• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் ப்ரிண்ட்ஸ்,

இதோ இன்றைக்கான உங்க பதிவு... படிச்சிட்டு... நீங்க வீராவை திட்டினாலும் சரி.. சாராவை வாரினாலும் சரி... அதெல்லாம் உங்க இஷ்டம்... உங்க கஷ்டம்... என்னை ஏன்யா இதுக்குள்ள இழுகிறீங்க... மீ பாவம்... உங்களுக்குள்ள என்ன களேபரம் வேணா பண்ணிகோங்க... நான் எப்பவும் போல அள்ள அள்ள குறையாம வாரி கமெண்ட் தரும் பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவிச்சிட்டு எஸ்ஸாகிட்றேன்... என்னை எங்கயும் தேடாதீங்க... கிடைக்க மாட்டேன்... மீண்டும் நன்றி தோழமைகளே... பை பை
**************************************************************************************



இடம்மாறியது

சாரதிக்கு இரவு நடந்தது எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீரா எப்போது தன் அறைக்குள் வந்திருப்பாள்? என்ன நிகழ்ந்திருக்கும்? எப்படி அவள் தன்னோடு உறங்கிக் கொண்டிருக்கிறாள்? இப்படியாக வரிசையாய் அவன் மனம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, எதற்கும் அவனுக்குப் பதில் கிடைத்தபாடில்லை.

அம்மு நதியாவை அழைத்துக் கொண்டு மாலை வீடு வந்து சேர்ந்த போது... வீரா செய்த களேபரங்களும் அதற்குப் பின் அவள் தன்னை இழிவாய் பேசியதுவறையே அவன் மூளைக்குள் அழுத்தமாய் பதிவாகியிருந்தது. அதற்குப் பிறகு கோபத்தில் பாட்டில் பாட்டிலாய் மதுவை உள்ளிறக்கியது அவனுக்கு நினைவிருக்க , அதற்குப் பின் சுத்தமாய் துடைத்துவிட்டது போல இரவு நடந்த சம்பவங்களை குறித்த எந்தவொரு தடயமும் அவன் மூளையில் பதிவாகவில்லை.

‘இடியட்... ஒரு ப்ரேன்டா அடிச்சிருந்தாஇப்படியெல்லாம் நடந்திருகாதில்ல... ஒய் யூ க்ராஸ்ட் யுவர் லிமிட்ஸ்’ தலையிலடித்து மனதிற்குள்ளேயே தன்னைச் சாடி கொண்டபடி வீராவை பார்த்தவனுக்கு நேற்று அவள் பேசிய வார்த்தைகள் யாவும் காதிற்குள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.

‘அந்த பேச்சி பேசிட்டு... எதுவுமே நடக்காத மாறி நம்ம ரூம்ல... அதுவும் நம்ம பக்கத்தில தூங்கிட்டிருக்கா... இவளை’ என்று பொருமியவன், “ஏ வீரா... வீரா” என்று அவள் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முற்பட்டான்.

அவள் சிணுங்கியபடி, “இப்பதானே தூங்கினே... அதுக்குள்ள என்ன?” என்று தூக்க கலக்கத்தில் புலம்பி கொண்டு அவன் கரத்தை தன் கரத்தில் இறுக்கிக் கொண்டு வசதியாய் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

புது இரத்தம் பாய்ச்சியது போல் அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் புது உணர்வை அனுபவித்தான். பெண்களின் ஸ்பரிசம் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. சரச லீலைகளும் புதிதல்ல. ஆனால் இந்த உணர்வு சற்றே புதிது.

தன் கர வளையத்திற்குள் பல பெண்களை அவன் கிடத்தியிருக்கிறான். ஆனால் எந்தப் பெண்ணின் பிடிக்குள்ளும் அவன் சென்றதில்லை. இதுவே முதல்முறை... ஓர் பெண்ணின் பிடிக்குள்!

