• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dhuruva kaadhal - behind facts

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே,

இன்னைக்கு நாம இந்த கதைக்கு பின்னாடி இருக்கிற சில ரகசியங்களை பார்க்கலாமா ..

1. துபாயில் மட்டுமே நாம் பார்க்க போவதில்லை, மதுரையை சுற்றியும் பார்க்க போகிறோம்.

துபாய் பிரின்ஸ் எடுத்த காரணம், சில விஷயங்கள் ஒரு பிரின்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று வியந்த தருணம் தான் அதன் காரணம்.

2. எல்லா அரசரிடத்திலும், நிச்சயம் ஒரு positive இருந்தா negative உம் இருக்கும். இப்போ நான் எடுத்து இருக்கிறது, கற்பனை கதை மட்டுமே. அதனால, இப்போ உள்ள துபாய் அரசர், இளவரசர் அப்படின்னு கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம் மக்களே.

பி.கு. இது முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே.. சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, இதை கையாள போகிறேன்.

3. துபாயில் பெண்களை எந்த அளவு மக்கள் போற்றுகின்றனர் என்று அங்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். தப்பான பார்வை என்பது, அங்கு ஒருவருக்கும் கிடையாது. இத்தனைக்கும், ஆடை குறைவுள்ள பெண்கள் பலர் இருந்தாலும், அவர்கள் கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.

இங்கு பெண்கள், house of lights என்று அவர்களின் ஊர் பாரம்பபரியமான palm tree வரைந்து , கோல்டன் palate யில் நுணுக்கமான முறையில் கோல்ட் thread கொண்டு பின்னி இருக்கின்றனர். அதில் ஒவ்வொரு கிளையிலும், அந்த அந்த நாட்டின் பொக்கிஷங்களை ஒட்டி வைத்து இருக்கின்றனர்.

நவரத்ன கற்கள் என்று நாம் அழைக்கப்படும், அந்த கற்கள் தான் அந்த palm tree யில் ஒட்டி வைத்து இருக்கின்றனர்.

அங்கு உள்ள ஒவ்வொரு வீட்டிலும், அவர்கள் வசதிக்கு ஏற்ப இதை வாங்கி வைத்து இருக்கின்றனர். வீட்டிற்குள் வெளிச்சம் வரவும், எந்த ஒரு தீய சக்தியும் அண்டாமல் இருப்பதற்கும் , இதை வாங்கி வைத்து இருக்கின்றனர்.

4. துபாயில் முஸ்லிம்கள் தான் அதிகம் என்று நமக்கு தெரிந்த விஷயம், அவர்களை ஷெய்க் என்றும் அழைப்பர் என்று.

தெரியாத விஷயம், அவர்கள் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதை செய்து முடித்து தான் அடுத்த வேலையை தொடங்குவர். தள்ளி போடுவது என்பது, அவர்களின் அகராதியிலே இல்லை.

ஒரு சொல், ஒரு பேச்சு அதை மீறியது இல்லை அவர்கள் என்று கேள்வி. நாங்கள் சந்தித்த ஷெய்க்களும், அவ்வாறே இருந்தனர்.

5. அவர்களின் பொழுதுபோக்கு, வாட்டர் ஸ்போர்ட்ஸ், கழுகு உடன் பாலைவனத்தில் நேரம் செலவழித்தல், பைக் ரைட் பாலைவன சருகுகளில் ,suv வண்டியில் பாலைவனத்தில் நிகழ்ச்சி நிரல் நடத்தி கண்டு கழிப்பது, குதிரை போட்டி, ஒட்டக போட்டி .

இன்னும் நிறைய உள்விளையாட்டுகளும் இருக்கின்றன, நியூ யார்க் நகரத்தில் உள்ள காசினோ போல், இங்கும் பெரிய ஹோட்டல் ஒன்றில் இருக்கிறது.

6. நாம் அங்கே சர்வ சாதரணமாக bmw, ferrari போன்ற பெரிய பெரிய கார்களை அதிகம் காணலாம். ரிச் country என்று அதை சொன்னால், சரியாக இருக்கும். அங்கே ஒவ்வொரு பொருளும் விலை உயர்ந்தவை தான், ஷாப்பிங் விண்டோ ஷாப்பிங் நன்றாக செய்யலாம்.

இன்னும் சில வியக்கத்தக்க விஷயங்கள் எல்லாம் கதையில் பார்க்கலாம். நான் சொன்னதை மறக்காதீர்கள் மக்களே, இக்கதையின் மாந்தர்களும் அதை ஒட்டிய விஷயங்களும் கற்பனையே..

ஒரு ஆர்வக்கோளாறு இதை எடுத்து செய்தால் என்ன என்று, ஆகையால் எடுத்து விட்டேன். முடிந்தால், இன்று இரவு அல்லது நாளை முதல் அத்தியாயம் தருகிறேன்.

இப்பொழுது புரிந்து இருக்கும் மக்களே, இப்படி லட்டு மாதிரி நிறைய விஷயங்கள் கிடைச்சா கதை எழுதாம எப்படி இருக்கிறது? அதான்.. வந்தாச்சு..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ், சூப்பர்ப்
துபாயின் அழகை ரசிக்க
நாங்களும் ஆவலாய்
வெயிட்டிங், உமா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top