• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
காலையில் எழுந்து தயாரான அருள் என்றும் இல்லாதவாறு மிகவும் படபடப்பாக உணர்ந்தான்.


ஏதோ தவறான விடயம் நடக்கப் போவதாக அவன் மனம் அடித்துக் கொண்டே இருந்தது.


எல்லா எண்ணங்களையும் தூக்கி போட்டவன் அவனுடைய ஏஞ்சலைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷ உணர்வுடன் வினித்தைத் தேடி சென்றான்.


அங்கு வினித் அருளிற்கு முதலே தயாராகி நிற்க அவனை வியப்பாக பார்த்தான் அருள்.


"என்னடா அதிசயமாக இருக்கு! எனக்கு முன்னாடியே ரெடி ஆகிட்ட!" என்று அருள் கேட்கவும்
அவனைப் பார்த்த வினித்


"எதுக்கு வீணா வம்பு??? ஒரு வாட்டி அந்த பொண்ண பார்க்கப் போறதுக்கு நீ என்னை எப்படி எழுப்புனனேனு நான் இன்னும் மறக்கலடா. அது தான் காலையில ஆறு மணிக்கு அலாரம் வைச்சு எழும்பி நான் ரெடி ஆகிட்டேன். வா போகலாம்" என்று கூற


அவனைத் தோளோடு அணைத்துக் கொண்ட அருள்
"நண்பேன்டா...." என்று கூற


"அடச்சீ...கையை எடு" என்று விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான் வினித்.


வினித்தின் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்ட அருள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.


"ஒரு வேளை நாங்கள் செல்லும் இந்த வீட்டிலேயே அவள் இருந்தால் என்னை பார்த்து அதிர்ச்சி அடைவாளா?? என்னைப் பார்த்து என்ன சொல்வாள்?" என்று பலவிதமான யோசனைகளோடு பயணித்து கொண்டிருந்தான் அருள்.


பல்வேறு நபர்களிடம் வழி கேட்டு கேட்டு பயணித்தவர்கள் இறுதியாக அந்த வீட்டைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்தனர்.


வீட்டின் கதவை தட்டி விட்டு காத்து நின்ற ஒவ்வொரு நொடியும் அருளுக்கு ஒவ்வொரு யுகங்களாக தோன்றியது.


"என்னடா யாரையும் காணோம்??" என்று அருள் கூறவும்


அவனைப் பார்த்து சிரித்த வினித்
"எதுக்குடா இவ்வளவு டென்சன்?? இப்போ தானே கதவைத் தட்டி இருக்கோம் வருவாங்க இருடா" என்று கூறினாலும் அருளின் பதட்டம் குறையவில்லை.


அப்போது கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு ஆவலாக கதவையே பார்த்து கொண்டு நின்றான் அருள்.


ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வெளியேறி வந்து
"நீங்க யாரு??" என்று அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.


"இங்க கார்த்திக், மதுமிதானு யாரும் இருக்காங்களா?" என்று வினித் கேட்கவும்


"கார்த்திக், மதுமிதா வா??" என சிறிது நேரம் யோசித்தவர்


"அப்படி யாரும் எனக்கு தெரியாதே தம்பி" என்று கூறவும் மொத்தமாக சோர்ந்து போனான் அருள்.


"ஐயா நல்லா யோசித்து பாருங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த கல்யாணப் பத்திரிகை அடிச்சுருக்காங்க. அதுல இந்த வீட்டு அட்ரஸ் தான் போட்டுருக்கு. ப்ளீஸ் கொஞ்சம் யோசித்து சொல்லுங்க" என்று வினித் கேட்கவும் அந்த திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தார் அந்த பெரியவர்.


"இரண்டு வருஷத்துக்கு முன்னாடியா?? நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்து ஒரு வருஷம் தான் தம்பி ஆகுது" என்று அவர் கூறவும்


"அப்போ இதுக்கு முன்னாடி இங்கே இருந்தவங்க பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று ஆவலுடன் கேட்டான் அருள்.


"இல்லை தம்பி. நாங்க இந்த வீட்ட ஹவுஸ் ப்ரோக்கர் நாராயணன் மூலமாக தான் வாங்குனோம். அவருக்கு வேணும்னா தெரிஞ்சுருக்கலாம்" என்று அந்த பெரியவர் கூறினார்.


