Aththiyaayam 14: Parijaathap poo

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
பாரிஜாதப் பூ 14.

கல்யாணிப் பாட்டி ஃபோனை எடுக்கும் வரை அவளது மனம் அலை பாய்ந்தது. ஃபோனை எடுத்ததும் அவளை அறியாமல் அழுகை பொங்கி வர விக்கி விக்கி அழுதாள் உதயா. பாட்டி பதறிப்போனார்.

"என்னடி என்ன ஆச்சு? உங்கம்மா அப்பா எல்லாரும் நல்லா தானே இருக்காங்க? காவ்யாவுக்கு எதுவும் பிரச்சனையா? சொல்லிட்டு அழுடி கலக்கமா இருக்கு" என்று பதறினார் மறுமுனையில் பாட்டி.

அப்போது தான் வயதான தனது பாட்டியை மிகவும் பதற்றத்துக்கு ஆளாக்கி விட்டோம் என எண்ணி வெட்கினாள். தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டு பசினாள்.

"எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி! ஆனா நான் தான் நல்லா இல்ல"

"என்னம்மா ஆச்சு? ரவி ஏதும் சொன்னானா? இல்லை உனக்குத் தொழில்ல ஏதாவது பிரச்சனையா?"

"ம்ச்! ரவி தான் எதையும் கண்டுக்கவே மாட்டாரே! ஆனா இப்ப எனக்குப் பெரிய அளவுல பிரச்சனை வந்திருக்கு பாட்டி! இனி நான் என்ன செய்யப் போறேன்னே தெரியல்ல" என்றாள் குரலில் மெண்டும் விம்மல்.

"எதுவானாலும் சொல்லு கண்ணு! பாட்டி இருக்கேன் இல்ல? சொல்லுடா செல்லம்" என்று சொன்னாள். பாட்டியின் பரிவான குரல் மனதுக்கு இதமாக இருந்தது உதயாவுக்கு. குரலை சரிப்படுத்திக்கொண்டு அத்தனையும் சொல்லி முடித்தாள். வாசுதேவன் இவளைப் பழிவாங்குவேன் எனச் சொன்னது முதல் ராஜகோபால் பண்பாடு இல்லாமல் பேரம் பேசியது வரை சொல்லி முடித்தாள். குறுக்கே எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் முதியவள்.

"இப்ப என்ன செய்யலாம்னு இருக்கே உதி?" என்றாள் கடைசியாக.

"எனக்கே ஒண்ணும் புரியல்ல பாட்டி! ஏற்கனவே ஒருத்தரை பகைச்சுக்கிட்டேன். இப்ப இவரு. இனி என்னால பிசினஸ்ல முன்னுக்கு வர முடியும்ன்ற நம்பிக்கையே போயிடிச்சு"

"எந்தக் காலத்துலயும் நாம நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாதும்மா! பொதுவாகவே துன்பம் பெண்களைத் தேடித்தான் அதிகம் வருது. அதனால தானோ என்னவோ கடவுளும் அதை சமாளிக்குற மன தைரியத்தையும் உறுதியையும் நமக்குத்தான் கொடுத்திருக்காரு. பெண் என்பவள் சக்தி! உலகத்துல சக்தி இருக்குற வரைக்கும் தான் இவங்க ஆட்டமெல்லாம். அப்படிப்பட்ட சக்தியா நாம தான் இருக்கோம். அதை நீ புரிஞ்சிக்கோ" என்றாள் பாட்டி பொறுமையாக.

"இதை விட அதிகமா நானும் பேசுவேன் பாட்டி! ஆனா இப்ப என் நிலைமை என்னன்னு உங்களுக்குப் புரியல்ல! அதான் இப்படிச் சொல்றீங்க" என்றாள் லேசான எரிச்சலுடன்.

