• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love::love:
IMG_20181226_232310.pngimages.jpeg

காலையில் கண் விழித்த வெண்ணிலா சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டாள்.


புதிய இடமாக இருப்பதை போல இருக்கவும் சட்டென்று எழுந்து அமர்ந்த வெண்ணிலா அப்போது தான் தன் அருகில் தூங்கி கொண்டிருந்த சூர்யாவை பார்த்தாள்.


வெண்ணிலாவின் கைகள் தன்னிச்சையாக அவள் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை வருட சொல்லிலடங்கா வேதனை அவளை ஆட்கொண்டது.


கண்கள் கலங்க அவனைப் பார்த்து கொண்டிருந்தவள் சூர்யா சிறிது அசைவது போல இருக்கவும் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.


குளித்து முடித்து வெண்ணிலா வெளியே வரவும் சூர்யா கட்டிலில் எழுந்து அமரவும் சரியாக இருந்தது.


வெண்ணிலா, சூர்யா இருவரது பார்வையும் ஒன்றாக சந்திக்க ஒரு இனம் புரியாத கனத்த அமைதி அங்கே நிலவியது.


சூர்யாவின் கண்கள் வெண்ணிலாவை காதலோடு பார்க்க வெண்ணிலாவோ உணர்ச்சிகள் அற்ற ஒரு வெற்றுப் பார்வையை அவன் மேல் செலுத்தினாள்.


ஒரு சில நிமிடங்கள் நடந்த இந்த மெளன பாஷையை வெண்ணிலா முடித்து வைக்கும் முகமாக வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி செல்ல சூர்யாவோ வெண்ணிலாவின் மன நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனான்.


கீழே ஹாலுக்கு வந்த வெண்ணிலா மகாலட்சுமியை காணவும் அவரருகில் சென்று நின்றாள்.


"வாடா நிலா.....நீ எந்திரிக்க லேட் ஆகுமோ தெரியாதுனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்.....நீயே வந்துட்ட.....காபி எதுவும் போட்டு தரவா????" என்று மகாலட்சுமி கேட்கவும்


"அய்யோ ஆன்டி......நீங்க சும்மா உட்காருங்க.....காபி வேணும்னா நான் போட்டு எடுத்துக்க மாட்டேனா என்ன???? இருந்தாலும் நீங்க என்ன இவ்வளவு சோம்பேறியா மாற்ற பார்க்காதீங்க....." என்று வெண்ணிலா சிரித்துக்கொண்டே கூற


மேலே சூர்யா அவர்கள் அறையில் இருந்து
"நிலா.....நிலா...." என்று சத்தமிட்டான்.


மகாலட்சுமி மற்றும் பெருமாள் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொள்ள வெண்ணிலாவோ கடுப்பாக சூர்யாவின் சத்தம் கேட்ட பக்கத்தை பார்த்து கொண்டு நின்றாள்.


வெண்ணிலாவின் அருகில் வந்து அவள் தோள் தொட்ட மகாலட்சுமி
"போம்மா போய் என்ன ஆச்சுன்னு பாரு.....நான் போய் இரண்டு பேருக்கும் காபி அனுப்பி வைக்குறேன்....." என்று கூறவும்
சரியென்று தலை அசைத்து விட்டு படியேறி சென்றாள் வெண்ணிலா.


கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவர்கள் அறைக்குள் நுழைந்த வெண்ணிலா சூர்யாவை நிமிர்ந்தும் பார்க்காமல்
"எதுக்கு கூப்பிட்ட????" என்று கேட்கவும் எதுவும் பேசாமல் நின்றான் சூர்யா.


ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேலாக எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவும் வெண்ணிலா யோசனையோடு நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கு அவளை விட்டு பத்து அடி தள்ளி நின்று கொண்டு சூர்யா கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு நிற்க வெண்ணிலா தயக்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டாள்.


சூர்யா அமைதியாக நின்ற வெண்ணிலாவை நெருங்கி வர வர வெண்ணிலா ஓரிரு அடிகள் பின் வாங்கி நடந்தாள்.


