Alagiyin kaadhal thavam - 12

#18
மாறா... சூப்பர்டா.... இளங்கோவனின் வீரமும் அரசியின் மதிநுட்பமும் சேர்ந்த கலவையாச்சே.அலிகான் ஒரு ப்ளான் போட்டா, அதை முறியடிச்சு அவனையும் பிடிச்சிட்டாங்களே. சபாஷ்.... சாகறதுக்கு முன்னே, பாசிலுக்கு யாரால மரணம்னு என்ன அழகா காட்டிட்டார் இளங்கோவன். மதியழகி வரைந்த ஓவியம் ஆதித்த வர்மனோடதா? இதுக்குமுன்னே பார்க்காத முகம்.. கனவில் கண்ட முகத்தை வைத்தே ஓவியமா வரைஞ்சிட்டாளே.. இங்கே காமாட்சியம்மா எந்த ஆதாரத்தை தேடி கண்டு பிடிச்சிருக்காங்க? நிச்சயமா மதியழகி பற்றியதா? ஆஹா.. ஆதி... கண்ணாலேயே காதல் பண்ணா போதுமா??
 

Maha

Author
Author
SM Exclusive Author
#19
“நான் முறையாக பரதம் கத்துகிட்டேன் பிரகதி, ஆனா இது என்ன நடனம்ன்னு தெரியல எனக்கு. கொஞ்சம் இதை பார்க்கும் பொழுது, எனக்கு சிரிப்பா இருக்கு” என்று மதியழகி கூறினாள்.

அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக, இங்கு உள்ள பாஷையை கற்று கொண்டு வருகிறாள் சிறிது நாளாக. பிரகதி அவளை மாற்றிக் கொண்டு இருக்கிறாள், எல்லா விதத்திலும்.

“ஹா ஹா! இது ஹிப் ஹாப், இப்படி தான் இந்த டான்ஸ் இருக்கும். இன்னும் நீ சல்சா, பால்லெட், டாங்கோ, நாட்டுப்புற கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கதகளி இப்படி நிறைய நடனம் பார்த்தது இல்லையே, எல்லாத்தையும் நான் உனக்கு யூ ட்யுப் ல காட்டுறேன்”.

“இதை எல்லாம் பார்த்துட்டு, உனக்கு எது பிடிச்சு இருக்கு சொல்லு, அடுத்து அது படிக்கலாம் நாம சரியா” என்று சிரித்துக் கொண்டே பிரகதி கேட்கவும், அவளும் சரி என்றாள்.

அதன் பின், இருவரும் யூ ட்யூபில் மூழ்கி இருந்தனர். இங்கே ஆதியோ, கிருஷ்ணாவின் நடனத்தை கவனிக்காமல், அவன் மனம் கவர்ந்தவளை கவனித்துக் கொண்டு இருந்தான்.

“டேய் ஆதி! அங்க கிருஷ்ணா சரியா ஆடுறானா, இல்லையான்னு பாரு டா. நானும் வந்ததில் இருந்து பார்க்குறேன், லொகேஷன் பார்த்ததோடு சரி, அப்புறம் என்ன ஆடுறாங்கன்னு கூட பார்க்க மாட்டேன்குற” என்று விஷ்வா அவனிடம் எகிறிக் கொண்டு இருந்தான்.

“டான்ஸ் மாஸ்டர், டைரக்டர் எல்லாம் இங்க தான இருக்காங்க. அவங்க எல்லாம் பார்த்துக்குவாங்க, நீ என்னை இப்போ டிஸ்டர்ப் பண்ணாத” என்று கூறினான் ஆதி.

விஷ்வா, பார்த்துக் கொண்டு இருந்தவன், இது வேலைக்காக போவதில்லை என்று தெரிந்து கொண்டு, கட் அண்ட் பாக் என்று டைரக்டர் பார்த்து கத்தினான். அவன் கத்திய பின், என்னவென்று மதியும், பிரகதியும் தங்களின் கவனத்தை அங்கு திருப்பினர்.

