Aththiyaayam 51: Kalyaanap poo..

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
கல்யாணப் பூ...

மெல்ல மெல்லக் கண்களைத் திறந்தாள் உதயா. உடலெங்கும் வலி அதோடு தலையில் அப்படி ஒரு பாரம். கண்களை திறந்து சுற்றிலும் பார்த்தாள். தான் எங்கே இருகிறோம் என அவளுக்குப் புரியவேயில்லை. கடைசியாக ஜெகன் அவள் மேல் மயக்க மருந்து ஸ்ப்ரே செய்தது தான் நினைவிருந்தது. அவர்கள் தன்னை ஏதும் செய்து விட்டார்களோ என பயத்துடன் பார்த்தாள்.

"உனக்கு ஒண்ணும் ஆகல்ல கண்ணு! நீ பத்திரமா ஆஸ்பத்திரியில இருக்கே" என்றாள் பாட்டி. பாட்டியின் குரல் கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல நினைவுகள் வந்தன. சுற்று முற்றும் பார்த்தாள். ஸ்வேதா, அம்மா அப்பா காவ்யா பாட்டி என பெரிய கூட்டமே நின்றிருந்தது. அப்பா கண்களில் நீர் நிறைந்திருந்தது. அம்மா பக்கத்தில் அமர்ந்து மெல்ல தடவிக்கொடுத்தாள். காவ்யா புன்சிரிப்போடு கைகளைப் பிடித்துக்கொண்டாள். பாட்டி நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

"எனக்கு என்ன ஆச்சு? யாரு என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க? என்னைக் காப்பாத்தினது யாரு?" என்றாள்.

"நீ தெம்பா இருக்கியா உதி? நாங்க சொல்றதை உன்னால புரிஞ்சிக்க முடியுமா? நீ கடந்த ரெண்டு நாளா கண்ணே திறக்கல்ல. நாங்க எப்படி பயந்தோம் தெரியுமா? இப்ப த் தெளிவா இருக்கியா?" என்றாள் ஸ்வேதா. தலையை ஆட்டினாள் உதயா.

"எனக்கு எனக்கு..."

"அதிகம் ஸ்டெரியின் பண்ணிக்காதே உதி! உனக்கு எந்த ஆபத்தும் இல்ல! " என்ற காவ்யாவைக் கேல்விக்குறியோடு பார்த்தாள் உதயா.

"உன்னை சரியான நேரத்துல வந்து காப்பாத்துனது ஆஸ்பத்திரியில சேர்த்தது எல்லாமே உன் அத்தான் ரவி தான்" என்றாள் அம்மா. பேச வார்த்தைகளே இல்லாமல் மௌனமானாள் உதயா. ரவியா? ரவிக்கு ...எப்படி என்று யோசிக்க முயன்றாள்.

"இன்னுமா நீ என்னை நம்பல்ல?" என்ற குரல் கேட்டு நிமிர அங்கே கைகளைக் கட்டியபடி சிரித்துக்கொண்டிருந்தான் ரவி.

"ரவி ரவி நீயா? நீ எப்படி....? உனக்குத்தான் நான் பிசின்ஸ் செய்யுறதே பிடிக்காதே?....அப்புறம்?" என்று கேட்டு மூச்சு வாங்கினாள்.

மற்றவர்கள் புரிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறினார்கள். தனியாக விடப்பட்ட ரவி பாட்டி அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டு உதயாவின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டான். அவளைக் காதலுடன் பார்த்தான் அவன்.

"ஐ ஆம் சாரி உதி! நான் ரொம்ப உன்னை மெண்டல் டார்ச்சர் பண்ணிட்டேன். ஆனா எல்லாமே நம்ம நல்லதுக்குத்தான். என்னை மன்னிச்சுட்டியா நீ?" என்றான் இதமாக.

இன்னமும் நம்ப முடியாதவளாக அவனையே பார்த்திருந்தாள்.

