• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 17: Kuvalaip poo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
குவளைப் பூ...17

அலுவலகத்தில் நாற்காலிகளில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த இரு தோழிகளும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். டவுனில் கட்டுமானப்பொருட்கள் மொத்தமாக சப்ளை செய்யும் கடைக்காரர் ஐந்து லட்ச ரூபாய் டெப்பாசிட்டாக கேட்டதற்கு யோசித்துச் சொல்கிறோம் எனப் பதில் கூறி விட்டு வந்து விட்டனர். இப்போது அதைப் பற்றிய சிந்தனையில் தான் மூழ்கியிருந்தனர் இருவரும். மனதுள் கணக்குப் போட்டாள் உதயா.

"பாட்டி மொத்தம் ஐந்து லட்சம் கொடுத்தார் என்னுடையது இரண்டு லட்சம் இருந்தது, மொத்தம் ஏழு லட்சம். அதில் அலுவலகத்துக்கு அட்வான்ஸ் மூன்று லட்சம் கொடுத்தாகி விட்டது. அது தவிர வாடகை இதர செலவினங்கள் என கையிருப்புக் கரைந்து இப்போது மூன்று லட்ச ரூபாய் இருக்கிறது. ஆனால் மேலும் இரண்டு லட்ச ரூபாய் வேண்டுமே? அதுவும் போக இருக்கும் பணத்தை மொத்தமாக எடுத்துக்கொடுத்து விட்டால் பிறகு அவசரம் என்றால் என்ன செய்ய? டெப்பாசிட் கட்டாமல் பொருளை எடுக்கவும் முடியாது. வங்கியில் கடன் வாங்கினாலும் அவர்கள் கட்ட ஆரம்பித்த பிறகு தான் பணம் கொடுப்பார்கள். சிவசாமி முதலிலேயே கறாராகச் சொல்லி விட்டார் முன் பணம் கேட்கக்கூடாது என்று. என்ன செய்ய?' என்று சிந்தைனையில் ஆழ்ந்திருந்தாள்.

"ஏன் உதி? உங்க பாட்டி கிட்டயே மறுபடியும் கேட்டுப்பார்த்தா என்ன?"

"அவங்க கிட்ட இருக்காது ஸ்வேதா! அவங்க பாவம் வயசானவங்க! தன்னோடகடைசி காலத்துக்குன்னு சேர்த்து வெச்சிருக்குறதை ஏற்கனவே நான் வாங்கிட்டு வந்துட்டேனேன்னு வேதனைப் பட்டுக்கிட்டு இருக்கேன். இனியும் அவங்களை தொந்தரவு செய்யக் கூடாது. " என்றாள்.

"உம் அப்ப உங்க அப்பா?"

"நல்லாச் சொன்ன போ! ஏற்கனவே தங்கிட்டப் பணம் இல்லைன்னு சொன்னாரு அவரு. இப்பத்தானே எங்க அக்கா கல்யாணத்தை முடிச்சாங்க. அதுக்கு வாங்குன கடனே இருக்கு. இப்ப அவங்களை எப்படிக் கேக்குறது?" என்றாள் விரக்தியாகி.

"உதி! நாம ஒருத்தரை மறந்தே போயிட்டோம்! உங்க அத்தான் ரவி இருக்காரே? அவரு பெரிய பிசினஸ் மேன் தானே? அவரு நெனச்சா அஞ்சு லட்சம் கொடுக்க முடியாதா?" என்றாள் ஸ்வேதா உற்சாகமாக.

"அவருக்கு நான் பிசினஸ் செய்யுறதே பிடிக்கல்ல ஸ்வேதா! அப்படி இருக்குறப்ப எனக்கு எப்படிப் பணம் கொடுப்பாரு?" என்றாள் மேலும் நொந்து போனவளாக.

"நீ ஏன் அப்படி நினைக்குற? ரெண்டு வருஷம் டயம் இருக்கு இல்ல? அதுக்குள்ள நாம எப்படியாவது ஜெயிச்சுரலாம். இப்ப ஒரு உதவியாக் கேளேன். சும்மாக் கூடத் தர வேண்டாம். கடனாக் கேளு. வங்கியில இருந்து பணம் வந்ததும் மூணு இல்ல நாலு தவணையில திருப்பிக் கொடுத்துடறோம்னு சொல்லேன்" என்றாள் நம்பிக்கையூட்டும் படியாக.

"கேக்கவே ரொம்பக் கூச்சமா இருக்குடி"

"இப்படியெல்லாம் கூச்சம் பார்த்தா வேலை நடக்காது. இப்பவே ஃபோன் பண்ணி எங்கியாவது வரச் சொல்லு! நேர்ல பார்த்து விவரத்தைச் சொல்லிப் பணம் கேளேன். எனக்கென்னவோ கட்டாயம் உதவி செய்வாருன்னு தான் தோணுது" என்றாள்.