அறை கதவு திறந்து இருப்பதை உறுதி செய்து கொண்ட வெண்ணிலா சட்டென்று அறையை விட்டு வெளியே செல்ல பார்க்க வேகமாக அவள் முன்னால் தடுப்பு சுவரை போல வந்து நின்றான் சூர்யா.


"நான் போகணும்......" என்று வெண்ணிலா வேறெங்கோ பார்த்து கொண்டு கூற சூர்யாவோ சிலை போல அசையாமல் நின்றான்.


வெண்ணிலாவின் பொறுமை எல்லாம் ஒரு சில நொடிகளிலேயே காற்றோடு மறைந்து போக கோபமாக சூர்யாவை பார்த்தவள்
"இப்போ என்ன தான் வேணும் உங்களுக்கு???? நீங்க நினைச்சத தான் நடத்திக்காட்டிட்டீங்களே.....வேற என்ன தான் வேணும்????" என்று கேட்கவும்


"நீ தான்....." என்று கூறினான் சூர்யா.


சூர்யாவின் பதிலால் வெண்ணிலாவின் முகம் கோபத்தால் சிவக்க தன் முகத்தை மறுபுறம் திருப்பி கொண்டு நின்றாள்.


வெண்ணிலாவின் அருகில் நெருங்கி வந்து நின்ற சூர்யா அவள் முகத்தை தன் புறம் வலுக்கட்டாயமாக திருப்ப வெண்ணிலா அவன் கைகளை தட்டி விடுவதிலேயே முனைப்பாக நின்றாள்.


சூர்யா வெண்ணிலாவின் நடவடிக்கைகளை பார்த்து கோபம் கொண்டாலும் பொறுமையாக அவளை கையாள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை அழுத்தமாக பார்க்க சூர்யாவின் ஒற்றை பார்வையில் வெண்ணிலா ஸ்தம்பித்து போய் நின்றாள்.


"சொல்லு உனக்கு என்ன பிரச்சினை???? எதனால என்னை இந்தளவிற்கு அவாய்ட் பண்ற??? நான் பார்க்கமாட்டேனா....பேசமாட்டேனானு ஏங்கி இருந்த அந்த நிலா எங்க போனா???? என்னைப் பார்த்ததும் அவ கண்ணு ரெண்டும் அவ்வளவு பாவனைகளை காட்டுமே.....அந்த நிலா எங்கே???? சொல்லு.....சொல்லு....." என்று சூர்யா சத்தமிடவும் வெண்ணிலா கண்கள் கலங்க அவனைப் பார்த்து பேசாமல் அழுத்தமாக நின்றாள்.


"சொல்லு டி........." என்று சூர்யா சத்தமிட


திடுக்கிட்டு அவனை பார்த்த வெண்ணிலா
"எதை சொல்ல சொல்லுறீங்க சூர்யா???? உங்களை நம்பி நான் ஏமாந்து போனதையா??? இல்ல ஊருக்கு முன்னாடி உங்க மதிப்பு போக கூடாதுனு என்னை கல்யாணம் பண்ணிட்டீங்களே அதையா??? இல்ல உங்களுக்கு நான் செகண்ட் ஆப்ஷனா இருக்கேனே அதையா????" என்று கேட்கவும் இம்முறை அதிர்ந்து நிற்பது சூர்யாவின் முறையானது.


அப்போது கதவு தட்டும் ஓசை கேட்கவும் தன் கண்களை துடைத்து கொண்டு கதவை திறந்த வெண்ணிலா எதிரில் நின்று கொண்டிருந்த மகாலட்சுமியை பார்த்து புன்னகத்தாள்.


வெண்ணிலாவின் முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொண்ட மகாலட்சுமி எதுவும் பேசாமல் காஃபி டிரேயை வெண்ணிலாவிடம் கொடுத்து விட்டு சென்று விட வெண்ணிலா டிரேயை மேஜை மேல் வைத்து வெண்ணிலா வெளியேறி சென்றாள்.


சூர்யாவோ வெண்ணிலா சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து கொண்டு நிற்க அவனுக்கு எதுவுமே புரியவில்லை.


