• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Matured content dhuruva kaathal final epi 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
துருவம் 20

அன்று காலை வீட்டில் எல்லோரும் பரபரப்புடன், கோவில் மண்டபத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். பாட்டி, எல்லோரையும் ஏவிக் கொண்டு இருந்தார்.

அடியே! போதும் கண்ணாடி முன்னாடி நின்னது, அங்க மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்தாச்சு. நீ இன்னும் கிளம்பலை, இருக்கிற மூஞ்சி தான் இருக்கும், போ போய் கார் ஏறுஎன்று காவியஹரிணியை விரட்டினார் அவளின் அன்னை மகா.

மா! உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போறாளே, கண் கலங்கி நாலு வார்த்தை எமோஷனல் லா பேசுறதை விட்டுவிட்டு, இப்படி விரட்டுறீங்களே மகா மம்மிஎன்று பேசியவளை பார்த்து முறைத்தார்.

நான் ஏன் கண் கலங்கனும், நியாயமா மாப்பிள்ளை ஓட அம்மா தான் கண் கலங்கனும். எப்படி டா அந்த ராட்சசி ஓட குடும்பம் நடத்த போற அப்படின்னுஎன்று கூறியவரை பார்த்து, இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அம்மா! நான் ராட்சசியா?” என்று முறைத்தவளை, பதிலுக்கு முரைத்தார்.

அது நான் சொல்ல மாட்டேன், இப்போ பேசிக்கிட்டு இருக்கிற நேரம் இல்லை. எம்மா கங்கா, நீ இவளை கூட்டிட்டு மண்டபத்துக்கு வா வேகமா, நாங்க முன்னாடி போறோம்என்று வேலையை இவளின் மூத்த அண்ணியிடம் கொடுத்துவிட்டு அவர் அறையை விட்டு வெளியேறினார்.

ஆமா! கேட்கணும் நினைச்சேன் ஷர்மி அண்ணி எங்க அண்ணி? காலையில் இருந்து அவங்களை நான் பார்க்கவே இல்லையேஎன்று தனது இரண்டாவது அண்ணியை பற்றி கேட்டாள்.

இந்த வானர கூட்டத்தை மனோ கூட சேர்ந்து, அவ தான் சமாளிக்குறா. அப்புறம் அனிருத் அண்ணா, அண்ணி எல்லாம் நம்ம கலை வீட்டுக்கு போய் இருக்காங்கஎன்று கங்கா கூறவும், அவள் சிரித்தாள்.

அவ ஸ்டீஃபன் இல்லாம, வர மாட்டேன்னு ஒரே பிடிவாதம் அண்ணி. அவன் என்ன சொல்லி, இவளை சரி கட்டினான் தெரியல, டக்குனு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ரெண்டும்”.

இப்போ அவன் மொத்தமா, இங்க ஷிஃப்ட் ஆக பிளான் பண்ணிகிட்டு இருக்கான் அண்ணி. அதனாலதான், அவன் இப்போ பிஸி, இன்னைக்கு வருவான்னு நினைக்கிறேன், தெரியலஎன்று அவர்களை பற்றி கூறிக் கொண்டு இருந்தாள் காவியஹரிணி.

! அப்படியா அப்போ சரி, இனி கலை கவலை படாமல் இருக்கலாம்என்று அவளிடம் கூறிக் கொண்டே, அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏறினாள் கங்கா.

அதன் பின் நேராக, அவர்கள் வண்டி கோவில் வாசலில் நின்றது. கோவில் உள்ளே சென்று வழிபட்டு, பின் அங்கே இருந்த மண்டபத்திற்கு சென்றனர்.

மணமகன் faiq, பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அங்கே அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரத்தை கஷ்டபட்டு உச்சரித்து கொண்டு இருந்தான். கண்களில் காதல் பொங்க, அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தாள், அவனின் வனி.

பாரு டா லண்டன் இருந்து ப்ரெண்ட் வந்து இருக்கானே, அவனை வரவேற்போம் இல்லாம, இவ பாட்டுக்கு பாஸ்சை மட்டும் பார்த்துக்கிட்டு வரா”.

மேடம் ஹரிணி! நாங்களும் இங்க தான் இருக்கோம். கொஞ்சம் எங்களை பார்த்து பேசுறது, டார்லிங் உங்க அக்காவை சத்தமா கூப்பிடு மாஎன்று ஸ்டீஃபன் அங்கே அவளை வாரிக் கொண்டு இருந்தான்.

