• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Alagiyin kadhal thavam 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 11

ஐநூறு வருடங்களுக்கு முன்:

குமாரிதேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அலிகான் இப்படி ஒரு விஷயம் சொல்லிவிட்டு சென்றதில் இருந்து. மகளை அவன் திருமணம் புரிந்து இருக்க மாட்டான், என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனால், கடத்தி சென்று இருக்கலாமே. இங்கே வைத்து கடத்துவது என்பது, முடியாத காரியம். அப்படியென்றால், மகள் யாரையோ தேடி சென்று இருக்கிறாள், இவனும் அவளை தேடி பின் தொடர்ந்து இருக்கிறான். யோசித்து பார்த்ததில், அவருக்கு இது தான் நடந்து இருக்கும் என்று புரிந்தது.

ஆனால், மகள் யாரை தேடி சென்றாள்? எதற்காக சென்றாள் என்று தெரியாமல் குழம்பினார். அப்பொழுது, அங்கே இளமாறன் அன்னையை தேடி அங்கே வந்தான்.

“தாயே! தாங்கள் சீக்கிரம், அரசர் அறைக்கு விரைந்து வாருங்கள்” என்று கூறி அவரை கையோடு அங்கே அழைத்து சென்றான்.

“மகனே இளமாரா! அரசருக்கு மீண்டும் உடல் நலக் குறைவா! இல்லை வேறு எதுவும் புது பிரச்சனையா?” என்று கேட்டுக் கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கு சென்றார்.

அலிகான்! அவர் இங்கு வரும் பொழுதே, ஒரு ஒற்றனை இங்கே நியமித்து விட்டு தான் சென்றார். அரண்மனை செய்திகளை பகிர, ஏற்கனவே ஒருவன் அங்கு இருந்தாலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இன்னொருவனும் இங்கே இருந்தால், அரசர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஆட்டமாட வேண்டும் என்ற எண்ணத்தில் விட்டு சென்றார்.

இவர்கள் இங்கே அரசர் அறைக்கு விரையும் பொழுதே, அந்த ஒற்றனும் யாருமறியாமல், அவர்களை பின் தொடர்ந்தான். அவனால் ஒரு எல்லைக்கு பிறகு செல்ல முடியவில்லை, அந்த அளவிற்கு பாதுகாப்பு செய்து வைத்து இருந்தார் குமாரிதேவி.

அவன் ஏதாவது சிறு வழி தென்படுகிறதா, என்று ஆராய தொடங்கினான். அவன் பார்த்த வரை அப்படி ஏதும் இல்லை எனவும், இருவரும் வெளியே வருவதற்காக காத்து இருந்தான்.

அவரசமாக அரசர் அறைக்கு உள்ளே அழைத்து வந்த மகன், ஏதும் பேசாமல் மெளனமாக ஓரிடத்தில் கண்ணில் கோபத்துடன் அமரவும், குமாரி திடுக்கிட்டார். மகன் கோபம் கொள்வான் தான், இதுவரை பார்த்ததே இல்லாத அளவிற்கு அவன் அப்படி ஒரு கோபத்துடன் அமர்ந்து இருந்ததை பார்த்து பரிதவித்து விட்டார் குமாரிதேவி.

“மகனே! ஏன் இந்த கோபம்? யார் மீது கோபம்? உன்னை இப்படி நான் இதுவரை கண்டதே இல்லையே டா, ஏன் நீ இவ்வாறு இருக்கிறாய்?” என்று தன்னை சமன்படுத்திக் கொண்டு, மெதுவாக அவனை அணைத்து, தலை கோதி கேட்டார் குமாரிதேவி.

“தாயே! அந்த பாசில் என் தமக்கையை, திருமணம் செய்ய எண்ணி இருக்கிறான். இப்பொழுது தமக்கை சுதாரித்து, அவர் அந்த துறவியின் உதவி கேட்டு கால சக்கரத்திற்குள் சென்று இருக்கிறார். இதை எப்படியோ அறிந்த அந்த பாசில், பின்னோடு இப்பொழுது சென்று இருக்கிறார்” என்று அவன் அறிந்த தகவலை கூறினான்.

