• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 38: Theththip poo...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
தெத்திப் பூ 38....

அப்பா இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் என்று புரிந்து கொண்டு விட்டாள் உதயா. அவளுக்கு அழுகை பொங்கினாலும் கட்டுப்படுத்திக்கொண்டாள். இந்த உலகமே எனக்கு எதிராக இருக்கிறது. ஆனால் பார்த்து விடுகிறேன் ஒரு கை. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடினானே பாரதி அவன் கண்ட புதுமைப் பெண் நான் என்று நிரூபிக்கிறேன். என் தொழிலில் நிமிர்ந்து நிற்கும் போது அனைவரும் என்னைப் பாராட்டாமல் போக மாட்டார்கள். என் குடும்பம் என்னைத் தேடி வரும். அப்போது பார்த்துக்கொள்கிறேன் இவர்களை" என்று தீர்மானித்துக்கொண்டு எழுந்தாள்.

"என்ன பதில் சொல்லாமப் போற?"

"என்னோட பொருளயெல்லாம் பேக் பண்ணப் போறேன்" என்றாள் அமைதியாக.

"என்ன திமிருடி உனக்கு? படிச்சிட்டோம் நாலு பேரை வெச்சு வேலை வாங்கறோம்குற திமிருல பேசுறியா? பேக் பண்ணப் பேறேன்னா வீட்டை விட்டுப் போறேன்னு அர்த்தமா?" என்றாள் அம்மா கோபமாக.

"எனக்கு வேற வழியே தெரியலியேம்மா? என்னால என் பிசினசை விட முடியாது. அதைப் புரிஞ்சிக்கோங்க! நீங்க தான் என்னை போகச் சொன்னீங்க! நானா போகல்ல!" என்றாள்.

"என்னங்க! இவ என்ன இப்படிப் பேசுறா? ஏதாவது சொல்லுங்களேன்" என்றாள் அம்மா பதட்டமாக.

அப்பா அமைதியாக இருந்தார்.

"அப்பா! இப்படி அமைதியா இருக்காதீங்கப்பா எனக்கு பயமா இருக்கு! அவளைப் போக வேண்டாம்னு சொல்லுங்க" என்றாள் காவ்யா.

"எல்லாரும் கொஞ்சம் பேசாம இருங்க! உதயா முடிவு செஞ்சிட்டா தனியாப் போறதுன்னு. அவ அதைச் செய்யட்டும். வெளிய போனாத்தான் நம்ம அருமை அவளுக்குத் தெரியும். போகட்டும் விடுங்க" என்றார் அமைதியாக.

அம்மா உதயாவிடம் ஓடி வந்தாள்.

"இதைப் பாருடி உதயா! ஊரு உலகத்துல இப்படி எங்கேயும் நடக்குமா? ஒரே ஊர்ல அம்மாவும் அப்பாவும் இருக்கும் போது மக தனியா இருக்கான்னா நம்ம குடும்பத்தைப் பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்கடி? உங்க மாமாவும் அத்தையும் என்ன சொல்லுவாங்க? ரவி என்ன சொல்லுவான் அதை யோசிச்சுப் பார்த்தியா? உன்னை யாருடி கல்யாணம் பண்ணிப்பாங்க?" என்றாள் அம்மா அழுகையினூடே.

உதயாவுக்கும் கண்ணீர் வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டாள்.

"என்னை மன்னிச்சிரும்மா! இனிமேயும் எனக்கும் ரவிக்கும் கல்யாணம் நடக்குன்ற நம்பிக்கை எனக்கு இல்ல! அவனால எனக்கு எத்தனை கஷ்டம்? இப்ப வீட்டை விட்டுப் போறது தான் ஒரே வழின்னா நான் அதையும் செஞ்சு தானே பார்க்கணும்?" என்றாள்.

"உதி! நீ எங்கேடி போவ? இந்த பறந்த உலகத்துல உனக்குன்னு யாரு இருக்கா? எங்கே போயி தங்குவ? என்ன சாப்பிடுவே? எனக்கு பயமா இருக்கு! வேணும்னா எங்க மாமியார் வீட்டுல தங்கிக்குறியா?" என்றாள் காவ்யா.

"வேண்டாம் காவ்யா! என்னால உனக்கு கஷ்டம் வேண்டாம். சென்னையில நிறைய ஒர்க்கிங்க் உமன்ஸ் ஹாஸ்டல் இருக்கு. அதுல ஒண்ணுல தங்கிப்பேன். சாப்பாட்டுக்கு உமா இருக்கா. அப்புறம் என்ன?" என்றாள் உறுதியாக.

