• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 26

திருமண சடங்குகள் முடிந்து மணமக்கள் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அவர்களது ஜோடி பொருத்தத்தை கண்டு மனம் நிறைந்தவர்கள் தங்கள் மனகிலேசங்களை மறந்து மனமார ஆசிர்வதித்தனர்.

ரீனா, சாரு, ரம்யா, வித்யா, தேவா, நவீன் எல்லாரும் அவர்களை ஒரு வழி பண்ணிவிட்டனர். அங்கேயும் ஒரு கேக் வெட்டி அதை ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி, சில உறவினர்களின் எரிச்சலுக்கு ஆளாகி அதகளம் பண்ணிவிட்டார்கள்.

விருந்து உபசரிப்பிற்கு பின் மணமக்கள் தர்ஷினியின் வீட்டிற்கு சென்றனர். மல்லிகா தங்கள் வழக்கப்படி சாந்தி முகூர்த்தம் அவர்களது வீட்டில் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் ஹர்ஷாவின் பெற்றோர் சம்மதித்திருந்தனர்.


முதலிரவு அறை....

கட்டிலில் வண்ண பூக்கள் பரப்ப பட்டிருந்தது. இன்னும் கட்டிலை சுற்றி பூச்சரங்கள் வேறு தொங்கவிட பட்டிருந்தது.சுகந்தமான நறுமணம் அறையெங்கும் கமழ்ந்தது. சிறு மேஜையில் பால், பழங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தட்டிலிருந்த ஆப்பிளை அருகிலிருந்த மெல்லிய கத்தி கொண்டு வெட்டி, ஒரு துண்டை தன் கணவனுக்கு கொடுத்தாள் ஆர்த்தி. மற்றொரு துண்டை வெட்டி ஹர்ஷாவிடம் நீட்ட, அவன் கொலை வெறியோடு முறைத்தான்.

“ ஆப்பிள் வேண்டானா சொல்ல வேண்டியது தானே. அதுக்கு ஏன்டா இப்படி முறைக்கிற” என அலுத்துக் கொண்டவள் அந்த துண்டை தன் வாயில் போட்டுக் கொண்டாள்.

“ நீ வேற ஆர்த்தி.... அவன் என்ன ஆப்பிள் சாப்பிடற மூட்லயா இருக்கான்? நீ எனக்கு கொடு” என வாயை திறந்து காட்டினான் சித்தார்த்.

நல்ல நேரம் இன்னும் வராததால் தர்ஷினியை ஒரு மணி நேரம் கழித்து தான் அனுப்ப வேண்டும் என சரஸ்வதி பாட்டி சொல்லியதை பாவம் ஹர்ஷாவிற்கு யாரும் சொல்லவேயில்லை போல. தான் அறைக்குள் வந்த பிறகும் வெளியே செல்லாமல் சட்டமாய் உட்கார்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தங்களுக்கென வைத்திருக்கும் ஆப்பிளை வேறு சாப்பிட்டு கொண்டிருப்பவர்களை பார்த்தால் கொலை வெறி தானே வரும். அவனே தன் இரண்டரை மாத மௌனத்தை எப்போதடா உடைக்க போகிறோம் என காத்திருக்க, ஆர்த்தியோ அவனது பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள்.

“ உனக்கு ஆப்பிள் வேணும்னா தட்டோட வெளியே எடுத்துட்டு போய் சாப்பிடு ஆர்த்தி” என்றான் பல்லை கடித்து.

“ எனக்கு போதும்டா ஹர்ஷா.... நீயும் தர்ஷினியும் சாப்பிடுங்க” பெருந்தன்மையாய் விட்டு கொடுத்தாள்.

“ எங்கேயிருந்து சாப்பிடுறது? நீ வெளியே போக மாட்டேங்குற.... அவ உள்ளே வர மாட்டேங்குறா.... எல்லாம் என் நேரம்” என முணுமுணுத்து கொண்டிருக்க, கதவு லேசாய் தட்டப்பட்டது.

“ தர்ஷி வந்துட்டா னு நினைக்கிறேன்.” அப்போதாவது இருவரும் நகர்வார்கள் என அவன் எண்ண, “ ம்ப்ச்.... இருக்காதுடா... நீ கதவை திற” என விட்டேற்றியாய் கூறினாள் ஆர்த்தி. அவன் அவர்களை உறுத்து விழித்து விட்டு கதவைருகே செல்ல, கணவன் மனைவி இருவரும் ஹைபை கொடுத்து கொண்டனர்.

“ ஆனா பாவம் தான் உன் தம்பி?” என்றான் சித்தார்த் பரிதாபமாக.

“ இன்னைக்கு ஒரு நாள் தானே. ஜஸ்ட் பார் ஃபன்” என தோளை குலுக்கினாள் ஆர்த்தி.

லேசாய் சாத்தியிருந்த கதவை திறந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வெளியே நின்றிருந்தது வர்ஷினியும், கார்த்திக்கும். புன்னகை என்று சொல்ல முடியாத ஒரு முறுவலை உதிர்ந்தவன் உள்ளே சென்றான்.

