• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiyin Kadhal Thavam 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How do you feel about the episode?

  • excellent

    Votes: 10 55.6%
  • good

    Votes: 8 44.4%
  • bad

    Votes: 0 0.0%

  • Total voters
    18

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
மக்களே, அழகியின் காதல் தவம் 2 வது அத்தியாயம் பதிவு செஞ்சுட்டாங்க உமா தீபக். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

தவம் – 2

ஐநூறு வருடங்களுக்கு முன்பு:

காவிரிபூம்பட்டினத்தில் தன் தோழிகளுடன், உலா வந்த மதியழகி அங்கு நடப்பவற்றை எல்லாம் மனதில் குறித்துக் கொண்டாள். சில இடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூட, தனக்குள் திட்டமிட்டுக் கொண்டாள்.

“மதி! நாம் இங்கு வந்ததன் நோக்கம் என்ன? நாம் எல்லோரும் பல நாட்கள் கழித்து ஒன்றாக இருக்கிறோம், சேர்ந்து அரட்டை அடித்து, விளையாடி நம் மகிழ்ச்சியை கொண்டாட தானே!”.

“இப்பொழுது கூட, நீ எங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ மதி?” என்று வினவினாள் அவளின் தோழி பாமினி.

“பாமினி! அவள் சற்று நேரம் இங்கு உள்ள நடப்புகளை எல்லாம் கவனித்துவிட்டு, அதன் பிறகு தானே நம்மோடு சேர்ந்து அரட்டை அடிக்கவும், விளையாடவும் வருகிறேன் என்றாள்”.

“அது உனக்கு மறந்து விட்டதா, பாமினி?” என்று அவளை பார்த்து கேட்டாள் கங்கா.

அவள் அப்படி கூறிய பிறகு தான், மதியுடைய பதவி அவளுக்கு உரைத்தது.

“மன்னிக்க வேண்டும் இளவரசி! தாங்கள் எங்களுடைய தோழி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கேட்டுவிட்டேன். நீங்கள் ஒரு நாட்டின் இளவரசி, என்பதை சற்று மறந்து விட்டேன்”.

“என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி! இனி ஒரு முறை இப்படி தவறு நேராது” என்று தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள் பாமினி.

மதியழகிக்கு அப்பொழுது தான், தோழிகளோடு எதற்காக வந்து இருக்கிறோம் என்று புரிந்தது. ஒரு இளவரசியாக, நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவள் அங்கு நடப்பவற்றை ஆராய்ந்தாளே தவிர தோழிகளை கவனிக்க மறந்தாள்.

அதுவும் தன் தோழி, தன்னிடத்தில் மன்னிப்பு கேட்டது அவளுக்கு வருத்தமாக இருந்தது. தன்னையே கடிந்து கொண்டு, தோழிகளை மகிழ்விக்க அவள் தன் குறும்புத்தனத்தை வெளியே கொண்டு வந்தாள்.

“பாமினி, உன்னை நான் மன்னிக்க வேண்டும் என்றால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே” என்று அவளின் முகத்தை இளவரசிக்கே உறிய கம்பீரத்துடன் கேட்டாள்.

“கண்டிப்பாக செய்கிறேன் இளவரசி, தாங்கள் உத்தரவிடுங்கள்” என்று பணிவுடன் கேட்டாள் பாமினி.

“ அதோ தெரிகிறேதே நதிக்கரை, அங்கு நான் இப்பொழுது செல்ல போகிறேன் ஒரே ஓட்டமாக, நீ என்னை பிடிக்க ஓடி வா” என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே ஓடினாள் மதியழகி.

முதலில் அதிர்ச்சி அடைந்த பாமினி, அதன் பின் தோழி தன்னை கேலி செய்து இருக்கிறாள் என்று புரிய அவளை துரத்திக் கொண்டு ஓடினாள்.

“ஏய் மதி! ஓடாதே! சற்று நில். ஓட்டத்தில் உன்னை வெல்ல, என்னால் முடியாது. கங்கா! நீயாவது அவளுக்கு எடுத்து கூறு” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் பாமினி.

“நதிக்கரைக்கு நடந்து சென்றாலே, நமக்கு இரண்டு நிமிடம் கூட ஆகாது பாமினி. ஓடுவதற்கு, ஏன் நீ இவ்வளவு பயப்படுகிறாய்?” என்று வினவினாள் மற்றொரு தோழி காமாட்சி.

“ஓடுவதற்கு ஒன்றும் எனக்கு பயமில்லை, காமாட்சி. மதியை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், தான் பயமே வருகிறது எனக்கு” என்று கூறியவளை கண்டு, அவளுடன் ஓடிக் கொண்டு இருந்த மற்ற தோழிகள் சிரித்தனர்.

