• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 34: Petunia poo...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 34:

திங்கட் கிழமை அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் உதயா. அவளது மனம் சோகத்திலும் கோபத்திலும் மூழ்கிருந்தது. ஞாயிற்றுக் கிழமை நடந்தவைகளை உற்ற தோழியான ஸ்வேதாவோடு பகிர்ந்து கொள்ளாவிட்டால் அவளுக்கு மன சரியாகாது போலிருந்தது. அதனால் சைட்டுக்குப் போகாமல் அலுவலகத்துக்கு அவளை வரச் சொல்லியிருந்தாள். ஒன்பது மணி வாக்கில் ஸ்வேதா உள்ளே வந்தாள். அவளது முகமும் குழப்பத்தைக் காட்டியது.

"என்னடி நடந்தது? என்னவோ பேசணும்னு சொன்ன? வீட்டுல சண்டையா?"

"ம்ச்! எல்லாமே பழைய கதை தான் ஸ்வே! மறுபடியும் எங்கம்மா எங்க அத்தை எல்லாரும் என்னை இந்தத் தொழில்ல இருக்கக் கூடாது உடனே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றாங்க." என்று ஆரம்பித்து ரவி சொன்னது வரை சொல்லி முடித்தாள்.

"ரவி அப்படியேவா சொன்னாரு?"

"ஆமா ஸ்வே! அதுல தான் நான் ரொம்ப அப்செட் ஆயிட்டேன். எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் அவங்க கேக்கல்ல"

"அவங்க என்ன தான் சொல்றாங்க?"

"எங்க அத்தைக்கு நான் அவங்க வீட்டு மருமகளா வரது பிடிக்கல்லன்னு நினைக்கறேன் ஸ்வே! ஏன்னா அவங்க தான் ரொம்பப் பேசிட்டாங்க! நான் பிசினஸ்ல இருந்தா கல்யாணத்துக்குப்புறமும் இப்படித்தான் ரவுடிங்க வீட்டு வாசல்ல வந்து கத்துவாங்களாம். அது அவங்களுக்கு ரொம்ப கௌரவக் குறைச்சலாம். நீ இந்த பிசினசை விட்டுடுன்னு சொல்றாங்க. அதுக்கு ரவியும் ஆமா சாமி போடுறாரு. "

"எப்படி கட்டிக்கிட்டு இருக்குறதைப் பாதியில விட முடியும்னு கேக்க வேண்டியது தானே?"

"அதுக்கும் அவரு பதில் ரெடியா வெச்சிருக்காருடி! அவரோட ஃபிரெண்டு ஒருத்தர் கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ்ல இருக்காராம். அவரு இதை முடிச்சுக் குடுப்பாருன்னு சொல்லிடாரு. எல்லாமே முன்னக் கூட்டியே திட்டமிட்டு செய்யறாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு" என்றாள்.

தோழில் அருகில் வந்து தலையைத் தடவிக்கொடுத்தாள் ஸ்வேதா.

"நீ என்ன முடிவு பண்ணியிருக்க உதி? அவங்க கிட்ட அதை சொல்லிட்டியா?"

கண்ணீரோடு அவளை நிமிர்ந்து பார்த்தாள் உதயா.

"நான் தீர்மானமா இந்தத் தொழில்ல தான் நான் இருப்பேன்னு சொல்லிட்டேன். அதுவும் இப்பக் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னும் தெளிவா சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு வருஷம் அவங்க எனக்காகக் காத்திருந்தா இருக்கட்டும். இல்லைன்னா அவங்க அவங்க தலைஎழுத்துப் படி நடக்கட்டும்" என்றாள். தனது கரங்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"அதுக்கு உங்க அத்தான் ரவி என்ன சொன்னாரு?"

எதுவுமே சொல்லாம விருட்டுன்னு எழுந்து போயிட்டாரு. எங்க அம்மாவையும் அப்பாவையும் திட்டிட்டு மாமாவும் அத்தையும் கூடக் கெளம்பிட்டாங்க! ஒரு வாய்த்தண்ணி கூட எங்க வீட்டுல குடிக்கல்ல ஸ்வேதா! என்னால உறவே முறிஞ்சு போயிடுமோன்னு பயமா இருக்கு. எங்க அம்மா அப்பா வேற அவங்க போனதுக்கப்புறம் என்னை திட்டித் தீர்த்துட்டாங்க! நான் வீட்டுக்கு அடங்காத பெண்ணாம். என்னால அவங்களுக்கு அவமானமாம் இப்படியே பேசிக்கிட்டு இருந்தாங்க! என்னால தாங்கவே முடியல்லடி! அப்படி நான் என்னடி தப்பு செஞ்சிட்டேன்? எவன் கூடயாவது ஓடிப்போயிட்டேனா? இல்லை கண்ட கண்ட நேரத்துல வீட்டுக்கு வந்தேனா? டிஸ்கோ கிளப்புன்னு ஊர் சுத்தினேனா? என்னை ஏன் யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க?" என்று அழுதாள்.