“ என்னடா ஹர்ஷா..... உனக்கு வந்த சோதனை. ஆளாளுக்கு உன் பர்ஸ்ட் நைட் ரூம்ல வந்து மீட்டிங் போடுறாங்க. நம்மாள வேற கண்ணுலயே காணோம்..... சாவடிக்கிறாய்களே....” மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.

“ உங்கள ரூம்மை ரெடி பண்ண சொன்னா, இங்கே வந்து டேரா போட்டிங்களா” என்றாள் வர்ஷினி. ஆர்த்தியோடு சேர்ந்தால் இவளும் வாயடிக்க ஆரம்பித்து விடுவாள்.

“ நல்லா கேளுங்க வர்ஷினி....” ஹர்ஷாவின் மைண்ட் வாய்ஸ் தான்.

“ அட இப்போ என்ன அவசரம்... நீங்களும் வந்து உட்காருங்க வர்ஷினி.... கொஞ்ச நேரம் அரட்டை அடிப்போம்.” என அவளையும் கண்ணடித்து கூட்டு சேர்த்தாள். ஜன்னல் புறம் திரும்பி முகம் இறுக நின்றிருக்கும் ஹர்ஷாவை காண வர்ஷினிக்கு பாவமாக இருந்தது.

“ உங்க தம்பி ஏன் டல்லா இருக்காங்க ஆர்த்தி?” என மெல்லிய குரலில் கேட்க,

“ அவனுக்கு நல்ல நேரம் மேட்டர் தெரியாது வர்ஷினி. இன்னும் தர்ஷினி வரலியே னு சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கான்” – கிசுகிசுத்தாள் ஆர்த்தி.

“ அதை விட... . நாம வேற இங்க உட்கார்ந்து மீட்டிங் போட்டுட்டு இருக்கோமா? அதான் மாப்ள காண்டாய்டான்.” என விளக்கினான் சித்தார்த்.

“ சே.... பாவம் பா என் தம்பி” என்றான் கார்த்திக் ஆதரவாய்.

“ அய்யோ.... நான் இந்த ஆட்டத்துக்கு வரல. ஹர்ஷா என்னை பற்றி என்ன நினைப்பாங்க” என எழ போனாள் வர்ஷினி.

“ ஹே.... ப்ளீஸ்... ப்ளீஸ்.... சும்மா விளையாட்டுக்கு தானே வர்ஷினி. அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தான்” என அவளை சமாதானபடுத்த, அரட்டை ஜரூராக தொடர்ந்தது.

“ இங்க உட்கார்ந்து என்ன அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க.... நேரமாகிடுச்சு.... ஆக வேண்டிய வேலைய பாருங்க” சரஸ்வதி பாட்டி அதட்ட, நால்வர் கூட்டணி வெளியேறியது.

“ ஸ்...ப்பா.... என் வயித்துல பாலை வார்த்துடிங்க பாட்டி” மானசீகமாக சிலாகித்தான் ஹர்ஷா.

வாசல் வரை சென்ற ஆர்த்தி, “ டேய் தம்பி! தர்ஷினி ஒன்பது மணிக்கு தான் வருவா. அப்போ தான் நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதாம். அம்மா உன் கிட்ட சொல்ல சொன்னாங்க.... ஸாரிடா.... சொல்ல மறந்துட்டேன்” என மூக்கை சுருக்கி கூறியவள், கலகலவென சிரித்தபடி வெளியே சென்றாள்.

“ லூசு.... சை.... என்னம்மா டென்ஷன் ஏத்திவிட்டுட்டா..... நம்மாளு நாம பேசாத கோபத்தில ஆபிஸூக்கு லீவ் போடுற மாதிரி பர்ஸ்ட் நைட்டுக்கு லீவ் போட்டுட்டாளோ னு பயந்துட்டேன்.” என முணுமுணுத்தவன் கடிகாரத்தை நோக்க, அது அவனவள் வர இன்னும் பத்து நிமிடங்களே உள்ளது என அறிவித்தது. ப்யூஸ் போன முகத்தில் நொடி பொழுதில் சிலபல பல்புகள் எரிய தன்னவளுக்காக ஆவலோடு காத்திருந்தான்.

மெல்லிய கொலுசொலி அவன் செவிகளை தீண்ட, நெஞ்சில் அவன் கட்டிய தாலி ஆட, அன்ன நடையிட்டு அறைக்குள் நுழைந்தாள் தர்ஷினி. இளம் ஆரஞ்சு வண்ண புடவையில், அளவான நகை பூட்டி, மல்லிகை மலர் தலையை நிறைத்து, நாணமதை தேகமெங்கு பூசி தன்னவனை ஒரேடியாக சாய்க்க ஆயத்தமாகி நின்றிருந்தாள் தர்ஷினி..... இனி தர்ஷினி ஹர்ஷவர்தன். அவள் வந்ததும் தான் பேச வேண்டும் என எண்ணிய வார்த்தை எல்லாம் இருளில் மறைந்த நிழலை போல காணாமல் போனது.