பாமினி பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது, மதியழகி ஓட தொடங்கினால் அவள் எங்கே தன் ஓட்டத்தை நிறுத்துவாள் என்று யாராலும் கணிக்க முடியாது. அதற்கு தான் அவள் ஓட தொடங்கவும், பாமினி பயத்தில் அவள் பின்னே ஓடிக் கொண்டே, தன் தோழிகளிடம் உதவி கோரினாள்.

“பாமினி நீ பயப்படுவது அனாவசியம், அங்கே பார் மதி நதிக்கரை அருகே தான் நிற்கிறாள்” என்று அவள் அருகில் ஓடிக் கொண்டு இருந்த நீலா கூறினாள்.

மதி அங்கே நதிக்கரை அருகில் நின்று, அந்த நதியின் அழகை ரசித்துக் கொண்டும், தன் தோழிகள் ஓடி வருவதை பார்த்து சிரித்துக் கொண்டும் இருந்தாள்.

அவள் அருகில் வந்த அவளின் தோழிகள், மூச்சு வாங்கிக் கொண்டு நின்றனர்.

“மதி! நீ மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்?” என்று கேட்டாள் நீலா.

“அது அவள் குதிரையேற்றம், வாள் பயிற்சி என்று போருக்கு செல்ல தேவையான அத்தனை பயிற்சியையும் கற்றுக் கொண்ட பொழுது, இந்த ஓட்டத்தையும் கற்றுக் கொண்டாள்” என்று கூறினாள் கங்கா.

“அதில் இருந்து, தப்பிச் செல்ல எடுத்த ஓட்டமா?” என்று வினவினாள் காமாட்சி.

“இல்லை! அதை எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பு, எனக்கு ஓட்டப்பயிற்சி தான் முதலில் கற்று கொடுத்தார்கள்” என்று கூறினாள் மதியழகி.

“ஒ! இப்பொழுது புரிகிறது! உன் அதிவேக ஓட்டத்திற்க்கான ரகசியம்” என்று கூறி சிரித்தனர்.

அதன் பின் தாங்கள் இதற்க்கு முன்பு, அவர்கள் ஆடிய ஆட்டமும், பாட்டமும் பற்றி பேசி சிரித்துக் கொண்டு பொழுதை கழித்தனர். நதியில் சற்று நேரம், கால்களை மட்டும் நனைத்துவிட்டு பின்பு பேசிக் கொண்டே ரதம் இருந்த பகுதிக்கு சென்றனர்.

முதல் ரதத்தில் கங்காவும், மதியும் ஏறி அமர்ந்தனர். அவர்கள் பின்னே உள்ள ரதத்தில், அவளின் மற்ற தோழிகள் ஏறினர். ரதத்தை, காவிரிபூம்பட்டனத்தில் உள்ள அரண்மனை நோக்கி செலுத்த கூறினாள் தேரோட்டியிடம்.

“நாம் இப்பொழுது, நம் மிடார நாட்டிற்கு அல்லவா செல்ல வேண்டும் மதி! ஏன், இப்பொழுது அங்கே செல்ல கூறுகிறாய்?” என்று வினவினாள் கங்கா.

“ஒரு இளவரசியாக, நான் இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன் கங்கா. அரண்மனைக்கு சென்று, அங்கே என்ன நடக்கிறது என்று காண வேண்டும் முதலில்”.

“அதன் பிறகு தான் மிடார நாட்டிற்கு சென்று, என் தந்தையிடம் இதை பற்றி கூற வேண்டும்” என்று கூறினாள் மதி.

அவள் கூறியதை கேட்ட கங்காவும், ஒப்புக் கொண்டாள். அவளும் இங்கு வந்ததில் இருந்து, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். இங்கு மக்கள் படும் பாட்டையும், அவர்களின் பயத்தையும்.

ஆகையால், தோழியின் யோசனைக்கு சரி என்று கூறியதோடு மட்டுமில்லாமல், மற்ற தோழிகளுக்கும் விஷயத்தை கூறினாள்.

அரண்மனை முன்பு வந்து நின்ற ரதத்தில் இருந்து, இறங்க தொடங்கினர் எல்லோரும். ஏனோ அங்கு உள்ள சூழ்நிலை, சரி இல்லாதது போல் தோன்றியது மதிக்கு.

ஆகையால் அவள் தன் தோழி கங்காவிடம், கண்களால் செய்தி அனுப்பினாள். அவளும் அதை புரிந்து கொண்டு, அதை செயலாற்ற மற்ற தோழிகளுடன் இணைந்து கொண்டாள்.
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
மதி, அந்த அரண்மனை காவலனை அழைத்து, உள்ளே சென்று தான் வந்த விஷயத்தை கூற சொல்லி அனுப்பி வைத்தாள். அவனும் விஷயத்தை உள்ளே சென்று கூற, சென்றுவிட்டான்.

