• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaathal kannalagi epi 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.. இதோ முதல் பதிவுடன் வந்துவிட்டேன் .. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அத்தியாயம் – 1

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி அருகே உள்ள சேத்துபட்டி கிராமத்தில் வருகிற M.L.A. தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து கொண்டு இருந்தது. அந்த பதவிக்கு நிற்பவன், அந்த ஊரின் தலைவர் ராமச்சந்திர மூர்த்தியின் மூன்றாம் மகன் ராசப்பன் @ ப்ரித்விராஜ்.

ராமச்சந்திர மூர்த்திக்கு நான்கு பிள்ளைகள், அதில் மூத்தவன் பெரியசாமி அதே ஊரில் விவசாயம் பார்க்கிறான். அவனின் மனைவி முத்தழகு, வீட்டு வேலைகளை கவனித்துவிட்டு அவனுக்கு விவசாயத்தில் நேரம் கிடைக்கும் பொழுது உதவி செய்கிறாள்.

இவர்களுக்கு ஒரே மகள் கங்கா, செம சுட்டி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அடுத்து மகள் கோதை, திருமணமாகி சிவகாசியில் இருக்கிறாள். இவளின் மணாளன் திருப்பதி, குடும்ப தொழிலான அரிசி கடை வைத்து நடத்தி வருகிறான். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு சேட்டைகார சிறுவன் இருக்கிறான், பெயர் கிரிதரன்.

மூன்றாம் மகன் ராசப்பன்@ப்ரித்விராஜ், இவன் தான் நம் கதையின் நாயகன். இப்பொழுது தேர்தலில் நிற்கிறான், இவனை பற்றி போக போக தெரிந்து கொள்வோம். நான்காவது மகள் ரோஜா, அந்த வீட்டின் கடைக்குட்டி, அந்த வீட்டின் ஒரே பட்டதாரி.

போன மாதம் தான் திருமணம் முடிந்து, கணவன் ராஜாவுடன் சென்னையில் வசிக்கிறாள்.

ராமச்சந்திர மூர்த்தியின் மனைவி காமாட்சி, சாந்த சொருபியாகவும், தேவைப்பட்டால் காளி அவதாரம் எடுக்க கூடியவராகவும் இருப்பார். கணவர், பிள்ளைகள் என்று அவர் உலகத்தை சுருக்கிக் கொண்டு அதில் சந்தோஷமாக வாழ்பவர். மூன்றாம் மகன் ராசப்பன்@ ப்ரித்விராஜ் மேல், ஒரு தனி பாசம் உண்டு அவருக்கு எப்பொழுதும்.

ஏனெனில் அவன், அவரின் தந்தை வீரபத்திரன் ஜாடையில் இருந்தான். காமாட்சிக்கு அவரின் தந்தை வீரபத்திரன் மேல், ஒரு பக்தியே இருக்கும். தந்தை எது செய்தாலும், தங்களின் நன்மைக்கே செய்வார் என்று கண்கூடாக கண்டவர்.

அவரின் திடீர் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்தவர், மகன் அவர் ஜாடையில் பிறந்த பின் தந்தையே தனக்கு பிறந்ததாக எண்ணி, சந்தோஷத்தில் மொத்த பாசத்தையும் மகன் மேல் வைத்தார்.

பெயர் வைக்கும் பொழுது, தன் தந்தை பெயரை வைக்க நினைக்க, கணவரோ அவரின் தாத்தா ராசப்பன் பெயரை தான் வைக்க வேண்டும் என்று கூறி அதையே வைத்தனர்.

அவன் வளர வளர, அவனின் சேட்டைகள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தந்தையை போல் மகன் இருப்பான் என்று நினைத்த காமாட்சி, அவன் தன் தாத்தனை போல் சேட்டைகாரனாக, யாருக்கும் அடங்காத ஜல்லிக்கட்டு காளை போல் சிலிர்த்து எழுந்தான்.

