You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Aththiyaayam 50: Sengal poo..

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
செங்கல் பூ...

உதயா மட்டும் தனித்திருப்பதை அந்த மூன்று ஜொடிக்கண்கள் கண்டு கொண்டன. மறைவிலிருந்து வெளி வரலாம் என நினைக்கும் நேரம் ஏதோ ஒரு வண்டி கடந்தது அவர்களை. மீண்டும் அமர்ந்து கொண்டார்கள்.

"என்ன சார்? நேரம் ஆயிட்டே இருக்கு? போகலாமா?"

"அவசரப்படாதே மனோகர்! நம்மை யாரும் பார்த்துடக் கூடாது! அது ரொம்ப முக்கியம்! உம் வாங்க! இப்ப யாரும் இல்ல" என்றார் ராஜகோபால். அடி மேல் அடியெடுத்து மூவரும் அந்த அலுவலக அறையை நெருங்கினர். கதவு சாத்தி தாளிடப்பட்டிருந்தது உட்பக்கமாக. இதனை எதிர்பார்க்காத அந்த மூவரும் திகைத்து நின்றனர். உதட்டின் மேல் விரல் வைத்து சைகை காட்டினார். மெல்லப் பின் வாங்கி குடோன் கட்டியிருந்த இடத்துக்கு அருகே வந்தார்கள்.

"நாம கதவைத் தட்டுனா மாட்டிப்போம்! தட்டாமலே கதவு திறக்கணும். அதுக்கு யோசனை இருந்தா சொல்லுங்க"

யோசிக்க யோசிக்க ஒன்றும் தோன்றவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது. கந்தசாமி வந்து விடும் அபாயம் கூட இருந்தது. சட்டென தோன்றியது ராஜகோபாலுக்கு.

"நாம கதவைத் தட்ட வேண்டாம். ஆனா ரூமுக்கு வெளிய சின்ன சின்ன சத்தங்கள் ஏற்படுத்துவோம். அவ என்னன்னு பார்க்குறதுக்கு கதவைத் திறப்பா! அப்ப நாம அவளுக்கே தெரியாம உள்ளே நுழைஞ்சிருவோம். "

மற்ற இருவருக்கும் புரியவில்லை என்றாலும் தலையை ஆட்டினர். அவர்களை லட்சியம் செய்யாமல் ஒரு சிறு கல்லை எடுத்துக் கொண்டு அறையின் பக்கவாட்டில் மறைந்து கொண்டார். அங்கிருந்து உத்தேசமாக ஜன்னல் பக்கம் கல்லை வீசி எறிய அது கம்பியில் மோதி சத்த்தோடு விழுந்தது. அந்த அமைதியான இரவில் அந்த சிறு சத்தம் கூடப் பெரிதாகக் கேட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தாள் உதயா மீண்டும். ஜன்னலை நோக்கி அவள் நடக்க அந்த அவகாசத்தில் அறைக்குள் புகுந்து கொண்டனர் மூவரும். உதயா என்ற மானுக்காக அந்த 3 கழுதைப் புலிகள் காத்திருந்தன. சுமார் இரு நிமிடங்கள் கழித்து உதயா வந்தாள். அவளது முகம் குழப்பத்தில் இருந்தது. அவள் நடந்து சென்று நாற்காலியில் அமரும் முன் மூவர் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது. திடுக்கிட்டு நின்றாள் அவள்.

"ராஜகோபால் சார் நீங்களா? நீங்க எதுக்கு இங்கே?" என்றாள்.

"உன்னைக் கணக்குத் தீர்க்கத்தாண்டி வந்தேன். அன்னைக்கு என் முகத்துல காறித்துப்பினே இல்ல? இன்னைக்கு நான் உன்னை என்ன செய்யறேன் பாரு! நான் மட்டும் தனின்னு நினைக்காதே! ஜெகனும் இதோ இந்த மனோகரும் கூட இருக்காங்க" என்றார்.

"நீ நாசமாத்தான் போகப் போற! நீ கேட்டது தப்புன்னு உனக்கு இன்னமுமா தோணல்ல? ஏன் மனோகர் நான் உனக்கு என்ன செஞ்சேன்? எதுக்காக என்னைப் பழி வாங்கணும்னு நினைக்கற?" என்றாள் பரிதாபமாக.

"உன்னை மாதிரி காஸ்ட்லி பீசெல்லாம் நான் ருசி பார்க்க முடியுமா? இப்படி சந்தர்ப்பம் அமைஞ்சாத்தான் உண்டு." என்றான் விகாரமாக இளித்தபடி.

"பேசிக்கிட்டே இருக்காதீங்க சார்! முதல்ல மயக்க மருந்தை ஸ்ப்ரே பண்ணுங்க! " என்று கத்தினான் ஜெகன். இதை ஓரளவு எதிர்பார்த்திருந்ததால் தலையைக் குனிந்து மூச்சு விடாமல் சமாளித்தாள் உதயா. ராஜ கோபால் அவளது இரு கைகளையும் வளைத்துப் பின்னால் பிடித்துக்கொள்ள ஜெகன் கால்களைப் பிடித்துக்கொண்டால் ஓட முடியாமல். மனோகர் அந்த மருந்தை அவளது முகத்தை நிமிர்த்தி அதில் அடிக்கப் போனான். உடலை வளைத்து நெளித்து எப்படியோ சமாளிக்கப் பார்த்தாள். அவளால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் மூச்சு வாங்க மயக்க மருந்து உள்ளே போனது. அந்த இடமே இருட்டாக மயங்கி விழுந்தாள் அவள்.