அவள் பிடி அத்தனை அழுத்தமாக இல்லையென்ற போதும் தன்னை விடுவித்துக் கொள்ள மனமில்லாமல் அவளின் அந்த நெருக்கத்தையும் தொடுகையையும் வெகுவாய் ரசிக்கத் தொடங்கியிருந்தான். காமத்துக்கும் காதலுக்குமான இடைப்பட்ட தூரத்தை அவன் கடந்து வந்த தருணம் அது!

அப்படியே அவள் பிடிக்குள் இருந்துவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு! ஆனால் அந்த உணர்வை முழுவதுமாய் அவனை அனுபவிக்க விடாமல் மீண்டும் அவன் செல்பேசி அழைக்க, அவள் விழித்துக் கொள்வாளோ என்ற பதட்டத்தோடு எட்டி அதனை அணைத்து விடலாம் என்று பார்த்தான். விழித்துக் கொண்டாள் அவள் தன்னை விட்டு விலகி விடுவாளே என்ற தவிப்பு அவனுக்கு !

அவன் எண்ணத்திற்கு ஏற்றார்போல் வீரா அந்தச் சத்தத்தில் விழிப்படைந்து விட்டாள். மெல்ல மெல்ல என்றல்லாது தடலடியாய் எழுந்து கொண்டாள். முன்னமே சாரதி அருகில் இருப்பதை உணர்ந்தே, அப்படி அதிர்ச்சியாய் விழித்துக் கொண்டாள் போலும்.

அவன் கரத்தை தான் பிடித்திருக்கிறோம் என்ற அறிந்த மறுகணமே விருட்டென தன் கரத்தை பிரித்துக் கொண்டு எழுந்தவள், அவன் இருப்பதைக் கண்டும் காணாதவளாய் எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.

“ஏ நில்லுறி” என்று அழைத்தபடி சாரதி அவளை வழி மறித்து நிற்க அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். அவனை எதிர்கொள்ள முடியாத படபடப்போடு!

“எப்போடி நீ என் ரூம்க்குள்ள வந்த...?” அவன் குழப்பமுற கேட்க, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள் வீரா!

“அப்போ நைட் நடந்தது எதுவும் உனக்கு ஞாபகத்தில இல்லையா?!”

“என்னடி நடந்துச்சு? நீ எப்படிறி என் பக்கத்தில வந்து தூங்கின”

“அப்போ உண்மையிலேயே உனக்கு எதுவும் ஞாபகத்தில இல்லையா?!” என்று அதே கேள்வியை அதே அதிர்ச்சியோடு மீண்டும் அவனிடம் அவள் வினவ... கடுப்பானவன்,

“அப்படி என்னடி நடந்துச்சு?” என்று கோபத்தோடு சற்றே அழுத்தமாய் கேட்டான்.

“அப்போ நீ குடி போதையிலதான் உளறினியா... நினைச்சேன்... நீ வேற மாறி நடந்துக்கும் போதே... சும்மாவா சொல்லி இருக்காங்க... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு” என்று அவள் பாட்டுக்கு ஒருபக்கம் புலம்ப தொடங்க, சாரதிக்கு என்ன நிகழ்ந்ததென்று இம்மியளவு கூட யூகிக்க முடியவில்லை.

“அப்படி என்னடி ஆச்சு... என்னதாண்டி பேசினேன்?” பொறுமையாகவே அவன் வினவ, அவளோ எரிச்சலோடு. “அந்த கர்மத்தை இன்னாத்துக்கு குடிக்கனும்... அப்புறம் எல்லாத்தையும் மறந்து தொலைக்கனும்” என்று கேட்டு நொடித்துக் கொண்டாள்.

“உன் கதாகலாச்சபத்தை நிறுத்திட்டு நடந்ததை சொல்லிறியா?”