"நாராயணனா? அவர் எங்கே இருப்பார்?" என்று ஒரு சேர அருளும், வினித்தும் கேட்டனர்.


"அவர்...." என்று யோசித்தவர்
தெருவில் ஒரு நபர் சென்று கொண்டிருக்க அவரை சுட்டிக் காட்டி


"அதோ பச்சை சட்டை போட்டு நடந்து போயிட்டு இருக்காறே அவர் தான் நாராயணன்" என்று கூறவும்


"ரொம்ப நன்றி ஸார்..." என்று விட்டு தெருவில் சென்று கொண்டிருந்த அந்த நபரை நெருங்கி சென்றனர்.


"ஸார் ஒரு நிமிஷம்...." என்று வினித் கூறவும் அவனை திரும்பிப் பார்த்தவர்


"யாரு தம்பி நீங்க???" என்று கேட்டார்.


"ஸார் என்னோட பேரு வினித். இது என் பிரண்ட் அருள்" என்று கூறியவன்


அவர்கள் இருவரும் சிறிது நேரத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த வீட்டை சுட்டிக் காட்டி
"இந்த வீட்டுல இரண்டு வருஷத்துக்கு கார்த்திக், மதுமிதானு யாரும் இருந்தாங்களா? அவங்களைப் பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று வினித் கேட்கவும்


சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றார் நாராயணன்.


"ஆமா இது நம்ம கார்த்திக் தம்பியோட வீடு தான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க வீடு காலி பண்ணிட்டு போயிட்டாங்க. கார்த்தி தம்பி அவரோட மாமா பொண்ணு மதுமிதாவோட கல்யாணம்னு இன்விடேஷன்லாம் தந்தாரு. அந்த நேரம் எங்க அம்மாக்கு உடம்புக்கு முடியல. அதனால நாங்க எல்லாரும் ஊருக்கு போயிட்டோம். கல்யாணத்துக்கும் போக கிடைக்கல" என்று வருத்தத்துடன் நாராயணன் கூறவும்


"அப்போ மதுமிதாவையும் உங்களுக்கு தெரியுமா? அவங்க வீடு எங்கே இருக்கு?" என்று கேட்டான் வினித்.


"மதுமிதா கார்த்தியோட மாமா பொண்ணு. சின்ன வயசுல இருந்து அடிக்கடி இங்க வரும் போது பார்த்துருக்கேன். ஆனா அவங்க வீடு எனக்கு தெரியாது தம்பி" என்று அவர் கூறினார்.


"இப்போ கார்த்திக் எங்கே இருக்கார்னு தெரியுமா?" என்று அருள் கேட்கவும்


"அது தெரியாது தம்பி. நான் ஊர்ல இருக்கும் போது ஒரு நாள் கார்த்தியோட அப்பா போன் பண்ணி இந்த வீட்டை யாருக்கும் வித்து கொடுங்க.


நாங்க வேற வீடு மாறிட்டோம்னு சொன்னாரு. அப்புறம் ஒரு இரண்டு மாதம் கழிச்சு வீட்ல இருந்த சாமான்லாம் ஏத்திட்டு இருந்தாங்க. ஏன் ஸார் திடீர்னு வீடு மாறுறீங்கனு கேட்கவும் எல்லாம் என் பையனுக்கு கல்யாணம் பேசுன ராசினு சொன்னாரு. அதுக்கு அப்புறம் நான் அவங்கள பார்க்கல" என்று கூறினார் நாராயணன்.


"ஆமா இதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? நீங்க இரண்டு பேரும் யாரு?" என நாராயணன் கேட்கவும்


"நாங்க கார்த்தியோட பிரண்ட்ஸ். அவனோட மேரேஜ்க்கு வர முடியல. அப்போ நாங்க பாரின்ல இருந்தோம். இரண்டு வாரத்துக்கு முன்னாடி தான் இந்தியா வந்தோம். கார்த்திகோட போன் நம்பர் மிஸ் ஆகிடுச்சு. இந்த இன்விடேஷன் மட்டும் தான் எங்க கிட்ட இருந்துச்சு. அது தான் அவரை தேடி வந்தோம்" என்று வினித் கூற


"ஓஹ்...அப்படியா???" என்று கேட்டுக் கொண்டார் நாராயணன்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"அந்த போட்டோவ காமி அருள்..." என்று வினித் கூறவும் தன் போனில் இருந்த அவன் ஏஞ்சலின் புகைப்படத்தை காண்பித்த அருள்


"இந்த போட்டோல இருக்குறவங்கள உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டான்.


