• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En aasai athai magal 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?போன எபிசோட்க்கு லைக்ஸ் அண்ட் கருத்து தெரிவிச்ச எல்லா நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நீங்க போன எபிக்கு கொடுத்த கமெண்ட்ஸ் தான் என்ன இந்த எபிசோட் எழுத வெச்சது.
படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க...

Cheers,
வெண்பா.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
அங்கே நின்று கொண்டிருந்தவனைப் பார்த்ததும் அனன்யா விற்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

“உன் பேர் என்ன?” என்று கேட்க “அனன்யா” என்றவள் மெதுவாக சொல்ல “என்ன சொன்ன சரியா கேட்கல...” என்றவன் காதைத் தேய்த்துக்கொண்டு கேட்க “அனன்யா” என்றாள் கொஞ்சம் சத்தமாக.

“எந்த டிப்பார்ட்மெண்ட்?” என்று கேட்க “பி.டெக் ஐ.ட” என்றவளிடம் மேலும் சில பொதுவான விஷயங்களை கேட்டான்.

பின்பு “ஹாஸ்டல் எல்லாம் பிடிச்சுருக்கா?” என்று கேட்க “ம்ம்...பிடிச்சிருக்கு” என்றாள்.

“பிரிண்ட்ஸ் எல்லாம் செட் ஆகிட்டாங்களா?” என்று கேட்க “ம்ம்ம்..செட் ஆய்ட்டாங்க” என்றாள்.”எல்லாத்தையும் உடனே நல்லவங்கனு நம்பிறாத..கொஞ்ச நாள் பழகிப் பார்த்துட்டு அப்புறம் நம்பு” என்றவன் சொல்ல அவனை விசித்திரமாகப் பார்த்தவள் மெல்ல தலையாட்டினாள்.

“ஹாஸ்டல் சாப்பாடு எல்லாம் பிடிச்சிருக்கா?” என்று கேட்க அவள் தலையாட்டிய விதத்திலையே அவனுக்குப் புரிந்தது அவளுக்கு ஹாஸ்டல் உணவு பிடிக்கவில்லை என்பது.

“காலைல என்ன சாப்பிட்ட?” என்றவன் கேட்டவுடன் அவள் கண்கள் சட்டென்று கலங்கி விட்டன.இவ்வளவு வருடங்களில் யாரவது தன்னைப் பார்த்து இந்த வார்த்தைகளைக் கேட்பார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்த மனதிற்கு அவன் கேட்ட கேள்வி அமிர்தமாய்ச் சுவைத்து.

அவள் கண்கள் கலங்குவதையும் சட்டென்று தன்னை சமாளித்துக் கொள்வதையும் பார்த்தவனின் முகத்தில் யோசனை ரேகைகள்.”ம்ம்..சாப்பிட்ட..” என்று சொன்னவளின் முகத்தில் இவ்வளவு நேரமிருந்த பயம் போய் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

“என்ன சாப்பிட்ட?” என்றவன் கேட்க “இட்லி” என்றாள்.அவளை சற்று ஆச்சர்யமாகப் பார்த்தவன் “எவ்வளவு இட்லி சாப்பிட்ட?” என்று கேட்க “ஒன்னு சாப்பிட்ட” என்றாள்.
அவளிடம் ஒன்றும் பேசாமல் சற்று தொலைவில் இருந்த சுவற்றில் மறைந்து கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த சிநேகாவை அழைத்தவன் “காலைல எவ்வளவு இட்லி சாப்பிட்ட?” என்று கேட்க அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவள் “நாலு” என்றாள்.

“இனிமேல் நீ சாப்படற மாறி உன் பிரிண்டையும் சாப்பிட வைக்கணும்..” என்றவன் அனன்யாவிடம் திரும்பி “பிடிக்குதோ பிடிக்கலையோ சாப்பிடணும்.அப்ப தான உடம்புக்கு சத்து கிடைக்கும்.மதியம் போய் காலைல சாப்படாததுக்கும் சேர்த்து சாப்படற” என்றான்.

சிநேகாவிடம் திரும்பி “அவ இனிமேல் ஒழுங்கா சாப்பிடறது உன் பொறுப்பு” என்றவன் அவளிடம் முறைப்பை பரிசாக வாங்கிக்கொண்டான்.ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனாய் “சரி டைம் ஆச்சு ..போய் சாப்பிடுங்க” என்றவன் அவர்களிடம் விடைபெற்றான்.

