• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 133: Kaalam Parakkirama Pandiyan Kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம்: பராக்கிரம பாண்டியன் காலம்

அத்தியாயம் 133:


இப்போது பேச்சுக் குரல்கள் கூடக் கேட்க ஆரம்பித்தன. அப்படியானால் வீர பத்திரனும் அவன் ஆட்களும் இன்னும் சில நிமிடங்களில் உள்ளேயே வந்து விடுவார்கள். பிறகு என்ன நடக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே மணி சேகரன் விரும்பவில்லை. அவனது மூளை வெகு வேகமாக சிந்தித்தது.

"முதலில் அந்த ஓலைகளைக் கண்டு பிடித்து பாதுக்காப்பாக வைக்க வேண்டும். பிறகு குருவையும் கீராரையும் இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். வீரபத்திரனின் ஆட்கள் தாக்கத் துவங்கினால் முதலில் இவர்கள் இருவரையும் தான் குறி வைப்பார்கள். இவர்களுக்கு ஏதும் ஆபத்து வராமல் காக்க வேண்டியது எங்களது கடமை என எண்ணிக்கொண்டான். அவனது மூளை வேகமாக வேலை செய்தது. மரப்பந்தின் மேல் இருந்த அந்தக் குறியீடு அவனுக்கு எதையோ உணர்த்த காளையனின் கையைப் பிடித்தான்.

"என்ன மணி சேகரா"

"அங்கே பார்! அதோ ஒரு சிலை படுத்த வாட்டத்தில் இருக்கிறது அல்லவா?

"ஆம்! அவர் தான் ஆதவன் என குறிப்பிட்டுள்ளார்களே!"

"அவரது நெஞ்சுப்பகுதியில் பாரேன். சிறு துளை போல இல்லை? அந்த துளையின் அளவும் இந்தப் பந்தின் அளவும் ஒன்று போல இருக்கிறது. இனி யோசிக்க நேரம் இல்லை. இந்தப் பந்தை அந்தத் துளையில் இட்டு என்ன நடக்கிறதோ பார்த்துக்கொள்ளலாம்" என்றான்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுர்ந்த விந்தையன் அந்தப் பந்தை மௌனமாக நீட்ட அதை எடுத்துக்கொண்டு விரைந்தான் மணி சேகரன். நடுங்கும் கரங்களோடு அந்தப் பந்தை நெஞ்சுப்பகுதியில் இருந்த துளையில் இட்டான். கச்சிதமாகப் பொருந்தியது அது. சிறிது நேரத்தில் டடக் என்ற சத்தத்தோடு அந்தப் பந்து உள்ளே செல்ல சிலையின் தலை மாட்டில் ஒரு கதவு விரிந்தது. அதில் ஒரு ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பெட்டியில் அகத்திய ரகசியம் எனப் பொறிக்கப்பட்டிருந்தது. விழிகள் விரிய அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் அனைவரும். இது தானா? இதில் தான் அந்த ரகசியம் அடங்கியிருக்கிறதா? ஆசான் அகத்தியர் தன் கைப்பட எழுதிய ஓலைகளா இதில் இருக்கின்றன? அவற்றைப் பார்ப்பதே பாக்கியம் அல்லவா? என எண்ணி எண்ணிப் பூரித்தனர். மீண்டும் கடப்பாறைகளின் சத்தம் கேட்க நினைவுக்கு மீண்டனர் அனைவரும்.

குரு விந்தையன் அந்த பெட்டியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார். மூடியைத் திறந்து அந்த ஓலைகளை எடுத்து ஒற்றிக்கொண்டார். அவரது கண்களில் இருந்து நீர் வற்றாமல் வந்து கொண்டே இருந்தது.

"மணி சேகரா! காளையா! கீரா! நீங்கள் செய்த உதவியை என்னால மறக்கவே முடியாது. உங்களால் தான் இந்த ஓலைகளைக் கைகளால் தீண்டும் பேறு எனக்கு வாய்த்தது. இவை ஆசான் அகத்தியர் எழுதியவைகளாகவே இருக்கலாம். அவரது கரம் பட்ட இந்த பெட்டியை நானும் தொட்டேனே அதுவே எனக்குப் போதும்" என்று விம்மினார்.

அவசரப்பட்டான் மணி சேகரன்.

"குருவே! உணர்ச்சி வசப்படுவதற்கு இது நேரம் அல்ல! இப்படிப் பேசுவதற்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் நாம் இங்கிருந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்னும் சில நிமிடங்களில் வீரபத்திரனின் ஆட்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள். அதற்குள் நாம் இந்த ஓலைகளையும் உங்களையும் பத்திரப்படுத்தியாக வேண்டும். " என்றான்.

ஆனால் விந்தையனோ கீராரோ அவசரப்படவில்லை. நிதானமாக மீண்டும் அந்த ஓலைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். சிலையின் நெஞ்சுப்பகுதியில் இருந்த துளையில் கை விட்டு மீண்டும் அந்தப் பந்தை எடுத்து வைத்துக்கொண்டார் விந்தையன். அந்த ஓலைகள் அடங்கிய ஈட்டி மரப்பெட்டியை அப்படியே அது இருந்த இடத்தில் வைத்து விட்டு மூடினார். இப்போது அகத்திய ரகசியம் மீண்டும் மறைக்கப்பட்டு விட்டது.