அதற்குள், இங்கே கங்கா தன் தோழிகளுடன் சேர்ந்து புறா காலடியில், செய்தியை ஒரு தாளில் எழுதி வைத்துவிட்டு அதனிடம், மிடார நாட்டு மன்னனிடம் சேர்க்க கூறி அதை பறக்க விட்டனர்.

ஒரு பக்கம் அது பறந்து சென்ற பின், உள்ளே சென்ற அந்த காவலன் இவர்களை உள்ளே வர சொல்லி அழைத்தான். மதியழகி, ஒரு இளவரசிக்கே உரிய கம்பீரத்தோடு, தன் தோழிகளுடன் உள்ளே நுழைந்தாள்.

இன்று:

அந்த அரங்கத்தில் மக்கள் கூட்டம், அலையென மோதியது. ஆதித்ய வர்மாவின் படத்துக்கான ஆடிஷன் என்றால் சும்மாவா, நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டம் அலையென மோதிக் கொண்டு இருந்தனர்.

“டேய் விஷ்வா! ஆடிஷன்க்கு இத்தனை பேர் வந்து இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் இவனை பத்தி தெரியுமா?” என்று கேட்டான் ரகு, ஆதியின் மற்றொரு நண்பன், தயாரிப்பாளராக இருக்கிறான்.

“அவனை பத்தி தெரிஞ்சா, ஏன் டா வர போறாங்க? அவன் படத்து மேல ஒரு கிரேஸ், அதான் இவன் மேலயும் இருக்கு”.

“எப்படியும் இதுல திறமை இருக்கிறவங்களும், இருப்பாங்க. நாம தான் பொறுமையா செலக்ட் செய்யணும், அவன் கடைசி கட்ட தேர்வுக்கு தான் வருவேன் சொல்லிட்டான்”.

“அதனால, நாம இப்போ ஸ்டார்ட் பண்ணிடலாம் டா. டேய் கிருஷ்ணா! அங்க கடலை போட்டது போதும், வா டா இங்க” என்று நடிகனும், ஆதியின் தம்பியுமான கிருஷ்ணாவை அழைத்தான் விஷ்வா.

“ஊப்ஸ்! சாரி பேபிஸ், கடமை என்னை அழைக்கிறது. நாம நாளைக்கு டிஸ்கோதே ல மீட் பண்ணுவோம், பை பேபிஸ்” என்று அவனின் பெண் விசிரிகளிடம் இருந்து விடைபெற்று, விஷ்வாவை நோக்கி வந்தான்.

“ஒகே அண்ணாஸ்! நான் ரெடி! ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டான் கிருஷ்ணா.

“டேய்! கொஞ்சம் உங்க அண்ணனை பார்த்து படி டா, அவன் எப்படி இருக்கான்! நீ மட்டும் ஏன் டா இப்படி இருக்க?” என்று கேட்டான் ரகு.

“ரகு அண்ணா, அவன் தான் சாமியார் மாதிரி இருக்கானா, நானும் அப்படியே இருக்கனுமா? நான் இப்படி எல்லோர்கிட்டயும் பழகினாலும், தப்பா ஏதும் நடந்து இருக்கேனா?”.

“இது எல்லாம், கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் கல்யாணம் ஆகிட்டா, நினைச்சா கூட இவங்க கிட்ட பேச முடியாது. ஏன்? நடிக்க கூட வருவேனா, அப்படின்னு ஒரு டவுட் தான்” என்று பெருமூச்சு விட்டவனை பார்த்து சிரித்தனர் இருவரும்.

கிருஷ்ணா, ஆதியின் சித்தப்பா மகன். ஆதியின் முக்கால்வாசி படத்தில், இவன் தான் கதாநாயகன். ஆதியை போல் இவனும் பெர்பெக்டாக, வேலையில் இருப்பான்.

பெண் விசிறிகளை கண்டால், இவன் அந்த கண்ணனை போல் மாயகண்ணனாக மாறிடுவான். ஜாலி பேர்வழி, அதே சமயம் ஒரு எல்லையோடு தான் பழகுவான். அதனால் தான் ஆதி, இவனை ஏதும் சொல்லாமல் அவன் போக்கிலே விட்டுவிட்டான்.

ஆரம்பத்தில், ஒரு அண்ணனாக கண்டித்தாலும் அவன் தன் எல்லைக்குள் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு, கண்டிப்பதை கூட நிறுத்தி விட்டான்.

காலையில் ஆரம்பித்த ஆடிஷன், இரவு வரை நீடித்துவிட்டது. வந்து இருந்த நூற்றுக்கணக்கானோர் பேரில், இதுவரை இருபது பேர் மட்டுமே இவர்கள் கணக்கில் தேறினர்.

