• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 142: Kaalam Parakkirama Pandiyan Kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம்: பராக்கிரம பாண்டியன் காலம்:

அத்தியாயம் 142:

எதுவும் பேசாமல் அந்த ஓலைகளை எடுத்துப்படித்தான் கருப்பன். படிக்கப் படிக்க அவனது முகம் கோபத்துக்குப் போனது. பாதி கூட படித்திருக்க மாட்டான் அவற்றை மீண்டும் பெட்டியில் வீசி எறிந்தான்.

"இவற்றால் நமக்கு எந்த பயனும் இல்லை! ஏதேதோ மந்திரக் களங்களின் வரை படங்கள் உள்ளன. ஆனால் மந்திரங்களைக் காணோம். எதுவுமே புரியவில்லை. மேல் முகம், இன்றியமையாதது என ஏதேதோ சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. இவை தான் நீ சொன்ன ரகசிய ஓலைகள் என்றால் இவற்றால் நமக்கு எள்ளளவும் பயனில்லை. இதற்காகவா சேர நாட்டைத் தூண்டி விட்டாய் நீ? உன்னால் எத்தனை பொருட் சேதம் உயிர்ச் சேதம்? மன்னரிடம் இதைச் சொன்னால் என்ன ஆகும் தெரியுமா?" என்றான் கருப்பன் கோபமாக.

தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தான் வீர பத்திரன்.

"கருப்பா! இவற்றில் மந்திரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரகசிய ஓலைகளில் அவை இருக்கலாமே? அவற்றை இவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். அதனால் தான் நம்மோடு போரிடுகிறார்கள். அப்படி இதில் ஒன்றுமில்லை என்றால் இதனை விட்டு விட்டுச் செல்ல வேண்டியது தானே? ஏன் போரிட்டு மடிய வேண்டும்? யோசிக்க மாட்டாயா நீ?" என்றான் வீர பத்திரன் தந்திரமாக.

அவன் சொல்வதிலும் பொருள் இருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டான் கருப்பன்.

"இதோ பாருங்கள் பெரியவரே! ரகசிய ஓலைகளில் என்ன மந்திரம் இருக்கிறதோ தெரியவில்லை. அவை விளக்கெரிக்கும் மந்திரமாகவே இருந்தாலும் மதிப்பு மிக்கவையே! அவற்றை எங்கள் வசம் ஒப்படைத்து விடுங்கள். உங்களை உயிருடன் விட்டு விடுகிறோம்" என்றான் கருப்பன்.

"உன்னிடம் நான் அறிவை எத்ரிபார்த்தது தவறு தான். இந்த ஓலைகளைப் படித்தாயே எங்காவது மந்திரம் என்ற வார்த்தையைக் கண்டாயா நீ? நமக்குப் புரியவில்லை என்பதாலேயே அவை இல்லை என்று ஆகி விடுமா? ஒரு வேளை நீங்கள் ரகசிய ஓலைகளைக் கண்டு பிடிக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள் அவற்றிலும் உங்களுக்கு மந்திரங்கள் கிடைக்கவில்லை அல்லது அவை உங்களுக்குப் புரியவில்லை என்று வைத்துக்கொள்ளூங்கள் அப்போது என்ன செய்வீர்கள்?" என்றார் விந்தையன்.

கருப்பன் யோசிக்க ஆரம்பித்தான்.

"இவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சேர மன்னனிடம் ரசவாதம் அதாவது இரும்பைத்தங்கமாக்கும் ரகசியம் அடங்கிய ஓலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை எடுத்து வருவதாகவும் சொல்லித்தானே சில மாதிரி ஓலைகளைக் காட்டினான்? ஆனால் அப்படிப்பட்ட ஓலைகளை அகத்தியர் எழுதவே இல்லை என்று இவர் சொல்கிறாரே? நானும் படித்த வரையில் அகத்தியரின் மாணவர்கள் அப்படி ஒன்று இருப்பதாகவே குறிப்பிட வில்லையே? எண்ணெயில்லாமல் எரியும் விளக்கு என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது இந்த ஓலை. ஆனால் அதிலும் எதுவும் புரியவில்லை. மந்திரக்களங்கள் என்கிறான் வீர பத்திரன். அப்படியானால் மந்திரங்கள் எங்கே? நாம் இதனை அப்படியே சென்று மன்னரிடம் கூறினால் அவர் ஏற்றுக்கொள்வாரா? ஒரு வேளை அந்த ரகசிய ஓலைகளை மறைத்து விட்டோம் என்று குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிப்பாரோ? சே! இந்த வீர பத்திரனால் என்ன தொல்லை" என்று நினைத்துக்கொண்டான்.

"யோசிக்காதே கருப்பா! நமது நோக்கம் இப்போது ரகசிய ஓலைகளைக் கைப்பற்றுவது மட்டுமே! அதில் என்ன இருந்தாலும் அதைப் பற்றி மன்னர் முடிவெடுத்துக்கொள்ளட்டும் என்ன இருந்தாலும் இவர்கள் பாண்டிய நாட்டார் என்பதை மறவாதே!" என்றான் வீர பத்திரன். அவனை லட்சியம் செய்யாமல் மற்ற வீரர்களை அழைத்துப் பேசினான் கருப்பன். தான் நினைத்ததைச் சொன்னான். அவர்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

"ஐயா! ரகசிய ஓலைகள் கிடைத்தால் பார்க்கலாம். அப்படி இல்லையென்றாலும் இந்த ஓலைகளை நாங்கள் எடுத்துச் செல்கிறோம். இவை நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எங்கள் மன்னரிடம் தெளிவு படுத்தும்" என்றான் கருப்பன்.

