• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En kaathal kannalagi epi 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
வணக்கம் மக்களே, இதோ இரண்டாம் பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துகளை எனக்கு தெரிவியுங்கள் ..

அத்தியாயம் – 2

இரவு ஒன்பது மணி அளவில், வீட்டிற்கு வந்த மகளை பார்த்து பெருமூச்சு விட்டனர் அவளை பெற்றவர்கள். இந்த பணியில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, அவளின் பெற்றவர்கள் இந்த வேலை வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும், அவள் தன் பிடியில் இருந்து இறங்காமல் இது தன்னுடைய லட்சியம் என்று கூறி, இதற்க்கு மேல் எதுவும் கூறாதீர்கள் என்று விட்டாள்.

விசாலாட்சியும் சரி, சேஷாத்ரியும் சரி இருவரும் இருக்கும் இடம் தெரியாமல் அவ்வ்வளவு அமைதியாக இருப்பர். ஆனால் அவர்களின் மகள், அவள் இருக்கும் இடத்தை எட்டு ஊருக்கு தெரியும்படி செய்துவிடுவாள். அவள் தான் நம் கதையின் நாயகி சம்யுக்தா தேவி.

“இவ ஒவ்வொரு நாளும், எப்போ வீட்டுக்கு வந்து சேருவான்னு நாம பயந்துகிட்டே இருக்கோம். இவ நம்ம பயத்தை புரிஞ்சிக்காம, இப்படி இருக்காளேங்க” என்று புலம்பிக் கொண்டு இருந்தார் விசாலாட்சி.

“சாலா! அவ என்ன சின்ன குழந்தையா? நல்லது, கெட்டது எல்லாம் அவளுக்கும் தெரியும் தானே! நம்ம பயமும் அவளுக்கு தெரியும், அதனால தான் அவ போன் பேசி வர இவ்வளவு நேரமாகும்ன்னு சொல்லிடுறா”.

“நம்ம வேலை அவளுக்கு பொருத்தமா, ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறது தான் இப்போ. நாமளும் தேடிகிட்டு தான் இருக்கோம், சீக்கிரமே ஒரு நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிட வேண்டியது தான்” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடை அணிந்து கீழே இறங்கி வந்தாள் சம்யுக்தா.

அவர்கள் பேசியது அனைத்தும், அவள் காதுகளிலும் விழுந்தது. தனக்கு திருமணமானதை, இனியும் மறைக்க பிடிக்காமல் அவர்களிடம் சொல்ல எத்தனித்தாள். அதற்குள், அவளின் தந்தை, எது பேசுவது என்றாலும் சாப்பிட்டு முடித்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டார்.

எப்பொழுதும் அவர்களின் வீட்டில் இரவு உணவு, எட்டு மணிக்கு எல்லாம் முடித்து விட்டு, ஒன்பது மணிக்கு எல்லாம் உறங்க சென்று விடுவர். ஆனால், எப்பொழுது இவள் இந்த போலீஸ் வேலையில் சேர போகிறேன் என்று கூறி சென்றாளோ, அப்பொழுதே எல்லாம் மாறிவிட்டு இருந்தது.

சாப்பிட்டு முடித்துவிட்டு, தாய்க்கு உதவியாக கிட்செனில் ஒதுக்கி கொடுத்துவிட்டு மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தாள். அங்கே ஏற்கனவே, அவளின் தந்தை இவள் என்ன கூற போகிறாள் என்று தெரிந்து கொள்ள, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தார்.

தாய், தந்தையை மனம் வருந்த செய்ய போகிறோம் என்று தெரிந்தாலும், எதற்காக அவள் அன்று அவனை திருமணம் செய்து கொண்டாள் என்று யாரிடமும் கூற அவள் விரும்பவில்லை, ராசப்பன் உள்ளிட்டு.

