• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 16: Thumbaip poo..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
தும்பைப் பூ...16.

சிவசாமி சிரித்து அப்போது தான் பார்க்கிறார்கள் என்பதால் இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சிரித்தால் அவர் வேறு ஒரு மனிதரைப் போலத் தோன்றினார்.

"நீ சொல்றது நல்ல ஐடியா தான். எனக்கும் குடோன் வாடகை கணிசமா மிச்சமாகும். ரொம்ப சந்தோஷம்மா" என்றார்.

"நன்றி சார்" என்றாள் வேறு என்ன பேச எனத் தோன்றாமல்.

"சரி! வேலையை எப்ப ஆரம்பிக்கப்போறீங்க?" என்றார் எடுத்த எடுப்பில்.

அவரது கேள்வியின் அர்த்தம் மூளைக்குள் சென்று அதன் பொருள் புரியவே உதயாவுக்கும் ஸ்வேதாவுக்கும் அரை நிமிடம் இடித்தது.

"வேலை ஆரம்பிக்கவா? அப்படீன்னா நீங்க இந்தக் காண்டிராக்டை எங்களுக்கே தரீங்களா?"

"ஆமா! நீங்க அதுக்குத்தானே வந்தீங்க?" என்றார்.

"சார்! ரொம்ப மகிழ்ச்சி! எங்கிட்ட சில வரைபடம் இருக்கு. அதுல குடோனுக்கானது ஆபீசுக்கானதுன்னு எல்லாமே வெச்சிருக்கேன். நீங்க அதைப் பார்த்துட்டு எந்த டிசைன் பிடிக்குதோ அதை செலெக்ட் பண்ணுங்க! வேற புது டிசைனும் வேணும்னாலும் வரைஞ்சு தரோம்" என்றாள் ஸ்வேதா மகிழ்ச்சியோடு.

"அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு எஸ்டிமேட் கொடுங்க! ஆபீஸ் ரொம்பப் பெரிசா வேண்டாம். மூணு கான்ஃபெரென்ஸ் ஹால், மட்டும் எக்ஸ்டிரா இருக்கட்டும். நான் டாக்டர்கள் கான்ஃபிரென்ஸ் நடத்த ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கேன்." என்றார்.

"எங்களைத் தவிர வேற யாரும் கொட்டேஷன் கொடுத்திருக்காங்களா சார்?"

"இல்ல! உங்க கொட்டேஷன்ல எனக்கு திருப்தி இல்லேன்னா தானே நான் அடுத்த ஆள்கிட்ட போகணும். நீங்க எனக்கு எப்ப கோட் கொடுப்பீங்க?"

"ஒரு வாரத்துல கொடுத்துடறோம். வரை படத்தைப் பொறுத்துத்தான் எங்க கோட் அமையும் அதனால உத்தேசமா ஒரு படத்தை செலெக்ட் ஓண்ணுங்க. அதை பேசா வெச்சு நாங்க கோட் கொடுக்கறோம்" என்றாள் உதயா. அவரும் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அவருக்குப் பிடித்த ஒன்றை செலக்ட் செய்தார்.

"இதை இப்படியே கட்ட வேண்டாம். எனக்குப் பிடிச்சா மாதிரி சில மாற்றங்கள் நான் சொல்லுவேன். அதையும் மனசுல வெச்சுக்கிட்டு கொட்டேஷன் கொடுங்க" என்றார்.

பியூனை அழைத்து மூன்று காப்பி சொன்னார். அப்போது சிவசாமிக்கு ஃபோன் வர அப்படியே உறைந்து போனார்கள் உதயாவும் ஸ்வேதாவும். நல்லவேளை வாசுதேவனோ ராஜகோபாலோ இல்லை. வேறு யாரோ ஒருவர் பேசினார். அவரிடம் மருந்து சப்ளை சம்பந்தமாகப் பேசி விட்டு இவர்களை ஏறிட்டார் சிவசாமி.

"இதைப்பார்ருங்க! எனக்கு வேலை சுத்தமா இருக்கணும். தரமாவும் இருக்கணும் அதே நேரத்துல எக்கச்சக்கமா செலவாகவும் கூடாது. இப்ப எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு வேலை ஆரம்பிச்ச அப்புறமா கூட அஞ்சு லட்சம் ஆயிடிச்சு வேணும்னு கேக்கக் கூடாது. புரிஞ்சதா?" என்றார் கண்டிப்பாக.

"சரி சார்" என்றனர் இருவரும் ஒரே குரலில்.

"உங்க கொட்டேஷனைப் பார்த்துட்டு எனக்குப் பிடிச்சிருந்தா பணமும் கட்டுப்படியாகும் போல இருந்தா தான் இந்த ஆர்டரை உங்களுக்கே தரா மாதிரி லெட்டெர் ரெடி பண்ணிக் கொடுப்பேன். முதல்ல நீங்க கட்ட ஆரம்பிச்சப்புறம் தான் நான் ஸ்டேஜ் பை ஸ்டேஜ் பணம் தருவேன்." என்றார்.

எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு அலுவலகம் வந்தடைந்தனர் தோழியர் இருவரும். மனம் உற்சாகத்திலும் சந்தோஷத்திலும் துள்ளியது. ஒரு நோட் புக்கையும் பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு விவாதிக்க ஆரம்பித்தனர்.

"இது நம்ம முதல் புராஜெக்ட் ஸ்வேதா! நல்லபடியா நாம செஞ்சு குடுத்தத்தான் இந்த ஃபீல்டுல நெனச்சு நிக்க முடியும். நமக்கு லாபம் கொஞ்சம் குறைஞ்சாலும் பரவாயில்ல தரம் தான் முக்கியம். அதை மனசுல வெச்சுக்கிட்டு பட்ஜெட் போடுவோம்" என்றாள் உதயா.

அதை முழுமையாக அங்கீகரித்தாள் ஸ்வேதா! முதலில் அவர் சொன்ன டிசைனுக்கு எத்தனை மூட்டை சிமிண்ட், எத்தனை லோடு செங்கல் மணல் போன்ற அடிப்படையான கட்டுமானப்பொருட்கள் தேவைப்படும் என கணக்கிட்டுக்கொண்டார்கள். இது தவிர குடோனுக்கு சிலாப்புகள் போட வேண்டும். ஏனெனில் மருந்துகளை பெட்டி பெட்டியா ஸ்டாக் செய்வார்கள் அதனை சிலாப் மீது வைப்பது தான் வழக்கம் என்பதால் அப்படி திட்டம் வகுத்துக்கொண்டார்கள்.நூற்றுக்கணக்கான லோடு மணலும் செங்கல்லும் தேவைப்படுமே என மலைத்தார்கள்.

"உதி! நாம இப்படி வெறுமே கணக்குப் போட்டு பிரயோஜனமில்ல! நமக்கு யாரு இதுங்களை சப்ளை பண்ணப் போறாங்க? அப்படி யாராவது டீலரை உனக்குத் தெரியுமா?"

"தெரியாமையா நான் இந்த தொழில்ல இறங்கினேன்? டவுன்ல ஒரு மொத்த ஸ்டாக்கிஸ்டு இருக்காரு. அவரு சிமிண்டு மணல் ஜெல்லின்னு எல்லாமே டீல் பண்றாரு. நான் நிறைய தடவை அவரைப் போய்ப் பார்த்திருக்கேன். என்னை அவருக்கு நல்லாவே தெரியும். நாம அவர்கிட்டயே கேப்போம்"

"எனக்கு ஒரு யோசனை தோனுது உதி! பட்ஜெட் ப்ரிப்பேர் பண்றதுக்கு முன்னால நாம அவரைப் போய்ப்பார்த்து நமக்கு என்ன விலைக்கு சப்ளை பண்ணுவாரு? எத்தனை நாள் கிரெடிட் கொடுப்பாருன்னு கேட்டுட்டு வந்துருவோம். அப்பத்தான் நாம கணக்குப் போடுறது ஈசி" என்றாள்.

பேசிய தோழியை மனம் நெகிழப் பார்த்தாள் உதயா. இவள் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்? என்ற கேள்வி எழுந்தது. சரியான நேரத்தில் ஸ்வேதாவை உதவியாக அளித்த கடவுளுக்கு மனதில் நன்றி சொன்னாள்.

"என்னடி முழிக்குற? போகலாமா?"

இருவரும் கிளம்பினார்கள். இவை எல்லாமே கம்பெனியின் கணக்கில் செலவு எழுத வேண்டும் என்பதால் ஒரே வண்டியிலேயே இருவரும் சென்றார்கள். வெயில் வாட்டி எடுத்தது. தலையில் துப்பட்டாவால் மூடிக்கொண்டாள் ஸ்வேதா. நெரிசலான தெருவுக்குள் நுழைந்தது ஸ்கூட்டி. கடை வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்லும் போதே இருவரின் முகமும் மாறியது. காரணம் வாசுதேவன் அந்தக் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். இவர்களைப் பார்த்ததும் அவசரமாக மீண்டும் உள்ளே சென்று முதலாளியிடன் எதையோ பேசி விட்டு நக்கலாக சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

உள்ளே செல்வதா வேண்டாமா என திகைத்து நின்றார்கள் இருவரும். அவர்களைக் கவனித்து விட்டு அழைத்தார் முதலாளி. மிகவும் பருமனாக நல்ல தொப்பையுடன் அமர்ந்திருந்தார் அவர்.

"என்னம்மா நல்லா இருக்கீங்களா? என்ன இவ்வளவு தூரம்?" என்றார் அன்பாக. இருவரும் அமர்ந்து கொண்டு தங்களது தேவைகளை விவரித்தனர். அவர் மேஜையை பென்சிலால் தட்டியபடி யோசித்தார்.

"இப்பத்தான் வாசு சார்! உங்களுக்கு உதவி செஞ்சா இனிமே என் கடைக்கே வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போறாரு. ஆனா அதை நான் பொருட்படுத்த மாட்டேன் கவலைப்பாடாதீங்க! இப்படி ஒவ்வொரு கஸ்டமருக்கும் பிடிச்சவங்க பிடிக்காதவங்கன்னு நான் பார்த்தேன்னா என் வியபாரம் என்னாகுறது? அதனால நான் உங்களுக்கு பொருள் சப்ளை பண்றேன். " என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் மிகப் பெரிய நிம்மதிப் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது இருவரிடமிருந்தும்.

