• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மதுவின்
"வேந்தா...." என்ற அழைப்பில் திகைத்துப் போய் நின்றான் அருள்.


"தன்னை வெறுத்து ஒதுக்க நினைக்கும் மது தன் பெயரை சொன்னாலா? அதுவும் யாரும் தன்னை இது வரை அழைத்திராத பெயரில்.." என ஆச்சரியமாக மதுவை பார்த்து கொண்டிருந்தான் அருள்.


ஸ்ரீதர் உள்ளே வரவும் சட்டென்று தன் கைகளை எடுத்து கொண்டவன்
"நான் வரேன் ஸ்ரீதர்.." என்று நிமிர்ந்தும் பாராமல் கூறி விட்டு வெளியேறி சென்றான்.


அருளின் மனதில் பல்வேறு விதமான குழப்பங்கள் சூழ்ந்து கொள்ள தலையை பிடித்து கொண்டு கீழே அமர்ந்து கொண்டான்.


அவசரமாக அவனருகில் ஓடி வந்த வினித்
"என்னடா அருள் இது இப்படி உட்கார்ந்துட்ட? எழும்புடா வா வீட்டுக்கு போகலாம்" என்று அவனை எழுப்பி வீட்டிற்கு அழைத்து சென்றான்.


ஸ்ரீதர் தன் போனை எடுத்து அருணாவிடம் மதுவை ஹாஸ்பிடலில் வைத்திருக்கும் விடயத்தை கூற அடித்துப் பிடித்து கொண்டு ஓடி வந்தார்.


மதுவின் அருகில் இருந்து கொண்டு அருணா கண்ணீர் விட அவர் கைகளை பிடித்து கொண்டு மண்டியிட்டு அமர்ந்த ஸ்ரீதர்
"மதுவுக்கு ஒண்ணும் ஆகாதுமா. நீங்க வீணா கவலைப்பட வேண்டாம்" என்று கூறி கொண்டே அவர் கண்களைத் துடைத்து விட்டான்.


சிறிது நேரம் அமைதியாக இருந்த ஸ்ரீதர்
"அம்மா நான் ஒரு விஷயம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" என்று கேட்கவும்


"அப்படி எல்லாம் எதுவும் நினைக்க மாட்டேன். என்ன விஷயம் சொல்லு ஸ்ரீதர்?" என்று கூறினார் அருணா.


"இரண்டு வருஷத்துக்குள்ள நிறைய மாறிடுச்சு. மது கொஞ்சம் கொஞ்சமாக அவளோட பழைய நிலைமைக்கு வந்துட்டா இல்லைமா?" என்று ஸ்ரீதர் கேட்கவும்


அவனைப் பார்த்து சிரித்த அருணா
"இப்போ எதுக்கு நீ இவ்வளவு பீடிகை போடுற ஸ்ரீதர்? சொல்ல வந்ததை முழுசா சொல்லு" என்று கூற


"மது மால்ல ஒரு பையனைப் பார்த்தாலே. அந்த பையன் இப்போ வந்து மதுவை கல்யாணம் பண்ணிக்க கேட்டா என்ன பண்ணுவீங்கமா?" என்று கேட்கவும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தார் அருணா.


"என்ன ஸ்ரீதர் விளையாடுறியா? அந்த பையனுக்கு உண்மையாகவே என் பொண்ண கல்யாணம் பண்ணணும்னு எண்ணம் இருந்திருந்தா அத்தனை பேர் முன்னாடி அப்படி நடந்துருக்க மாட்டானே. அவனுக்கு அப்படி எந்த நோக்கமும் இருந்த மாதிரி தெரியலையே. இல்லேனா இந்த இரண்டு வருஷமா மது கஷ்டப்படும் போது அவளை தேடி வந்துருப்பானே. அப்படி எதுவும் நடக்கலையே" என்று இடை நிறுத்திய அருணா


"ஆனா என் பொண்ணு ஆசைப்பட்டா அந்த பையனுக்கே அவளை கட்டி வைக்க நான் தயங்க மாட்டேன்" என்று கூறவும் அவரை ஆச்சரியமாக பார்த்தான் ஸ்ரீதர்.


பின்னர் மீண்டும் அதை பற்றி பேசாமல் ஸ்ரீதர் வேறு விடயங்கள் பற்றி பேச அருணாவும் அந்த விடயம் பற்றி மறந்து போனார்.