"நான் அவளை ஏமாத்துனேனா???? அவ எனக்கு செகண்ட் ஆப்ஷனா?????" என்று கோபத்துடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் கை முஷ்டி இறுக அருகில் இருந்த கதிரையில் ஓங்கி குத்தினான்.


"என்னதான் நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல??? அவ பின்னாடியே போறேனு என்னை இளக்காரமாக நினைச்சுட்டலே நிலா.... இனிமேல் நீயாக வந்து நான் பேசுனது தப்புன்னு மன்னிப்பு கேட்குற வரை நான் உன் கூட பேசமாட்டேன்......." என்று அவசரத்தில் கோபப்பட்டு முடிவெடுத்து கொண்ட சூர்யா அதன் பிறகு வெண்ணிலா இருந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.


பெரியவர்கள் முன்னால் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொள்ள வெண்ணிலா மற்றும் சூர்யா வெகு சிரமப்பட்டனர்.


பெரியவர்கள் இவர்களது மனஸ்தாபத்தை பற்றி தெரியாமல் எப்போதும் போல இருந்து விட வெண்ணிலா மற்றும் சூர்யாவிற்கு இடையில் விழுந்த விரிசல் விரிந்து கொண்டே போனது.


ஒரு சில மாதங்கள் இவர்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்க விதி மறுபடியும் ஜனனி ரூபத்தில் வந்து சேர்ந்தது.


சூட்டிங் சென்று விட்டு வைபவின் பிறந்தநாளுக்காக கிஃப்ட் வாங்க கடைக்கு சென்ற வெண்ணிலா ஒவ்வொரு தளமாக வேடிக்கை பார்த்து கொண்டு சென்றாள்.


அப்போது ஜனனியை தூரத்தில் கண்டு கொண்ட வெண்ணிலாவின் இதழ்கள் வேதனையோடு புன்னகைக்க அவள் மனமோ
"இவள் என் வாழ்வில் வந்திராவிட்டால் நான் இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டேனே....." என்று ஊமையாக அழுதது.


எந்த வேலையும் செய்ய பிடிப்பின்றி போகவே வெண்ணிலா அந்த இடத்தை இட்டு வெளியேறி சென்றாள்.


அப்போது வெண்ணிலாவின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள்
"வெற்றி....." என்று புன்னகையோடு போனை அட்டன்ட் செய்தாள்.


"ஹலோ மேடம்....எப்படி இருக்கீங்க????ரொம்ப பிஸி போல......வீட்டுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல ஆச்சே....." என்று வெற்றி கேட்கவும்


"சூட்டிங் ஷெட்யூல் அப்படி வெற்றி....கண்டிப்பாக நாளைக்கு வீட்டுக்கு வருவேன்.....அம்மா, அப்பா, அபி, வைபவ் குட்டி எல்லோரும் எப்படி இருக்காங்க????" என்று கேட்டாள் வெண்ணிலா.


"எல்லாரும் ரொம்ப சூப்பராக இருக்கோம்.....அடுத்த வாரம் ஒரு இம்பார்டண்ட் டே..... என்ன நாள் ஞாபகம் இருக்குலே...." என்று வெற்றி கேட்கவும்


சிறிது நேரம்
"என்னவாக இருக்கும்????" என்று யோசித்து பார்ப்பது போல செய்தவள்


"தெரியலையே வெற்றி......" என்று கூறினாள்.


"அத்தை.....என்ன மறந்துட்டேலே......" என்று மறுமுனையில் வைபவ் கூச்சலிட அவனது பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டே வெண்ணிலா


"நீ நான் பேசுறத கேட்டுட்டு இருக்கேன்னு தெரியும் டா குட்டி.....அது தான் விளையாடுனேன்....நெக்ஸ் வீக் எங்க செல்ல குட்டி வைபவோட பர்த்டே....அதை நான் எப்படி மறப்பேன்......" என்று கூறவும் மறுபுறம் வைபவ் குதூகலத்துடன் சிரிக்கும் சத்தம் வெண்ணிலாவை பரவசமூட்டியது.


