• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 31: Jagaranda poo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
ஜெகரண்டா பூ ....31

பெண் தொழிலாளர்களிடம் பேசி அவர்களை கம்பெனியில் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி அமைத்து அவர்களுக்கு நல்ல சம்பளம் உண்ண உணவு தேவையான ஓய்வு இவைகளைக் கொடுக்கவும் அனைவரும் மகிழ்வோடு வேலை செய்தார்கள். கந்த சாமியும் ஜெகனும் தான் மற்றவர்களிடம் ஒட்டாமல் தனியாக இருந்தனர். அதிலும் கந்த சாமி ஒரு படி மேலே போய் குடித்து விட்டே சைட்டுக்கு வருவதும் அங்கே ஒரு இடத்தில் துண்டை விரித்துத் தூங்குவதுமாக இருந்தான். அவனுக்குத் துணை ஜெகன். இருவரும் சாப்பாட்டு நேரம் போக மற்ற நேரங்களில் உறங்குவதும், சீட்டாடுவதுமாக காலம் கழித்தனர். ஆனால் சம்பளம் மட்டும் முறையாகப் பெற்றுக்கொண்டனர். ஒரு மேஸ்திரியின் வேலையான கலவை போடுதல், வேலைகளைப் பிரித்துக் கொடுத்தல் என எல்லாவற்றையும் முதலில் உதயாவும் ஸ்வேதாவும் செய்தார்கள். பிறகு இருப்பதிலேயே மூத்தவளான வேணி அதனை கற்றுக்கொண்டு திறம்பட வேலை செய்தாள். இப்போது குடோன் கட்டிடம் நெஞ்சளவு உயர்ந்து விட்டது. பக்கத்திலேயே ஆபீசுக்கும் அஸ்திவாரம் தோண்டி அந்த வேலைகளும் போய்க்கொண்டிருந்தன. மொத்தத்தில் சொல்லப்போனால் ஜெகன் கந்தசாமியால் எந்த பாதிப்பும் நேரிடையாக இல்லை.

அன்று கந்த சாமி அதிகமாக தண்ணி போட்டு விட்டு வந்து மதிய உணவின் போது கலாட்டா செய்து கொண்டிருந்தான். பெரிய பெருமாள், வினோத் என இளைஞர்களைக் குறி வைத்துப் பேசினான்.

"டேய்! பெருமாளு! நேத்து நீ சிமிண்டு கலக்கும் போது மம்பட்டி பட்டு கால் விரல்ல அடிபட்டுக்கிட்ட இல்ல? அதை கவனிச்சாங்களா உங்க மேடம்? இன்னைக்கும் நீ இப்படி வேலைக்கு வந்திருக்கியே?" என்றான்.

"இன்னைக்கு எனக்கு சிமிண்டு குழைக்குற வேலை வேண்டாம்னுடிச்சு வேணியக்கா! நானு பிளானைப் பார்த்து ஷெல்ஃபுங்க ரெடி பண்ணணும்னு சொல்லிடிச்சு! அது உக்காந்து செய்யற வேலை தானே? எனக்கு ஒண்ணும் கஷ்டமில்ல" என்றான்.

"எவண்டா இவன்? அடிபட்டிருக்கு என்னால வேலை செய்ய முடியாதுன்னா அவங்களால என்ன செய்ய முடியும்? என்னைப் பாரு! வேலையே செய்யாம சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். நீயும் அப்படியே இருடா! ஜெகன் சொல்றதைக் கேட்டா நல்ல காலம் நமக்குத்தான் புரியுதா?" என்றான்.

பெரிய பெருமாள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை என்றாலும் அன்றைய அவவது வேலை திருப்திகரமாக இல்லை. இந்தப் பேச்சு வார்த்தையை கவனித்து விட்டாள் ஸ்வேதா. அதனை உதயாவிடம் கூறினாள்.

"இவனை இப்படியே விட முடியாதுடி உதி! சிவா சார்ட்ட சொல்லி வேலையை விட்டுத் தூக்கிடுவோம். அப்ப ஜெகனுக்கும் ஒரு அடி கொடுத்தா மாதிரி இருக்கும்" என்றாள்.

"அது ரொம்ப ஈசி ஸ்வே! ஆனா நான் வேற ஒண்ணை யோசிச்சுக்கிட்டு இருக்கேன். அது மட்டும் நடந்துட்டா கந்தசாமி நம்ம பக்கம் வந்திருவான். "

"நீ எதுக்கு கந்த சாமியை பெரிய மனிஷன் ஆக்குற? இவன் இல்லைன்னா இன்னொருத்தன் மேஸ்திரியா இருக்க மாட்டானா? நம்ம வேணியே சூப்பரா செய்யுறாங்க" என்றாள் ஸ்வேதா.

"கரெக்டு தான் ஸ்வே! ஆனா இன்னைக்கு பெரிய பெருமாளை ஷெல்ஃபு டிசைன் செய்யச் சொன்னேன். அதை அவன் அறையும் குறையுமா செஞ்சிருக்கான். நாளைக்கே இன்னொரு ஆள் வந்து அவனையும் அந்த ஜெகன் கெடுத்துட்டான்னா? நம்ம கையில ஹோல்ட் வெச்சிக்கணும் ஸ்வே! அதனால எனக்கு ஒரு திட்டம் தோணுது"

"என்ன?"