இதைக் கேட்ட அரசி மங்கை திடுக்கிட்டு, கலவரத்துடன் அரசர் முகம் பார்த்தார். அவரோ கண்களால் அவருக்கு ஆறுதல் அளித்துவிட்டு, மகனை அவர் படுத்து இருந்த கட்டில் அருகே அழைத்தார். அவனும் அவர் சொல்லுக்கு இணங்கி, அவர் அருகில் வந்தான்.

“மகனே! துறவி இதை பற்றி, முன்பே ஒரு முறை என்னிடம் சொல்லி இருந்தார். ஆகையால் இப்பொழுது உன் தமக்கை பற்றிய கவலையை மறந்து, இப்பொழுது நாட்டை அந்த அலிகானிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி மட்டும் யோசி” என்று அவர் கூறவும், அவனுக்கும் அப்பொழுது அது தான் சரி என்று பட்டது.

உடனே அதற்கான ஏற்பாடை கவனிக்க, அவன் தந்தையிடம் இருந்தும் இரு தாயிடமும் சொல்லிக் கொண்டு அவ்வறை விட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அடுத்த நிமிடம், அந்த ஒற்றன் அவனை பின் தொடர்ந்தான்.

“அரசே! தங்களுக்கு இது பற்றி முன்பே தெரியுமா? இது பற்றி, தாங்கள் ஒரு முறை கூட சொல்லவில்லையே எங்களிடம்?” என்று மனத்தாங்கலுடன் கேட்டனர் இருவரும்.

“சொல்ல வேண்டும் என்று நினைக்கும் பொழுது தான், மகளிடம் அவளை சுற்றி இருக்கும் ஆபத்தை கூறி எச்சரித்தேன். சற்று கவனமாக இருப்பாள் என்று நான் நினைத்ததற்கு மாறாக, அவள் உடனே துறவியை சந்திக்க சென்று விட்டாள்”.

“இனி நம் மகளை சந்திக்க போவதில்லையே என்ற வருத்தம் மனதை வாட்டி, இப்பொழுது நெஞ்சு வலியில் துடிக்கிறேன்” என்று கூறிய அரசரை திடுக்கிட்டு பார்த்தனர் இருவரும்.

“என்ன! அரசே தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்? இனி நம்மால் நம் மகளை காண முடியாதா? அவள் திரும்ப போவதில்லையா இனி?” என்று அச்சத்துடன் கேட்டார் மங்கை.

அவரோ பதில் கூறாமல், மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தார். அதை பார்த்த பின்பு அரசி மங்கை, மகளே! உன்னை காண முடியாதா இனி என்று கத்தி கதற தொடங்கினார்.

அரசி குமாரிதேவிக்கும், இந்த தகவல் அதிர்ச்சி தான். ஆனால் இப்பொழுது மூவரை தவிர, விஷயம் வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பதே உசிதம் என்று எண்ணி, உடனே அரசி மங்கையை சமாதானப்படுத்தினார்.

அவர் அழுகையை கட்டுபடுத்த முடியாத காரணத்தால், உடனே மருத்துவச்சியை அழைத்து வர செய்து மயக்க மருந்தை கொடுத்து அரசியை படுக்க வைத்தார் குமாரிதேவி. வெளியே இருப்பவர்களுக்கு, மகள் காணாமல் போனதில் இருந்து, தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறார் என்ற வரை மட்டுமே பகிரப்பட்டது.

அந்த ஒற்றன், அரசிக்கும் உடல்நிலை சரியில்லை என்பது போல் அலிகானுக்கு தகவல் கொடுக்கவும், அவர் இது தான் சரியான சந்தர்ப்பம் சூழ்ச்சி செய்து, நாட்டை இப்பொழுது தான் ஆளலாம் என்று நினைத்து அதற்க்கான செயலில் இறங்கினார்.

“மருமகனே! நீ வரும் பொழுது, மிடார நாட்டில் நம் ஆட்சியை காண்பாய்!” என்று பெருங்குரலெடுத்து சிரித்தார்.

ஆனால், அவரின் எண்ணம் ஒரு நாளும் பலிக்க போவது இல்லை என்பது போல் இங்கே அரசர், தன் மகனை முன்னிறுத்தி சில வேலைகளை செய்து முடித்து இருந்தார்.

