• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்!!!! ஹாய்!!!! ஹாய்!!!!
எல்லோரும் எப்படி இருக்கீங்க பிரண்ட்ஸ்?? ஒரு வழியாக வெற்றிகரமாக எக்ஸாம் எல்லாம் முடிஞ்சாச்சு.....
இனிமேல் எப்போதும் போல உங்களை எல்லாம் தொல்லை பண்ண ஓடோடி வந்துட்டேன்......
இவ்வளவு நாள் கேப் விட்டதுக்காக ஒரு மிகப்பெரிய ஸாரி:giggle::giggle:


அடுத்த அப்டேட் போட்டாச்சு படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரண்ட்ஸ்.......
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
hero-nani-stills(2)(2).jpgDXNB4HeU8AAT238.jpg

சூர்யாவை சுற்றி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நின்று கொண்டிருக்க சூர்யாவோ தலையில் கை வைத்து தலை குனிந்து இருந்தான்.


அப்போது வாசலில் கார் சத்தம் கேட்கவும் வெளியே சென்று எட்டிப் பார்த்த அக்ஸயா
"வெற்றி மாமா வர்றாங்க....." என்று கூற சூர்யா வாசலை நோக்கி தன் பார்வையை திருப்பினான்.


வெற்றியின் முகத்தை பார்த்தே அவன் தன் மேல் கோபமாக இருப்பதை உணர்ந்து கொண்ட சூர்யா தயக்கத்துடன் அவனருகில் செல்ல
"உன் கூட பேசணும் வா....." என்றவாறு வெற்றி சூர்யாவின் கையை பிடித்து அழைத்து செல்ல மகாலட்சுமி மற்றும் பெருமாள் ஒரு வித பதட்டத்துடன் அங்கு நடப்பவற்றை பார்த்து கொண்டு நின்றனர்.


"நிலா என்ன பண்ணிட்டு வந்தா???" என்று வெற்றி கேட்கவும்
அவனை வியப்பாக பார்த்தான் சூர்யா.


"எனக்கு நிலா தங்கச்சி.....அவ ஒவ்வொரு பழக்கமும் எனக்கு நல்லாவே தெரியும்.....அதே மாதிரி உன்னை பற்றியும் தெரியும்......சொல்லு நிலா என்ன பண்ணா???" என்று வெற்றி கேட்கவும்


தலை குனிந்து நின்ற சூர்யா மறுபுறம் திரும்பி நின்று
"அவ கொஞ்ச நாள் உங்க எல்லார் கூடவும் இருக்க ஆசப்பட்டு வந்துருக்கா.....அதை புரிஞ்சுக்காம நீ இப்படி வந்து என்கிட்ட கேள்வி கேட்குறீயே வெற்றி....." என்று கூற அவனைத் தன் புறமாக திருப்பிய வெற்றி கூர்மையாக அவன் கண்களை பார்த்தான்.


"சரியான அழுத்தமானவங்கடா நீங்க இரண்டு பேரும்....அவகிட்ட கேட்டா கல்லு மாதிரி அசையாம இருக்கா.....இங்க நீ ஒரு கதை சொல்ற....ஏன்டா வீட்டுக்கு வர நினைச்சா யாராவது நடு ராத்திரி மூணு மணிக்கா வருவாங்க????" என்று வெற்றி கேட்கவும் சூர்யா எதுவும் பேசாமல் நின்றான்.


"நான் இப்போவும் சொல்றேன் சூர்யா.....நிலா கொஞ்சம் பிடிவாதக்காரி தான்.....ஆனா அவ தப்பாக எதையும் சொல்ல மாட்டா.....அவ எதுவும் தப்பு பண்ணி இருந்தா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.....ப்ளீஸ் வந்து நிலா கிட்ட பேசி அவளை கூட்டிட்டு வாடா....." என்று வெற்றி கை இரண்டையும் கூப்பி கண்கள் கலங்க கூறவும் சூர்யா சட்டென்று அவன் கைகளை தட்டி விட்டான்.


