• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்!!! ஹலோ!!! பிரண்ட்ஸ்....

சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....


எல்லோரும் செம காண்டுல இருப்பீங்க:giggle::giggle: ஷோ டிரக்டா நான் ஸ்டோரிக்குள்ள போயிடுறேன்....
IMG_20181023_204201.png
"சொல்லுங்க அருள்...." என்று அருளின் தோளைப் பிடித்து உலுக்கி மது கேட்கவும்


அவளை நிமிர்ந்து பார்த்த அருள்
"அவங்கள காப்பாற்றுறது இப்போ உன் கையில் தான் இருக்கு மது..." என்று கூறவும் புரியாமல் அவனை பார்த்தாள் மது.


"அவங்களுக்கு இமிடியேட்டா ஒரு ஆபரேஷன் பண்ணணும். அதுக்கு அவங்க மனசளவுல ஸ்ட்ராங்கா இருக்கணும். அவங்கள அப்படி ஸ்ட்ராங்கா மாற்ற நீ தான் போய் அவங்க கூட பேசணும். நாங்க கொடுக்குற மருந்து உடம்புக்கு ஸ்ட்ராங்க் கொடுக்குமே தவிர மனசுக்கு இல்ல. 24 மணி நேரத்துக்குள்ள ஆபரேஷன் பண்ணலனா அவங்க உயிருக்கே ஆபத்து" என்று அருள் கூறவும் திகைத்துப் போனாள் மது.


"அம்மா...அம்மா....எப்படியாவது அம்மா உயிரைக் காப்பற்றணும். அவங்க இல்லாமல் என்னால....நினைச்சுக் கூட பார்க்க முடியாது. அம்மா கிட்ட பேசி எப்படியாவது அவங்களுக்கு தைரியத்தை வரவழைக்கணும்" என்று மனதிற்குள் முடிவெடுத்தாள் மது.


தன் முகத்தையும், கண்களையும் அழுந்த துடைத்து கொண்டவள் ஐ.சி.யூ வின் உள்ளே சென்றாள்.


செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க கண்களை மூடி சோர்ந்து போய் படுத்திருந்த அருணாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் மது.


"அம்மா...." என்று மெல்லிய குரலில் மது அருணாவை அழைக்கவும் மெல்ல கண் திறந்து பார்த்தார் அருணா.


"எனக்கு ஒண்ணும் இல்லைடா மது...கொஞ்ச நேரம் மாத்திரை போட லேட்டாகிடுச்சு. அதனால தான் இப்படி எல்லாம் ஆகிடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு நாம வீட்டுக்கு போயிடலாம் சரியா??? நீ கண்ணைத் துடை..." என்று அந்த நிலையிலும் மதுவிற்கு ஆறுதலாக அருணா பேசவும்


சிரமப்பட்டு தன் கலங்கிய கண்களை மறைத்து துடைத்து கொண்டாள் மது.
"அம்மா நீ ஏன்மா கண்டதையும் யோசிச்சு கவலைப்படுற???...நல்ல படியா இந்த ஆபரேஷனை முடிச்சுட்டு நீ ஆரோக்கியமாக பழைய படி வந்து என்னை திட்டணும்லே!!! உன் திட்டு கேட்காம என்னால இருக்க முடியுமா சொல்லு???" என்று மது கேட்கவும்


புன்னகைத்து கொண்ட அருணா
மதுவின் கையை பற்றி கொண்டார்.


சிறிது நேரம் அமைதியாக கண் மூடி இருந்த அருணா பின் தன் கண்களை திறந்து மதுவை பார்த்து
"டாக்டர் தம்பியை கொஞ்சம் வரச்சொல்லுமா..." என்று கூறவும் சரியென்று விட்டு சென்ற மது அருளை அழைக்கவும் அருள் ஸ்ரீதரையும் அழைத்து கொண்டு ஐ.சி.யூ விற்குள் நுழைந்தான்.


"மது...இங்கே வா.." என்று அருணா அழைக்கவும் அவரருகில் சென்று அமர்ந்து கொண்டாள் மது.


"மது எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு..." என்று அருணா தன் கையை நீட்ட சிறிது நேரம் யோசித்து விட்டு

அவர் கையின் மேல் தன் கையை வைத்த மது
"கண்டிப்பாக பண்ணுறேன்மா...." என்று கூற புன்னகைத்து கொண்ட அருணா அருளை வருமாறு சைகை செய்ய அவரருகில் சென்றான் அருள்.


