• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 37: koththamallip poo...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
கொத்தமல்லிப் பூ 37:

எப்போது எப்படி சைட்டுக்கு வந்தாள்? எப்போது வீட்டுக்குப் போனாள் என்றே உதயாவுக்குத் தெரியவில்லை. அவளது மனம் முழுக்க அந்த ஹோட்டலின் அருகில் பார்த்த காட்சி தான் நிறைந்திருந்தது. மனதில் பல எண்ணங்கள் குழப்பமாக நிலவின. ஓயாமல் எதை எதையோ சிந்தித்துக்கொண்டே இருந்தாள்.

"நாம் தான் ராஜகோபாலைப் பற்றியும் ஜெகனைப்பற்றியும் ரவியிடம் சொல்லவே இல்லையே? பிறகு எப்படி அவனுக்கு இவர்களைத் தெரியும்? அவர்கள் பேசுவதைப் பார்த்தால் மிகவும் நெருக்கமாக இருப்பது போலத் தோன்றுகிறதே? சரி ராஜ கோபாலாவது ஏதோ தொழில் முறையில் பழக்கம் எனக் கொள்ளலாம். ஆனால் ஜெகன்? அவனை எப்படி ரவிக்குத் தெரியும்? ஒருவேளை ரவி தான் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவாக இருப்பானோ? வீட்டில் நிலவும் குழப்பம், சைட்டில் நடக்கும் குழப்பம் இவை எல்லாவற்றையும் நடத்தி வைக்கும் முக்கிய டைரக்டர் ரவி தானா? அப்படி ஏன் அவன் செய்ய வேண்டும்? என்னைப் பழி வாங்கவா? அப்படி நான் என்ன செய்தேன்?" என்று தனது அறையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தாள்.

தன் கண்ணலிருந்து இது வரை கண்னீர் வரவில்லை என்பதே அவளுக்குப் பெருமையாக இருந்தது. இதுவே ஒரு வருடத்துக்கு முன்னால் என்றால் அழுது அழுது தலைவலியையே வரவழைத்துக்கொண்டிருப்பாள். ஒரு வருடம் என்ன? இப்போதே கனஸ்டிரக்ஷன் தொழில் ஆரம்பித்த புதிதில் கூட அழவில்லையா? ஆனால் இப்போது மனதில் உறுதி வந்துள்ளது. எதையும் சாமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் வந்து விட்டது. ஆனால் அதற்காக மனம் வேதனைப் படாமலா இருக்கும்? அதுவும் நாம் உயிருக்கு உயிராக நினைக்கும் அத்தான் ரவி இப்படிச் செய்தான் என நினைக்கும் போது மனம் மிகவும் கஷ்டப்படுகிறது. தேள் கொட்டினால் போல இருக்கிறது. இனி என்ன செய்ய? " என்று யோசித்தபடி படுத்திருந்தாள்.

எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியவில்லை. செல்ஃபோன் அடித்த போது விழித்துக்கொண்டாள். மணி ஒன்பது தான் ஆகியிருந்தது. இரவு உணவு கூட சாப்பிடவில்லை என்பதை காலியான வயிறு இரைச்சல் போட்டுக் காட்டியது. எண்ணைப் பார்த்தாள் புது எண். சரி எடுப்போமே? என்று எண்ணி எடுத்தாள்.

"ஹலோ! மேடம் நான் முரளி கிருஷ்ணா பேசுறேன். உங்க கசின் ரவியும் நானும் ரொம்ப ஃபிரெண்ட்ஸ்! அவன் தான் உங்க நம்பர் கொடுத்தான்." என்றது ஒரு ஆண் குரல் எடுத்த எடுப்பில்.

"ஓ! சரி! எனக்கு எதுக்கு ஃபோன் பண்றீங்க?"

"நீங்க கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வெச்சிருக்குறதாகவும் அதை விக்கப் போறதாகவும் ரவி எங்கிட்ட சொன்னான். நானும் அந்தத் தொழில்ல தான் இருக்கேன். ஆனா கோயம்புத்தூர்ல இருக்கேன். எனக்கு சென்னையிலயும் கிளை திறக்க ஆசை! அதான் உங்க கம்பெனி கெடச்சா அதை அப்படியே விலைக்கு வாங்கிக்கலாமேன்னு பார்த்தேன்" என்றான்.

கோடைக் காலத்தில் வெப்பம் ஏறுவதைப் போல மெல்ல கோபம் ஏறிக்கொண்டே வந்தது.