கலை அவன் திரும்ப லண்டன் போக டிக்கெட் எடுத்து இருக்கான், என்னன்னு கேளுஎன்று அவனை அவளிடம் மாட்டி விட்டு, இவள் அவனின் மனம் கவர்ந்தவன் அருகில் அமர்ந்தாள்.

அய்யர் மாலை எடுத்து, அவன் கையில் கொடுத்து, அவளுக்கு போடுமாறு சொல்லவும், அப்பொழுது அவன் மாலையை அவள் கழுத்தில் போட்டுவிட்டு, அவள் கண்களை பார்த்தான்.

இருவரின் பார்வையும், காதல் பாஷையில் கதைத்துக் கொண்டு இருந்தது. அதன் பிறகு, அய்யர் கூறிய மந்திரங்கள் எதுவும், இருவரின் காதுகளில் விழவில்லை.

மாப்பிள்ளை! அங்க அய்யர் ரொம்ப நேரமா தாலியை கையில் வச்சுகிட்டு இருக்கார், கொஞ்சம் வாங்கி உடனே தங்கச்சி கழுத்தில் போடுங்கஎன்று அனிருத் அவனை நிகழ் காலத்திற்கு அவனை இழுத்து வந்தான்.

கெட்டி மேளம்! கெட்டி மேளம்! என்று அய்யர் குரல் கொடுக்க, அங்கே நாதஸ்வர வித்வான்கள் தாளம் தட்ட, அய்யர் மாங்கல்ய மந்திரம் ஓத, faiq அவளின் கண்களை பார்த்துக் கொண்டே, அவள் கழுத்தில் தாலி கட்டி, மூன்று முடிச்சு போட்டான்.

அதன் பின், அங்கே சில சம்பிரதாயங்கள் நடந்து முடிந்து இருவரையும் அழைத்துக் கொண்டு, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

அங்கே சுவாமி தர்ஷன் முடித்துக் கொண்டு, எல்லோரும் வீடு திரும்பினர். அங்கே அவர்களுக்கு ஆரத்தி எடுக்க, மணமக்களின் மனம் முதன் முதலில் இங்கு வந்த பொழுது, எடுத்த ஆரத்திக்கு சென்றது.

அங்கே அவர்களுக்கு ஆரத்தி எடுத்த, அவளின் இரண்டு அண்ணியும், faiqயிடம் ஆரத்தி எடுததற்கு பரிசு கேட்டுக் கொண்டு இருந்தனர். அவனோ, ஏற்கனவே அவனின் வனி சொல்லி இருந்ததால், இருவருக்குமான பரிசை அவன் கொடுத்தான் பெரிதாக.

அதை பார்த்து, எல்லோரும் மலைத்து போயினர். அண்ணி இருவரும், காவியாவை கட்டிக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாப்பிள்ளை! இது எல்லாம் போங்கு! அவங்களுக்கு மட்டும் தான் பரிசா, எங்களுக்கு எல்லாம் இல்லையா?” என்று அங்கேயே அவளின் மூன்று அண்ணன்களும் அவனிடம் வம்பு செய்தனர்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அடேய்! முதல நல்ல நேரம் முடிய முன்னே, அவங்களை உள்ளே அழைச்சிட்டு வாங்க டாஎன்று தாத்தா அங்கே சவுண்ட் விடவும், அதன் பின் எல்லோரும் கப் சிப் ஆகி அடுத்த வேலையை தொடங்கினர்.

இருவரும், ஒன்று போல் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வரவும், அங்கே டப் என்ற சத்தத்துடன், கலர் பேப்பர்கள் அவர்கள் மேல் விழுந்தது.

உள்ளே ஊஞ்சலில் இருவரையும் அமர வைத்து, பால் பழம் கொடுத்து, அடுத்த சம்பிரதாயங்கள் நடத்தினர்.

அதன் பிறகு, சிறிது ஓய்வு எடுத்து விட்டு, உடையை மாற்றிக் கொண்டு, எல்லோரும் ஏர்போர்ட் நோக்கி பெரிய பஸ்சில் பயணித்தனர். அன்று இரவே துபாய் செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர்.

