• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
வாழ்க்கையில் முதல் தடவையாக ஷோபா தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து அழுது கொண்டிருந்தாள்.


சற்று நேரத்திற்கு முன்னர் மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளை அவள் மனது அசை போட்டது.


கார்த்திக் கோபமாக அவளிடம் பேசி விட்டு சென்ற பிறகே அவள் தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்து கொண்டாள்.


நேர் வழி சொல்லித் தர வேண்டிய தன் தாயே தன்னை இவ்வாறு மாற்றி விட்டாரே என்று எண்ணி சுலோச்சனாவின் மேல் கோபம் கொண்டாள் ஷோபா.


மண்டபத்தில் இருந்தது எல்லோரும் கிளம்பி செல்லும் போது அவளருகில் நின்ற ஸ்ரீதர் மறந்தும் அவள் முகத்தை திரும்பி பார்க்காமல் இருக்கவும் ஷோபாவின் மனம் வேதனை கொண்டது.


"ஏன் ஸ்ரீ என் கூட பேசவே இல்லை???? ஒரு வேளை நான் செய்ததெல்லாம் தெரிந்திருக்குமோ???" என்று எண்ணி குழப்பம் கொண்டவள்


ஸ்ரீதரிடமே சென்று அதைப் பற்றி கேட்டாள்.


"ஸ்ரீ....நான்..." என்று பேசப் போன ஷோபாவை கை காட்டி நிறுத்துமாறு கூறியவன்


"இப்போ என்ன டிராமா போட வந்துருக்க??? கூட இருக்கருவங்களுக்கே துரோகம் பண்ணுற அளவுக்கு போயிட்டலே....கார்த்திக் கூட நீ பேசும் போது எல்லாமே கேட்டுட்டேன்....நீயெல்லாம் ஒரு பொண்ணா??? சே....உன்னை போய் என் மனசுல பத்திரப்படுத்தி வைச்சேனே!!! உன் முகத்தை பார்க்க கூட எனக்கு புடிக்கல....தயவுசெய்து இனி என் முன்னாடி வந்துடாதே!!!" என்று விட்டு ஸ்ரீதர் செல்ல ஷோபாவின் மனம் சுக்கு நூறாக சிதறி போனது.


"ஸ்ரீ....என்னை...அவர் மனசுல...." என்று தேம்பி தேம்பி அழுதவள் உடனே தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள்.


ஸ்ரீதரின் வார்த்தைகள் காதில் கேட்டுக் கொண்டே இருக்க
"நோ.........." என்று தன் காதை மூடிக் கொண்டு அழுதவள் தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு எழுந்து நின்றாள்.


தன் பெட்டியை எடுத்து அதில் தன் உடைகளை எல்லாம் எடுத்து வைத்த ஷோபா படியிறங்கி வந்து வீட்டை வெளியேறி செல்வதற்காக கதவை திறக்கவும் சுலோச்சனா வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


பெட்டியும் கையுமாக நின்ற ஷோபாவை குழப்பமாக பார்த்த சுலோச்சனா
"என்ன ஷோபா இது??? எங்கேயும் டூர் போறியா என்ன???" என்று கேட்கவும்


அவரை முறைத்து பார்த்தவள்
"நான் இந்த வீட்டை விட்டே போறேன்..." என்று கூறவும் அவளை பார்த்து சிரித்தார் சுலோச்சனா.


"விளையாடுனது போதும் உள்ளே வா..." என்று ஷோபாவின் கையை சுலோச்சனா பிடிக்கவும்


அவரது கையை தட்டி விட்டவள்
"நான் வரமாட்டேன்....இத்தனை நாள் உன் பேச்சை கேட்டு நான் என்னென்னவோ பண்ணிட்டேன்....எனக்கு நல்லது எது? கெட்டது எதுனு? சொல்லித் தரவேண்டிய நீயே என்னை தப்பான வழிக்கு தள்ளி விட்டுட்டியே.....ஏன்மா ஏன்??? அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி வர்ற சந்தோஷம் எத்தனை நாளைக்கு??? இனி என்னால உன் பேச்சை கேட்டு நடக்க முடியாது....இனியாவது என்னை திருந்தி வாழ விடு...நீயும் மனிஷங்களை மதிச்சு நடக்கப்பாரு..." என்று விட்டு செல்ல போக அவளை இழுத்து வீட்டுக்குள் தள்ளிய சுலோச்சனா கதவைத் தாழ் போட்டார்.


