• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

en kaathal kannalagi 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 5

சம்யுக்தா அன்று விடுமுறை எடுத்து, வீட்டில் தான் இருந்தாள். அவள் எதற்காக இத்தனை நாள் காத்து இருந்தாளோ, அது இப்பொழுது நடக்க போகிறது.

அவள் பெற்றோரிடம் சொல்லி இருந்தாள், இன்று ராசுவின் வீட்டினரின் வருகையை பற்றி. மனதில் சந்தோசம் பொங்க, அண்ணன் குடும்பத்தினரின் வருகைக்காக தடபுடலாக மதிய உணவினை சமைக்க தொடங்கினார் விசாலாட்சி.

வீட்டின் முன் கார்களின் ஒலி கேட்கவும், சேஷாத்ரியும், விசாலாட்சியும் வெளியே வந்தனர். அண்ணன் வீட்டினர் அனைவரும், குடும்ப சகிதமாக தட்டு, தாம்பலத்துடன் வருகை புரிந்தனர்.

அன்று தங்கையை வீட்டை விட்டு துரத்திய பிறகு, ராமச்சந்திர மூர்த்தி இன்று தான் தங்கையை காண்கிறார். அவரை பார்த்து எந்த நல விசாரிப்பும் செய்ய, அவர் மனம் இடம் கொடுக்க வில்லை.

“வாங்க அண்ணா, வாங்க அண்ணி! எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்று அங்கு வந்து இருந்த அனைவரையும் வரவேற்று, நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.

சேஷாத்ரியும், அவர் பங்குக்கு எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு, மனைவியுடன் சேர்ந்து எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்து, இருக்கையில் அமர வைத்தார்.

விசாலாட்சிக்கு, அண்ணன் பேசாதது வருத்தம் அளித்தது. என்ன இருந்தாலும், அவர் அன்று செய்தது தவறல்லவா, அதனால் பொறுத்துக் கொண்டார். அதற்குள் காமாட்சி, சம்யுக்தாவை அழைக்க சொல்லவும், மகளை அழைக்க மாடி ஏற போகும் சமயத்தில், அவளே மாடியில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தாள்.

மகளை பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது, வெளுத்து போன ஒரு தொழ தொழ சட்டையும், சாயம் போன ஜீன்ஸும் அணிந்து கொண்டு, முடியை பறக்க விட்டு, ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டிலும், மறு கை அவளின் தலை முடியை சரி செய்வதில் பிசியாக இருந்தது.

அண்ணன் குடும்பத்தினர் முன் மகள் இப்படி வருவதில், அவருக்கு உடன்பாடு இல்லை. ஆகையால் அவள் கீழே வருமுன், இவர் மேலே செல்ல நினைக்கையில் அவள் கீழே இறங்கி வந்ததோடு மட்டுமில்லாமல், அவர்களை பார்த்து வாங்க என்று கை கூப்பி வரவேற்று, அங்கே ஒற்றை சோபாவில் அமர்ந்து இருந்த ராசப்பன் அருகில், இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

விசாலாட்சியும், சேஷாத்ரியும் மகளின் இந்த நடவடிக்கையை பார்த்து அதிர்ந்து போய் இருந்தனர். இவர்களோடு, மற்றவர்களும் அவளின் செயலில் அதிர்ந்து போய் இருந்தனர்.

ராசப்பன் இதை எதிர்பார்த்து இருந்ததால், அவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். அவனுக்கு இப்பொழுது, அவள் இப்படி இடித்துக் கொண்டு எல்லோர் முன்பும் அமர்ந்தது தான் சங்கடமாக இருக்கின்றது.

ஆனாலும், பெண்ணவளின் அருகாமையில் அவன் கிறங்கி போய் இருந்தான் என்பது தான் உண்மை. அவன் கிறங்கி போய் இருந்த சமயத்தில், அவனின் தந்தையின் ஓங்கிய குரல், அவனை நிகழ்காலத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தது.

