• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 10

ஹர்ஷா தர்ஷினியை இழுத்து நெற்றியில் முத்தமிட்டான். இதை சற்றும் எதிர்பாராத தர்ஷினி விதிர்விதிர்த்துவிட்டாள் ஆனால் அந்த முத்தத்தில் காதல் மட்டுமே இருந்தது.புண்பட்ட அவள் நெஞ்சிற்கு அது அருமருந்தாய் இருந்தாலும் அவள் பெண் மனதில் நாண பூக்கள் மலர, அவனை விட்டு விலகி முறைத்தாள்.

“ இப்போ தான் உன்னோடு இருக்கும் போது பாதுகாப்பா உணருகிறேன் னு சொன்னா அதுக்குள்ளே கெடுத்திட்டியேடா ஹர்ஷா???” என அவன் மனம் சாட,
அவளை பார்த்து, “ ஸாரி” என அசடு வழிந்தான்.

அவள் எதுவும் பேசாமல் திரும்பி கொள்ள, அவள் முகத்தில் பிரதிபலித்த நாணம் அவளுக்கு கோபமில்லை என சொல்லாமல் சொல்லியது.” தர்ஷி ஸாரிடி.... நீ பேசுனத கேட்டு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். உண்மையிலேயே நீ சொன்னது ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம் தான். சும்மா ஒருத்தன பார்த்தவுடனே நம்பி காதலிக்கிற கால கட்டத்துல நாம வாழலல தான் ஆனா நான் உன்னை பார்த்ததுமே நீ தான் என் பொண்டாட்டி னு முடிவே பண்ணிட்டேன் தெரியுமா? அதனால தான் என்னை நீ கண்காணித்ததை சொன்னதும் எனக்கு வந்த நம்பிக்கை உனக்கு வரலியே னு கொஞ்சம் கோபப்பட்டுட்டேன். இதை நாம மறந்திடுவோமே ” என்றான் கெஞ்சலாக.

“ம்.... எனக்கும் அத நினைச்சிட்டு இருக்குறதுல விருப்பம் இல்ல” என்றுவிட்டு தர்ஷினி அமைதியாக இருந்தாள்.

“ தர்ஷி! இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்திடுவாங்க. நாம்மளும் சாப்பிட்டு வந்திடலாம் வா.....” என அழைத்தான்.

“ ம்ஹூகும்.... நான் வரல. நீங்க சாப்பிட போங்க” என்றாள்ளவள்.

“ இன்னுமென்னடி...... அதான் சமாதானபடுத்திட்டேனில்ல....” என்றான் குழைவாக.

“ ம்..... ஒரு விஷயம் ஓ.கே இன்னொரு விஷயம் இருக்கே” என்றாள் தீவிரமாக.

“ இன்னொரு முறை சமாதானம் பண்ணட்டுமா?” என கண்ணடிக்க, உதட்டை இடவலமாய் சுழித்தாள் தர்ஷினி.

“இன்மென்ன கோபம் என் ஸ்வீட்டிக்கு?”

“ நான் இன்னொருத்தன் பின்னாடி போவேன் சொன்னீங்கல்ல.....எப்படி ஹர்ஷா நீங்க அப்படி சொல்லலாம்?” என்றாள் பார்வையை தரையில் பதித்து.

“ அது.... அது.... கோபத்தில சொல்லிட்டேன் டியர். நிஜமாகவே அப்படி சொன்னதற்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன் இப்போ உன்னுடைய விளக்கத்தை கேட்டதுக்கு அப்புறம் ரொம்பவே வெட்கபடுறேன். உன் கிட்ட மனமார மன்னிப்பு கேட்டுடுறேன். என்னை மன்னிச்சிடு” என்றான் உள்ளார்ந்த வருத்தத்தோடு.

அவன் ஸாரி என்னும் போது பதறாத தர்ஷினியின் மனம் மன்னிப்பு என்னும் போது பதறியது.தமிழின் சிறப்பு அதுவல்லவா?

“சே..... சே.... நீங்க மன்னிப்பு கேட்கணும்றதுக்காக நான் சொல்லல ஹர்ஷா நீங்க சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப வலிச்சது. அதை நீங்க மறுபடியும் எந்த சந்தர்ப்பத்திலும் சொல்லிட கூடாதுங்கறதுக்காக தான் சொன்னேன்” என்றாள்.

“இனி எப்போதும் அது போல பேச மாட்டேன் தர்ஷி. ப்ளீஸ்..... சாப்பிட போலாமா? அந்த பிசாசுங்க வந்திடும்” என்றபடி எழுந்தான் ஹர்ஷா.

ஆனால் தர்ஷினி இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு,” எப்படி எப்படி நீங்க சாருவ பார்க்க தான் வந்தீங்களா? என கேட்டாள்.

“ ஹி.... ஹி.... சும்மா லுலுலாயிக்கு...” என சமாளித்தான்

“அதுதென்ன ஆளாளுக்கு உங்கள சொந்தம் கொண்டாடுறாங்க”என்றாள் மிரட்டும் தொனியில்.