"மது உங்களைப் பற்றி எல்லாமே சொல்லிட்டா தம்பி. நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ என் பொண்ண விரும்பிட்டீங்க. நான் கார்த்திக்கை கூட உங்களை நம்புன அளவுக்கு நம்பல தம்பி. என் பொண்ணை நீங்க நல்லா பார்த்துப்பீங்கனு எனக்கு தோணுது. அதனால நான் உங்க கிட்ட இதை கேட்குறேன். என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்குறீங்களா?" என்று கேட்கவும் அதிர்ச்சியாக அவரை பார்த்தான் அருள்.


திகைப்போடு மதுவை அருள் பார்க்க அவளோ அருணாவையே பார்த்து கொண்டு இருந்தாள்.


"நான் மதுவை முதல் தடவை பார்த்ததுமே கல்யாணம் பண்ணிக்குற முடிவு எடுத்துட்டேன் அத்தை. மதுவோட சம்மதம் தான் எனக்கு முக்கியம். முதல்ல அவகிட்ட கேளுங்க" என்று மறைமுகமாக மதுவின் மனம் அறிந்து கொள்ளும் நோக்கில் அருள் கூறவும்


அருளின் அத்தை என்ற அழைப்பில் மனம் குளிர்ந்த அருணா மதுவை பார்க்க மனதிற்குள் எழுந்த எண்ணங்களை எல்லாம் அடக்கி விட்டு அருணாவை பார்த்து புன்னகத்த மது
"எனக்கு பரிபூரண சம்மதம் மா...." என்று கூற எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார் அருணா.


மதுவின் சம்மதத்தில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் நின்றான் அருள்.


"என்ன சம்மதமா???? எப்படி???" என்று மனதில் கேள்விகள் எழ வியப்பாக மதுவை பார்த்து கொண்டு நின்றான் அருள்.


ஆனால் ஸ்ரீதரோ எனக்கு இந்த முடிவு முன்னாலேயே தெரியும் என்பது போல நின்று கொண்டிருந்தான்.


மனம் மிகுந்த சந்தோஷத்தில் திளைத்த அருணா
"நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் மது... இப்போவே என் உ..." என்றவரின் வாய் மீது கையை வைத்த மது


"அப்படி எல்லாம் பேசாதேமா....முதல்ல நீ நல்ல படியாக ஆபரேஷன் முடிச்சுட்டு வா..." என்று கூறியவள் அருளை திரும்பி பார்க்கவும் அருணாவின் ஆபரேஷன் வேலைகளை கவனிக்க தொடங்கினான் அருள்.


ஒரு சில மணி நேரங்களில் அருணாவை ஆபரேஷன் தியேட்டரினுள் கொண்டு சென்று விட மது தவிப்போடு வெளியில் காத்து கொண்டு நின்றாள்.


"நான் எடுத்த முடிவு சரியா???" என மனதிற்குள் பலமுறை பட்டிமன்றம் நடத்தி கொண்டு தன் கைகளையே பார்த்து கொண்டு இருந்தாள் மது.


மதுவின் அருகில் சென்ற ஸ்ரீதர்
"மது..." என்று அழைக்கவும் திரும்பி பார்த்த மது ஆச்சரியமாக


"நீ எப்போ வந்த ஸ்ரீ???" என்று கேட்கவும் விழிகள் இரண்டும்
வெளியில் தெறித்து விடும் அளவுக்கு அவளை அதிர்ச்சியாக பார்த்தான் ஸ்ரீதர்.


"அடிப்பாவி!!! இவ்வளவு நேரமாக இங்க தானே இருந்தேன். என் கூட பேசுனதும் ஞாபகம் இல்லையா??? நீ என்னை பார்க்கவே இல்லையா???" என்று ஸ்ரீதர் கேட்கவும்
இல்லையென்று தலை ஆட்டினாள் மது.


"சரி தான் அருளை பார்த்ததும் என்னை மறந்தாச்சா???" என்று
ஸ்ரீதர் கேட்க


"அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீ...ஏதோ பதட்டம்...அதனால சுற்றி என்ன நடக்குதுனு பார்க்கல...." என்று இடை நிறுத்திய மது


"நான் எடுத்த முடிவு சரியா ஸ்ரீ???" என்று கேட்டாள்.


