• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En aasai athai magale 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
Hii friends,

How are u all?Thanks for your likes and comments..

Please do read and share your comments.

சிநேகா சென்றவுடன் ரூமிற்கு வந்த அனன்யாவிற்கு தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.வந்து தன் கட்டிலில் படுத்தவள் அழுது கொண்டே இருந்தாள்.எப்பொழுதும் அவளுடன் சுகமாக தூங்கும் நினைவுகள் அவளை வந்து தாக்கின.

இவ்வளவு நாட்கள் பாசத்திற்காக ஏங்கிய அனன்யாவிற்கு சிநேகாவின் நட்பு பாலைவனத்தில் கிடைத்த நிழல் போல் இருந்தது.ஆனால் அதையும் இவ்வளவு சீக்கிரம் இழந்து விட அவள் மனம் சொல்லேன துயரம் கொண்டது.

தன்னை நினைத்தே அவள் மனம் தாழ்ப்புணர்ச்சி கொண்டது.’ஒரு வேளை சித்தி சொன்னது போல் நான் ராசி கெட்டவளோ?.அதனால் தான் தன்னிடம் பாசமாக இருப்பவர்கள் எல்லாம் தன்னை விட்டு சென்று விடுகின்றனரோ?’ என்று மனம் நினைக்க ஆரம்பித்தது.அவள் மனம் ஒரு விரக்தியான நிலையில் இருந்தது.

சின்ன வயதில் இருந்த பாசத்திற்கான நல்ல நட்பிற்கான ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்தது சிநேகாவின் நட்பு.ஆனால் அவள் பிரிந்து சென்றது அவள் ஏக்கத்தை மேலும் அதிகரித்து விட்டது.மிட்டாய்க்காக ஏங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு மிட்டாயை கையில் கொடுத்து அதை சுவைக்க விடாமல் பிடிங்கியது போலானது அவள் நிலைமை.

அனன்யாவிற்கு இப்பொழுது தன் அம்மாவின் நினைவு வந்துவிட்டது ‘ஏன் ம்மா..என்ன விட்டுட்டு போனிங்க?என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம்ல?என்ன இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டிங்களே?’ என்று மனசுக்குள் மருகியவள் அப்படியே கண் அயர்ந்தாள்.

அடுத்த நாள் காலை அறைத் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க அது எட்டரை என்று காட்டியது.இங்கே இருந்தால் சிநேகாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம் என்று எண்ணியவள் கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

ஒன்பது மணிக்கு கல்லூரி அதனால் அரக்கப் பரக்கக் கிளம்பியவள் கல்லூரிக்குச் சென்றாள்.பதினோரு வகுப்பு வரை உட்கார்ந்திருந்தவள் அதற்கு மேல் உட்கார முடியாமல் வெளியே வந்தாள்.

நேற்று மதியம் சாப்பிட்டது.இரவு சிநேகா இல்லாத சோகத்தில் சாப்பிடவில்லை.காலையில் அவசரமாக கிளம்பியதால் காலை உணவையும் உட்கொள்ளவில்லை.பசி வயிற்றைக் கிள்ளியது.

கால்கள் எல்லாம் நடக்க முடியாமல் தள்ளாடியது.எப்படியாவது மெதுவாக சென்று மெஸ்ஸில் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். மயங்கி விடாமல் சென்று விடவேண்டும் என்று கடவுளிடம் வேண்டியவள் கம்பியைப் பிடித்து நடந்து போனாள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை.சூரியன் வேறு அன்று அளவுக்கு அதிகமாக சுட்டெரித்தது.அவளுக்கு அப்படியே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

அங்கிருந்த மரபெஞ்சில் அமர்ந்தவள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டாள்.பசியைத் தாங்க முடியவில்லை.அப்பொழுது அவள் அருகில் வந்தவன் “ஏய் அனு...என்ன ஆச்சு?” என்று கேட்க அவளால் பதில் பேச முடியவில்லை.அவளிடம் ’இனி மயங்கினாலும் பரவாயில்லை..அவன் பார்த்துக் கொள்வான்’ என்ற நம்பிக்கை இருந்தது.

அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே அவள் கன்னத்தை “அனு அனு” என்று தட்ட அவளின் கண்கள் திறந்தவுடன் மூடிக்கொண்டன.அவன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.அவளிடம் சிறு அசைவு ஏற்படவே அவளுக்கு மெதுவாக தண்ணீர் புகட்டினான்.

