• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode alagiyin kaathal thavam (pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 19

அன்றிரவு சிறிது படப்படப்புடன், ஆதியின் அறைக்குள் நுழைந்தாள் மதியழகி. பூ அலங்காரத்துடன் காட்சி அளித்த கட்டிலை பார்த்து, வெட்கமும், பயமும் போட்டி போட்டுக் கொண்டு கால்கள் பின்ன அங்கேயே நின்றுவிட்டாள்.

கதவை திறந்து, மூடும் சத்தம் கேட்டவுடன் ஆதி அவளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான். வருவாள், வருவாள் என காத்துக் கொண்டு இருந்தவன், இன்னும் உள்ளே வராமல் இருக்கவும், என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான்.

அங்கே சிறிது பயமும், வெட்கமும் போட்டி போட்டுக் கொண்டு சிறிது பதட்டத்துடன் நின்றுக் கொண்டு இருந்த அழகியை பார்த்து அவளை அள்ளிக் கொள்ள, அவளருகே சென்றான்.


அருகே கேட்ட காலடி சத்தத்தில், நிமிர்ந்து பார்த்தவள் ஆதி சிரிப்புடனும், கண்ணில் விஷமத்தனமும் கொண்டு அவள் அருகே வருவதை பார்த்து, நாணத்துடன் தலையை குனிந்து கொண்டு, கையில் இருந்த பால் சொம்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுகிட்டு, இருக்க போற அழகி” என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கூறியதோடு நில்லாமல், மென்மையாக அவள் காதை கடிக்கவும், அதில் அவள் உடல் சிலிர்த்து வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வை உணர்ந்தாள்.

அவன் அதோடு நிறுத்தாமல், அவளின் சேலையை சிறிது விலக்கி வெற்றிடையில் கை போட்டு, அதில் குறுகுறுப்பு மூட்டினான். அதில் பால் சொம்பை நழுவ விட்டவள், அவன் சுதாரித்து அந்த சொம்பை பிடித்துக் கொண்டான்.

“என்ன நீங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்க?” என்று கூறி அவனிடம் இருந்து நழுவ பார்க்க, அவனோ விடாபிடியாக அவளை பிடித்து கட்டிக் கொண்டான்.

“இப்போ இப்படி எல்லாம் பண்ணல அப்படினா தான் தப்பு, தெரியுமா உனக்கு?” என்று கிசுகிசுப்பாக கூறிவிட்டு, பாலை அங்கேயே அவளை முதலில் குடிக்க வைத்து, பின் அவன் குடித்தான்.

சில சில்மிஷங்கள் செய்து, அவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான். மெல்ல அவளை கைகளில் ஏந்தி, கட்டிலில் கிடத்தி அவளின் பயத்தை போக்க, மெதுவாக பேச்சு கொடுத்தான்.

அவளும், அப்பொழுது அந்த மாயக்காரனின் பேச்சில் மயங்கி அவனோடு அவளறியாமல், அவனின் ஆளுமைக்குள் வந்துவிட்டாள். அவளின் அந்த பயம் தெளிந்த பின், மெதுவாக அவளுடன் கூடினான்.

அங்கே அழகிய மலரை போல், மெதுவாக அவர்களின் தாம்பத்தியம் மலர்ந்து மனம் வீசியது.

மறுநாள் காலை பத்து மணிக்கு, அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது. நல்ல உறக்கத்தில் இருந்தவள், மெதுவாக அந்த சத்தம் கேட்டு விழித்தாள். மீண்டும் பலமாக கதவு தட்டப்படவும், வேகமாக எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது தான், பக்கத்தில் ஆதி இவளை கட்டி பிடித்து உறங்குவது தெரிந்தது.

அவனை பார்த்தவள், மெதுவாக அவனின் மீசையை நீவிக் கொண்டு இருந்தாள். நேற்று நடந்தது எல்லாம் படம் போல், அவள் கண் முன்னே விரியவும் வெட்கத்தில் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

“இப்படி முகத்தை மூடிக்கிட்டா, நான் எப்படி உன்னை பார்க்கிறது அழகி” என்று அவள் காதில் கிசுகிசுத்து விட்டு, மூடி இருந்த போர்வையை விலக்கினான்.