சிநேகாவும் அனன்யாவும் மெஸ் ஹாலை நோக்கிச் சென்றனர்.அனன்யா அவன் “சாப்பிட்டயா?” என்று கேட்ட கேள்வியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை.அந்த கேள்வி தந்த சுகத்தில் தன்னை மறந்து மெஸ் ஹாலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

சிநேகாவோ தன்னை அவன் தெரியாதவள் போல் நடத்தியதையும் அனன்யாவின் மேல் அவன் கொண்ட அதித அக்கறையைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாள்.அதனால் அவளும் அனன்யாவிடம் எதுவும் பேசவில்லை.

வரிசையில் நின்று சாப்பாட்டை கையில் வாங்கியதும் தான் தத்தம் யோசனையிலிருந்து விடுபட்டவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

சிநேகா அனன்யாவிடம் “அந்த அண்ணா என்ன கேட்டாங்க?” என்று கேட்டதற்கு அவன் சொன்னதை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள்.அனன்யா சொன்னதை எல்லாம் கேட்டவள் மனதிற்குள் ‘என்ன இவ்வளவு அக்கறையா பேசிருக்கான்’ என்று நினைத்தவள் அனன்யாவிடம் “சரி சரி நீ ஒழுங்கா சாப்பிடு..” என்றாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வகுப்பிற்குச் சென்றனர்.பேராசிரியர் இன்னும் வகுப்பிற்கு வராததால் மாணவர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

அனன்யாவும் சிநேகாவும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.சிநேகாவுடன் பேசிக் கொண்டிருக்கும் அனன்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
அவன் வகுப்பில் இருந்த முக்கால்வாசிப் பெண்கள் சிரத்தை எடுத்து தங்களை அழகுபடுத்திக் கொண்டு வந்திருக்க எந்தவித ஒப்பனையும் இல்லாமல் அழகாக இருந்த அனன்யா அவன் கவனத்தைக் கவர்ந்தாள்.அவள் உடித்தியிருந்த உடையும் மிக எளிமையானதாகத் தான் இருந்தது.ஆனால் அந்த உடையிலும் அவள் தேவதை போல் அவனுக்குத் தெரிந்தால்.

பின்பு பேராசிரியர் வந்துவிட அனைவரும் வகுப்பைக் கவனிக்க ஆரம்பித்தனர்.பிரகாஷ் கவனத்தை வகுப்பில் செலுத்த முயன்றாலும் அவன் கண்கள் அவன் பேச்சை கேட்காதவையாக அனன்யாவையே பார்த்துக் கொண்டிருந்தன.


மாலை நான்கு மணிக்கு வகுப்பு முடிந்துவிட மெதுவாக ஹாஸ்டலை நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.அப்பொழுது “சிநேகா” என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே காலையில் அவர்களிடம் பேசிய சீனியர் நின்று கொண்டிருந்தான்.அவர்கள் இருவரையும் தன்னை நோக்கி வருமாறு கை அசைத்தான்.

அனன்யா ‘இவங்களுக்கு எப்படி சிநேகா பேர் தெரியும்?’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவனைப் பார்த்ததும் எழுந்த சந்தோஷத்தில் அதை சிநேகாவிடம் கேட்க மறந்தாள்.

“கிளாஸ் முடிஞ்சுச்சா?” என்று கேட்க “முடிஞ்சுச்சு” என்றாள் சிநேகா.”மதியம் இரண்டு பேரும் என்ன சாப்டிங்க?” என்று கேட்க சிநேகா அவர்கள் சாப்பிட்டதை சொன்னாள்.பின்பு அனன்யாவிடம் திரும்பியவன் “ஒழுங்கா சாப்டியா?” என்று கேட்க அவள் தலையசைத்தாள்.

அவனிடம் விடை பெற்றவர்கள் ஹாஸ்டலை நோக்கி நடந்தனர்.சிநேகா அனன்யாவிடம் “நான் ஒரு கால் பண்ணிட்டு வர டி.நீ ஹாஸ்டலுக்கு போ” என்றாள்.

