• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love:
nivin-pauly-in-mili-malayalam-movie-11.jpg
f4e0b3a4699f605687a3ecc10906d36b.jpg
காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கொண்ட மது குளித்து தயாராகி விட்டு ஹாலுக்கு சென்றாள்.


கரு நீல நிற சேலை அணிந்து, நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு இட்டு நடந்து வந்த மதுவை பார்த்து மனதினுள் சிறு சந்தோஷம் கொண்டார் அருணா.


வெகு நாட்களுக்குப் பிறகு சேலை அணிந்து வரும் தன் மகளை பார்த்து சந்தோஷம் அடைந்தவர் பூஜையறையில் நின்று கொண்டிருந்த மதுவின் அருகில் சென்றார்.


சாமி படத்தின் முன்பு இருந்த மல்லிகை பூவில் சிறிது எடுத்து மதுவின் தலையில் அருணா வைத்து விடவும் கண் திறந்து பார்த்த மது அருணாவின் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.


"அம்மா இன்னைக்கு ரொம்ப பெரிய இடத்துல நான் என் திறமையை காட்டி என் வேலையை பண்ணிருக்கேன். அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுனு நீயும் சாமிக்கிட்ட வேண்டிக்கோமா" என்று மது கூறவும்


"கண்டிப்பாக பண்ணுறேன் மது. நீ பார்த்து ஜாக்கிரதையாக இருந்துக்கோ" என்று அருணா கூற சரியென்று தலையாட்டி கொண்டாள் மது.


"ம்மா....நான் வர லேட் நைட் ஆகும். ஸ்ரீயோட தான் வருவேன். நீ ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருக்காம தூங்கிடுமா" என்று கூறி கொண்டே மது வீட்டில் இருந்து வெளியேறவும் ஸ்ரீதரின் கார் வரவும் சரியாக இருந்தது.


ஸ்ரீதரோடு லோகநாதனின் வீட்டை நோக்கி சென்ற மது மீதமிருந்த சிறு வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்தாள்.


ஒவ்வொரு பகுதியாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டு வந்த மது எதிரில் வந்த நபரின் மேல் முட்டி கொள்ள


"அம்மா....." என்று தலையை தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தாள்.


சராசரியாக அவள் உயரத்தை ஒத்த முழுவதும் பார்லர் கை வண்ணத்தில் ஜொலித்து கொண்டிருந்த ஷோபாவை மது குழப்பமாக பார்க்கவும்


அவளைப் பார்த்து புன்னகத்த ஷோபா
"ஸாரி ஸாரி நான் சரியா பார்க்காம வந்து இடிச்சுக்கிட்டேன். ரொம்ப வலிக்குதா??" என்று கேட்கவும்


"இல்லை மேடம் வலிக்கல" என்று மது கூற


"மேடமா???" என்று வியப்பாக அவளை பார்த்தாள் ஷோபா.


"என்னைப் பார்த்தா அவ்வளவு வயசானவங்க மாதிரியா இருக்கு? மேடம்னு சொல்ற. என் பேரு ஷோபனா ஸார்ட்டா ஷோபானு சொல்லுவாங்க. நீயும் அப்படியே சொல்லு" என்று ஷோபா கூறவும்


"இல்லை மேடம் நான் இந்த அரேன்ஜ்மெண்ட் ஆர்கனைஸர் தான். ஷோ அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கனும்லே" என்று மது கூற


அவளை பாராட்டுவது போல பார்த்தாள் ஷோபா.


"எனி வே எனக்கு சின்ன வயசுல இருந்து லோ அன்ட் மிடில் கிளாஸ் பீபுளை பிடிக்காது. பட் உன்னை ஏனோ எனக்கு பிடிச்சிருக்கு" என்று மதுவின் கன்னத்தை தட்டிய ஷோபா


"லெட்ஸ் பீ பிரண்ட்ஸ்..." என்று மதுவின் புறம் கையை நீட்ட சிறிது யோசித்து விட்டு ஷோபாவின் கை பற்றி குலுக்கினாள் மது.