அவன் கட்டுபடுவது தாயின் பாசம் ஒன்றுக்கு மட்டுமே, அதுவுமே அவனுக்கு சரி என்று பட்டால் தான் கட்டுபடுவான். இப்படி சிலிர்த்து கொண்டு இருந்தவனை தான், ஒருத்தி கண்ணாலே அவனை கைது செய்து இருந்தாள்.

அங்கு மேடையில் இவனை பற்றிய புகழாரம் சூட்டிய அந்த மனிதர், இவனை பேச அழைத்தார். மேடையில் அமர்ந்து இருந்தவன், எழுந்து சென்று மைக் அருகே சென்று நின்று, கை இரண்டையும் சேர்த்து மேலே கூப்பி எல்லோருக்கும் வணக்கம் என்று கம்பீரமாக கூறினான்.

“நான் எல்லா அரசியல்வாதிங்க மாதிரி, வாக்குறுதி எல்லாம் அள்ளி கொடுக்க மாட்டேன். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் நல்லது செய்வேன் நினைச்சா எனக்கு வோட்டு போடுங்க. நிச்சயம் என்னால முடிஞ்சதை நான் செய்வேன், உங்கள் வோட்டை எங்கள் சின்னமான கண்ணுக்கு போடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறிவிட்டு, மீண்டும் ஒரு கும்பிடு போட்டு அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்து, இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வந்த, அந்த அதிகாரியின் மேல் அவன் கண் சென்றது.

மேடையில் அடுத்து என்ன பேசினார்கள், என்று கூட அவனுக்கு தெரியவில்லை. கவனம் முழுவதும், அந்த அதிகாரியின் மீதும், அவர் என்ன செய்கிறார் என்று அவர் மீதே கவனம் இருந்தது அவனுக்கு.

கூட்டம் முடிவடையும் சமயம், அவனின் வலது கை வந்து அவன் காதருகில் ஏதோ சொல்லவும், அவனின் கவனம் முழுவதும் அடுத்து அவன் சொன்ன விஷயத்திலே இருந்தது. உடனே அந்த பிரச்சாரம் முடிந்தவுடன், எல்லோருக்கும் திரும்பவும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அவனின் பாதுகாவலர்களுடன் அவனின் ஜீப்பில் ஏறி சென்றான்.

நேராக ஊரின் எல்லை அருகே உள்ள, அவனின் குட்டி மாளிகைக்குள் அவனின் ஜீப் சென்று நின்றது. அதில் இருந்து இறங்கியவன், நேராக வீட்டிற்குள் நுழைந்து உள்ளே ஹாலில் அமர்ந்து இருந்த அந்த கூட்டத்தை பார்த்து முறைத்தான்.

“உங்களை எல்லாம், யாரு வர சொன்னா? முதல இடத்தை காலி பண்ணுங்க, இல்லை நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்” என்று அங்கு இருந்தவர்களை மிரட்டிக் கொண்டு இருந்தான்.

“டேய் உதவாக்கரை!” என்ற தந்தையின் அழைப்பில் கடுப்பாகி, அங்கே ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவரை பார்த்து முறைத்தான்.

“என்ன முறைப்பு! ஒரு காசு இந்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்க துப்பில்லை, இதுல வந்தவங்களை மரியாதை இல்லாம பேசுறது. ஐயா! என்ற மவன் அப்படித்தான், சும்மா அவன் சொல்லுறதை எல்லாம் கேட்காதீங்க”.

“வீட்டுல கொஞ்சம் செல்லம் ஜாஸ்தி, அதேன் இப்படி திரிரான். உங்க பேத்தி சிவகாமிதேன், இந்த வீட்டு மருமக. என்ற மவனுக்கு தான், இப்போ புதுசா ஆரம்பிச்சு இருக்கிற அந்த மளிகை கடை கொடுக்க போறேன், பொறுப்பா பார்த்துப்பான், நீங்க நம்பி கொடுங்க ஐயா” என்று ராமச்சந்திர மூர்த்தி பேச பேச, தந்தை ஒரு முடிவுடன் இருப்பதை பார்த்து அதிர்ந்தான்.