அவளோ அவனை பார்க்க வெட்கம் கொண்டு, மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். இவனோ தன் மீசையை கொண்டு, அவள் முதுகில் குறுகுறுப்பு மூட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

“ஹையோ! ப்ளீஸ்! விடுங்க கூசுது!” என்று கூறி அவனிடம் இருந்து விலக, படுக்கையை விட்டு எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது, மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

“ஹையோ! அப்போ இருந்து யாரோ கதவை தட்டுறாங்க, ப்ளீஸ் போய் யாருன்னு பாருங்க, நான் குளிச்சிட்டு வரேன்” என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடி, குளியலறைக்குள் புகுந்தாள்.

அவனோ சிரித்துக் கொண்டே, கதவை திறந்து யாரென்று பார்த்தான். அங்கே அவனின் அன்னை, அவனை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றார்.

“என்ன மம்மி இப்படி முறைக்குறீங்க?” என்று கேட்டவனை பார்த்து, தலையில் ஒரு கொட்டு வைத்தார்.

“மணி பதினொன்னு! இன்னும் என் மருமகளை பிடிச்சு வச்சு இருக்க உள்ள, ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க வேகமா” என்று கூறியவரை பார்த்து சிரித்தான்.

அவரும் சிரித்துவிட்டு, கீழே இறங்கி சென்றார். கதவை சாத்திவிட்டு, உள்ளே வந்தவன் மனைவியுடன் நேற்று கூடியதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

செல்லை எடுத்து, ஆராயும் பொழுது ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் இருக்கவும் யார் என்று பார்த்தான். பத்து மிஸ்ட் கால், விஷ்வாவிடம் இருந்தும், ஐந்து மிஸ்ட் கால் ரமணனிடம் இருந்தும் வந்து இருந்தது.

முதலில் அவனின் அண்ணன் ரமணாவிற்கு அழைத்தான். எதிர்முனையில் முதல் ரிங்கிலே ஹலோ சொல்லவும், அவன் வியந்தான்.

“என்ன டா அண்ணா, உடனே போன் எடுத்துட்ட. இல்லைனா ஒரு பத்து தடவை போட்டதுக்கு அப்புறம், சாவகாசமா தான் எடுப்ப. ஆமா என்ன விஷயம், அண்ணி நல்லா இருக்காங்களா?” என்று வினவினான் ஆதி.

“நீ சித்தப்பா ஆகிட்ட டா, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு. உங்க அண்ணி நல்லா இருக்கா, ஏன் டா இவ்வளவு நேரம் போன் எடுக்கல?” என்று விஷயத்தை கூறிவிட்டு அவனிடம் என்னவென்று கேட்டான்.

“டேய் அண்ணா! நேத்து தான் டா எனக்கு கல்யாணம் முடிஞ்சது, மறந்துட்டியா!” என்று அவன் சொன்ன பிறகு தான், அவன் மண்டையில் அது நியாபகம் வந்தது.

“ஹி! ஹி! மறந்துட்டேன் டா தம்பி, அப்புறம் பேசலாம்” என்று ஆதி அடுத்து, அவனை திட்ட வருவதற்கு முன் போனை வைத்தான் ரமணன்.

“முதல் வேலையா இவளை கூட்டிட்டு, ஹனிமூன் ஓடிடணும்” என்று அவன் எண்ணி முடிக்கையில், பாத்ரூம் கதவை திறந்து கொண்டு, தலையை துவட்டிக் கொண்டே வந்தாள் அவனின் அழகி.

ஈரம் சொட்ட சொட்ட, தலையை துவட்டிக் கொண்டு வந்த அவனின் அழகியை பார்வையால் பருகிக் கொண்டு இருந்தான். அவன் பார்வையை உணர்ந்தாலும், அவனை கண்டு கொள்ளாமல் அவள் புடவை மாற்ற உடை மாற்றும் அறைக்குள் சென்று விட்டாள்.


பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, அவனும் குளிக்க சென்றான். அதன் பின் இருவரும் சாப்பிட கீழே இறங்கி வரும் பொழுது, மதிய வேளை ஒரு மணியாகி இருந்தது.

“மாப்பிள்ளை சார்! சீக்கிரம் பையனோ, பொண்ணோ ரிலீஸ் பண்ண போறீங்களா?” என்று அங்கு கூடி இருந்த சில உறவுக் கூட்டம், அவர்களை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.

அவர்களின் ஒவ்வொரு கேலி, கிண்டலையும் சமாளிக்க இருவரும் திணறி விட்டனர். அழகி, அங்கு இருந்து தப்பி செல்ல நினைத்தாலும், அவர்கள் அவளை அங்கே பிடித்துக் கொண்டு, அவளை மேலும் சிவக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது அங்கே வந்த விஷ்வா, ஆதியை பார்த்து முறைத்தான். அவனை பார்த்த பிறகு தான், அவன் செல்பேசியில் அழைத்தது நியாபகம் வந்தது.

“ஹி! ஹி! சாரி டா மறந்துட்டேன் போன் போட. ஆமா, எதுக்கு டா கூப்பிட்டு இருந்த?” என்று ஆதி அவன் பேசும் முன்பே அவனிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு, அவன் அழைத்த காரணம் என்னவென்று கேட்டான்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட டா பக்கி! இன்னைக்கு அந்த படக்குழு ல இருந்தவங்களுக்கு எல்லாம், சம்பளம் கொடுக்கணும். அதுக்கு தான் உனக்கு போன் அடிச்சேன், நீ தான் எடுக்கவே இல்லையே”என்று இன்னும் கோபம் தீராமல், அவனை முறைத்துக் கொண்டே கூறவும், அவன் சாப்பிட்டு முடித்த கையோடு, விஷ்வாவை தள்ளிக் கொண்டு, வீட்டில் இருக்கும் அவன் ஆபிஸ் அறைக்கு சென்றான்.

“ரொம்ப பண்ணாத டா! சரி அப்புறம் என்ன பண்ண? யார் கிட்ட வாங்கி, நீ அவங்களுக்கு செட்டில் பண்ண?” என்று இப்பொழுது ஒரு தயாரிப்பாளராக பேச தொடங்கினான்.

அவனும் அதற்கான பதிலை சொல்லிவிட்டு, அடுத்து அடுத்து அவனுக்கு இருக்கும் schedule எல்லாம் கூற தொடங்கினான். பின் அவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்திவிட்டு, அவன் ஒரு மாத விடுப்பு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து, இனி அடுத்த மாதம் தான் எந்த ஒரு படத்தையும் கமிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினான்.

“நீ நடத்து டா, அப்புறம் நீ சொன்ன மாதிரி நைட் டின்னர்க்கு நான் சோழா ஹோட்டல் ல டேபிள் புக் பண்ணிட்டேன். நான் இப்போ ஆபிஸ் கிளம்புறேன், நைட் அங்க மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு சென்றான் விஷ்வா.

மேலும் சில அலுவல் வேலையை முடித்துக் கொண்டு அவன் வெளியே வரும் பொழுது, அங்கே அவனின் அன்னை அவனிடம் மதியை அழைத்துக் கொண்டு, கோவிலுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் மருத்துவமனைக்கு ரமணனின் மகளை பார்க்க வருமாறு கூறினார்.

அவனும் சரி என்று கூறிவிட்டு, அங்கே உறவுகளிடம் சிக்கிக் கொண்டு இருந்த மனைவியை நோக்கி சென்றான்.