"முதல்ல நீ என் பேச்சைக் கேக்காம கட்டிட பிசினஸ் செய்யுறது எனக்கு ரொம்பக் கோவமா வந்தது. ஆனா யோசிச்சுப் பார்த்தேன். நீ சொன்னதுல தப்பே இல்லேன்னு தோணிச்சு! ஆனா அதை நான் உடனே உங்கிட்ட சொன்னா உனக்குக் கவனம் சிதறிடுமோன்னு சர்ப்பிரைசா இருக்கட்டும்னு வெச்சிருந்தேன். எல்லாத்தையும் நீ உன் சொந்த முயற்சியால செய்யணும் அப்படி செஞ்சா உனக்கு தன்னம்பிக்கை வரும்னு நான் ஒதுங்கியே இருந்தேன்." என்றான்.

மனசெல்லாம் லேசானது போல உணர்ந்தாள் உதயா. ஆனாலும் சில சந்தேகங்கள் எட்டிப் பார்த்தன.

"ஆனா ரவி நான் உன்னை ஜெகன் ராஜ கோபாலோட பார்த்தேனே?"

"அவங்களை எச்சிரிச்சு அனுப்புனேன். ஸ்வேதா புருஷன் மூலமா எனக்கு ராஜகோபால் பத்தியும் ஜெகன் பத்தியும் தெரிய வந்தது"

"ஸ்வேதா புருஷனா?"

"ஆமா! அவன் என்னோட காலேஜ் மேட் தான். நான் தான் பணம் கொடுத்து ஸ்வேதாவை பார்ட்னரா சேர சொன்னேன். " என்றான் அமைதியாக.

"ஏன் ரவி அப்படி சுத்தி வளைச்சு செஞ்ச? எங்கிட்ட சொல்லியிருக்கலாமே? எத்தனை மனசு வேதனை எனக்கு? ஸ்வேதா கூட எங்கிட்ட சொல்லவே இல்லையே?"

"அவளுக்கே தெரியாது! விஜய் கிட்டக் கூட நான் உண்மையைச் சொல்லல்ல! எனக்கு இன்வெஸ்ட் பண்ணனும் அதுக்கு இது ஒரு வழின்னு சொன்னேன் அவ்வள தான். " என்றான்.

பல குழப்பங்களுக்கு விடை கிடைத்ததைப் போலிருந்தது அவளுக்கு. "அப்ப ரவியா எனக்கு மறைமுக உதவி செய்ததெல்லாம்? ஆனால் ஆனால்..." எண்ணங்கள் எங்கோ போயின. இனியும் மனதில் வைத்திருக்கக் கூடாது என்று கேட்டு விட்டாள்.

"அப்ப ஏன் திடீர்னு இந்த நிமிஷமே கல்யாணம் செஞ்சிக்கோன்னு வந்து நின்னீங்க? என்றாள்.

"ஜெகனும் ராஜகோபாலும் ஏதாவது செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன் உதி! ஏன்னா அந்த ராஜகோபால் சரியான கிரிமினல். அந்த சமயத்துல கந்த சாமி உங்க வீட்டு வாசல்ல வந்து கத்தவே நான் பயந்து போயிட்டேன். அவனால உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு நெனச்சு தான் கல்யாணம் பண்ணணும்னு வந்தேன். ஆனா அப்பவும் நீ மறுத்துட்ட. அதுல எனக்குக் கோபம் தான்"

"அதெல்லாம் சரி! ஆனா அந்த நாசமாப் போற மூணு பேரும் என்னைத் தாக்க திட்டம் போட்டிருக்காங்கன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?"

"சொன்னா கோபப்பட மாட்டியே?"

"சொல்லு"

"நீங்க பில்டிங்க் கட்ட ஆரம்பிச்ச கொஞ்ச நாள் கழிச்சு நான் ராத்திரியில அந்த ஏரியாப் பக்கமா வந்து உங்க சைட்டை பார்த்துட்டுப் போவேன். அப்பத்தான் போன ரெண்டு மாசம் முந்தி செல்வராஜ் எனக்குப் பழக்கமானான். அவன் சொல்லித்தான் எனக்கு இன்னைக்கு ராத்திரி நீ தனியா இருப்பேன்னு தெரியும்?"