"என்னடி வாய் ரொம்ப நீளுது....ஓவரா பேசுற நாக்கை இழுத்து வைச்சு அறுத்துடுவேன். வாயை மூடிக்கிட்டு பேசாமல் நான் சொல்றதை பண்ணணும்....ஏதாவது கோல்மால் பண்ணலாம்னு நினைச்ச அப்புறம் நடக்குறதே வேற....எத்தனை திட்டம் போட்டு வைச்சுக்குறேன்...அருளை வைச்சு அத்தனை சொத்தையும்....." என்று கண்கள் பளபளக்க கூறிய சுலோச்சனா


ஷோபா அருகில் வந்து
"நான் சொல்றதை மட்டும் தான் நீ பண்ணணும்....வேற ஏதாவது செய்யலாம்னு யோசிச்ச....ஜாக்கிரதை..." என்று விட்டு செல்ல தன் தாயின் துர் மனதை எண்ணி வேதனையாக தேற்றுவார் யாரும் இன்றி அழுது கொண்டிருந்தாள் ஷோபா.


மாலை நேரம் சூரியன் மெல்ல மெல்ல தன் கதிர்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் வேளை மெல்ல கண் திறந்தாள் மது.


முதலில் அந்த அறையை சுற்றி பார்த்தவள் அப்போது தான் தான் எங்கே இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டாள்.


கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள் மாலை 6.30 என காட்டவும்
"ஐயோ!!!! இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா????" என்று அடித்துப் பிடித்து கொண்டு எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.


அவசர அவசரமாக குளித்து விட்டு வந்தவள் அப்போது தான் தன் உடைகள் எதுவும் இங்கே கொண்டு வரவில்லையே என்பதை உணர்ந்து கொண்டாள்.


கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அருள் டவலை கட்டி கொண்டு தலை முடியில் இருந்து ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்த மதுவை பார்த்து கண்ணிமைக்கவும் மறந்து போனான்.


அருளை அங்கே எதிர்பார்க்காத மதுவோ
"அய்யய்யோ......" என்று அலறியபடி மீண்டும் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள அவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் அருள்.


"இப்போ எதுக்கு சிரிப்பு???" என்று மது அதட்டலாக கேட்கவும்


சிரிப்பதை நிறுத்திக் கொண்ட அருள்
"உன்னை சாப்பிட எழுப்பலாம்னு தான் வந்தேன்...ஆனா...அதற்குள்ள...." என்று இடை நிறுத்தி அருள் மீண்டும் சிரிக்கவும் மது தன் தலையில் தட்டி கொண்டாள்.


"சரி நான் வர்றேன்....நீங்க போங்க...." என்று கூறிய மது


"அருள் என்னோட டிரஸ் எல்லாம்...." என்று கேட்கவும்


"அந்த கப்போர்ட்ல இருக்கு..." என்று விட்டு அருள் சென்று விட மெல்ல குளியலறையில் இருந்து எட்டி பார்த்த மது அருள் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் வெளியில் வந்தாள்.


அவசர அவசரமாக உடை மாற்றி விட்டு படியிறங்கி ஹாலுக்கு சென்றவள் நேராக வத்சலாவை தேடி சென்றாள்.


சமையலறைக்குள் வேலை செய்து கொண்டிருந்த வத்சலாவைப் பார்த்து வாசலிலேயே தயங்கி நின்றாள் மது.


மது சமையலறை வாசலிலேயே நிற்பதைப் பார்த்து புன்னகத்து கொண்ட வத்சலா
"என்னம்மா அங்கேயே நின்னுட்ட??? உள்ளே வா..." என்று அழைக்கவும்


தயக்கத்துடன் உள்ளே நுழைந்த மது
"ஸாரி அத்தை....டயர்ட்ல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்...ஸாரி..." என கூறவும்


அவளைப் பார்த்து சிரித்த வத்சலா
"அம்மா கிட்ட ஸாரி சொல்லணும்னு அவசியம் இல்லைடா மது....இது இனி உன் வீடு மாதிரி...இன்னைக்கு ஒரு நாள் தானே அசந்து தூங்கிட்ட...அதுல என்ன இருக்கு....நீ காலையில் இருந்து எதுவும் சாப்பிடவே இல்லையே!!! முதல்ல இந்த ஜூஸை குடி..." என்று ஒரு கப்பை நீட்டவும் சற்று கூச்சத்துடனே அதை வாங்கி குடித்தாள் மது.


"உனக்கு சமைக்கத் தெரியுமா???" என்று வத்சலா கேட்கவும்
குடித்து கொண்டிருந்த ஜூஸ் புரையேற திருதிருவென்று விழித்தாள் மது.


