• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 143: Kaalam Parakkirama Pandiyan kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம்: பராக்கிரம பாண்டியன் காலம்:

அத்தியாயம் 143:

மிகவும் கனத்த மனதோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். மூட்டுக்காணியான கீராரின் வீரமும் அறொய்வும் இவர்களுக்குப் பல இடங்களில் உறுதுணையாக இருந்தது. இப்போது அவர் வஞ்சகத்தால் கொல்லப்பட்டார். என்பதை நினைத்து நினைத்துக் கலங்கினார்கள்.

"இப்போது என்ன செய்வது குருவே?"

"நாமும் சில ஓலைகள் எழுத வேண்டும் மணி சேகரா! அவை இந்தக் குகை வரையிலும் வருவதற்கான வழி காட்டுதல்களாக இருக்க வேண்டும். அவற்றோடு பழைய ஓலைகளையும் சேர்த்து வைக்க வேண்டும். காணிகள் நமது கதையைக் கூறுமாறு செய்ய வேண்டும். ஆனால் மூட்டுக்காணிகளுக்கு மட்டுமே அவை தெரிய வேண்டும். நான் சொல்வது புரிந்ததா கீரா?" என்றார் விந்தையன்.

"நான் இந்தக் குகையை விட்டு வரக் கூடாது என்று ஏதோ ஒரு உணர்வு சொல்கிறது குருவே! இன்னும் சில நாழிகைகளில் நான் இறந்து விடுவேன் என நினைக்கிறேன், என்னை அதாவது எனது சிலையை ரகசியத்தை மறைக்கப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்" என்றார் கீரார்.

"ஐயா! மற்றவர்கள் எங்கள் மூட்டுக்காணி எங்கே என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? உங்களுக்கு ஒன்றுமில்லை! நீங்கள் நன்றாக இருக்கிறீகள் அப்படித்தானே குருவே?" என்றான் காளையன்.

"காளையா மனதை திடப்படுத்திக்கொள்! கீராரின் வாழ்வு இன்னும் ஒரு நாழிகை தான். காரணம் கருப்பனது வாளில் நஞ்சு கலந்திருந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது இதனை நான் உணர்ந்து கொண்டேன். அதனை வைத்து தான் அவனது தோல்பையில் நஞ்சு இருக்கும் என ஊகித்தேன். அதனால் தான் உங்களை எச்சரிக்க முடிந்தது" என்றார்.

இரு இளைஞர்களும் கீராரின் அருகே அமர்ந்து கொண்டனர்.

"ஐயா! உங்கள்து வீரம் எங்களுக்கு எப்போதும் வழி காட்டும். நீங்கள் இந்த குகையில் தெய்வமாக வீற்றிருந்து அறிவியல் பரம்பரைக்கு வழி காட்டுவீர்கள்!" என்றான் மணி சேகரன்.

"இனி நான் என்ன செய்வேன் ஐயா? காணிகளுக்கு என்ன பதில் சொல்வேன்?" என்று கதறினான் காளையன்.

"காளையா! நீ நடந்ததை அப்படியே நமது காணிகளிடம் ! இனி நாம் ஒரு போதும் இந்தப் பகுதிகளுக்கு வர வேண்டாம். இதனை நான் சொன்னதாகவே போய்ச் சொல்! அதோடு குரு விந்தையனைப் பற்றியும் அவரது சீடர்களான உங்களைப் பற்றியும் கூட அவரிடம் சொல்! ஆனால் ஓலைகளைப் பற்றி எதுவும் சொல்லாதே! இனி இனி நீ தான் மூட்டுக்காணி" என்றார். அவருக்கு மூச்சு வாங்கியது. கீராரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட விந்தையன் அவரது தலைப்பாகையை எடுத்து காளையனின் தலையில் வைத்தார். காளையன் இருவரையும் கண்ணீர் வழிய வழிய வணங்கினான்.

"நாம் பாதுக்கக்க வேண்டியவை நிறைய உள்ளன காளையா!. ஆனால் நாம் இப்போது செய்ய வேண்டியது கீராரை காணிகளிடத்தில் ஒப்படைப்பது தான். " என்று சொல்லியபடி எழுந்தார்.

"ஆனால் குருவே! வீர பத்திரன் மீண்டும் வந்தால்? இந்த ஓலைகளை எடுக்க முயற்சி செய்தால் என்ன செய்ய?"

"ரகசிய ஓலைகள் இருக்கும் இடத்தை காண மரப்பந்து அவசியம். அது இப்போது உன் அரைக் கச்சில் உள்ளது. மற்ற ஓலைகலை நாம் எடுத்துச் செல்வோம். எல்லா வேலையும் முடிந்த பிறகு மீண்டும் வருவோம்" என்றார்.