“மறந்துட்ட இல்ல... அத்தோட வுடு... நான் போய் தங்கசிங்களை வேற எழுப்பி கிளப்பனும்” என்று அவள் அவசரமாய் அந்த அறைவிவிட்டு வெளியேற பார்க்க சாரதி அவளைப் போகவிடாமல் அவள் கரத்தை பற்றி அருகில் இழுத்து, “ஒழுங்க சொல்லிட்டு போ... எப்போ நீ என் ரூமுக்கு வந்த... நைட் என்ன நடந்துச்சு” என்று கேட்டான்.

“போயா... முதல போய் குளிச்சிட்டு வா... நைட்டு அடிச்சது நாருது” என்றபடி அவனை விட்டு அவள் விலக, “இவ்வளவு நேரம் என் பக்கத்திலேயே சாஞ்சி தூங்கினியே... அப்போ நாரலயா டி” என்றவன் இன்னும் இறுக்கமாய் அவளை நெருக்கி அணைத்தான்.

அவள் அவஸ்தைப்பட்டு அவனை தள்ள அவனோ சினத்தோடு, “நேத்து நைட் என்னை அந்த கேவளப்படுத்திட்டு... எந்த தைரியத்தில என் ரூம்க்குள்ள... வந்து என் பக்கத்திலேயே தூங்கின” என்று கேட்க,

“யாரு... நான்... உன் பக்கத்தில தூங்கினேனா ... நீதான் என் தோள் மேல சாஞ்சி தூங்கினே... நேத்து நைட் அய்யோ பாவம் மாறி எனக்கிட்ட பேசிட்டு... இப்ப இன்னாடன்னா அடப்பாவி மாறி நடந்திருக்க... விடுய்யா என்னை” என்று அவன் கரத்திலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள்.

“அப்படி என்னை பேசினே... ஒழுங்கா நீ இப்போ சொல்ற... இல்லன்னா அன்னைக்கு மாறி ஒரே லிப் டு லிப் தான்” என்றவள் இதழை அவன் நெருங்க அவள் வேகமாய் தன உதட்டை மூடிக் கொண்டு, “உஹும் உஹும்.... நான் சொல்றேன்” என்று அவள் தத்தளிக்க அவன் தள்ளி வந்தது, “அப்படி வா வழிக்கு... சொல்லு டி” என்றான் அழுத்தமாக!

“இப்ப வேணாம் யா ... தங்கச்சிங்க ஸ்கூலுக்கு கிளம்பனும்... நீயும் ஆபீஸ் கிளம்பனும்ல... நைட்டு சொல்றேனே” என்று தயக்கமாய் கேட்டவளை ஏற இறங்க பார்த்தவன், “நைட்டு சொல்ற... சொல்லல” என்றவன் இன்னும் நெருக்கமாய் அவள் இடையை பிடித்து இழுத்து கொஞ்சம் கிறக்கமாய் அவள் கழுத்துபுரத்தில் இறங்கி உரசினான்.

“ம்ம்ம்ம்மா” என்று அவள் சத்தமாய் கத்திவிட பதறி கொண்டு அவளை விடுவித்தவன், “ஒண்ணுமே பன்னல... அதுக்குள்ள ஓவரா ரியாக்ட் பன்ற... சீ போடி” என்றான். அவள் பெருமூச்செறிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த அறையை விட்டு ஓடிவிட்டாள்.

‘அப்படி என்னத்த பேசி தொலைச்சிருபோம்’ என்று சாரதி புலம்பிக் கொண்டே அலுவலகம் புறப்படுவதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கியவன் கிளம்புவதற்கு முன்னதாக, “வந்ததும் ஒழுங்கா சொல்ற” என்று அவளை எச்சரித்துவிட்டே சென்றான்.

அலுவலகத்தை அடைந்ததும் கணேஷ் அன்றைக்கான வேலைளை பட்டியலிட்டு பின் சற்று தயங்கி, “சார்... ஒரு விஷயம்” என்க,

“என்ன கணேஷ்?” என்று சிரத்தையேயின்றி கேட்டான் சாரதி!

