Chocolate boy - 06

#1
சாக்லேட் பாய் – 06

தர்ஷினிக்கு படபடப்பில் இதயம் வாய் வழி குதித்து விடுவது போல் இருக்க, ஹர்ஷாவோ உற்சாகத்தின் உச்சியிலிருந்தான். தன்னவளின் அவஸ்தைகளை ரகசியமாய் ரசித்துக் கொண்டிருந்தான். அவர்களை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் இருவர் மட்டுமே அங்கே இருப்பதை போல உணர்ந்தான் ஹர்ஷா.

“நோ...நோ.... என்னால அவன் கிட்ட போய் பேச முடியாது. என் சிஸ்டம வேற அவன் பார்த்திருப்பான் போல.... இல்லனா எப்படி தீடீர் னு ரீனாவ ‘டா’ போட்டு பேசாத னு சொல்லுவான்? அப்போ அந்த போட்டோஸையும் பார்த்திருப்பானா?”

“தர்ஷினி! இன்னும் ஏன் வொர்க் ஸ்டார்ட் பண்ணாம இருக்கே? ஹர்ஷாவ கூப்பிடல?” என கேட்டாள் ரீனா.

“ம்..... கூப்பிடணும். நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல.....”

“ ஓய்.... நான் என்ன உங்க ரெண்டு பேருக்கும் மீடியேட்டரா? அவன் என்ன சிங்கமா? புலியா? அவனுக்கு ஏன் இப்படி பயப்படற...”

“ ஹா....ஹா.... நான் புலியா அவளுக்கு? அவளுக்கு நான் சாக்லேட் பாய் ஆச்சே” ஹர்ஷா சுவாரசியமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“பயமெல்லாம் இல்ல.... சரி ரீனா. நானே போய் கூப்பிடுறேன். சிரமம் கொடுத்ததுக்கு சாரி”

“சே.... சே... சிரமம் எல்லாம் இல்ல தர்ஷினி. அவன் ரொம்ப நல்ல பையன் நீ அவன் கிட்ட பேச பயப்படவே தேவையில்லை. அதை தான் சொன்னேன்.”

“ ம்....ஓ.கே” என்றவள் மனதிற்குள்,” என் சாக்லேட் பாய்க்கு நீ சர்டிபிகேட் தரீயா? கொடுமை டி....” என சலித்த படி எழுந்தாள்.

தர்ஷினி ஹர்ஷாவின் சிற்றறை (cabin) அருகே சென்றாள். அவள் வருவது தெரிந்தும் ஹர்ஷா வேலையில் காரியமாய் இருப்பது போல் கணினியில் கண் பதித்திருந்தான்.

முயன்று வரவழைத்த துணிவோடு ,” எக்ஸ்கியூஸ் மீ சா.... ஹர்ஷா” என்றாள்.

“எஸ்.....” என்றான் திரும்பாமலே

“ ஹர்ஷா.... என் சிஸ்டம்...” அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. அவனது பாராமுகத்தில் துக்கம் தொண்டையை அடைத்தது. ஹர்ஷா அவளை திரும்பி பார்த்தான். அவள் முகம் வாடுவதை அவனால் தாங்க முடியவில்லை.

“நான் தான் பாஸ்வேர்டை மாற்றி வைச்சேன்.”

“..............”

“இங்க வந்து இந்த சேர்ல உட்காரு ”
அவனது அழ்ந்த குரலில் மறுப்பேதும் சொல்லாமல் வந்தமர்ந்தாள் தர்ஷினி.

“ ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கே?பி கூல்..... அந்த பாஸ்வேர்டுல இருக்குற ஹர்ஷா நான் தானே?” அவள் அவனை விரும்புவது தெரிந்தாலும் அதை அவளது வாய்வழி கேட்க விழைந்தான் ஹர்ஷா. அவனது நேரிடையான கேள்வியில் மௌனமாக அமர்ந்திருந்தாள் தர்ஷினி.

“ ப்ளீஸ்.... சொல்லு தர்ஷி. அது நான் தானே?”

பதட்டத்தில் அவன் தன் பெயரை சுருக்கி அழைத்ததை கூட கவனியாதவள் ‘ஆமாம்’ என்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.

“ வாவ்.... இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அப்படியே வானத்தில பறக்குற மாதிரி இருக்கு” என்றான் அழகாக இதழ் பிரித்து சிரித்தவாறு.

அவனது சிரிப்பில் மனம் தொலைத்தவள், “ அ...அப்போ உங்களுக்கு ஓ.கே வா?” என்றாள் தன் கண்களை அகல விரித்து.

விரித்த விழிகளில் சிக்கிட துடித்தவன், “ஓ.கே வா வா? Double ok.... அதுவும் இந்த கண்ணை பார்த்ததுக்கு அப்புறம்.... Me.... fullllll.... flat.... ” என்றான் முற்றிலுமாக தன்னை ஒப்படைத்து.

சாதாரணமாகவே குறைவாக பேசும் தர்ஷினி தற்சமயம் முழுவதுமாக பேச்சிழந்தாள். சந்தோஷத்தில் மூச்சு விட கூட மறந்து போனாள். தன்னவளின் எழில் முகத்தில் நொடிக்கு நொடி பூக்கும் நாண பூக்களை தன் விழியால் பறித்துக் கொண்டிருந்தான் அவள் காதலன்.
அவனது வண்டு பார்வையை தாங்க முடியாதவள் ,” நான் போறேன்” என எழுந்தாள்.