Faiq, அவனின் தனி விமானத்தில் தான் எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்றான். பிளைட்டில், இருவரும் அருகருகே அமர்ந்து கண் மூடி படுத்தனர்.

நான்கு மணி நேர பயணத்திலும், உறக்கம் மட்டுமே இருவருக்கும் இடையில்.

ஃபர்ஸ்ட் நைட் தூங்கி வழியிற ஜோடி, இவங்களா தான் இருக்கும் லஸ்ஸி டார்லிங்என்று ஸ்டீஃபன் கலையை உரசிக் கொண்டே கூறினான்.

அவங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்கல, ஆனா ஃபர்ஸ்ட் ஆப்ட்ர்நூன் நடந்து முடிந்தது, தெரியுமா!” என்று கலை அவள் காதில் ரகசியம் கூறவும், அவன் அதிர்ந்தான்.

என்ன லஸ்ஸி சொல்லுற?” என்று அதிர்ந்து போய் கேட்டான்.

ஆமா! ஓய்வு எடுக்க சொல்லி, பாட்டியும் தாத்தாவும் சொல்லவும், நைட் டிராவல்காக எல்லோரும் தூங்க போக, இவங்க மட்டும் நைசா யாருக்கும் தெரியாம மாடி ஏறி போயாச்சு”.

இவங்க நைசா போனதை யாரும் பார்க்கல அப்படினு, அவங்க நினைக்க, ஆனா இங்க லேடிஸ் நாங்க எல்லோரும் பார்த்துடோம். நாளைக்கு தானே சடங்கு சொன்னாங்க, முதல அவங்களை போய் பிரிச்சு வைப்போம் அப்படினு கங்கா அண்ணி சொல்ல, பாட்டி வேண்டாம் சொல்லிட்டாங்க”.

ஏன் வேண்டாம் அப்படினு கேட்டதற்கு, ஜோசியர் அவங்க ஜாதகப்படி, இந்த நேரம் தான் குறிச்சி கொடுத்தார். ஆனா, வீட்டில் இத்தனை சொந்தம் வரும் பொழுது, எப்படி வைக்க அப்படினு யோசிக்கும் பொழுது தான், சொந்தங்களை துபாய் க்கு கூட்டி போறோம் சொல்லி, அவங்களை எல்லாம் ஏர்போர்ட் பக்கத்துல தங்க வைக்கலாம் சொல்லி, ஷர்மி அண்ணி ஐடியா கொடுத்தாங்க”.

அதே மாதிரி, ஜோடிகும் சர்ப்ரைஸ் சொல்லவே இல்லை. பாட்டி, பக்காவா அதுவா நடக்கிற மாதிரி பிளான் பண்ணிட்டாங்கஎன்று கலை கூறவும், ஸ்டீஃபன் வாயை பிளந்தான்.

ஹ்ம்ம்.. இது யாருக்கும் தெரியாதா, லேடிஸ் தவிர்த்துஎன்று கேட்டான் மீண்டும்.

இல்லை, யாருக்கும் தெரியாது தாத்தாவை தவிர்த்துஎன்று கூறவும், ஸ்டீஃபன் அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

அவன் கண்ணடித்த காரணம் புரிந்து, அவளும் வெட்கத்துடன் சிரித்தாள். விமானம் துபாயில் தரை இறங்கவும் தான், மணமக்கள் இருவரும் கண் விழித்தனர்.

புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு உண்டான வெட்கம், நெருக்கம் எல்லாம் அவர்களிடமும் இருந்தது. ஏர்போர்ட் வெளியே, ஒரு பெரிய பஸ் இரண்டு இவர்களுக்காக காத்து கொண்டு இருந்தது.

அங்கே இவர்கள் யாரும் எதிர்பாராதது, அரசரே தனது குடும்பத்துடன் இவர்களை நேரில் வந்து வரவேற்றது தான். அதன் பின், அவர்களை அரண்மனைக்கு அழைத்து சென்று, அங்கே தங்க எல்லா வசதியும் செய்து கொடுத்தார்.

அரண்மனை அருகே உள்ள சிறிய மாளிகை, faiq அவனின் ரசிக தன்மைக்கு ஏற்றவாறு கட்டி இருந்தான். இப்பொழுது, அவளை அழைத்துக் கொண்டு அவன் அங்கே தான் சென்றான்.

அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து, அங்கே வேறு எதுவும் இல்லை. ஹாலில் அவளை அமர வைத்துவிட்டு, இவன் வெளியே செக்யூரிட்டியிடம் சில வினாடிகள் பேசிவிட்டு உள்ளே வந்தான்.

ஹே! பசிக்குதா வனிஎன்று கேட்டான் faiq.

ம்! லைட்டா பசிக்குது பாஎனவும், அவன் உடனே அவளை அழைத்துக் கொண்டு கிட்சென் சென்றான்.

அங்கே என்ன இருக்கிறது என்று பார்த்தவர்கள், ரவை இருக்கவும் உடனே அவள் ரவை கேசரி கிண்டினாள்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அவனோ அவள் காதில் சரசமாக, சப்பாத்தி வேண்டுமா என்று கேட்க, அவள் வெட்கி சிரித்தாள்.

அதான், சப்பாத்தி இல்லாமையே நீங்க அடிக்கடி வேனும்கிற அளவுக்கு, உங்களுக்கு வேண்டியதை எடுத்துகிட்டு தான இருக்கீங்கஎன்று வெட்கத்துடன் கூறினாள்.

இருந்தாலும், சப்பாத்தி மாதிரி வருமா வனி. அது டேஸ்டே தனி தான், எப்போவும்என்று கூறிக் கொண்டே அவளின் காதில் குறுகுறுப்பு மூட்டினான்.

அதில் அவள் காது மடல் சிலிர்த்து, அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சீண்டலிலும், கேசரி செய்து முடித்து இருந்தாள்.

அதன் பின் கேசரியை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி, சாப்பிட்டு முடித்து அந்த இடத்தை ஒதுக்கி விட்டு, மேலே அவர்களின் அறைக்குள் நுழைந்தனர்.

ஏனோ, அவளுக்கு இப்பொழுது கை கால்கள் ஜில்லிட தொடங்கின. கதவை அடைத்துவிட்டு, வந்தவன் அவள் ஒரு அவஸ்தையில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

உன் திங்ஸ் எல்லாம், அந்த ரூம் வச்சு இருக்கேன் டாஎன்று படுக்கை அறையை ஒட்டி இருந்த, உடை மாற்றும் அறையை காட்டினான்.

அவள் அங்கே சென்று பார்த்தவள், மனதிற்குள் wow என்றாள். ஏனெனில், அவனுக்கும் அவளுக்கும் தனி வார்ட்ரோப் அமைத்து இருந்தான், அதை ஒட்டி குளியலறை.

இது எல்லாவற்றிற்கும் மேல், ஆளுயர கண்ணாடி அங்கே இருந்தது தான் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எல்லாம் அவள் வீட்டிலும், இது போல் உண்டு என்றாலும், இங்கே ஒவ்வொன்றும் மிகுந்த கலைநயத்துடன் வித்தியாசமாக இருந்தது தான், அவள் வியப்பிற்கு காரணம்.

அங்கே குளியலறைக்குள் புகுந்து, சிறிது ரெஃபிரஷ் செய்து கொண்டு அவள் வெளியே வரவும், அங்கே ஸ்டாண்டில் இருந்த இரவு உடையை பார்த்து, அவளுக்கு வெட்கம் வந்தது.

ஹையோ! தெரியாம இவனுக்கு லவ் பண்ணவே தெரியல, ரொமான்ஸ் பண்ண தெரியல அப்படினு ஒரு தடவை சொல்லிட்டேன். அதுக்கு, நல்லா சேர்த்து வச்சு, அப்போ அப்போ சப்பாத்தி சாபிடுறான்”.

இப்போ இந்த டிரஸ், ஹையோ இவனோட அழும்பு தாங்க முடியலஎன்று மனதிற்குள் புலம்பி தள்ளினாள்.

ஹனி! நான் வந்து ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று அவன் கேட்கவும், இவள் ஒன்றும் வேண்டாம் நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள்.

அந்த லேசான satin துணி கொண்டு தயாரித்த அந்த இரவு உடை, அவளுக்கு அப்படி ஒரு பொருத்தமாக அமைந்தது. கண்ணாடியில், தன்னை பார்த்தவள் வெட்கம் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

அவனோ, மெதுவாக உள்ளே வந்தவன் கண்களை மூடி இருந்த அவள் கைகளை, மெதுவாக விளக்கினான். அவனின் மூச்சு காற்று, அவளின் பின் கழுத்தில் பட்டு, மெய் சிலிர்த்து போனாள்.