"அப்ப செல்வ ராஜுக்கு நீ என் மாமன் மகன்னு தெரியுமா?"

"தெரியாது உதி! யாரோ ஒரு தொழிலதிபர் கட்டிம் கட்டுறதுல ஆர்வம் உள்ளவர்னு தான் நான் சொல்லி வெச்சிருக்கேன். அவனுக்கு என் மேல சந்தேகம். அதனால என்னைக் கண்காணிச்சான். அதுவும் நல்லது தான்னு நான் விட்டுட்டேன்"

"உம்"

"எப்ப செல்வராஜ் நீ தனியா இருப்பேன்னு சொன்னானோ..அப்பவே நான் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். கண்டிப்பா அந்த ராஜகோபாலும் அவன் ஆட்களும் வருவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா அவங்க இத்தனை தூரம் விலாவாரியா திட்டம் போடுவாங்கன்னு நான் எதிரே பார்க்கல்ல" என்று தலையை உலுக்கிக் கொண்டான்.

"என்ன தான் திட்டம் போட்டாங்க அவங்க?"

"இப்ப அது எதுக்கு உனக்கு?"

"இல்ல எனக்குத் தெரிஞ்சாகணும். அப்பத்தான் நான் எதிர்காலத்துலயும் எச்சரிக்கையா இருக்க முடியும். சொல்லு ரவி"

"உன்னைக் கெடுத்து கொன்னுடறதா இருந்தானுங்க அந்த நாய்ங்க! நல்ல வேளை நான் வந்துட்டேன்" என்ன் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான். கதவு தட்டும் சத்தம் கேட்டு விலகினான். உள்ள வந்தார் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ்.

"பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சீங்க! ரவி இல்லாட்டா நீங்க இந்நேரம் ...." என்று இழுத்தார். அவரே தொடர்ந்தார்.

"முந்தா நேத்து ரவி எங்க கிட்ட வந்து உங்களைப் பத்தியும் ராஜகோபால் ஜெகன் இவங்களைப் பத்தியும் மனோகர் பத்தியும் சொன்னாரு. மனோகர் பேரு ஏற்கனவே கிரிமினல் ரெக்கார்டுல இருக்குறதால நாங்க உஷாராயிட்டோம். அவங்களைக் கையும் களவுமாப் பிடிக்கணும்னு மறைஞ்சி இருந்தோம். நீங்க ஸ்கூட்டியில வரும் போதே நாங்க குடோன் கிட்ட மறைஞ்சு தான் இருந்தோம். எல்லாத்தையும் ரெக்கார்டு பண்ணினோம் அப்பத்தான் எவிடென்ஸ் கிடைக்கும்னு. அவங்க உங்க ரூமுக்கு வரும் போது பாஞ்சு அமுக்கிட்டோம்" என்றான். ஏதேதோ பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விரைந்தார்.

"இது எல்லாமே உன் வேலை தானே? நீ என்னைக் காதலிக்குற இல்லியா? அப்ப ஏன் என்னை இப்படி சித்திரவதை செஞ்ச? முதல்லயே சொல்லியிருக்கலாமே?" என்றாள் உதயா கோபம் பாதி இனிமை பாதியாக.

"மக்கு மக்கு! அது உனக்கே தெரியணும். அதுவும் போக நீ என் நிழலா இருக்குறதை விட தனியா நின்னு சாதிச்சுக் காட்டணும்னு நெனச்சே பார்த்தியா அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உன் மன உறுதியைப் பாராட்டினேன். நீயே தனியா சாதிச்சா எங்க வீட்டுல உனக்கு மரியாதை கூடும்னு கணக்குப் போட்டேன். அதே நேரம் உன் கூட விளையாடவும் ஆசையா இருந்தது அதான் அப்படிப் பேசுனேன். " என்றான்.

அனைவரும் உள்ளே வந்தனர்.

