• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 139: Kaalam Agaththiyar Kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம் : அகத்தியர் காலம்

அத்தியாயம் 139:

தன் கல்விச்சாலை தோழர்களைப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஆதவனின் குரலில் ஒலித்தது.

"செய்வது எல்லாம் நீ? இப்போது எதுவுமே தெரியாதவனைப் போலக் கேட்கிறாயா? ஆசான் அகத்தியர் உன்னால் எத்துணை மனத்துன்பங்களுக்கு ஆளானார் தெரியுமா? இப்போது இங்கே எங்கே வந்தாய்? அவரது கண்டு பிடிப்பையும் களவு கொள்ள வந்தாயா? செங்குன்றா என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்? வாளெடுத்து நீ வீசுகிறாயா அல்லது நான் வீசட்டுமா? துரோகிகளே" என்றாள் மல்லிகை.

"நீ ஓர் ஆண்மகன் என்றால் என் வாளுக்கு பதில் சொல் ஆதவா! " என்று கத்தியபடி ஆதவனின் முன்னால் வாளைச் சுழற்றியபடி நின்றான் ஆதவன்.

"செங்குன்றா! நில்! என்ன நடந்தது என்று கேட்டு விட்டு பேசு! நாங்கள் மனம் திருந்தி வந்தோம் தோழா!" என்றாள் பொன்மகள் குறுக்காக நின்று கொண்டு. அவளை தனது கரங்களால் புறந்தள்ளினான் ஆதவன்.

"நாம் தவறு செய்து விட்டோம் பொன்மகள்! அதற்கான தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும். நான் உன்னோட மோதத்தயார் செங்குன்றா! உம் வா" என்றான். வாட் போர் ஆரம்பமானது. செங்குன்றனின் வாள் வீச்சுக்கு முன்னால் ஆதவன் தாக்குப்பிடித்தாலும் அவனடு குற்ற உணர்வு செங்குன்றனைத் தாக்குவதிலிருந்து விலக்கியது. பொன் மகள் உள்ளே ஓடினாள். வண்டார் குழலியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.

"குழலி! நீ என் இனிய தோழி அல்லவா? ஆதவன் உன் உடன் பிறந்தவனைப் போல என்று எத்தனை முறை நீ என்னிடம் சொல்லியிருக்கிறாய்? நானும் அவனும் காதலிப்பதை முதலில் கண்டு பிடித்தவள் நீ அல்லவா? குழலி செங்குன்றனிடம் சொல்! நாங்கள் மனம் திருந்தி வந்திருக்கிறோம் என்று சொல்" என்று கதறினாள். அவளது நிலை பரிதாபமாயிருந்தது. செங்குன்றனின் வாள் ஆதவனைப் பல இடங்களில் கீறி விட்டது. இனியும் தாமதித்தால் ஏதாவது விபரீதம் நிகழ்ந்து விடுமோ என வெளியே சென்றாள் வண்டார் குழலி.

"செங்குன்றா! நில்! இவன் நம் நண்பன்! இவனை எதுவும் செய்து விடாதே" என்று கத்தினாள். ஒரே நேரத்தில் பல குரல்கள் ஒலித்தன. ஒரே குழப்பம் நிலவியது. புழுதிப்படலத்தால் எதையுமே சரியாகப் பார்க்க முடியவில்லை. "செங்குன்றா! அவனை ஒன்றும் செய்யாதே" என்று அலறினாள் வண்டார் குழலி ஆனால் புழுதிப் படலம் அடங்கிய அந்த நொடியில் செங்குன்றனின் வாள் ஆதவனின் நெஞ்சில் ஆழமாக இறங்கியது. அவனது வாயிலிருந்தும் நெஞ்சிலிருந்தும் குருதி தெறித்தது. அதனைப்பார்த்து அப்படியே நின்றாள் பொன்மகள். உலகம் அப்படியே நின்று விட்டது போலத் தோன்றியது. ஆதவன் வாளைக் கீழே போட்டு விட்டு தள்ளாடியபடியே செங்குன்றனின் அருகில் வந்தான்.