மதுவின் பார்வையிலேயே அவளது சமையல் திறனை பற்றி தெரிந்து கொண்ட வத்சலா
"சமையல் தெரியலையேனு கவலைப்படாதே மது....நானும் கல்யாணம் முடியுற வரைக்கும் சமையலறை பக்கமே போகாதவதான்....கல்யாணத்துக்கு அப்புறம் அருள்அப்பா தான் எனக்கு சமைக்கவே சொல்லி தந்தாரு....நான் உனக்கு சொல்லித் தரேன்..." என்று கூற


"தாங்க் யூ சோ மச் அத்தை...." என்று சந்தோஷமாக கண்கள் கலங்க வத்சலாவைக் கட்டி கொண்டாள் மது.


மதுவின் மனநிலையை சகஜமாக வைக்க அருள் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே அவர்களின் பின்னால் வந்து நின்றான்.


"மாமியார், மருமகள்னா இப்படியா இருப்பாங்க???" என்று கேட்டுக் கொண்டு வந்த அருளை பார்த்து சிரித்த வத்சலா


"வேற எப்படிடா இருக்கணும்???" என்று கேட்கவும்


அவர் முன்னால் வந்து நின்ற அருள்
"மாமியார் அன்ட் மருமகள் போடுற சண்டையில் இந்த ஏரியாவே கதி கலங்கி போகணும்....சும்மா ஒரு ஆக்ஷன் மூவி பார்க்குற எபெக்ட் வரணும்....இது என்னடானா எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு பாட்டு பாடுற ரேஞ்சுல நடந்துக்குறீங்க...." என்று வருத்தப்படுபவன் போல கூறவும் அவன் காதைப் பிடித்து செல்லமாக திருகினார் வத்சலா.


"ஆஆஆ....வத்ஸ்..வலிக்குது..." என்று அவரிடம் இருந்து விலகி நின்ற அருளை பார்த்து மது சிரிக்கவும் அவளை முறைத்து பார்த்தான் அருள்.


"அவளை எதுக்கு டா முறைக்குற?? நானும், என் மருமகளும் ஒற்றுமையாக இருந்தா உனக்கு பொறாமையாக இருக்கோ??? நாங்க இப்படி தான் இருப்போம்...இல்லையா மது???" என்று வத்சலா கேட்கவும்


"கரெக்ட் அத்தை...சில பேருக்கு நம்மளை பார்த்து பொறாமை... இப்போ கூட ஏதோ கருகுரு ஸ்மெல் வரல???" என்று கேட்டு மது சிரிக்கவும்
அவளை பார்த்து பழிப்பு காட்டினான் அருள்.


"மாமியாரும், மருமகளும் சேர்ந்து கூட்டணி அமைச்சுட்டீங்களா?? இருங்க எனக்கு பார்ட்னர் கூட்டிட்டு வரேன்..." என்று விட்டு சென்றவன்


மதுவைப் பார்த்து சிரித்துக் கொண்டே
"மிஸ்டர். லோகு......" என்று அழைத்தவாறு சென்றான்.


மது சகஜமாக பேசுவதைப் பார்த்து சந்தோஷம் கொண்டவனாக அங்கிருந்த சுவரில் சாய்ந்து பெருமூச்சு விட்டு கொண்டான் அருள்.


"இவன் எப்பவும் இப்படி தான் மது....விளையாட்டு தனம் ஜாஸ்தி....அவன் பண்ணுண தப்பு எதையும் மனசுல வைச்சுக்காதமே..." என்று வத்சலா கூற


"அய்யோ....அத்தை....அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை....அதெல்லாம் நான் எப்போவோ மறந்துட்டேன்..." என்று மது கூறவும்



புன்னகத்து கொண்ட வத்சலா மதுவோடு பேசிக் கொண்டே சமையல் வேலைகளை செய்து முடித்தார்.


சிரிப்பும், கேலியுமாக மதுவை சந்தோஷமாக எந்த கவலையும் தீண்டாமல் இரவுணவு சாப்பிட செய்த அருள்
"இனி எப்போதும் உன்னை இதே மாதிரி சந்தோஷமாக பார்க்கணும்டா மது..." என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.


இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ததால் வெகு களைப்பாக உணர்ந்த அருள் இரவு நேரத்திற்கு உறங்கி விட மது உறக்கம் வராமல் விழித்து கொண்டிருந்தாள்.