“என்ன அக்கா, என் பொண்டாட்டி என்ன சொல்லுறா?” என்று அவனின் பெரியம்மா மகளிடம் கேட்டுக் கொண்டே, அவளுடன் நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“அட அட தம்பி! பொண்டாட்டியை காப்பாத்த ஓடி வந்த மாதிரி இருக்கே!” என்று வியந்ததோடு அல்லாமல், அவனையும் சேர்த்தே கேலி செய்ய தொடங்கினர்.

அதன் பிறகு எல்லோரும், ஓய்வு எடுக்க சென்றனர். ஆதியும், மனைவியை அழைத்துக் கொண்டு, அவர்களின் அறைக்கு சென்றான்.

“நாம தஞ்சாவூர் போகலாமா மதி, நாளைக்கு காலையில்” என்று ஆதி கேட்கவும், சட்டென்று திரும்பி பார்த்தாள் அவனை.

“தாங்கள் கூறுவது உண்மையா வர்மா? நாம் அங்கு செல்ல போகிறோமா?” என்று அவளின் ஆர்வத்தை அடக்க முடியாமல், கேட்டாள் மதியழகி.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“ஆம்! நாம் அங்கு செல்ல போகிறோம் நாளை, அங்கு ஒரு வாரம் இருந்துவிட்டு, அதன் பின் அயல் தேசம் சென்றுவிட்டு, அடுத்த மாதம் தான் வருகிறோம் இங்கே” என்று அவன் கூறியவுடன், அவள் பரவசத்துடன் அவனை கட்டிக் கொண்டாள்.

மறுநாள், அவன் கூறியது போல் மதியை அழைத்துக் கொண்டு தஞ்சை சென்றான். அங்கே அவர்களுக்கு பல திருப்பங்கள், காத்துக் கொண்டு இருந்தது..
******************************************************************************
அந்த ஸ்க்ரிப்ட்டை வாசித்து முடித்த, ரகு அசந்து விட்டான். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு அருமையாக, அதில் சொல்லப்பட்டு இருந்தது.

“டேய் விஷ்வா! செம ஸ்கிரிப்ட் டா இது! அமேசிங் வொர்க்! ஆதி எப்படி டா, இப்படி எழுதினான். செம டலேன்ட் டா அவன், சொன்ன மாதிரி சோழ வரலாறு பத்தி சொல்லாம, அந்த காலத்து ல வாழ்ந்து இருந்தா எப்படி இருக்கும் அப்படின்னு கொடுத்து இருக்கான்” என்று அவன் ஆதிக்கு புகழாரம் சூட்டிக் கொண்டு இருக்க, விஷ்வா பட்டென்று அவனுடையது இல்லை என்றான்.


“என்னது, அவன் ஸ்கிரிப்ட் இல்லையா! அப்போ இது யாரோடது? ஆதி, இதை படிக்க சொல்லிட்டு எங்க போனான்?” என்று வினவினான்.

“இந்த ஸ்கிரிப்ட் எழுதின மகராசியை தேடி போய் இருக்கான், நீ ஒழுங்கா
வாசிச்சியா அந்த ஸ்க்ரிப்ட்டை?” என்று பதிலுக்கு எகிறினான்.


“வாசிக்காம தான், நல்லா இருக்குன்னு சொல்லுவேனா? ஏன் டா இப்படி எரிச்சல் படுற?” என்று கேட்டான் ரகு.

“ம்ச்.. அதுல இன்றைய காலம் ல, ஆதியோட இப்போ உள்ள பொசிஷன், நம்ம அவனோட சிநேகிதர்கள், பாரிஸ் ல கிருஷ்ணா ஷூட்டிங், நம்ம ஆதியோட அம்மா, அப்பா எல்லோரும் நிஜமா நடந்ததை எழுதி இருக்கு”.

“இப்போ ரமணா அண்ணாவுக்கு, பொம்பளை பிள்ளை பிறந்தது வரை இருக்கு. உனக்கு இன்னும் புரியலையா? நம்ம ஆதியை துரத்தி துரத்தி லவ் லெட்டர் கொடுத்தாளே, ஒரு குண்டு பொண்ணு அவ தான் இதை எழுதி இருக்கா” என்று அவன் நிதர்சனத்தை எடுத்து கூறவும், ரகு அதிர்ந்தான்.