ஆதிக்கு, எரிச்சலாக இருந்தது. அவன் எதற்கு இப்பொழுது கட் அண்ட் பாக் கூறினான் என்று. அவனை தனியாக இழுத்து சென்று, விசாரிக்க தொடங்கினான்.

“டேய்! எதுக்கு டா இப்போ இப்படி சொன்ன?” என்று சிறிது அதட்டினான்.

“ஏன் டா சொல்ல மாட்ட? அங்க அந்த டைரக்டர் நீ கவனிக்கலைன்னு தெரிஞ்சா, இதான் சாக்குன்னு இன்னும் அதிக ரோல் இழுப்பான். அதுக்கு அப்புறம் உனக்கு கிருஷ்ணா பொறுமை பத்தி தெரியும், அவனுக்கு கோபம் வந்தா என்ன செய்வான்னு”.

“இந்த நேரத்துல, இதை கவனின்னு சொன்னா, நீ என்னை திட்டுற. என்ன டா இப்படி ஆகிட்ட, சிஸ்டரை பார்த்ததற்கு அப்புறம். முதல ஊருக்கு போன உடனே, மம்மி கிட்ட சொல்லி உனக்கு சீக்கிரம் சிஸ்டர் கூட கல்யாணம் பண்ணி வைக்கணும்”.

“அப்போ தான் டா, எனக்கு நிம்மதியா இருக்கும். இல்லைன்னு வை, எப்போ பார்த்தாலும், நான் உனக்கு வேப்பில்லை அடிச்சிகிட்டே இருக்கணும் ஆமா” என்று பொரிந்து விட்டான்.

அவனோ அசடு வழிந்துவிட்டு, இது எல்லாம் அரசியல் ல சாதாரணம் என்ற வசனம் போல் தூசி தட்டி, அவனை சரி கட்டி அழைத்து வந்தான்.

“டைரக்டர், மாஸ்டர், கிருஷ்ணா எல்லோரும் சீக்கிரம் சரியா பண்ணுங்க. ரோல் வேஸ்ட் பண்ண கூடாது, இந்த சாங் ஹிட் ஆகணும், அதுக்கு எல்லோரும் சரியா செய்ங்க” என்று அழுத்தமாக கூறிவிட்டு, மீண்டும் அவன் தன் பணியை தொடர்ந்தான்(அதான் மதியை சைட் அடிக்கும் வேலை).

அவனை பார்த்த விஷ்வா, தலையில் அடித்துக் கொண்டு, இவனை திருத்த முடியாது என்பது போல் பார்த்து விட்டு, அங்கே ஷூட்டிங்கை கவனிக்க தொடங்கினான்.

அடுத்த பத்து நாட்களும், இதே போல் கழிந்து மதியும் இப்பொழுது பாஷையை மாற்றிக் கொண்டு அதை சரளமாக பேசவும் தொடங்கி இருந்தாள். இன்றைய கலாச்சாரம், நாட்டில் நடக்கும் சில அரசியல், கல்வி, விளையாட்டு என அணைத்து விஷயங்களையும் பிரகதி அவளுக்கு ஒவ்வொரு நாளும், கத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

ஏற்கனவே புத்தி கூர்மையும், வேகமாக கற்றுக் கொள்ளும் திறனும் இருந்ததால், அவள் சீக்கிரமாக எல்லாவற்றையும் விரல் நுனியில் தெரிந்து வைத்து இருந்தாள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதியும், அவளும் மௌனமாக கண்கள் வழியே காதல் செய்து கொண்டு இருந்தனர். கண்களால், அவள் பேசும் பாஷை அவனுக்கு புரியும் அளவிற்கு இருவரும் நெருங்கி இருந்தனர்.

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பாரிஸில் இருந்து அவர்கள் சென்னை வந்தடையும் பொழுது வில்லன் அவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

தொடரும்...
Ayyoo rama ellam kudi varum podhu Nee yaru da adae Veerappa ? ippo dhan avangaluku chemistry work out aanapula eruku nee enge erudhu gudhikka pora da vennai ??‍♀️??‍♀️ Ums week ka phochu enn gums ??‍♀️ Ellam andha villana nenaichu pallai kadicha pavam nice ud uma?????
 

Advertisements

Top