"இதை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இருக்க முடியாது மணி சேகரா! இதோ இந்தப் பந்து தான் அகத்திய ரகசியத்தை அடையும் வழி! இதனைக் கண் போல பாதுகாத்தாலே போதும். மற்றவர்கள் கண்ணிலிருந்து இதனை மறைத்து விட்டால் அவர்களால் அகத்திய ரகசியத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது" என்றார்.

அந்தப் பந்தினை வாங்கி தனது அரைக்கச்சில் முடிந்து கொண்டான் மணி சேகரன். அவன் அப்படிச் செய்யவும் குகையின் பக்கவாட்டிலிருந்து ஒரு பெருத்த ஓசை உண்டானது. கரடு முரடான வாயில் போன்ற தோற்றம் புலப்பட்டது. அவற்றை உடைத்துக்கொண்டு கற்களும் புழுதியும் பறக்க சிலர் உள்ளே வந்து விழுந்தனர். அவர்களைத் தொடர்ந்து வீர பத்திரன் மற்றும் இன்னும் இருவர் உள்ளே நுழைந்தனர். வீரபத்திரன் தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்தபடி இருந்தான். அந்தக் குகையில் அவனைத் தவிர மற்ற மனிதர்களும் இருக்கக் கூடும் என அவன் எண்ணியதாகவே தெரியவில்லை.

"கருப்பா! இது தான் அந்தக் குகை. இந்த ஓலை அப்படித்தான் சொல்கிறது." என்றான். கருப்பன் என்று அழைக்கப்பட்டவன் வீர பத்திரனை ஏறிட்டு நோக்கினான்.

"முதலில் நீங்கள் இந்தப் பயணத்தைப் பற்றிப் பேசும் போது அறிவினால் தான் எல்லாமே செய்ய வேண்டும். கேள்விகளும் பதில்களும் அதிகம் இருக்கும் என்றீர்களே? ஆனால் அப்படி எதுவும் இந்த வழியில் இல்லையே? ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் எளிமையான கேள்வி தானே இருந்தது. மீதி அனைத்துமே கடுமையான உடல் உழைப்புத்தானே தேவைப்பட்டது?" என்றான்.

"எனக்கும் அதில் தான் குழப்பம். ஆனால் அதைப் பற்றி இப்போது என்ன? நாம் தான் வந்து சேர்ந்து விட்டோமே? நம்மை முந்திக்கொள்ளப் பார்த்த விந்தையனையும் அவரது ஆட்களையும் குகையில் அடைத்துப் போட்டு விட்டேன். அதனால் இனி பயமில்லை. நாம் நிதானமாகத் தேடலாம்" என்றான்.

அப்போது கீழே விழுந்திருந்த ஆட்கள் எழுந்து நின்று தங்களைச் சுற்றிலும் பார்த்தனர். அவர்கள் கண்களுக்கு விந்தையனும் அவரது மாணவர்களும் தெரிய ஏதோ பேய் பிசாசு என்று நினைத்து அப்படியே அலறினர். வெளியில் ஓடவும் முற்பட்டனர். விஷயம் புரியாத வீர பத்திரன் கத்தினான்.

"அடேய்! மூடர்களே! எதற்காக ஓடுகிறீர்களடா? இங்கே என்ன இருக்கிறது?" என்றன். அப்போது தான் அவன் கண்களில் உருவிய வாளுடன் இருக்கும் மணி சேகரன் பட்டான். அதனைத் தொடர்ந்து விந்தையன், காளையன் மற்றும் கீராரை அவன் கண்கள் நோக்கின. அவனால் நம்பவே முடியவில்லை. தான் குகையில் அடைத்து வைத்து விட்டு வந்தவர்கள் எப்படி இங்கே நிற்கிறார்கள்? என திகைத்தான். ஒரு கணம் அவர்கள் பேய் பிசாசுகள் தானோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது அவன் உள்ளத்தில்.

"எங்களை நீ இங்கே எதிர்பார்க்கவில்லை அல்லவா வீர பத்திரா?" என்றார் விந்தையன் அமைதியாக.

திணறி விட்டான் அவன். பிறகு சுதாரித்துக்கொண்டு பேசினான்.

"நீங்கள் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார்களா? நல்லதாகப் போயிற்று! அகத்திய ரகசியத்தை அடைய எப்படியும் ஒரு உயிர்ப்பலி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் . அதன் படி ஒன்று என்ன நான்கு பலிகள் தானாக வந்து வாய்த்திருக்கிறதே" என்றான்.

வாளை உருவிக்கொண்டு ஒரே நேரத்தில் பாய்ந்தார்கள் காளையனும் மணி சேகரனும். ஆனால் அதற்குள் வீர பத்திரன் விந்தையனை நெருங்கி வாளை அவரது கழுத்தில் வைத்து விட்டான்.