அனன்யா கண்ணில் இருந்து மறையும் வரை போனை நொண்டிக் கொண்டிருந்தவள் அவள் மறைந்தவுடன் “டேய் அறிவுகெட்டவனே” என்று அவனைப் போட்டு அடித்தாள்.”ஏய் காலேஜ் டி” என்றவன் சிரித்துக் கொண்டே அவளை விளக்கி நிறுத்தினான்.

அவனைப் பார்த்து கோபமாக முறைத்தவள் “எதுக்கு டா அனன்யா முன்னாடி என்ன தெரியாத மாதிரி நடிச்ச?அனன்யாவ பார்த்த உடனே பிடிச்சிருச்சா என்ன?அவள் மேல பாசம் ரொம்ப ஓவரா பொங்குது.” என்று கேட்க சிரித்தவன் “எல்லாம் ஒரு காரணமா தான்” என்றவன் அவளிடம் ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

“சாரி டா அண்ணா..இது எல்லாம் தெரியாம நான் உன் மேல ரொம்ப கோபப்பட்டுட்டேன்” என்றாள்.”ப்ளீஸ் இது மாறி சீரியஸா இருக்க மாறி நடிக்காத...என்னால பார்க்க முடியல” என்றவன் அவளை கேலி செய்ய அவன் முதுகில் இரண்டு அடி போட்டாள்.”இது எல்லாம் அம்மா அப்பாக்கு தெரிய வேண்டாம்.நீ சொல்லாத” என்று சொல்ல அவளும் தலை அசைத்தாள்.

பின்பு “இப்ப நீ என்ன ஒட்டுனதுக்கு தண்டனையா ஐஸ் கிரீம் வாங்கித் தா” என்று சொல்ல அவள் தலையில் செல்லமாக தட்டியவன் “வா..காண்டீன் போலாம்” என்று அழைத்துச் சென்றான்.

“என்ன ப்ளேவர் வேணும்?” என்று கேட்க அவள் “சாக்லேட்” என்றாள்.சாக்லேட் ஐஸ்கிரீம் ஒன்றும் பட்டர்ஸ்காட்ச் ஐஸ் கிரீம் ஒன்றையும் வாங்கியவன் அவளிடம் கொடுத்தான்.

“எதுக்கு டா ரெண்டு ஐஸ் கிரீம்?” என்று கேட்க “உனக்கு ஒன்னு அவளுக்கு ஒன்னு.நான் வாங்கிக் கொடுத்தனு அவகிட்ட சொல்லாத.நீயா வாங்கிக் கொடுத்த மாறி சொல்லிரு” என்றான்.”சரி அப்ப நான் அவகூட சேர்ந்தே சாப்பிட்டிக்குற” என்றவள் அவனிடம் விடைபெற்றாள்.
 




Last edited:

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாஸ்டலுக்குச் சென்றவள் அனன்யாவிடம் ஐஸ் கிரீமைக் கொடுக்க தயங்கியவள் “இல்ல..சிநேகா நீ சாப்பிடு” என்று சொல்ல “ஏன் உனக்கு இந்த பிளேவர் ஐஸ் கிரீம் உனக்கு பிடிக்காத?” என்று கேட்க “இல்ல..பிடிக்கும் தான்” என்றாள்.

“அப்புறம் என்ன சாப்பிடு” என்றவள் பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீமை அவள் கையில் திணிக்க அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடுகிறாள்.ஐஸ் கிரீமை வாயில் வைத்ததும் அமிர்தத்தை சுவைத்து போல் இருந்தது.கடைசியாக அவள் எப்பொழுது ஐஸ் கிரீம் சாப்பிட்டாள் என்பது அவளுக்கு நினைவே இல்லை.


அனன்யாவிற்கு ஐஸ் கிரீம் என்றாள் மிகவும் பிடிக்கும்.அவள் அன்னை உயிருடன் இருக்கும் வரை அவள் எப்பொழுதும் ஒரு பேமிலி பேக்கை தனி ஆளாக காலி செய்வாள்.மற்றவர்களுக்கு ஒரு வாய் கூட கொடுக்கமாட்டாள்.