"இவன் யார் என் கம்பெனியை விலை பேச? நான் விற்கப்போவதாக ரவியிடம் யார் சொன்னது? பேசிக்கொண்டிருந்தார்களே ஜெகனும் ராஜ கோபாலும் அவர்கள் சொல்லியிருப்பார்களோ? அப்படித்தான் இருக்கும். என்ன திமிர்?" என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

"ஹலோ மேடம்! லைன்ல இருக்கீங்களா?"

"உம்! இருக்கேன்!"

"நீங்க என்ன சொல்றீங்க மேடம்? நான் நல்ல விலைக்கு வாங்கிக்க தயாரா இருக்கேன்"

"சாரி சார்! என் பிசினசை நான் விக்குறதா இல்ல! ரவி தப்பா சொல்லியிருக்காரு உங்க கிட்ட!"

"நஷ்டத்துல ஓடுற பிசினசை விக்க ஏன் தயங்கறீங்க மேடம்? அதைப் பார்த்துக்கத் தான் ஆண்கள் நாங்க இருக்கோமே? நீங்க ஏன் கஷ்டப்படணும்?"

"ஹலோ மிஸ்டர்! அளவுக்கு மீறிப் பேசாதீங்க! என் பிசினஸ்ல நஷ்டம் வரல்ல! அப்படியே வந்தாலும் எதை எப்படி சாமாளிக்கணும்னு எனக்குத் தெரியும். சென்னையில தொழில் ஆரம்பிக்க உங்களுக்கு ஆசையா இருக்குன்னு என் பிசினசை விலக்குக் கேக்கறீங்களே? எனக்குக் கூடத்தான் கோயம்புத்தூர்ல பிசினஸ் செய்யணும்னு எண்ணம் இருக்கு. அதுகாக உங்க பிசினசை விலைக்குக் கேட்டா நீங்க சும்மா இருப்பீங்களா?" என்றாள் ஆத்திரதோடு.

"தேவையில்லாம பேசாதீங்க! ரவி சொல்லித்தான் நான் ஃபோன் பண்ண்ணினேன். இஷ்டமில்லைன்னா சொல்லிட்டுப் போங்களேன். அதுக்கேன் இப்படிப் பேசணும்?"

"ஐ ஆம் சாரி! என் பிசினசை நான் விக்குறதா இல்லை" என்றாள் அழுத்தமாக.

மறு முனை டக்கென்று கட் செய்து விட்டது.

"டிஃபன் சாப்பிட வாயேண்டி" என்ற அம்மாவின் குரலுக்கு "எனக்கு பசிக்கல்லை" என்ற சொற்களை பதிலாக்கி விட்டு மீண்டும் படுத்தாள். ஏசி ஓடிக்கொண்டிருந்த போதும் வியர்த்தது அவளுக்கு.

"சந்தேகமே வேண்டாம்! ரவி தான் என் என்னை பிசினசை முடக்க நினைக்கிறான். என்னிடம் அதை நேருக்கு நேர் சொல்ல தைரியமில்லாமல் கோழையைப் போல பிறரை ஏவி விடுகிறான். இனியும் சும்மா இருந்தால் என்னை மிகவும் கேவலமாக நினைத்துக்கொள்வான். எனக்குக் கல்யாணமே வேண்டாம். அதுவும் ரவியோடு வேண்டவே வேண்டாம். அவனால் தானே குடும்பத்தில் இத்தனை குழப்பம்? தெளிவாக அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். எனக்கு ரவி அத்தானைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமில்லை என்று. அவர்களுக்கு அவசரம் என்றால் வேறு பெண்களா இல்லை?"

இந்த எண்ணம் ஓடும் போதே நெஞ்சில் வலித்தது. இருந்தும் அடக்கிக்கொண்டாள்.

"இப்போது காதல், ஆசை பாசம் இதற்கெல்லாம் நேரமும் கிடையாது மனமும் இருக்கக் கூடாது. இப்போது என் கவனம் முழுவதும் என் தொழில் மீது தான் இருக்க வேண்டும். இவர்கள் முன்னால் நான் மிகபெரிய தொழிலதிபராக ஆகிக்காட்ட வேண்டும். என் பிசினசையா விலைக்குக் கேட்கிறார்கள்? நான் யார் என்பதைக் காட்டுகிறேன்" என்று தனக்குத்தானே சூளுரைத்துக்கொண்டாள். ரவி ஏதோ செய்தான் என்பதற்காக நான் ஏன் சாப்பிடாமல் இருக்க வேண்டும்? ரவி உண்மையிலேயே என்னை விரும்பியிருந்தால் எனக்காக காத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டு விட்டு இப்படி சதி செய்து...சே! அவன் இப்படி இருக்கும் போது நான் மட்டும் ஏன் அவனை நினைத்து சாப்பிடாமல் இருக்க வேண்டும்." என்று நினைத்தவள் லைட்டைப் போட்டாள். முகத்தைக் கழுவி சீராக்கிக் கொண்டு கீழே இறங்கினாள்.