"என்ன முடிவு??" என்று ஸ்ரீதர் கேட்கவும்


"அது தான் அருளை கல்யாணம் பண்ணிக்க....நீ தான் கேட்டுட்டு நின்னுருப்பியே. அப்புறம் புதுசா கேள்வி கேட்குற" என்று மது கூற


அவளை பார்த்து புன்னகத்து கொண்ட ஸ்ரீதர்
"நீ உன் மனசுக்கு அவனைப் பிடிச்சதனால தானே அம்மா கிட்ட ஒத்துக்கிட்ட. எனக்கு என்னவோ இந்த அருள் தான் உனக்குனு பிறந்தவனு நினைக்குறேன்" என்று கூற மகிழ்வுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மது.


"என்னவோ தெரியல ஸ்ரீ...அருளை பார்த்தா நல்லா திட்டணும்னு தான் இவ்வளவு நாளா இருந்தேன். ஆனா அன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்துட்டு இருந்தப்போ அருள் வந்து மன்னிப்பு கேட்டு கால்ல விழப் போயிட்டான். அந்த செக்கனே அவன் மேல எனக்கு ஏதோ ஒரு பீலிங். இன்பாக்ட் அந்த பீலிங் கார்த்தியை பார்த்த ஒரு தரம் கூட எனக்கு வரல.


அப்புறம் தான் எனக்கே என் மனசு புரிஞ்சது...கார்த்தியை சின்ன வயசுல இருந்து தெரியும்...அதனாலதான் அந்த மேரேஜ்க்கு நான் ஒத்துக்கிட்டேனோ தெரியல...நீ வேற என் மைண்ட கன்பியுஸ் பண்ணிட்ட...எல்லாம் சேர்ந்து மொத்தமாக என்னை அருள் பக்கம் சாய்ச்சுடுச்சு போல..." என்று தன் மனம் விட்டு கூறிய மதுவின் தலையை ஆதரவாக வருடி கொடுத்தான் ஸ்ரீதர்.


ஐந்து, ஆறு மணி நேர தொடர் சிகிச்சைக்குப் பின் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த அருள் மதுவின் அருகில் வந்து


"அம்மாவுக்கு இனி கவலைப்படுற அளவுக்கு எதுவும் இல்லை மது. கொஞ்ச நேரம் கழித்து தனி ரூமுக்கு சிப்ட் பண்ணிடுவாங்க. ஆனா அவங்க மேல கொஞ்சம் கூடுதலாக கவனம் எடுத்துக்கோ... அம்மாவை நல்லா பார்த்துக்கோ" என்று கூறவும்


நிம்மதியாக கண் மூடி திறந்து கொண்ட மது
"இப்போ நான் அம்மாவை பார்க்கலாமா???" என்று கேட்டாள்.


"நார்மல் ரூமுக்கு சிப்ட் பண்ணதும் பாரு மது. இப்போ கொஞ்சம் அவங்க ரெஸ்ட்ல இருக்கணும்" என்று கூறிய அருள்


"ஸ்ரீதர் மதுவையும், அம்மாவையும் பார்த்துக்கோங்க. நான் வீட்டுக்கு போயிட்டு ப்ரெஸ் ஆகிட்டு வரேன்" என்று கூறி விட்டு செல்ல


"அருள் ஒரு நிமிஷம்.." என்று அழைத்தாள் மது.


அருள் திரும்பி பார்க்கவும் அவனருகில் சென்ற மது
"உங்ககூட கொஞ்சம் பேசணும்" என்று கூறவும் சரியென்று விட்டு அவளுடன் இணைந்து நடந்தான்.


"என்னடா இவ மாத்தி மாத்தி பேசுறானு நீங்க நினைச்சுருப்பீங்க இல்லையா?" என்று மது கேட்கவும் மறுப்பாக தலையசைத்தான் அருள்.


