Aththiyaayam 49: Kurinjip poo...

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
குறிஞ்சிப்பூ...

மறு நாள் வழக்கம் போல பொழுது விடிந்தது. ஆனால் காலையிலிருந்தே எதுவும் சரியாக இல்லை உதயாவுக்கு. எழுந்ததும் கட்டில் காலில் இடித்துக்கொண்டு ரத்தம் வந்தது. அது பரவாயில்லை என்றால் குளிக்கச் செல்லும் போது பாத்ரூமில் தடுக்கிக் கீழே விழுந்தாள்.

"என்ன ஆச்சு உதி உனக்கு? இன்னைக்குக் காலையில இருந்தே ஏன் தடுமாறுர?" என்றாள் பாட்டி.

"ஒன்னுமில்ல பாட்டி! " என்று சொல்லி விட்டு ரவியிடம் பேசியதால் ஏற்பட்ட தடுமாற்றம் என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் ஏனோ காரணம் இன்றி மனம் கனத்தது ஏதோ நடக்கப் போகிறது என்பதன் அடையாளமாக வலது கண் துடித்தது. எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தினாள் உதயா. டிஃபன் சாப்பிட்டு அலுவலகம் சென்று விட்டாள். அன்றைய பொழுது வழக்கம் போலப் போனது. ஸ்வேதாவின் ஃபோன் வந்தது. நாளை மறு நாள் வந்து விடுவதாக வாக்களித்தாள் அவள். மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது. இன்று ஒரு நாள் சமாளித்து விட்டால் நாளை லீவு பிறகு ஸ்வேதா வந்து விடுவாள் என்று கணக்குப் போட்டாள்.

உமாவும் செல்வராஜும் ஊருக்குப் போயிருப்பதால் ஜெயா தான் சமைத்து எடுத்து வந்தாள். பரவாயில்லை என்று சொல்லுமளவு இருந்தது. மாலை ஆனதும் அனைவரும் வீட்டுக்குக் கிளம்பினர். நினைவாக ரெடிமேட் கலவை அலுவலகத்துக்கு ஃபோன் செய்து கன்ஃபர்ம் செய்து கொண்டாள். அவர்கள் இரவு இரண்டு மணிக்கு லோடு கொண்டு வருவதாகவும் கூடவே ஆட்களை அனுப்புவதாகவும் சொன்னார்கள்.

"கந்த சாமி நீங்க இப்ப போயிட்டு ஒரு மணிக்குள்ள வந்திருங்க! என்ன தான் அவங்க ஆளுங்க இருந்தாலும் நாமும் இருந்தாத்தான் நல்லது! என்ன சொல்றீங்க?"

"ஆமா மேடம்! நான் இப்பப் போயி ஒரு தூக்கம் போட்டுட்டு ஒரு மணிக்கு வந்துடறேன். நீங்களும் புறப்படுங்க மேடம்! நான் வந்த பிறகு ஃபோன் பண்றேன் அப்ப வந்தாப் போதும்" என்றான். தலையை அசைத்தாள். போய் விட்டான் கந்த சாமி. தானும் கிளம்பினாள்.

"என்ன உதி! இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட? சைட்டுல வேலை இல்லியா?"

"இன்னைக்கு ரூஃப் போடப்போறோம்னு சொன்னேனே பாட்டி! பதியோனோரு மணி வாக்குல திரும்பப் போகணும்"

"உங்கம்மா ஃபோன் செஞ்சிருந்தா உதி! ரவிக்கு ஏதோ கல்யாண ஏற்பாடு நடக்குதாமே? உனக்குத் தெரியுமா?"

எரிச்சல் வந்தது உதயாவுக்கு. எதை நினைக்கக் கூடாது என்று இருக்கிறாளோ அதையே பாட்டி சொல்லவும் கோபம் வந்து விட்டது அவளுக்கு.

"ஆமா கேள்விப்பட்டேன்! அதுக்கு என்ன?" என்றாள் கடுமையாக.

"எதுக்குக் கோவப்படுற உதயாம்மா? நீ அவன் கிட்டப் பேசிப்பார்த்தியா? என்ன தான் சொல்றான்?"