அவள் அழுது ஓயட்டும் என்று மெல்ல அவளது முதுகைத் தட்டிக்கொடுத்தாள் ஸ்வேதா. சற்று நேரம் பொறுத்து நிமிர்ந்து அமர்ந்தாள் உதயா.

"ஐ ஆம் சாரி உதயா! என்னால என்னை கண்டிரோல் பண்ண முடியல்ல!" என்றாள்.

"பரவாயில்ல உதி! பெஸ்ட் ஃபிரென்டுக்கு இதைக் கூட நான் செய்யல்லைன்னா எப்படி? முதல்ல நீ கண்ணைத் துடை! நீ தேவையில்லாமக் கவலைப்படாதே! உங்க மாமாவும் அத்தையும் தானே இப்படிப் பேசுனாங்க? ரவி எதுவும் சொல்லலையே? அப்படீன்னா நீ அவர் மனசுல இருக்கேன்னு தான் அர்த்தம். இதுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்கறியா?"

"சொல்லு"

"நீயும் கொஞ்சம் இறங்கி வா! அவங்களும் கொஞ்சம் விட்டுக் கொடுக்கட்டும். அதாவது நீ உறுதியா ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம்னு நிக்காதே! கடவுள் புண்ணியத்துல நம்ம தொழில் நல்லாவே பிக்கப் ஆயிட்டிருக்கு. சிவசாமி சாரோட ஆபீசும் குடோனும் எப்படியும் எட்டு மாசத்துல ரெடியாயிரும். அதுக்கப்புறம் கல்யாணம் செஞ்சுக்கோயேன். அதுல என்ன இருக்கு? ரெண்டு வருஷத்துக்குப் பதிலா எட்டு மாசம் தானே? அவங்க பொறுத்துக்க மாட்டாங்களா?" என்றாள்.

மனதில் சட்டென ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாள் உதயா. நமக்கு ஏன் இந்த யோசனை தோன்றவில்லை என்று தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

"முதல்ல நீ உங்க அத்தானுக்கு ஃபோன் செஞ்சு பேசு! அவர்ட்ட இந்த விஷயத்தைச் சொல்லு! சந்தோஷப்படுவாரு!" என்றாள்.

அதன்படியே ஃபோனைச் சுழற்றினாள் அவன் எடுக்கவே இல்லை. மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து கால் செய்தாள் அப்போதும் அவன் எடுக்கவில்லை. மனம் மீண்டும் சோர்ந்து போனது அவளுக்கு.

"ரவி எடுக்கவே மாட்டேங்குறாரே என்ன செய்ய? அவருக்கு அத்தனை கோபமா என் மேல?" என்றாள். குரல் தழுத்ழுப்பாக இருந்தது.

"என்னடி நீ? சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் மூட் அவுட் ஆகுற? அவரு ஏதேனும் முக்கிய மீட்டிங்குல இருப்பாரு. அதான் எடுக்கல்ல! அரை மணியில அவரே கூப்பிடுவாரு பாரேன்" என்றாள்.

சற்று நேரம் வேலை சம்பந்தமானவைகளைப் பேசி விட்டு சைட்டுக்குக் கிளம்ப எத்தனித்தார்கள். அப்போது ஃபோன் வர ஆவலுடன் எடுத்தாள் உதயா. ஆனால் அது அத்தான் ரவி இல்லை. வேறு ஏதோ புது நம்பர்.

"வேற யாரோ கூப்பிடுறாங்க!" என்று சொல்லியபடி ஃபோனை எடுத்தாள்.

"ஹலோ உதயா கன்ஸ்டிரக்ஷனா?"