"இது என்ன விளையாட்டு! அதை உண்மைன்னு நெனச்சுக்கிட்டு அவ ஏதாவது செஞ்சுக்கிட்டிருந்தா அப்ப என்ன ஆகும்?" என்றாள் ரவியின் தாய்.

"என் பேத்தி என்ன அத்தனை கோழையா? அது ரவிக்கு நல்லா தெரியும் அதான் விளையாடியிருக்காரு! சரி சரி! இனியும் காலம் கடத்த வேண்டாம். முதல்ல நிச்சயம் பண்ணிக்குவோம் அப்புறமா ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வெச்சிக்கலாம். இனியும் பிசினஸ் அது இதுன்னு டயம் கேக்க மாட்டா உதயா அப்படித்தானே?" என்றாள் பாட்டி குறும்புடன். வெட்கத்தோடு தலையை திருப்பிக்கொண்டாள் உதயா.

"உதி! நீ நம்ம வீட்டுக்கே வந்துடும்மா! உன்னை ஊக்கப்படுத்தாம வீட்டை விட்டு வெளியேத்தினேனே எனக்கு என் மாப்பிள்ளை நல்ல சூடு குடுத்துட்டார். இனி நீ தனியா இருக்க வேண்டாம். நம்ம வீடு தான் உன் ஆபீஸ் வீடு எல்லாமே" என்றார். அம்மாவும் அக்காவும் அவளை ஆசையோடு அணைத்துக்கொண்டார்கள். பாட்டியைப் பார்த்தாள் உதயா. தலையாட்டினாள் பாட்டி அதைப் புரிந்து கொண்டு "அப்படியே செய்யறேன் அப்பா" என்றாள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ரவி உதயா நிச்சயதார்த்தம். சொந்தங்கள் பந்தங்கள் சூழ அவளுக்கு மோதிரம் அணிவிக்க இருக்கிறான் ரவி. உதயா என்னும் பெண் செங்கல் பூக்களைக் கொண்டு இனி வித விதமான மாலைகள் என்னும் கட்டிடங்களை உருவாக்குவாள். அதற்கு ஸ்வேதா பாட்டி ரவி என அனைவருமே காவலாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. உதயாவின் வாழ்வில் இனியும் சவால்களும் சோதனைகளும் வரும். ஆனால் அவற்றை தன் கணவன், உறவினர் நண்பர்கள் உதவியோடு வெற்றிகரமாகக் கடப்பாள் அவள். உதயா என்னும் பெண் பெரிய தொழிலதிபராக வருவாள் நிச்சயம். அதற்கு உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும் தேவை. கொடுப்பீர்களா?
 

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
அன்பு நட்புகளே! உங்கள் வாசிப்பிற்கு நன்றி. செங்கல் பூக்கள் உங்கள் மனங்களைக் கவர்ந்த மலர் என்று உங்கள் பின்னூட்டத்தில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதையும் தமிழ் சீரியல் மாதிரி நீட்டிக்கொண்டே போகலாம். ஆனால் ஆர்வம் குறைந்து விடும் என்பதால் முடித்து விட்டேன். உதயாவும் ஸ்வேதாவும் சிறந்த தோழிலதிபருக்கான விருதெல்லாம் வாங்கப் போகிறார்கள். அவர்களது வாழ்க்கை இனிமையானதாக இருக்கும் நட்புகளே! அவர்களது நட்பு நீடிக்கும். நன்றி நன்றி நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்.
 
#9
தடைகள் பலவந்தாலும், அதை தாண்டி வெற்றி பெற்று விட்டாள்udhaya .superb story sis ravi maraimugamaga udaviathu arumai .oru, oru epiyum interestinga irunthathu. patti nice character sis udhaya so sweet..............
உதயாவின் வாழ்வில் இனியும் சவால்களும் சோதனைகளும் வரும். ஆனால் அவற்றை தன் கணவன், உறவினர் நண்பர்கள் உதவியோடு வெற்றிகரமாகக் கடப்பாள் அவள்
(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y):love::love::love::love::love::love:
 

Advertisements

Top