அதனைக் கேட்டு கீராரின் முகத்தில் மெல்லிய முறுவல் வந்தது. அந்தி வானத்தைப் பார்த்தவாறு அவரது கண்கள் இறுதியாக மூடிக்கொண்டன. மெல்லிய குளிர் காற்றும் செண்பகபூவின் வாசனையும் காற்றில் வந்தன. யாரோ யாரோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போலத் தோன்றியது காளையனுக்கு.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தார்கள். காளையன் கீராரை சுமந்து கொண்டு கீழிறங்கினான். காணிகள் அவர்களை வருத்தோடு வரவேற்றனர். கீராரின் குடும்பத்தார் அவரது பெருமைகளைப் போற்றிப் பாடினர். அமைதியான முறையில் கீராரின் இறுதிச் சடங்குகள் நடை பெற்றன. அன்றைய இரவு காளையன் குரு விந்தையன் முன்னிலையில் மூட்டுக்காணியாக பொறுப்பேற்றுக் கொண்டான். விந்தையனது ஆணைப் படி கீராருக்கு ஒரு சிலை உருவாக்கப்பட்டது. அவர் மூட்டுக்காணி என்பதைக் குறிக்க தலைப்பாகை அவசியம் என்று அவர் சொல்லி அதனை காளையனே வடிவமைத்தான்.

அதன் பிறகு அந்தக் குகைக்கு கீராரின் சிலையை சுமந்து கொண்டு சென்றனர் காளையனும் மணி சேகரனும். அதனை ஆதவன் சிலையின் காலருகே வைத்தார்கள். தன்னுடன் எடுத்துப் போயிருந்த ஓலைகளை அங்கே இருந்த பெட்டியில் மீண்டும் வைத்தார் விந்தையன். வீர பத்திரன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. காட்டில் கிழங்குகளை எடுக்கப் போன சில காணிகள் பைத்தியக்காரன் ஒருவனைப் பார்த்தகாவவும் அவன் ஓலைகள், வனப்பேச்சி எனப் புலம்பியதாகவும் தெரிவித்தனர். அவன் மேல் அனுதாபம் பிறந்தது விந்தையனுக்கு. மீண்டும் அவன் கண்ணில் பட்டால் தங்களிடம் அழைத்து வருமாறு கூறினார்.

மலைக்குகையில் அமர்ந்து மேலும்சில ஓலைகளை எழுதினார்கள். செங்குன்றனும் மல்லிகையும் வண்டார் குழலியும் எழுதிய ஓலைகளையும் சேர்த்து ஈட்டி மரப்பெட்டிகளில் வைத்தார்கள். முக்கியமாக அந்த மரப்பந்தை கீராரின் தலைப்பாகையில் வைத்து அது அழுத்தத்தால் ஒரு புறம் மாத்திரமே திறக்கும் வண்ணம் வடிவமைத்தார்கள். அப்போது தான் விந்தையன் அந்த பெரிய மூட்டைகளில் என்ன இருந்தது என்று காண்பித்தார். அவைகளில் ஒரு உயரமான மனிதனின் உருவ பொம்மை இருந்தது. அது மூன்று பாகங்களாக புரிக்கப்பட்டு இருந்தது.

"மணி சேகரா! இந்த மனிதப் பொறி நான் உருவாக்கியது. இதனை பூம்பள்ளத்துக்கு அருகே இருக்கும் குகையில் வைக்க வேண்டும்,. அது பற்றிய ஓலைகள் இதோ இந்தப் பெட்டியில் இருக்கின்றன. இந்தப் பொறியை பூம்பள்ளத்தில் அகத்திய மாணவர்கள் நிறுவிய புலிப்பொறிக்கு முன்னால் வைக்க வேண்டும். அதோடு குகையின் மறுபுறத்துக்குச் செல்லும் வழி இதில் இருக்க வேண்டும். " என்றார்.

அவரது ஆணைப்படியே பணிகள் நடந்தன. காணிகளுக்குக் கூடத் தெரியாமல் பூம்பள்ளத்துக் குகையில் அந்த மனிதப்பொறி வைக்கப்பட்டது. வண்டார் குழலிக்கான சின்னமாக வண்டையும், செங்குன்றனுக்கு செம்பருத்தியும்., மல்லிகைக்கு மல்லிகை மலரும் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டன. அவர்களது கேள்வி பதில்கள் அப்படியே பயன் படுத்தப்பட்டன. மீண்டும் குகைக்குச் சென்றார்கள். இன்றோடு வேலை முடிந்து விட்டக்து. இனி அவர்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டியது தான். அதனால் கடைசி முறையாக கீராரின் நினைவிடம் வந்தார்கள்.