அவனோ, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, கட்டில் அருகே சென்றான். அவளோ, அப்பொழுதும் கண்களை இறுக மூடி, அவனின் கழுத்தை கட்டி கொண்டு இருந்தாள்.

மெல்ல அவளை கட்டிலில் இறக்கியவன், இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு, மற்ற விளக்குகளை அனைத்து விட்டான். அந்த அறை முழுவதும், ஏசி காற்று.

மெதுவாக அவன், அவள் இதழ்களை நெருங்க துடிக்கும் அவள் இதழ்களை கைகளால் மெல்ல வருடினான். அந்த வருடலிலே, அவள் உடம்பு நடுங்க தொடங்கியது.

மெல்ல அவள் காதில், எடுத்துக் கொள்ளட்டுமா உன்னை என்று அவன் கேட்க, அதில் அவள் முகம் சிவந்தது. சிவந்த அவள் முகத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, அந்த இரவு விளக்கையும் அனைத்து விட்டு, அவளை அணைத்துக் கொண்டான்.

மறுநாள் எழும்பொழுதே, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சீண்டிக் கொண்டே ரிசப்ஷன்க்கு, தயாராகிக் கொண்டு இருந்தனர். அவன் ஒரு டார்க் ப்ளூ கலர் கோட் சூட், அவள் அதை ஒட்டிய கலரில் பெரிய லெஹெங்கா உடையும், அதற்கு பொருத்தமான முத்து நகையும் அணிந்து தயாரானாள்.

காலை சாப்பாடு, இருவருக்கும் வீட்டிற்கே வந்து விட்டு இருந்தது. அங்கேயே இருவரும் சாப்பிட்டு முடித்து, கிளம்பினர்.

வெளியே நின்று இருந்த பெரிய லிம்போ வண்டியில், இருவரும் ஏறி அமர்ந்து அங்கே ரிசப்ஷன் நடைபெறும் இடம் நோக்கி சென்றனர்.

இருவரின் வீட்டாரும், ஏற்கனவே அங்கே சென்றதால், இவர்கள் இருவரும் இறுதியாக அவர்களுக்கு கொடுத்த வண்டியில் வந்து இறங்கினர்.

கை கோர்த்து, இருவரும் அங்கே கம்பீரமாக மேடையில் ஏறிய அழகை எல்லோரும் கண்டு ரசித்தனர். மீடியா ஆட்கள் ஒரு புறம், மக்களுக்கு அந்நாட்டின் இளவரசர் திருமண ரிசப்ஷனை, படம் பிடித்து காட்டிக் கொண்டு இருந்தனர்.

இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து, எல்லோரும் வியந்து பாராட்டினர். ரிசெப்ஷன் முடியும் தருவாயில், அவன் சொன்ன செய்தி தான் அப்பொழுது எல்லோரையும் பிரமிக்க வைத்தது.

(இங்கே அவன் அரபு மொழியிலும், ஆங்கிலத்திலும் பேசியதை தமிழில் தருகிறேன்)

எல்லோருக்கும் வணக்கம்! நான் இப்பொழுது இந்த நாட்டின் இளவரசர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். காரணம், எனக்கு வேறு சில கனவுகள், லட்சியங்கள் இருக்கின்றன”.

அதை இனி நான் என் துனைவியோடு, அதை சாதிக்க நினைக்கிறேன். நிச்சயம், என் நாட்டு மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களை மட்டுமே, என் லட்சியங்களாக வைத்து இருக்கிறேன்”.

இந்த பதவியை இப்பொழுது வேண்டாம் என்று சொல்ல, வேறு ஒரு காரணம் இருக்கிறது. அது நான், நானாக இருக்க விரும்புகிறேன். என்னை எதற்காகவும், மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள நினைக்க மாட்டேன்”.

இந்த பதவியில், நிறைய நான் என்னை தொலைத்தது தான் அதிகம். ஆகையால், என் தந்தை, தம்பி மற்றும் என் துணைவியாரின் குடும்பம், மீடியா மூலம் மக்களாகிய நீங்கள், எல்லோரும் இங்கே இருக்கும் பொழுதே, இதை நான் அதிகார பூர்வமாக அறிவிக்கிறேன்என்று அவன் கூறி முடித்த பின், அப்படி ஒரு அமைதி.