"நண்பா! நம் ஆசான் எங்கே? இப்போதாவது சொல்வாயா? நம் மற்ற தோழர்கள் எங்கே?" என்றான். அவனது வாயிலிருந்து குருதி கொப்பளித்தது. செங்குன்றனுக்கே கண்களில் நீர் வந்து விட்டது.

"ஆதவா என் அருமை நண்பா! நான் என்ன செய்து விட்டேன்?" என்று அலறியபடி அவனைத் தழுவினான்.

"மல்லிகை! ஏதாவது செய்து இவனைக் காப்பாற்றேன்! நீ மருத்துவம் பயின்றவள் தானே?" என்றான் செங்குன்றன். அதனைக்கைகளால் மறுத்தான் ஆதவன்.

"நான் செய்த தீவினைக்கு எதிர்வினை கிடைத்து விட்டது செங்குன்றா! அரண்மனை காவலர்கள் எப்போது வருவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் கையில் இந்த ஓலைகள் எதுவும் கிடைத்து விடக் கூடாது! அவற்றைப் பாதுக்காப்பது உங்கள் பொறுப்பு! எனக்கு ஆணையிட்டு உறுதி கூறுங்கள்" என்றான்.

அவ்வாறே ஆணையிட்டு உறுதி கூறினர் மூவரும். பொன்மகள் சித்தப்பிரமை பிடித்தது போல அப்படியே நின்றிருந்தாள். வண்டார் குழலி அவள் அருகில் சென்று உலுக்கினாள்.

"உனக்கு என்ன ஆயிற்று பொன்மகள்? என்னைப்பார் என்னிடம் பேசு! வாய் விட்டுக் கதறி அழுது விடு என் தோழி! உன்னை இந்த நிலையில் பார்க்கவா நான் இத்துணை நாள் காத்திருந்தேன்? பேசு! பொன்னா! பேசு!" என்று அழுதாள்.

"நான் ஏன் அழ வேண்டும் குழலி? ஆதவன் தன் கடமையைச் செய்து விட்டான். இனி எனது கடமை மட்டுமே மீதமிருக்கிறது. அது இந்த ஓலைகளைப் பாதுகாப்பது தான். அதை செய்து முடித்த பின் நானும் அவனைத் தேடிச் சென்று விடுவேன்" என்றாள். அந்த அமைதியான குகையில் அவளது குரல் மிகவும் பயங்கரமானதாக ஒலித்தது. அவளைப் பார்த்தான் செங்குன்றன். கலைந்த தலை, எங்கோ வெறித்த பார்வை, முகத்தில் கரங்களில் ஆதவனின் குருதி என அவள் இருந்த நிலை பரிதாபமாகவும் அதே நேரம் அச்சம் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இப்போது ஆதவனால் பேச முடியவில்லை. கைகளால் பொன்மகளை அழைத்தான். அவளது தலை மீது கை வைத்தான்.

"அந்த ஓலைகளை நீ தான் காக்க வேண்டும்! உன்னை மீறி அவற்றை யாராலும் எடுக்க முடியக்கூடாது! எனக்கு வாக்குக் கொடுப்பாயா ?" என்றான் மெல்லிய குரலில். அவனது குருதி படிந்த கரங்களின் மீது கை வைத்து ஆணை வைத்தாள். இப்போது மீண்டும் வாசற்புறம் சலனங்கள் கேட்க விரைத்தான் செங்குன்றன். சற்றே தொலைவில் அரண்மனைக் காவலர்களும் அவர்களுடன் கோட்டையனும் வருவது தெரிந்தது.

"என்னை நம்பு! நாங்கள் அவர்களை அழைத்து வர வில்லை! நாங்கள் அழைத்து வர வில்...." ஆதவனின் தலை சாய்ந்தது. பொன்மகள் காவலர்கள் வருவதைப் பார்த்து விட்டாள்.

"என் தோழர்களே! வாளை எடுத்துக்கொள்ளுங்கள்! என் காதலன் ஆதவனின் ஆன்மா அமைதியடைய நாம் இவர்களை காவு கொடுப்போம். ஓலைகளை அடைய விடாமல் செய்வதே இப்போது நம் பணி! ஆதவனைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று கத்தினாள். அவளது பேச்சும் செய்கையும் மூர்க்கமடைந்தவள் போல இருந்தன. வேறு வழியில்லாமல் வண்டார் குழலி மல்லிகை இருவரும் ஆளுக்கு ஒரு வாளை எடுத்துக்கொண்டனர். ஆதவனின் உடலை பக்கவாட்டில் நகர்த்தினர். அதற்குள் காவலர்கள் அங்கு வர வாளை சித்தமாக வைத்திருந்தனர்.