இறுதி கட்ட தேர்வில் தான், ஆதி யாரை எந்த வேடத்திற்கு தேர்ந்தெடுக்க போகிறான் என்று தெரிய போகிறது.

“விஷ்வா அண்ணா, பைனல் டேட் அண்ணா எப்போ கொடுத்து இருக்காங்க?” என்று கேட்டான் கிருஷ்ணா.

“நாளைக்கு தான், ஏன் கேட்குற?” என்று கேட்டான் விஷ்வா.

“இல்லை மத்த கேரக்டர்ஸ்க்கு கூட, ஆர்டிஸ்ட் ரெடி. ஆனா ஹீரோயின்க்கு, தான் யாரை அண்ணா யோசிச்சு இருக்காங்க தெரியல, அதை தெரிஞ்சிக்கணும் அதான்” என்று கூறினான் விஷ்வா.

“ஆமா விஷ்வா! நானும் ரொம்ப ஆவலா இருக்கேன், யார்ன்னு தெரிஞ்சிக்க?” என்று கூறினான் ரகு.

“அவனே, இன்னும் டிசைட் பண்ணல டா. அவன் என்ன நினைக்கிறான் கூட தெரியல! ஒரே யோசனையா இருக்கு எனக்கு!” என்று விஷ்வா புலம்பவும், மற்ற இருவரும் கூட புலம்பினர்.

ஆதி, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் கணிக்க முடியாது. அவன் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதில் இருந்து அவன் பின் வாங்க மாட்டான் எப்பொழுதும்.

அவன் ஒருவரை தேர்ந்தெடுத்தால், தன் கதாபாத்திரத்திற்கு சரியாக வருவார்களா என்று பலமுறை யோசித்தே தேர்ந்தெடுப்பான்.

அப்படிப்பட்டவன், சரித்திரத்தில் நடிக்க போகும் நடிகையை தேர்ந்தெடுக்க அவன் எவ்வளவு யோசிப்பான். இதுவரை யாரும் அப்படி, அவன் நினைத்தது போல் நடிகை கதாபாத்திரத்துக்கு, ஒத்து வரவில்லை.

ஆகையால் அவனுக்கே குழப்பமாக இருந்தது, யாரை தேர்ந்தெடுக்க என்று. அதற்க்கு தான் அவன் ஆடிஷன் வைத்ததே, ஆனால் நடிகை மட்டும் அவன் எதிர்பார்த்தபடி யாரும் இல்லை அங்கே.

“ஆதி! ஆதி! டேய் ஆதித்ய வர்மா!” என்று ஆதியின் காதுக்குள் கத்தினான் விஷ்வா.

“டேய் எருமை! ஏன் டா இப்படி கத்துற?” என்று பதிலுக்கு கத்தினான்.

“ஏன் டா சொல்லமாட்ட? நான் எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் உன்னை, நீ ஏதோ ஒரு உலகத்துல இருந்தா நான் என்ன டா செய்ய முடியும்?” என்று எகிறினான் விஷ்வா.

அப்பொழுது தான் ஆதிக்கு, ஹீரோயின் யாரை போடுவது என்ற யோசனையில் தான் இருந்தது நினைவிற்கு வந்தது. அதை பற்றி விஷ்வாவிடம், இப்பொழுது கூறி புலம்பினான்.

“நீ கேட்குற மாதிரி நடிகை வேணும்னா, அந்த கடவுள் நமக்கு மேல இருந்து தான் ஹீரோயினை புதுசா ரெடி பண்ணி தரனும்” என்று விஷ்வா சலித்துக் கொண்ட அடுத்த நொடி, அவர்கள் இருந்த அறையின் மேற் கூரையை கிழித்துக் கொண்டு, கீழே விழுந்து இருந்தாள் மதியழகி.

தொடரும்....
 




Banumurali

புதிய முகம்
Joined
Jan 23, 2018
Messages
3
Reaction score
2
Location
Neyveli
ஆஹா......குதிச்சுட்டாங்கோ........
உமா.....இரண்டு பகுதியும் நல்லா கொண்டுபோற........வாழ்த்துகள்டா....??
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஆஹா......குதிச்சுட்டாங்கோ........
உமா.....இரண்டு பகுதியும் நல்லா கொண்டுபோற........வாழ்த்துகள்டா....??
Hai banu akka thanks a lot akka
Keep supporting ??
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
wow..superb ka...adhi film ku heroine ah next epi la paththutuvan ka???? eagerly waiting for next epi ka...
Hi da anu thanks a lot da
Un guess sariya nu next ud la therinjikka da
Sure will update soon da.
Keep supporting ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top