“ஒரு ரேடியோ நிகழ்ச்சில உங்கள கெஸ்டா வர சொல்லி கேட்டிருக்காங்க... ஆனா நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு” என்று இழுத்தான்.

“ஏன் ஒத்துக்க மாட்டேன்?” என்று சாரதி அவனை நிமிர்ந்து பார்க்க,

“உங்களுக்கு லாபமில்லாத வேலையதான்... நீங்க செய்ய மாட்டீங்களே...அதான்”

“யார் சொன்ன லாபமில்லன்னு... அந்த நிகழச்சில என்னை சாரதி ஷாப்போட ஓனர்தானே அறிமுக படுத்துவாங்க... காசே இல்லாம ஓசி ல நம்ம கடைக்கு வர விளம்பரத்தை வேண்டான்னு ஏன் சொல்லன்னும் ... பேசாம அச்செப்ட் பண்ணிட்டு... டைம் கேட்டு வை... அன்.... அது என்ன நிகழ்ச்சி... என்ன மாதிரி கேள்வி கேட்ப்பாங்கன்னு லிஸ்ட் வாங்கிடு” என்று சொல்லி முடிக்க, நாம இப்படி ஒரு பார்வையில் யோசிக்கவே இல்லையே என்று கணேஷ் வியப்புற்றான்.

எத்தனை புத்திசாலியாக இருந்தாலும் அவனும் ஏதாவது ஒரு இடத்தில தவறு செய்து சிக்குவான். அப்படி சாரதி செய்த ஒரு தவற்றைத்தான் இப்போது சரத் அவனை அழிக்கும் ஆயுதமாக மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தான்.

சரத் தன் வக்கீலிடம் சில விஷயங்களை விவாதித்து அவர் கருத்தை கேட்டுக் கொண்டிருக்க அப்போது அரவிந்த் சரத்திடம்,

“திரும்பியும் இந்த மேட்டரை கிளறனுமா?” என்று கேட்டான் .

“வேற வழியில்லை” என்று சரத் தீர்க்கமாக தெரிவிக்க அரவிந்திற்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது. சாரதி விதைத்த வினை அவனுக்கே எதிராக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தது.

******
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அன்று அலுவல் வேலைகளை முடித்து சாரதி இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். வந்ததுமே அவன் பார்வை வீராவைத்தான் தேடியது. முத்துவிடம் அவர்கள் மூவரையும் பற்றி விசாரிக்க, “மூணு பேரும் சாப்பிட்டு தூங்க போயிட்டாங்க” என்க, “அதுக்குள்ள தூங்க போயிட்டாளா? அவளை” என்று அவன் வாய்க்குள்ளேயே வீராவை திட்டி கொண்டிருக்க, அவன் முகபாவனையை பார்த்து முத்து புரியாமல், “சார்” என்று அழைத்தான்.

சாரதி உடனே, “நத்திங்.... எனக்கு சாப்பாடு வேண்டாம்நு சொன்னேன்...நீ சாப்பிட்டு போய் படு” என்று சொல்லிவிட்டு தன் அறை நோக்கி கோபமாய் நடந்தவன்... அவர்கள் அறையைப் பார்வையிட்டபடியே தன் அறைக் கதவை திறந்து உள்ளே நுழைய, அப்போது வீராவோ அவன் அறைக்குள் மும்முரமாய் சில பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை உள்ளே பார்த்தது அவனுக்கு முதல் அதிர்ச்சியென்றால் அவன் அறையின் பொருட்கள் யாவும் இடம் மாறியிருப்பதை பார்த்து அடுத்த அதிர்ச்சி!

“ஏ வீரா” என்றவன் கோபமாய் அழைக்க, அவள் அலட்டிக் கொள்ளாமல் திரும்பி நின்று, “ஹ்ம்ம்” என்று புருவத்தை உயர்த்தினாள்.