"உன் பேர் நீ சொல்லவே இல்லையே?" என்று ஷோபா கேட்கவும்
தன் தலையில் தட்டி கொண்டவள்


"ஸாரி மறந்துட்டேன். ஐ யம் மதுமிதா" என்று கூற


"ஸ்வீட் நேம் உன்னை மாதிரியே!!!" எனவும் சிறிது புன்னகத்து கொண்டாள்.


"ஐயோ!!! அம்மா வராங்க. நான் அப்புறம் வரேன் மது..." என்று விட்டு ஷோபா சென்று விட திரும்பி பார்த்த மது சுலோச்சனா வருவதைப் பார்த்து திகைத்துப் போனாள்.


"இவங்களோட பொண்ணா ஷோபனா?? இவகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணியே பழகணும். இல்லேனா அந்த அம்மா வந்து கத்துவாங்க" என்று எண்ணிக் கொண்டவள் தன் வேலைகளைக் கவனிக்க சென்றாள்.


அதிகாலையில் எழுந்து தயாராகி நின்ற அருள் மேலே தன் அறையில் நின்று கொண்டு மதுவை ரசிக்கும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.


முதல் தடவையாக மதுவை சேலையில் அருள் பார்த்ததும் அவள் அழகை மெய் மறந்து ரசித்தான்.


இரண்டு வருடங்களில் அவள் சற்று முதிர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த குழந்தை தனமான முகம் மாறாமலே இருந்தது.


ஸ்ரீதர் அருளை கண்டு கொண்ட பின்பும் மதுவிடம் அவனை பற்றி எதுவும் கூறாமலே இருந்தான்.


தன் அறையில் இருந்து வெளியேறி வந்த வத்சலா மற்றும் லோகநாதன் வீட்டு அலங்காரங்களைப் பார்த்து மெய் மறந்து நின்றனர்.


l_bfd17bcf190498e43c16b84295d7c4ea.jpg
00236ee61755c89725731b50beba251d.jpegவாயிலில் இருந்து வீட்டுக்கு நுழையும் வழி முழுவதும் இருபுறமும் பூக்களினால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.


ஹாலின் நடுப்பகுதியில் விஜி மற்றும் வினித் அமர்ந்திருப்பதற்காக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.


அலங்காரங்களை மெச்சும் பார்வையோடு சுற்றி பார்த்த வத்சலா சற்று தள்ளி மது ஸ்ரீதருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளருகில் சென்றாள்.


"மது....." என்ற வத்சலாவின் அழைப்பில் திரும்பிய மது அவரைப் பார்த்து புன்னகக்க மதுவின் கை பற்றி குலுக்கிய வத்சலா


"அலங்காரம் எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கு மது. ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. எவ்வளவு சிரமப்பட்டு நீங்க செய்திருப்பீங்கனு புரியுது. ஆனாலும் இவ்வளவு திறமையை நான் உன் கிட்ட எதிர்பார்க்கல. ரொம்ப நல்லா பண்ணிட்ட மது" என்று கூறவும்


சிறிது வெட்கத்தோடு புன்னகத்தவள்
"எங்க வேலையை தான் நாங்க பண்ணோம் ஆ...மேடம். உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி.
நான் மற்ற வேலையெல்லாம் போய் கவனிக்குறேன்" என்று கூற
சரியென்று விட்டு சென்றார் வத்சலா.


உறவினர்கள், நண்பர்கள் என லோகநாதனின் வீட்டில் அனைவரும் ஒன்று கூட மதுவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.


"இவ்வளவு பேர் வர்றாங்க!! என்னால் சரியாக சமாளிக்க முடியுமா? கடவுளே!! எந்த குறையும், பிரச்சினையும் இல்லாமல் இந்த பங்க்ஸன் முடிஞ்சுடணும். நீ தான் எனக்கு கூட எப்போதும் துணையாக இருக்கணும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள் எல்லா வேலைகளையும் மேற்பார்வை செய்து கொண்டு நின்றாள்.


நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்காக வினித் மற்றும் விஜி மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.


ஷோபா விஜியை அழைத்து வர அருள் வினித்தை அழைத்து வந்தான்.