“கொஞ்சங் கூட மரியாதை தெரியாத பிள்ளையா இருக்கு, நாகரிகம் கூட தெரியல இந்த பிள்ளைக்கு. ஆத்தாகாரி மாதிரி தான பொண்ணு இருப்பா, ஒழுங்கா உன் மவனை இவளை வெட்டிவிட்டுட்டு, நான் சொல்லுற பொண்ணுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த சொல்லு”.

“இது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது, கிளம்பு இங்கு இருந்து” என்று அதட்டல் போட்டார் மனைவியிடம்.

தந்தை பேசியது அதிகப்படி என்று உணர்ந்த ராசப்பன், அவரருகில் நெருங்க செல்லும் நேரம், சம்யுக்தாவின் குரல் தடுத்து நிறுத்தியது அவனை அங்கு.

“என்ன சொன்னீங்க? மரியாதை தெரியாத பிள்ளையா? நானா? வந்த உடனே உங்களை கும்பிட்டு வாங்கன்னு சொல்லிட்டு, என் புருஷன் பக்கத்தில தான உட்கார்ந்தேன், இதுல நீங்க எங்க தப்பை கண்டீங்க?” என்று சோபாவில் இருந்து எழுந்து கேட்டாள்.

அவள் கேட்ட விதத்திலே, அவள் தந்தையை சமாளித்துக் கொள்வாள் என்று அறிந்து, அவன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டான்.

“என்ன டா இப்படி உங்க அப்பாவை கேள்வி கேட்குறா, உங்க அப்பா கோபக்காரர் டா அடிச்சிட போறார்” என்று பயந்தார் காமாட்சி.

இதே பயம் தான் விசாலாட்சிக்கும், ஆகையால் மகளை அடக்க அவர் நினைக்கையில், சேஷாத்ரி தடுத்து விட்டார்.

“அவ அவங்க தாய் மாமா கிட்ட, உரிமையா சண்டை போடுறா, மாமனார் கிட்ட இல்லை” ஆகையால் பேசாமல் இருக்கும் படி கூறினார்.

தன்னிடம் இப்படி நிமிர்வாக கேள்வி கேட்கும் சம்யுக்தாவை, அவருக்கு பார்த்த மாத்திரத்தில் அவள் யாரின் வாரிசு என்று தெரிந்தது. இதே நிமிர்வும், தெளிவும் அவரின் தந்தைக்கு உண்டு.

அதே நிமிர்வு, அவரின் மகன் ராசப்பனிடத்தில் கண்டு இருக்கிறார். ஆனால் அந்த தெளிவு, இவளிடத்தில் தான் கான்கிறார். தன் பதிலுக்காக காத்து இருக்கும், தங்கை மகளை பார்த்து இப்பொழுது பேச தொடங்கினார்.

“நாங்க இன்னைக்கு இங்க வரோம்ன்னு, உனக்கு தெரியும் தான. அப்போ நீ என்ன செய்து இருக்கணும், புடவை கட்டி இருக்கணும். சரி அது கூட பரவாயில்லை, புடவை இப்போ எல்லாம் எந்த பிள்ளைக்கு ஒழுங்கா கட்ட தெரியுது, ஒரு சுடிதார் போட்டு இருக்கலாம் ல பொண்ணு” என்று பேசவும், இவள் சிரித்தாள்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“நாட்டு நடப்பை தெரிஞ்சு வச்சு இருக்கீங்களே, எங்க அம்மா உங்க கிட்ட அவங்க காதலை பத்தி சொல்லும் பொழுது, தாத்தா, பாட்டி கிட்ட நீங்க பேசி இருந்துக்கலாம் தான, அதை ஏன் செய்யல அப்போ? அப்போ உங்களுக்கு மரியாதை தெரிஞ்ச, அன்பும், பண்பும் நிறைஞ்ச பொண்ணோ, பையனோ தேவையில்லை”.

