• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 144: Kaalam Tharkaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம்: தற்காலம்

அத்தியாயம் 144:

வர்ஷினி அந்த வாளைக் கையில் எடுத்தாள். அதனை பாறையின் மீது மோதி ஓசை எழுப்பினாள். சத்தம் கேட்டு பதறித் திரும்பினர் கேசவனும் பூபாலனும். அவர்களது கண்களில் வாளைக் கையில் ஏந்தியபடி நின்றிருந்த வர்ஷினியின் தோற்றம் புலப்பட்டது. அவளது முகம் இறுகி வேறு மாதிரி தோன்றியது. பயந்து அழும் பெண்ணாக அவள் அப்போது தோன்றவில்லை மாறாக பகைவர்களை பழி தீர்க்கும் ஒரு வீராங்கனையின் சீற்றம் அவள் பார்வையில் இருந்தது. திடுக்கிட்டார் பூபாலன். சமாளித்துக் கொண்டான் கேசவன்.

"ஏ லூசு! வாளை எதுக்கு எடுத்த? உன்னால ஒரு எறும்பைக் கொல்ல முடியுமா? சின்ன சத்தம் கேட்டாலே பயந்துருவ! வாளை தூக்குற மூஞ்சைப் பாரு" என்றான்.

அவள் பதிலே சொல்லவில்லை. மாறாக அவளது பார்வை பூபாலனை வெறித்தது.

"அந்த மரப்பந்தை இங்கே கொண்டு வாருங்கள்! ஊம்! சீக்கிரம்" என்றாள்.

அவள் உணர்வோடு தான் பேசுகிறாளா என்பதே சந்தேகமாக இருந்தது அவர்களுக்கு.

"இப்ப எதுக்கு நீ செந்தமிழ்ல பேசி சாவடிக்கிற? உன்னை பேசாம தானே இருக்கச் சொன்னேன்? பேசாம அந்த வாளை வெச்சுட்டு அந்த மூலையில உக்காரு. " என்றூ சொல்லி விட்டு மாமனின் பக்கம் திரும்பினான் கேசவன்.

"மாமா அவளைக் கண்டுகாதீங்க! நவீனும் இல்ல ராமநாதனும் இப்படி ஆயிட்டாரேன்ற பயத்துல இவ என்னமோ மாதிரி பிஹேவ் பண்றா! இதோ இந்த மரப்பந்தை இந்த நெஞ்சுத்துளைக்குள்ள போடணும்னு நினைக்கறேன். அப்படி செஞ்சா தான் ரகசிய ஓலைகள் நமக்குக் கிடைக்கும். போடவா" என்றான்.

ஏனோ பேராசிரியர் பூபாலனுக்கு பயமாக இருந்தது.

"கேசவா! முதல்ல இந்தப் பொண்ணை கட்டிப் போடு இல்ல புடிச்சு காட்டுக்குள்ள தூக்கிப் போடு! அவ வாளை வெச்சுருக்குற விதம் நம்மை பார்க்குற பார்வை ஒன்னும் சரியில்ல. எனக்கென்னவோ பயமா இருக்கு" என்றார்.

"என்ன மாமா நீங்க? அவளைப் போயி பெருசா நினைக்கறீங்களே? முதல்ல இந்த மரப்பந்தைப் பிடிங்க! ஜாக்கிரதை கீழே போட்டுடப் போறீங்க! நான் அவளை ரெண்டு தட்டி தட்டி மயக்கமடைய செஞ்சுட்டு வரேன்" என்று சொல்லி திரும்பினான்.

தூக்கி வாரிப் போட்டது இருவருக்கும். சற்று தொலைவில் நின்றிருந்த அவள் இப்போது மிகவும் நெருங்கி வந்திருந்தாள். விரல் தொடும் தூரத்தில வர்ஷினியைப் பார்த்ததும் ஹக் என்றான் கேசவன். அவனுக்கே இபோது லேசாகக் கலக்கம் வந்து விட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டான்.

"வர்ஷினி விளையாடாதே! உன்னை நாங்க எதுவும் செய்ய மாட்டோம்! அப்படி போயி உக்காரு! இல்ல நான் என்ன செய்வேன்னு தெரியுமில்ல?" என்று ஒரு அடி முன்னால் வைத்தான்.

மின்னல் மின்னும் வேகத்தில் வாளைச் சுழற்றினாள் வர்ஷினி. அதன் கூர்முனை கேசவனின் கைகளை வெட்டியது. முதலில் வலியே தெரியவில்லை அவனுக்கு, ரத்தம் வரவும் தான் அவன் கத்தினான்.

"ஐயையோ! மாமா இவளுக்கு நிஜமாவே பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு நினைக்கறேன். கன்னா பின்னான்னு வெட்டுறா! தள்ளிப் போங்க!" என்று கத்திக்கொண்டே அவளிடமிருந்து விலகி ஓடினான். அவனைப் பின் தொடர்ந்தார் பூபாலன். இருவரது பார்வையும் வர்ஷினியின் மேல் நிலைத்திருந்தது. அவள் இருந்த இடத்தை விட்டு நகராமல் அவர்களையே வெறித்த வாறிருந்தாள்.