"இரண்டு ஜோடியும் ரொம்ப அழகாக இருக்காங்க இல்லையா?" என்று மதுவை கடந்து சென்ற இருவர் பேசி கொண்டு செல்ல திரும்பிப் பார்த்தாள் மது.


சற்று தள்ளி நின்றதால் மதுவிற்கு அவர்களின் முகம் தெளிவில்லாமல் இருக்கவும்


"யார் அந்த ஜோடினு பார்த்துடுவோம்!" என்று ஆவல் ஏற்பட அவர்கள் அருகில் நடந்து சென்றாள்.


மதுவின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தூரத்தில் நின்று பார்த்து கொண்டு நின்ற ஸ்ரீதர்
மது அருள் இருந்த பகுதிக்கு செல்வதைப் பார்த்து விட்டு விரைந்து அவளருகில் சென்றான்.


அதற்கிடையில் மது அவர்களை நெருங்கி விட ஸ்ரீதரால் எதுவும் செய்ய முடியாமல் மதுவையும், அருளையும் பார்த்து கொண்டு நின்றான்.


"மது இவனைப் பார்த்தா என்னென்ன களேபரம் நடக்குமோ தெரியலையே!! இவ எதுக்கு இங்க வந்தா? அருள் உன்னை இனி அந்த கடவுளால கூட காப்பாற்ற முடியாது" என்று ஸ்ரீதர் புலம்பிக் கொண்டு நிற்க
அருளோ மறுபுறம் திரும்பி நின்று வினித்துடன் பேசிக் கொண்டு நின்றதால் மது அவனைப் பார்க்கவில்லை.


அப்போது மதுவின் அருகில் வந்த
அஜய்
"மேம் இந்த கேட்டரிங் சர்வீஸ்ல ஒரு சின்ன சேஞ்ச் பண்ணலாமா?" என்று கேட்கவும்


அவனுடன் திரும்பி மது பேசிக் கொண்டிருக்க அருளும் வினித்துடன் பேசி முடித்து விட்டு திரும்பி நின்றான்.


ஸ்ரீதருக்கோ இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிக் கொண்டு இருந்தது.


"இவன் பார்க்கும் போது அவ திரும்புறா...அவள் பார்க்கும் போது இவன் திரும்புறான்...இதுங்க ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் எப்போ பார்த்தாலும் பிரச்சினை ஆரம்பிச்சுடுமே!!!" என்று உச்சக்கட்ட புலம்பலில் தவித்துக் கொண்டு நின்றான் ஸ்ரீதர்.


அஜயோடு பேசிக் கொண்டே மது வேறு புறம் செல்லப் போக ஸ்ரீதர் தன் நெஞ்சில் கை வைத்து


"யப்பா சாமி!!! ஒரு மூன்றாம் உலகப்போர்ல இருந்து இந்த வீட்டை காப்பாத்திட்ட. உனக்கு கோடி நன்றி!!!" என்று கூறி கொண்டவன் அருளின் புறம் பார்க்க அருள் அவனது தந்தையுடன் ஏதோ பேசிக் கொண்டு நின்றான்.


"ப்ராப்ளம் இப்போதைக்கு சால்வ்ட்...." என்று ஸ்ரீதர் கூறி கொள்ளவும் அருளின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அழகியே மேரி மீ........
மேரி மீ.........
என்ற பாடல் கேட்கவும்


"ஐயோ!!! போச்சு" என்று தலையில் ஸ்ரீதர் கை வைத்து நிற்க


பாடல் சத்தத்தில் சட்டென்று நின்ற மது திரும்பி பார்க்க அங்கே வினித்தின் அருகில் லோகநாதனோடு பேசிக் கொண்டு நின்ற அருளைப் பார்த்து திகைத்துப் போய் நின்றாள்.


கண்களை இருட்டுவது போல இருக்க மது தள்ளாடவும் அவளருகில் ஓடி வந்து அவளை பிடித்து கொண்டான் ஸ்ரீதர்.