“என்னடி பண்ணி வைச்சிருக்க என் ரூமை” என்றவன் குழப்பமாய் சுற்றும்முற்றும் பார்க்க, “உன் ரூமா? நம்ம ரூம்... நீதானேய்யா சொன்ன... நம்ம ப்ஃரஸ்ட் நைட் அன்னைக்கு... ச்சே! என் ப்ஃரஸ்ட் நைட் அன்னைக்கு” என்றாள்.

முதலில் கோபத்தோடு அவளை முறைத்தவன் பின் தன்னைதானே நிதானப்படுத்தி கொண்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழமாய் அவளை ஒரு பார்வை பார்த்து,

“நம்ம ரூம்... சரிதான்... ஆனா யாரை கேட்டு இதெல்லாம் நீ மாத்தி வைச்ச” என்று கேட்கவும் அவள் சர்வசாதர்ணமாய்

“யாரை கேட்கனும்?” என்றாள்.

“என்னை கேட்கனும்”

“எதுக்கு? நீ மட்டும் என்னை கேட்டுக்கினா எல்லாத்தையும் செய்ற... ஏன்? நம்ம கல்யாணத்துக்கு கூட நீ என்னை கேட்கலையே” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் பார்வை குனிந்து மேஜையிலிருந்த ஹேஷ் ட்ரேவை தேடியது.

“ஏய்... எங்கடி இங்கிருந்த ஹேஷ் ட்ரே?” என்றவன் பார்வை அதனைத் தேடி கொண்டே கேட்க,

“அது எனக்கு பிடிக்கல.... எடுத்து போட்டேன்” என்று அலட்டி கொள்ளமால் பதிலளித்தாள் அவள்!

“உன்னை” என்ற சீற்றமாய் அவளை நெருங்கப் போனவன்,

அங்கே காலியாய் கிடந்த கப்போர்டை கண்டு... அடுத்த கட்ட அதிர்ச்சிக்குள்ளாகி அப்படியே சிலையாய் நின்றுவிட்டான்.

“எங்கடி இங்க இருந்த பாட்டில் லாம்?”

“அந்த கர்மத்தையெல்லாம்.... நான்தான் தூக்கி பக்கத்துக்கு காம்பௌண்டில வீசிட்டேன்” என்றாள் வெகுஇயல்பாக!

“அடிப்பாவி! தூக்கி போட்டதில்லாம... அதுவும் பக்கத்துக்கு கம்பௌன்ட்ல வேற தூக்கி போட்டிருக்கியா?” என்று தலையிலடித்து கொண்டவன்

மீண்டும் அவளை நிமிர்ந்து நோக்கி, “இன்னும் வேற என்னலான்டி செஞ்சி வைச்சிருக்க... அதையும் சொல்லுடி” என்றான்.

“அவ்வளோதான்” என்று அவள் சாதாரணமாய் சொல்ல, “அவ்ளோதனா?!!” என்றபடி ஆவேசமாய் அவன் அவள் புறம் படையெடுக்க, வீரா அச்சத்தோடு பின்வாங்கினாள்.

“இரு ய்யா... இப்ப இன்னாத்துக்கு நீ டென்ஷனாவுற... எதுவாயிருந்தாலும் பேசி தீத்துக்கலாமே!” என்று சொல்லி கொண்டே அவள் தப்பிக்கும் உபாயத்தை தேட,

“பேசிறதா... மவளே ! நீ செஞ்ச வேலைக்கு உன்னை” என்றவன் அவளை எட்டி பிடிக்க பார்க்க, “வேணாம்” அவள் தப்பி அங்கிருந்த படுக்கை மீது ஏறி குரங்கு கணக்காய் இருபக்கமும் தாவிதாவி சென்றவளை, “இன்னைக்கு என்கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது” என்றபடி சாரதி அவளைப் பிடிக்க இருபுறமும் அணைக்கட்ட அவள் தவித்து போனாள்.

“இரு ய்யா... நானே வந்திடிறேன்” என்றவள் சமாதானக் கொடியை பறக்க விடவும், “அப்ப ஒழுங்கா கீழ இறங்கு” என்றபடி கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்தான்.

