• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 12: Mallikaip poo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
மல்லிகைப்பூ...12.

ராஜகோபாலின் பேசும் தன்மை ஃபோன் வந்ததும் மாறி விட்டதைப்புரிந்து கொள்ள முடிந்தது உதயாவால். ஸ்வேதாவோ இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே செல்வதற்கே ஆயத்தமாகி விட்டாள்.

"சாரி சார்! வாசுதேவன் சார் உங்களுக்குத் தெரிஞ்சவர்னு எங்களுக்குத் தெரியாது. நீங்களும் அவர் பேச்சைக் கேப்பீங்கன்னு நாங்க எதிர்பார்க்கல்ல! நாங்க வரோம் " எனச் சொல்லி விட்டு எழுந்தாள் ஸ்வேதா.

"மிசஸ் ஸ்வேதா நீங்க ரொம்ப படபடப்பா பேசுறீங்க! நான் அவர் பேச்சைக் கேப்பேன்னு உங்க கிட்ட சொன்னேனா?" என்றார் ராஜகோபால் புன்னகையுடன். ஏனோ அந்தப் புன்னகையை அங்கீகரிக்க முடியவில்லை ஸ்வேதாவாலும் உதயாவாலும். இருந்தாலும் மரியாதை நிமித்தம் அமர்ந்து கொண்டாள் ஸ்வேதா.

"என்னோட பார்ட்டை நான் சொல்லியே முடிக்கல்ல அதுக்குள்ள கோவப்படுறீங்களே?" என்றான்.

"சொல்லுங்க சார்" என்றாள் உதயா.

"வாசு சாரும் எங்க கம்பெனி ஓனரும் ரொம்ப ஃபிரெண்டு. கிளப்ல அடிக்கடி மீட் பண்ணிப் பேசுவாங்க! அந்த முறையில தான் அவரு உங்களைப் பத்தி எங்கிட்ட சொன்னாரு. ஆனா நான் அதைக் கேக்கணும்னு அவசியமில்ல. எங்க எம் டிக்கு என் மேல நம்பிக்கை அதை விட அதிகம்" என்றான்.

"அப்படீன்னா நீங்க அந்த காண்டிராக்டை எங்களுக்கே கொடுங்க சார்" என்றாள் ஸ்வேதா.

"நான் கொடுக்குறதா முடிவே செஞ்சிட்டேன். ஆனா அதை எடுக்குறதும் எடுக்காததும் உங்க கையுல தான் இருக்கு" என்றார் பூடகமாக.

"என்ன சார் சொல்றீங்க?"

"இதைப் பாரு உதயா உன்னை எனக்கு ரெண்டு வருஷமாத்தெரியும். உன்னோட திறமையும் தெரியும். முதல்ல நான் எந்தக் கண்டிஷனும் இல்லாம உனக்கே அந்த புராஜெக்டைக் கொடுத்துடலாம்னு தான் நெனச்சேன் ஆனா வாசு சார் பேசினது என்னை இக்கட்டுல போட்டிருச்சி" என்றார்.

"சர்! உங்க மேல எம் டி நிறைய நம்பிக்கை வெச்சிருக்காருன்னு சொன்னீங்களே? அவரைக் கன்வின்ஸ் பண்ண உங்களால முடியாதா?" என்றாள் உதயா கெஞ்சும் குரலில். ஸ்வேதாவோ வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்தாள்.

"என்னால கட்டாயம் கன்வின்ஸ் பண்ண முடியும் ஸ்வேதா! ஆனா நான் ஏன் அதைச் செய்யணும்?" என்றார் விரல்களால் தாளமிட்டபடி.

"எனக்குப் புரியல்ல" என்றாள் உதயா.

"ஆனா எனக்குப் புரிஞ்சிடிச்சு! நீங்க எங்க கிட்ட கமிஷன் எதிர்பார்க்கறீங்க அவ்வளவு தானே? எத்தனை பெர்செண்ட் வேணும் சொல்லுங்க! கொடுத்துடறோம்" என்றாள் ஸ்வேதா லேசான கோபம் தொனிக்க.

"எனக்கு நீங்க கமிஷன் கொடுத்தா அந்தத் தொகையை கோட்டேஷன்ல ஏத்திடுவீங்க! அதனால கம்பெனிக்கு நஷ்டம் தான் வரும். எங்க கம்பெனிக்கு துரோகம் செய்ய நான் தயாரா இல்ல" என்றார்.

சற்று நேரம் தர்ம சங்கடமான மௌனம் நிலவியது. மெல்லப் பேசினார் ராஜகோபால்.