அதிகாலை நேரம் மெல்ல கண்ணயர்ந்த மது திடீரென்று ஏதோ சத்தம் கேட்கவும் எழுந்து அமர்ந்தாள்.


"என்ன சத்தம் அது????" என்று யோசித்தவாறே பால்கனிக்கு சென்றவள் கீழே தோட்டத்தில் சிறிய பூனைகள் நான்கு, ஐந்து தன் தாய் பூனையுடன் விளையாடுவதை ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றாள்.


சிறிது நேரத்தின் பின் குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு கீழே பூஜையறையை நோக்கி சென்றாள் மது.


தன் வீட்டில் இருந்த பூஜையறையை விட நான்கு, ஐந்து மடங்கு பெரிதாக இருந்த பூஜையறையை பார்த்து வியந்தவளாக நடந்து வந்து கண் மூடி நின்றாள்.


தன் அழகிய குரலினால் 'அலைபாயுதே கண்ணா...' பாடலை பாட வத்சலாவும், லோகநாதனும் அவள் குரலில் லயித்துப் போய் இருந்தனர்.


பாடலை பாடி முடித்து விட்டு கண் திறந்த மது அப்போது தான் எதிரில் தன் தாய், தந்தை இருவரது புகைப்படம் இருப்பதையும் பார்த்து வியப்படைந்தாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
கண்களில் கண்ணீர் ததும்ப நின்ற மதுவின் தோள் தொட்ட வத்சலா
"உன் அம்மா, அப்பா உன்னை
விட்டு எங்கேயும் போகல...இந்த வீட்டில் இந்த பூஜையறையில் கடவுளாக இருந்து உன் சந்தோஷத்தைப் பார்த்துட்டு இருப்பாங்க....அதனால இனி எப்போதும் நீ சிரிச்சு சந்தோஷமாக இருக்கணும் சரியா???" எனக்கு கேட்க
சரியென்பது போல தலை ஆட்டிய மது வத்சலாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.


பின்னர் வத்சலாவோடு அளவளாவிக் கொண்டு சமையலறைக்குள் வேலை செய்வது போல நின்றிருந்தாள் மது.


"அம்மா மதும்மாவைத் தேடி அவங்க சொந்தக்காரங்க வந்திருக்காங்க...." என்று வேலைக் காரப் பெண்மணி ஒருவர் கூறவும்


"பத்தும்மா, ஸ்ரீ வந்திருக்காங்க போல....நான் போய் பார்க்குறேன் அத்தை...." என்று சந்தோஷமாக ஓடிச்சென்றாள் மது.


போன வேகத்தில் திரும்பி ஓடி வந்த மது வத்சலாவின் கையை பிடித்து கொண்டு
"அத்தை....அங்கே...அத்தை...அங்கே..." என்று பதட்டத்துடன் கூறவும்


பயந்து போன வத்சலா
"என்னடா மது??? என்ன ஆச்சு??? நீ டென்சன் ஆகாதே!!! முதல்ல இந்த தண்ணீரை குடி..." என்று ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து மதுவிடம் கொடுத்தவர்


அவள் தண்ணீரை குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு
"சரி...வா போய் யாருனு பார்க்கலாம்..." என்று அவளின் கை பிடித்து அழைத்து செல்ல அவர் தோளோடு ஒன்றிக் கொண்டு தயங்கியபடியே நடந்து சென்றாள்.


மதுவைப் பார்த்ததும் அவளருகில் ஓடி வந்து அணைத்துக் கொண்ட அகிலா
"மதுமா....எப்படி டா இருக்க???" என்று கேட்கவும் மிரட்சியாக அவரிடம் இருந்து விலகி கொண்ட மது வத்சலாவின் பின்னால் சென்று நின்று கொண்டாள்.


மதுவின் செய்கையால் மனம் வாட நின்ற அகிலா
"நான் பண்ண பாவத்திற்கு இது தேவை..." என்று புலம்பிக் கொண்டே கார்த்திக்கின் அருகில் சென்று நின்றார்.


"நீங்க....." என்று வத்சலா கேள்வியாக நிறுத்தவும்


"நான் அகிலாண்டேஸ்வரி...மதுவோட அத்தை...இது என் பையன் கார்த்திக்..." என்று அகிலா கூறவும் அமைதியாக கேட்டுக் கொண்டு நின்றார்.


"வாங்க கார்த்தி....வாட் அ சர்ப்பரைஸ் விசிட் வாங்க...வாங்க..." என்று கூறியவாறு படியிறங்கி வந்த அருளை மது வியப்பாக பார்த்தாள்.