"அப்ப ஏற்கனவே திட்டம் போட்டுட்டுத்தான் இருக்கியா? கல்யாணமாகாத பொண்ணு இப்படிப் போறது நல்லவே இல்ல! அப்படி என்ன உனக்குப் பிடிவாதம். நான் பேசறேன் ரவி கிட்டயும் எங்க அண்ணன் அண்ணி கிட்டயும். கல்யாணம் ஆனப்புறமும் நீ இதே தொழில் செய்ய நான் அனுமதி வாங்கித்தரேன் உதயா. சொல்றதைக் கேளு" என்றாள் அம்மா.

"நடக்குற விஷயமாப் பேசுங்க! அத்தை என்ன சொன்னாங்க கேட்டீங்கல்ல? இந்தத் தொழில் செஞ்சா அவங்க வீட்டுக்கும் நாளைக்கே ஆட்கள் வந்து கத்துவாங்கன்னு பேசுறாங்க! அது சரிப்படாதும்மா! ரவி கல்யாணத்துக்கப்புறம் அதே தொழிலை செய்ய நான் அனுமதி குடுக்கணும்னு அவங்க எதிர்பார்க்குறாங்களா? அப்ப நான் மட்டும் ஏன்ம்மா அவங்க கிட்ட அனுமதி கேக்கணும்? அப்படி நான் ஒண்ணும் தப்பான தொழில் செய்யலையே?"

"உதயா! நீ வீட்டை விட்டுப் போறதுன்னு முடிவு எடுத்துட்ட! அது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு எனக்கு சொல்லத் தெரியல்ல. அப்படி சொன்னா நீ பயந்து போயி கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்னு நெனச்சு தான் நான் சொன்னேன். ஆனா அது இப்படி ஆயிடிச்சு. அதனால நீ நாளைக்கே கிளம்பிப் பொயிரு. எங்களுக்கு இப்படி ஒரு மகளே பொறக்கல்லன்னு நாங்க தீர்மானம் பண்ணிக்கறோம்னு சினிமா டயலாக் பேச மாட்டேன். ஆனா நிச்சயம் எங்களுக்கு வருத்தமும் வேதனையும் இருக்கு. அதை நீ உணர்ந்துக்கணும்." என்றார் அப்பா.

அமைதியாய் நின்றாள் உதயா.

"நாங்க உன்னைப் பெத்தவங்க! எங்களை விட உனக்கு நல்லது நினைக்குறவங்க யாராவது இருக்க முடியுமா? ஆனா எங்களை தூக்கி எறிஞ்சிட்டுப் போறியே? நல்லா யோசிச்சுக்கோ. இந்த உலகம் ரொம்பப் பொல்லாதது. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்." என்றார் அப்பா.

"உண்மை தான் அப்பா நீங்க சொல்றது. எனக்கு எது நல்லதுன்னு நீங்க நினைக்கறீங்களோ அதை நான் செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க! அது தான் தப்புன்னு சொல்றேன்."

"ஒரு தாய் தகப்பன் மகளுக்குக் நல்லபடியாக் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நினைக்குறது தப்பா? சொல்லுடி" என்றாள் அம்மா முந்தானையால் கண்களைத் துடைத்தபடி.

"நிச்சயம் இல்லம்மா! ஆனா நல்லா யோசிச்சுப் பாருங்க! 50 வருஷம் முன்னால கல்யாணிப்பாட்டி காலத்துல வயசுக்கு வந்த உடனே கல்யாணம் செஞ்சு குடுத்திருவாங்க! அது அப்ப உள்ள பேரண்ட்சுக்கு தப்பாத் தெரியல்ல! ஆனா அதுவே உங்க காலத்துல ஒரு டிகிரி முடிச்சப்புறம் தானே கல்யாணம் செஞ்சு வெச்சாங்க! இப்ப எங்க காலம் இன்னமும் மாறிட்டுதும்மா! அவங்க மனசுக்குப் பிடிச்ச வேலை கெடச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு அப்புறம் தானே கல்யாணம் பண்ணிக்குறாங்க! இதை தானே நானும் சொன்னேன் அது உங்களுக்குப் புரியலையே?" என்றாள் மெல்ல.

"நீ நல்லாப் பேச கத்துக்கிட்ட! உன் இஷ்டப்படி செய். ஆனா இந்த வீட்டுல இருக்காதே! ஏன்னா நாளைக்கே நம்ம சொந்தக்காரங்க மகளுக்குக் கல்யாணம் பண்ணாம வெச்சிருக்கான் கல்யாணி மகன்னு என்னை பேசக்கூடாது. நீ நாளைக்குக் காலையிலயோ மதியமோ எப்ப சவுரியமோ அப்பப் போயிக்கோ. இதுக்கு மேல இதைப் பத்தி யாரும் பேச வேண்டாம்" என்று உறுதியாகச் சொல்லி விட்டு அறைக்குப் போய் விட்டார் அப்பா.