"மயங்கிட்டா! இனி நம்ம வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்! நீங்க ரெண்டு பேரும் போயி அந்தக் கதவை சாத்திட்டு வெளிய நில்லுங்க! நான் கூப்பிட்டதும் வந்தாப் போதும்" என்றார் ராஜகோபால். அப்படியே செய்வதற்காக அவர்கள் கதவை நெருங்கும் நேரம் புயலென தாக்குதல் நடந்து இருவரும் மூலைக்கு ஒருவராகப் போய் விழுந்தனர். திகைத்துப் போய்ப் பார்த்தார் ராஜகோபால்.

"ஏண்டா! ராஸ்கல்களா! ஒரு பொண்ணை கெடுத்து சாகடிக்கவும் திட்டம் போடுறீங்களா?" என்று கத்தியபடி நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ். அவர் தான் பள்ளிக்கரணை ஏரியாவின் இன்ஸ்பெக்டர். இவர் எப்படி இங்கே சரியான நேரத்தில் வந்தார்? யார் தகவல் கொடுத்திருப்பார்கள்? என யோசித்தார் ராஜகோபால். அந்த நேரத்தில் தான் தப்ப வேண்டும் என்ற உந்துதலில் பேசினார்.

"இன்ஸ்பெக்டர் நான் எதுவுமே செய்யல்ல! இந்த ரெண்டு திருட்டுப் பசங்களும் தான் இந்தப் பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கெடுக்கப் பார்த்தாங்க! நான் காப்பாத்தத்தான் வந்தேன் " என்றார்.

ஜெகனுக்கும் மனோகருக்கும் ஆத்திரம் மூண்டது.

"இவரு பொய் சொல்றாரு இன்ஸ்பெக்டர். இந்தத் திட்டத்தைப் போட்டுக்கொடுத்ததே அவர் தான். இப்ப ரொம்ப நல்லவர் மாதிரி நடிக்குறாரு. " என்றான் ஜெகன்.

"ஷூ! தேவையில்லாம பேசாதீக! நீங்க இந்த ஏரியாவுக்கு வந்து செங்கலுக்குப் பின்னால மறைஞ்சு இருந்ததுல இருந்து அறைக்குள்ள போனது வரையில எல்லாமே நான் வீடியோ எடுத்துட்டேன். அதுவும் போதாதுன்னு ரெண்டு போலீஸ்காரங்க சாட்சி வேற இருக்கு. நடங்க ஸ்டேஷனுக்கு" என்றார் இன்ஸ்பெக்டர்.

"எங்கள்ல யாரு உங்களுக்குத் தகவல் கொடுத்தது?" என்றார் ராஜகோபால் கோபமாக.

"யாருமே இல்ல! தகவல் கொடுத்தது நான் தான்" என்று சொல்லியபடி உள்ளே வந்தவனைப் பார்த்ததும் விழிகள் பிதுங்கின அவர்களுக்கு. கோபமும் ஆவேசமுமாக உள்ளே வந்தவன்....

"ரவி நீங்களா? உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? தயவு செஞ்சு என்னை விட்டுரச் சொல்லுங்க! நான் படிச்சவன், நல்ல பொசிஷன்ல இருக்குறவன். இந்த விஷயம் என் மனைவிக்கும் பசங்களுக்கும் தெரிஞ்சா என் வாழ்க்கையே போயிரும்" என்று கெஞ்சினான் ராஜகோபால்.

அருகில் வந்த ரவி ஓங்கி ஒரு அறை விட்டான். அப்படியே கன்னத்தைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார் ராஜகோபால்.

"ஏண்டா நாயே! உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா? உதயாவுக்கு இல்லையா? நான் மட்டும் இன்னைக்கு எச்சரிக்கையா இல்லைன்னா நீ என் உதயாவை என்ன செஞ்சிருப்பே? உன்னை நாங்க விட்டுடணுமா? மத்தவங்களை தூண்டி விட்டதே நீ! அதனால உனக்குத்தான் தண்டனை அதிகம் கொடுக்கணும்." என்றான். அவனது கோபத்தில் விட்டால் இன்னும் அறைந்து விடுவான் போலத் தோன்றவே இன்ஸ்பெக்டர் அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். இரு கான்ஸ்டபிள்கள் வண்டியில் ஏற்றினார்கள் மூவரையும். மிகச் சரியாக அந்த நேரத்தில் கந்தசாமி வர அவனிடம் வேறு எதுவும் சொல்லாமல் உதயா மயங்கி விட்டாள் அதனால் அந்தக் கலவைக் காரர்கள் வரும் போது அவனே நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளச் சொன்னான் ரவி.

"சார்! நீங்க யாரு? எதுக்கு போலீஸ் வந்துச்சு? எங்க மேடத்துக்கு என்ன சார்? எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்றான் கந்த சாமி.

"கவலைப்படாதீங்க! நான் உதயாவைக் கட்டிக்கப் போறவன் தான். என்ன நடந்ததுன்னு சொல்ல இப்ப நேரமில்ல. ஏதோ தடை செய்யப்பட்ட மயக்க மருந்தை உதயா மேல அளவுக்கு அதிகமா உபயோகிச்சுருக்காங்க! உடனே அவளை ஆஸ்பத்திரி கூட்டிக்கிட்டுப் போகணும்" என்று சொல்லி விரைந்து செயல் பட்டான். கந்தசாமி உடன் வருவதாகச் சொன்ன போது மறுத்து விட்டான் ரவி. அவனை சைட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு விரைந்தான்.
 
#7

ரவி ஏன் அன்று ராஜாகோபால் உடன் கதைத்தது ?????
அப்ப ரவி தான் கதாநாயகனா?
 
Sponsored

Advertisements

Top