"என்னம்மா வீட்டுக்கு வந்தவங்களை உட்காரக் கூட சொல்லாம நிற்க வைச்சு பேசிட்டு இருக்க??" என்று கண்டிப்புடன் வத்சலாவைப் பார்த்து கேட்ட அருள்


"உட்காருங்க கார்த்தி...உட்காருங்கம்மா...." என்று கூறவும் புன்னகத்தவாறே அகிலாவும், கார்த்திக்கும் அமர்ந்து கொண்டனர்.


"அப்பா வரலயா கார்த்தி???" என்று அருள் கேட்கவும்


புன்னகத்து கொண்ட கார்த்திக்
"அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனால ரூம்ல ஸ்டே பண்ணச் சொல்லிட்டு நாங்க மட்டும் வந்தோம்" என்று கூற


"மாமாவுக்கு என்ன ஆச்சு???" என பதட்டத்துடன் கேட்டாள் மது.


"பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை மது....லாங் டிராவல்...கொஞ்சம் டயர்ட் அவ்வளவு தான்..." என்று கார்த்திக் கூறவும்


"ஹப்பாடா..." என்று நிம்மதியாக கூறி கொண்டாள் மது.


"நீங்க பேசிட்டு இருங்க...நான் போய் காபி எடுத்துட்டு வரேன்..." என்று வத்சலா சென்று விட மது தயக்கத்துடன் அருளின் அருகில் சென்று நின்றாள்.


"கார்த்தி நேற்று காலையில் போன் பண்ணி நடந்தது எல்லாமே சொன்னான்...ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டேன்....அன்னைக்கு ஏதோ கோவத்துல நீங்க என் சொந்தமே இல்லைனு சொல்லிட்டு போயிட்டேன்....நான் ஒரு முட்டாள் மது....மனசுல என்ன தோணுதோ பேசிடுவேன்...நல்லதோ..கெட்டதோ...யோசிக்க மாட்டேன்...எத்தனையோ வாட்டி அந்த குணத்தை மாத்திக்க சொல்லி எல்லோரும் சொன்னாங்க...ப்ச்....என்னோட கோபம் எவ்வளவு தூரம் போயிடுச்சு...கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதுக்குனு?? கூட நீ நினைக்கலாம்...ஆனா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்டு தானே ஆகணும்....உனக்கு எப்போ தோணுதோ அப்போ இந்த அத்தையை மன்னிச்சோக்கோடா மது...நாங்க வர்றோம்..." என்று விட்டு கார்த்திக்கும், அகிலாவும் கிளம்பி செல்லப் போக அவர்களை போக விடாமல் தடுத்து பகலுணவை முடித்து விட்டே அவர்களை போக செய்தான் அருள்.


தன் மனதார மீண்டும் மீண்டும் மதுவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டே அகிலா புறப்பட்டு செல்ல அவரை சென்று அணைத்துக் கொண்ட மது ஏதோ அவரிடம் கூறவும் ஆனந்த கண்ணீர் ததும்ப மதுவை பாசமாக அணைத்துக் கொண்டார் அகிலா.


சிறிது நேரத்தின் பின் கார்த்திக் மற்றும் அகிலா கிளம்பி சென்று விட விஜி மற்றும் வினித் வந்து சேர்ந்தனர்.


"அண்ணி......" என்று கூவலோடு மதுவை அணைத்துக் கொண்ட விஜி அவள் கன்னத்தில் முத்தமிடவும் வெட்கத்தோடு புன்னகத்து கொண்டாள் மது.


"ஹஸ்பன்ட் நான் ஒரு கிஸ் கேட்டா என்ன அலப்பறை பண்ணுவா?? இப்போ அவ அண்ணி கேட்காமலேயே கிஸ் பண்ணுறா...வீட்டுக்கு போனதும் உன்னை கவனிச்சுக்குறேன்டி மீனு..." என்று வினித் புலம்பிக் கொண்டு இருக்கவும்


அவனருகில் வந்த அருள்
"நீ மைண்ட் வாய்ஸ்னு சத்தமாக பேசிட்டடா வினித்.." என்று கூறவும்


"அய்யய்யோ...." என்று பதட்டத்துடன் முன்னால் நடந்து சென்ற விஜியைப் பார்த்தவன்


"ஹப்பாடா....அவ காதுல விழல...இல்லைனே என்ன கைமா
பண்ணிருப்பா..." என்று கூறவும் அவனை பார்த்து சிரித்த அருள்


"விஜிக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா......" என்று கூறி கொண்டே அவனுடன் இணைந்து நடந்தான்.தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்த கார்த்திக் கோவிலை காணவும் சட்டென்று காரை நிறுத்தினான்.