“நான் உன் நல்லதுக்காகதான் அதெல்லாம் தூக்கி போட்டேன்” என்று பவ்வியமாய் அவள் பதில் சொல்ல,

“பார்றா! என் நல்லதுக்காக” என்று கேட்டு கேலி சிரிப்போடு அவளைப் பார்த்து, “போதும் டி... உன் ஆக்டிங்கை நிறுத்து?” என்றான்.

“ஐயோ ! சத்தியமா” என்று அவன் தலையிலேயே அவள் கை வைக்க, “அடிங்க!” என்று மீண்டும் அவளிடம் எகிறினான்.

“இருய்யா, கொஞ்சம் சொல்றதை கேட்டுட்டு கோபப்படேன்”

“என்னடி கேட்கனும்?... நேத்து இதே வாய்தானே என்னை கன்னாபின்னான்னு பேசுச்சு ... இப்ப என்னடி... அப்படியே தலைகீழா மாத்தி பேசுது”

“அதுக்குதான் நேத்தே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்ல... அப்புறம் ஏன் திரும்பியும் முதல இருந்து வர்ற”

“மன்னிப்பு கேட்டியா...இது எப்போ?!”

“நேத்து நைட்தான்”

“நான் குடிசிருந்தேனே... அப்பவா”

“ஆமா... நீ எப்ப தெளிவா இருக்க குடிசிருக்கன்னு யாருக்குய்யா தெரியுது...”

“சரி... நீ எதுக்கு அந்த டைம்ல என் ரூம்க்குள்ள வந்த”

“அது... அது வந்து” அவள் தடுமாற,

“ப்ச்... மேல சொல்லு” என்றபடி அவளையே விழி எடுக்காமல் பார்த்து கொண்டு நின்றான்.

“அது.... எல்லாம் என் தங்கச்சிங்க பண்ண வேலை”

“என்ன பண்னாங்க?”

“அது... நமக்கு கல்யாணம் முடிஞ்சதால... நான் உன் ரூம்ல தான் படுக்கனும்னு சொல்லி... அந்த பெரிய மனிஷிங்க... என்னை இங்க துரத்தி விட்டாளுங்க... அதான் வேற வழியில்லாம்” என்றதும் சாரதி நமட்டு சிரிப்போடு அவளைப் பார்த்து, “உன் தங்கச்சிங்களுக்கு புரிஞ்ச விஷயம் கூட உனக்கு புரியல” என்க,

அவள் பதில் பேசாமல் அவனை விழிஇடுங்க பார்த்தாள்.

“சரி அதை விடு... நேத்து நைட் என்ன நடந்துச்சு” அவன் கேட்கவும்,

“என்ன நடந்துச்சு? நீ பாட்டுக்கு குடிச்சிட்டு ஏடாகுடமா என்கிட்ட புலம்பின... அவ்ளோதான்” என்றாள்.

“நான் புலம்பினேன்... அதுவும் உன் கிட்ட... சும்மா கதை விடாதே”

“சத்தியமா” என்று மீண்டும் அவன் தலையில் கை வைக்க வந்தவளை, “அடிங்க! உன் சத்தியமும் வேணாம்... ஒன்னும் வேண்டாம்... எதாச்சும் ரோமன்டிக்கா நடுந்துச்சா... அதை மட்டும் சொல்லு” என்று கல்மிஷமாய் சிரித்தபடி அவன் கேட்கவும் அவள் கடுப்பாகி,

“மூஞ்சி... அதெல்லாம் ஒண்ணும் நடக்கல”என்றாள்.

அவன் தனக்குத்தானே, “என்ன சாரதீ?... ஒரு நல்ல சீனை மிஸ் பண்ணிட்டியே” என்று சொல்லி கொண்டு வருத்தப்பட அவள் பதட்டமானாள்.