"ஓலைகளைக் கொடுத்து விடுங்கள்! யார் உயிரும் போகாது! எங்களுக்குத் தேவை உங்கள் உயிரல்ல ஓலைகள் தான்! உம் கொடுங்கள்! நீங்கள் கொடுக்கவில்லையென்றால் நாங்களே எடுத்துக்கொள்வோம்" என்று குகையின் உட்புறத்தை நோக்கி முன்னேறினான் கோட்டையன்.

ஓவென கூச்சலிட்டபடி வாளை முன்னால் நீட்டியபடி ஓடி வந்தாள் பொன்மகள். அவளது பயங்கரத் தோற்றத்தைப் பார்த்து சற்றே மிரண்டார்கள் காவலர்கள். இருந்தும் சமாளித்துக்கொள்ள வாட்போர் மூண்டது. பொன்மகளின் வாள் வீச்சு மிகவும் வேகமாகவும் அபாயகரமாகவும் இருந்தது. சில நொடிகளியேலயே இரு காவலர்கள் அவளது வாளுக்குப் பலியாகினர். சந்நதம் வந்தவளைப் போல கொஞ்சம் கூட பின் வாங்காமல் போரிட்டாள் பொன்மகள். அவளைப்பார்த்து வீரம் துளிர்க்க குழலியும் மல்லிகையும் ஆளுக்கொரு காவல்ர்களை வீழ்த்த இப்போது விஞ்சி நின்றது கோட்டையனும் அவனது தலைமைக் காவலனும் தான்.

கோட்டையன் எதற்கும் அயராமல் போரிட்டான். அவனது வாள் பொன்மகளின் தோளைக் மெலிதாகக் கீறியது. அதைப் பார்த்ததும் வண்டார் குழலிக்குக் கோபம் வந்தது. செங்குன்றனும் அவளும் ஒரே நேரத்தில் வாள் வீச ஆ என்று அலறியபடி சாய்ந்தான் கோட்டையன். அவனது அருகிலேயே மாண்டான் தலைமைக் காவலன். மூச்சு முட்ட கொற்றவை தெய்வத்தைப் போல நின்றிருந்தாள் பொன்மகள். அவளது தோள் காயத்துக்கு ஏதேதோ மருந்துகள் வைத்துக் கட்டுபோட்டாள் மல்லிகை.

சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டார்கள் அனைவரும். ஒரு புறம் கல்விச்சாலை தோழனான ஆதவனின் உடல் மறு புறம் அரண்மனைக் காவலர்களின் உடல் என அந்த இடமே சடலங்களால் நிறைந்திருந்தது. கண்களை மூடி அமர்ந்திருந்தான் செங்குன்றன்.

"இப்படி நடக்கும் என்று ஊகித்து தான் ஆசான் அகத்தியர் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று விட்டார் போலிருக்கிறது! கருணையே வடிவான அவரது மாணவர்களான நாம் எத்தனை உயிர்க்கொலை புரிந்து விட்டோம். அதிலும் என் கையாலேயே என் நண்பனை..." முடிக்க முடியாமல் அழுதான் செங்குன்றன்.

"இது உணர்ச்சி வ்சப்படுவதற்கான வேளையில்லை செங்குன்றா! நமக்கு முன் இப்போது முக்கியப் பொறுப்பு இருக்கிறது. கோட்டையன் பொருநை அரசனின் நெருங்கிய அமைச்சன். அவனைக் காணவில்லை என்றால் அவர் வாளாயிருக்க மாட்டார். இன்னும் ஓரிரு தினங்களில் அரண்மனைப் படையே நம் கல்விச்சாலையை முற்றுகை இட்டாலும் இடலாம். அதற்குள் இந்த ஓலைகளை மறைக்க வேண்டும்" என்றாள் பொன்மகள். அவளது பார்வை எங்கோ இருந்தது. ஆனால் சொற்களில் ஆழ்ந்த பொருள்.