தண்ணீர் கொடுத்த புத்துணர்ச்சியில் அவள் மெதுவாக கண்ணைத் திறந்தாள்.”அனு என்ன ஆச்சு?” என்று பதட்டமாக கேட்வனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தவள் “ஒன்னும் இல்லை..சாப்பிட்டா சரி ஆயிரும்” என்றாள்.

“காலைல என்ன சாப்பிட்ட?” என்று கேட்க அவளுக்கு எப்பொழுதும் இக்கேள்வியால் மனதில் தோன்றும் உற்சாகம் இன்றும் தோன்றிற்று. இல்லை என்பது போல் தலையசைத்தவளைப் பார்த்து முறைத்தவன் தன் பையில் இருந்த சாப்பாட்டை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

அதை வாங்கத் தயங்கியவள் அவன் முகம் பார்க்க “ஒழுங்கு மரியாதையா சாப்பிடற..” என்று அவள் கையில் சாப்பாட்டைத் தினித்தான்.அவளால் அதற்கு மேல் மறுக்கவும் முடியவில்லை.மேலும் மெஸ்ஸிற்கு சென்று சாப்பிடும் அளவிற்கு அவள் உடம்பில் தெம்பும் இல்லை.

அதை அவ்வளவு வேகமாக உண்டவளைப் பார்க்கும் பொழுது தான் அவனுக்கு அவள் பசி புரிந்தது.’எப்பவும் ரொம்ப மெதுவா தான சாப்பிடுவா..’ என்று மனதில் நினைத்தவன் அவள் சாப்பிடும் வரை அமைதி காத்தான்.

அவள் சாப்பிட்டு முடித்தவுடன் “கடைசியா எப்ப சாப்பிட்ட?” என்று கேட்க “நேத்து மதியம்” என்று தயங்கித் தயங்கி சொன்னாள்.அவளை அவன் நன்றாக முறைக்க வேறு வழி இல்லாமல் நேற்று நடந்தது முழுவதையும் அவனிடம் சொல்லிவிட்டாள்.

சிநேகாவைப் பற்றி சொல்லும்பொழுது அவள் கண்கள் கலங்குவதையும் அவள் முயன்று தன்னைக் கட்டுப் படுத்துவதையும் பார்த்தவன் “ச்சு..என்ன அனன்யா இது..சின்ன பொண்ணு மாதிரி..தினமும் அவள் கூட போன்ல பேசு..இதுக்கு எல்லாம் பீல் பண்ணுவியா?முதல்ல கண்ணைத் தொட...” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அவள் முகம் இன்னும் தெளியாததைப் பார்த்தவன் “மதியம் ஏதாச்சும் முக்கியமான கிளாஸ் இருக்கா?” என்று கேட்க அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.”சரி அப்ப நாம ஒரு இடத்துக்கு போகலாம்..” என்றவன் எழுந்தான்.

அவளும் அவனுடன் சென்றாள்.சிறிது நேரம் மெளனமாய் கழிய அவன் தான் அதை உடைத்தான்.”இது மாறி யாரு கூப்பிட்டாலும் என்ன ஏதுனு கேட்காம உடனே வர கூடாது சரியா?” என்று சொல்ல அப்பொழுது தான் அவளுக்குப் தான் செய்த தவறு புரிந்தது.

‘எப்படி இவங்க கூப்பிட்ட உடனே என்னனு கூட கேட்காம வந்தோம்’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவனிடம் ‘ம்ம்..’ என்று தலையாட்டினாள்.அவளின் முகபாவத்தைப் பார்த்துச் சிரித்தவன் “இப்ப நான் உன்ன ஏதாச்சும் பண்ணிட்டா என்ன பண்ணுவ?” என்று கேட்க அவள் முகத்தில் மெல்லிய புன்னகைக் கீற்று.

“ஏய் நான் இவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்க..நீ சிரிக்கிற..?” என்றவன் கேட்க “நீங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டிங்கனு எனக்கு தெரியும்..” என்று அவன் கண்ணைப் பார்த்து உறுதியாகக் கூறினாள்.

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லற?” என்றவன் கேட்க “குரைக்குற நாய் கடிக்காது” என்று சொல்லி தன் நாக்கை கடித்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.அவன் முகத்தில் எவ்வித பாவனையும் காட்டாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் “நான் தப்பான அர்த்தத்துல சொல்லல..என் மனசு நீங்க அப்படி பண்ண மாட்டிங்கனு சொல்லுது” என்றவள் சொல்ல “என் மேல அவ்வளவு நம்பிக்கையா?” என்றவன் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“ஆமா” என்றவள் உடனடியாக பதில் சொல்ல வியந்தவன் “இவ்வளவு நம்பிக்கை வைக்குற அளவுக்கு என்னை தெரியுமா என்ன?” என்று கேட்டான்.”உங்கள பத்தி எதுவும் தெரியாது..ஆனால் நீங்க நல்லவங்கனு மட்டும் தெரியும்” என்றாள்.