அதன் பின் காதை பிளக்கும் அளவிற்கு, அந்த அரங்கில் கரகோஷ சத்தம் இருந்தது. எல்லோரும் இருக்கிறார்கள், என்ற நினைப்பு இருந்தும் அந்த நொடியில், அவனின் வணி அவனை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தாள் கன்னத்தில்.

நீ இன்னும் பாடம் சரியா படிக்கல ஹனி,
முத்தம் இங்க கொடுக்கணும்என்று சொல்லி, அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அதன் பின், கேலி கிண்டலுக்கு பஞ்சம் இல்லாமல் அந்த மதிய உணவு வேளை, மகிழ்ச்சியாக சென்றது. வீடு வந்த பின், அவனின் தந்தை அவனை தனியாக அழைத்து, ஏன் இந்த முடிவு என்று கேட்டார்.

வாப்பா! என்னோட ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசா நீங்க எனக்கு கொடுத்த பட்டம் அது. என் அம்மாவும், நீங்களா கொடுத்தா மட்டும் தான், அந்த பதவியை வாங்கிக்க சொன்னாங்க”.

இங்க என்னோட அம்மா ஆசையும் நிரைவெறிடுச்சு, நான் உங்க மகன் அப்படினு உலகத்துக்கு சொல்ல நினைச்ச என் ஆசையும் நிரைவெறிடுச்சு”.

நான் இனி, மதுரை தான் இருக்க போறேன் அவ கூட. அவ அவளா இருக்கிறது, அங்க மட்டும் தான். நான் நானாக இருக்கிறது கூட, அவ என் கூட இருக்கும் பொழுது தான்”.

இங்க நான் ஒரு வாரம் தான் இருப்பேன், அப்புறம் அங்க கிளம்பிடுவேன். இங்க அடுத்து, எனக்கு எப்போ தோணுதோ அப்போ வரேன், நீங்களும் என்னை பார்க்க அங்க வரலாம் வாப்பாஎன்று கூறிவிட்டு அங்கு இருந்து வெளியேறினான்.

இதை கேட்கும் பொழுது, அவருக்கு யாரோ சாட்டையால் சுளிர் என்று அடித்தது போல் இருந்தது. முதல் மனைவிக்கு செய்த துரோகம், கண் முன்னே அவருக்கு அப்பொழுது தான் விஸ்வரூபமாக தெரிந்தது.

இதுவரை, அவனை தன் மகன் என்று ஒரு முறை கூட பெருமையாக சொல்ல தோன்றவில்லை. ஆனால், இப்பொழுது சொல்ல தோன்றியது அவருக்கு, அவன் என் மகன் என்று.

மறுநாள் காலை, அவளின் வீட்டினர் எல்லோரும் கிளம்பிய பின்னர், இவர்கள் இருவரும் மாலை ஹெலிகாப்டரில் பாலைவனம் நோக்கி சென்றனர்.

அங்கே அந்த பாலைவனத்தில், இவன் டென்ட் அமைத்த விதம் பார்த்து, அவளுக்கு பழைய நியாபகம் மனதில் விரிந்து, அங்கே அப்பொழுது நடந்ததை நினைக்க தோன்றியது.

இரவு நெருங்க நெருங்க, குளிர் அதிகமாக தொடங்கியது. இருவரும் ஒரு வித மோன நிலையில் இருக்கும் பொழுது, அங்கே திடீரென்று நாலு, ஐந்து பைக் சத்தம் கேட்க இருவரும் உஷாராயினர்.

அங்கே வந்ததவர்களை பார்த்து, இவன் ஆசுவாசம் அடைந்தான்.

ஏன் டா ஆராய்ச்சி பண்ண போறேன் சொல்லிட்டு, கடைசி நீ தங்கச்சியை கூட்டிட்டு சுத்தி இருக்கஎன்று அவனின் வெளிநாட்டு நண்பர்கள், அவனை ஒரு பிடிபிடித்தனர்.

டேய்! அதுக்கு நீங்க இப்போவே வா இங்க வருவீங்க! இது எல்லாம் ஓவர் டாஎன்று faiq அவர்களை பார்த்து முறைத்தான்.