“அப்பா, அம்மா முதல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற ஐடியாவை ட்ராப் பண்ணுங்க. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, மாமா பையன் ராசப்பன் கூட” என்று அலுங்காமல் குண்டை தூக்கி போட்டாள்.

அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம், மகிழ்ச்சி ஒரு பக்கம். ஆம் மகிழ்ச்சி தான், சேஷாத்ரி அநாதை இல்லத்தில் வளர்ந்தவர். அவருக்கு சிறு வயதில் இருந்தே, ஒரு பெரிய குடும்ப சூழலில் இருக்க ஆசை உண்டு.

விசாலாட்சியை பிடித்ததற்கு ஒரு காரணம், அவரின் குணம் ஒன்றும், அவளின் குடும்பமும் தான். தானும் அக்குடும்பத்தில் ஒரு அங்கத்தினாராக வேண்டும், என்ற ஆசை மலையளவு இருந்தது.

அது எல்லாம் திருமணம் முடிந்து, விசாலாட்சியின் தந்தை இறந்த பிறகு, அவளின் அண்ணன் அவளையும், தன்னையும் அக்குடும்பத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டார். அப்பொழுது மனது வலித்தாலும், தன்னை விட மனைவியின் வலி அதிகம் என்பதை உணர்ந்தவர், அவரை அதன் பின் அழைத்துக் கொண்டு சென்றது சென்னைக்கு தான்.

மனைவியை எவ்வளவு தான் தாங்கினாலும், அவருக்கும் தாய் வீட்டு நினைப்பு என்று ஒன்று உண்டு அல்லவா. அதற்காகவே, திருவிழா சமயத்தில் ஊரில் சேஷாத்ரி வாங்கிய ஒரு வீட்டில் தான் வந்து குடும்பத்துடன் தங்குவர்.

அந்த சமயத்தில் தான், தள்ளி நின்று கொண்டு விசாலாட்சி தன் அண்ணன் குடும்பத்தினரை பார்த்துக் கொள்வார். தந்தை இறந்த அதிர்ச்சியில், தாயும் அடுத்து உடனே இறக்கவும், அவரை குற்ற உணர்ச்சி முள்ளாக குத்தி கிழித்தது.

“நான் பாவி! இரண்டு பேரையும் கொன்னுட்டேனே!” என்று புலம்பிய விசாலாட்சியை, சமாதானப்படுத்த சேஷாத்ரி திணறி போய் விடுவார்.

சில நாட்கள் இப்படி புலம்பிக் கொண்டு இருந்தவரை, சேஷாத்ரி ஒரு அதட்டல் போட்டார்.

“இப்படி அழுது புலம்பினா, அவங்க உனக்கு திரும்ப கிடைச்சிடுவாங்களா? இல்லை ல, அப்புறம் ஏன் புலம்புற?” என்று அதட்டினார்.

முதல் முறையாக அவரின் அதட்டலில், அவர் முழித்தார். அதை பார்த்த சேஷாத்ரிக்கு, தன்னை கட்டுபடுத்த முடியவில்லை. உடனே, அவரை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டார்.

“இங்க நான், உன்னை பத்தி மட்டும் நினைச்சிக்கிட்டு இருக்கேன் சாலா. கொஞ்சம் நீ என்னையும் புரிஞ்சிக்கோ டா, எத்தனை நாள் நான் இப்படி கையை கட்டி வேடிக்கை பார்க்கிறது?” என்று அவர் கூறவும், நிதர்சனம் புரிய விசாலாட்சி அதன் பின் தெளிந்தார்.

சேஷாத்ரி அதன் பின் தன் அன்பால், அவரை மாற்றி தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தார். அதன் பின் சம்யுக்தாவை கருவில் சுமக்கும் பொழுது தான், அவருக்கு தாய் வீடு நியாகம் வந்தது.