"மாமா! நான் அவ தாக்க வந்தா சொல்றேன். நீங்க இந்த துணியை மடிச்சி எனக்குக் கட்டுப் போடுங்க! என்னால நம்பவே முடியல்ல! வர்ஷினிக்கு எப்படி வாள் வீசத் தெரிஞ்சது?" என்றான் கேசவன்.

"இப்ப நீ தான் உளறுற! இவளுக்கு வாளும் தெரியாது வீசவும் தெரியாது. ஏதோ சுழட்டியிருக்கா அது உன் கையில பட்டிருக்கு அவ்வளவு தான். இதைப் போயி பெரிசு படுத்துறியே?" என்றார் கட்டுப் போட்டபடி.

வர்ஷினியின் மேல் இருந்த பார்வையை அகற்றாமல் மெல்ல பூபாலனுக்கு மட்டுமே கேட்கும்படி பேசினான் கேசவன்.

"மாமா இது விளையாட்டு இல்ல! அங்க பாருங்க அவ வாளை எப்படிப் பிடிச்சிருக்கான்னு. ஒரு தேர்ந்த வீரன் கையாளுறதைப் போல அவ அதைக் கையாளுறா. இன்னும் கொஞ்சம் அழுத்தி வீசியிருந்தா என் கையே துண்டாப் போயிருக்கும். ஆனால் அவ அதைச் செய்யல்ல! இவ வாள் பயிற்சி அதான் இப்ப ஒலிம்பிக்ல கூட வெக்கிறாங்களே ஃபென்சிங்க்னு சொல்லப்படுற கலையைக் கத்துக்கிட்டிருக்கான்னு நினைக்கறேன். அதான் அனாயாசமா சுழட்டுறா! இல்லைன்னா ஒரு பொண்ணு தனியா காட்டுக்கு வரத் துணிவாளா?" என்றான்.

தலையை நிமிர்த்தி வர்ஷினியைப் பார்த்தார் பூபாலன். வலது கை வாளின் கைப்பிடியில் இருந்தது. மற்றொரு கை அதன் கூர்மையை பரிசோதித்த வண்ணம் இருந்தது. அந்த தோற்றம் அவளுக்கு வாள் புதிதல்ல என்று காட்டியது.

"இப்ப என்னடா செய்யலாம்?" என்றார் கிசுகிசுப்பாக.

"பொண்ணாச்சேன்னு நாம் இரக்கப்பட்டோம். அதை இவ தவறா யூஸ் பண்ணிக்கிட்டா! உங்க பாக்கெட்டுல இருக்குற துப்பாகியை எடுங்க! இவளைச் சுட்டுத்தள்ளிட்டு நாம பாட்டுக்கு ஓலையை எடுத்துட்டுப் போயிட்டே இருப்போம்" என்றான்.

சரியெனத் தலையாட்டிய பூபாலன் பாக்கெட்டிலிருந்த சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்தார். கேசவனும் தனது உடையில் மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். இருவரும் ஒரே நேரத்தில் வர்ஷினியைக் குறி வைத்தனர்.

"வர்ஷினி! மரியாதையா வாளைக் கீழே போட்டுட்டு அப்படி ஓரத்துல மூலையில உக்காரு! இல்லை நாங்க சுட்டுடுவோம்" என்றான்.

பதிலே பேசாமல் வர்ஷினி செலுத்தப்பட்டவள் போல இவர்களை நோக்கி வந்தாள். இருவருக்கும் கை நடுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களது துப்பாக்கியைத் தட்டி விட்டது வர்ஷினியின் வாள். அவர்கள் சுதாரிப்பதற்குள் இரு முரட்டுத்தனமான கரங்கள் அவர்களது வாயைப் பொத்தி கைகளால் அடித்தன. தங்களைத் தாக்கியது யார் என்று பார்க்க முயற்சி செய்தார்கள். மிகவும் சிரமப்பட்டு கண்களைத் திறந்த போது எதிரே சங்கரனும், நவீனும் கோபாவேசமாக நின்றிருந்தனர். இவர்கள் எப்படித்தப்பினர்? கட்டி உருட்டி விட்டோமே? என மாமனும் மருமகனும் திணறினார்கள்.

"என்னடா பார்க்குற? நாங்க இன்னமும் சாகல்ல! எங்க கையைக் காலைக் கட்டிப் போட்டியே எங்க கிட்ட கத்தி இருக்கா இல்லையான்னு கூட நீங்க பார்க்கையே? சங்கரன் கொடியைப் பிடிச்சுட்டுத் தொங்கி வாயில கத்தியை வெச்சுக்கிட்டு கயித்தை அறுத்து விட்டான். அவன் தான் என்னையும் காப்பாத்தினான். நீ என்னடான்னா இங்க வர்ஷினியை துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்திக்கிட்டு இருக்க" என்றான் நவீன்.