சும்மா முறைக்காத டா எங்களை, இனி உன்னை பிடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் வந்து இருக்கோம்”.

சிஸ்டர்! முதல நீங்க கண்டுபிடிச்ச ஆராய்ச்சியை சொல்லுங்கஎன்று கூறி அவர்கள் எல்லோரும், அந்த தீ பந்தத்தை சுற்றி அமர்ந்தனர்.

Faiq காட்டிய கண் ஜாடையில், இவளும் அவன் அருகே அமர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.

நான் கண்டுபிடித்தது, 2,200 ஆண்டுக்கு முன்னால புதைக்கப்பட்ட ஒரு ஊரை. மாயன் civilization, ஹராப்பா civilization மாதிரி இதுவும் ஒரு வகையான civilization தான்”.

நான் கண்டுபிடித்த ஊர் பெயர் கீழடி, இங்க மக்கள் அந்த காலத்திலேயே பிளான் பண்ணி, ஒரு ஊரை அவ்வளவு அழகா உருவாக்கி இருக்காங்க”.

எங்க தமிழ்நாடு இன்னும் கூட proper drainage system கிடையாது. ஆனா, அப்போவே அவங்க அதை எல்லாம் நல்லா பிளான் பண்ணி, கட்டி இருக்காங்க”.

மழை பெய்தால், தண்ணீர் சேகரிக்க மழை நீர் திட்டம் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் உருவாக்கினார்கள். ஆனா, அப்போவே அதை அவங்க செய்து இருந்தாங்க”.

இது எல்லாத்துக்கும் மேல உட்சகட்டம் என்ன அப்படினா, அப்போ அந்த டைம் கடவுள் அப்படினு சம்பந்தபட்ட எந்த ஒரு கோவில், சாமி படம் எதுவும் கிடைக்கல”.

ஆனா, அங்கே யானை தந்தத்தால் ஆன செஸ் ஃபோர்டு, பானையில் நிறைய டிசைன், அப்புறம் ரோம் நாட்டு காசுகள், நிறைய antiques எல்லாம் கிடைச்சது”.

இதை ஆனா இன்னும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விட மாட்டேங்குறாங்க. காரணம், இதுவரை ஹிந்தி தான் நேஷனல் லாங்குவேஜ், ஹிண்டு மதம் தான் எண்களின் அடையாளம் அப்படினு சொல்லிகிட்டு இருந்தவங்க, இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரிஞ்ச பின்னாடி ஃபண்ட் கொடுக்க மாட்டேன், இதை ஸ்டாப் பண்ணுங்க அப்படினு govt முடிவு பண்ணி ஃபோர்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கஎன்று வருத்தமாக கூறவும், எல்லோரும் அவளின் வருத்தத்தை போக்க, அவளின் கண்டுபிடிப்பை பாராட்டி மகிழ்ந்தனர்.

டேய் faiq! நீ என்ன கண்டுபிடிச்ச?” என்று அவனின் தோழர்கள் அவனிடம் அடுத்து கேட்டனர்.

உங்களுக்கு, என் நாட்டோட வரலாறு முழுசா தெரியாது . நாங்க இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் தப்பி இங்க வந்தவங்க”.

அப்போ ஆங்கிலேயரின் அடிமை ஆட்சி
அங்க, ஒவ்வொரு இடத்தில் இருந்தும் நாங்க தப்பிக்க அவ்வளவு ரிஸ்க் எடுத்தோம். கடைசியாக, ஒரு பாகிஸ்தானி இந்தியாவில் இருந்த எங்களை, ஒரு சிறிய போட் மூலமாக, தப்பி செல்ல உதவி புரிந்தார்”.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அங்க இருந்து, தப்பி வந்தவங்க இங்க இந்த பாலைவனத்தில் எப்படி பிழைக்க அப்படினு யோசிக்கும் பொழுது தான், இதோ இப்போ சொன்னாலே, அங்க அந்த சிட்டி பிளாண்ட் ஒன் அப்படினு, அதை அப்போவே நாங்க தான் செய்து இருந்தோம்”.

எங்களோட வேர் தமிழ்நாடு, மொழி தமிழ். ஆனா, ஏனோ இங்க என்னோட முன்னோர்கள் எல்லாம் எப்படி அதுக்கு அப்புறம் அரபு கத்துகிட்டாங்க இது எல்லாம் தெரியல”.