“என்னை பத்தி எதுவும் தெரியாம நான் நல்லவன்னு மட்டும் எப்படி தெரியும்?” என்றவன் விடாமல் கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியவில்லை.அவள் திரு திருவென்று முழிக்க சிரித்தவன் “வா..” என்று அவளை அழைத்துச் சென்றான்.

அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் சற்று குறைவாக இருந்தது.அங்கு அவளை ஒரு பெரிய மரத்திற்கு அருகில் அழைத்துச் சென்றவன் அங்கிருந்த நாய்க்குட்டிகளை அவளுக்கு காட்டினான்..அங்கே மூன்று நாய் குட்டிகள் விளையாடிக்கொண்டுருந்தன.

அவற்றைப் பார்த்ததும் சந்தோஷத்தில் அந்த மரத்தின் கீழ் அமர்ந்தவள் அவற்றை தன் மடியில் வைத்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.அவள் உட்காரும்பொழுது “இது ரோடு” என்று சொல்லவந்தவன் அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்து அதை சொல்லாமல் விட்டுவிட்டான்.

சாம்பல் நிறத்தில் ஒரு குட்டியும் வெள்ளை நிறத்தில் இரண்டு குட்டிகளும் இருந்தன.அவற்றைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்!
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
சிறிது நேரம் கழித்து அவளிடம் ஒரு பிஸ்கட் கட்டை நீட்ட கேள்வியைப் பார்த்தவளிடம் “அதுக்கு கொடு” என்று கண்களில் சொன்னான்..அதைப் பிரித்து அந்த குட்டிகளுக்கு ஊட்டிவிட்டவளின் மனதில் ஏக திருப்தி.ஒரு அரை மணி நேரம் அந்த குட்டிகளுடன் விளையாடி விட்டு இருவரும் கல்லூரியை நோக்கி நடந்தனர்.

நடக்கும் பொழுது “எனக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்கும்..இங்க கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.அவளிடம் ஒன்றும் பேசாமல் தன் கைபேசியை அவளிடம் நீட்ட அவள் புரியாமல் அதை வாங்கிப் பார்த்தாள்.

அதில் அவள் அந்த நாய்க்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இருந்தன.”தேங்க்ஸ்” என்றவள் அந்த புகைப்படங்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே வந்தாள்.அவனிடம் போனைக் கொடுத்தவள் “ரொம்ப தேங்க்ஸ்..இங்க வந்ததுல இருந்து ஜிம்மி..என்னோட நாய் குட்டி ..அதை ரொம்ப மிஸ் பண்ண..இப்ப இந்த குட்டிஸ்ஸ பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றாள்.

“உங்களுக்கும் நாய் குட்டி பிடிக்குமா?அதனால தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திங்களா?” என்றவள் கேட்க அவன் தலையசைத்தான்.அவளுக்கு எங்கே தெரியப்போகிறது அவனுக்கு நாய் என்றாளே பிடிக்காது என்று.அவளுக்கு நாய் குட்டிகள் மிகவும் பிடிக்கும் என்பதால் தான் அவன் அவளை அங்கே அழைத்துச் சென்றதே.

“அப்புறம் ஏன் நீங்க நாய் குட்டி கூட விளையாடவே இல்லை?” என்றவள் கேட்க என்ன சொல்லவதென்று தெரியாமல் விழித்தவன் “எங்க வீட்டுல இருக்க நாய் குட்டிக்கு நான் வேற நாய் கூட விளையாண்ட பிடிக்காது..மோப்பம் பிடிச்சு கண்டுபிடிச்சுரும்..” என்றான்.

“என்னோட ஜிம்மியும் அப்படித்தான்..நான் வேற நாய் கூட விளையாண்ட அதுக்கு பிடிக்கவே பிடிக்காது..அதனால நானும் வேற நாய் கூட வீட்டுல இருக்கப்ப விளையாட மாட்டேன்..” என்றாள்.அவளுக்கு எங்கே தெரியப் போகிறது அவன் வீட்டில் நாய் இல்லை என்பதும் முன்பு ஒரு காலத்தில் அவள் சொல்லியதையே அவன் திரும்பச் சொல்கிறான் என்றும்.