சரி அதையும் தான் செய்து பார்க்கலாம் என நினைத்துக்கொண்டு ரவிக்கு ஃபோன் செய்தாள். நாலைந்து ரிங்க் போன பிறகு தான் எடுத்தான்.

"என்ன தொழிலதிபர் அம்மாவுக்கு திடீர்னு என் ஞாபகம்?" என்றான் எடுத்த எடுப்பிலேயே கிண்டலாக.

அவன் அப்படி வெடுக்கெனக் கேட்பான் என்பதை எதிர்பார்த்திருந்தாலும் சட்டென என்ன பதில் சொல்ல என யோசித்தாள்.

"ஒண்ணுமில்ல ரவி! நீ எப்படி இருக்கேன்னு...?"

"பொய் சொல்லாதே உதயா! உனக்கு அது வராது! அதனால என்ன வேணும்? எதுக்கு என்னை கூப்பிட்ட சொல்லு! எனக்கு வேலையிருக்கு" என்றான் அவசரமாக.

என்ன சொல்வது என்று யோசித்தவளுக்கு வேறு வழி ஒன்றும் தோன்றாததால் உண்மையையே சொல்லி விடுவோம் என முடிவு செய்து கொண்டுபேசினாள்.

"ரவி! எனக்கு இப்ப ஒரு சின்ன பிரச்சனை! உன்னை நேர்ல பார்த்துத்தான் சொல்ல முடியும்! மதியம் லன்சுக்கு ஹோட்டலுக்கு வந்துடறியா?" என்றாள்.

"நீயே கூப்பிடும் போது வராம இருப்பேனா? வரேன். சரியா ஒன்றரை மணிக்கு நாம வழக்கமாப் போற ஹோட்டலுக்கு வந்திடு" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய் விட்டது உதயாவுக்கு. ஃபோனிலேயே இப்படிப் பேசுகிறானே? நேரில் என்னென்ன சொல்வானோ? பேசாமல் போகாமல் இருந்து விட்டால் என்ன? என்று யோசித்தது அவள் மனம்.

"என்ன சொன்னாரு ரவி?" என்றாள் ஸ்வேதா.

"ம்ச்! எனக்கு நம்பிக்கையே இல்லடி! பார்ப்போம். மதியம் 1:30க்கு வரச் சொல்லியிருக்காரு." என்றாள்.

"இதைப்பாரு உதி! இதை விட்டா நமக்கு வேற வழியே இல்ல! அவரை எப்படிக் காக்கா பிடிப்பியோ எனக்குத் தெரியாது. ஆனா பண உதவி செய்ய வெச்சிடு" என்றாள். அதன் பிறகு சிறிது நேரம் தோழிகள் இருவரும் வரைபடத்திலும் பட்ஜெட் போடுவதிலும் ஆழ்ந்தனர். வேலையில் ஈடுபட்ட போதும் மனதின் ஓரத்தில் பணம் கிடைத்தால் தானே வேலை இல்லையெனில் இவற்றால் என்ன பயன்? என்று தோன்றிக்கொண்டே இருந்தது உதயாவுக்கு. சரியாக ஒரு மணிக்கு பதைபதைக்கும் வெயிலில் கிளம்பினாள் உதயா. அவள் எப்போது திரும்பி வருவாள் எனத் தெரியாததால் மதியமே வீட்டுக்குச் சென்று விடுவதாகக் கூறி கிளம்பி விட்டாள் ஸ்வேதா.

தனது ஸ்கூட்டியை ஹோட்டல் பார்க்கிங்கில் போட்டு விட்டு உள்ளே நுழைந்தாள். ஹோட்டலின் உள்ளே குளுமையாக இருக்க உடலுக்கு இதமாக இருந்தது. அதனை அனுபவித்தவாறு கண்களை சுழல் விட்டாள். ம்ஹூம் ரவி வந்திருக்கவில்லை. ஏமாற்றத்தோடு மேஜையில் அமரப்போன உதயாவை ஹோட்டல் பணியாள் ஒருவன் அணுகினான்.

"நீங்க தானே மிஸ் உதயா? இதை உங்க கிட்டக் கொடுக்கச் சொல்லி மிஸ்டர் ரவி சங்கர் கொடுத்தாரு" என்று சொல்லி ஒரு உறையை கொடுத்தான்.

எதற்கு இப்படிச் செய்கிறான்? ஃபோன் செய்திருக்கலாமே? எதுவும் விளங்காமல் உறையைப் பிரித்தாள்.

"ரூம் நம்பர் 25க்கு வா" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. பக்கென்று நெஞ்சை பயம் கவ்வியது. எதற்கு நம்மை ஹோட்டல் ரூமுக்கு வரச் சொல்லியிருக்கிறான்? அவன் மனதில் என்ன இருக்கிறது? போவதா? வேண்டாமா? என சின்ன பட்டி மன்றம் மனதில் நடத்திக்கொண்டிருக்கும் போதே ரவியிடமிருந்து ஃபோன் வந்தது.