"இதைப்பாரு உதயா! நீ படிச்ச பெண். ரொம்ப நாகரீகமானவ! முன்னேறணும்னு துடிக்குறவ அதை தடுக்க எனக்கு மனசு வரல்ல! உன்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்தணும்னு தான் நான் நினைக்கிறேன். நீ வேற ஒண்ணும் செய்ய வேண்டாம். எனக்கு ஊட்டியில சின்னதா ஒரு வீடு இருக்கு. நாம அங்க போயி ரெண்டு நாள் தங்கிட்டு வருவோம். திரும்பி வந்ததும் இந்த புராஜெக்டை உனக்கே தரும்படி கையெழுத்துப் போட்டிடறேன். என்ன சொல்ற?" என்றார்.

அவரது கேள்வியின் முழு அர்த்தமும் உதயாவின் மூளையை எட்டுமுன் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தாள் ஸ்வேதா.

"ஏண்டா! எங்களைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? தொழில்ல முன்னேறணும்னு நெனச்சா என்ன வேணும்னாலும் கேப்பியா நீ? உன் கூடப் படுத்தாத்தான் காண்டிராக்ட் கிடைக்கும்னு பச்சையாச் சொல்லேன். ஏன் சுத்தி வளைக்குற? என்னவோ கம்பெனிக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு சொன்ன? கட்டுன பொண்டாடிக்கு துரோகம் செய்யலாமா? நீயெல்லாம் ஒரு மனுஷனா?" என்று கத்தினாள்.

ஸ்வேதா இத்தனை பேசியதற்கும் கொஞ்சம் கூட அசராமல் அப்படியே அமர்ந்திருந்தான் அவன்.

"சார்! நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு நான் எதிரே பார்க்கல்ல! எனக்கு உங்க காண்டிராக்டே வேண்டாம் சார்! நாங்க வரோம்" என்று சொல்லி எழுந்தாள் உதயா. அவளுக்கு அவமானத்தாலும் கழிவிரக்காத்தலும் கண்களில் நீர் வந்தது. தான் பலவீனமானள் என்று அவன் நினைத்து விடக் கூடாது என்பதற்காக அடக்கிக் கொண்டாள்.

"கொஞ்சம் நில்லுங்க! நான் ஒண்ணும் வில்லன் இல்ல! இது தான் என்னோட முடிவு. இன்னும் பத்து நாள் டயம் இருக்கு உங்களுக்கு. நல்லா யோசிச்சு முடிவுக்கு வாங்க." என்றாள்.

"இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா உங்களால என்ன சார் செய்ய முடியும்? வாசுதேவன் சார் எவ்வளவோ தேவல்ல! பெண்களால முடியாதுன்னு தான் சொன்னாரு. எங்களையே விலைக்குக் கேக்கல்ல! ஆனா நீங்க ரொம்பக் கேவலமா இறங்கிட்டீங்க! "

"உனக்கு இதுல சம்மதமில்லைன்னா நஷ்டம் உனக்குத்தான் உதயா. இந்த காண்டிராக்ட் கிடைக்காது. பல கோடி ரூபாய் பிராஜெக்ட் உன்னோட பிடிவாதத்தால கையை விட்டுப் போகணுமா? நல்லா யோசி" என்றான்.

"யோசிக்க வேண்டியது நாங்க இல்ல நீ தான். எங்களை இழந்தாத்தான் இந்த புராஜெக்ட் கிடைக்கும்னா அது எங்களுக்குத் தேவையே இல்ல! நீ வா உதயா போகலாம்" என அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தாள். வழியில் எதுவும் பேசாமல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர் இருவரும். அறையின் கதவை அடைத்து விட்டு வந்தாள் ஸ்வேதா. அது வரை அடக்கி வைத்திருந்த அழுகையை கதறலாக அழுது தீர்த்தாள் உதயா.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா இவனை எல்லாம் நிக்க வச்சி சுடனும்View attachment 261மல்லிகை மனம் வீசும் உதயா தளராமல் அடுத்த எடுத்து வைப்பாள்waiting eagerly
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Udhaya is right Vasudevan a nallavan akittane intha rajagopal.. intha mathiri aattkal real life layum irukkirarkal.. ivangala Ella nikka vachu sudanum..
 




Rajianand

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
22
Reaction score
21
Location
Tamilnadu
Udhaya is right Vasudevan a nallavan akittane intha rajagopal.. intha mathiri aattkal real life layum irukkirarkal.. ivangala Ella nikka vachu sudanum..
இப்படி எண்ணங்களை கொண்ட ஆண் மிருகங்களை விடக்கேவலமான பிறவி.
 




Kayal muthu

மண்டலாதிபதி
Joined
Feb 6, 2018
Messages
219
Reaction score
263
Location
Thanjavur city
,today i amread last 12 uds,,,,verynice story sis,oru ponnunala lifela vetei peranumnna evvolo thadaigal pavam pa udhaya,,,ippati patta genmangalai yellam shoot pannanum sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top