முழுதாக மூன்று நாட்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்த மது மூன்றாம் நாள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்.


ஹாஸ்பிடலில் இருந்த மூன்று நாட்களும் மது பெரிதாக யாரிடமும் பேசி கொள்ளவில்லை.


மதுவின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளை கண்காணித்து வந்த ஸ்ரீதர் மதுவிடம் இதை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.


மதுவை வீட்டிற்கு கொண்டு வந்த பின்பு அருணா வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி செல்லவும் ஸ்ரீதரும் அவரிடம் கேள்வி எதுவும் கேட்காமல் அவரை அனுப்பி வைத்தான்.


"மது கிட்ட கண்டிப்பாக பேசியே ஆகணும்" என்று வீட்டினுள் ஸ்ரீதர் நுழைய


"என்ன யாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது ஸ்ரீ???" என்ற மதுவின் கேள்வியில் ஒரு கணம் திகைத்துப் போய் நின்றான் ஸ்ரீதர்.


"எ...என்ன கேட்ட மது??" என்று ஸ்ரீதர் கேட்கவும்
அவனைக் கூர்மையாக பார்த்த மது


"என்ன யாரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதுனு கேட்டேன்?" என்று கேட்டாள்.


"நான் இவகிட்ட பேசணும்னு வந்தது இவ என்னை கேள்வி கேட்குறாளே!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஸ்ரீதர்


"அது...அது வந்து...அரு...அது...நான் தான் மது அட்மிட் பண்ணேன். ஏன் இப்படி கேட்குற?" என்று திக்கித் திணறி கேட்டான்.


"உண்மையாகவே நீ தான் அட்மிட் பண்ணியா?" என்று மது கேட்கவும்


"நீ ஆபீஸ்ல இருக்கும் போது நான் தானே உன் ரூமுக்குள்ள வந்தேன். அப்போ தானே நீ மயங்கி விழுந்த. அப்போ நான் தானே அட்மிட் பண்ணி இருப்பேன்" என்று ஸ்ரீதர் கூற அவனை நம்பாமல் பார்த்தாள் மது.


"ஏன் இப்படி சந்தேகமாகவே பார்க்குற மது? நான் இதற்கு முதல் உன் கிட்ட எதையாவது மறைச்சிருக்கேனா? ஏன் இப்படி நம்பாமல் கேட்டுட்டே இருக்க?" என்று ஸ்ரீதர் கேட்கவும்


"அப்போ அருள் எப்படி ஹாஸ்பிடல்க்கு வந்தான்?" என்ற மதுவின் கேள்வியில் திக்குமுக்காடி போய் நின்றான் ஸ்ரீதர்.


"அரு...அருள்..அருளா??..அப்படி...."


"அருள்னு யாரையும் தெரியாதுனு சொல்லப் போறியா ஸ்ரீ??" என்று மது கேட்கவும் கையை பிசைந்து கொண்டு நின்றான் ஸ்ரீதர்.


"நான் பார்த்தேன் ஸ்ரீ. அவனைப் பார்த்தேன். என் கை மேல அவன் கையை வைச்சு அவன் பேசும் போது நான் பார்த்தேன் ஸ்ரீ. இல்லேனு மட்டும் பொய் சொல்லாத. அவன் முகத்தை நான் மறக்கல. அவன் பேசுனது ஒண்ணுமே எனக்கு
கேட்கல. ஆனா அவன் முகம் அவ்வளவு வேதனையாக இருந்துச்சு. ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு ஸ்ரீ" என்று மது அதட்டலாக கேட்க அமைதியாக நின்றான் ஸ்ரீதர்.


"சொல்லு ஸ்ரீ..." என்று ஸ்ரீதரின் தோளைப் பிடித்து அவள் உலுக்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் அருளை அடித்தது முதல் மதுவின் கடந்த காலம் பற்றி கூறியது வரை சொல்லி முடித்தான்.


