• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772



இறங்குமுகம்

வீராவின் கோபத்திற்குப் பதிலுரையாய் வந்தது அரவிந்தின் ஏளன சிரிப்பொலி!

அவனின் சிரிப்பு சத்தம் அவளுக்கு எரிச்சலை மூட்ட அவனோ சிரித்த மேனிக்கு, "அப்போ மிஸ்ஸஸ் சாரதின்னு ரெஜிஸ்டராயிருக்கே... அந்த வீரமக்காளி... நீ இல்லையா டார்லிங்?" என்றவன் எகத்தாளமாய் கேட்டு வைக்க,

"அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத மேட்டர்... ஒழுங்கா போஃனை மலர் கிட்ட கொடு" என்றாள். சில நொடி மௌனத்திற்குப் பின் அவனே மீண்டும்,

"நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு"

"என்னடா கேட்கனும்?"

"அந்த சாரதி உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பணியிருக்கான்னா... என்கிட்ட சொல்லு... நான் உன்னை காப்பாத்திறேன்" என்றான்.

"காப்பாத்திறியா... நீ யாருடா என்னை காப்பாத்த... எனக்கு ஒரு பிரச்சன்னைனா அத நானே சமாளிச்சிக்குவேன்... எனக்கு எவன் தயவும் தேவையில்ல... இன்னும் கேட்டா நான் சாரதி சாரை பிடிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கினேன்... நீ பாட்டுக்கு எதையாச்சும் கற்பனை பணிக்கினுன்னு மலரையும் போட்டு குழப்பி வைக்காதே... சொல்லிட்டேன்" அவள் படபடவென பொறிந்து தள்ள அரவிந்த மறுபுறம் ஆவேசமாய்,

"நான் உன்னை உயிரை கொடுத்து காதலிச்சிருக்கேன்... ஆனா நீ என்னை விட்டுட்டு போயும் போயும் அந்த பொறுக்கி புறம்போக்கை போய் பிடிச்சி... கல்யாணம் பண்ணிகினேன் சொல்ற" என்று கேட்டான்.

"அடிங்க! பொறுக்கி அது இதுன்னு சொன்ன கன்னம் பேந்திறோம்... யாருடா உன்னை என்னை காதலிக்க சொன்னது... நான் சொன்னேன்... என்னவோ உயிரை கொடுத்து காதலிச்சேன்... ம.. கொடுத்து காதலிச்சேன்னு பேசிட்டிருக்க"

"ஆமா... அவன் பெரிய உத்தம புருஷன் ... அவனுக்காக போய் கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாறி பொங்கிற" என்றவன் மேலும்,

"ஆனா லாஜிக் என்னவோ கரெக்ட்தான்டி ... கீப் வைசிருக்கிறவனுக்குதான் கண்ணகி மாறி பொண்டாட்டியெல்லாம் கிடைப்பா...ஆனா என்ன ? கண்ணகி புருஷனுக்கு ஒன்னுதான்... ஆனா உன் புருஷனுக்கு வாரத்துக்கு ஒன்னு ?" என்றான்.

அவன் சொன்னவிதம் வீராவிற்கு சுருக்கென்றிருந்தது. எதவும் பேச முடியாமல் அவள் மௌனமாகிட,

அரவிந்த் அதோடு நிறுத்தி கொள்ளாமல், "பாத்தும்மா... உன் தங்கசிங்களையும் அந்த லிஸ்ட்ல சேர்த்திர போறான்... உன் அருமை புருஷன்" என்க, அவளின் கோபம் எல்லையை மீறியது.

"என்னடா ஓவரா பேசிற?... போஃன்ல பேசிற தைரியமாடா ?" என்றவள் ஆக்ரோஷமாய் கத்த,

"எங்க பேசினாலும்... நான் இப்படிதான்டி பேசியிருப்பேன்" என்றான் அவன்.

"நீ மட்டும் என் முன்னாடி இப்படி பேசியிருந்த... மவனே! உன் சங்கை அறுத்திறுப்பேன்" என்று அவள் ஆவேசமாய் வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்.

"இந்த கோபத்தையெல்லாம் உன்னை வைசிட்டிருக்கான் பாரு... உன் புருசன்... அவன்கிட்ட காமிடி... யாருக்கு தெரியும்? அவன் ஒரு நாள் உன்னையும் உன் தங்கசிங்களையும் காசுக்காக விலை பேசி வித்தாலும் ஆச்சரிய படிறதுக்கில்ல"

"டே! அரவிந்த்" என்றவள் ரௌத்திரமாய் கத்த எதிர்புறத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவன் இறுதியாய் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை நொறுங்கிய கண்ணாடி துண்டுகளை போல சில்லுசில்லாய் உடைத்துப் போட்டிருந்தன!

