• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 145: Kaalam Tharkaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம்: தற்காலம்

அத்தியாயம் 145:


திடுக்கிட்டுத் திரும்பினர் மூவரும். அவர்களைக் குறி வைத்தபடி இரண்டு துப்பாக்கிகள் நீண்டிருந்தன. மீண்டும் வாளை எடுத்துக்கொண்டாள் வர்ஷினி. கொஞ்சமும் அச்சமின்றி அவர்களை நோக்கிச் சென்றாள். நகர்ந்து வரும் வர்ஷினியைப் பார்ப்பதா? இல்லை ஓலைகளை வைத்திருக்கும் நவீனைப் பார்ப்பதா? இல்லை வர்ஷினியைத் தொடர்ந்து வரும் சங்கரனைப் பார்ப்பதா எனக் குழப்பம் அடைந்து மாறி மாறி குறி வைத்தனர் மாமனும் மருகனும். இவர்களின் அசைவுக்கேற்ப அவர்களும் நகர்ந்தனர்.

இப்போது கேசவனும் பூபாலனும் நகர்ந்து நகர்ந்து மீண்டும் ஆதவன் சிலைப்பக்கம் வந்து விட்டனர். வர்ஷினி நடுவிலும் நவீன் வனப்பேச்சியின் சிலையருகேயும் நகர்ந்து இருந்தனர். சங்கரனோ ஓரமாக அப்படியே நின்று விட்டான். இப்போது கேசவனின் துப்பாக்கி வர்ஷினியைக் குறி வைத்தது.

"நவீன்! இனியும் உங்களால எதுவும் செய்ய முடியாது! மரியாதையா அந்த ஓலைகளை கொடுத்துரு! இல்ல முதல்ல வர்ஷினி அப்புறம் சங்கரன் கடைசியா நீ சாகப்போறீங்க! தேவையில்லாம விளையாடாதே" என்று உறுமினான். அவனது முகம் பயங்கரமானதாக இருந்தது. இருவரும் மெல்ல நகர்ந்து கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் வர்ஷினி அவர்களை மிகவும் நெருங்கி விட்டாள். கேசவன் கையிலிருந்த துப்பாக்கி வெடித்தது. அதே நேரம் பூபாலனின் துப்பாக்கியும் வெடித்தது. வாள் மோதும் ஓசை கேட்டது. எங்கும் ஒரே புழுதிப் படலம். யாருக்கு என்ன அடிபட்டது என்றே தெரியவில்லை. அலறல் சத்தம் வேறு. அலறலில் இருந்து யாருக்கு அடிப்பட்டது அடி பட்டவர்கள் ஆணா பெண்ணா என எதுவும் தெரியவில்லை. சத்தம் அடங்கி புழுதிப்படலமும் அகன்ற பிறகு தான் காட்சிகள் கண்களுக்குத் தென்பட்டன.

நவீன் முதலில் பார்த்தது வனப்பேச்சியின் சிலையருகே கீழே கிடந்த வர்ஷினியைத்தான். வாள் ஓரத்தில் விழுந்திருக்க அதன் நுனியில் புதிய ரத்தம் இருந்தது.

"ஐயையோ வர்ஷினி! உன்னைக் கொன்னுட்டாங்களே! இனி நான் என்ன செய்வேன்" என்று கதறினான் நவீன். சங்கரன் அப்படியே சிலையாக நின்றான். நவீன் கீழே அமர்ந்து அவளை உலுக்கினான். அவன் பேசப் பேச ஏதோ சலனம் தெரிந்தது அவளிடத்தில். அப்போது தான் அவள் இறக்கவில்லை என்று உனர்ந்து கொண்டார்கள். அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை அப்படியே கிடத்தி விட்டு சுற்று முற்றும் நோக்கினார்கள். ஆதவன் சிலைருகே கீராருக்குப் பக்கத்தில் சுருண்டு விழுந்து கிடந்தான் கேசவன். அவனது நெஞ்சில் துப்பாக்கி துளைத்த அடையாளம். அவன் பக்கத்திலேயே துப்பாகியைக் கையில் பிடித்தவாறு அப்படியே முழங்காலிட்டு அமர்ந்திருந்தார் பேராசிரியர் பூபாலன்.

"நான் கேசவனை சுடல்ல! அந்தப் பொண்ணு வர்ஷினி எங்களை நோக்கி வந்தா அப்ப நாங்க நகர்ந்தோமா? அப்ப இந்த சிலை என் காலை தடுக்கி விட்டுடிச்சு! நான் கீழே விழப் பார்த்தேன். அதுக்குள்ள கேசவன் சுட்டுட்டான். நான் பேலன்ஸ் தவறி சுட்டுட்டேன் ஆனா அது கேசவன் மேல பட்டுடிச்சு! எல்லாத்துக்கும் இந்த சிலை தான் காரணம் என்று ஆதவனின் சிலையைக் காட்டினார்.