"அப்போ என் கடந்த காலத்தை பற்றி தெரிஞ்சுகிட்டு தான் அவன் திருந்துனானா? இல்லேனா இப்படி எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிக்குறதா இருந்தானாம் அவன்?" என்று மது கோபமாக கேட்கவும்


அவள் கைகளை பிடித்து கொண்ட ஸ்ரீதர்
"தப்பா பேசாதே மது! அருள் அப்படிபட்டவன் இல்ல. இரண்டு வருஷமா உன்னையே நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான். அவன் ஏமாத்துரவனா இருந்தா இரண்டு வருஷமா உனக்காக ஏன் காத்துட்டு இருக்கப் போறான். வேற பொண்ண பார்த்துட்டு போய் இருப்பான்லே?" என்று கூற


ஸ்ரீதரின் கைகளில் இருந்து தன் கையை எடுத்து கொண்ட மது
"சபாஷ்...சபாஷ்...." என்று கைகளை தட்டினாள்.


ஸ்ரீதர் குழப்பமாக பார்க்கவும் அவனை முறைத்து பார்த்தவள்
"எப்போ இருந்து ஸ்ரீ நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்ச? இவ்வளவு நாள் உனக்கு தப்பா தெரிஞ்சவன் இப்போ திடீர்னு நல்லவனா தெரியுறானா?" என்று கேட்க
என்ன சொல்வது எனப் புரியாமல் தவித்தான் ஸ்ரீதர்.


"அப்படி இல்லை மது. நானும் அவனைக் கொன்னு போட்டாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு கோபமாக தான் இருந்தேன். உன்னை ஏமாத்தணும்னு நினைச்சு இருந்தா எப்போவோ வேற பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பானே. இரண்டு வருஷமா உன் பேர், நீ இருக்குற இடம் தெரியாமல் அலைஞ்சு திரிஞ்சுருக்கான்.


சின்ன வயசுல இருந்து உன்னையே சுற்றி சுற்றி வந்த கார்த்திக் அவங்க அம்மா பேச்சை கேட்டு உன்னை விட்டுட்டு போயிட்டான் தானே. அவனுக்கு உண்மையா உன் மேல காதல் இருந்திருந்தா இந்த இரண்டு வருஷத்துல ஒரு நாளாச்சும் உன்ன தேடி வந்துருக்கனுமே. அதற்காக அருள் பண்ணது சரினு நான் நியாயப்படுத்தல.
நீ அவனுக்கு வாழ்க்கை பூரா துணையா வரவேணும்ங்கிற எண்ணத்தில் அப்படி நடந்துருப்பான். நடந்ததையே நினைச்சு வீணா உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம பொறுமையாக இருந்து எல்லாத்தையும் யோசிச்சு பாரு. உனக்கே புரியும். உன் மனசுல கார்த்தி இருக்கானா? இல்ல...... அருள் இருக்கானானு" என்று விட்டு ஸ்ரீதர் வெளியேறி சென்று விட விழித்து கொண்டு நின்றாள் மது.


"என் மனசுல அருளா???? நோ....அவன் என் வாழ்க்கையை அழிச்சவன். அவனை போய் நான் நினைச்சுட்டு இருப்பேனா?" என்று மது பேசிக் கொண்டிருக்க


அவள் ஆழ் மனதோ
"அவனை இந்த இரண்டு வருடத்தில் ஒரு நாள் கூட நீ நினைத்து பார்க்கவில்லையா?" என்று கேள்வி எழுப்ப திகைத்துப் போனாள் மது.


"இந்த இரண்டு வருடத்தில் நான் கார்த்திக்கை ஒரு தடவை கூட நினைத்து பார்க்கவில்லையே! ஆனால் அருளை நான் திட்டுவதற்காக என்றாலும் நினைக்காத நாள் இல்லையே!" என்று எண்ணிய மது முற்றிலும் குழம்பி போனாள்.


தலையை பிய்த்து கொள்ள வேண்டும் போல இருக்கவும் மது அவள் மன அமைதியை நாடும் பூஜையறையை நோக்கி சென்றாள்.


கடவுள் படங்களுக்கு நடுவில் நடு நாயகமாக வீற்றிருந்த அருணாசலத்தின் படத்தின் அருகே சென்று மது நின்றாள்.


கண்கள் கலங்க அவரை பார்த்து கொண்டு நின்ற மது
"அப்பா எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்குபா. ஸ்ரீ என்னனென்னமோ சொல்லுறான். நான் அந்த அருளைப் பற்றி யோசித்து பார்த்துருக்கேன். ஆனா கார்த்தி இருந்த இடத்தில் அருளை ஒரு நாளும் நினைக்கலையே! அப்பா நீங்க எனக்கு எப்போதும் துணையாக இருக்கனும்பா" என்று கண் மூடி வேண்டிக் கொண்ட மது அவர் படத்தை தொட்டு வணங்கும் போது அவர் படத்தின் கீழ் ஒரு பேப்பர் இருக்கவும் அதை கையில் எடுத்தாள் மது.