அப்பொழுது, அதை பார்த்த சேஷாத்ரிக்கு வருத்தம் இருந்தாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல், அவருக்கு வேண்டியது எல்லாவற்றையும் அவரே அவருக்கு செய்து வந்தார். அதன் பின் சம்யுக்தா பிறந்த பிறகு, விசாலாட்சி கோவில் திருவிழாவிற்கு அவளுக்கு ஐந்து வயதாகிய பின் தான் அழைத்து வந்தார்.

கூட்டத்தில், யாருமறியாமல் சேஷாத்ரியும், விசாலாட்சியும் அவளின் அண்ணன் குடும்பத்தினை பார்த்து விட்டு செல்வர். இப்பொழுது மகளின் புகுந்த வீடு அது, என்று தெரிந்த பின் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.

“ஏன் சம்யு? நாங்க ஏதும், உன்னை கஷ்டப்படுத்துறோமா?எங்க கிட்ட சொல்லனும்ன்னு தோணலையா உனக்கு?” என்று அவள் இதைப் பற்றி சொல்லவில்லையே தங்களிடம் என்ற ஆதங்கத்தில் கேட்டார் விசாலாட்சி.

“அம்மா! சொல்லணும் தான் நினைச்சேன், பட் சொல்லனும்னா எல்லாமே சொல்லணும், இப்போ வரைக்கும் நான் ஏன் அவனை கல்யாணம் பண்ணேன்னு அவன் கிட்ட கூட சொல்லல”.

“ப்ளீஸ்! இப்போதைக்கு என் கிட்ட எதுவும் கேட்காதீங்க. நான் கண்டிப்பா எல்லா விஷயமும் சொல்லுறேன், ஆனா இப்போ இல்லை” என்று கூறிவிட்டு, மாடியில் இருக்கும் அவளின் அறைக்கு சென்றாள்.

மாடியில் அறை கட்ட, விருப்பம் இல்லாமல் இருந்தது அவளின் தந்தைக்கு. ஆனால் மகளோ தனக்கு மாடியில் தான் அறை வேண்டும் என்று அழுத்தமாக கூறி, தனக்கு பிடித்த விதத்தில் கட்டி அமைத்துக் கொண்டாள்.

தன் அறைக்கு வந்தவள், கதவை சாற்றிவிட்டு அங்கு இருந்த ஜன்னலை திறந்து வைத்துவிட்டு, காற்றுடன் சேர்ந்து நிலா வெளிச்சத்தை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் கண் அதை ரசிக்க, மனமோ கட்டியவனை கரித்துக் கொண்டு இருந்தது. காலையில் அவன் ஸ்டேஷனில் அடித்த கூத்தை நினைத்து, இப்பொழுதும் பல்லைக் கடித்தாள்.

“அவன், உன்னை வம்பு பண்ணானா யுக்தா?” என்று கை முஷ்டி இறுக கேட்டவனை பார்த்து, அவள் இல்லை என்று தலையை இடமும் வலமும் ஆட்டினாள்.

அதன் பிறகு அவன் சற்று கோபத்தை குறைத்து இருந்தாலும், எதற்காக அவள் அவனை கைது செய்து இருக்கிறாள் என்று தெரியாமல் அவளை பார்த்து முறைத்தான்.

அவனின் கோபம் தன்னை ஒன்றும் செய்யாது என்பது போல், அவள் கெத்தாக அமர்ந்து இருந்தாள். அதில் அவன் கோபம் மேலும் அதிகரித்து, அவன் பற்கள் உடையும் அபாயம் ஏற்பட்டது.

இன்னும் காரணம் சொல்லவில்லை என்றால், அவன் இன்னும் ஏதாவது கிறுக்குத்தனம் செய்வான் என்று எண்ணி, அவனை கைது செய்த காரணத்தை கூறினாள்.

“ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்து கிட்டவனை, உள்ள தூக்கி போடாம வேற என்ன செய்ய சொல்லுறீங்க?” என்று நிதானமாக அவனை பார்த்து கேட்கவும், அவன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் கைது செய்து இருந்தவனை நோக்கி சென்றான்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அந்த செல் அறையை திறக்க சொல்லுமாறு அவன் கேட்கவும், அவள் கண்களால் அங்கு இருந்த pc க்கு ஜாடை காட்டினாள், திறந்து விட கூறி. அவரோ, இன்னும் தங்களின் மேல் அதிகாரி பற்றி எதுவும் சரியாக தெரியாததால், அவள் சொன்னதை செய்தார்.

கதவை திறந்து விட்ட அடுத்த நொடி, ராசப்பன் உள்ளே இருந்தவனை ஓங்கி அடித்தான்.

“பொண்ணுங்க மேல கை வைக்குற நீ, கை இல்லாம பண்ணிடுவேன் ஜாக்கிரதை! இனி நீ என்கிட்டே வேலை பார்க்க வராத”.

“டேய்! இவனுக்கு பைசா கொடுத்து அனுப்பிடு, அப்படியே ஸ்டேஷன் சரி செய்திடு” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று ஜீப்பில் ஏறி சென்று விட்டான்.

அவன் தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் சென்றது, அந்த நிமிடத்தில் இருந்து இப்பொழுது வரை அவள் மனதிற்குள் கோபம், கோபம் மட்டுமே. அவனை அவளுக்கு பிடித்து இருந்தாலும், அவனுடன் இப்பொழுது வரை சேர்ந்து வாழ ஏதோ ஒன்று அவள் மனதை அரித்துக் கொண்டு இருக்கிறது.

தூக்கம் கண்ணை கட்ட, கதவு நன்றாக சாத்தி இறக்கிறதா என்று பார்த்துவிட்டு, ஜன்னலையும் சிறிதளவு மட்டும் திறந்து வைத்துவிட்டு, கட்டிலில் படுத்து விட்டாள்.

மறுநாள் முக்கியமான கைதி ஒன்றை கைது செய்து, விசாரிக்க வேண்டி இருப்பதால், அவள் போலீஸ் உடை அணிந்து செல்லாமல், சாதாரண சுடி ஒன்றை அணிந்து கொண்டு கிளம்பி இருந்தாள். கீழே வந்தவளை, அவள் அன்னை சாப்பிட அழைக்கவும், வேகமாக அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.

அவளிடம் கேட்க சில விஷயங்கள் இருந்தாலும், வேலைக்கு கிளம்பும் நேரத்தில் எதுவும் கேட்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அவளின் தந்தைக்கு, எதையும் தள்ளி போடாத பழக்கம் என்பதால் அவளிடம் கேட்க தொடங்கினார்.

“அவங்க வீட்டுக்கு, உங்க ரெண்டு பேர் கல்யாணம் பற்றி தெரியுமா சம்யு?” என்று தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற எண்ணத்தில், அவளிடம் கேட்டு விட்டார் சேஷாத்ரி.

“தெரியல அப்பா! சொல்லி இருந்தாலும், மாமா அப்படியே சந்தோஷமா இங்க வந்து பேசுவார்ன்னு தோனல. இன்னும் கோபமா தான் இருக்கார்ன்னு தெரியும், ஆனா சீக்கிரம் அவங்களே வருவாங்க பா” என்று கூறி கை கழுவிவிட்டு, அவள் அங்கு இருந்து சென்றாள்.

எந்த ஒரு உணர்ச்சியையும் வெளி காட்டாமல், செல்லும் மகளையே பார்த்து இருந்தனர் பெற்றவர்கள். அந்த பாழடைந்த வீட்டில் மறைந்து இருந்த அந்த ரவுடியை, இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபில் பிடித்து இழுத்து வந்து ஜெயிலில் அடைத்தனர்.

“யோவ் இன்சி! இன்னாயா, நான் யார்ன்னு தெரியாம என் மேல கை வச்சிட்ட, இது நல்லதுக்கு இல்லை. என் அண்ணாத்தை வந்தார்ன்னா, நீ காலி” என்று மிரட்டினான்.