நவீனும் சங்கரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இப்போது மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தாள் வர்ஷினி. அவளது முகம் பாவம் மாறியிருந்தது இருந்தது. உடையெங்கும் ஆங்காங்கே ரத்தத் தீற்றுகள். கண் விழித்ததும் நவீனைப் பார்த்ததும் சற்றே அமைதியானாள் வர்ஷினி.

"நீங்க எப்படி வந்தீங்க நவீன்? உங்களை கட்டிப் போட்டு எங்கியோ தள்ளி விட்டுட்டாங்களா! நான் பயந்தே போயிட்டேன்" என்று சொல்லியபடி நவீனின் அருகில் வந்து நின்றாள் வர்ஷினி.

"அப்ப உனக்கு எதுவுமே நினைவில்லையா வர்ஷினி?" என்றான் நவீன் மெல்ல.

"நினைவில்லாம என்ன? உங்களைக் கட்டிப் போட்டது, நம்ம சாரை முதுகுத்தண்டுல அடிச்சது, எல்லாமே நினைவு இருக்கே?" என்றாள்.

இப்போதைக்கு அவளைக் குழப்ப வேண்டாம் என முடிவு செய்து கொண்டு பேராசிரியர் ராமநாதன் அருகே சென்றனர். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார் பூபாலன். அவரை அலட்சியம் செய்து ராமநாதனை நெருங்கினர்.

"சாருக்கு அடி பலம் தான். ஆனா பேடிக்கான் ஒண்ணும் இல்லா! நான் ஒரு மூலிகை கொடுக்காம். அப்போ விழிப்பு வரும்" என்று சொல்லி ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அதனை சிகரெட் லைட்டரில் காட்டி அதன் புகையை பேராசிரியரின் நாசிக்கு சற்று தள்ளிப்பிடித்தான். சில வினாடிகளில் கண் விழித்தார் பேராசிரியர் ராமநாதன். அவரால் எழுந்து அமரக் கூட முடியவில்லை. அந்த அளவு முதுகுத்தண்டில் அடி பட்டிருந்தது. வலியினால் முகம் கோணியது அவருக்கு. சுற்று முற்றும் நோக்கினார். அவரது கண்களில் குகையின் உள்ளே தெரிந்த காட்சிகள் பட்டதும் கண்களில் கலவரம் வந்தது.

"என்னப்பா நவீன்? இங்க என்ன நடந்தது? வர்ஷினிக்கு ஒண்ணுமில்லையே? இந்தக் கேசவன் இறந்து போயிட்டானா? பூபாலனுக்கு என்ன ஆச்சு?" என்று கேள்விகளை வீசினார் வலியையும் பொருட்படுத்தாமல்.

நடந்தவைகளை அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொன்னார்கள் நவீனும் சங்கரனும். அவர்கள் கைகளையும் கால்களையும் விடுவித்துக்கொண்டு வந்து பார்த்த போது வர்ஷினி வாளைக் கையில் ஏந்தியபடி கேசவனை நன்றாகவே காயப்படுத்தியிருந்தாள். சரியான நேரம் பார்த்து நுழைந்து வர்ஷினியைக் காப்பாற்றினோம் என்றார்கள். அவர்களுக்குப் புரியாதது அந்த வாள் எப்படி வர்ஷினியின் கைகளில் வந்தது? வாள் வீச்சை எப்போது கற்றுக்கொண்டாள் வர்ஷினி என்பது தான். அதோடு மரப்பந்தின் உதவியால் அவர்கள் எடுத்த ரகசிய ஓலைகளையும் காட்டினர். அதக் கண்டதும் வலி எங்கோ பறந்து போனது போல உணர்ந்தார் பேராசிரியர் ராமநாதன். அவைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார். படிக்கப் படிக்க அவரது முகத்தில் ஆச்சரியமும் கண்களில் நீரும் வந்தது.

"நவீன்! அகத்தியர் ஒரு மிகச் சிறந்த விஞ்ஞானியப்பா! இந்த ஓலைகளில் என்ன இருக்கு தெரியுமா? அவர் ம்யூட்டேஷனை எப்படிக் கண்டிரோல் செஞ்சாருன்னு எழுதியிருக்காருப்பா! எனக்கு படிக்க தெரியலைன்னாலும் இந்த படங்கள் அதை தெளிவா சொல்லுது. இவங்க சூப்பர் இம்போசிங்க் கூட செய்யல்லை. அதுக்கும் அட்வான்சா போயி ம்யூட்டேஷனே நடக்க விடாம செஞ்சிருக்காங்க. நேனோ பிரிவென்ஷன் டெக்னாலஜியை பயன் படுத்தியிருக்காரு ஆசான் அகத்தியர். இன்னைக்கு இன்னும் கூட அது ஆராய்ச்சி நிலையில தான் இருக்கு. ஆனா இவரு பல ஆயிரம ஆண்டுகளுக்கு முன்னாலயே இதுல வெற்றி அடைஞ்சிருக்காருன்னா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்ல" என்று அந்த ஓலைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார்.