இன்று:

பாரிஸ் நகரம், எங்கு பார்த்தாலும் காதலர்கள் தங்கள் அன்பை முத்தத்தால் வெளிபடுத்திக் கொண்டு இருந்தனர். அழகிக்கு, அதை பார்க்கும் பொழுது எரிச்சலாக இருந்தது.

“அன்பை, இப்படி தான் வெளிபடுதுவதா? என்ன மனிதர்கள் இவர்கள்? யாரும் ஏன், இதை கண்டிக்கவில்லை?” என்று இப்படி பலவிதமாக, அவளின் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது.

அவள் இப்படி எண்ணிக் கொண்டே, பிரகதி உடன் நடக்க, ஆதியோ விஷ்வா உடன் சேர்ந்து லொகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தான். வெவ்வேறு இடத்தில், பாடலுக்கு ஏற்ப நடனம் ஆட இருக்கிறார்கள்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஆகையால், அன்றைய நாள் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருந்தது. அழகியும் சரி, பிரகதியும் சரி இருவரும் பாரிஸ் வருவது இதுவே முதல் முறை. ஆகையால், இவர்கள் லொகேஷன் தேடும் பொழுது, இவர்களையும் அழைத்து சென்றால் சுற்றி பார்த்தது போல் இருக்கும் என்று அழைத்து வந்தார்கள்.

“கால் கடுக்க இப்படி நடந்து கூட்டிட்டு போறாங்களே, உனக்கு கால் வலிக்கலையா மதி. எனக்கு ரொம்ப கால் வலிக்குது, எப்போ டா ரூம் போய் தூங்குவோம்ன்னு இருக்கு” என்று அவளிடம் கூறிக் கொண்டு இருந்தாள் பிரகதி.

“கால் வலி இருக்க தான் செய்கிறது, ஆனால் நாம் இப்பொழுது எப்படி அறைக்கு செல்வது? வேலை விஷயமாக அல்லவா, அவர்கள் ஒவ்வொரு இடமாக நம்மையும் அழைத்து கொண்டு செல்கிறார்கள்” என்று அவள் கேட்கவும், பிரகதி நின்று விட்டாள்.

தன்னோடு நடந்து கொண்டு இருந்தவள், திடிரென்று நிற்கவும் கால் வலி அதிகமாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு அவளோடு நின்று விட்டாள் மதி. ஆனால் பிரகதியோ, அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஏன் மதி, அத்தை எத்தனை தடவை நாங்க பேசுற மாதிரியே பேசு சொல்லி இருக்காங்க. நீ ஏன் இன்னும், எங்களை மாதிரி பேசல. உனக்கு இப்போ நாங்க பேசுறது புரியுது தானே, அப்புறம் கொஞ்சம் முயற்சி பண்ணி பேசலாம் இல்லையா” என்று நிதானமாக கேட்டாள் பிரகதி.

அவளும் நேற்று இங்கு வந்ததில் இருந்து, மதியை கவனித்து கொண்டு தான் இருந்தாள். இன்னும் தற்காலத்தில் இருந்து, அவள் நிகழ்காலத்திற்கு வர பிரியமில்லாமல் இருப்பது புரிந்தது.

“பேசலாம் தான், ஆனால் எனக்கு இப்படி பேச தான் பிடித்து இருக்கிறது. இப்படி பேசும் பொழுது, ஒவ்வொரு முறையும் என் தாய், தந்தையை நினைத்து கொள்கிறேன்” என்று கூறிய மதியை இப்பொழுது புரிந்தது பிரகதிக்கு.

“நீ சொல்லுறது புரியுது மதி, ஆனா நீ இப்போ சூழ்நிலையை புரிஞ்சிக்கணும். அன்னைக்கு நீ அந்த ஆட்டோ டிரைவர் கிட்ட பேசும் பொழுதே, உன்னை எப்படி பார்த்தாங்க நினைவு இருக்கா” என்று கேட்டாள்.

“ம்ம்.. என்னை பைத்தியகாரி என்று அல்லவா, அங்கு உள்ள அனைவரும் நினைத்தார்கள். இது தான் தூய தமிழ் மொழி என்று, ஏன் யாரும் புரிந்து கொள்ளவில்லை?”.