"எல்லாமே எங்க பாட்டி கொடுத்தா ஐடியால இருந்து தான் வந்தது தான். நாம நேரா போய் கந்தசாமியோட மனைவியைப் பார்ப்போம். அவ கிட்ட பேசுவோம். அவளால ஏதாவது செய்ய முடியாதா?"

"நீ என்ன எதிர்பார்க்குற?"

"முதல்ல கந்தசாமி கிட்ட நீ இப்படியே வேலை செய்யாம இருந்தா உனக்கு வேலை போயிரும்னு சொல்லுவோம். அதுக்கு அவன் எப்படி ரியாக்ட் பண்றானு பார்ப்போம். இன்னைக்கே அதைச் சொல்லிட்டு அவன் வீட்டுக்கும் போவோம் என்ன? கூட ஜெயாவையும் கூட்டிட்டுப் போவோம்" என்றாள் உதயா.

அதன் படியே அன்றைய காலை டீ நேரத்தின் போது அனைத்து தொழிலாளர்கள் முன்னிலையிலும் கந்த சாமியை அழைத்தாள் உதயா.

"இதைப் பாருங்க கந்த சாமி! நாங்க ரொம்ப நாளா பொறுமையாப் பார்த்துட்டு இருந்தோம். உங்களால நல்லா வேலை செய்யுறவங்களும் கெட்டுப் போறாங்க! அதனால இந்த வாரத்துக்கு அப்புறமா நீங்க வேலைக்கு வர வேண்டாம்" என்றாள்.

இந்த திடீர்த்தாக்குதலை எதிர் பாராத கந்த சாமி நிலை குலைந்து போனான். அவன் திகைப்பிலிருந்து மீளு முன்னர் சில வார்த்தைகள் பேசி விட வேண்டும் என தீர்மானித்து பேசுவதற்குள் ஜெகன் குறுக்கிட்டான்.

"கன்சாமி! இவங்களால உன்னிய வேலையில இருந்து தூக்க முடியாதுடா! முதலாளி தானே உன்னை சிபாரிசு செஞ்சாரு? அவரு கிட்டப் போயி இவங்க இன்னான்னு சொல்லுவாங்க? வேலை செய்யிலைன்னு சொன்னா நீங்க இன்னா பார்த்துக்கினா இருந்தீங்கன்னு அவரு கேக்க மாட்டாரு?" என்றான். அதைக்கேட்டதும் தைரியம் வந்து விட்டது கந்தசாமிக்கு.

"பார்த்தியா ஜெகன் என்ன சுகுரா சொல்லிக்கினான். உங்களாலே என்னை ஒண்ணியும் செய்ய முடியாது மேடம்! நீங்க உங்க வேலையை பாருங்க நான் என் வேலையைப் பாக்குறேன்" என்று தெனாவட்டாக சொல்லி விட்டு ஜெகனுடன் சீட்டாடப் போய் விட்டான்.

"நாம இவனை டிஸ்மிஸ் பண்ணிட்டு அப்புறமா சிவா சார்ட்ட சொல்லிக்கலாம். என்ன திமிரு பார்த்தியா இவனுக்கு?" என்றாள் ஸ்வேதா.

"அவசரப்படாதே ஸ்வே! இப்ப அந்த ஜெகன் கூட சேர்ந்துக்கிட்டு இப்படிப் பேசுறான். இன்னைக்கு மதியமே நாம அவன் வீட்டுக்குப் போவோம். அப்புறமாப் பாரேன். ஆனா ஜெயாவைக் கூட கூட்டிக்கிட்டுப் போக வேணாம். தொழிலாளர்கள் மத்தியில நாம அவன் வீட்டுக்குப் போனது தெரிய வேண்டாம்னு நினைக்கறேன்"

"உனக்காக வரேன் உதி! இவன் இப்படி இருக்கான்னா இவ பொண்டாட்டி எப்படி இருப்பாளோ? சரி வா! ரெஜிஸ்டர்ல வீட்டு அட்ரஸ் இருக்கும். எடுத்துட்டு வரேன். நீ ரெடியா இரு. இப்பப் போனாத்தான் மதிய சாப்பாட்டுக்குள்ள வர முடியும்" என்று சொல்லி விட்டுச் சென்றாள். ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வண்டி அருகில் நின்றிருந்தாள் உதயா. அந்த இடத்திலிருந்து கட்டிட வேலை நடை பெறுவது நன்றாகத் தெரிந்தது. ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பாக செங்கற்களை சுமந்து சிமிண்ட் கலவை போட்டு என வேலை செய்து கொண்டிருந்தனர். தன்னை மறந்து அவற்றை ரசித்தபடி நின்றிருந்தாள் உதயா. மனதில் மெல்லிய பெருமை உண்டானது.