இதற்க்கு மேலும் தான் பேசாமல் இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்து, அங்கு தட்டு மாற்ற அவர்கள் முனையும் பொழுது நிறுத்துங்க என்று கத்தினான்.

“ஒருத்தன், எத்தனை தடவை தான் கல்யாணம் பண்ணுவான்? எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சு, டேய் அந்த போட்டோவை எல்லோருக்கும் காட்டு டா” என்று தன் வலது கை பால்பாண்டிக்கு உத்தரவிட்டான்.

அவனும் அந்த போட்டோவை எடுத்து, எல்லோருக்கும் காட்டினான். அதை பார்த்த வந்து இருந்த கூட்டத்தினர், ராமச்சந்திர மூர்த்தி கூறிய ஐயா அவர்களை பார்த்தனர். அவரின் கண்ணசைவில், எல்லோரும் சத்தமில்லாமல் சிறிது முனுமுனுப்புடன் வெளியேறினர், கூடவே அவரும் ராமச்சந்திர மூர்த்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.

ராமச்சந்திர மூர்த்திக்கு இன்னும் நம்ப முடியவில்லை, தன் மகன் திருமணம் செய்து கொண்டதை. அதுவும் யாரை ஒதுக்கி வைத்தாரோ, அவருடையை மகளை அவன் திருமணம் செய்ததை, இன்னும் நம்ப முடியாமலும் ஜீரணிக்க முடியாமலும் தளர்ந்து அமர்ந்தார்.

அதை விட, இப்பொழுது அவர் பெரிதும் மதிக்கும் அவரின் ஐயா குருமூர்த்தி முன், மகன் இப்படி அவரின் மதிப்பை இறக்கி வைத்தது அவருக்கு பெரிய அடியாக விழுந்தது மனதில்.

அவர் ஒரு பக்கம் இப்படி இருக்க, அவரின் மனையாளோ மனதிற்குள் புலம்புவதாக நினைத்து, வெளியே நன்றாக புலம்பி விட்டார்.

“ஆத்தி! அந்த ராங்கிக்காரி தான் என் மருமகளா! ஏயா ராசப்பா! உனக்கு வேற பொண்ணே, கிடைக்கலையா? இவ தான் உனக்கு கிடைச்சாளா! ஹையோ இனி நம்ம வீட்டுல, கோழி, மீனு, கறி எல்லாம் எடுக்க முடியாதா!” என்று புலம்பி தவித்தார்.

அவரின் அந்த புலம்பலை கேட்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டான் ராசப்பன்@ப்ரித்விராஜ். ஏனெனில் மறைமுகமாக, அவனின் தாய் அவனின் திருமனத்தை அங்கீகரித்தார் அல்லவா. ஆனால், அவனின் தந்தையோ, அவனை முறைத்ததோடு, மனைவியை கண்டன பார்வையும் பார்த்தார்.

“நீ இப்படி செய்து இருப்பன்னு, நான் நினைக்கல. இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, வெளியே போ” என்று உறுமினார் அவனின் தந்தை.

அவனோ ஸ்டைலாக, அங்கே போடப்பட்டு இருந்த அந்த சோபாவில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு அமர்ந்து தந்தையை கேலியாக பார்த்தான்.

“இந்த வீடு என் பெயர் ல இருக்கு, தாத்தா இதை என் பெயர் ல எழுதிக் கொடுத்து இருக்கார். உங்களுக்கு என் கூட இருக்க இஷ்டமில்லைனா, நீங்க வேணும்னா வெளியே போங்க” என்று அவரை பார்த்து கூறவும், அப்பொழுது தான் அவருக்கும் அது நியாபகம் வந்தது.

அங்கே சுவரில் மாட்டப்பட்டு இருந்த போட்டோவில், இருந்த அவரின் தந்தையை பார்த்து அவர் மானசீகமாக திட்டி தீர்த்தார் அவரை. இத்தனை வருடமாக இருந்த வீட்டை விட்டு போக, அவரின் மனது தான் இடம் கொடுக்குமா, இல்லை அவரின் கௌரவம் தான் அதை ஏற்குமா?.