அதன் பிறகு பொதுவாக சில நிமிடங்கள் அவர்களுடன் போனில் பேசிய வெண்ணிலா மனதளவில் சிறிது சந்தோஷமாக உணர்ந்தாள்.


அதே சந்தோஷ மனநிலையோடு வீட்டுக்கு வந்த வெண்ணிலா மகாலட்சுமி, பெருமாள் மற்றும் அக்ஸயாவோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அப்போது வாசலில் ஹார்ன் சத்தம் கேட்கவும்
"அண்ணா வந்தாச்சு....." என்று அக்ஸயா வாசலை நோக்கி போக வெண்ணிலா அவர்கள் அறையை நோக்கி சென்றாள்.


சூர்யா பார்வையாலே வெண்ணிலாவைத் தேட அவனருகில் வந்த அக்ஸயா
"அண்ணி ரூம்க்கு போயாச்சு....நீங்க இங்க நின்னுட்டே இருந்தா எல்லாம் அவங்களை பார்க்க முடியாது.....நிலாவை பார்க்கணும்னா இந்த சூரியன் படியேறி போய் தான் ஆகணும்..... " என்று கூறவும்


"அவகூட சேர்ந்து நீயும் ரொம்ப பேசத் தொடங்கிட்ட....." என்று சூர்யா கூற அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள் அக்ஸயா.


அறைக்குள் வந்த சூர்யா பால்கனியில் நின்றுகொண்டு இருந்த வெண்ணிலாவை பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டான்.


பின்னர் குளியலறைக்குள் சூர்யா நுழைந்து கொள்ள வெண்ணிலா அறையை திரும்பி பார்த்தாள்.


சூர்யா வந்து நின்று தன்னை பார்த்து கொண்டு நின்றதை அவள் மனம் உணர்ந்தாலும் ஏனோ அவளுக்கு அவனை திரும்பி நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லை.


மனதினுள் ஓடி கொண்டிருந்த குழப்பத்தோடு அறைக்குள் நுழைந்த வெண்ணிலா அங்கே சுவரில் மாட்டி விடப்பட்டிருந்த அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்து கொண்டு நின்றாள்.


அப்போது குளியலறையில் இருந்து சூர்யா வெளிவரும் சத்தம் கேட்டதும் அவசரமாக தன் சிந்தனைகளை நிறுத்தியவள் கீழே ஹாலுக்கு சென்றாள்.


சூர்யா - வெண்ணிலா திருமணம் முடித்து இந்த ஐந்து, ஆறு மாதங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக் கொள்ளாவிட்டாலும் ஒருவர் தேவைகளை ஒருவர் சரியாக புரிந்து நடந்து கொள்வர்.


இருவருக்கும் இடையில் ஒரு அமைதியான புரிதல் இத்தனை நாட்களாக இருந்து கொண்டே இருந்தது.


சூர்யா ஆபீஸ் விட்டு வந்ததும் அவன் வரும் வரை அறையில் காத்திருந்து அவன் குளித்து முடித்து வந்ததும் அவன் சொல்லாமலேயே அவனுக்கு இரவுணவை எடுத்து வைத்து விடுவாள் வெண்ணிலா.


சூர்யாவும் எந்தவித எதிர் பேச்சும் இன்றி இருக்க பழகி கொண்டான்.


இன்றும் அவ்வாறே வெண்ணிலா இரவுணவை எடுத்து வைக்க அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான் சூர்யா.


"க்கும்......நான்....ஒரு......ஒண்ணு சொல்லணும்......" என்று வெண்ணிலா கூறவும்
சாப்பிட்ட சாப்பாடு புரையேற நிமிர்ந்து அவளைப் பார்த்தான் சூர்யா.


கிளாஸில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு மிடறு குடித்து விட்டு சூர்யா கேள்வியாக வெண்ணிலாவைப் பார்க்க வெண்ணிலாவோ சிறு பதட்டத்துடன் தன் கை விரல்களை கோர்ப்பதும், பிரிப்பதுமாக நின்றாள்.


