப்பதாகத் தவறாக நினைத்ததால் தான் இவ்வளவு பிரச்சனையும்... இனியும் பிரச்சனை வேண்டாம் என நினைத்தேன்... அவர் நன்றாக வாழ வேண்டுமானால் வேறு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்" பாப்பா கூறிவிட்டு மடமடவென தண்ணீர் அருந்தினாள்...

பாப்பாவின் முன் மண்டியிட்ட அருள், "ஏன்டி? ஏன் என்மேல இவ்வளவு பாசம்? நான் ஒரு அவசரக்காரன்... என்னால ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே அழிந்தது கூடத் தெரியாமல் நான் நார்மலாக இருக்கேன்... ஆனால் நீ, எல்லாப் பழியையும் உன்மேல் வாங்கிக் கொண்டு, என்னை ஏன் நல்லவனாக காட்டுகிறாய்?"

"ஏன்னா நீங்க என்னோட அருள்"

"ம்ம்ம் இல்லை... நீ தான் என்னோட நிழல்... நிழல் கூட உன்னை விட்டுப் போகும், நான் போக மாட்டேன்னு சொல்வாங்க... அப்படி இல்லை... நிழல் நம்மை விட்டு பிரிந்தால், நமக்கு ஏதோ நல்லது செய்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம் போல... இன்று தான் புரிந்தது எனக்கு" என அருள் கூறவும் வெட்கச்சிரிப்பு சிரித்தாள் மாளவிகா

நேராக டேவிட் அன்ட் சுதாவின் முன் மண்டியிட்ட அருள், "என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்க மாட்டேன்... ஏனெனில் மன்னிக்க முடியாத குற்றம் செய்து உள்ளேன்..." அருள் பேசி முடிப்பதற்குள், அவன் முன்னே தரையில் அமர்ந்த சுதா,

"பெரிய பெரிய வார்த்தைகளை பேசாதீங்க அண்ணா... நான் எங்க வீட்ல எப்படியாச்சும் போராடி ஒத்துக்க வைத்து இருக்கனும் எங்க கல்யாணத்துக்கு... நான் சம்பாதிக்கிற திமிர்ல அவங்களை மதிக்காம, நான் நடந்துகிட்டதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட்... நீங்க வருத்தப் படாதீங்க அண்ணா... யாரோ ஒருவர் மூலமா இது எனக்கு நடந்தே ஆகனும்னு விதி... உங்க மூலமா ஆக்ஸிடென்ட் நடந்ததால, இன்னிக்கு எங்க பொண்ணு மாளவிகா மூலமாக கிடைக்கப் போறா... இது போதும் அண்ணா எனக்கு... நேம் கூட சூஸ் பண்ணிட்டோம்... ப்ரவிகா(பிரசாந்த் மாளவிகா)" கண்ணீர் மல்க கைகூப்பி பேசினாள் சுதா...

"நீங்க மறுத்துடுவீங்கனு ரொம்ப பயந்தேன்... எங்க குழந்தையை எங்களிடம் ஒப்படைக்கப் போறீங்க... ரொம்ப நன்றி" டேவிட்டும் கைகூப்ப, 'இவர்கள் நிலைக்கு நான் தானே காரணம்'என வெட்கித் தலைகுனிந்தான் அருள் பிரசாந்த்...

அனைவரும் மருத்துவ மனைக்கு கிளம்ப, தனது மிக முக்கிய டவுட்டைக் கேட்டுக்கொண்டு இருந்தான் சரவணன்...

"டேய் பிரசாந்த்... நீ எப்போடா குழந்தையைக் கொடுக்க ஓகே சொன்ன?"

"எனக்கேத் தெரியாது சரவணா... எல்லாம் உன் தங்கை பாப்பா திருவிளையாடலா இருக்கும்" என்றவாறு அவர்களும் மருத்துவ மனைக்கு கிளம்பினர் ப்ரவிகாவின் வரவுக்காக....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top