“என்ன டா சொல்லுற! அந்த பொண்ணா! இப்போ எதுக்கு டா, இந்த ஸ்க்ரிப்ட்டை கொடுத்துட்டு போனா?” என்று புரியாமல் வினவினான்.

“இன்னும் புரியலையா டா உனக்கு? அவ இன்னும் ஆதிக்கு ரூட் விடுறா, அவ எப்படி டா நம்ம ஆதிக்கு செட்டாவா? அவன் தெளிவா, அப்போவே சொல்லிட்டான், நீ எனக்கு செட்டாக மாட்ட, எனக்குன்னு சில கனவு இருக்கு, எனக்கு வர பொண்ணு எப்படி இருக்கனும்ன்னு”.

“இப்போ தான் கீர்த்தனாவை அவனுக்கு பிடிச்சு இருக்குன்னு, போன வாரம் நிச்சயம் பண்ணாங்க. இப்போ வந்துட்டு குதிச்சு இருக்கா, எனக்கு வர கோபத்துக்கு அவனோட போய், அவளை நல்லா திட்டி விடனும் நினைச்சேன்”.

“ஆதி தான், நானே பார்த்துக்கிறேன் சொல்லிட்டு போயிட்டான். இதுல மேடம் மதி + ஆதி = மாதின்னு புனை பெயர் எல்லாம் வச்சு, இவனுக்கு அனுப்பி இருக்காங்க” என்று பல்லை கடித்தான் விஷ்வா.

ரகு, இதைக் கேட்டு மேலும் ஆச்சர்யம் அடைந்தான். இவன் சொல்லுவது போல், அந்த மதியழகி மோசமானவள் எல்லாம் இல்லை. இஞ்சி இடுப்பழகி படத்தில் வரும் அனுஷ்கா போல், அவளின் தோற்றம் அவனிற்கு பிடிக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேல், அவன் கூறிய பிறகும் அவள் அவனை தொந்தரவு செய்யவில்லை என்றாலும், அவன் செல்லுமிடம் எல்லாம் அவளும் அங்கே ஆஜாராகிடுவாள். கேட்டால், நான் உங்களை பார்த்துகிட்டே, இருக்கிறது ல எனக்கு திருப்தி கிடைக்குது, அதையும் பிடுங்காதீங்க என்று சொல்லிய பிறகு, மாணவர்கள் மட்டுமே படிக்கும் கல்லூரிக்கே அவனை செல்ல வைத்தது.

அதன் பிறகு ஐந்து வருடம் கழித்து, இதோ இப்பொழுது அருமையான ஸ்க்ரிப்ட்டை கொடுத்ததோட அல்லாமல், இன்னும் உன் மேல் விருப்பம் எனக்கு இருக்கிறது, என்று தெளிவாக கூறியவளை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை ரகுவால்.

“எனக்கு என்னமோ, ஆதி மதியை மிஸ் பண்ணிட்டானோன்னு தோணுது” என்று கூறிவிட்டு எழுந்து சென்ற ரகுவை பார்த்து முறைத்தான் விஷ்வா.

“இவனுங்களுக்கு என்ன ஆச்சு? அப்படி என்ன இருக்கு அந்த மதி பொண்ணு கிட்ட? இந்த ஆதியும், அவளை தேடி ஓடுறான். இந்த ரகு, அவளை ஆதி மிஸ் பண்ணிட்ட மாதிரி, சொல்லிட்டு போறான்”.

“ஒரு வேலை, இவனுங்க சொன்ன மாதிரி அவ நிஜமாவே ஆதியை லவ் பண்ணி இருந்து இருப்பாளா? அப்படியே இருந்தாலும், ஜோடி பொருத்தம் பார்க்க கன்றாவியா ல இருக்கும்” என்று மனதில் நினைத்துக் கொண்டான் விஷ்வா.