"அப்படி இல்லடி கண்ணு! உன்னோட மன உறுதியையும் தைரியத்தையும் பார்த்துட்டுத்தான் நான் உன்னை உற்சாகப்படுத்திப் பணமும் கொடுத்தேன். ஆனா நீ என்னடான்னா இப்படிப் பேசுறியே? ஏன் உதி? எல்லாரும் படிக்குறா மாதிரி கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஏதோ ஒரு ஐடி கம்பெனியில வேலைக்குப் போயி சம்பாதிக்குற ஈசியான வாழ்க்கையை விட்டுட்டு இப்படிக் கல்லு மணம் ஜெல்லின்னு இருக்குற கடின வாழ்க்கையை ஏன் தீர்ந்தெடுத்த நீ?"

"இது என்ன கேள்வி பாட்டி? எனக்கு மிகவும் பிடிச்சது கட்டிடத் தொழில். அதுலயும் என் திறமையும் அறிவும் எனக்கே பயன்படணும்னு நான் நெனச்சேன் அது தப்பா? சொல்லுங்க?"

மறுமுனையில் மெலிதாகச் சிரித்தாள் கல்யாணிப் பாட்டி.

"தப்பே இல்லைன்னு தான் நான் திருப்பி திருப்பி சொல்றேனே! உனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு கடினமான பாதையை நீ தேர்ந்தெடுத்த. நல்லா யோசிச்சு தான் நீ அதை செஞ்சேன்னு நான் தப்பா நெனச்சுட்டேன். நீயும் சாதாரணமானவ தான்னு நிரூபிச்சுட்ட" என்றாள்.

"நான் ஒண்ணும் சாதாரணம் பெண் கிடையாது. எத்தனை பெண்கள் இந்தத் தொழிலுக்கு வராங்க சொல்லுங்க பார்ப்போம்?" என்றாள் கோபத்துடன்.

"ஆங்க்! சரியா பாயிண்டை புடிச்சே! எந்தப் பெண்ணுமே வராத இந்தக் கட்டிடத் துறைக்கு நீ வந்திருக்க. அது வரவேற்க வேண்டிய விஷயம் தான். ஆனா நீ என்ன நெனச்ச? நீ பெண்ணா இருக்குற காரணத்தால எல்லாரும் உன்னைப் பாராட்டி உடனே உன்னை ஊக்குவிப்பான்னு தப்புக் கணக்குப் போட்டுட்ட! அதான் இப்ப நீ அழுற" என்றாள்.

அதைக் கேட்டு ரோசம் வந்தது உதயாவுக்கு. என்னை பாட்டி என்னவென்று நினைத்துக்கொண்டாள்? வெறும் கோழை என்றா? ஏதோ மன வருத்தம் தாளாமல் அழுதால் என்னை இளக்காரமாக நினைத்துக்கொள்வதா?

"நான் ஒண்ணும் அப்படி நினைக்கல்ல! நீங்க நினைக்குறா மாதிரி நான் அழவும் இல்ல" என்று பொய் சொன்னாள்.

"சபாஷ்! இப்பத்தான் நீ என் பேத்தி! உதயா! எந்தத் தொழில்லயும் முன்னேறுறது ரொம்பக் கஷ்டமான விஷயம் தான். இதுல ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி பாகுபாடு கிடையாது. என்ன ஆணுன்னா அவங்க எதிர் கொள்ளுற பிரச்சனைகள் வேற மாதிரி இருக்கும். பெண்கள்னா இன்னும் கொஞ்சம் ஆழமா இருக்கும் அவ்வளவு தான்."

"உம்!கரெக்டு தான்"

"வெரி குட்! இப்ப என்ன செய்யலாம்னு இருக்கே?"