"இப்ப நாம அடுத்து என்ன செய்யணும் சார்?" என்று கேட்டு அவரை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தான் நவீன்.

"இந்த ஓலைகளை நீங்க எடுத்துட்டுப் போறீங்களா சார்?" என்றான் சங்கரன்.

"இல்ல சங்கரா! இந்த ஓலைகள் இங்க தான் இருக்கணும். அது தான் அகத்தியருக்கு நாம செய்யுற மரியாதை. ஏன்னா நாம அறிவியல் பரம்பரையினர் தான் என்றாலும் நம்ம கூட வந்த இவங்க பேராசைக்காரங்களாவும் சுய நலக்காரங்களாவும் இருக்காங்க பாரு! அதனால ஆசான் சொன்ன அந்த பரம்பரை இன்னும் வரலைன்னு தான் நான் நினைக்கிறேன். இந்த ஓலைகளை மீண்டும் நாம இருந்த இடத்துலயே வெச்சிருவோம். ஆனா அந்த மரப்பந்து இங்கே இருக்காது. அதை எரிச்சிருவோம்." என்றார்.

அதிர்ந்தனர் மாணவர்கள்.

"ஏன் சார்? நாம அப்படி செஞ்சா நமக்குப் பிறகு யாருமே இதை எடுக்க முடியாமப் போயிருமே? அகத்தியரோட கிரேட் நெஸ் வெளிய தெரியாமயே போயிருமே?" என்றான் நவீன். அவனது குரலே கம்மி விட்டது.

"அவரோட கிரேட்னெஸ் தெரியறதை விட அவரது கண்டுபிடிப்பான இந்த அரிய மருந்து தவறாப் பயன்படாம இருக்குறதைத்தான் அவர் விரும்புவார். அவரோட அறிவை நிரூபிக்க பேட்டரி மற்றும் பறக்கும் பலூன் பத்தின ஓலைகளை நாம எடுத்துப்போம். அதுனால இப்ப எந்த ஆபத்தும் இல்ல. ஏன்னா ஏற்கனவே நாம அதை கண்டு பிடிச்சாச்சு. 50 வருஷத்துக்கு முன்னால வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சதை எங்க தமிழ் மாமுனிவர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால கண்டு பிடிச்சிட்டார்னு நாம பெருமையா சொல்லிக்கலாம். இப்போதைக்கு இது போதும்" என்றார்.

"ஆனா அந்த மரப்பந்து? அதை நாம அப்படியே கீராரோட சிலைக்குள்ள வெச்சிட்டு வந்தா என்ன?"

"தயவு செஞ்சு என்னை நம்பு நவீன். இந்த முடிவுகளை நானா எடுக்கல்ல! இந்த குகையில இருக்குற ஏதோ ஒரு சக்தி தான் எடுக்க வைக்குது. அந்த சக்தி தன் வர்ஷினியையும் காப்பாத்தியிருக்கு"

"என்ன சார் சொல்றீங்க? அறிவியல் ஆசாமியான நீங்களா இப்படிப் பேசறீங்க?" என்றான் நவீன்.

"அறிவியலால இயந்திரங்களை இயங்கும் விதத்தைத்தான் விளக்க முடியும் நவீன்,. ஆனா சில இயற்கையோட அற்புதங்களுக்கு விளக்கம் சொல்லவே முடியாது."

"சார்! எந்தா பறையுன்னு எனிக்கு புரியல்ல" என்றான் சங்கரன்.

"நல்லா யோசிச்சுப்பாரு சங்கரா! பூபாலன் கேசவன் ரெண்டு பேர்ட்டயும் துப்பாக்கி இருந்தது. ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்துல சுட்டிருக்காங்கன்னு நீங்க சொன்னீங்க அதுல ஒரு குண்டு கேசவனை துளைச்சது. அது பூபாலன் சுட்ட குண்டு. ஆனா கேசவன் சுட்ட குண்டு எங்கே? அது ஏன் யாரையுமே தாக்கல்ல? அது மட்டுமா? மிகச் சரியா துப்பாக்கியால சுடும் போது எப்படி ஆதவனோட சிலை தடுக்கி விட்டது? இது எல்லாத்துக்கும் மேல கரப்பாம் பூச்சியைப் பார்த்தாலே அலறுவா வர்ஷினி அவ எப்படி வாளை எடுத்து கேசவனை வெட்டுனா? அவளுக்கு அந்த பலத்தையும் தைரியத்தையும் யார் கொடுத்தது?" என்றார்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
அறிவியலால இயந்திரங்களை இயங்கும் விதத்தைத்தான் விளக்க முடியும் நவீன்,. ஆனா சில இயற்கையோட அற்புதங்களுக்கு விளக்கம் சொல்லவே முடியாது."
arumaiyana varikal sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top