"நீ மாத்தி பேசல மது. என் கூட இப்போ தான் பேசுற. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நீ என்னை மன்னிச்சுட்டியே!!! அதுவே எனக்கு பெரிய விஷயம். ஆனா நீ மேரேஜ்க்கு அக்செப்ட் பண்ணுவனு நான் எதிர்பார்க்கல" என்று அருள் கூறவும்


சிரித்துக் கொண்ட மது
"அத்தனை வருஷம் என்னை பற்றி எல்லாம் தெரிஞ்சும் என்னை நம்பாமல் போனவங்களை நினைச்சு நான் ஏன் என் வாழ்க்கையை அழிச்சுக்கணும்னு யோசிச்சு பார்த்தேன். அம்மாவோட சந்தோஷமும் எனக்கு முக்கியம். அம்மா கேட்டதனாலனு இல்லை. உங்க மேல எனக்கு ஆரம்பித்திலேயே ஒரு நல்ல எண்ணம். இடையில் என்னென்னவோ நடந்துடுச்சு. பட் பழைய விஷயங்களை பேசி வேலை இல்லை தானே..." என்று நிறுத்தியவள்


"உங்க அம்மா, அப்பாகிட்ட பேசி ஒரு நல்ல நாள் பாருங்க.." என்று விட்டு வேகமாக மறுபுறம் ஓடி சென்று மறைந்தாள்.


அருளோ தன் மேல் பூ மழை ஒன்றே கொட்டியது போல பரவசத்துடன் மிதந்து கொண்டிருந்தான்.


எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவன் தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.


அருளிடம் பேசி விட்டு வந்த மதுவிற்கு மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி சந்தோஷச் சாரல் வீசி கொண்டிருந்தது.


ஆரம்பத்தில் அருள் மேல் கோபம் கொண்டிருந்த அவள் மனது அருளை மீண்டும் பார்த்ததும் அந்த கோபத்தை எல்லாம் தூரமாக்கி விட ஏனோ மதுவால் அவனை வெறுக்க முடியவில்லை.


கார்த்திக்கின் மேல் தனக்கு இருந்தது காதல் அல்ல ஒரு பாச உணர்வு என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்ட மது தன்னை நம்பாமல் போனவனை ஏன் எண்ண வேண்டும் என்று அவன் எண்ணங்களை எல்லாம் தூக்கி போட்டாள்.


தன் வாழ்வில் இனி தொடர்ந்து இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று கடவுளிடமும், தன் தந்தையிடமும் வேண்டிக் கொண்டவள் அருணாவை பார்க்க சென்றாள்.


காரில் ஏறி அமர்ந்து கொண்ட அருளின் மனதோ சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
எல்லையில்லா மகிழ்வுடன் காரை பார்க் செய்துவிட்டு வீட்டினுள்
நுழைந்த அருள் ஹாலில் எல்லோரும் பதட்டத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்து வேகமாக அவர்கள் அருகில் சென்றான்.


"அருள்...." என்றவாறு அருளின் அருகில் வந்து அவனது கைகளை பற்றி கொண்ட வத்சலா


"எங்கேடா போனா இவ்வளவு நேரமா?? நைட்ல இருந்து உன் போனுக்கு கால் பண்ணிட்டு இருக்கோம். நீ அட்டன்ட் பண்ணவே இல்ல. எங்க போன அருள்???" என்று கேட்கவும்


தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் 75 மிஸ்ட் கால் என்று இருக்கவும் தன் தலையில் தட்டி கொண்டான்.


"சாரி வத்ஸ்... ஒரு எமர்ஜென்சி ஆபரேஷன். நம்ம மதுவோட அம்மாவுக்கு தான் ஆபரேஷன். இப்போ தான் எல்லா வேலையும் முடிச்சுட்டு வரேன்" என்று அருள் கூறவும்


"நம்ம மதுவா????" என்று ஏளனமாக கேட்டார் சுலோச்சனா.


சுலோச்சனாவின் ஏளனமான கேள்வியில் கை முஷ்டி இறுக கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்ட அருள்


சுலோச்சனாவின் அருகில் சென்று
"நம்ம மது இல்லை அத்தை... என் மது....இப்போ ஓகே வா???" என்று கேட்கவும் வாயைப் பிளந்து கொண்டு நின்றார் சுலோச்சனா.


"அப்பா...அம்மா...நான் உங்க கிட்ட ஒரு உண்மை சொல்லணும்" என்று கூறிய அருள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன் வாழ்விலும், மதுவின் வாழ்விலும் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் கூற அனைவரும் அமைதியாக நின்றனர்.


சிறிது நேரத்தின் பின் மது தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததையும் கூற விஜி அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.