அவனோ அந்த நொடி அவளை ஒரு மார்க்கமாய் அளவெடுத்துப் பார்க்க,

“அப்படியெல்லாம் பார்க்காதய்யா... நான் என் தங்கச்சிங்க சொன்னதாலதான் இந்த ரூமுக்குள்ள வந்தேன்... நீ பாட்டுக்குக் கண்ட மேனிக்கு யோசிக்காத” என்க,

அவன் மேலும் விஷமமாய் சிரித்து கொண்டே அவள் அருகில் வர,

“இத பாரு... என் தங்கச்சிங்க உன்ன ரொம்ப நம்பிறாங்க... ரொம்ப மதிப்பு வைச்சிருக்காங்க... இன்னும் கேட்டா உன்னை ஒரு ஹீரோ மாறி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க... ஆனா அவங்குளுக்கு உன்னை பத்தி முழுசா தெரிஞ்சா” என்று அவனை நெருங்க விடாமல் அவள் விலகிச் செல்ல,

“தெரிஞ்சா?!” என்று அலட்டிக்கொள்ளாமல் வினவினான்.

“உன் மேல இருக்கிற மதிப்பு போயிடும்... மனசு உடைஞ்சி போயிடுவாங்க” என்று வருத்தத்தோடு அவள் சொல்ல, “அதனால” என்று கேட்டு கொண்டே அவளை நோக்கி வந்தான்.

“அதான் இந்த ரூம்ல இருந்த பாட்டில் எல்லாத்தையும் நான் தூக்கி போட்டேன்”

“ஓ!” என்றான்.

அவளோ, “ப்ளீஸ்... அவங்க முன்னாடி மட்டுமாச்சும் நீ கொஞ்சம் நல்லவனா இருந்துட்டு போயேன்” என்க,

“அவங்க முன்னாடி மட்டும்தானே... ஹ்ம்ம் இருந்துட்டா போச்சு... ஆனா” என்றவன் இழுக்க,

“ஆனா என்ன?” என்று அவனைச் சந்தேகமாய் பார்த்தாள்.

“நீ.... எனக்கு நல்லவளா இருக்கனும்” என்றான்.

“புரியல”

“அடாவடிதனமெல்லாம் பண்ணாம சமத்தா நான் சொல்றதெல்லாம் கேட்கனும்... அதாவது எனக்குப் பொண்டாட்டியா இருக்கனும்” என்று அவள் கன்னத்தை கிள்ள அவள் அவன் கரத்தை வெறுப்பாய் தட்டிவிட்டு,

“ச்சே! நேத்து அவ்வளவு போதையிலையும்... ஒழுங்கா நடந்திக்கின” என்றாள்.

“அதுவா பேபி... உள்ள போன சரக்கும் நெகடிவ் ... நம்மளும் நெகடிவா... அதான் பாசிடிவாயிடுச்சு... இப்போ ஒன்லி நெகடிவ்”

“உனக்கு போய் பாவம் பார்த்தேன் பார்... என்னை” என்று அவள் பல்லை கடித்துக் கொண்டு வாயிற்குள்ளேயே முனக,

“இப்போ ஏன் இவ்ளோ யோசிக்கிற... உன்னோட தேவையென்ன... உன் சிஸ்டர்ஸோட எதிர்காலம் ரைட்... அதை நீ என்கிட்ட விட்ரு... அவங்களுக்கு தி பெஸ்ட்டா எல்லாம் கொடுக்கிறேன்... நீ” என்றவன் பேசி முடிக்கும் முன்னரே அவள் இடையிட்டு,

“ஓ!... உன் தேவையை நான் பூர்த்தி செய்றேன்... நீ என் தேவையை பூர்த்தி செய்யிங்கிறியா?”

“பாயிண்ட்” என்றபடி அவன் அலட்சியமாய் தோள்களை குலுக்கினான்.

அவள் அந்த நொடி விரக்தியாய் ஒரு புன்னகையை உதிர்த்து,“சும்மா சொல்ல கூடாது... பக்கா பிசினஸ்மேன்யா நீ” என்றாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top