“உங்களுக்கு வேண்டியது எல்லாம், உங்க வசதிக்கு தகுந்த மாதிரி அந்தஸ்து நிரஞ்ச ஒரு குடும்பமும், பொண்ணும் தான். அதனால தான் நீங்க, எங்க அம்மா காதலை பத்தி வீட்டுல மூச்சு விடல யார் கிட்டயும், இப்போ கூட உங்க பையன் விருப்பம் கேட்காம, உங்க அந்தஸ்துக்கு தகுந்த இடமா பார்த்து முடிக்க துடிக்குறீங்க அப்படி தானே மாமா” என்று அவள் கேட்கவும், அவர் அதிர்ந்து விட்டார்.

இந்த பதிலில் ராசப்பன் கொதித்து விட்டான், அவன் தந்தை ஒரு போதும் அந்தஸ்துக்கு முக்கியம் கொடுக்க கூடியவர் இல்லை, என்பதை அவன் அறிவான்.

“யுக்தா! எங்க அப்பா அப்படி எல்லாம், அந்தஸ்து பார்க்கிறவர் கிடையாது. அத்தை அப்போ யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டது தப்பு தானே, அதுவும் கல்யாணம் பேசி இருந்த இரண்டு நாள் ல அப்படி வந்த யாரா இருந்தாலும், அப்போ கோபப்பட்டு இருப்பாங்க” என்று கூறியவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

“சரி! அப்போ கோபப்பட்டு இருந்துக்கலாம், ஆனா அதுக்கு அப்புறம் எங்க அம்மாவை தேடி வந்தாங்களா, இல்லை பாட்டி இறந்த தகவலை தான் சொன்னாங்களா?”

“இத்தனை வருஷமா ஒண்ணுமே ஏன் செய்யல? இன்னுமா எங்க அம்மா மேல கோபம் இருக்கு? அப்படி கோபம் இருந்தா, தகுந்த காரணம் சொல்ல சொல்லுங்க இப்போ” என்று தெளிவாக காரணத்தை கேட்டாள் இப்பொழுது.

சம்யுக்தா கேட்ட ஒவ்வொன்றும், கூறிய ஒவ்வொன்றும் ராமச்சந்திர மூர்த்தியின் மனதை வாள் கொண்டு அறுத்தது. அவள் கூறிய அனைத்தும் உண்மை என்பதை, இப்பொழுது கூறியாக வேண்டும்.

“மருமக பொண்ணு சொன்னது எல்லாம் சரி தான், அன்னைக்கும் சரி, இப்போவும் சரி நான் அந்தஸ்து பார்த்துட்டு தான் எதுனாலும் செய்றேன். அப்போ என் தங்கச்சி இவரை தான் கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லவும், அவரோட வசதி அந்தஸ்தை தான் முதல பார்த்தேன்”.

“எனக்கு அப்போ என் தங்கச்சிக்கு, இவர் சரியா வர மாட்டார்ன்னு தோணிச்சு, அதான் வேற மாப்பிள்ளை நானே பார்த்து கூட்டிட்டு வந்தேன் வீட்டுக்கு பொண்ணு பார்க்க. ஆனா, அப்போ என் தங்கச்சி, இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு வந்தா”.

“குடும்ப மானம் போச்சுன்னு அப்பாவும், அம்மாவும் நினைச்சாங்க. ஆனா நான் பார்த்து கூட்டிட்டு வந்த மாபிள்ளையை, என் தங்கச்சி நிராகரிச்ச கோபத்துல அன்னைக்கு அவளை வீட்டை விட்டே விரட்டி விட்டேன்”.