தன் அறைக்குள் புகுந்தவள் கதவை தாளிட்டு கொண்டு ஓங்காரமாய் பொங்கி அழ, அவள் கட்டுக்குள் வைத்திருந்த அவளின் துயரங்கள் மொத்தமும் மடையை உடைத்த பெருவெள்ளமாக கரைபுரண்டு கண்ணீராய் வெளியேறின!

ஆனால் எவ்வளவு அழுதாலும் அவள் வேதனையும் வலியும் தீர்ந்ததென்றால் அதுதான் இல்லை. அது இன்னும் இன்னும் வளர்ந்து அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்க, அதன் முன்னிலையில் அவளின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் குன்றித்தான் போனது.

அதேநேரம் அரவிந்திற்கு வீரா மீதான வன்மமும் வஞ்சமும் வானுயர ஓங்கி நின்றதென்று சொன்னாலும் அது மிகையல்ல. வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையென அவன் முகமும் அகமும் அனலைக் கக்கி கொண்டிருக்க, சரத் தன் பார்வையாலேயே அவன் மனநிலையை ஆராய்ந்து ,

"நான் அப்பவே சொன்னேன்... வேணாம் அந்த பொண்ணுக்கிட்ட பேசாதன்னு... கேட்டியா... லூசு மாறி அவ மேல இன்னும் நம்பிக்கை இருக்கு தும்பிக்கை இருக்குன்னு சொல்லி பேசி... இப்போ அசிங்கப்பட்டு நிற்கிற... இப்போ இந்த விஷயம் அவ மூலமா அந்த சாரதி காதுக்கு போச்சு... அவன் நமக்கு திரும்பவும் ஆப்படிச்சிருவான்" என்க,

"தப்புதான் மாமா... நீங்க சொன்னத நான் கேட்டிருக்கணும்... கேட்காம... பெரிய தப்பு பண்ணிட்டேன்... நான் அவளை நம்பினதுக்கு என் மூஞ்சில நல்லா கரிய பூசிட்டா... என் காதலையும் என்னையும் அசிங்கபடுத்திட்டா" என்று பேசி கொண்டே அரவிந்தின் குரல் உச்சபச்ச சீற்றத்திலும் ஏமாற்றத்திலும் நடுக்கமுற்றது.

"இனிமையாச்சும் நான் சொல்றத கேளு" என்று சரத் அழுத்தமாய் உரைக்க,

அரவிந்த் அந்த நொடியே நிமிர்ந்து அமர்ந்து தன்னைத்தானே தெளிவுபடுத்தி கொண்டு, "கேட்கிறேன் மாமா... நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்... எனக்கு... அந்த சாரதியை நடுத்தெருவில நிறுத்தனும்... அப்புறம் என்னை வேணாம்னு சொல்லிட்டு... அவனை நம்பி போனாளே... அந்த வீரா... அவளை அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி பார்க்கணும்" என்று வெறிகொண்டு உரைதான்.

"கண்டிப்பா செய்யலாம் அரவிந்த்... ஆனா அவசரபடாம பொறுமையா இரு... நம்ம இனி எடுத்து வைக்க போற ஒவ்வொரு அடியும் அந்த சாரதிக்கு மரண அடியா இருக்கனும்" சரத் தீர்க்கமாய் யோசித்து பேச அரவிந்த் மௌனமாய் தலையை மட்டும் அசைத்தான்.

சிங்கத்தின் பலத்தை கூட வீழ்த்திவிடலாம்... ஆனால் நரியின் தந்திரத்தை... எப்பேர்பட்டவனுக்கும் ஏறுமுகம் என்று ஒன்றிருந்தால் இறங்குமுகமென்று ஒன்றிருக்கவே செய்யும். சாரதிக்கான இறங்குமுகம் அங்கே தொடங்கியது.

சாரதி தன் அலுவலகத்தில் தீவிரமான சிந்தனையில் இருந்தான்.

லாயர் ஜானிடம் தன் அம்மா கிறிஸ்டினாவின் சொத்துக்கள் பற்றிய முழு விவரங்களைக் கேட்டறிந்தவன் ... நிலபுலன் வீடு நகை மற்றும் பணம் யாவும் சிலப்பல கோடிகளைத் தாண்டுமென வேகமாய் மனதிற்க்குள்ளேயே கணக்கிட்டு கொண்டான்.