"ஆங்க்! அப்படிச் சொல் கருப்பா" என்று அவனருகே வந்தான் வீர பத்திரன்.

"இவற்றைத்தர இயலாது. இவை இங்கேயே பாதுக்காக்கப்பட வேண்டியவை! உங்கள் மன்னரிடம் சென்று ஒரு மடையனை நம்பி மூடத்தனமான ஒரு காரியத்தில் இறங்கினோம் அதனால் விளைந்த பலனுக்கு இவன் தான் பொறுப்பு என்று சொல்" என்றார்.

"பார்த்தாயா கருப்பா! இவர்கள் தந்திரசாலிகள். உன்னை ஏமாற்றுவார்கள் என்றேனே கேட்டாயா நீ? இவைகள் அனைத்துமே மந்திர ஓலைகள் தான்! மந்திரங்கள் மறைந்து இருக்கலாம்! இவர்களைக் கொன்று புதைத்து விட்டு இந்த ஓலைகளைக் கொண்டு செல்வோம் வாருங்கள்! உம் மீண்டும் வாளை வீசுங்கள்" என்று கத்தினான்.

இதனை எதிர்பார்த்திருந்த காளையனும் மணி சேகரனும் சட்டென துள்ளி எழுந்து தாக்கினார்கள். கண் மூடித்திறக்கும் நேரத்தில் இருவரது தலைகள் மண்ணில் உருண்டன. களைப்பு மிகுதியால் கண் மூடிப்படுத்திருந்த கீரார் அப்படித்தான் நன்று செய்தீர்கள் என்று ஊக்கினார். இப்போது இருவருக்கும் இருவருக்கும் தான் மோதல். வீர பத்திரன் தனது கடைசி ஆயுத்ததைக் கையில் எடுத்தான். தனது அரைக்கச்சில் இருந்த தோல் பையை எடுத்து அதில் இருந்த நெடி மிகுந்த ஒரு பொடியை எடுத்தான். அதனைக் கண்டு விட்ட காளையன் மணி சேகரனை எச்சரித்தான். தங்களுடன் போரிட்டுக்கொண்டிருந்த அந்த கருப்பனை அப்படியே முன்னால் தள்ளினார்கள் இருவரும். இதனை சற்றும் எதிர்பாராத வீர பத்திரனது மூளைக்கு இந்தச் செய்தி எட்டுமுன் கைகள் அந்தப் பொடியைத் தூவி விட்டன. கருப்பன் அலறலுடன் அப்படியே மண்ணில் சாய்ந்தனர். அந்தப் பொடி அவன் வாயிலும் சென்று விட்டதால் விஷம் தன் வேலைக்யைக் காட்டத் தொடங்கியது. வாயிலிருந்தும் காதிலிருந்தும் ரத்தம் கசிய ஆரம்பித்தது. பயந்து விட்டான் வீர பத்திரன். வாளை அப்படியே போட்டு விட்டு அலறியபடி கால் சென்ற வழியில் ஓடி விட்டான். இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டன.

மற்றவர்கள் சிலையாக நின்றார்கள். ஒரு கணம் பூமி சுழல்வதுவே நின்று விட்டது போலத் தோன்றியது. சுதாரித்துக்கொண்டு கீராரை நோக்கி நடந்தார் விந்தையன்.

"குருவே என்ன இது? வீர பத்திரன் எங்கே சென்று விட்டான்? மீண்டும் வருவானா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?"

"எனக்கும் தெரியவில்லை காளையா! ஆனால் நாம் எதற்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஓலைகளையும் ரகசிய ஓலைகளையும் பாதுக்காக்க வேண்டியது நம் கடமை. அதனைச் செய்யத்தான் நாம் இத்தனை தூரம் வந்தோம். இதோ அந்த ஓலைகள் மீண்டும் ஐந்து உயிர்ப்பலிகளை வாங்கி விட்டன. நமது மண்ணில் இன்னும் பேராசையும் சுய நலமும் அழியவில்லை என்பதற்கு இவையே சான்று. ஆகையால் இதில் குறிப்பிட்டிருக்கும் அறிவியல் பரம்பரையினர் வரும் வரையில் இவற்றை மறைக்க வேண்டியது நமது பணி. இதைத்தான் வனப் பேச்சியும் விரும்புவாள்" என்றார்.

வாட்களை ஓரமாகப் போட்டு விட்டு ஒவ்வொரு வீரனாகச் சென்று சோதித்தான் காளையன். யாருக்கும் உயிர் இல்லை. அவர்கள் எதிரிகள் என்றாலும் வீரத்தோடு போரிட்ட காரணத்தால் அவர்களை குழி தோண்டிப் புதைத்தார்கள்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
arumai sis thinai vithaithavan thinai aruppan enbathu sari aaki vittathu.. oditaan veetrabadran
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top