காவ்யா இவளது கையை அழுத்தி விட்டுப் போய் விட்டாள். திரும்பிக் கூடப் பார்க்காமல் போனாள் அம்மா. அவர்களைப் பார்த்த படி மெல்ல மாடியேறினாள் உதயா. மனம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. அறைக்குப் போய் படுத்துக்கொண்டாள். நெஞ்சம் கனதத்து. இதயத்தில் ஒரு பாரம் இருப்பதைப் போல இருந்தது. ஒரு கணம் என்ன வாழ்க்கை இது? பேசாமல் முரளி கிருஷ்ணாவுக்கு இந்த பிசினசை விற்று விட்டால் என்ன? அம்மா அப்பா சொல்படி கல்யாணம் செய்து கொண்டு ரவியின் பிசினசில் உதவி செய்தால் என்ன என்று தோன்றியது. அதே நேரத்தில் ராஜ கோபாலோடும் ஜெகனோடும் பேசிக்கொண்டிருந்த ரவியின் உருவம் மனக்கண்ணில் வந்து போனது. அடுத்த கணமே உறுதிப்பட்டது மனம். என்ன ஆனாலும் சரி! நான் இதே தொழில் நல்ல நிலைக்கு வராமல் ஓய மாட்டேன். எத்தனை தடைகள் வந்தாலும் சரி" என்று முடிவு செய்து கொண்டாள்.

மணி 11 ஆகி விட்டது. இந்த நேரத்தில் ஸ்வேதாவை தொந்தரவு செய்ய வேண்டாம் பாட்டியிடமும் சொல்லி அவளையும் கவலைக்குள்ளாக்க வேண்டாம் என தீர்மானித்துக்கொண்டாள். தொண்டையில் ஒரு வலி அமுக்கியது. அதையும் மீறி இனி என்ன செய்வது என யோசித்தாள்.

"சைட்டுக்குப் பக்கத்தில் ஏதாவது ஒரு ஒர்க்கிங்க் உமஸ்ன் ஹாஸ்டலில் தங்கிக்கொள்ள வேண்டியது தான். மாதம் எவ்வளவு கேட்பார்கள்? அத்தனை பணம் என்னிடம் இருக்குமா? பணத்தை நான் வாடகைக்கே செலவழித்து விட்டால் பிசினசில் ரொட்டேஷனுக்கு என்ன செய்வது? ஏதாவது செய்தாக வேண்டும். இந்த விஷயத்துக்கெல்லாம் பயந்தால் என்னால் நிலைத்து நிற்க முடியாது. இப்போது முதலில் நான் செய்ய வேண்டியது பொழுது விடிந்ததும் ஒரு நல்ல ஹாஸ்டலாகப் பார்க்க வேண்டும். ஸ்வேதாவிடமும் பாட்டியிடமும் கலந்து கொள்ள வேண்டும். மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். என்று தீர்மானித்துக்கொண்டாள்.

மனதின் பாரத்தாலோ கவலைகளாலோ உறக்கமே வரவில்லை.

"வீட்டை விட்டுப் போய் விட்டால் எனக்கு என்ன ஆகும்? வெளியில் உலகம் பாதுக்காப்பானது தானா? அம்மா அப்பவுடன் இருக்கும் போதே ராஜகோபால் எப்படிப் பேசினான்? இப்போது நான் தனியாக இருக்கிறேன் என்பது தெரிந்தால் என்ன சொல்வார்கள் அவனைப் போன்றவர்கள்? என்று எண்ணினாள். கூடவே மற்றொரு நினைவும் வந்தது. சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கும் வெளியூர்ப் பெண்கள் எவ்வளவு பேர் இல்லை? அவர்கள் தைரியமாக இருக்கவில்லயா? அதே போல நானும் இருந்தாற் போயிற்று. எல்லாவற்றிற்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் தான் தேவை. என்னால் சமாளிக்க முடியும்" என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டாள்.

ஆனாலும் அதன் பிறகும் உறக்கம் வரவில்லை. அதிகாலை மூன்று மணியளவில் தன்னையறியாமல் கண்கள் மூடின. எவ்வளவு நேரம் தூங்கினாள் எனத் தெரியவில்லை. கனவில் ரவி ராஜ கோபால் ஜெகன் இவர்கள் வந்து கழுத்தை நெறிப்பது போலக் வர அலறியப்டி எழுந்த போது கடிகாரம் மணி ஏழு என்றது. அவசரமாக எழுந்தாள் உதயா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top