ஆனால் இந்தச் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ள தன் அம்மாவை நேரில் சென்று சந்திக்க வேண்டுமென்பதில்தான் அவனுக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. அவன் பிசினஸ் மூளையும் அவன் ஈகோவும் இந்த விஷயத்தில் ஒன்றோடு ஒன்று முட்டிமோதிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமோ இப்போதைக்கு அவனுக்கு பணதேவையில்லை என்பதுதான்!

அதேநேரம் தேவையேயில்லை என்று மானஸ்தன் பேர் வழியாக மாறிவிடவில்லை. தன் ஈகோவை விட்டு இறங்கிவராமல் அந்தச் சொத்தை எப்படி சொந்தமாக்கிக் கொள்வது என்ற சிந்தனைதான் அவனுக்கு! எப்படியும் அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் அதை அவன் வெகுவிரைவில் சாதித்து விடுவான். அதற்குக் காரணம் இன்று வரை அவனுக்கு உறவுகளையும் உணர்வகளையும்விட பணம் மட்டுமே பிரதானமாயிருந்தது. ஆனால் அந்த ப்ரையாரிட்டி(priority) வெகுவிரைவில் மாறப் போகிறது. அதுதான் அவன் வீழ்ச்சியின் முதல் படி.

******
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அந்தி சாய்ந்து அன்றைய இரவின் வருகையால் பூமி இருளின் பிடிக்குள் மூழ்கக் காத்திருக்க, வீராவோ பதட்டத்தோடு வாசலுக்கும் வீட்டிற்குமாய் நடந்து கொண்டிருந்தாள். அழுது அழுது அவள் கன்னங்கள் சிவந்து விழிகளிரண்டும் கருமையடர்ந்து உள்ளே போயிருந்தன. அரவிந்திடம் பேசிய நொடியில் இருந்து அவளின் மனக்கவலை பெருகியிருக்க, இதனால் உணவு கூட உண்ண மனமில்லாமல் முற்றிலுமாய் துவண்டு போயிருந்தாள்.

ஆனால் தங்கைகள் வர தாமதமாவதை அறிந்த பின் அவள் உடலுக்கு எங்கிருந்துதான் சக்தி பிறந்ததோ? ஏனைய கவலைகள் யாவும் பின்னுக்கு தள்ளப்பட்டு அவர்கள் ஏன் இன்னும் வரவில்லை என்ற கேள்வி மட்டுமே அவள் மனதைத் துளைத்து கொண்டிருந்தது.

அவள் தேடலும் எதிர்பார்ப்பும் ஒரு நிலைக்கு மேல் அச்சமாக மாறியிருக்க வேறு வழயில்லாமல் அப்போதைக்கு சாரதியே அவளுக்கு ஆபந்பாந்தவனாக தோன்றினான். ஆதலால் தன் பேசியின் மூலமாக அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

"தங்கச்சிங்க இன்னும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரல" அவன் அழைப்பை ஏற்றதுமே அவள் இவ்விதம் படபடத்து சொல்ல,

அவன் அலட்டிக் கொள்ளாமல், "என் கூடத்தான் இருக்காங்க... இன்னும் கொஞ்சம் நேரத்தில வந்திருவோம்" என்று சொல்லி முடித்து அவளுக்குப் பேச வாய்ப்பு கூட தராமல் உடனடியாய் அழைப்பைத் துண்டித்தான். அவன் சொன்ன வார்த்தைகளை அந்தச் சூழ்நிலையில் என்னவென்று அவள் அர்த்தம் கொள்வாள்.

அவளிருக்கும் மனநிலையில் நடப்பது எதுவும் அவளுக்குச் சரியாக தோன்றவில்லை. இன்னும் கேட்டால் இப்போதுதான் அவள் மனம் இன்னும் அதிகமாய் பீதியடைந்தது.

அதுவும் அவள் எதுவும் கேட்பதற்கு கூட வாய்ப்பு கொடுக்காமல் அவன் அழைப்பைத் துண்டித்தது அவள் வயிற்றில் ஏதோ தாறு மாறாய் உருண்ட உணர்வு!

அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. மீண்டும் அவன் பேசிக்கு அழைத்துப் பார்த்தாள்.அவனோ அவள் அழைப்பை ஏற்காமல் துண்டித்துவிட, அந்த நொடி அவள் விரும்பத்தகாத கற்பனைகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து அவளை அச்சுறுத்தின.