தோள் மேல் இருந்த துண்டை ஒரு உதறு உதறிவிட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு இருந்து அவரின் அறைக்கு சென்றார் கோவமாக. அவர் சென்ற பின், அங்கே ராசப்பன் அருகில் வந்த வீட்டின் உறுப்பினர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்.

“ஏன் டா ராசு! நிசமா தான் சொல்லுறியா, அந்த பிள்ளையை தான் நீ கட்டிகிட்டியா? இல்லை சும்மா இந்த கல்யாணத்தை நிறுத்த, ஏதும் கதை கட்டினியா?” என்று கேட்டார் அவனின் தாய் காமாட்சி.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
இதே கேள்வி தான் அங்கு இருந்த அவனின் அண்ணன் மனதிலும், அவனின் அக்கா மனதிலும். அவனின் அக்கா இவனின் நிச்சயம் இன்று, வந்து சேர் குடும்பத்துடன் என்று ராமச்சந்திர மூர்த்தி அவர்களின் வீட்டிற்கு சென்று தெரிவித்த படியால் வந்து இருந்தாள் குடும்பத்துடன்.

ராசப்பன், எதுவும் தன்னை மீறி நடக்க வாய்ப்பு இல்லை என்ற நிச்சயத்தில் தான் அவன் இதை கண்டுகொள்ளாமல் விட்டு இருந்தான். ஆனால் அவனுக்கு வந்த செய்தி, இவன் அங்கு இல்லை என்றாலும் தந்தை நடத்தி வைக்க துணிந்து விட்டார் எனவும் தான், அவன் இங்கு வந்து தன் எதிர்ப்பை காட்டியது மட்டுமில்லாமல், அவனுக்கு திருமணமான விஷயத்தையும் போட்டு உடைத்தான்.

“நிஜமாவே, நான் அவளை தான் கட்டிகிட்டேன் மா! அவ தான் இந்த வீட்டு மருமக, அதுல எந்த மாற்றமும் இல்லை” என்று அழுத்தி நிதானமாக கூறினான்.

அதைக் கேட்ட அனைவரும், ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். அவனின் தாய் காமாட்சிக்கு, அவள் மருமகளாக வந்தது சந்தோசம் தான் என்றாலும், கணவர் இனி அடுத்து என்ன செய்வாரோ என்ற பயமும் இருந்தது.

காரணம், அவன் அத்தை மகளை அல்லவா கட்டி இருக்கிறான். இருப்பது ஐந்து வருடத்திற்கு முன்பு, ராமச்சந்திர மூர்த்தியின் தங்கை விசாலாட்சி அவர் கூடவே ஆசிரியர் பணியில் இருந்த சேஷாத்ரியை, காதல் மணம் புரிந்து இருந்தார்.

வீட்டிற்கு சொல்லாமல், அவளாகவே திருமணம் செய்தது அவளின் தந்தைக்கு சுருக்கென்று முள் குத்தியது போல், நெஞ்சு வலித்தது. அதில் படுக்கையில் படுத்தவர், பின் எழவே இல்லை. ராமச்சந்திர மூர்த்திக்கோ, தந்தையின் மரணத்திற்கு தங்கையின் திருமணம் தான் காரணம் என்று புரிந்தவர், அவரை ஊரை விட்டே தள்ளி வைத்து விட்டார்.

அதில் இரு குடும்பத்தினருக்கும், அதன் பின் பேச்சு வார்த்தையே இல்லை. காரணம் அவர்கள் திருமணம் முடிந்து, சென்னை சென்றவர்கள் இங்கே திருவிழா சமயம் மட்டும் வந்து செல்வார்கள்.

இப்பொழுது மூன்று வருடத்திற்கு முன்பு தான், அவர்கள் இங்கு வந்ததே. வீட்டினருக்கு தெரியாமல், காமாட்சியும், விசாலாட்சியும் வெளியில் அவ்வப்பொழுது சந்தித்துக் கொள்வார்கள்.