"எனக்குப் பிடிச்ச தொழிலுக்கே வந்துட்டேன். இதுல நான் கால் ஊனி நின்னு காமிக்கணும். அப்பத்தான் எனக்குப் பெருமை. என்னை நம்பி வேலை கொடுத்த சிவசாமி சாருக்கும் பெருமை. ஸ்வேதா பக்க பலமா இருக்கா! அதனால தான் என்னால இவ்வளவு தூரம் சமாளிக்க முடியுது" என்று எண்ணியபடி பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது பெரிய பெருமாள் மண்ணைக் குழைத்துக்கொண்டே ஏதோ சொல்ல மற்ற தோழிலாளர்கள் அனைவரும் சிரித்தனர். அவர்களோடு சேர்ந்து சிரித்த வேணி "சரி சரி வேலையைப் பாருங்க" என்று சொன்னது இது வரை கேட்டது. மீண்டும் பெருமையில் நெஞ்சு மகிழ்ந்தது.

"என்னடி நின்னுக்கிட்டே தூங்கறியா? அட்ரஸ் எடுத்துட்டேன். பக்கத்துல தான். நேரே போயி ரைட் கட் பண்ணி சின்ன தெருவுக்குள்ள போகணும். உம் வண்டி எடு" என்றாள்.

வண்டி ஸ்வேதா சொன்னபடி அந்த சிறிய தெருவில் கடைசியில் இருந்த வீட்டின் முன் நின்றது. ஆஸ்பெஸ்டஸ் கூரை வேய்ந்த வீடு. ஒரே ஒரு அறைதான் இருக்கும் போல. கதவில் திரை தொங்கிக்கொண்டிருந்தது. வாசலில் அழைப்பு மணி கூட இல்லை.

"வீட்ல யாருங்க?" என்றாள் உதயா.

"யாரு என்ன வேணும்?" என்று கேட்டபடி வந்து நின்றாள் நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி. அவளைப் பார்த்தால் கோபக்காரி போலத் தோன்றியது.

"நீங்க கந்த சாமியோட மனைவியா?"

"ஆமா! நீங்க யாரு?"

"நாங்க கட்டுற கட்டடத்துல தான் இப்ப அவரு மேஸ்திரியா இருக்காரு" என்றாள் ஸ்வேதா.

"அப்படியா ரொம்ப சந்தோசம் உள்ள வாங்க! வீடு கொஞ்சம் கலீஜா இருக்கும். இருந்தாலும் பரவாயில்ல வாங்க" என்று அழைத்தாள். திரையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள். எதிர்பார்த்ததை விட வீடு நீட்டாகவே இருந்தது. ஒரு கட்டில், அதற்குப் பக்கத்திலேயே தையல் மிஷின் இருந்தது. அறையின் ஒரு மூலையில் மேடை அமைக்கப்பட்டு அடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அறையில் சுவரில் ஒரு ஷெல்ஃப் வைக்கப்பட்டு அதில் குழைந்தைகளின் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. குறைந்த இடத்திலும் அழகாக மேனேஜ் செய்திருந்தாள் அந்தப் பெண்மனி.

"உக்காருங்க மேடம்" என்று கட்டிலைக் காட்டினாள். இருவரும் அமர்ந்தனர்.

"உங்க பேரு என்னம்மா?"

"ஆறுமுக செல்வி! சுருக்கமா செல்வின்னு கூப்பிடுவாங்க! பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிருக்காங்க! நீங்க என்ன சாப்பிடுறீங்க? காப்பி வாங்கியாரவா?" என்றாள் நிறுத்தாமல்.

"முதல்ல நீங்களும் உக்காருங்க! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் நாங்க வந்தோம்!" என்றாள் உதயா. செல்வியின் முகம் சற்றே பயத்துக்குப் போயிற்று.

"என்ன விஷயம் மேடம்? எங்க வீட்டுக்காரரு ஏதாவது தப்புப் பண்ணிட்டாரா? பொம்பளை விவகாரம் ஏதாச்சும்...? ஆனா அவரு குடிப்பாரே கண்டி அப்படிப் போக மாட்டாரே?" என்றாள் படபடப்பாக.

"நீங்க ஏதேதோ கற்பனை செய்யாதீங்க செல்வி! விஷயம் சீரியஸ் தான் ஆனா பெண் விவாகரம் இல்ல"

"சொல்லுங்க மேடம்"

ஸ்வேதாவும் உதயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இதைப் பாருங்க செல்வி! ஆம்பிளைங்க மட்டுமே செஞ்சுக்கிட்டு இருந்த தொழிலுக்கு நாங்க ரெண்டு பெண்கள் வந்திருக்கோம். அது நிறையப் பேருக்குப் பிடிக்கல்ல! அதனால எங்களுக்கு காண்டிராக்டே கிடக்க விடாமப் பண்னணும்னு நெனச்சாங்க! ஆனா கடவுள் புண்ணியத்துல சிவசாமி சார் காண்டிராக்ட் கொடுத்தாரு. ஆனா அதை உங்க கணவர் கெடுக்க பார்க்குறாரு" என்றாள் ஸ்வேதா.

அதிர்ந்து நோக்கினாள் செல்வி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top