வியர்த்து வடிய நடுக்கத்தோடு அவர்கள் பத்திரமாய் வந்து சேர்ந்துவிட வேண்டுமென்று அவள் பதட்டத்தோடு காத்திருக்க,

சில நிமிடங்களில் சாரதியின் கார் அந்த பரந்த வாயிற்குள் நுழைய அப்போதே அவளுக்கு மூச்சு வந்தது. மூவரும் ஒன்றாக இறங்கிச் சிரித்த முகத்தோடு அளவளாவிக் கொண்டே வர, வீராவிற்கு கோபம் ஏகபோகமாய் ஏறிக் கொண்டிருந்தது.

அதுவும் அவர்கள் கார் நிறுத்தத்தில் இருந்து வாசலை நெருங்கிய போது நதியா தடுமாற சாரதி அவளைத் தாங்கி பிடித்துக் கொள்ள,

இந்தக் காட்சிகளை பார்த்த வீராவின் மனநிலையை விவரிக்கவா வேண்டும். அவள் ஏற்கனவே மோசமான மனநிலையில் இருந்தாள். இதெல்லாம் அவளுக்குள் தகித்து கொண்டிருந்த நெருப்பை இன்னும் இன்னும் பயங்கரமாய் கொழுந்துவிட்டு எரியச்செய்தது.

அமலாவும் நதியாவும் தன் தமக்கை வாசலிலேயே காத்திருப்பதை பார்த்து, "அக்கா" என்று அழைத்துக் கொண்டே அவள் அருகாமையில் செல்ல,

"ஏன் இம்மா நேரம்... எங்க போயிட்டு வர்றீங்க?!" முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

"மாமா சைக்கிள் வாங்கித் தர கடைக்கு" என்று அம்மு ஆரம்பித்து தன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னதாக வீரா அம்முவின் கன்னத்தில் அரைந்துவிட,

அப்போது, "அக்கா" என்று குரல் கொடுத்த நதியாவிற்கும் அதே வீரியத்தோடு அரை விழுந்தது.

உடனடியாய் சாரதி சீற்றமடைந்து, "வீரா" என்று அவள் மீது கை ஓங்கிவிட்டான். ஆனால் ஓங்கிய அவன் கரம் அங்கே நின்றிருந்த அவள் தங்கைகளையும் சமையல்காரன் முத்துவையும் பார்த்துப் பின்வாங்கிவிட்டது.

வீரா அவனைச் சட்டை செய்யாமல் தன தங்கைகள் புறம் திரும்பி, "நான் அவ்வளவு தூரம் சொல்றேன்... ஆனா நான் சொல்றதுக்கு கேட்காம சைக்கிள் வாங்க போயிருக்கீங்க" என்று அவள் கேட்க,

"இல்ல க்கா" என்று நதியா குறுக்கிட்டாள்.

"பேசாத... என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்... காசு பாத்ததும் நாம பட்டதெல்லாம் மறந்து போச்சா... அப்படி என்னடி சொகுசு வேண்டியிருக்கு" என்று வீரா இடித்துரைக்க நதியாவும் அமலாவும் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அழ ஆரம்பித்தனர்.

அப்போது சாரதி இடையிட்டு, "எதுவும் தெரியாம பேசாதே... அவங்க வேணான்னுதான் சொன்னாங்க... நான்தான் அவங்கள வம்படியா கூட்டிட்டு போனேன் கடைக்கு" என்று நிதானமாகவே அவன் அவளிடம் விளக்கம் தந்தான்.

வீராவின் பார்வை அவனை படுதீவிரமாய் முறைத்து பார்த்து, "எப்பவும் நேரங்காலம் பார்க்காம ஆபீஸை கட்டிக்கினு அழுவ... இப்போ மட்டும் என்ன புதுசா நேரத்தோட கிளம்பி அவங்களை போய் ஸ்கூல்ல இருந்து கூட்டின்னு வர போயிருக்க... அதுவும் சைக்கிள் வாங்கி தர" என்று கேட்கவும் அவன் பதிலளிக்க முனைவதற்குள்,

நதியா முந்திக்கொண்டு, "போதும் க்கா... இன்னா விஷயம்னு தெரியாம பேசாதே... அம்மு ஸ்கூல்ல விளையாடும் போது மயக்கம் போட்டு விழுந்திட்டா... அதான் ஸ்கூல்ல மாமாவுக்கு போஃன் பண்ணிட்டாங்க... அவர் வந்து அம்முவையும் என்னையும் கூட்டினு ஆஸ்பத்திரி போயிட்டு அப்புறமா... வர வழில கடைக்கு கூட்டின்னு போனாரு... இதெல்லாம் கேட்காம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசிற... அதுவும் காசுக்காக அது இதுன்னு" என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் தாங்க முடியாமல் தேம்பி அழ

"நதி" என்று வீரா ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டாள்.