"ஸ்ரீ....அ...ரு...அருள்....அருள்..." என்று தடுமாறி கொண்டு பேச அவளைக் கைத்தாங்கலாக அழைத்து கொண்டு சென்று ஒரு கதிரையில் அமரவைத்தவன் தண்ணீரை எடுத்து மதுவிடம் நீட்ட அவள் 'வேண்டாம்' என்பது போல தலையை ஆட்டினாள்.


கண்கள் கலங்க உதட்டை கடித்து தன் அழுகையை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் மது.


இத்தனை நாட்களாக மனதில் ஒரு ஓரத்தில் தள்ளி வைக்கப்பட்டிருந்த நினைவுகள் எல்லாம் மேலோங்க வாயை இறுக மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் மது.


ஸ்ரீதர் மதுவின் தலையை வருட அவனது கையை பிடித்து கொண்டு அதில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.


"ஸ்.....மது என்ன இது? சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க! யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க? கண்ணை துடை..." என்று ஸ்ரீதர் சற்று அதட்டலாக கூறவும் மெல்ல விசும்பிக் கொண்டே நிமிர்ந்து பார்த்தாள் மது.


"அழாதேடா மது....." என்று அவளின் கண்களை ஸ்ரீதர் துடைத்து விட மது அமைதியாக அமர்ந்திருந்தாள்.


"உனக்கு அப்போ ஏற்கனவே அருள் இந்த வீட்டு பையன் தான்னு தெரிஞ்சும் ஏன் என் கிட்ட நீ சொல்லல ஸ்ரீ??? ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்தாங்கனு சொன்ன ஆனா அவங்க இந்த விஷயமாக தான் ஆபீஸ் வந்தாங்கனு ஏன் மறைச்ச ஸ்ரீ சொல்லு????" என்று மது கேட்கவும்


அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்ட ஸ்ரீதர்
"இது உன் திறமையை காட்ட கிடைச்ச வாய்ப்பு மது. இந்த வாய்ப்பை நீ உன் கோபத்தினால விட்டுட்டேனா உன் தொழிலை நீ எப்படி முன்னேற்ற முடியும்? அருள் உன் லைப்ல வந்தான் போயிட்டான். அதை தானே நீ சொல்ற? அப்போ அவனை பார்த்து நீ ஏன் ஓடி ஒழியனும்? எதுவாக இருந்தாலும்
தைரியமாக எதிர்த்து நில்லு. உன் கிட்ட இதை மறைக்கனும்னு நான் நினைக்கல. ஏனோ அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சொல்லத் தோணல அவ்வளவு தான்" என்று கூற சிறிது நேரம் யோசித்து கொண்டு அமர்ந்திருந்தாள் மது.


"அவனை பற்றி எனக்கு சொல்ல தேவையில்லைனு தானே ஸ்ரீ என்கிட்ட சொல்லாம விட்டுருக்கான். அப்புறம் ஏன் நான் மட்டும் இதெல்லாம் நினைச்சு என்னையே கஷ்டப்படுத்திக்கணும். தப்பு பண்ணது அவன் தண்டனை எனக்கா? உன் முன்னாடி நான் சந்தோஷமாக இருந்து காட்டுறேன் அருள். இப்போ இருந்து நான் பழைய மதுவாக மாறி என் பழைய சந்தோஷமான லைஃப்ப திரும்பி எடுத்துக் காட்டுறேன்" என்று மனதிற்குள் சூளுரைத்து கொண்ட மது ஒரு நிமிர்வோடு எழுந்து நின்றாள்.


முகத்தை கழுவி கொண்டு வந்தவள் ஸ்ரீதரை பார்த்து சிரித்துக் கொண்டே
"போகலாமா ஸ்ரீ???" என்று கேட்கவும் சற்று குழப்பம் கொண்டான் ஸ்ரீதர்.


"நீ சொன்னது கரெக்ட் ஸ்ரீ...நான் ஏன் அருளைப் பார்த்து ஒளியணும். தப்பு பண்ணது அவன் தண்டனை மட்டும் எனக்கா நெவர். நாம இங்க வந்தது நம்ம வேலைக்காக அதை மட்டும் பார்ப்போம் வா...." என்று கூறி விட்டு மது செல்ல அவளை எண்ணி பெருமிதம் கொண்டான் ஸ்ரீதர்.