"என்ன அந்த பேரர் உங்கிட்ட கவரைக் கொடுக்கலியா?"

"உம் குடுத்தான்"

"அப்ப வராம ஏன் கீழேயே நின்னிக்கிட்டுஇருக்கே! எனக்கு சீக்கிரம் போகணும் உதயா! நீ உடனே வந்தா பேசிட்டு கிளம்பிடுவேன். உனக்கும் சேர்த்து லன்ச் ஆர்டர் பண்ணியாச்சு! " என்றான் வேகமாக.

மாமன் மகன் தானே? என்னை மீறி என்ன செய்து விட முடியும் அவனால் என்று மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டாம் மாடியில் இருந்த அந்த அறைக்கதவைத் தட்டினாள்.

"உள்ள வா உதி" என்றான் அன்பாக. அதுவே கலவரமாக இருந்தது அவளுக்கு.

அங்கே இருந்த சாப்பாட்டு மேஜையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ரவி. சாப்பாட்டுத்தட்டுகளும் உணவுகளும் டைனிங்க் டேபிளில் எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நோட்டமிட்டபடியே உட்கார்ந்தாள்.

"எனக்கு செம பசி! வா! சாப்பிடுவோம். அப்புறமா நீ உன் பிரச்சனையைச் சொல்லு" என்றான்.

என்ன சாப்பிட்டோம் என்பதே தெரியாமல் சாப்பிட்டு முடித்தாள் உதயா. கை கழுவிக்கொண்டு சோஃபாவில் சாய்ந்தான். "உம் இப்ப சொல்லு உனக்கு என்ன பிரச்சனை?" என்றான் பெரிய மனிதன் தோரணையில்.

சற்றே எரிச்சல் வந்தது சமாளித்துக்கொண்டு கேட்டாள்.

"நான் என் பிரச்சனையைச் சொல்றது இருக்கட்டும். நீ ஏன் என்னை ஹோட்டல் ரூமுக்கு வரச் சொன்ன? வீடு இருக்கும் போது நீ ஏன் இங்க மதிய உணவு சாப்பிட்ட?" என்றாள்.

"ஓ! உனக்கு அந்த சந்தேகம் வந்துட்டுதா? ஹூம்! நேரம் தான். இதைப் பாரும்மா உதயா எனக்கு சல்லாபங்களிலோ உல்லாசத்துலயோ ஈடுபட நேரமும் இல்ல மனசும் இல்ல! முறையா தாலி கட்டி உன்னை என் மனைவி ஆக்கிக்கிட்டப்புறமும் கூட உன் விருப்பம் இல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன். அதை முதல்ல புரிஞ்சிக்கோ!" என்றான் கடுமையாக.

"அப்ப ஏன் ரூம் யாருக்காக..." என்று துண்டு துண்டாகக் கேட்டாள்.

"இதுக்கு நான் ஏன் உனக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியல்ல! இருந்தாலும் சொல்றேன். என் கம்பெனிக்கு டெல்லியில இருந்து சில அதிகாரிங்க வந்திருந்தாங்க! அவங்க கூட பிசினஸ் பேசத்தான் நான் இந்த ரூமை எடுத்தேன். 12 மணிக்கெல்லாம் அவங்க பேசி முடிச்சுட்டுப் போயிட்டாங்க! நீயும் ஃபோன் பண்ணினியா? அதான் வெயில்ல போகாம இங்கேயே உன்னையும் பார்த்திரலாம்னு உன்னை இங்கே வரச் சொன்னேன். இன்னும் ஏதாவது கேள்வி இருக்கா?" என்றான்.

"இல்லை சாரி ரவி! நான் தான் தப்பா நெனச்சுட்டேன்"

"சரி சரி! உன் பிரச்சனையைச் சொல்லு"

வாசுதேவனைப் பற்றியும் ராஜ கோபாலைப் பற்றியும் கவனமாகக்த் தவிர்த்து விட்டு டெப்பாசிட் கட்டத் தேவையான பணம் வேண்டும் என்பதை மட்டும் சொன்னாள்.

"நீ அஞ்சு லட்ச ரூபா முழுசா குடுக்க வேண்டாம் ரவி! மூணு குடுத்தாப் போதும். ரெண்டு எங்கிட்ட இருக்கு. அதையும் கடனாத்தான் கேக்குறேன். நீ எப்படி சொல்றியோ அப்படித்திருப்பிக் குடுத்துருவேன். " என்றாள் நம்பிக்கையோடு.

"எங்க கம்பெனியில இன்னொரு கம்பெனிக்கு பணம் கடனாக் குடுக்குற பாலிசியே இல்லையே உதயா" என்றான் நிதானமாக.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ravi ivalo straight forwarda irukan...........udhayavin muyarchi tholviya:unsure::unsure::unsure: nice sis:):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top