காரில் சென்று கொண்டிருந்த ஸ்ரீதர் பல்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருந்தான்.


"அருள் பண்ணது தப்பு தான் இருந்தும் நான் ஏன் அவனை நியாயப்படுத்தனும்? மதுவுக்கு ஒரு கஷ்டம்னு சொன்னதும் அவன் அப்படி துடிச்சுப்போயிட்டானே! அவன் மேல என்னால கோபம் கொள்ள முடியலையே ஏன்??" என்றவாறு யோசித்துக் கொண்ட ஸ்ரீதர் எதிரில் நடந்து வந்தவர்களைப் பார்த்து சட்டென்று காரை நிறுத்தினான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அருணாவுடன் பேசி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த அருள் எதிரில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தான்.


அவர்களின் முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீதரை பார்த்து அருள் ஆச்சரியமடைய அருணாவோ அதிர்ச்சியடைந்து நின்றனர்.


"ஸ்ரீதர்......" என்று ஒரு சேர அருளும், அருணாவும் கூற அவர்கள் இருவரையும் கேள்வியாக பார்த்து கொண்டு நின்றான் ஸ்ரீதர்.


"ஸ்ரீதர் நீ எங்க இங்கே? மது வீட்ல தனியா இருக்குறாளா?" என்று அருணா கேட்கவும் அவரை வியப்பாக பார்த்தான் அருள்.


அருள் ஏதோ பேச வரவும் அவசரமாக அவனை பார்த்து
"வேண்டாம்...." என்பது போல் தலையை ஆட்டிய ஸ்ரீதர்


"ஒரு வேளையாக வெளியே வந்தேன்மா.
ஆமா நீங்க இங்க எங்கே? அதுவும் அருள் கூட?" என்று கேட்டான்.


"அது நான் ஒரு வேளையாக வந்தேன் ஸ்ரீதர். மது தனியாக இருப்பா நான் கிளம்புறேன்" என்று விட்டு அருணா செல்லப் போக அவரை வழி மறித்து நின்றான் ஸ்ரீதர்.


"அம்மா நீங்க எதையோ மறைக்க பாரக்குறீங்க. இப்போ நீங்க என்ன விஷயம்னு சொல்லலேனே மது கிட்ட நான் உங்களை இங்கே பார்த்ததை சொல்ல வேண்டி இருக்கும்" என்று ஸ்ரீதர் கூறவும் அமைதியாக நின்றார் அருணா.


"நான் சொல்றேன் ஸ்ரீதர் அவங்க எதுக்கு என்னை மீட் பண்ண வந்தாங்கனு" என்று அருள் கூறவும்


"வேண்டாம் தம்பி வேண்டாம்...." என்று அவசரமாக அருணா மறுக்கவும் அவரை விசித்திரமாக பார்த்தான் ஸ்ரீதர்.


"நீ சொல்லு அருள் அம்மா எதுக்கு உன்னை பார்க்க வந்தாங்க?" என்று ஸ்ரீதர் கேட்கவும்


"ஐ யம் ஸாரி மா..." என்று அருணாவைப் பார்த்து கூறிய அருள்


ஸ்ரீதரின் புறம் திரும்பி
"அருணா அம்மாவுக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு. ஓவர் எமோசனல் ஆனாலோ வேற எதுவும் சடன் இன்ஸிடன்ஸ் நடந்தாலோ அவங்க ஹார்ட்டை அது பாதிக்கும். கடந்த ஒன்றரை மாசமா என் கிட்ட தான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க" என்று கூற உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ஸ்ரீதர்.


"அம்மா......" என்று வேதனையுடன் குரல் கம்ம ஸ்ரீதர் அருணாவின் தோள் தொட கண்கள் கலங்க அவனைப் பார்த்தார் அருணா.


"இந்த விஷயம் மதுவுக்கு தெரிஞ்சா ரொம்ப உடைஞ்சு போயிடுவானு தான் நான் இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லல ஸ்ரீதர். எனக்கு சத்தியம் பண்ணி கொடு. மதுகிட்ட இந்த விஷயத்தை பற்றி சொல்ல மாட்டேனு சத்தியம் பண்ணு" என்று அருணா கையை நீட்டி கேட்க திகைத்துப் போய் நின்றான் ஸ்ரீதர்.