“ஒன்று தெரியுமா உமக்கு, எங்களுக்கு தமிழ் தாய் மொழி இரண்டாவதாக தான் இருந்தது. முதன் முதலில் எங்கள் முன்னோர்கள் வடக்கில் இருந்து, கற்று வந்த மொழி வேறு. தஞ்சை வந்த பிறகு தான், தமிழ் கற்றுக் கொண்டோம் என்று என் பாட்டனார் கூறி நான் கேட்டு இருக்கிறேன்”.

“ஆனால் இப்பொழுது இங்கே, நீங்கள் பேசும் தமிழ் மொழியே வித்தியாசமாக இருக்கிறது. அன்றைக்கு ஒரு நாள், நான் வெளியே வந்த பொழுது சில பேர் பேசுவது சற்று புரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் தான் பேசுகிறார்கள் என்று, இங்கு எல்லோரும் கூறுவதை கேட்டு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது” என்று அவள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து, சொல்லுவதை கேட்டு பிரகதி வியந்தாள்.

ஒரு நாட்டின் இளவரசி என்று ஒவ்வொரு முறையும், அவளின் கூர்ந்து கவனிக்கும் விதத்தையும், சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதை கையாளும் பக்குவத்தையும் கண்டு வியந்து போனாள் பிரகதி இப்பொழுது.

“அத்தை சொன்னது சரி தான், சீக்கிரம் முதல இவளோட பாஷையை மாத்திடனும். அட்லீஸ்ட் வெளியிடங்கள் ல மட்டுமாவது, நாம பேசுற மாதிரி பேச சொல்லணும். அப்புறம் சீக்கிரம் இவ கத்துக்கிறா, நாளைக்கே கரண்ட் அப்பைர்ஸ் சொல்லி கொடுத்திடலாம்” என்று எண்ணிக் கொண்டாள் பிரகதி.

“நீ சொல்லுறது எல்லாம் சரி மதி, ஆனா இங்க காலம் மாற மாற மக்களும் மாறிகிட்டே தான் இருக்காங்க. ஒரு இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி, செல்போன் கிடையாது உலகத்துல. ஆனா இப்போ இன்னைக்கு, செல் இல்லாம யாருமே இல்லை”.

“உனக்கு நான் சொல்லூர்து புரியுதா மதி, நீ உன் சுத்த தமிழ் ல பேசு. ஆனா வீட்டுல பேசிக்கோ, இங்க வெளியிடத்துக்கு வந்தா எங்களை மாதிரி இருன்னு தான் சொல்லுறேன்” என்று பிரகதி தன் வாதத்தை அழுத்தமாக முன் வைத்தாள்.

இதை தான் ஆதியின் அன்னையும், அவளிடம் கூறி இருந்தார். ஆனால் அப்பொழுது இருந்த மனநிலையில், அவளுக்கு அது சரி என்று தோன்றாததால் மாற்றிக் கொள்ள முயற்சிக்கவில்லை.

இப்பொழுது பிரகதி, கண்டிப்பாக இதை நீ செய்து தான் ஆக வேண்டும் என்பது போல் அழுத்தி சில கருத்துகளை முன் வைத்து கேட்கும் பொழுது, முயற்சி செய்தால் தான் என்ன என்று தோன்ற ஆரம்பித்து விட்டது மதிக்கு.

“நான் இப்போ இருந்து முயற்சி செய்கிறேன், நீ கொஞ்சம் திருத்து என்னை சரியா” என்று அவள் கூறவும் பிரகதியும் சரி என்று கூறி புன்னகைத்தாள்.

இவர்களுக்கு முன்னால் சென்ற ஆதியும், விஷ்வாவும் லொகேஷன் பார்க்கும் மும்முரத்தில் இவர்களை கவனிக்க தவறினர். எல்லாம் பார்த்து முடித்த பின் தான், இவர்களுக்கு தங்கள் பின்னால் வந்து கொண்டு இருந்த பிரகஸ்பதிகளை காணவில்லை என்று புரிந்தது.