அவனுடைய போனை வாங்கி பார்த்தவர்
"அட நம்ம மது..." என்று கூற


"வாட்?????" என்று அதிர்ச்சியடைந்து நின்றனர் இருவரும்.


"மதுனா யூ மீன் மதுமிதா வா??" என்று வினித் தன் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்க


"ஆமா தம்பி கார்த்தியோட மாமா பொண்ணு. மதுவுக்கும், கார்த்திகும் தான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துச்சு" என்று நாராயணன் கூற அந்த செய்தி இடியாய் அருளின் தலையில் இறங்கியது.


"உங்களுக்கு கன்பார்மா தெரியுமா???" என்று நடுங்கும் குரலை சரி செய்ய முயன்ற படி அருள் கேட்கவும்


"எனக்கு தெரியாதா தம்பி?? கார்த்தியோட சொந்தக்காரங்க எல்லாம் வேற ஊர்ல இருக்காங்க. இந்த ஏரியால கார்த்தி தம்பி குடும்பத்தோட பழக்கமான ஒரே ஆள் நான் தான். வேற யார் கூடவும் பெரிசா பேச்சு வார்த்தை வைச்சிக்க மாட்டாங்க. மது பொண்ணு லீவ் கிடைக்கும் போதெல்லாம் இங்க தான் வருவா. கார்த்தி தம்பியோட வீட்டுக்கு வந்தா ஒரு எட்டு என் வீட்டுக்கு வராம போக மாட்டா. ரொம்ப தங்கமான பொண்ணு" என்று நாராயணன் கூறக் கூற அருளிற்கு பூமியே தன் காலின் கீழ் நழுவிச் செல்வது போல் இருந்தது.


உயிரற்ற உடலாய் தள்ளாடிய படி அருள் செல்ல நாராயணனிடம் நன்றி கூறி விட்டு அருளின் அருகில் சென்றான் வினித்.


"அருள்...." என்று அவன் தோள் தட வினித்தின் தோள் மேல் சாய்ந்து அழத்தொடங்கினான் அருள்.


"அருள் என்னடா இது?? சின்னப் பசங்க மாதிரி கண்ணைத் துடைடா. எல்லோரும் பார்க்குறாங்க" என்று வினித் கூறவும் கண்ணைத் துடைத்து கொண்ட அருள்


"பைக்கை எடு வினித்.." என்று கூறினான்.


வினித் பைக்கை ஸ்டார்ட் செய்ய ஏறி அமர்ந்து கொண்ட அருளின் மனம் ஊமையாக அழுதது.


வழியில் செல்லும் போது ஒரு நீரோடையைப் பார்த்த அருள்
"வினித் பைக்கை கொஞ்சம் நிறுத்து" எனக் கூறினான்.


"இங்கே எதுக்குடா நிறுத்த சொன்ன? மழை வேற வர்ற மாதிரி இருக்கு" என்று வினித் கூறவும்


"நீ ரூமுக்கு போ வினித். நான் கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துட்டு வரேன்" என்று கூறினான் அருள்.


"லூசாடா நீ??? இங்கே இருந்து நம்ம ஏரியாவுக்கு எவ்வளவு தூரம் தெரியுமா? நான் போனா யாரோட எப்படி வருவ? பேசாம வந்து வண்டியில் ஏறு" என்று வினித் கூறவும்


"ப்ளீஸ் டா. கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேனே!!" என்று கெஞ்சலாக அருள் கூற


"சரி நீ போயிட்டு வா. அது வரைக்கும் நான் இங்கேயே இருக்கேன் போ" என்று கூறி அருளை அனுப்பி வைத்தான் வினித்.