குடும்பத்தினர் என்ற அடையாளத்தை தாண்டி, இருவரும் சிறு வயது தோழிகள். ஆகையால் தான், வீட்டினருக்கு தெரியாமல் இப்பொழுதும் அரட்டை அடித்தும், தங்களின் குல கொழுந்துகளை பற்றி புகழ்ந்து பேசுவதும் நடந்து கொண்டு இருக்கிறது.

காமாட்சிக்கு, இப்பொழுது ஒன்று புரிந்தது, அங்கே சம்யுக்தாவும் பெற்றவர்களிடம் இன்னும் திருமணமான தகவலை தெரிவிக்கவில்லை என்று. தாயிடம் மட்டுமாவது அவள் தெரிவித்து இருந்தால், இந்நேரம் இவருக்கும் தெரிந்து இருக்கும்.

இவர்கள் இருவரும் ஏன் திருமணம் செய்த பிறகும், யாருக்கும் சொல்லாமல் தனியே இருக்கிறார்கள் என்ற கேள்வி இப்பொழுது அவர் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

“டேய்! அவ நம்ம அத்தை பொண்ணுன்னு, தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டியா?” என்று கேட்டார் அவனின் அக்கா கோதை.

“ஆமா! நான் தெரிஞ்சு தான் பண்ணிகிட்டேன், இதுக்கு மேல யாரும் என் கிட்ட எதுவும் கேட்காதீங்க!” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து எழுந்து, மேலே இருக்கும் அவனின் அறைக்கு சென்றான்.

மேலே அவனின் அறைக்கு வந்தவன், கதவை சாற்றிவிட்டு அந்த அறையின் ஜன்னல் கதவுகளை திறந்தவன், உள்ளே வந்த சூரிய வெளிச்சமும் அதன் சூடும் அவன் மனதை போல் தகித்தது.

அறையில் காற்றாடியை ஓட விட்டவன், கட்டிலில் படுத்துக் கொண்டே அன்று நடந்ததை நினைத்து பார்த்தான். அதற்குள் அவனின் செல் ஒலி எழுப்ப, எரிச்சலோடு எடுத்து யாரென்று பார்த்தான். அதில் அவனின் வலது கை பால்பாண்டி எண் வரவும், எடுத்து என்னவென்று கேட்டான்.

அந்த பக்கம் என்ன கூறினானோ, தான் வருவதாக கூறிவிட்டு, கட்டிலில் இருந்து இறங்கி தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கதை திறந்து கொண்டு புயல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறி, அங்கே இருந்த அவனின் ஜீப்பை எடுத்துக் கொண்டு நேராக சிவகாசி தெற்க்கே உள்ள காவல் நிலையத்திற்கு வண்டியை விரட்டினான்.

காவல் நிலையம் முன் வண்டியை நிறுத்தியவன், புயலாக உள்ளே நுழைந்து சென்று அந்த கான்ஸ்டபிளை பார்த்து உறுமினான்.

“யோவ் கூப்பிடு யா உங்க இன்ஸ்பெக்டரை, என்ன நினைச்சுகிட்டு என் ஆள் ஒருத்தனை கைது பண்ணி இருக்கான். இப்போவே அவனை வெளியே விட சொல்லு, இல்லை அப்புறம் என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது” என்று கத்திவிட்டு, அங்கு போட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

அவன் வந்து பத்து நிமிடமாகியும் யாரும் வராததால், அவன் அங்கு இருந்த தன் வலது கைக்கு கண் காட்டினான். அவனின் ஒவ்வொரு அசைவையும், செய்கையையும் புரிந்து வைத்து இருந்த பால்பாண்டி, தங்கள் ஆட்களை வைத்து அந்த காவல் நிலையத்தையே அடித்து நொறுக்க செய்தான்.