"சூப்பர் அண்ணா...மதுவை எனக்கு பர்ஸ்ட் டைம் பார்த்ததுமே புடிச்சுடுச்சு. அவங்க எனக்கு அண்ணியா வர்றாங்களா...ரொம்ப சந்தோஷம்ணா..." என்று கூறிய விஜி வத்சலா அருகில் சென்று அவர் தோள் தொட


நடப்புக்கு வந்த வத்சலா
"என் பையன் ஆசைக்கு நான் எப்போவாவது தடையாக இருந்துருக்கேனா??" என்று கேட்கவும்


"அம்மாவும் ஓகே சொல்லிட்டாங்க...." என்று துள்ளிக் குதித்தாள் விஜி.


ஆனால் வத்சலாவின் மனதில் ஒரு ஓரத்தில் ஷோபாவையும், அருளையும் ஜோடி சேர்க்க கொடுத்து வைக்கவில்லை போல என்ற ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.


அது வரை நேரமும் அமைதியாக நின்ற லோகநாதன் அருளின் அருகில் வந்து
"நீ பண்ணுண தப்புக்கு பிராயச்சித்தம் பண்ணுறேனு இப்போ இந்த கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதிக்கலையே அருள்??" என்று கேட்கவும்


"அப்பா....ஏன்பா இப்படி எல்லாம் கேட்குறீங்க??? மதுவை முதல் தடவை பார்த்ததுமே எனக்கு அவதான்னு முடிவு பண்ணிட்டேன். அவ சம்மதத்துக்காக தான் காத்திருந்தேன். இப்போ அவ சம்மதிச்சுட்டா. அவ இது நாள் வரை பட்ட கஷ்டம் எல்லாம் போதும். இனி ஒரு சின்ன துரும்பு கூட அவளை நோகடிக்க நான் விடமாட்டேன்" என்று சுலோச்சனாவைப் பார்த்து கொண்டே கூறினான்.


"வெல்டன் மை பாய்...வெல்டன்...மதுவோட அம்மா குணமானதும் முதல் வேளை உன் கல்யாணத்துக்கு நாள் குறிக்குறது தான். சீக்கிரம் என் மருமகளை அழைச்சிட்டு வரணும்" என்று கூற


"அப்பா...." என்று லோகநாதனை சந்தோஷமாக அணைத்துக் கொண்டான் அருள்.


அங்கு ஒரு பாசப் பிணைப்பு அரங்கேறிக் கொண்டு இருக்க சுலோச்சனாவின் மனதோ எல்லையில்லா வெறுப்பை சுமந்து கொண்டு இருந்தது.


அவர் விழிகளோ அவர்கள் அனைவரையும் வெறித்துக் கொண்டு இருந்தது.


யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சுலோச்சனா வெளியேறி செல்வதைக் கண்டு கொண்ட வினித்
"பெரிய பூகம்பம் மேட்டர் ஓவர்....ஆனா எப்போ எரிமலையாக வந்து வெடிச்சு எல்லோரையும் சாம்பல் ஆக்கப் போகுதோ தெரியலை!!!" என்று நினைத்து கொண்டவன்


அருளின் அருகில் சென்று தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டான்.


மூச்சிறைக்க கடும் கோபத்தோடு வீட்டிற்குள் நுழைந்த சுலோச்சனாவின் கண்களில் பட்டாள் ஷோபா.


ஸோபாவில் மல்லாக்க படுத்துக் கொண்டு காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு காலை ஆட்டி கொண்டு இருந்த ஷோபாவின் எதிரில் கோபத்துடன் வந்து நின்ற சுலோச்சனா அவளது காதில் இருந்த ஹெட் போனை பிடுங்க


"ஆஆஆஆஆ....." என்ற அலறோடு ஷோபா எழுந்து அமர்ந்தாள்.


"மா...லூசாம்மா நீ??? இப்படி காதில் இருந்து ஹெட் போனை பிடுங்குற...காதுக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ன பண்ணிருப்ப???" என்று ஷோபா சத்தம் போடவும்


அவளை முறைத்து பார்த்த சுலோச்சனா
"அந்த காது இருந்தா என்ன?? இல்லைனா என்ன?? அங்க என்னென்னவோ நடக்குது..நீ இங்க இருந்துட்டு பாட்டு கேட்டுட்டு இருக்க..." என்று கூற குழப்பமாக அவரைப் பார்த்தாள் ஷோபா.