"அன்னைக்கே நான் அந்த இன்விடேஷனக் காட்டி இருந்தா இரண்டு வருஷமா அருள் இப்படி மனசுல ஆசையை வளர்த்திருக்க மாட்டான். இதுல என் தப்பும் இருக்கு. இவன எப்படி நான் பழைய நிலைக்கு கொண்டு வருவேன்? வீட்லயும் சொல்ல முடியாது. என்ன செய்வது??" என்று யோசித்து கொண்டிருந்தான் வினித்.


நீரோடை அருகில் இருந்த ஒரு சிறிய பாறையில் அமர்ந்து கொண்ட அருளின் மனதோ மதுவின் நினைவுகளால் அவஸ்தை பட்டது.


"நானா தான் அவ வாழ்க்கையில் குறுக்கே வந்திருக்கேன்னா?. அது தான் அவ நான் என் மனசுல உள்ளதை எல்லாம் சொன்ன பிறகு என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலயா??" என்று யோசித்த அருளின் மனதோ உலைக் களமாக கொதித்தது.


"அன்னைக்கே அவ வாயைத் திறந்து எனக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் நடக்கப் போகுதுனு சொல்லி இருந்தா இவ்வளவு கஷ்டம் எனக்கு வந்திருக்காதுலே!! திட்டம் போட்டு என்னை ஏமாத்திட்டா!! பாவி" என்று அவளை கண்டபடி திட்டி கொண்டிருந்தான் அருள்.


அவளை திட்டி கொண்டிருந்த அருள் ஏனோ அவள் பின்னால் அவன் தான் சுற்றி வந்தான் என்பதை மறந்து போனான்.


மனதில் இருந்த வேதனை முழுவதும் கோபமாக உருமாற வினித்தை நோக்கி வந்தவன்
"வண்டியை எடு போகலாம்" என்று கூறினான்.


சோகமாக சென்ற அருள் கோபமாக வருவதைப் பார்த்து குழப்பமடைந்த வினித் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு புறப்பட்டான்.


அவர்கள் தங்கி இருக்கும் அறை இருக்கும் தெருவிற்குள் நுழையும் போது வண்டியை
நிறுத்தச் சொன்ன அருள் நேராக அங்கிருந்த வைன் ஷாப்பினுள் நுழைந்து கொண்டான்.


அருள் வண்டியை நிறுத்த சொன்னதும் புரியாமல் பார்த்த வினித் அவன் வைன் ஷாப்பிற்குள் செல்வதைப் பார்த்து பதறியடித்து கொண்டு வைன் ஷாப்பினுள் நுழைந்தான்.


வினித் வைன் ஷாப்பினுள் நுழைவதற்குள்ளேயே ஒரு புல் பாட்டிலை குடித்து முடித்திருந்தான் அருள்.


அடுத்த பாட்டிலை தூக்கப் போன அருளின் அருகில் வேகமாக வந்த வினித் அவனது கையில் சிக்காமல் அந்த பாட்டிலை எடுத்து தூர வீசினான்.


"டேய்...எதுக்கு டா பாட்டிலை உடைச்ச???" என்று கோபமாக கேட்ட படியே வினித்தின் சட்டை காலரை பற்றிய படி அவனை அருள் அடிக்கப் போனான்.


பின் ஏதோ நினைவு வந்தவனாக அருள் கையை கீழே இறக்கி கொள்ள அவன் கைகளை பற்றி கொண்ட வினித்


"ஏன்டா கையை கீழே போட்டுட்ட?? அடிடா அடி நல்லா அடி. யாரோ ஒரு பொண்ணுக்காக கண்ட கருமாந்திரத்தை எல்லாம் குடிக்குறலே. இத்தனை வருஷமா உன் கூட இருந்த அம்மா, அப்பா, தங்கச்சி, ப்ரெண்ட்ஸ் யாரும் உனக்கு முக்கியம் இல்லை அப்படி தானே??" என்று கோபமாக கேட்கவும்


"என்னால முடியல மச்சான். அவள மறக்க முடியலடா. அவ என் தேவதைடா. கண்டிப்பா அவ என்ன தேடி வருவாடா.." என்று புலம்பிக் கொண்டே வினித்தின் மேல் சாய்ந்து கொண்டான் அருள்.


