• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 10: Agathiyar kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 10:

அகத்தியர் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அனைவருமே அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள் தான். அதிலும் மருத்துவம் பயிலும் மாணவர்களான சுஸ்ருதன், சரகன் மற்றும் மல்லிகை மூவரும் சூரியன் உதிக்க இன்னமும் இரு நாழிகைப் பொழுது இருக்கும் போதே எழுந்து விடுவார்கள். அவர்களது பாடம் முதலில் முடிந்து விடும் என்பதால் முதல் நாழிகையிலேயே துயிலெழுந்து முக்கியமான செடி கொடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றியும் மக்களை பீடிக்கும் நோய்கள் அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி போன்ற தற்காப்பு முறைகளையும் விளக்குவார் ஆசான். அதன் பிறகு வாரத்தின் இரு நாட்களில் அறுவை சிகிச்சை பற்றிய விளக்கமும் அவற்றைச் செய்வது பற்றிய நுட்பங்களைப் பற்றியும் அவர் விளக்குவார்.

மருத்துவ மாணவர்களான சுஸ்ருதன், சரகன் மற்றும் மல்லிகை மூவரையும் இரு மாத கால விடுப்புக் கொடுத்து அவரவர் ஊர்களில் மக்களை வருத்தும் நோய்கள் என்னென்ன? அவற்றை எப்படிக் களையலாம்? அதற்காக செய்ய வேண்டியவை என்னென்ன என்று கண்டு வருமாறு கூறியிருந்தார் அகத்தியர் பெருமான். இதில் சுஸ்ருதனும், சரகனும் வடக்குப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் சென்று திரும்ப காலம் அவகாசம் தேவை என்பதால் மூன்று மாதம் அவர்களுக்கு அளித்திருந்தார். மல்லிகை தமிழ் மகள் தான் என்றாலும் அவளை நாட்டின் மேற்குத் திசைக்கு பயணம் செல்லுமாறு பணித்திருந்தார் ஆசான்.

ஒரு மூன்று மாத காலம் முடிந்து விட்ட நிலையில் முதலில் பாடசாலைக்கு மீண்டவர்கள் சுஸ்ருதனும், சரகனும் தான். அவர்களைத் தொடர்ந்து மல்லிகையும் ஓரிரு நாட்களில் வந்து விட்டாள். அவர்களிடம் இந்த மின் கல கண்டுபிடிப்பையும் அதனை ஆசான் இயக்கிக் காட்டியதைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் வண்டார் குழலி. அதைக்கேட்டு ஆச்சரியமும் பெருமிதமும் கொண்டனர் மூவரும். அனைவருக்கும் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய விஷயங்கள் இருந்தன. மாதத்தில் ஒரு நாள் ஆசான் விடுப்பு அளிப்பார் என்பதால் அன்றைய தினத்தை அவர்கள் தங்கள் சித்தம் போல செலவிட்டனர். செங்குன்றன் மின் சக்தியை எப்படி இயக்க ஆற்றலாக மாற்றுவது என்பதைக் கண்டறிந்து அதனை செயல் படுத்திக்கொண்டிருந்தான்.

அப்போது தான் ஒரு கூக்குரல் பாடசாலையை நிறைத்தது.

"ஐயனே! என் மகன்! என் மகன்! அவனைக் காப்பாற்றுங்கள்" என்று கதறியபடி ஒரு பெண்மணி முன்னால் ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து ஒரு இளைஞனைச் சுமது கொண்டு ஒரு கூட்டம் ஓடி வந்தது. சுமந்து வரப்பட்ட இளைஞனின் தலையிலிருந்து குருதி வழிந்து கொண்டே இருந்தது. அவர்கள் வந்த நேரம் ஆசான் அகத்தியர் குடிலில் இல்லை. அவர் எப்போதும் செல்லும் அருவிக்கரைக்குச் சென்றிருந்தார். என்ன விவரம் என எதுவும் தெரியாமல் வந்தவர்களை எதிர்கொண்டனர் அவரது மாணவர்கள்.

"அன்னையே! எதற்காக இப்படி ஓலமிடுகிறீர்கள்? யார் இந்த இளைஞன்? இவனுக்கு என்ன ஆயிற்று?" என்றாள் மல்லிகை.

"அம்மா! ஆசான் அகத்தியர் இல்லையா? இவனைக் காப்பாற்ற அவர் ஒருவரால் தான் இயலும் என்று சொன்னார்கள் அதனால் தான் காரையாற்றிலிருந்து இவனைத் தூக்கி வருகிறோம். அவரை அழையுங்கள் அம்மா" என்று பதறினாள் அந்தப் பெண்மணி.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட செங்குன்றன் தனது மின் கலத்தை அப்படியே விட்டு விட்டு ஆசானை அழைக்க ஓடினான். போகும் போதே குரல் கொடுத்துக்கொண்டே சென்றான்.

"மல்லிகை! நான் சென்று ஆசானை அழைத்து வருகிறேன்! அதற்குள் இந்த இளைஞனுக்கு குருதிப்போக்கால் ஏதேனும் அபாயம் வராமல் இருக்கச் செய்யுங்கள்" என்றான்.