"ஆமாங்க"

"நான் பள்ளிக்கரணையில இருந்து அர்ச்சனா பேசுறேன். இப்ப நான் உங்க சைட்டுல தான் நின்னுக்கிட்டு இருக்கேன். நீங்க இங்க வர முடியுமா?" என்றாள். இது என்ன புது விவகாரம் என எண்ணிக் கொண்டாள் உதயா.

"என்ன விஷயம் மேடம்? எங்க ஒர்க்கர்ஸ் ஏதேனும் பிரச்சனை செஞ்சாங்களா?"

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல! நான் ஒரு பெரிய ஐ டி கம்பெனியில வேலை செய்யறேன். என் கணவரும் அப்படித்தான், நாங்க பள்ளிக்கரணையில புதுசா ஆறு செண்டு பிளாட் ஒண்ணு வாங்கியிருக்கோம். அது சம்பதமாதான் பேசணும் மேடம்! நீங்க ஆபீஸ் மட்டும் தான் கட்டுவீங்களா இல்லை வீடும் கட்டித்தருவீங்களா?" என்றாள் அர்ச்சனா.

குபீரென மகிழ்ச்சிப் பூ பூத்தது உதயாவினுள். ஒரு வேலையை முடிப்பதற்குள் அடுத்த புராஜெக்ட். மனசு கும்மாளமிட்டது.

"நாங்க வீடும் கட்டித்தருவோம் மேடம். நீங்க பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நாங்க வந்துடறோம். " என்று சொல்லிவிட்டு ஸ்வேதாவையும் அழைத்துக்கொண்டு சைட்டுக்கு விரைந்தாள். ஸ்வேதா வண்டியை எடுக்கும் முன் வேணிக்கு ஃபோன் செய்து பேசினாள் உதயா.

"வேணி! சைட்டுல அர்ச்சனான்னு ஒரு அம்மா இருக்காங்களா?"

"ஒரு பொண்ணு வந்திருக்கு மேடம்! ஆனா அவங்க பேரு என்னன்னு தெரியலையே?"

"சரி சரி! அவங்களை சேர் போட்டு உக்கார்த்தி வையுங்க! வினோதையோ பெரிய பெருமாளையோ அனுப்பி கூல் டிரிங்க் எதுனா வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க" என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டு ஸ்கூட்டரில் ஏறினாள்.

"என்ன எங்கிட்ட எந்த விவரமுமே சொல்லக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டியா? யாருடி அர்ச்சனா? ஃபோன்ல என்ன சொன்னாங்க?" என்றாள் ஸ்வேதா.

அப்போது தான் இன்னமும் ஸ்வேதாவிடம் விஷயத்தைச் சொல்லவில்லை என்பது உறைத்தது அவளுக்கு. வண்டி போய்க்கொண்டே இருக்க அதன் வேகத்துக்கேற்பப் பேசினாள் உதயா.

"இப்ப ஃபோன் பண்ணாங்களே அர்ச்சனான்னு ஒருத்தங்க அவங்க பள்ளிக்கரணையிலேயே பிளாட் வாங்கியிருக்காங்களாம், நாம வீடுகளும் கட்டித்தருவோமான்னு கேட்டாங்க! அது தான் நாம அவங்களைப் பார்க்கப் போயிட்டு இருக்கோம்" என்றாள்.

"சூப்பர் உதி! இந்த புராஜெக்டும் நமக்குக் கெடச்சதுன்னா எவ்வளவு நல்லா இருக்கும்? பார்க்கலாம்" என்றபடி வண்டியை விரட்டினாள். சரியாகப் பதினைந்தாவது நிமிடம் பள்ளிக்கரணையில் இருந்தனர். அங்கே சேரில் அமர்ந்தபடி கந்தசாமியுடன் அர்ச்சனா பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு அப்படியே நின்றார்கள் ஸ்வேதாவும் உதயாவும்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
kandasamy thirunthitano:unsure::unsure::unsure::unsure::unsure:nice epi sis:):):):):)ravi konjamavathu udhayava support pannalam
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
கந்தசாமி மனம் மாறி இருப்பான்
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Super update.. Ravi en ipadi irukiran.. Udhaya vai azhavaikiran.. Swetha oru nalla friend..
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
அடுத்த அத்தியாயம் போடுவீர்களா
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
அடுத்த அத்தியாயம் போடுவீங்க என்று சொன்னால் தினமும் பார்த்து ஏமாற மாட்டேன் அன்று பார்த்து கொள்ளோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top