“டேய் விஷ்வா! எங்க டா போனாங்க இவங்க? ம்ச்! இப்போ இவங்களை வேற தேடணுமா?” என்று சலித்துக் கொண்டு இருந்தான் அதி.

“டேய்! டென்ஷன் ஆகாத, வந்திடுவாங்க. அங்க பாரு, ரெண்டு பேரும் மெதுவா சிரிச்சிகிட்டே வராங்க” என்று விஷ்வா அவர்கள் வருவதை பார்த்து கூறினான்.

நெருங்கி வந்த இருவரையும் பார்த்து முறைத்தான், ஆதி. அவன் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல், இருவரும் சீக்கிரம் ஹோட்டல் அறைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர்.

“ஆமா! இப்படியா மெதுவா ஆடி அசைஞ்சு வருவீங்க, வேகமா எங்களோட வர வேண்டாம். நாங்க, எப்படி பயந்துட்டோம் தெரியுமா?” என்று விஷ்வா கூறவும், பிரகதி முறைத்தாள் இப்பொழுது இருவரையும் பார்த்து.

“லொகேஷன் பார்கிறேன் பேர்வழின்னு, இவ்வளவு நேரம் எங்களை கண்டுக்கவே இல்லை. இப்போ வந்துட்டு, எங்க மேல பாய்ஞ்சா என்ன அர்த்தம். கால் வலியோட இருக்கோம் ரெண்டு பேரும், சீக்கிரம் ரூம்க்கு போகணும் நாங்க கொண்டு போய் முதல விடுங்க” என்று பிரகதி இப்பொழுது காய்ச்சி எடுத்தாள் இருவரையும்.

ஆதி, அப்பொழுது மதியை பார்த்தவன் அவளின் சோர்ந்த முகமே தனக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்வது போல் இருக்கவும், உடனே அழைத்துக் கொண்டு அறைக்கு செல்ல டாக்ஸி புக் செய்து வரவழைத்தான்.

அங்கே காமாட்சி, தஞ்சையில் சில தகவல்களை திரட்டி இருந்தார். அதுவே அவருக்கு பல கதைகளை சொல்லியது, மேலும் தெரிந்து கொள்ள மறுநாள் ஒருவரை சந்திக்க சென்ற இடத்தில், அவர் அறிந்த விஷயங்களை கேட்டு திடுக்கிட்டார்.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் மக்களே ,
வணக்கம் எல்லோருக்கும். தாமதத்திற்கு மன்னிக்கவும். நேற்றே இந்த பதிவை போட்டு இருக்க வேண்டியது, சில குழப்பங்கள் இதில், அதனால் ரொம்பவே டெலி ஆகிடுச்சு. இப்போ இன்னொரு விஷயம் சொல்லணும், அடுத்த பதிவோட கடந்த கால பயணம் முடிந்து விடும்.

திரும்ப கடந்த காலம் பற்றி கடைசி பார்க்கலாம், இனி பதிமூன்றாம் பதிவில் இருந்து நிகழ்காலம் தான் கொடுக்க போறேன். சீக்கிரம் எழுதி போஸ்ட் பண்ண தான் நினைக்கிறேன், ஆனால் பையனை கவனிச்சிக்கிட்டு இருக்கிறது இப்போ ரொம்ப முக்கியமா இருக்கு.

அப்புறம் சில பல துக்க சம்பவங்கள் மனதை ரொம்ப வாட்டி எடுத்ததால, ரொம்ப நாளா எழுதல. இப்போ எழுத வந்து இருக்கும் பொழுது, பையன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். இந்த stage ல கண்டிப்பா என் presence அவனுக்கு ரொம்ப அதிகமா தேவை படுது.

அதான் என்னால சரியா வேகமா கொடுக்க முடியல, அதுக்கு பிக் சாரி . இந்த கதை பற்றி நாம இன்னும் நிறைய பேசலாம். முதல நான் கதையை முடிச்சிக்குறேன், அப்புறம் எதற்காக இதை எடுத்தேன் எல்லாம் விரிவா ஒரு நாள் சொல்லுறேன் . பொறுமையா காத்து இருந்ததற்கு நன்றி மக்களே..

நாளை அடுத்த அத்தியாயம் பதிவு செய்றேன்.

இப்படிக்கு,
உமா தீபக்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top