“இப்போவும், என்னை பொறுத்த வரைக்கும் அந்தஸ்து, வசதி எல்லாம் ரொம்ப முக்கியம். என் மகன் பிடிவாதமா நிக்கவும் தான், இப்போ இங்க கிளம்பி வந்ததே” என்று அவர் கொடுத்த விளக்கத்தில் அங்கே யார் அதிகம் அதிர்ந்தனர் என்று தெரியவில்லை.

வீட்டு மருமகளும், மருமகன்களும் மாமனாரின் இந்த பதிலை கேட்டு வெகுவாக அதிர்ந்து போயினர். இந்த பதிலில், அவர்களின் தன்மானம் அடி வாங்கியதாகவே கருதினர்.

இவர்கள் இப்படி நினைக்க, அவரின் மகன் ராசப்பனோ தந்தையின் இந்த பதிலை கேட்டு உறைந்து போனான். அதை விட, அத்தை எவ்வாறு உணருகிறார் என்று திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான்.

உணர்வற்று அண்ணனை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார், விசாலாட்சி. அவர் அண்ணன் தன் காதலை புரிந்து கொள்வார் என்று நினைத்து, அன்று செயல்பட்ட ஒரு விஷயம் இன்று தப்பாக தோன்றியது.

“தப்பு பண்ணிட்டேன்! நான் தப்பு பண்ணிட்டேன்! அப்பா, அம்மா கிட்ட பயப்படாம உண்மையை சொல்லி இருந்தா, இந்நேரம் அவங்க உயிரோட இருந்து இருப்பாங்க. உன்னை நம்பி சொன்னது, தப்பு அண்ணே” என்று வாய்விட்டே புலம்பி கீழே மயங்கி விழுந்தார் விசாலாட்சி.

அருகில் நின்று கொண்டு இருந்த சேஷாத்ரி, அவரை கீழே விழாமல் தாங்கிக் கொண்டார். சம்யுக்தா, தாயின் நிலையை கண்டு அருகில் ஓடி வந்தாள். அதற்குள், காமாட்சி மகளை விட்டு தண்ணீர் எடுத்து வர செய்து, விசாலாட்சி முகத்தில் தெளித்து, அவர் மயக்கத்தை தெளிய செய்தார்.

சிறிது மயக்கம் தெளியவும், காமாட்சி அவரை ஓய்வு எடுக்க சொல்லி அவரை அவரது அறைக்கு அனுப்பினார். அதன் பின் நேராக கணவரிடம் சென்றவர், அவரை நேருக்கு நேராக பார்த்து கேள்வி கேட்க தொடங்கினார்.

“ஏனுங்க! நீங்க இப்படின்னு, எப்படி எங்க யாருக்கும் தெரியாம போச்சு? நீங்க மனுஷங்களை பார்க்குறீங்க நினைச்சேன், ஆனா அதுக்கு முன்னாடி அந்தஸ்தை பார்க்குறீங்கன்னு தெரியாம போச்சு”.

“இத்தனை வருஷத்துல, எனக்கு கூட உங்களை சரியா தெரியலங்க. டேய் ராசு! அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து அப்புறம் மருமகளை கூட்டிட்டு போகலாம்”.

“ஒரு நாலு நாளைக்கு நீயும், நானும் இங்க இருக்கலாம். மத்த எல்லோரும் நம்ம வீட்டுக்கு போகட்டும். கண்ணு முத்தழகு, அத்தை வர வரைக்கும் நீ தான் வீட்டை பார்துக்கிடனும்” என்று வீட்டின் பெரியவராக, முதல் முறையாக கணவரிடம் ஏதும் ஆலோசிக்காமல், முடிவெடுத்தார்.

முதல் முறையாக ராமச்சந்திர மூர்த்திக்கு, தான் செய்த பிழை விபரீதமாக தெரிந்தது. அதிலும், தன்னை சுற்றி இருக்கும் வீட்டினர் அனைவரும், தன்னை பார்க்கும் பார்வை அவரை கூனி குறுக வைத்தது.