ஆனால் அவள் சித்தி தன்னுடைய குழந்தைகளான வித்யாவிற்கும் விகாஷிற்கும் தான் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுப்பார்.விகாஷ் கொஞ்சம் வளர்ந்ததும் தன் அன்னையிடம் அக்காவிற்கும் வாங்கிக் கொடுக்குமாறு சண்டையிட்டான்.

அவன் சண்டையிட்டதும் சரோஜா அனன்யாவிடம் “என் பையனவே எனக்கு எதிரா திருப்பி விடறையா?உன்ன என்ன பண்ணற பாரு” என்றவர் அவளுக்கு 3 நாட்கள் பழைய சாப்பாடையே போட்டார்.
3 நாட்கள் கழித்து “இனி மேல் உன் வாய் ஐஸ் கிரீமை நினைக்குமா?இனிமேல் உனக்கு ஐஸ் கிரீம் சாப்படணும்னு எப்ப தோணினாலும் 3 நாள் சாப்பிட்ட பழைய சாப்பாடு தான் உனக்கு ஞாபகம் வரணும்” என்று மிரட்டி விட்டுச் சென்றார்.

அதை நினைத்தவளின் உதடுகளில் ஒரு கசந்த முறுவல் உதிர்ந்தது.கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது.அதை முயன்று கட்டுப் படுத்தியவள் ஐஸ் கிரீமை சுவைக்கத் தொடங்கினாள்.

சிநேகா அதற்குள் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட “என்ன அனன்யா இன்னும் நீ சாப்பிட்டு முடிக்கலையா?” என்று கேட்க அவள் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே வந்தது.அந்தப் புன்னகையின் பின் ஒளிந்திருக்கும் விரக்தியான மனநிலையை சிநேகாவால் கண்டு பிடிக்கமுடியவில்லை.அவள் அதை எதார்த்தமாக எடுத்துக் கொண்டாள்.

சிறு வயதில் அவள் அன்னை “மெதுவா சாப்பிடு அனு குட்டி.உன்னோட ஐஸ் கிரீமை யாரும் எடுத்துட்டு போக மாட்டாங்க..” என்று சொன்னது காதில் ஒலித்தது.ஏனெனில் அவள் ஒரு பேமிலி பேக்கை காலி செய்ய எடுத்துக் கொள்வது சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே.

பின்பு ஏதோ யோசித்தவளாக “சிநேகா உனக்கு எப்படி எனக்கு பட்டர் ஸ்காட்ச் பிளேவர் பிடிக்கும்னு தெரியும்?” என்று கேட்க மனதிற்குள் ‘அடப் பாவி அண்ணா..இவளுக்கு என்ன பிளேவர பிடிக்கும்னு தெரிஞ்சு தான் வாங்கிக் கொடுத்திய?உன்னப் போய் ரொம்ப நல்ல பையன்னு நினைச்ச என் புத்திய..’ என்று கவுன்டர் கொடுத்தாள்.

“அது சும்மா கெஸ்ல வாங்குன” என்றவள் சொல்லி சமாளித்தாள்.அனன்யா மீண்டும் ஏதோ அவளிடம் கேட்க வர அதற்குள் அவள் தொலைப்பேசி அடித்தது.’அப்பாடா தப்பிச்சோம்’ என்று மனதிற்குள் நினைத்தவள் தன் அன்னை அழைத்திருந்ததால் அவருடன் பேசத் தொடங்கினாள்.

சிநேகா தன் அன்னையிடம் “ம்ம்..சரி மா..பார்த்து பத்திரமா இருந்துக்குற..” என்றவள் மேலும் தன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

சிநேகா அவள் அன்னையிடம் பதிலளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு அந்த சீனியரின் ஞாபகம் தான் வந்தது.அவளுடைய வீட்டில் இருந்து அழைத்து தன்னை விசாரிப்பவர்கள் யாரும் இல்லை.ஏன் அப்படி பேச வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் அவளுடன் பேச முடியாது.ஏனெனில் அவளிடம் தொலைபேசி இல்லை.

அப்பா தொலைப்பேசி வேண்டுமா என்று கேட்டதற்கு அவள் பதில் சொல்லும் முன்பே அவள் சித்தி “அதுல்லாம் அவளுக்கு எதுக்கு?படிக்கிற பொண்ணுக்கு எதுக்கு போன்?” என்று சொல்லிவிட அவள் தந்தையும் அதற்கு மேல் அவளிடம் அதைப் பற்றி பேசவில்லை.