"பொன்மகள்! என்ன ஆயிற்று உனக்கு? ஏன் என்னவோ போல இருக்கிறாய்? என்னைப் பாரடி" என்றாள் வண்டார் குழலி. அது அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. மேலே தொடர்ந்தாள்.

"நான் இந்த குகையை விட்டு இனி எங்கும் வர மாட்டேன். ஓலைச் சுவடிகளை மறைத்து வைக்க இதை விடச் சிறந்த இடம் எதுவும் இல்லை. ஆதவன் இங்கு தான் இயற்கை அடைந்தான். ஆகையால் அவனுக்கு படுத்த வாட்டதில் ஒரு சிலையை நாம் எழுப்ப வேண்டும்"

"படுத்த வாட்டத்திலா? நீத்தோருக்கு நடுகற்கள் நின்ற வாட்டத்தில் அமைக்கப்படுவது தானே முறை?" என்றாள் மல்லிகை.

"இது நீத்தோருக்கான கல் அல்ல! நமது ஓலைகளைப் புதைக்கும் ரகசிய அறை. அப்படிச் செய்தால் அவன் அந்த ஓலைகளின் காவலனாகி விடுவான் அல்லவா? நாங்கள் செய்த துரோகம் மறக்கப்பட்டு மன்னிக்கப்பட்டு விடும். நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஓலைகளில் குறித்துக்கொள்ளுங்கள்" என்றாள். அதே போல வண்டார் குழலி குறித்துக்கொண்டாள்.

"முதலில் இந்தக் குகையை அடைவதற்கே நிறையக் கேள்விகள் இருக்க வேண்டும். அறிவியல் பரம்பரை என்று நம் ஆசான் சொல்வார் அல்லவா? அவர்களாலே மட்டும் தான் இந்த குகைக்கு வந்தடைய முடிய வேண்டும். அப்படி மறைமுகப் பொறிகளை ஏற்படுத்த வேண்டும். செங்குன்றா இது உன் பொறுப்பு! வருபவர்கள் அறிவியல் பரம்பரையினரா இல்லையா என்றுகண்டு பிடிக்க வேண்டியது மல்லிகை உன் பொறுப்பு! குழலி என் அன்புக்குரிய தோழி நீ இந்த ஓலைகளைப் பாதுக்காப்பாக வைத்திரு. " என்றாள்.

"பொன்மகள் உனக்கு அடி அதிகம் படவில்லை. உன் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லையடி! நீ ஏன் என்னவோ போலப் பேசுகிறாய்?" என்றாள் மல்லிகை.

"எனக்கு நேரம் அதிகம் இல்லை மல்லிகை! சொல்வதைச் செய்யுங்கள். நமது ஆசான் அகத்தியர் கல்விச்சாலையைக் குறித்தும் நம்மைக் குறித்தும் எல்லாவற்றையும் ஓலைச் சுவடிகளில் எழுதுங்கள்! அவற்றை இங்கேயே மரப்பெட்டியில் வையுங்கள். நம்மைப் பற்றி வருங்கால சந்ததியர் அறிந்து கொள்ள இவை பயன்படும். நானும் ஆதவனும் மனம் திருந்தினோம். ஆனால் வாழ இயலவில்லை. அதனால் அவர்கள் இந்த ஓலைச் சுவடிகளுக்குக் காவலாக இங்கேயே இருக்கிறார்கள் என எழுதுங்கள்! அதோடு ஆசானது மற்ற கண்டு பிடிப்புக்களையும் சில வரை படங்களையும் இந்தப் பெட்டியில் வையுங்கள். ஆனால் மிக முக்கியமான மரபணுப் புணர்வுப்பிழைக்கான மருந்து அடங்கிய ஓலையை மாத்திரம் மிக மிக பாதுக்காப்பான இடமான ஆதவனின் தலை மாட்டில் வையுங்கள். அதனை எப்படிச் செய்வது அதில் என்னென்ன பொறிகள் இடம் பெற வேண்டும் என்பவற்றை உங்கள் அறிவுக்கே விட்டு விடுகிறேன். " என்றாள்.

கண்களில் இருந்து நீர் வழிய வழிய எழுதிக்கொண்டிருந்தாள் வண்டார் குழலி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top