அங்கு நடந்த இந்த கலவரத்தில், அங்கு இருந்த கான்ஸ்டபிள்களால் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை. அவனை பற்றியும் நன்கு தெரியும், அந்த நபரை கைது செய்து கூட்டிக் கொண்டு வந்த அசிஸ்டென்ட் கமிஷ்னர் பற்றியும் தெரியும்.

“என்ன நடக்க போகுதோ இன்னைக்கு, அவனை வெளியே விடல அப்படினா, இவர் இப்போ மாதிரி ஏதாவது செய்துடுவார். வெளியே விட்டா, நம்ம ஏசி கிட்ட வசவு வாங்குவோம். என்ன பொழப்பு டா இது?” என்று நொந்து கொண்டு இருந்தனர் அங்கு நின்று கொண்டு இருந்த கான்ஸ்டபிள்கள்.

அங்கே அப்பொழுது சைரன் ஒலியுடன் வந்த போலீஸ் வாகனம் ஒன்று, அங்கே வந்து கம்பீரமாக நின்றது. அதில் இருந்து இறங்கிய அசிஸ்டென்ட் கமிஷ்னர், நன்றாக பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் உள்ளே வந்தார்.

அவரை பார்த்து, சல்யூட் அடித்து நின்ற pcகளை பார்த்து ஒரு பார்வை பார்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். அங்கே அமர்ந்து இருந்தவனை கண்டுகொள்ளாமல், ஸ்டேஷனை சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு உள்ளே அவரின் அறைக்குள் சென்றார்.

இங்கே இவனோ, இதை பார்த்து கடுப்பின் உச்சிக்கே சென்றான். நேராக கதவை தட்டாமல், உள்ளே அவரின் அறைக்கு சென்றவன் கோபத்தில் கத்திக் கொண்டு இருந்தான் அவரிடம்.

“ஸ்ஸ்.. கொஞ்சம் மெதுவா பேசுங்க, எனக்கு காத்து கேட்கும். அப்புறம் நான் உங்களை வர சொல்லலையே, எதுக்கு வந்தீங்க இங்க?” என்று கேள்வி எழுப்பவும் பொங்கி விட்டான்.

“என் ஆள் ஒருத்தனை, எதுக்கு நீங்க தேவை இல்லாம கைது பண்ணீங்க?அவன் எந்த தப்பு பண்ணான் அப்படி?சும்மா தேவை இல்லாம என்னை சீண்ட, இப்படி நீங்க பண்ணுறது சரி இல்லை சொல்லிட்டேன் ஆமா” என்று கையை ஓங்கி அங்கு இருந்த டேபிளில் குத்தி, கோபத்தை வெளிப்படுத்தினான்.

“உங்க பொண்டாட்டி கையை ஒருத்தன் பிடிச்சு இழுத்து, அவளை வம்பு பண்ணா என்ன செய்வீங்க?” என்று நிதானமாக கேட்கவும் அதுவரை இருந்த அவனின் மனநிலை, சட்டென்று மாறியது.

“அவன் உன்னை வம்பு பண்ணானா யுக்தா?” என்று இப்பொழுது கை முஷ்டி இறுக, அங்கே அசிஸ்டென்ட் கமிஷனராக இருந்த அவனின் மனைவி சம்யுக்தா தேவியிடம் கேட்டான் ராசப்பன்@ப்ரித்விராஜ்.

வருவாள்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் அக்கா..
சூப்பர் சூப்பர் எபி... டேய் உதவாக்கரை செம பேரு :LOL::LOL::LOL:... ஆஹ் :oops::oops: அவன் மனைவி போலீஸ்ஆ ;);)..சூப்பர்..நெஸ்ட் எபி எப்போ??
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் அக்கா..
சூப்பர் சூப்பர் எபி... டேய் உதவாக்கரை செம பேரு :LOL::LOL::LOL:... ஆஹ் :oops::oops: அவன் மனைவி போலீஸ்ஆ ;);)..சூப்பர்..நெஸ்ட் எபி எப்போ??
Hi shanthini thanks a lot da..
Naalaikku precap
Adutha naal epi..
Keep supporting da..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top