“சரி நாளைக்குப் பாக்கலாம்..நைட் ஒழுங்கா சாப்பிடு” என்றவன் அவளிடம் விடைபெற “சீனியர் சாப்பாடு ரொம்ப சூப்பரா இருந்துச்சு..உங்க அம்மா கிட்ட நான் சொன்னனு சொல்லிருங்க..அப்பவே சொல்லனும்னு நினைச்ச ஆனால் சிநேகாவைப் பத்தி பேசுனதுனால சொல்ல மறந்துட்ட” என்றாள்.சிரித்தவன் “சரி நான் அம்மாகிட்ட சொல்லிற..நீ ஒழுங்கா சாப்பிடு” என்றவன் அவளிடம் விடை பெற்றான்.

அன்று இரவு போன் செய்த சிநேகாவிடம் அன்று நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள்.சிநேகாவிடம் சாப்பிடாததற்கு திட்டு வாங்கியவள் அவள் கல்லூரியில் நடந்த சுவையான அனுபவங்களையும் கேட்டுக் கொண்டாள்.இருவரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிவிட்டு போனை வைத்தனர்.

_____________________________---

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன.கல்லூரி ஆரம்பித்து 3 மாதங்கள் முடிவடைந்திருந்தது.அனன்யா கல்லூரி சூழலுக்கு தன்னை நன்றாகப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.

இந்த மூன்று மாதத்தில் அவளாக வீட்டுக்கு ஒரு முறை கூட அழைக்கவில்லை.நடுவில் தந்தை மட்டும் ஒரு முறை அழைத்துப் பேசினார்.அவர் வீட்டிற்கு வரச் சொன்னதற்கு “எக்ஸாம் இருக்கு” என்று சொல்லி மறுத்திருந்தாள்.அவரும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.

அவளும் அந்த சீனியரும் நல்ல நண்பர்கள் ஆயினர்.இருவரும் உணவு இடைவெளியின் பொழுது சந்தித்துக் கொள்வது வழக்கமானது.இப்பொழுது எல்லாம் அனன்யாவிற்கு மதிய உணவு அந்த சீனியருடன் தான்.அவன் வீட்டு உணவை இவள் ரசித்து உண்பாள்.
அன்று அவள் உணவு நன்றாக இருக்கிறது என்று கூறியதில் இருந்து அவன் இருவருக்கும் மதிய உணவை எடுத்து வர ஆரம்பித்து இருந்தான்.முதலில் அவள் மறுக்க அவன் இரண்டு நாட்கள் அவள் கண்ணில் படவே இல்லை.

இரண்டு நாட்கள் அவளை தவிக்க விட்டவன் மூன்றாம் நாள் அவள் கண் முன் வந்தான் .ஆனால் அவளிடம் பேசாமல் அவன் நடந்து போக இவள் தான் அவனிடம் பேசினாள்.ஆனால் அவனோ “நீங்க எல்லாம் பெரிய ஆளு..நான் கொண்டு வர லஞ்ச் எல்லாம் சாப்பிடுவிங்களா?” என்று கேட்க “இல்லை சீனியர்..அப்படி எல்லாம் இல்லை..உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு தான்..” என்றவள் தயங்கித் தயங்கி சொன்னாள்.

“நீ சாப்பாடு நல்லா இருக்குனு சொன்னத நான் அம்மா கிட்ட சொன்ன..அவங்க தான் எனக்கு தரப்ப உனக்கும் கொடுத்தாங்க..இதுல என்ன சிரமம் இருக்கப் போகுது?” என்று கேட்க அம்மா என்ற சொல்லைக் கேட்டதும் அவளால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

கல்லூரி முடிந்ததும் இருவரும் அந்த நாய் குட்டிகளுடன் கொஞ்ச நேரம் செலவழிப்பர்.அவளுடன் சேர்ந்து இப்பொழுது அவனும் நாய் குட்டிகளுடன் விளையாடுகிறான்.
இருவரும் சேர்ந்து அந்த ஆண் நாய் குட்டிகளுக்கு “ ஜாக் (JACK), ஜிம் (JIM)” என்றும் பெண் நாய்க்கு “டீனு (TEENU)” என்றும் பெயர் வைத்தனர்.அந்த நாய் குட்டிகளும் இவர்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டன.

இருவரின் நட்பு கல்லூரியைத் தாண்டி விடுமுறை நாட்களில் போனில் அழைத்துப் பேசும் அளவிற்கு முன்னேறி இருந்தது.

நாட்கள் தெளிந்த நீரோடை போல் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
வெண்பா டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update venbaa...
Senior thaan avaloda maama paiyano!!!
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Nice update sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top