மது மண்டபத்தின் அருகில் வந்து நிற்பதைப் பார்த்த அருள் அவள் முகத்தை நேர் கொண்டு பார்த்தான்.


எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் கைகளை கட்டி கொண்டு அவனையே மது பார்த்து கொண்டிருக்கவும் ஒரு கணம் திகைத்துப் போனான் அருள்.


"மது என்னை பார்த்ததுக்கு அப்புறமும் இவ்வளவு அமைதியாக இருக்காளே? வந்து சண்டை போடுவா அட்லீஸ்ட் திட்டுவானு நினைச்சா இவ இப்படி பார்த்துட்டு நிற்குறாளே? ஒரு வேளை ஆளுங்க எல்லாம் போனதுக்கு அப்புறம் திட்டலாம்னு இருக்காளா?" என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எழ என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான் அருள்.


மறுபுறம் வேலை ஏதோ வந்து விட மது செல்வதைப் பார்த்த அருள் யாரும் கவனிக்காத வண்ணம் மதுவை பின் தொடர்ந்து சென்றான்.


ஆனால் ஒரு ஜோடி கண்கள் அவனைப் பின் தொடர்ந்து வந்ததை அருள் கவனிக்கவில்லை.


மது சென்ற பக்கம் சென்ற அருள் மதுவை தேட அவளோ அந்த பகுதியில் இல்லை.


மதுவை தேடி கொண்டே வந்தவன் எதிரில் நின்று கொண்டிருந்த சுலோச்சனாவின் மேல் மோதி நின்றான்.


"அ...த்....அத்தை நீங்க எங்க இங்கே???" என்று அருள் கேட்கவும்


"நான் போன் பேசுறதுக்காக வந்தேன்.." என்று தன் கையில் இருந்த போனை காட்டியவர்


"நீ யாரைத் தேடி வந்தே???" என்று கேட்க
என்ன சொல்வது என்று விரைவாக யோசித்தான் அருள்.


"என் ப்ரெண்ட் ஒருத்தன் வர்றேனு சொன்னான். அவனை தேடி வந்தேன். நீங்க போங்க அத்தை. நான் அவனை இங்க நின்னு கூட்டிட்டு வர்றேன்" என்று விட்டு அருள் செல்ல போக


அவனை தடுத்த சுலோச்சனா
"இத்தனை வேலைக்காரர்கள் இருக்கும் போது நீ ஏன் இந்த வேலையை பார்க்கணும்?" என்றவர் அருகில் நின்ற வேலைக்காரர் ஒருவரை அழைத்து


"அருளோட பிரண்ட் வந்தா ஹாலுக்கு கூட்டிட்டு வா" என்று விட்டு அருளின் கை பிடித்து ஹாலுக்கு அழைத்து கொண்டு சென்றார்.


"சே...." என்று சலித்து கொண்டே சுலோச்சனாவோடு சென்றவன் வினித்தின் அருகில் சென்று நின்று கொண்டான்.


அருளின் அருகில் சென்று நின்று கொண்ட சுலோச்சனா
"நானும் நேற்றுல இருந்து பார்க்குறேன். அந்த வேலைக்கார மது பொண்ணு பின்னாடியே உன் பார்வை இருக்கு. இன்னைக்கு அவளைத் தேடி வேற போற. அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை என் பொண்ணு கிட்ட இருந்து போக விடமாட்டேன் அருள்..." என்று நினைத்து கொண்டவர்

தூரத்தில் நின்று வேலைகளை மேற் பார்வை செய்து கொண்டிருந்த மதுவை பார்த்து வில்லத்தனமாக புன்னகத்து கொண்டார்.......
 




mila

இணை அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
855
Reaction score
1,256
Location
sri lanka
sobana nallavala? kettavala??
madhu nee ippo thelivahitiye anda sulochanava oru vali pannidu
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
வில்லி வேலைய ஆரம்பிச்சிட்டாங்களா
மதுவின் வேலையில் ஏதாவது குளறுபடி செய்து வைத்தாள்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top