“ஹர்ஷா இன்னைக்கு இவ புல் பார்ம்ல இருக்கா உன்னை லெப்டு அன்டு ரைட் வாங்காம விடமாட்டா போல” என மனதிற்குள் நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“ யாரை தேடுறீங்க ஹர்ஷா?” என்றாள் அவளும் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

“ இல்ல.... இங்க ஒருத்தங்க இருந்தாங்க.... என் கிட்ட பேசவே பயந்துகிட்டு மீம்ஸ்லயே லவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு வார்த்தை பேசுறதுள்ள கை காலெல்லாம் நடுங்கும்.... அவங்கள தான் தேடுறேன்” என சிரிக்காமல் கூற தர்ஷினி அவனை சிரித்தபடி முறைத்தாள்.

“ பதில் சொல்லாம தப்பிச்சிடலாம் னு எண்ணமா?”

“மீ.... பாவம் குட்டிம்மா.... அந்த லூசுங்க பேசுனதுக்கு நான் என்ன பண்ணுவேன் சொல்லு?”

“ இந்த மாதிரி பேச கூடாது னு சொல்லணும்”

“ இனி மேல் அப்படி பேசுனா சொல்லுறேன். இப்படியெல்லாம் பேச கூடாது நான் தர்ஷிக்கு மட்டும் தான் சொந்தம் னு தெளிவா சொல்லிடறேன்.” கண்ணில் குறும்போடு அவன் சொல்ல,

“ அச்சச்சோ.... நம்ம விஷயத்தை இப்போ அவங்க கிட்ட சொல்ல வேண்டாம் ஹர்ஷா. தெரிஞ்சா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. கொஞ்ச நாள் போகட்டும்.....”

“ ம்.... சரி. இப்போ போலாமா?” என கேட்ட அவனோடு சிரித்தபடி சென்றாள் தர்ஷி. கேண்டீன் வரை ஒன்றாக போனவர்கள் உள்ளே செல்லும் போது தனித்தனியே சென்றனர். எல்லோரும் கேலி செய்வார்கள் என ஒன்றாக செல்ல தர்ஷினி மறுத்து விட்டாள். மதிய நேரம் சைட்டடிக்கும் படலம் சிறப்பாய் நடந்தது.

மாலை வேலை முடிந்து தர்ஷினி கிளம்பினாள். தன் வண்டியில் சாவி போட்டு கிளம்ப எத்தனிக்க, குறுக்கே வந்து நின்றான் ஹர்ஷா. அவனை கேள்வியாய் நோக்கினாள் தர்ஷினி.

“ வீட்டுக்கு வா தர்ஷி” என்றான் அவளை ஆழமாக பார்த்தபடி. இதழில் லேசாய் விரிந்திருந்த புன்னகை உறைய தலையை இருபுறமாய் அசைத்து மறுத்தாள் தர்ஷினி.

“ அப்போ இன்னும் கோபம் இருக்கா?”

“ம்ஹூம்.... அப்படியில்லை ஹர்ஷா.... ஆனா” அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

தன் பைக்கை அணைத்து விட்டு அவளருகே வந்தவன்,” நீ வந்துட்டு போனதுக்கு அப்புறம் அதுவும் நீ அழுதுட்டே போனதுக்கு அப்புறம் என்னால அந்த வீட்ல இருக்க முடியல தர்ஷி. நீ சிரித்தபடி சோபால உட்கார்ந்திருந்ததும் அழுதுகிட்டே ஓடியதும் மாறி மாறி கண் முன்னே வந்து படுத்துதுடி. அதனால தான் ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு ஊருக்கு கிளம்பி போயிட்டேன். இப்போ வீட்டுக்கு போக பிடிக்கல தர்ஷி. ப்ளீஸ் வா....” என்றவனின் குரலிலிருந்த வலி அவள் மனதை பிசைந்தது.

அன்று நடந்த கசப்பாக விஷயத்தால் சிறிது மௌனமாக இருந்தாள் தர்ஷினி. தன்னவளின் பதிலுக்காக ஹர்ஷா காத்திருந்தான்.

மௌனம் நீண்டு கொண்டே போக, “ இட்ஸ் ஓ.கே தர்ஷி. உனக்கு எப்ப தோணுதோ அப்ப வா” என்று விட்டு திரும்பினான் ஹர்ஷா.

ஹர்ஷாவின் வாடிய முகத்தை பார்க்க முடியாதவளாய், “ நான் வரேன் ஹர்ஷா” என்றாள். அவளின் பதிலில் முகம் மலர்ந்தவன் “ தேங்க்ஸ்.... தர்ஷி!” என்றபடி முன்னே நடந்தான்.

அன்றைய அனுபவத்திற்கு பின் மீண்டும் அவன் வீட்டிற்கு செல்ல சிறிது தயங்கினாலும் திருமணம் முடிந்து அதே வீட்டிற்கு செல்லும் போது இந்த நெருடல் இருக்ககூடாது என எண்ணியவள் அவனை தொடர்ந்தாள்.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை

FB_IMG_1553871863576.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top