மருத்துவ மாணவர்கள் மூவரும் அந்த இளைஞனை சூழ்ந்து கொண்டனர். தலையில் ஆழாமான காயம் இருந்தது. அதிலிருந்து தான் உதிரம் வெளியேறிக்கொண்டிருந்தது. அவனது வாயிலிருந்து ஏதோ ஒரு வகை திரவம் வழிந்து கொண்டிருந்தது. நினைவே இல்லாமல் முகம் வெளிறி பரிதாபமாகக் காணப்பட்டான் அந்த இளைஞன். இவனை எப்படிப் பிழைக்க வைக்க முடியும்? என்ற யோசனையோடு செயல்பட்டனர் மூவரும். மற்றவர்கள் வந்தவர்களை சற்றே அமைதியாக இருக்குமாறும் ஆசான் இப்போது வந்து விடுவார் என்றும் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர்.

மல்லிகை வேப்பிலைக் கொழுந்துகளால் ஆன படுக்கையை தயார் செய்து அதில் அந்த இளைஞனைப் படுக்க வைத்தாள். தலை உயரமாக இருந்தால் உதிரப்போக்குக் குறையும் என ஒரு பலகையை கொடுத்தனர். தலையைத் தூக்கும் போது குபுக்கென வாயிலிருந்து திரவம் வெளி வந்தது. இது நல்ல அறிகுறி அல்லவே என்று மல்லிகையும் சரகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சுஸ்ருதன் உதட்டையே பிதுக்கி விட்டான். இப்போது கட்டுப்போட்டால் ஆசான் வந்த பிறகு அவரால் காயத்தில் ஆழத்தைக் கணக்கிட முடியாது என்பதால் சுத்தமான துணியால் உதிரத்தை சுத்தம் செய்தனர். எதுவாக இருந்தாலும் அவனது முடியை களையத்தான் வேண்டும் என்பதால் அந்தப் பணியில் ஈடுபட்டான் சரகன். மிகவும் கவனமாக காயம் பட்டவனது கேசத்தை எடுத்தான். இதற்கும் ஒரு அறுவை சிகிச்சையின் திறமை தேவைப்படும் என்பதை அறிந்த மல்லிகை அவனுக்கு உற்சாகம் அளித்தாள். காயம் பட்ட பகுதியில் அவன் கேசத்தை அகற்றிக்கொண்டிருக்கும் போதே ஆசான் வந்து விட்டார்.

"சுஸ்ருதா என்ன இது? என்ன சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்றார் அகத்தியர்.

"இன்னமும் தொடங்கவில்லை ஆசானே! தலையில் மிக ஆழமான காயம் பட்டிருக்கிறது. அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தோம் அவ்வளவு தான்" என்றான்.

அகத்தியர் அருகில் வந்து காயம் பட்டவன் படுக்க வைக்கப்பட்டிருக்கும் கோணத்தையும் அவனது தலை சற்றே உயரமாகத் தூக்கி வைக்கப்பட்டிருப்பதையும் மனத்திருப்தியோடு அவதானித்தார். காயம் பட்டவனின் அருகே சென்று நாடி பிடித்துப் பார்த்தார். மெல்லியதாகத்துடித்துக்கொண்டிருந்தது அவருக்கு சற்றே நிம்மதியைத்தந்தது. நாடியின் மூலம் நுரையீரலுக்குத் தேவையான காற்று செல்லவில்லை என்பதை அறிந்து தலையை சற்றே தாழ்த்தினார். ஒரு முறை உதறியது அவனது உடல். ஓவெனக் கத்தினர் உடன் இருந்தவர்கள். அகத்தியர் சினத்தோடு அவர்களைப் பார்த்தார்.

மல்லிகையும் வண்டார் குழலியும் அந்தக் கூட்டத்தினரை சற்றே தள்ளி இருக்குமாறு செய்தனர். நச்செள்ளை அவர்களுடனே இருந்து விட்டாள். அவளால் இது போன்ற கோரக்காட்சிகளைக் காணவே முடியாது. அகத்தியரின் தேர்ந்த விரல்கள் காயத்தை மெல்ல தடவின. மின் கலத்தைக் கொண்டு வரச் சொல்லி அந்த வெளிச்சத்தில் அதனை ஆராய்ந்தார் அவர். முகத்தை இருள் மூடியது.

"இவனது வாயிலிருந்து திரவம் வருவதற்கான காரணம் புரிந்ததா உங்களுக்கு?" என்றார்.

"மூளையில் உதிரம் எங்கோ உறைந்திருக்கக் கூடும் அதன் காரணமாகத்தான் இப்படி நேர்கிறது. இதனை நீங்கள் தலையில் காயம் பட்டு இறந்த ஒருவனது மூளையை காட்டி எங்களுக்கு விளக்கியுள்ளீர்கள்" என்றான் சுஸ்ருதன்.