"நீங்கள் இப்படிச் செய்வீர்கள் எனத் தெரியும். அதனால் தான் நான் இதனை உங்களுடன் பேசும் போதே திட்டமிட்டு விட்டேன். நீ ஒரு அடி நகர்ந்தாலும் இந்த வாள் உன் குருவின் உயிரைக் குடித்து விடும். என்னை குரு துரோகி ஆக்கி விடாதே மணி சேகரா" என்றான் வஞ்சகப் புன்னகையுடன்.

"தூ! நீயெல்லாம் ஒரு மனிதனா? கல்வி கற்பித்த குருவை கொலைக்கும் கொடுக்க துணிந்து விட்டாயா? உனக்கு விமோசனமே கிடையாது. ஆனால் எங்களுக்கு மன சாட்சி உண்டு! ஆகையால் நாங்கள் உன் வீரர்களையோ உன்னையோ ஒன்றும் செய்ய மாட்டோம் என வாக்குக் கொடுக்கிறோம். நீ முதலில் அந்த வாளை எடு" என்றான் மணி சேகரன். ஆத்திரத்தில் அவனது தசைகள் துடித்தன.

"உன்னை நம்புகிறேன்" என்று சொல்லி விட்டு வாளை எடுத்தான். ஒரு வீரனை அழைத்து குருவின் அருகில் காவல் வைத்தான்.

"நீங்கள் அகத்திய ரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டீர்களா? " என்றான் சாதாரணமான குரலில்.

யாரும் எந்த பதிலும் சொல்லாமல் போகவே அந்த குகையை சுற்று முற்றும் பார்த்தான். அப்போது தான் வனப்பேச்சியின் சிலையும் அவளது காலடியில் இருந்த பெட்டியும் அவன் கண்களில் பட்டன.

"ஓ! இவள் தான் பொன்மகளாக இருக்க வேண்டும். இந்தப் பெட்டியைத் திறந்து பார் கருப்பா! அதில் ஓலைகள் இல்லையென்றால் நாம் இவர்களைக் கேள்வி கேட்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது" என்றான்.

"ஏன் தான் அந்த ஓலைகளை அந்தப் பெட்டியில் வைத்தோமோ என நினைத்துக்கொண்டனர்.

கருப்பன் திறந்து பார்க்க அவன் கண்களில் மூட்டைகளில் கட்டப்பட்டிருந்த ஓலைக்கள் தென்பட்டன.

"வீரா! இதோ ஓலைகள்" என்றான்.

பேராசை விழியில் மின்ன அவற்றை வாங்கிப் பார்த்தான் வீர பத்திரன். பல ஓலைகளை புரட்டிக்கொண்டே வந்தான். செங்குன்றன் மல்லிகை வண்டார் குழலி போன்றவர்கள் எழுதிய ஓலைகளை அலட்சியமாகப் புரட்டினான். அவை சில கீழே விழுந்தன. அவற்றைக் கால்களால் பறக்காமல் பிடித்துக்கொண்டான். அதற்கு மேல் விந்தையனால் தாங்க முடியவில்லை.

"நீ உயிருடன் இருப்பவர்களுக்குத்தான் மரியாதை கொடுக்க மாட்டாய்! இறந்தவர்களையும் ஏன் இப்படி அவமரியாதை செய்கிறாய்? இந்த ஓலைகளை எழுதியவர்கள் ஆசான் அகத்தியரின் மாணவர்களடா! அவர்கள் கைப்பட எழுதிய ஓலைகளை இப்படி காலால் மிதிக்கிறாயே உனக்கு என்ன திமிர்?" என்றார்.

"இதோ பாருங்கள் குருவே! நான் தேடுவது இந்த ஓலைகளில் இல்லை! அவை எதில் இருக்கும் எனச் சொல்லுங்கள்! நான் இவற்றை வைத்து விடுகிறேன்" என்றான் திமிரான குரலில்.

"நீ என்ன தான் தேடுகிறாய்?"

"அகத்திய ரகசியம்! இரும்பைத் தங்கமாக்கும் மந்திரம். அது தான் எனக்கு வேண்டும். அவற்றை எடுத்துத் தருவதாக நான் சேர மன்னனுக்கு வாக்களித்து விட்டேன். அவை எங்கிருக்கின்றன?" என்றான்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
அகத்திய ரகசியம்! இரும்பைத் தங்கமாக்கும் மந்திரம். அது தான் எனக்கு வேண்டும். அவற்றை எடுத்துத் தருவதாக நான் சேர மன்னனுக்கு வாக்களித்து விட்டேன். அவை எங்கிருக்கின்றன?" என்றான்.
சரியான மூடன்........... agathiya ragasiyam enna endre theriyathavan:mad::mad: nice epi sis
 




ragsri1994

புதிய முகம்
Joined
Jan 17, 2018
Messages
9
Reaction score
5
hi srija,

ud 132 missing pa. or this serial is the right one ? nadula edho miss ara feel enakku ? pl clarify. also ud 134 missing !!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top