அப்பொழுது அவனின் மனசாட்சி, அவனை பார்த்து கேள்வி கேட்டது. பிரகதி ஒல்லியா அழகா இருக்க போய் தான், அப்போ நீ லவ் பண்ணியா? அவ குணத்தை பார்த்து இல்லையா? என்று கேட்கவும் அதிர்ந்தான்.

“இல்லை அப்படி இல்லை, அவளுக்கும் எனக்கும் முதல செட் ஆகலையே? ஆனா போக போக, அவளோட குணம் பிடிச்சு தான ப்ரொபோஸ் செய்தேன். அவ எப்படி இருந்தாலும், எனக்கு அவ தான் லைப் பார்ட்னெர்” என்று அதனிடம் பதில் கூறவும் தான், அவனுக்கு ஆதியும், ரகுவும் கூறியது புரிந்தது.

“ஆதிக்கு யார் பெஸ்ட்ன்னு நீங்க பீல் பண்ணுறீங்களோ, அவங்களோட சேர்த்து வைங்க கடவுளே” என்று கடவுளிடம் இப்பொழுது மானசீகமாக வேண்டிக் கொண்டு, அடுத்த வேலையை பார்க்க தொடங்கினான்.

ஆதி, அவனின் bmw வண்டியை ஏர்போர்ட் நோக்கி வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான். மதி வெளிநாடு செல்ல போவதாக, அவளின் ரூம்மேட் தகவல் கௌக்கவும், அவளை தேடி அங்கு விரைந்தான்.

அவனுக்கு அவளிடம், ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டி இருந்தது. எங்கே இப்பொழுது விட்டால், அடுத்து அவளை இழந்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளவும் தான், வேகமாக ஏர்போர்ட் விரைந்தான்.

அங்கே இன்டர்நேஷனல் departure இடத்தில், valet பார்கிங் போட்டுவிட்டு வேகமாக உள்ளே நுழைந்து அவளை தேடினான். கண்ணுக்கு எட்டியவரை, அவள் அவன் கண்களுக்கு தெரியவில்லை எனவும், நேராக அறிவிப்பு கொடுக்கும் இடம் நோக்கி சென்றான்.

அங்கே அந்த அதிகாரிகளிடம், தான் யார் என்பதை விளக்கி, ஒருவரை இப்பொழுது மைக்கில் அழைக்க, அவர்களிடம் அனுமதி வாங்கினான்.

“ ஏய் தர்பூஸ் மதியழகி! இப்படி ஒன்னும் சொல்லாம கிளம்பி போற நீ! எனக்கு இப்போ ஒரு பதிலை சொல்லு, நீ என்னை விரும்புறியா? நேர் ல வந்து எனக்கு நீ கண்டிப்பா, பதிலை சொல்லியே ஆகணும்”.

“இப்போ நீ வரலைனா, நீ வர வரைக்கும் நான் கல்யாணம் பண்ணாம தான் இருக்க போறேன். இதை தான, நீ எதிர்பார்த்த டி தர்பூஸ்” என்று மைக்கில் அவன் பேசவும், அப்பொழுது தான் பாரிஸ்க்கு போர்டிங் பாஸ் எடுக்க வரிசையில் நின்று இருந்தவளுக்கு, அவனின் இந்த அழைப்பு கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்தது.

அவனின் இந்த அழைப்பை, எத்தனை வருடங்கள் கழித்து கேட்கிறாள். அங்கு இருந்து விரைந்து, நேராக அவன் இருக்கும் தேடி வந்தவளை பார்த்து, அவன் அதிர்ந்தான்.

தர்பூஸ் போல் இப்பொழுது அவள் இல்லை, அப்படியே ஆளே ஆப்பிள் பழம் போல் மாறி இருந்தாள், மதியழகி.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hai friends, pre final pottachu.. yaarum ennai adikka vara koodaathu, ennoda final part ippadi irukku appadina intha kathaikku apt a irukkanum intha story appadinu thaan eduthen.. innum detail a naan naalaikku solluren dears..

me waiting for ur comments friends..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top