"என்னம்மா சொல்லுற??? ஒழுங்காக புரியுற மாதிரி சொல்லுமா" என்று ஷோபா கேட்கவும்


அருள் மதுவை பற்றி கூறியது எல்லாவற்றையும் கூற திகைத்துப் போய் நின்றாள் ஷோபா.


"ஓஹ்.....இவ்வளவு நடந்துருக்கா??? அவ்வளவு சுலபமாக அருளை விட்டு கொடுத்துடுவேனு நினைச்சியாமா??? என்ன நடந்தாலும் அருள் எனக்கு தான். இன்னும் கல்யாணம் நடக்கலையே! இந்த ஷோபா யாருனு காட்டுறேன்" என்று கூறி கொண்டவள் கார் சாவியை எடுத்து கொண்டு வேகமாக வெளியேறி சென்றாள்.


குளித்து தயாராகி வந்த அருள் வத்சலாவிடம் சொல்லி விட்டு ஹாஸ்பிடல் நோக்கி புறப்பட்டான்.


மயக்கம் சற்று தெளிந்து இருந்த அருணாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த மது அப்படியே உறங்கிப் போய் இருந்தாள்.


அறைக்குள் வந்த அருள் மதுவின் முகத்தை ஆசையாக பார்த்து கொண்டே அருணாவின் ரிப்போர்ட்களை எல்லாம் மேற்பார்வை செய்தான்.


அருளின் குரல் கேட்டு கண் விழித்த மது முதன் முறையாக அருளை நேர் கொண்டு பார்க்க தயங்கினாள்.


மதுவின் இந்த புதிய பரிமாணம் அருளை இம்சிக்க தான் இருக்கும் சூழல் உணர்ந்து பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டான்.


ஓரக்கண்ணால் அருளை பார்த்து கொண்டு நின்றவள் வெளியேறி செல்ல அவளை பின் தொடர்ந்து சென்றான் அருள்.


வேகமாக எட்டு வைத்து சென்ற அருள் மதுவின் முன்னால் நிற்கவும் சட்டென்று மது நின்றாள்.


மதுவின் கையை பிடித்து கொண்ட அருள் அவனது அறைக்குள் அவளை அழைத்து செல்லவும் மது வெலவெலத்துப் போனாள்.


"அருள் யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க?? இது ஹாஸ்பிடல்...வீடு இல்லை..." என்றவாறு அருளின் கையில் இருந்து தன் கையை அவள் எடுக்க முயல மேலும் அவளை நெருங்கி நின்றான் அருள்.


"எங்க வீட்ல எல்லாருக்கும் உன்னை ரொம்ப புடிச்சுடுச்சு மது....அத்தை குணமானதும் உங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பொண்ணு கேட்க போறேன். இனி உனக்கும் எனக்கும் நடுவில் எந்த பிரிவும் வராதுடா மது..." என்று கூறவும் விழி விரிய அவனைப் பார்த்தாள் மது.


"ஆல்ரெடி உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். இனியும் என்னால வெயிட் பண்ண முடியாது. கூடிய சீக்கிரம் இந்த மிஸ். மதுமிதாவை மிஸஸ். மதுமிதா அருளாக மாற்றுறேன். உனக்கு சம்மதமா??" என்று அருள் கேட்கவும் அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டாள் மது.


இனி பிரிவே இல்லை என்பது போல அருளின் மேல் மது சாய்ந்து நின்று அந்த நொடியின் ஏகாந்தத்தை இருவரும் ரசித்து கொண்டு நின்றனர்.


மறுபுறம் மதுவின் வீட்டின் முன்னால் தன் காரில் சாய்ந்து நின்ற ஷோபா
"அருள் நீ எப்படி அந்த மதுவை கல்யாணம் பண்ணுறேனு பார்க்குறேன்..." என்று விட்டு தன் கையில் இருந்த அருளின் போட்டோவை பார்த்து சிரித்துக் கொண்டாள்......
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update husna...
அடப்பாவி ஷோபா அவங்க ரெண்டுபேருமே இப்பதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க... அது உனக்கு பொறுக்கலையா???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Aii..soppu dappa.. olunga sridhar unna love panraan la.. avan kitta odiru.. inga ethaavathu kusumbu pannuna.. avloo thaan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top