"பேசாதே நவீன்! இவங்களைக் கட்டு": என்று கத்தினான் சங்கரன். அதன் படியே இருவரையும் தனித்தனியாக கட்டிப் போட்டனர். வர்ஷினியின் அருகில் நெருங்கினான் நவீன். அவளது கையிருந்த வாளை வாங்கினான்.

"நீ நல்லாவே வாள் சுத்துற வர்ஷினி! இனி இதை தள்ளி வெச்சுடு! முதல்ல நாம ரகசிய ஓலைகளைக் கண்டு பிடிச்சாகணும்" என்றான்.

"வந்து விட்டாயா செங்குன்றா! இவர்கள் என்னைத் தாக்க முயன்றார்கள் அதனால் தான் வாளெடுத்தேன்" என்றாள்.

"வர்ஷினி என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி என்னவோ மாதிரிப் பேசுற? ரொம்ப பயந்துட்டியா?" என்றான் நவீன்.

"பயமா எனக்கா? என் தோழி பொன்மகள் என்னுடன் இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும் செங்குன்றா?" என்றாள். திகைத்துப் போய் அவளையே பார்த்தான் நவீன். சங்கரன் ஜாடை காட்டினான்.

"பேடிக்கண்டா நவீன்! இவ இப்ப இந்த உலகத்துல இல்லா! ஏதோ ஒரு பிறவி நினைப்பு! எல்லாம் சரியாவும்" என்றான்

"பிறவியாவது நினைப்பாவது? வர்ஷினி என்ன ஆச்சு?" என்று அவளது முகத்தைத் தட்டினான். எதுவும் தெரியாமல் விழித்தாள் அவள். கேசவனையும் பூபாலனையும் ஆத்திரத்தோடு பார்த்தான் நவீன்.

"எங்களை அப்படிப் பார்க்காதேப்பா! அவளை நாங்க ஒண்ணும் செய்யல்ல! அவ தான் வாளெடுத்து கேசவன் கையை வெட்டுனா" என்றார் பூபாலன். அவர்களது பேச்சை நம்ப முடியாமல் கேசவனின் கைகளைப் பார்த்தான் நவீன். அதில் இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"நேரம் களையண்டா நவீன்! முதல்ல ரகசிய ஓலைகள்! பின்னே இவங்க" என்றான். அப்போது வர்ஷினி தனது வாளால் பூபாலனின் சட்டைப் பையைத் தட்டினாள். அதிலிருந்து ஒரு மரப்பந்து உருண்டது. அதன் ஒரு பக்கத்தில் இதயத்தின் படம் வரையப்பட்டிருந்தது அதனை தாவி எடுக்க முடியாமல் திணறினர் கேசவனும் பூபாலனும். சரியான நேரத்தில் காமிச்சுக் குடுத்துட்டா இந்த வர்ஷினி என்று அவளைத் திட்டினான் கேசவன்.

"இந்தப் பந்து தான் ரகசிய ஓலைகளுக்கான சாவின்னு நெனக்கிறேன். இவனுங்க முழிக்குறதைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது. இதை எங்கே போடுறது" என்று சொல்லி அந்தப் பந்தை எடுத்து சுற்றி சுற்றி வந்தான். வர்ஷினி அவர்களை நோக்கி வந்து அந்தப் பந்தை ஏறக்குறைய பிடுங்கினாள். நேரே ஆதவனின் சிலைக்கு அருகே சென்று அந்த நெஞ்சுத் துளையில் அதனை செலுத்தினாள்.

டடக்கென்ற ஓசையோடு தலைமாட்டில் இருந்த பலகை திறந்து கொண்டு ஓலைக்கட்டுக்கள் வெளி வந்தன. வர்ஷினியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதனை அப்படியே எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். நவீனும் சங்கரனும் வந்து ஓலைக்கட்டுகளை நோக்கினர். அதில் இருந்த வரை படங்கள் இவை உண்மையான ஓலை தான் என்பதை நிரூபித்தன. அவர்கள் மூவரும் அந்த ஓலைக்கட்டுகளில் ஆழ்ந்திருந்த அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் கேசவனும் பூபாலனும். பாறைகளில் தேய்த்து கை கட்டுகளை விலக்கிக் கொண்டார் பூபாலன். அதனை தன் வாய் மூலம் கடித்து துப்பினான் கேசவன். இப்போது பூபாலனின் கட்டுக்கள் முழுமையாக அவிழ்ந்து விட்டன. அவர் கேசவனது கட்டுக்களை அவிழ்த்து விட்டார். இருவரும் சைகை செய்து கொண்டு ஒரே நேரத்தில் துப்பாகியை நீட்டினர்.

"மரியாதையா அந்த ஓலைங்களை எங்க கிட்ட ஒப்படைச்சிடுங்க! நாங்க உங்களை அப்படியே விட்டுட்டுப் போயிடறோம். இல்ல நீங்க காலி" என்றான் கேசவன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top