"என்னடா பண்ணுற நீ??? லூசாட்டம் நடந்துக்காம நீ முதல்ல வீட்டுக்கு போ....கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிவிடும்...." என்று சூர்யா கூறவும் தயங்கி நின்ற வெற்றியை பேசி சமாளித்து ஒரு வழியாக அவனது வீட்டை நோக்கி அனுப்பி வைத்த சூர்யா மனதிற்குள் மானசீகமாக வெற்றியிடம் மன்னிப்பு கேட்டு கொண்டான்.


வெற்றிக்காக வாசலிலேயே காத்து நின்ற ஆண்டாள் வெற்றி காரில் இருந்து இறங்கவும் வேகமாக அவனருகில் சென்றார்.


"வெற்றி....சூர்யா வரலயா??? சூர்யா என்ன சொன்னான்???" என்று பதட்டத்துடன் கேட்கவும் அவரது ஏக்கமான முகத்தை பார்த்து கலங்கி போன வெற்றி
"முதல்ல வீட்டுக்கு உள்ள வாங்கமா சொல்றேன்....." என்று அவர் கை பிடித்து அழைத்து சென்றான்.


நடு இரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு பதறி எழுந்த வெற்றி
"யாரு இந்த நேரத்தில???" என்றவாறு கதவை திறக்க அங்கே வெண்ணிலா கையில் பெட்டியோடு நின்று கொண்டிருந்தாள்.


"நிலா என்னடா இது??? எதாவது பிரச்சினையா??" என்று வெற்றி கேட்கவும்
அவனை முறைத்து பார்த்தவள் எதுவும் பேசாமல் அவளது அறைக்குள் சென்று அடைந்து கொள்ள வெற்றி குழம்பி போனான்.


வெற்றியின் சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து வர வெற்றி நடந்தவை எல்லாவற்றையும் கூற ஆண்டாள் பதட்டத்துடன் சென்று வெண்ணிலாவின் அறைக் கதவை தட்டினார்.


கதவைத் திறந்து பார்த்த வெண்ணிலா எதுவும் பேசாமல் சென்று கட்டிலில் படுத்து கண் மூடி கொள்ள கோபம் அடைந்த ஆண்டாள் வெண்ணிலாவின் அருகில் வந்து அவளை தட்டி எழுப்பினார்.


"ஏய் நிலா.....எந்திரி.....என்னதான் நினைச்சுட்டு இருக்க.....திடீர்னு இப்படி நடுராத்திரியில் பெட்டியும், கையுமா வந்து நிற்குற......என்னதான் ஆச்சு சொல்லு....." என்று வெண்ணிலாவை ஆண்டாள் உலுக்க அவளோ எதுவும் பேசாமல் அசையாது கண்களை மூடி படுத்திருந்தாள்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ஆண்டாள் சோர்ந்து போய் அமர்ந்து விட அபிநயா வந்து அவரை அழைத்து கொண்டு சென்றாள்.


ஆண்டாள் சென்றதை உணர்ந்து கொண்ட வெண்ணிலா கண்களை திறக்க மடை திறந்த வெள்ளமென அவள் கண்களில் இருந்து கண்ணீர் பாய்ந்தது.


"நான் எப்படி மா உங்க கிட்ட இதை சொல்லுவேன்???? நான் என் மனசுக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணி இத்தனை நாளா உங்க எல்லோரையும் ஏமாற்றி வாழ்ந்த வாழ்க்கையை சொல்லுவேனா??? இல்ல என் நம்பிக்கையை மொத்தமாக அழிச்ச அந்த சூர்யாவை பற்றி சொல்லுவேணா???? நான் இதை எல்லாம் சொன்னா நீங்க நம்புவீங்களா?????....." என்று கண்ணீர் விட்டு கொண்டே வெண்ணிலா புலம்பிக் கொண்டிருக்க வெற்றி சூர்யாவை தேடி சென்றான்.