“ அப்போ பாஸ்வேர்டு வேண்டாமா” குறும்பு சிரிப்போடு கேட்டான் ஹர்ஷா.

“ சொல்லுங்க....”

“.........”

“சொல்லுங்க....” என்றாள் யாரும் தங்களை கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தபடி.

“ என் கண்ணை பாரு.... அப்போ தான் சொல்லுவேன்” அவன் விடாமல் வம்பு செய்தான்.

நாணம் மேலிட அவன் கண்களை நேராக பார்த்தவள் ,” சொல்லுங்க....” என்றாள்.

“ I LOVE U MY CREAMY GIRL. நான் சாக்லேட் பாய்னா நீ க்ரீமி கேர்ள் தானே” என கேட்டு கண் சிமிட்ட, செந்தணலாய் சிவந்து போனது அவள் முகம்.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் சிரித்தபடி தன் இருக்கையில் வந்தமர்ந்தாள் தர்ஷினி. அவளது இதயத்துடிப்பு அவளது செவிகளை மந்தமாக்கும் அளவிற்கு எக்குதப்பாக எகிறியது. அவள் ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த காதல் விதை இப்படி அவளே எதிர்பாராமல் முளைத்து பூத்து மணம் பரப்பும் என சற்றும் நினைக்கவில்லை. என்ன சொல்வனோ.... ஏது சொல்வனோ.... தன் காதலை கிண்டல் செய்வனோ என்றெல்லாம் எண்ணி மருகி கொண்டிருந்தவள் அவனது பதிலில் சொக்கி தான் போனாள்.

I LOVE U MY CREAMY GIRL – அவன் சொன்ன காதல் வார்த்தையை கரங்களில் கூச்சம் பரவ ரகசிய குறியீட்டாக போட்டாள். சரியான குறீயிடாக உள்வாங்கி கணினி இயங்க, அதில் ஹர்ஷா தயார் செய்து வைத்திருந்த வால்பேப்பரை பார்த்து அசந்து போனாள் தர்ஷினி.

‘என்னை மணந்து கொள்வாயா?’ என கேட்பது போல் இருந்த படத்தை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்போது அங்கே க்ரீமி கேள் என்றிருந்த கோப்புறையை (folder) கவனித்தாள். அது முழுவதும் ஹர்ஷா அவளை எடுத்த படங்கள்...

“ அடப்பாவி! என்னகே தெரியாம என்னை இவ்ளோ போட்டோஸ் எடுத்திருக்கான்? இது கூட தெரியாமலா இருந்தோம்.... அது சரி. நாம அவன திரும்பி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அப்போ..... அவனும் நம்மை முன்பிலிருந்தே காதலிக்க தொடங்கிட்டானோ?” என நினைத்தவளுக்கு உடல் சிலிர்த்தது. அவள் தான் காதலிப்பது அவனுக்கு தெரிந்த பின்பு தான் அவன் காதலிக்க தொடங்கியிருக்கிறான் என்றே நினைத்திருந்தாள்.

அச்சமயம் ஹர்ஷா அவளுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். இருவரும் மின்னஞ்சல் மூலமாக பேசிக் கொண்டனர்.

“ ஹாய் ஸ்விட்டி! என்ன என் வால்பேப்பருக்கு பதிலே இல்லை?”

“ ஏற்கனவே விடை தெரிந்த கேள்விக்கு எதற்காக பதில் சொல்லணும்”

“ காதல் சரி. கல்யாணம்?????”

“ சரி.... முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அப்புறம் நான் சொல்றேன்”

“கேளு பேபி....”

“ நான் உங்க கிட்ட லவ் ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடியே நீங்களும் என்னை லவ் பண்ணிங்களா?”

“ ப்ரபோஸ் பண்ணியா? வேற வழியில்லாம பாஸ்வேர்டு சொன்னே” ஹர்ஷா அவளை சீண்டினான்.

“ எப்படியோ? என் காதல் தெரிஞ்சது இல்லை?”

“ ம்ஹூம்..... அதையும் நான் தானே கண்டுபிடிச்சேன். நீ தான் லீவ் போட்டுட்டு போயிட்டியே”

“இப்போ சொல்வீங்களா? மாட்டீங்களா?”
“ சரி.... என் லவ் பற்றி சொல்லணும் னா நீ என் வீட்டுக்கு வரணும். வருவியா?”

“ வீட்டுக்கா? நீங்க தனியா தானே இருக்கீங்க. உங்க பேமலி திருச்சில தானே இருக்காங்கா? அப்புறம் எப்படி??????”

“ பரவாயில்லயே.... விவரமெல்லாம் நல்லாவே சேகரிச்சு வைச்சிருக்க... சந்தோஷம் தான். ஆனா என் மேல நம்பிக்கை இல்லை அப்படி தானே? “

“சே...சே.... அப்படியெல்லாம் இல்ல ஹர்ஷா. உங்க மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு. நான் வரேன்”

“ வாவ்.... ஹாப்பி டியர் ஆபிஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் நாம போவோம்”

“ ஓ.கே”

ஹர்ஷாவிற்கு செம குஷி. தான் கூப்பிட்டதும் அவள் சம்மதித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவள் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை எண்ணி மகிழ்ந்தான். இருவரும் அலுவலக நேரம் முடிவதற்காக காத்திருந்தனர்.

தொடரும்......

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை FB_IMG_1561402640068.jpg
 
Last edited by a moderator:

Advertisements

Latest updates

Top