"போ க்கா" என்று நதியா அவள் கரத்தை தட்டிவிட்டு,

" நீ வா அம்மு" என்று தன் தங்கையின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேலே சென்றுவிட்டாள் நதியா.

"நதி அம்மு நான் சொல்றதை கேளுங்க டி" என்று வீரா குரல் கொடுத்துக் கொண்டே அவர்கள் பின்னோடு செல்ல, அவர்களோ தங்கள் அறை நோக்கி சென்று கதவை மூடி கொண்டனர்.

வீராதலையை பிடித்து கொண்டு அறை வாசலில் தேங்கி நிற்க அப்போது சாரதி அவள் கரத்தை பிடித்து வலுக்கட்டாயமாய் அவன் அறைக்குள் இழுத்துச் சென்று உள்ளே தள்ளி கதவை படரென மூடினான்.

"நானும் பொறுத்து பொறுத்து போறேன்... நீ என்னடான்னா ரொம்ப ஓவரா போய்டிருக்க... பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு? என்ன எதன்னு கூட கேட்காம அந்த பசங்க மேல போய் கைய நீட்டிற... கண்ட மேனிக்கு பேசிற... அங்க உன் தங்கச்சிங்க இருந்தததால நீ தப்பிச்ச... இல்லன்னா உன் செவுலயே ஒண்ணு விட்டிருப்பேன்" என்று அவன் கேட்டு முடிக்க அலட்டி கொள்ளாமல் அவனை பார்த்தவள்,

"எதுக்கு நீ இப்போ என் தங்கச்சிங்க முன்னாடி ரொம்ப நல்லவன் மாறி சீன் ஓட்டிட்டிருக்க... அப்படியென்ன உங்களுக்கு அவங்க மேல கரிசனம்" என்று தம் கரங்களை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்து கேட்டாள்.

"என்கிட்ட அன்பா நடந்துகிறாங்க... நானும் அவங்க கிட்ட அன்பா அக்கறையா நடந்துக்கிறேன்... இதுல நீ அப்படியென்ன தப்பை கண்டுட்ட"

"அந்த அக்கறையும் அன்பையும் தான் என்னால நம்ப முடியல... அதுவும் காரியத்துக்காக காலையும் பிடிக்கிற ஆளாச்சே நீயி... அதான்... எதையோ மனசில வைச்சிக்கிட்டுதான் இப்படியெல்லாம் நடந்திக்கிறியோன்னு தோணுது"

"லூசு... அப்படியெல்லாம் இல்ல... நான் அவங்க கிட்ட இயல்பாதான் நடந்துக்கிறேன்"

"என்னால நம்ப முடியல"

"நம்ப முடியலன்னா? புரியல"

"உன்னை பத்தி அக்குவேற ஆணிவேற தெரிஞ்சவ நான்... அதுவும் நீ பொண்ணுங்க விஷயத்தில எப்படின்னு எனக்குதான் நல்லா தெரியுமே... அதான்... எங்க நீ உன் கேவலமான புத்தியை என் தங்கச்சிங்க கிட்ட காட்டிடுவியோன்னு பயமா இருக்கு"

வீரா இவ்விதம் சொன்ன மறுகணமே சாரதி கட்டுகடங்கா கோபத்தோடு, "என்னடி சொன்ன?" என்று ரௌத்திரமாய் கேட்டு அவள் கன்னத்தில் பளாரென்று அரைந்துவிட்டான். அவள் தள்ளி சென்று தரையில் விழ அவனோ அசைவின்றி அப்படியே நிலைகுலைந்து நின்றான்.

'அரையடி நாக்கு ஆறடி மனிதனைக் கொன்று விடுமாம்' வீராவின் வார்த்தை சாரதியை கொல்லாமல் கொன்றுவிட

அவன் உணராமலே அவன் விழிகளில் நீர் கோர்த்து நின்றது.

உறவுகளால் அவன் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் . உறவுகளோடு அவன் வாழாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக உறவுகளைக் கொச்சைப்படுத்துபவன் அல்லவே அவன்!
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi darlings,
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.
Here is the epi of veerasarathy. Today target over pa... அடுத்த எபி Sat or sun... யோசிச்சி சொல்றேன் மா... உங்க கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அரவிந்து நீ நல்லா உன் மாமன் பேச்சையேக் கேளு விளங்கிடும்....
பதட்டத்துல அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே வீரா!!! அந்த சொரவிந்த் பேச்செல்லாம் நீ உன் மூளைக்கு ஏத்தலாமா??
Nice update Monisha... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top