"என்ன விஷயம்????" என்று சூர்யா கேட்கவும்


நிமிர்ந்து அவனைப் பார்த்த வெண்ணிலா
"நெக்ஸ்ட் வீக் வைபவோட பர்த்டே பங்சன் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க.....ஹோட்டல் கிரேட் டே ல.....எல்லோரும் தான் போறோம்.....நீங்களும் வரணும்....." என்று கூற எதுவும் பேசாமல் எழுந்த கொண்ட சூர்யா கைகளை கழுவி கொண்டு படியேறி சென்று விட வெண்ணிலா விக்கித்துப் போய் நின்றாள்.


"நான் இப்போ என்ன கேட்டுட்டேன்???? எப்போ பாரு ஆபீஸ்...ஆபீஸ்னே இருக்காறே.....போனா போகுது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டுமேனு கூப்பிட்டா உம்முன்னு போறாங்க.....தேவாங்கு.....தேவாங்கு.....சரியான இஞ்சி தின்ன தேவாங்கு......" என்று திட்டிக் கொண்டே வெண்ணிலா சமையல் அறையில் மீதமிருந்த வேலைகளை எல்லாம் செய்து கொண்டு நின்றாள்.


அதே கோபத்தோடு அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்ட வெண்ணிலா சூர்யாவை தேட அவனோ மும்முரமாக தன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான்.


அவனை முறைத்து பார்த்து கொண்டே கட்டிலை சரி செய்த வெண்ணிலா அவனைப் பார்த்து கொண்டே உறங்கிப் போனாள்.


சூர்யா லேப்டாப்பை பார்ப்பது போல அவளது நடவடிக்கைகள் அனைத்தையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்து கொண்டாலும் வெளியில் கோபமாக இருப்பது போல முகத்தை வைத்து கொண்டு இருந்தான்.


சிறிது நேரத்தில் லேப்டாப்பை ஆஃப் செய்து விட்டு வெண்ணிலாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட சூர்யா அவள் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.


"இத்தனை நாளா என்கூட பேசத் தோணலயாடி உனக்கு???? அப்படி என்னடி உனக்கு இவ்வளவு பிடிவாதம்???? ராட்சசி.....உன்னை நான் எந்தளவுக்கு லவ் பண்ணுறேனு தெரியுமாடி???? இவ்வளவு நேரம் லேப்டாப்ல வேலை செய்யுறேனு நினைச்சியா??? உன் சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் எடுத்த போட்டோஸ் எல்லாம் பார்த்துட்டு இருந்தேன்.....நீ பேசாமல் நான் பேசமாட்டேன்னு வீம்புக்காக முடிவு எடுத்துட்டேன்.....ஆனா என்னால அப்படி இருக்க முடியலடி......" என்ற சூர்யாவின் விழிகள் இரண்டிலும் கண்ணீர் சூழ்ந்து கொண்டது.


"நமக்கு கல்யாணம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு......இந்த ஆறு மாசத்துல நீ என்கூட பேசுன வார்த்தை ஒரு முப்பது இருக்கும்.....உன்னோட ஒரு பார்வைக்காக, ஒரு வார்த்தைக்காக எத்தனை நாள் தவிச்சுருப்பேன் தெரியுமா???? உன் மனசுல இப்போ வரைக்கும் என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு தெரியல.....ஆனா நான் இன்னும் உன்னை என்னோட பழைய ஐசுவாக தான் பார்க்குறேன்.....நான் சொல்லாமலேயே என்னோட ஒவ்வொரு தேவையும் நீ கரெக்ட்டா செஞ்சிடுவ.....அந்த செக்கன் அப்படியே பறக்குற மாதிரி பீல் ஆகும்....அந்த சந்தோஷத்தோட உன் கூட பேசலாம்னு வந்தா நீ என்னை திரும்பியும் பார்க்காம போயிடுவ......அந்த ஒவ்வொரு செக்கனும் செத்து செத்து பிழைக்குறேன்டி......" என்று விட்டு சூர்யா அவள் கையை எடுத்து தன் முகத்தில் வைத்த வண்ணம் கண்ணீர் வடிக்க வெண்ணிலாவோ மெளனமாக கண்ணீர் வடித்து கொண்டு இருந்தாள்.


இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே

அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா
சாவா


சூர்யா தன் அருகில் வந்து அமர்ந்து கொள்ளும் போதே வெண்ணிலாவிற்கு விழிப்பு வந்து விட்டாலும் அமைதியாக சூர்யா என்ன செய்கிறான் என்று பார்க்க நினைத்தாள்.


அவனது தொடுகை அவள் ஆழ் மனது வரை சென்று அவள் சிறு வயது ஞாபகங்களை எல்லாம் தட்டி எழுப்ப அந்த நொடி இது நாள் வரை இருந்த எந்த பிரச்சினையும் அவள் மனதில் தோன்றவில்லை.


அந்த நொடி
"என் சூர்யா......" என்ற ஒரு எண்ணமே அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது.


சூர்யா வெண்ணிலா தூக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்து கொண்டு ஒவ்வொன்றாக பேசப் பேச வெண்ணிலா அவனது வார்த்தைகளை கேட்டு திக்குமுக்காடி போனாள்.


இறுதியில் சூர்யா கூறிய வார்த்தைகளை கேட்டு
அந்த நொடியே கண்ணீர் விடும் அவனை ஆறுதல் படுத்த அவள் மனம் நினைத்தாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை எழ விடவில்லை.


அவள் கையை பிடித்து கொண்டே சூர்யா தூங்கி விட அதன் பிறகு வெண்ணிலாவை சிறிதும் தூக்கம் நெருங்கவில்லை.


அடுத்த நாள் காலை வெண்ணிலா சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு அசந்து தூங்கும் சூர்யாவையே சிறிது நேரம் உற்று பார்த்தாள்.


கள்ளங்கபடமில்லா அவன் முகத்தை பார்த்து வெண்ணிலாவின் மனம் கரை புரண்டாலும் தன் மனதை கட்டி போட்டவள்
"இவ்வளவு நாள் இருந்த கோபம் எல்லாம் ஒரு நாள்ள காணாம போயிடுச்சு தேவ்.....நீ என் பக்கத்தில் வந்தா நான் மொத்தமாக மாறி போயிடுறேன்டா தேவ்.......இனி இந்த இடைவெளி நமக்குள்ள வராது.....இன்னையோட இந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சிடும் தேவ்......" என்று மெல்லமாக அவன் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சந்தோஷமாக வீட்டில் இருந்து வெளியேறி சென்றாள் வெண்ணிலா.


புதிய திரைப்படம் ஒன்றுக்காக பாடலை பாடி விட்டு வெளியே வந்த வெண்ணிலாவை ரிசப்சனில் இருந்த பெண் அழைக்கவும் ரிசப்சன் அருகில் சென்றாள் வெண்ணிலா.


"மேம் உங்களுக்கு ஒரு கவர் வந்துருக்கு....." என்று ரிசப்சனில் இருந்த பெண்


வெண்ணிலாவிடம் ஒரு கவரை நீட்ட அதை வாங்கி பார்த்த வெண்ணிலா
"யாரு கொடுத்தாங்க????" என்று கேட்டாள்.


"தெரியலை மேம்.....உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க.....வெரி கான்பிடன்சியல் னு சொன்னாங்க....." என்று ரிசப்சனில் இருந்த பெண் கூறவும்


"அப்படி என்ன இம்பார்ட்டண்டா இருக்கும்????" என்று யோசித்தவாறே தன் காரை நோக்கி சென்றாள் வெண்ணிலா.


காரினுள் ஏறி அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த

கவரை பிரித்து பார்த்த வெண்ணிலா அதிர்ச்சியில் சிலையாக உறைந்து போனாள்........
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
எனக்கு தெரியும் டா நீ இப்படி தான் முடிப்பன்னு எப்படி எப்படி நிலாவை பார்க்கனும் னா சூரியன் மேல போகனுமா ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top