அதன் பிறகு அங்கு நடந்தவற்றை எல்லாம் வெற்றி வீட்டினர் எல்லோரிடமும் கூற ஆண்டாள், அழகர் மற்றும் அபிநயா செய்வதறியாது விக்கித்துப் போய் நின்றனர்.


வெண்ணிலாவோ தன் அறையில் இருந்து வெற்றி சொன்னது எல்லாவற்றையும் கேட்டு விரக்தியாக புன்னகத்தாள்.


"நீ இப்போவும் நல்லவனா உன்னை காட்டிக்குறியே சூர்யா....." என்று சுவரில் மாட்டப்பட்டிருந்த அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்து பேசியவள் கண்கள் கலங்க சோர்ந்து போய் அமர்ந்தாள்.


நாளாக நாளாக சூர்யா மேல் இருந்த கோபம் வெண்ணிலாவின் மனதில் கூடிக் கொண்டே சென்றது.


வீட்டில் யாராவது சூர்யா பற்றி வெண்ணிலாவிடம் பேசினால் உடனே யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்று விடுவாள் வெண்ணிலா.


அதன் பிறகு அழகர் மற்றும் வெற்றி அலைந்து திரிந்து தேடி அவளை வீட்டுக்கு அழைத்து கொண்டு வருவர்.


வெண்ணிலாவின் இந்த நடவடிக்கைகளை பார்த்து பயந்து போன அவளது வீட்டினர் அதன் பிறகு சூர்யாவை பற்றி அவளின் முன்னால் பேசுவதை தவிர்த்தனர்.


மறுபுறம் ஜனனி சூர்யாவிடம் உண்மைகளை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.


இதற்கிடையில் வெண்ணிலாவை பற்றி அறிந்து கவலை கொண்ட ஜனனி சூர்யாவிடம் தான் சென்று வெண்ணிலாவிடம் பேசுவதாக கூறவும் சூர்யா அதை திட்டவட்டமாக மறுத்து விட்டான்.


என்றாவது ஒரு நாள் சூர்யாவிடம் எல்லாவற்றையும் கூறி விடவேண்டும் என்று ஜனனி முடிவெடுத்து இருக்க வெண்ணிலாவோ சூர்யாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.


அன்றொரு நாள் இரவு வீட்டில் தன்னறைக்குள் இருந்து டி.வி பார்த்து கொண்டிருந்த வெண்ணிலா ஏதோ ஞாபகம் வந்தவளாக தன் தொலைபேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டாள்.


"ஹலோ தமிழ் டி.வியா???" என்று வெண்ணிலா கேட்க


மறுமுனையில்
"ஆமாம்.....சொல்லுங்க நீங்க யாரு???" என்று கேட்டனர்.


"நான் சிங்கர் வெண்ணிலா பேசுறேன்.....உங்களுக்கு ஒரு இம்பார்ட்டண்ட் நியூஸ் சொல்ல தான் போன் பண்ணேன்....."


என்று வெண்ணிலா கூறவும்
"சொல்லுங்க மேடம் என்ன நியூஸ்????" என்று கேட்க
தனது விவாகரத்து பற்றி வெண்ணிலா கூற மறுமுனையில் அமைதி நிலவியது.


"ஹலோ....இந்த நியூஸ் நாளைக்கு எல்லா நியூஸ்லயும் வரணும்.....பட் யாரு சொன்னாங்கனு சொல்ல கூடாது...." என்று வெண்ணிலா கூற


மறுமுனையில் இருந்த நபர்
"மேடம் இதனால உங்க இரண்டு பேர் இமேஜூம் ஸ்பாயில் ஆகிடுமே....." என்று இழுக்கவும்


"அது பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம்....அன்ட் இதனால உங்க சேனலுக்கு எந்த பிராப்ளமும் வராமல் நான் பார்த்துக்குறேன்....." என்று கூறினாள் வெண்ணிலா.


அதன் பிறகு நடந்தவை எல்லாம் தான் நாம் தெரிந்த விடயங்கள் தானே.