அதை நானும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கேன், நிச்சயம் கண்டு பிடிசிடுவென் ஒரு நாள்என்று அவன் கூறவும், அவர்கள் மலைத்து பார்த்தனர்.

அதன் பின் எல்லோரும், அவரகள் இருவரையும் கலாய்த்து கொண்டும், வாழ்த்து கூறிக் கொண்டும் முடித்து விட்டு, அங்கு இருந்து சென்றனர்.

அப்பொழுது மணி இரவு இரண்டு மணி எனவும், குளிர் மேலும் அதிகரிக்க தொடங்கவும், இருவரும் டென்ட் உள்ளே நுழைந்தனர்.

ஆமா! எந்த தைரியத்தில் உனக்கும் எனக்கும் செட் ஆகாது சொல்லிட்டு, நீ என்னை அப்போ ப்ரேக் அப் பண்ணஎன்று இடுப்பில் கை வைத்து, முறைத்துக் கொண்டு கேட்டாள் அவனின் வணி.

ஹே! நீயே யோசிச்சு பாரு, நான் அங்க அப்படி ஒரு கூட்டத்தில் சாமியை பார்த்தது கிடையாது. அதுவும் இல்லாம, பிறந்ததில் இருந்து குரான் ஓதி, பழகிட்டு அப்புறம் உன்னையும் மதம் மாற சொல்ல எனக்கு இஷ்டமில்லை”.

இது எல்லாத்துக்கும் மேல, நீ அங்க போட்ட ரூல்ஸ் தான். எல்லோரும் பார்ப்பாங்க, தள்ளி போ அப்படினு எப்போ பார்த்தாலும் சொல்லிகிட்டே இருந்தா, எனக்கு கோபம் வராதா”.

இங்க இருக்கிற சுதந்திரம் அங்க இல்லை, அப்படினு தெரிஞ்சு நொந்துட்டேன் முதல. ஆனா, ப்ரேக் அப் பண்ணின பிறகு தான், நீ இல்லாம நான் இல்லை அப்படினு தெளிவா புரிஞ்சிக்க முடிஞ்சது என்னால”.

அப்புறம் என்னோட வேர் அங்க அப்படினு தெரிஞ்சதாலயும், என் மனம் கவர்ந்த தேவதை பிறந்த இடம் அங்க அப்படினு தான் தீவிரமா தமிழ் கத்துக்கிட்டேன்”.

அதுக்குள்ள, இங்க என் அம்மா ஆசை நான் இளவரசர் ஆகனும் அப்படின்றது. அதுவும், அந்த நேரத்தில் நிறைவேரவும், உடனே நான் ஆறு மாசம் டைம் எடுத்து முழு மூச்சாக, என்ன செய்யனும் எல்லாம் தெளிவா முடிவெடுத்தேன்”.

அந்த பத்து நாள் பாலைவனத்தில் நான் இருந்த ஒரே காரணம், நீ தான். உன்னை எப்படி ஃபேஸ் பண்ணுறதுண்ணு தெரியாம, ஓடி ஒழிந்து கொண்டேன் தான் சொல்லணும்”.

ஆனா நீ இருக்கியே, தடாலடியாக வந்து குதிச்சுட்ட. ஆமா, ஏன் அன்னைக்கு பூர்கா போட்டு இருந்த?” என்று கேட்டான்.

எல்லாம் உங்களுக்காக தான், நீங்களே எனக்காக இவ்வளவு யோசித்து மாறும் பொழுது, நான் மாற யோசிக்க மாட்டேனா?” என்று கூறியவளை இறுக்கி அணைத்தான்.

ஆமா, நாளைக்கு நாம ஒட்டக சவாரி போகலாமா? என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்கவும், அவள் அவனை பிடித்து மொத்த தொடங்கினாள்.

ஒட்டக சஃபாரி, எனக்கு பயம் தெரிஞ்சும் நீ எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ!” என்று கூறிக் கொண்டே மொத்த, அவனோ அவளை அணைத்துக் கொண்டு வேறு உலகத்திற்கு அழைத்து சென்றான்.

இரு துருவங்களாக, இன்னும் அவர்கள் இருந்தாலும் அவர்களின் காதல் மாறாமல் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கும்.

முற்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top