"ஆம்! சரி தான். ஆனால் இம்முறை குருதி உறைந்ததற்கான காரணம் தெரிந்து விட்டது. இதோ பாருங்கள்! தலையில் கபால எலும்பின் ஒரு பகுதி உட்சென்று மூளையில் குத்தி நிற்கிறது" என்று காண்பித்தார். அவர் சொன்னது போல ஒரு சின்னஞ்சிறு எலும்புத்துகள் மூளையைக் குத்தித்தான் நிறந்து.

"இது தான் இவனது மயக்க நிலைக்கும் காரணம். கபாலத்தைத் திறந்து இந்த எலும்பை அகற்றினாலொழிய இவனைப் பிழைக்க வைக்க முடியாது" என்றார்.

மருத்துவ மாணவர்கள் மூவரும் கரங்களை பிசைந்தனர். இது எத்தனை ஆபத்தான சிகிச்சை என்று அவர்களுக்குத் தெரியும். இது வரையில் ஆசான் இதைப் பற்றி விளக்கம் அளித்திருக்கிறாரே தவிர செய்ததில்லை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது கபாலத்தைத் திறப்பது என்பது இது வரை யாருமே செய்ததிலையே? அவர்கள் முகங்களில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

சரகன் முன் வந்தான்.

"ஆசானே! இது மிகவும் ஆபத்தான சிகிச்சை அல்லவா? இவன் உயிருடன் இந்த சிகிச்சையைத் தாங்கிப் பிழைப்பான் என்பது என்ன நிச்சயம்? ஒரு வேளை இவன் இறந்து போனால் உணர்ச்சி வசப்பட்ட அந்தக்கூட்டம் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்ய முனைந்தால் என்ன செய்ய?" என்று பதறினான்.

"இப்படியே விட்டால் கூடத்தான் இன்னும் ஒரு நாழிகைக்குள் இவனது உயிர்ப் பிரிந்து விடும். அதற்கென்ன செய்வாய்?"

சுஸ்ருதன் முன்வதான்.

"ஆசானே! நம்மை நம்பி வந்தவர்களை கட்டாயம் நாம் காப்பாற்ற முயற்சி செய்யத்தான் வேண்டும். அதே நேரம் உங்களுக்கு அவப்பெயரும் வரக்கூடாது. அதற்காக நான் ஒரு யோசனை சொல்கிறேன். இவனை அழைத்து வந்த இவன் மக்களிடம் ஆபத்தான நிலையில் இருப்பது பற்றியும், இவனைப் பிழைக்கச் செய்ய இருக்கும் ஒரே வழியான நீங்கள் செய்ய இருக்கும் அறுவை சிகிச்சையைப் பற்றியும் சொல்வோம். அவர்கள் புரிந்து கொள்வார்கள்" என்றான்.

நல்ல யோசனையாகப்படவே அந்தப் பொறுப்பு செங்குன்றனுக்கு கொடுக்கப்பட்டது, மற்ற மருத்துவ மாணவர்கள் மூவரும் அறுவை சிகிச்சையின் போது உதவவும் அவதானிக்கவும் வேண்டும் என்பதால் இந்தப்பொறுப்பு மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தனர் செங்குன்றனும் வண்டார்குழலியும் தொல்காப்பியனும் கூட அவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.

சுஸ்ருதனும் சரகனும் அறுவை சிகிச்சைக்கென ஒதுக்கப்பட்டிருந்த குடிலை ஆயத்தப்படுத்தினர். ஆசானுக்கும் தங்களுக்கும் வேப்பிலைகளால் ஆன ஆடையை எடுத்து வைத்தனர். பல மின் கலன்கள் அந்த குடிலை ஒளியூட்டிபடி இருந்தன. வேப்பிலையால் ஆன படுக்கையின் மேல் மெல்லிய பருத்துத்துணி விரிக்கப்பட்டிருந்தது. மூவரும் அந்த இளைஞனை தூக்கி வந்து அதில் கிடத்தினர். அவனது உடலில் வெப்பம் மிகவும் குறைந்து இருந்தது. அவர்களுக்கு சுத்தமாக நம்பிகையே இல்லை. ஆசானின் திறமை மேலும் அறிவின் மீதும் அவர்களுக்கு இருந்த மரியாதையால் அமைதியாக இருந்தனர். உலகிலேயே முதன் முதலாக ஒரு நோயாளி உயிரோடு இருக்கும் போதே அவனது காபாலத்தைத்திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதை நினைத்து பெருமையும் அதே நேரம் அது வெற்றிகரமாக முஇட்ய வேண்டுமே என்ற பயமும் கொண்டனர் அகத்தியரின் மாணவர்கள். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் பல விதிகள் இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். தங்கள் போக்கில் அவற்றைச் செய்தாலும் மனம் அறுவை சிகிச்சையிலேயே இருந்தது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால் இனி வரும் காலங்களில் கூட மருத்துவ உலகம் ஆசான் அகத்தியரை வணங்கும் என்று என்ணமிட்டார்கள் அவர்கள்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
blood clot aagi irukka sis athai remove panna poranga nice(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top