அதன் பிறகு வெண்ணிலா சூர்யா தன்னை ஹாஸ்பிடலில் சேர்த்தது பற்றி அறிந்து முற்றிலும் குழம்பி போனாள்.


"இத்தனை நாளா வராதவன் இன்னைக்கு ஏன் வரணும்????" என்று யோசனையோடு அவள் தலையணையில் கை வைக்க உள்ளே இருந்து ஒரு கவர் தென்பட்டது.


எடுத்துப் பார்த்த வெண்ணிலாவின் கண்கள் இரண்டும் குளமாகி போனது.


அன்று சூர்யாவின் வீட்டில் இருந்து வந்து காரில் இருந்து தன் பெட்டியை எடுக்கும் போது அதில் மாட்டி கொண்டு வந்திருந்தது அந்த புகைப்படங்கள்.


அதை பார்க்கத் துணிவின்றி தலையணையின் கீழ் அதை போட்டவள் இன்று தான் அதை மறுபடியும் பார்க்கின்றாள்.


அப்போது அவளது போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவள் புதியாக எண்ணாக இருக்கவும் அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.


"ஹலோ....ஹலோ.....நிலா நான் வில்லியம் பேசுறேன்.....நிலா கேட்குதா.....நான் ஜனனி பற்றி...." என்று வில்லியம் பேசப் பேச வெண்ணிலாவின் கண்கள் கோபத்தால் சிவந்தது.


கோபம் தாளாமல் வெண்ணிலா போனை தூக்கி வீச அது ஸ்விட்ச் ஆஃப் ஆனது.


தன்னை தானே நொந்து கொண்டவள் அடுத்த நாள் அபிநயா பேசியதை எல்லாம் கேட்டு மீண்டும் அந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் எடுத்து பார்த்தாள்.


அப்போது தான் அவள் செய்த பாரிய முட்டாள் தனம் அவளுக்கு புலப்பட்டது.


அந்த புகைப்படங்கள் எல்லாவற்றிலும் சூர்யாவின் முகம் இணைக்கப்பட்டு இருந்தது.


அந்த புகைப்படங்கள் எல்லாம் பெரிய கண்ணாடி இருக்கும் பகுதியில் எடுக்கப்பட்டிருந்ததால் அதில் ஜனனியின் முகமும் அவளோடு நெருக்கமாக நின்ற வில்லியமின் முகமும் தெரிந்தது.


ஆனால் இதை அவர்கள் கவனிக்கவில்லை அது தான் அங்கு நடந்த மிகப்பெரும் பிழை.


சட்டென்று பார்ப்பவர்களுக்கு அது சூர்யா மற்றும் ஜனனி போல தான் தெரியும்.


ஆனால் சற்று ஆழமாக பார்த்தாலே இந்த வித்தியாசத்தை கண்டு கொள்ள முடியும்.


கண் கெட்ட பின் சூர்யநமஸ்காரம் போல காலம் கடந்து வந்த ஞானோதயத்தில் தன் போனை எடுத்து இரவு அழைப்பு வந்த அதே எண்ணை அழைத்து வில்லியமை சாராமாரியாக திட்டினாள் வெண்ணிலா.


மறுமுனையில் வில்லியம் கூற வந்ததை கேட்காமலேயே போனை வைத்தவள் சூர்யாவை காண விரைந்து செல்ல அங்கே ஜனனியை பார்த்ததும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.


விவாகரத்து வாங்கி விட்ட பின்பும் சூர்யாவின் நினைவுகள் அவளை பாடாய்ப்படுத்துகிறது என்பது தான் நிஜம்.


"அத்தை.....மூன் அத்தை......" என்று வைபவ் வெண்ணிலாவின் தோளில் தட்ட பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டு கொண்டவள் கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டு வைபவை பார்த்தாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"பாட்டி உங்களை சாப்பிட வரச்சொன்னாங்க..." என்று வைபவ் கூறவும் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டவள் கீழே டைனிங் டேபிளை நோக்கி சென்றாள்.