“சும்மா சவுண்ட் விடாத டா! எங்க மேலதிகாரி இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க, அங்க வேணும்னா நீ சவுண்ட் விட்டுக்க” என்று கூறிவிட்டு சென்றார்.

கைதான ரவுடி பாலு, அங்கே குட்டி போட்ட பூனை போல் அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டு இருந்தான், அந்த செல்லில். அப்பொழுது வெளியே பலத்த சத்தம் கேட்கவும், தன் அண்ணன் தான் வந்து விட்டானோ என்று எட்டி பார்த்தான்.

ஆனால் அங்கே ஒரு பெண் கைதியிடம், அந்த இன்ஸ்பெக்டர் மாட்டிக் கொண்டு முழித்து கொண்டு இருந்தார். அதற்குள் ஒரு லேடி கான்ஸ்டபில், அந்த கைதியை தள்ளிக் கொண்டு இவன் இருந்த பக்கத்து செல்லில் தூக்கி உள்ளே வைத்து பூட்டி விட்டார்.

“இன்னா நினைச்சிகிட்டு இருக்கீங்கோ! நான் யார் தெரியுமா? என் மேலையே கை வச்சுட்டீங்க ல, உங்களை சும்மா விட மாட்டேன்” என்று அந்த பெண் கைதி கத்திக் கொண்டு இருந்தாள்.

அந்த ரவுடி பாலுவிற்கு, அவள் யார் எதுக்காக அவளை கைது செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், பேசும் மொழி அவன் மொழி சென்னை ராயப்பேட்டை மொழி. ஆகையால், அவளிடம் பேச்சுக் கொடுக்க எண்ணினான்.

எப்படி பேசுவது என்று தான் புரியவில்லை, அவனுக்கு. அதற்குள் அவன் இருந்த அறையில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று கவனித்தான். நன்றாக சத்தம் வந்த திக்கை நோக்கி செல்கையில், அங்கே ஒரு இடத்தில் இருந்த செங்கல் பெயர்ப்பு அவனை வரவேற்றது.

அங்கே சென்று பார்த்தால், பக்கத்து அறையில் இருந்த அந்த பெண் கைதி தான் இவனை அழைத்து இருந்தாள்.

“அண்ணாத்தை! தம் அடிக்கணும், தம் இருக்கா?” என்று கேட்டவளை பார்த்து அதிர்ந்தான்.

அவன் பார்த்த வரை, எந்த பெண்ணும் பீடி, சிகரட் என்று யாரும் அடித்தது இல்லை. இப்பொழுது, இந்த பெண்ணோ, சர்வ சாதரணமாக தன்னிடம் தம் இருக்கா என்று கேட்கவும் ஆடி போனான்.

“இந்தா பாரு தங்கச்சி! இது நல்லதுக்கு இல்லை ஆமா, பொம்பளை பிள்ளை எல்லாம் தம் அடிக்க கூடாது, அது நல்லதுக்கு இல்லை. ஆமா நீ யார் தங்கச்சி, உன்னை எதுக்கு இந்த போலீஸ் கைது பண்ணி இருக்காங்கோ?” என்று விசாரித்தான்.

“எனக்கு எது நல்லதுன்னு தெரியும், இருக்கா இல்லையா? அதை மட்டும் சொல்லு. இன்னொரு தபா என் கிட்ட இப்படி பேசாத, இப்போ தான் ஒருத்தனை போட்டு தள்ளிட்டு வந்து இருக்கேன் பார்த்துக்க” என்று அவள் கூறியதை கேட்டு மேலும் அதிர்ந்தான்.

“இன்னா இருக்கா, இல்லையா உன் கிட்ட?” என்று அவன் அதிர்ந்ததை கண்டு கொள்ளாமல் கேட்கவும், வேகமாக அவன் தலை இல்லை என்று ஆடியது.