"என்ன கார்த்திக் இங்கே காரை நிறுத்திட்ட???" என்று அகிலா கேட்கவும்


"சும்மா தான் மா...கோவிலுக்கு போயிட்டு போகலாம்னு...." என்று கூறவும்


மனதிற்குள் சிரித்துக் கொண்டே காரை விட்டு இறங்கி கோவிலுக்குள் சென்றார் அகிலா.


கார்த்திக்கின் கண்களோ ஹரிணியையே தேடியது.


"சே...இன்னைக்கு அவ கோவிலுக்கு வந்திருந்தா அம்மா கிட்ட காட்டி இருக்கலாம்....வராமல் போயிட்டாளே...." என்று சலிப்போடு திரும்பியவன் எதிரில் ஹரிணி நடந்து வருவதைப் பார்த்து மனதினுள் துள்ளிக் குதித்து கொண்டான்.


கார்த்திக்கின் முக பாவனைகளையே பார்த்து கொண்டிருந்த அகிலா
"நான் பிரகாரத்தை சுற்றிட்டு வரேன்....நீ கார்ல போய் உட்காரு..." என்று கூறவும்


"ஆனா...அம்மா..." என்று பேசப் போனவனை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தவர் ஹரிணியை நோக்கி சென்றார்.


"உன் பேரு என்னம்மா???" என்று தன் பின்னால் கேட்ட குரலில்


திரும்பி பார்த்த ஹரிணி
அகிலாவைப் பார்த்து யோசனையோடு


"ஹரிணி...." என்று கூறினாள்.


"நீ சென்னை தானா??? உன் அம்மா, அப்பா எல்லாம் என்ன பண்ணுறாங்க??" என்று அகிலா மீண்டும் கேட்கவும்


குழப்பமாக அவரைப் பார்த்தவள்
"ஆன்டி நீங்க..." என்று இழுக்கவும்


"நீ பயப்படாமல் சொல்லுமா....ஏன் கேட்டேனு நான் பின்னாடி சொல்லுறேன்...." என்று கூற
சரியென்று தன்னை பற்றி கூறினாள் ஹரிணி.


"அப்பா போலீஸ் கான்ஸ்டபிள்...அம்மா வீட்டில் தான் இருக்காங்க...." என்று கூற


"கூடப் பொறந்தவங்க??" என்று கேட்டார் அகிலா.


"ஒரு அக்கா. பேரு பவித்ரா..." என்று கூறி ஹரிணி இடை நிறுத்த


"அவங்க என்ன பண்றாங்க? கல்யாணம் ஆகிடுச்சா?" என்று மீண்டும் கேட்டார் அகிலா.


"கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை இருக்கு...பாப்பா பேரு தேன்மொழி....மாமா பேங்க்ல வேலை பார்க்குறாரு..." என்று கூறி விட்டு மீண்டும் ஏதோ கேட்க வர


"நீ என்ன பண்ணுற??" என்று அவளை கேள்வி கேட்க விடாது செய்தார் அகிலா.


"நான் பி.இ முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கேன்..." என்று ஹரிணி கூறவும்


அவள் தோளில் தட்டி கொடுத்த அகிலா
"உன் வீடு எங்கேம்மா இருக்கு???" என்று கேட்கவும் தன் வீடு இருக்கும் இடத்தை பற்றி கூறியவள்


"இப்போவாது சொல்லலாமே ஆன்டி..." என்று கூறவும்


"நாளைக்கு ஏன்னு தெரிய வரும்.." என்று விட்டு செல்ல வியப்பாக அகிலாவையே பார்த்து கொண்டு நின்றாள் ஹரிணி.........
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi husna. Hariniyai Partha mudhal naale kalyanathai fix panna porangala akilama . Karthik happy annachi
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Husna..????????.. sooper..
Soap dappa thavira ellame jolly thaan.. paavam thaan soap dappa.. paavam sri kooda serthu vachiru..

Dei arul thambi.. avanga engal veetil ella naalum kaarthigai nu irukurathaala thaan neeyum vaayadikura.. veetu kathi kalagum alavukku sanda potta teriyum seithi.. ???

Aiyae.. intha harini enna ippadi oru makku mannanthaiyaa iruka.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:.. ippadi thaan yaaru kettalum thannoda biodata vaiye opipaala..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top