"இந்தத்தொழில்ல முன்னேறி என்னை எதிர்த்தவங்க முகத்துல கரி பூசணும்னு ஆத்திரம் வருது பாட்டி! ஆனா எப்படின்னு தான் தெரியல்ல"

"இந்த உதேவகம் ஆத்திரம் எப்பவும் இருக்கணும். அந்த ராஜகோபாலால என்ன செய்ய முடியும்? இல்லை வாசுதேவனால தான் என்ன செய்ய முடியும்? உன்னை உனக்காக மதிக்குறவங்க இல்லாமப் போயிர மாட்டாங்க!"

"அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு பாட்டி! ஆனா இனிமே போற எடத்துக்கு அந்த ராஜகோபாலோ இல்லை வாசுதேவன ஃபோன் செஞ்சா? அது தான் கலக்கமா இருக்கு" என்றாள்.

"சரியான அசடுடி நீ! வாசுதேவன் ராஜ கோபால் ரெண்டு பேருக்குமே குடும்பம்னு ஒண்ணு இருக்கும் இல்ல? அக்கா தங்கச்சி அம்மா இல்லேன்னா பொண்டட்டி இப்படி யாராவது இருப்பாங்க இல்ல? அவங்க தான் நம்ம பலம்"

"என்ன சொல்றீங்க பாட்டி? என்னைப் போய் அவங்க கால்ல விழச் சொல்றீங்களா?"

"நீ ஏன் உதி அவங்க கால்ல விழணும்? தப்பு செஞ்சவங்களை உன் கால்ல விழ வையுன்னு சொல்றேன். புரியல்லியா?"

"இல்ல பாட்டி"

"வாசுதேவனைப் பொறுத்தவரை மிஞ்சிப்போனா இன்னும் நாலு எடத்துக்கு ஃபோன் செய்வாரு அவ்வளவு தான். ஆனா ராஜகோபால் தான் ரொம்ப டேஞ்சரான ஆளு. உனக்கு அவன் இடைஞ்சல் செய்யுறா மாதிரி இருந்தா அவன் கூட ஃபோன்ல பேசு அதை ரெக்கார்டு செஞ்சிக்கோ. இனியும் தொந்தரவு கொடுத்தான்னா அதை அவனோட மனைவிக்குப் போட்டுக் காட்டுவேன்னு சொல்லு! அப்புறம் அவன் ஏன் உங்கிட்ட வாலாட்டப் போறான்?" என்றாள் பாட்டி.

பாட்டியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆத்திரப்பாட்டாள் உதயா.

"சூப்பர் யோசனை பாட்டி! டெக்னாலஜியில நீ எங்களையே மிஞ்சிட்ட! நீ சொன்ன மாதிரியே செய்ய்றேன். வாசுதேவனுக்கு ஒரு வழி சொல்லு"

"எல்லாக்த்தையும் நானே சொல்லிட்டா அப்புறம் நீ எதுக்கு? நல்லா யோசி! தடைகளையும் எதிரிங்களையும் எப்படி சமாளிக்குறதுன்னு தான் யோசிக்கணுமே தவிர அவங்க நம்மை ஜெயிக்க விட்டுரக் கூடாது! புரிஞ்சதா?" என்றாள் பாட்டி.

ஏனோ பாட்டியின் நம்பிக்கையூட்டும் வார்த்தைககைக் கேட்டு உற்சாகம் பொங்கியது உதயாவுக்கு. எப்பேர்ப்ட்ட தடைகளையும் தன்னால் தாண்ட முடியும் என்ற நம்பிகை கொண்டாள் அவள்.
 
#3
எல்லாக்த்தையும் நானே சொல்லிட்டா அப்புறம் நீ எதுக்கு? நல்லா யோசி! தடைகளையும் எதிரிங்களையும் எப்படி சமாளிக்குறதுன்னு தான் யோசிக்கணுமே தவிர அவங்க நம்மை ஜெயிக்க விட்டுரக் கூடாது! புரிஞ்சதா?" என்றாள் பாட்டி.
arumai,anubavam arthathodu yosika vaikrathu, super epi. super paati:love::love::love::love::love::love::love::love:
 

Advertisements

Top