வெண்ணிலா அமைதியாக சாப்பிடுவதை பார்த்து ஒவ்வொருவரும் கண்களாலேயே தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் வெற்றியின் போன் அடித்தது.


போனை அட்டன்ட் செய்தவன்
"சொல்லுடா சூர்யா....." என்று கூற வெண்ணிலா சட்டென்று நிமிர்ந்து வெற்றியை பார்த்தாள்.


வெற்றி
"என்ன????" என்று வெண்ணிலாவைப் பார்த்து சைகையில் கேட்கவும் அவள் ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்து விட்டு எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.


வெண்ணிலாவின் கைகள் அங்கிருந்த வேலைகளை செய்தாலும் காதுகளை கூர்மையாக்கி வெற்றி பேசுவதை அவள் கேட்டு கொண்டு நின்றாள்.


"என்ன சொன்னான் சூர்யா???" என்று அபிநயா கேட்கவும்


போனை வைத்து விட்டு நிமிர்ந்த வெற்றி
"பங்சனுக்கு வராததுக்கு ஸாரி சொன்னான்....அப்புறம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விஸ் பண்ணனு சொல்ல சொன்னான்..." என்று கூற


"ஏன் நேர்ல வந்து விஷ் பண்ணா அவன் குறைஞ்சா போயிடுவான்????" என்று கேட்டாள் அபிநயா.


"அதுக்கும் ரீசன் சொன்னான் உன் தம்பி.....ஒரு பிஸ்னஸ் டீலிங் விஷயமா டூ, த்ரீ வீக் ஜேர்மன் போறானாம்.....அதனால அதை முடிச்சுட்டு வந்து நேர்ல விஷ் பண்ணுறேனு சொன்னான்....." என்று வெற்றி கூறவும்
வெண்ணிலாவின் கையில் இருந்த தட்டு நழுவி கீழே விழுந்தது.


சமையலறையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அபிநயா வெண்ணிலாவின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து கவலையுடன் அவளருகில் சென்று அவள் தோள் மேல் கை வைத்தாள்.


அபிநயாவின் தொடுகையில் தன்னை மீட்டு கொண்ட வெண்ணிலா எதுவும் பேசாமல் வேகமாக சென்று தன்னறைக்குள் அடைந்து கொள்ள வெண்ணிலாவையே ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பார்த்து கொண்டு இருந்தனர்.


அறைக்குள் வந்த வெண்ணிலா வெற்றி சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவள் மனமோ
"சூர்யா என்னை விட்டு போறானா????" என்று ஏங்கி தவித்தது.


"அது தான் அவனை வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டியே அப்புறம் என்ன????" என்று மனசாட்சி ஒரு புறம் கேள்வி எழுப்ப


மறுபுறமோ
"அவனை பார்க்காமல் எப்படி??? அவன் கூட சண்டை போடாமல்....அவனை சீண்டிப் பார்க்காமல் எப்படி????" என்று யோசித்தவள் பதில் கூற முடியாமல் தவிப்புடன் நின்றாள்.


அறையில் இருக்க மூச்சு முட்டுவது போல இருக்கவே கீழே வந்த வெண்ணிலா வேகமாக தன் காரை எடுத்துக்கொண்டு சென்றாள்.


ஆண்டாள் தவிப்போடு வெற்றியை பார்க்க அவனோ
"அவ கொஞ்ச நேரம் தனியா இருந்து யோசிச்சு பார்க்கட்டும்மா.....இப்போ அவ போறது அவ லைப்ல முக்கியமான முடிவு எடுக்குறதுக்காக....நீங்க கவலைப்படாம இருங்கமா.....அவ தப்பாக எதுவும் பண்ண மாட்டா....." என்று கூறவும் ஆண்டாள் சிறிது சமாதானம் அடைந்தார்.


கை போன போக்கில் காரை ஓட்டி கொண்டிருந்த வெண்ணிலா எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் தவித்து போனாள்.