ஆனால் அவளுக்குத் தான் கவலையாக இருந்தது.படிக்கப் போவது ஒரு பெரிய பொறியியல் கல்லூரிக்கு.மடிக்கணினியும் இல்லாது தொலைப்பேசியும் இல்லாது எப்படி கல்லூரியில் கொடுக்கும் செயல்திட்டங்களை செய்வது என்று நினைக்கையில் கொஞ்சம் பயமாக இருந்தது.

அனன்யா பிறப்பில் இருந்து மிகவும் பயந்த சுபாவம் உடையவள்.ஆனால் அவள் அம்மா இறந்த பின் அனுபவித்த வாழ்க்கை அவளை ஒரு போராளியாக மாற்றி இருந்தது.எல்லாவற்றையும் சமாளிக்கக் கற்றுக் கொண்டாள்.’எப்படியாவது இதையும் சமாளிக்கலாம்’ என்று நினைத்துத் தான் கல்லூரிக்கு வந்தாள்.

தன் குடும்பத்தார் நினைவுகளை புறம் தள்ளியவள் அந்த சீனியரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.அவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்ததும் அவளைக் கேட்காமலையே அவள் முகத்தில் புன்னகை பூத்தது.

அவளிடம் அவன் கேட்ட கேள்விகள் அவளை ஆனந்தத்தில் மூழ்கச் செய்தன.இவ்வளவு நாட்களாக யாரவது தன்னிடம் அக்கறையாக பேசமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்த கொண்டிருந்த மனதிற்கு அவன் கேட்ட கேள்விகள் பாலை வனச் சோலையாக இனித்தது.

தன் அன்னையிடம் பேசி முடித்துவிட்டு வந்தவள் தனியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த அனன்யாவை விசித்திரமாகப் பார்த்தாள்.”சாப்பிடப் போகலாமா?” என்று சிநேகா கேட்டதும் தான் தன் நிலை உணர்ந்தவள் அவளுடன் சாப்பிடச் சென்றாள்.

இரவு உணவிற்காக தோசையும் சாம்பார் சட்னியும் வைக்கப்பட்டிருந்தது.அனன்யா இரண்டு தோசைகள் சாப்பிட்டவுடன் “எனக்குப் போதும்” என்றாள்.ஆனால் சிநேகாவோ “அந்த சீனியர் என்ன திட்டுவாரு டி நீ சாப்படலைன்னா...ஒழுங்கா இன்னும் இரண்டு சாப்பிடு” என்று அவள் கையைப் பிடித்து அமர வைத்தாள்.

“நீ அவருகிட்ட நான் நாலு தோசை சாப்பிடணு பொய் சொல்லிரு” என்று சொல்ல அவளை முறைத்த சிநேகா “நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்.நீ ஒழுங்கா சாப்பிடு” என்றவள் அவளை வற்புறுத்திச் சாப்பிட வைத்தாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.பின்பு உறங்கச் சென்றனர்.அப்பொழுது சிநேகாவின் தொலைபேசிக்கு “ரெண்டு பேரும் சாப்டிங்களா?” என்ற மெசேஜ் வந்திருக்க “சாப்டோம் டா.அனன்யா நாலு தோசை சாப்பிட்டா” என்று அனுப்பினாள்.

அனன்யாவிற்கு அந்த சீனியர் கேட்ட “சாப்பிட்டியா?” என்ற வார்த்தைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தன.அந்த வார்த்தைகள் அவளை எவ்வளவு சந்தோசப்படுத்தியது என்று கேட்டாள் அவளிடம் பதிலில்லை.

ஆனால் பல வருடங்களுக்குப் பின்பு அன்று மிக சந்தோசமாக உணர்ந்தாள்.அந்த கேள்வி தந்த சுகத்தில் அப்படியே உறங்கியும் விட்டாள்.பல வருடங்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கம்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கனிஸ்காவர்ணா டியர்
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis...

Nice UD sis...

story superah poguthu sis...

annainya... romba pavam sis... romba kasta paturuka... vikash.. good brother..

Yar intha senior... senha annan ok... bt name sollavilaye... Aadhiya ?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top