“ஆமா, இன்னாத்துக்கு அவனை போட்ட தங்கச்சி? என்ன பண்ணான் அவன்?” என்று சிறிது தெளிந்து கேட்டான்.

“கால் வலிக்கு, கீழே இருக்கிற செங்கலை எடுக்க முடியுமான்னு பாரு அண்ணாத்தை, உட்காந்துட்டு பேசலாம்” எனவும், அவன் கீழே இருக்கிற செங்கலை கஷ்டப்பட்டு பெயர்த்தான்.

இவர்கள் அடித்த கூத்தை எல்லாம், வெளியே நின்று பார்த்த அந்த pcக்கு பயம் அதிகரித்துகுக் கொண்டே இருந்தது. எப்பொழுது வேண்டும் என்றாலும், ஏசி வர வாய்ப்பு இருக்கு. இவர்கள் இப்படி இருப்பதை பார்த்தால், அடுத்து என்ன நடக்குமோ என்று பயந்தார்.

“தங்கச்சி! உன்னை பார்த்தா, நல்லா படிச்ச பொண்ணு மாதிரி இருக்குற. ஏன் அவனை நீ போட்ட தங்கச்சி? எங்க காசி அண்ணாத்தை கிட்ட சொன்னா, அவரே யாரையாவது விட்டு முடிச்சு இருப்பாரே” என்றான் அவன்.

“அவன் ஒரு சின்ன பொன்னை, பலவந்தப்படுத்த பார்த்தான். அதான், அந்த பிள்ளையை காப்பாத்த அவனை நான் போட வேண்டியதா போச்சு அண்ணாத்தை. ஆமா, நீ எதுக்கு உள்ள வந்த அண்ணாத்தை?” என்று அவனை பார்த்து கேட்டாள்.

“அதுவா தங்கச்சி! நாங்க போதை மருந்து கொடுக்கிறோம் தங்கச்சி, இந்த காலேஜ் பிள்ளைகளுக்கு. அவிங்களும் அது தெரிஞ்சு தான் வாங்குறாங்க, ஆனா நாங்க ஏதோ கெடுக்கிறோம்ன்னு எங்களை உள்ள போட பார்த்தான், அங்க உள்ள ஏசி”.

“விடுவோமா நாங்க! அந்த ஏசியை எங்க அண்ணாத்தை போட்டு தள்ளிட்டாரு ல. ஒரு தபா சொல்லி பார்த்தோம் தங்கச்சி, அந்த ஏசி கிட்ட அவன் சும்மா எங்க அண்ணாத்தை கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருந்தானா, அதான் ஒரே குத்து போய் சேர்ந்துட்டான் அந்த ஏசி”.

“அதை இப்போ நோண்டி எடுத்துகிட்டு இருக்கானாம், இன்னொரு ஏசி. அதான் நாங்க எல்லாம் ஒவ்வொரு இடத்துல, தலைமறைவா இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க அண்ணாத்தை, அந்த வக்கீல் கூட வருவாரு தங்கச்சி”.

“அப்போ உன்னை பத்தி அவர் கிட்ட சொல்லி, உன்னை நான் வெளியே எப்படியாவது எடுத்துடுறேன். என்ன தங்கச்சி! என் கிட்ட ஏதாவது கேட்கணுமா?” என்றான்.

“ஆமா அண்ணாத்தை, இந்த போதை மருந்து உயிரை எடுக்கிற விஷம் தான. அதை ஏன் காலேஜ் பிள்ளைகளுக்கு கொடுக்குறீங்க?” என்று கேட்டாள்.

“சில அரசியல்வாதிங்க கூட, எங்க அண்ணாத்தை இருக்கார் தங்கச்சி. அவிங்க கொடுக்கிற பணத்துல தான், நாங்க தொழில் நடத்துறோம். இதுவுமே, அவிங்க சொன்னதால தான் என் கூட்டாளிங்க எல்லாம் சேர்ந்து இதை செய்றோம்” என்று கூறினான்.