"என்ன சொல்லுவான்! உனக்காகக் காத்திருக்க முடியாது அதனால நான் வேற பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். ஏன்னா நான் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவன்ன்னு குத்திக் காட்டுவான்."

அவளருகே வந்தாள் பாட்டி! "நீ அவன் கிட்டப் பேசினியா?"

"உம்! அப்பத்தான் அவன் இதைச் சொன்னான்"

மௌனமாக நின்றிருந்தாள் பாட்டி.

"எனக்கென்னமோ மனசே சரியில்ல உதி! நான் தப்புப் பண்ணிட்டேனோன்னு மனசு கஷ்டப்படுது. உன்னை ரொம்ப ஊக்கப்படுத்தினேன். ஆனா நீ இப்படி ஆயிருவேன்னு நான் நினைக்கல்லடி! ரவிக்கு உன் மேல பிரியம் இருக்குன்னு நான் தப்புக்கணக்குப் போட்டுட்டேன். " என்றாள் மெல்ல.

மற்ற நாட்களாக இருந்திருந்தால் பாட்டியை சமாதானப்படுத்தியிருப்பாள் உதயா ஆனால் அன்று ஏனோ அனைவர் மீதும் ஆத்திரம் மூண்டது.

"இப்ப சொல்லுங்க! இனிமே அதைப் பத்திப் பேசி என்ன பிரயோசனம்? என் வாழ்க்கை வீணாப் போயிடிச்சு இல்ல?" என்றாள் மேலும் கடுமையாக.

"உதயா! என்னம்மா இப்படிப் பேசுற? என்னால உன் வாழ்க்கை நாசமாப் போயிடிச்சுன்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லல்ல! " என்றாள் மீண்டும்.

"ஏன் உதி? உலகத்துல ரவியைத்தவிர வேற நல்ல பையனே இல்லையா? நீ ஏன் அந்த மாதிரி ஒருத்தனைக் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது. இல்லை உனக்குப் பிடிக்கல்லைன்னான் நான் உனக்காக ரவி கிட்டப் பேசட்டுமா?"

"யாரும் எனக்காக எதுவும் செய்ய வேண்டாம். அவங்க அவங்க வேலையை மட்டும் பார்த்தா போதும். நான் யார் வம்புக்கும் போகல்ல! நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஆனா என்னை ஏன் யாருமே தனியா விட மாட்டேங்கறீங்க?" என்று கத்தி விட்டு தனது அறையில் புகுந்து கொண்டாள். சரி ஏதோ மனசு சரியில்லை கொஞ்ச நேரம் போனால் சரியாகி விடுவாள் என்று நினைத்து விட்டு விட்டாள் பாட்டி. மணி பத்தடித்தும் உதயா ரூமை விட்டு வரவேயில்லை. இரவு உணவும் சாப்பிடவில்லை.

"உதி! மணி பத்தாகுது! கதவைத் திறம்மா! தோசை சுட்டு வெச்சிருக்கேன் சாப்பிட்டுட்டு படுத்துக்கம்மா": என்றாள் கனிவாக.

பாட்டியின் அன்பு மனதைத் தொட குற்ற உணர்வில் தவித்தாள் உதயா. மெல்ல கதவைத் திறந்தாள்.

"நீங்களும் இன்னும் சாப்பிடலையா பாட்டி?"

"வயசுப்பொண்ணு நீயே சாப்பிடாம பட்டினி கெடக்குற, வயசான கெழவி எனக்கு சாப்பாடு இறங்குமா?" என்றாள்.

பாய்ந்து சென்று பாட்டியைக் கட்டிக்கொண்டாள் உதயா.

"ஐ ஆம் சாரி பாட்டி! நான் ஏதோ கோவத்துல உங்களை கன்னா பின்னான்னு பேசிட்டேன்."

"அட விடும்மா! குடும்பத்துல இதெல்லா சகஜம். முதல்ல சாப்பிடு" என்று சாப்பிட வைத்தாள். தானும் இரு தோசைகள் உண்டாள். வேறு சுடிதார் அணிந்து பேத்தி கிளம்புவதைப் பார்த்ததும் புருவத்தை உயர்த்தினாள்.