வார்த்தைகளற்று அவன் உறைந்து நிற்க, மங்கையின் மனமோ இன்னும் தன் மௌனத்தை உடைத்திடாத தன் கணவனை கண்டு வாடியது.

பேசுவோமா? இல்லை அணைப்போமா? இல்லை பேசிக் கொண்டே அணைக்கலாமா? இல்லை அணைத்தபடியே பேசலாமா? என அவன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க, சூரியனுக்காக ஏங்கும் சூரியகாந்தி போல் தன்னவனின் வார்த்தைகாக தலைகவிழ்ந்து காத்திருந்தாள் தர்ஷினி.

பட்டிமன்றம் இன்னும் முடிந்திடாத நிலையில் தன் பொறுமையை முற்றிலும் இழந்தாள் தர்ஷினி.

“ என் கூட பேச மாட்டிங்களா ஹர்ஷா? இன்னும் உங்களுக்கு கோபம் போகலியா? அன்னைக்கு நா.... நான் அடி....அப்படி செய்தது தப்பு தான். அதற்கு அந்த இடத்திலேயே நான் மன்னிப்பும் கேட்டுட்டேன். அதுக்கு அப்புறமும் நிறைய முறை போன் பண்ணேன்.... மெசேஜ் பண்ணேன்..... பார்க்கும் போதெல்லாம் பார்வையாலே மன்னிப்பு கேட்டேன். நீங்க தான் எதற்கு ரெஸ்பாண்ட் பண்ணல.....” படபடவென பொரிந்தவள், நிறுத்தி சற்றே மூச்சு வாங்கி கொண்டாள்.

இதுவரை தான் அருகில் வந்தாலே மருண்ட விழிகளோடு, பயந்து பின் வாங்குபவள் இப்போது படபடவென பொரிய அயர்ந்து போய் பார்த்தான் கணவன்.

அப்போதும் பேசாதவனை கண்டு முறைத்தவள், “ இப்போ உனக்கு என்ன தான்டா பிரச்சனை? இன்னும் உனக்கு கோபம் போகலனா எதுக்காக நம்ம லவ் மேட்டர வீட்ல சொன்னே? எதுக்காக அஞ்சு மாசம் கழிச்சி நடக்க இருந்த கல்யாணத்தை இரண்டே மாசத்துல நடக்க வைச்சே? சொல்லு ஹர்ஷா ....இப்போ நான் என்ன தான் செய்யணும்?.” அவன் சட்டையை பிடித்து உலுக்காத குறையாக அவள் கத்த, அவள் வாயை அவசரமாக பொத்தினான் ஹர்ஷா.

“ ஹே..... ஹே..... வெய்ட்....வெய்ட்.... என்னடி இந்த எகிறு எகிற? என் தர்ஷி தானா நீ?” என்றபடியே அவளை விட்டான். அவனது ஸ்பரிசத்தில் தேகம் சிலிர்த்தவள் தன்னிலை உணர்ந்து அமைதியானாள்.

“ அச்சச்சோ....கத்தினது வேறயில்லாம வாடா... போடா...னு வேற பேசிட்டோமே” என மனம் கூசியவள், அவனது தர்ஷியாக கீழ் உதட்டை கடித்தபடி நின்றாள்.

அவளின் தோரணையில் மயங்கியவன், “ உண்மையிலேயே உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை தர்ஷி....” என்றான்.

“ அப்புறம் ஏன் நான் உள்ளே வந்து பிறகும் கூட பேசாம இருந்தீங்க?” ஆதங்கம் மேலிட கேட்டாள்.

“ இப்படி தேவதை மாதிரி என் முன்னாடி வந்து நின்னா எப்படி பேச்சு வரும்.... சொல்லு? பேசனும் னு நினைச்சதெல்லாம் மறந்து போச்சுடி...” என்றவனின் பேச்சில் அழகாக இதழ் மலர்ந்தாள் அவள். ஹர்ஷா சென்று கட்டிலில் அமர்ந்தான்.

“ இப்படி வந்து உட்காரு தர்ஷி” என அவனருகே கை காட்ட, அவளும் வந்து அமர்ந்தாள்.

“ எப்போதும் என்னை பார்த்து பேச கூட பயப்படுவ” என்றவன் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை ஒற்றை விரலால் தூக்கி காட்டி,” இது கழுத்துல ஏறுன உடனே எங்கிருந்துடி இவ்ளோ தைரியம் வந்துச்சு?” என சிரித்தான்.

“ அது... அது...” என திணறியவளை தன் தோளோடு அணைத்தவன்,” ப்ளாஷ்பேக்கை சீக்கிரம் சொல்லிடுறேன் குட்டிம்மா.” என கூற தொடங்கினான்.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Athu ennamo unmai thaan..Kalyanam aana thum husbandsku ellam wife thaan reporting chief aayuduraanga:D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top