அதன் பிறகு மேலும் சில விஷயங்கள் பேசி, அவனிடம் சில பல விஷயங்களை தெரிந்து கொண்டாள். சிறிது நேரத்தில், உள்ளே இருந்து சத்தம் கொடுத்தாள், ஏகாம்பரம் அண்ணா என்று.

கதவை பட்டென்று திறந்தார், அந்த கான்ஸ்டபில் ஏகாம்பரம். உள்ளே இருந்து கம்பீரமாக வெளியே வந்தாள், சம்யுக்தா தேவி.

“நான் சொன்ன வேலை எல்லாம், பக்காவா முடிச்சிடீன்களா? இன்ஸ்பெக்டர், இன்ணைக்கு நைட் இங்க ட்யூட்டிக்கு கேசவனை வர சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு அங்கே அதிர்ந்த தோற்றத்தோடு, நின்று கொண்டு இருந்த ரவுடி பாலுவை பார்த்து முறைத்துவிட்டு, நேராக வீட்டிற்கு சென்றாள்.

மதியம் இரண்டு மணி போல் வீட்டிற்க்கு வந்த மகளை, சாப்பிட அழைத்தார் விசாலாட்சி. அவளோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு, மேலே அவளின் அறைக்கு சென்று மீண்டும் ஒரு குளியலை போட்டுவிட்டு, கம்பீரமாக காக்கி சட்டை அணிந்து வந்தாள்.

தாயிடம் இரண்டு நாள் கழித்து தான் திரும்ப முடியும், கேஸ் விஷயமாக வெளியே செல்வதால் கையில் சிறு பையில் அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வந்து இறங்கினாள்.

“இந்தா பொண்ணு, இன்னா இது. நம்பி தான உன்னாண்ட பேசினேன், இப்படி கழுத்து அறுத்துடியே. நீ நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போவ” என்று அவளை பிடித்து காய்ச்சி எடுத்தான்.

“இன்னா துள்ளிக்கிட்டு இருக்குற? செஞ்சது எல்லாம் தப்பு, இதுல பெருமை வேற? உங்க அண்ணாத்தை பத்தி உனக்கு முழுசா தெரியல, அவன் ஜாதகம் அம்புட்டும் என் கைல”.

“சிக்கினான் என் கைல, என்கௌன்ட்டர் தான் அவனுக்கு. உன் நொண்ணன் ஒன்னும் உன்னை ஜாமீன் எடுக்க மாட்டான், அவனை பொருத்தவரைக்கும் அவன் மாட்டாம இருக்கணும்”.

“இன்னொரு தபா, இப்படி நொண்ணன்னு துள்ளின, அப்புறம் நான் என்ன செய்வேன்னு உனக்கே இப்போ தெரிஞ்சு இருக்கும்” என்று அவனை மிரட்டிவிட்டு, அங்கே அவள் இவர்கள் நடத்திய சம்பாஷனை அடங்கிய வீடியோ, மற்றும் ஆடியோ பைல் எல்லாம் எடுத்துக் கொண்டு, முதலில் கமிஷனர் ஆபிஸ் சென்றாள்.

அங்கே ஏற்கனவே, அந்த கைதி பாலு சொன்ன அவனின் காசி அண்ணன் அங்கே அமர்ந்து இருந்தான் தெனாவட்டாக.

வருவாள்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமா தீபக் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா தீபக் டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
asathal samyu(y)(y)(y)(y)(y)nice epi sis:):):):):)kasi annan ivaluku munnadiye commisioner office vanthacha.............. interesting:):):):)rasappavai kanom sis
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
asathal samyu(y)(y)(y)(y)(y)nice epi sis:):):):):)kasi annan ivaluku munnadiye commisioner office vanthacha.............. interesting:):):):)rasappavai kanom sis
Hi sridevi thanks a lot da..
Ha ha aduthu varuvaar da..
Keep supporting da.?❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top