"இன்னைக்கு ராத்திரி இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடிமேட் கலவை வந்துரும் பாட்டி! கூடவே நின்னு பார்க்கல்லைன்னா ஏத்த இறக்கமா போட்டுட்டு போயிருவாங்க! கம்பெனி பேரு கெட்டுப் போயிரும். அதான் கிளம்பறேன்"

"சைட்டுல வேற யார் யார் இருப்பாங்க?"

"கந்த சாமி ஒரு மணியளவில் வருவாரு. வேற யாரும் வர மாட்டாங்க! ஏன் பாட்டி?"

"எனக்கு என்னவோ கலக்கமா இருக்கு உதி! நான் வேணும்னா கூட வரட்டுமா?"

"என்ன பாட்டி நீங்க? ரெண்டடியில இருக்கு சைட்டு! கந்தசாமியும் வருவாரு அப்புறம் என்ன பயம்? உங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்னால தான் ஜுரம் வந்து சரியாச்சு. மாத்திரையைப் பொட்டுக்கிட்டு நீங்க நிம்மதியாத் தூங்குங்க! எங்கிட்ட இன்னொரு சாவி இருக்கு! வேலை முடிஞ்சு நான் வந்துக்கறேன். நாளைக்காலையில பத்து மணிக்குக் குறைஞ்சு என்னை எழுப்பாதீங்க" என்றாள்.

செருப்பை அணிந்து கிளம்பும் போது வீட்டின் நிலைப்படி ணங்கென்று இடித்தது. ஏனோ உதயாவின் விழிகள் கலங்கின. தலையைத் தேய்த்துக்கொண்டே பாட்டியிடம் விடை பெற்றாள். இரவு நேரம் என்பதால் ஸ்கூட்டியிலேயே தான் சென்றாள். இரவில் அந்த இடமே வேறு மாதிரி இருந்தது. அலுவலக அறையில் லைட்டைப் போட்டு அமர்ந்தாள். மணி அப்போது தான் பதினொன்று ஆகியிருந்தது. பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். கந்த சாமி வந்த உடன் வந்திருக்கலாம் எனத் தோன்றியது. அந்த வேளையில் மீண்டும் மனம் தனது வாழ்க்கையை எண்ணிப் பார்த்தது.

"ரவியை மறந்து விட்டு வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி ஆனால் அது முடியுமா? ஏன் முடியாது? ரவி என்னை மறந்து விட்டு வேறு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தத் தயாராக இருக்கும் போது நான் மட்டும் ஏன் பட்ட மரமாக நிற்க வேண்டும்? என் மனதுக்குப் பிடித்தவன் வராமலா போய் விடுவான்? உலகத்தில் காதலில் தோற்றவர்கள் அனைவரும் கல்யாணமே செய்து கொள்ளாமலா இருக்கிறார்கள்? அப்படி இருந்தால் இந்நேரம் இந்தியாவின் ஜனத்தொகை பாதியாகக் குறைந்திருக்குமே" என்று எண்ணிக்கொண்டாள்.

சட்டென அவளது உள் மனம் விழித்துக்கொண்டது. ஏதோ சத்தம் கேட்பது போலத் தோண்றியது. கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தாள். எதுவும் புலப்படவில்லை. ஆனால் செங்கல் குவியலுக்குப் பின்னால் யாரோ ஒளிந்திருப்பது போலத் தோன்ற செல்ஃபோன் டார்ச்சை உயிர்ப்பித்துப் பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. தெருவின் கோடி வரை கவனித்தாள். ஒரு ஈ எறும்பு நடமாட்டம் கூட இல்லை. சற்று தொலைவில் ஏதோ ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது போல இருந்தது. யாராக இருக்கும்? ஒருவேளை இங்குள்ள ஏதாவது ஒரு வீட்டுக்கு வந்ததாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள். பொழுது போவதற்காக தனது லேப்டாப்பைத் திறந்து அர்ச்சனாவின் நண்பர்கள் கேட்ட பிளானை உருவாக்க முயன்றாள்.

அங்கே செங்கல் குவியல் மறைவிலிருந்து ராஜகோபால், ஜெகன் மற்றும் மனோகர் வெளியில் வந்தார்கள். அவர்கள் கையில் மயக்க மருந்து ஸ்ப்ரே.
 
#5

ஐயோ பாவம் உதிம்மா
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top