அம்மா கொடுத்த சப்பாத்தியை நன்றாக சாப்பிட்டாள். காவ்யாவோடும் அம்மாவோடும் சிரித்துப் பேசினாள்.

"என்னடி இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க? கல்யாணத்துக்கு ஓகேவா?" என்றாள் அம்மா.

இது தான் சமயம் என்பதை உணர்ந்தாள் உதயா.

"அம்மா! இப்படி உக்காரு! அப்பா நீங்களும் கவனமாக் கேளுங்க" என்றாள் சீரியசான குரலில்.

அவளது முகத்தைப் பார்த்தபடியே இருவரும் டைனிங்க் டேபிளில் அமர்ந்தனர்.

"என்னால இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்க முடியாது. இதை நான் சும்மா பேச்சுக்காக சொல்லல்ல! தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க! முன்னாடியே நான் சொன்னா மாதிரி எனக்கு ரெண்டு வருஷம் டயம் வேணும். அதுக்குள்ள ரவிக்கு அவசரம்னா அவனை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க! எனக்கு ஆட்சேபணை இல்ல" என்றாள்.

அம்மா எழுந்து விட்டாள்.

"என்னடி உளற்ர?"

"நான் உளறல்ல! எனக்கு என் தொழில் முக்கியம். அதுல நான் பெரிய ஆளா வரது முக்கியம். அதுக்கப்புறம் தான் கல்யாணம் குடும்பம் குழந்தை எல்லாம். இதை நான் உங்க கிட்ட பல தடவை சொல்லியாச்சு. ஒவ்வொரு தடவையும் சரி சரின்னு சொல்வீங்க! ஆனா உங்க அண்ணனைப் பார்த்ததும் பழையபடி கல்யாணம் செஞ்சுக்க சொல்வீங்க! இந்த தடவையே கடைசியா இருக்கட்டும்" என்றாள் கடுமையாக.

"அப்ப நீ கல்யாணம் பண்ணிக்காம! தினம் ஒரு ரவுடியோட வம்பு வளர்த்துக்கிட்டு இருப்ப! அதை நாங்க கேக்கக் கூடாது அப்படித்தானே?" என்றார் அப்பா.

"அப்பா! அந்த கந்தசாமி ரவுடி இல்ல! அவன் இப்ப எவ்வளவு மாறிட்டான் தெரியுமா? இன்னைக்குக் காலையில எங்கிட்ட மன்னிப்புக் கூடக் கேட்டான். அதை ஒரு காரணமா சொல்லாதீங்கப்பா! நான் வேணும்னா அவனை உங்க கிட்டயே சொல்ல சொல்லட்டுமா?"

"இது என்ன சினிமாவா? உடனே மனசு மாறுறதுக்கு? அப்படியே இருந்தாலும் கந்தசாமி இல்லையா குப்புசாமி தகறாரு பண்ணப் போறான். இதைப் பாரு உதயா! நீ கறாராப் பேசுறதால நானும் கறாராப் பேசுறேன். நம்ம குடும்பத்துல யாருக்குமே நீ கட்டிடத்தொழில்ல இருக்குறது பிடிக்கல்ல! கண்டபடி பேசுறாங்க! அதனால அதுக்கு முழுக்குப் போட்டுட்டு ஒழுங்க மரியாதையா ரவியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அவனுக்கு பிசினஸ்ல ஹெல்ப் பண்ணு! இல்ல"

சட்டென வந்த கோபத்தில் "இல்லன்னா என்ன பண்ணுவீங்கப்பா?" என்றாள்.

"இந்த வீட்டுல உனக்கு இடமில்ல! நீ தாராளமா வெளிய போயி உன் இஷ்டப்படி கூத்தடிக்கலாம். நானோ என் குடும்பத்தாரோ வந்து உன்னை ஏன்னு கேக்க மாட்டோம்" என்றார்.

அதிர்ந்து போன இதயத்தை சமாளிக்க பெரிதும் பாடுபட்டாள் உதயா.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Tholil munnera vendum engira udhaya vin nookam thavarillaiye.. Atharkku uruthunaiya illama ipadi pesarangale..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
இந்த வீட்டுல உனக்கு இடமில்ல! நீ தாராளமா வெளிய போயி உன் இஷ்டப்படி கூத்தடிக்கலாம். நானோ என் குடும்பத்தாரோ வந்து உன்னை ஏன்னு கேக்க மாட்டோம்" என்றார்.
you too appa nu than ketkanam sis nice epi sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top