கைத்தாங்கலாக அருளை அழைத்து சென்ற வினித் அருளின் அறையில் அவனைப் படுக்க செய்து விட்டு வைன் ஷாப் வாயிலில் இருந்த தன் பைக்கை எடுத்து வந்தான்.


அறைக்குள் நுழைந்த வினித் அருளின் அறையில் ஏதோ சத்தம் கேட்கவும் அங்கே சென்று பார்த்தான்.


பழக்கமில்லாத குடியை அருள் அன்று நாடியதால் அறை முழுவதும் வாந்தி எடுத்து வைத்திருந்தான்.


அவசர அவசரமாக அவனது அறையை சுத்தம் செய்த வினித் அருளை குளிக்க வைத்து உடை மாற்றி தூங்க வைத்து விட்டே தன்னறைக்கு சென்றான்.


குளித்து உடை மாற்றி வந்த வினித்திற்கு அன்றைய இரவு தூங்கா இரவாகவே கழிந்தது.


காலையில் கண் விழித்த அருளிற்கு தலையெல்லாம் பாரமாக இருந்தது.


நேற்று என்ன நடந்தது என்று யோசித்து பார்த்த அருள் அப்போதுதான் தான் செய்த காரியத்தை எண்ணி வேதனை அடைந்தான்.


தலையை இரு கைகளாலும் பிடித்து கொண்டு அமர்ந்திருந்த அருளின் முன்னால் வந்து நின்ற வினித்


"இந்தா லெமன் ஜூஸ் குடி தலைவலி குறைஞ்சிடும்" என்று கூறவும் தலை குனிந்த படியே அமர்ந்திருந்தான் அருள்.


அவன் முகம் நிமிர்த்தி பார்த்த வினித்
"இப்போ கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? முதல்ல ஜூஸைக் குடி" என்று அருளின் கையில் கிளாஸைத் திணித்து விட்டு சென்றான்.


அப்போது பார்த்து அருளின் போனில் அலாரமும் ஒலித்தது.


அழகியே மேரி மீ.....
மேரி மீ.......
என்ற பாடல் கேட்கவும் கண்கள் கலங்க அமர்ந்திருந்த அருளின் அருகில் வந்த வினித்


அவனுடைய போனில் அலாரத்தை நிறுத்தி விட்டு அருளின் புறம் திரும்பி
"அருள் நடந்ததையே நினைச்சு நீ பீல் பண்ணுறதால எதுவும் மாறப் போறது இல்ல. கடவுள் நமக்குனு என்ன விதிச்சிருக்காரோ அது தான் நடக்கும். நீ எதைப் பத்தியும் யோசிக்காம திருச்சி கிளம்புற வழியை பாரு. நாளைக்கு கான்பிரன்ஸ் இருக்குலே. ஷோ ரெடி ஆகு. முக்கியமான விஷயம் சன்டே கண்டிப்பாக வீட்டுக்கு வந்துடு. வெடிங் பிளானர்ஸ் வராங்கலே" என்று கூறினான்.


அப்போதும் அருள் அமைதியாக இருப்பதைப் பார்த்த வினித்
"ஒரு முக்கியமான விஷயம் அங்க போய் இப்படி எல்லாம் பண்ணி வைச்சுடாத. நீ ஒரு டிஸிப்பிளினான டாக்டர். அதை ஞாபகம் வைச்சுக்கோ" என்று விட்டு செல்ல போனவனின் கையை பிடித்து கொண்ட அருள்


"ஸாரி டா வினித்..." என்று கூற அவன் தோளில் தட்டி விட்டு வெளியேறி சென்றான் வினித்.


அறை வாயிலில் நின்று அருளைப் பார்த்து சிரித்த வினித்
"நீ லைப்ல பெர்ஸ்ட் டைம் என்கிட்ட ஸாரி கேட்டுருக்க. இத கண்டிப்பாக மார்க் பண்ணி வைக்கணும்" என்று விட்டு செல்ல அருளும் மெலிதாக புன்னகத்து கொண்டான்.


கான்பிரன்ஸ் செல்வதற்காக எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு வந்த அருள் வினித்திடம் விடை பெற்று கொண்டு திருச்சி நோக்கி பயணமானான்.......
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Superb, ஹுஸ்னா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top