தங்கையின் கணவர் சேஷாத்ரி, அப்பொழுது அவரருகில் வந்து மன்னிப்பு வேண்டினார்.

“மன்னிச்சிடுங்க! உங்க மனநிலை புரியுது எனக்கு. எந்த அண்ணனும், தங்கைக்கு சிறந்த இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்க தான் விரும்புவாங்க”.

“இன்னைக்கு, இப்படி ஒரு சூழ்நிலை நீங்க எதிர்கொள்ள நான் காரணமாகிட்டேன். உங்க தங்கச்சியை நான் விரும்பாம இருந்து இருந்தா, இப்போ இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வந்து இருக்காது, அதுக்கு மன்னிச்சிடுங்க” என்று அவர் மன்னிப்பு வேண்டவும், ராமச்சந்திர மூர்த்திக்கு தன் தவறு முழுதாக புரிந்தது.

அதற்குள், அவரின் மூத்த மகன் பெரியசாமி வந்து அவரை அழைத்து சென்றான் வீட்டிற்கு. வீட்டிற்கு வந்தவர், அன்றைய தினத்தை நினைத்து பார்த்தார்.

தங்கை திருமணம் செய்து கொண்டு வந்து நின்ற பொழுது, அவர் கூட்டிக் கொண்டு வந்த மாப்பிள்ளை வீட்டினர் அவர்களை அவமானப்படுத்தி விட்டதாக கூறி வசை மொழி பொழிந்தனர்.

தந்தை இறந்ததற்கு முக்கிய காரணம், அவர்களின் சுடு சொற்களே தவிர தங்கை காரணம் இல்லை என்பதை அவர் அறிவார். ஆனாலும், அன்று அவர் தங்கை இந்த காரியத்தை செய்யாது இருந்தால், என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

இவர் இங்கே இப்படி யோசிக்க, அங்கே விசாலாட்சி அவரின் மனதில் இருக்கும் வருத்தத்தை அவர் தோழி காமாட்சியிடம் கொட்டி தீர்த்தார். அவரின் மனநிலையை புரிந்து கொண்ட காமாட்சியும், மனதின் பாரத்தை கொட்டி தீர்க்கட்டும் என்று அவரை பேச வைத்தார்.

அதன் பின் அவர் தூங்க ஆரம்பிக்கவும், அறையை விட்டு வெளியே வந்தவரை, சம்யுக்தா பிடித்துக் கொண்டாள்.

“மன்னிச்சிடுங்க அத்தை! அம்மாவுக்கு நியாயம் கிடைக்கனும்ன்னு தான், மாமா கிட்ட நான் அப்படி கேள்வி கேட்டேன். ஆனா அது உங்களை பாதிக்கும்ன்னு, நான் நினைச்சு பார்க்கல” என்று வருந்தியவளை அவர் தேற்றினார்.

“வருத்தப்படாத மா, உங்க மாமா எப்படி இருந்தாலும், நான் அவரை விட மாட்டேன். அவரும் அப்படி தான், கொஞ்ச நாளைக்கு கோபம தீருர வரைக்கும் தள்ளி இருக்கிறது தான் மா நல்லது”.

“உனக்கும் இதே தான் மா சொல்லுறேன், ஆயிரம் சண்டை, கோபம் வந்தாலும், உடனே சமாதானமாகிடனும். அப்படி இல்லைனா, அந்த உறவு நிலைச்சு இருக்காது மா”.

“சரி, இன்னைக்கு நான் உன் கூட படுக்கிறேன், ராசுவை கீழே படுக்க சொல்லலாம், சரியா” என்று அவர் கேட்கவும், அவள் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

எல்லோரின் மனதை புரிந்து கொண்டு நடப்பவள், அவளின் ராசுக்குட்டியின் மனதை எப்பொழுது புரிந்து கொள்ளுவாள்.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
here is the fifth epi friends.. thanks for ur wonderful support .. keep supporting friends..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமா தீபக் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top