"சைட் எங்கே? முதல்ல எத்தனை மூட்டை இறக்கணும்? அட்வான்ஸ் எவ்வளவு தருவீங்க?" என்றார்.

"அட்ரஸ் தரோம். முதல்ல 25 மூட்டை இறக்குங்க! அதுவும் நாங்க சொன்னப்புறம் இறக்குனாப் போதும். நீங்க எங்களுக்கு க்ரெடிட் தருவீங்கன்னு நம்பித்தான் வந்தோம்" என்றாள் உதயா.

"நான் கிரேடிட் குடுக்குறது உண்டு தான். ஆனா அதுக்கு நீங்க எங்கிட்ட செக்யூரிட்டி டெபாசிட் கட்டணும். ஏன்னா நாளைக்கே உங்க கிட்ட பணம் இல்லைன்னா நான் அதுல இருந்து கழிச்சுக்குவேன். எல்லா கம்பெனியுமே எங்க கிட்ட டெப்பாசிட் கட்டித்தான் கிரெடிட்ல எடுத்துக்குறாங்க"

"டெபாசிட் கட்டினதுக்கு ரசீது தருவீங்களா?

"கட்டாயம் கொடுப்போம்! எங்க கிட்ட நீங்க தொடர்ந்து ரெண்டு ஆண்டுகளுக்கு மேல பொருள் எடுத்தீங்கன்னா டெப்பாசிட்ல இருந்து குறைச்சுக்கிட்டே வருவோம். அஞ்சு வருஷத்துல அந்தத் தொகை முழுவதும் கழிஞ்சிடும். இது தான் எங்க ஸ்கீம்."

"நாங்க இன்னும் குறைஞ்சது 50 ஆண்டுகளுக்காவது இந்த பிசினஸ்ல இருக்கணும்னு நினைக்கறோம். சரி இப்ப நாங்க டெப்பாசிட் கட்டலைன்னா எங்களுக்கு சப்ளை பண்ண மாட்டீங்களா?"

"நான் அப்படிச் சொல்லுவேனாம்மா? ஆனா பொருள் சப்ளை பண்றதுக்கு முன்னாஅடியே 50% தொகை எங்க கைக்கு வந்திரணும். செக் வாங்க மாட்டோம் டிடியா எடுத்துரணும். இல்ல ஹாட் கேஷ் கொடுக்குறதானாலும் சரி. அதே மாதிரி பொருள் போய்ச் சேர்ந்ததும் மீதிப் பணம் கைக்கு வந்துரணும். இப்படித்தான்மா நாங்க பல ஆண்டுகளா வியாபாரம் செஞ்சுட்டு வரோம்" என்றார்.

"நல்ல கொள்கை தான். நாங்க பேங்க் லோன் போட்டுத்தான் கட்டப்போறோம். அவங்க ஒவ்வொரு ஸ்டேஜாப் பார்த்துத்தான் பணம் கொடுப்பாங்க! முதல்லயே கொடுக்க மாட்டாங்களே?

"அப்ப நீங்க டெப்பாசிட் கட்டிருங்க! பொருள் எந்தத் தடங்கலும் இல்லாம உங்களுக்கு சப்ளை ஆகுறதுக்கு நான் கேரண்டி" என்றார்.

தோழிகள் இருவர் மனமும் ஒரே விஷயத்தைத்தான் சொன்னது. செக்யூரிட்டி டெப்பாசிட் கட்டுவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை என்பது தான் அது.

"சரி சார்! நாங்க டெப்பாசிட்டே கட்டிடறோம். எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க. நாளைக்கே கட்டிடறோம்" என்றாள் உதயா.

"எங்க கடை பேர்ல டிடி எடுத்துருங்க! விவரம் நான் தரேன். டிடி கமிஷன் நீங்க தான் கொடுக்கணும். சம்மதமா?"

"உம் ஓகே! தொகை எவ்வளவுன்னு சொல்லுங்க!" என்றாள் உதயா மீண்டும். எப்படியும் ஐம்பதனாயிரம் கேட்பார் என அவள் மனம் கணக்குப் போட்டது. வைப்பில் இருக்கும் தொகை மொத்தம் இரண்டு லட்சம். அதிலிருந்து ஐம்பதினாயிரத்தை எடுத்துக் கொடுத்து விடலாம் என எண்ணிக்கொண்டாள்.

"சாதாரணமா நான் புதுக்கம்பெனிங்களுக்கு 8 லட்ச ரூவா டெப்பாடிட் கேக்குறது தான் வழக்கம். ஆனா நீங்க ரொம்பத் தெரிஞ்சவங்க பெண்களாவும் இருக்கீங்க அதனால அஞ்சு லட்சம் கட்டுங்க போதும்" என்றார்.

அவர் சொன்ன தொகையைக் கேட்டு அயர்ந்து போய் அமர்ந்திருந்தனர் தோழியர் இருவரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top