"கீராரே! எங்கள் கடமைகளை முடித்து விட்டோம். இந்த ரகசிய ஓலைகளைப் பாதுக்காப்பது இனி உங்கள் கடமை. ஆசான் அகத்தியர் கூறிய அறிவியல் பரம்பரையினர் எப்போது வருவார்களோ எங்களுக்குத் தெரியாது! அது வரையில் இதனைப் பாதுக்காக்க வேண்டும்" என்று வணங்கினர்.

வனப்பேச்சிக்கு சிவப்பு நிறத்தில் பருத்தியாலான துணி எடுத்து வந்திருந்தார் விந்தையன். அதனை அணிவித்து வணங்கினர்.

"அம்மா! நீ எங்கள் தெய்வம்! உன்னால் தான் நாங்கள் உயிர் தப்பினோம். இப்போது மீண்டும் உன்னை இந்த ஓலைகளுக்குக் காவலாக வைத்து விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு! எங்களை மன்னித்து காத்தருள்வாய்" என்று வேண்டினர். மீண்டும் குளிர் காற்றும் செண்பக பூவின் வாசமும் வந்த்து. வனப்பேச்ச்கி உத்தரவு கொடுத்து விட்டாள் வாருங்கள் நாம் செல்வோம் என அவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் கீழே இறங்கினார் விந்தையன்.

செண்பகப் பொழிலுக்கு விந்தையன் காளையன் மற்றும் மணி சேகரன் வந்து சேர்ந்த போது எங்கும் வெற்றிக் கோலாகலமும் கொண்டாட்டங்களும் காணப்பட்டன. சேரனோடு நடந்த யுத்தத்தில் பராக்கிரம பாண்டியன் வென்று விட்டார் என்று எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. குரு வந்து விட்டார் என்ற செய்தி அறிந்ததும் ஓடோடியும் வந்து வணங்கினான் பராக்கிரமன். அவரை ஆசிரமத்துக்கே அழைத்துச் சென்று மரியாதை செய்தான். போர் நடந்த நாட்களில் அவர் எங்கே சென்றிருந்தார் என்பதை சொல்ல மறுத்து விட்டார் விந்தையன். அதனால் பலவிதமான ஊகங்கள் உலவின. ஏதேதோ மந்திரங்கள் அவர் செய்தார் எனவும் யாகங்கள் பல செய்து மன்னருக்கு வெற்றி ஈட்டித் தந்தார் எனவும் பேசினர். இவை எதற்கும் பதிலே சொல்லாமல் மௌனம் காத்தனர் காளையனும் மணி சேகரனும்.

கோயில் கட்டும் பணி தடையில்லாமல் நன்றாக நடந்தது. அந்தப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டான் மணி சேகரன் . காளையன் மூட்டுக்காணி ஆகி விட்டதால் காட்டுக்கே சென்று விட்டான். அந்த ஓலைகள் அடங்கிய பெட்டி மணி சேகரன் வழியினர்க்கும் அதன் பிறகு அவன் பரம்பரையினர் என்று வழி வழியாக வந்தது. செண்பகப் பொழில் என்ற பெயர் மாறி தென்காசி என்ற பெயர் ஏற்பட்டது. விந்தையன் காலத்தின் சுழலில் தெய்வத்தை அடைந்தார். அரண்மனையில் குரு விந்தையனுக்காக ஒரு சமாதி எழுப்பினான் பராக்கிரமன். அவரது சமாதியில் பொன்னும் பொருளும் இருப்பதாக வதந்திகள் உலவின. தென்காசி கோயில் ராஜ கோபுரம் கம்பீரமாக எழுந்தது. அந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்கும் அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்பவர்களுக்கும் தான் அடிமை என்று செய்யுள் ஒன்றை எழுதினான் பராக்கிரம பாண்டியன்.

காலத்தில் பொன் சுவர்களில் அவன் பெயர் பதிக்கப்பட்டது. ஆனால் காளையன் மணி சேகரன் இவர்களது பெயர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கே வனப்பேச்சியின் காவலில் கீராரின் கண்காணிப்பில் அரிய ஓலைகள் யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்திருந்தன. தென்காசிக் கோயிலின் தல விருட்சமான செண்பக மரம் பூக்களை உதிர்த்து வாழ்த்தியது.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
காலத்தில் பொன் சுவர்களில் அவன் பெயர் பதிக்கப்பட்டது. ஆனால் காளையன் மணி சேகரன் இவர்களது பெயர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கே வனப்பேச்சியின் காவலில் கீராரின் கண்காணிப்பில் அரிய ஓலைகள் யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்திருந்தன. தென்காசிக் கோயிலின் தல விருட்சமான செண்பக மரம் பூக்களை உதிர்த்து வாழ்த்தியது
arumai sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top