"என்ன உன் அம்மாவா நினைச்சா சத்தியம் பண்ணு ஸ்ரீதர்" என்று அருணா கூறவும் நடுங்கும் அவன் கரங்களை அருணாவின் கையின் மேல் வைத்தான்.


"ஸ்ரீதர் உனக்கு எப்படி டாக்டர் தம்பியை தெரியும்?" என்று அருணா கேட்கவும்


"அருள் என்னோட ப்ரெண்ட்மா.." என்று ஸ்ரீதர் கூற


"ஓஹ்....." என்று கூறி கொண்டார் அருணா.


ஆனால் அருளோ ஸ்ரீதரின்
"நண்பன்..." என்ற வார்த்தையில் ஆச்சரியமாக ஸ்ரீதரை பார்த்தான்.


"வாங்கமா நான் கொண்டு போய் வீட்ல விட்றேன்" என்று ஸ்ரீதர் அருணாவை அழைக்க


"இல்ல ஸ்ரீதர் நான் ஆட்டோவில் போய்க்குறேன். இப்போ தான் நீ வீட்ல இருந்து வந்த. திரும்பவும் உன் கூட வந்தா மது கேள்வியா கேட்பா" என்று அருணா கூறினார்.


ஆட்டோ ஒன்றை நிறுத்தி அருணாவை ஏற்றி அனுப்பி வைத்த ஸ்ரீதர் அவன் காரை நோக்கி செல்ல போக அவன் தோள் தொட்டான் அருள்.


ஸ்ரீதர் திரும்பி பார்க்கவும் அவன் கைகளை பிடித்து கொண்ட அருள்
"ரொம்ப நன்றி ஸ்ரீதர். என்னை உங்க ப்ரெண்ட்னு சொன்னதுக்கு. நான் பண்ண தப்புக்கு என்னை ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டீங்கனு நினைச்சேன். ஆனா நீங்க... ரொம்ப நன்றி ஸ்ரீதர்" என்று கூறவும்


அவன் கைகளில் இருந்து தன் கையை எடுத்து கொண்ட ஸ்ரீதர்
"உன் மேல நான் ரொம்ப கோபத்துல இருந்தேன். ஆனா நீ மதுவுக்காக அவ்வளவு துடிச்சுப் போன. அதைப் பார்த்துட்டு என்னால உன் மேல கோபப்பட முடியல. ஆனா அதை வைச்சு உன்னை நான் சரினு சொல்லல. பட் உன்னை முழுவதும் தப்புனும் சொல்ல முடியல. ஐ யம் கன்பியூஸ்ட்..." என்று விட்டு செல்ல அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் அருள்.


ஸ்ரீதரின் கார் புழுதியை கிளப்பி கொண்டு சென்று விட சற்று தள்ளி இருந்த அவன் வேலை செய்யும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றான் அருள்.


ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு வீட்டிற்குள் சென்ற அருணா மதுவை சுற்றிலும் பார்வையால் தேடினார்.


அவளை ஹாலில் காணாமல் போகவே பூஜையறை பக்கம் சென்றவர் அங்கும் அவள் இல்லாமல் போகவே அங்கிருந்து வெளியேறி வந்தார்.


ஏதோ ஒரு எண்ணம் தோன்ற திரும்பி பார்த்த அருணா அருணாசலத்தின் புகைப்படத்தின் அருகில் சென்றார்.


அங்கு அவர் ஏதையோ மும்முரமாக தேடி கொண்டிருக்க
"இதையாம்மா தேடுற???" என்ற மதுவின் குரலில் திடுக்கிட்டு திரும்பினார்.


மதுவின் கையில் இருந்த பேப்பரை பார்த்து அருணா திகைத்துப் போய் நிற்க அருணாவின் அருகில் அழுத்தமான நடையுடன் சென்றாள் மது........
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Oh.. antha paper medical report taa husna.. aruna paavam.. ennakum sri maathiri thaan.. confused.. arul sari yaa thappa nu.. ??
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,772
Location
Coimbatore
அப்பாவின் கடிதத்தில் என்ன
அருணா அம்மா பாவம்
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top