அப்போது சட்டென்று அவள் கார் முன்னால் ஒரு பெண்மணி வந்து நிற்கவும் காரை சட்டென்று நிறுத்திய வெண்ணிலா காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணின் அருகில் சென்றாள்.


பதட்டத்துடன் அவர் நிற்பதைப் பார்த்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவள்
"என்னம்மா ஆச்சு????" என்று கேட்கவும்


அந்த பெண்
"எங்க முதலாளி அம்மாவுக்கு திடீர்னு பிரசவ வலி வந்துடுச்சு.....ஆம்பள துணை யாரும் இல்லமா....ஹாஸ்பிடல் போக கொஞ்சம் உதவியாக செய்ங்கமா...." என்று அவர் கை கூப்பி கேட்க


அவர் கைகளை பிடித்து
"இதெல்லாம் வேண்டாம்மா.....முதல்ல அவங்கள ஹாஸ்பிடல் போகலாம் வாங்க....." என்று விட்டு அவருடன் சென்ற வெண்ணிலா அங்கே பஸ் ஸ்டாண்டில் வலியில் துடித்து கொண்டிருந்த ஜனனியை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.


ஜனனியும் வெண்ணிலாவைப் பார்த்து அதிர்ச்சியாக அந்த அதிர்ச்சியை அவள் பிரசவ வலி மறக்க செய்தது.


"அம்மா......." என்று ஜனனி அலற அந்த சத்தத்தில் தன்னை மீட்டு கொண்ட வெண்ணிலா உடனடியாக ஜனனியை தன் காரில் ஏற்றி கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்.


போகும் வழி முழுவதும் ஜனனி
"ஐ யம் ஸாரி நிலா.....ஐ யம் ஸாரி....." என்று கூறி கொண்டே வர வெண்ணிலாவிற்கோ எதுவும் புரியவில்லை.


"ஜனனி தனியாக இப்படி கஷ்டப்படுறாளா??? அப்போ சூர்யா எங்கே????" என்று யோசனையோடே காரை செலுத்தியவள் ஹாஸ்பிடல் வந்தடைந்ததும் ஜனனியை அவசரமாக உள்ளே அழைத்து சென்றாள்.


டாக்டர் வந்து அவளை உள்ளே அழைத்து சென்றதும் வெண்ணிலா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்து கொண்டு நின்றாள்.


அப்போது வெண்ணிலாவின் அருகில் வந்த டாக்டர்
"நிலா யாரு???" என்று கேட்டார்.


"நான் தான் டாக்டர்....." என்று வெண்ணிலா கூறவும்


"நீங்க தான் நிலாவா??? பேஷண்ட் உங்க கூட பேசணும்னு சொல்லிட்டே இருக்காங்க....ட்ரீட்மெண்ட் பண்ண விடுறாங்க இல்ல....கொஞ்சம் அவங்கள பேசி சமாதனப்படுத்துங்க....." என்று டாக்டர் கூற வேகமாக ஜனனியை தேடி சென்றாள் வெண்ணிலா.


"என்னை மன்னிச்சுடு நிலா.....இந்த வார்த்தையை சொல்ல எனக்கு தகுதி இருக்கா இல்லையானு எனக்குத் தெரியலை நிலா......ஆனாலும் இதை நான் உன்கிட்டயும், சூர்யாகிட்டயும் கேட்டே ஆகணும்......." என்று கூற வெண்ணிலா அவளை குழப்பமாக பார்த்தாள்.


அப்போது ஜனனி இது நாள் வரை சூர்யா மற்றும் வெண்ணிலாவைப் பிரிப்பதற்காக செய்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கூற வெண்ணிலா திகைத்துப் போய் நின்றாள்.


"சூர்யா எனக்கு இல்லாமல் போயிடுவானோனு பயத்தில் தான் நான் வில்லியமை ஹெல்ப் பண்ண கொண்டு வந்தேன்..... அன்னைக்கு மால்ல சூர்யா மாதிரி உனக்கு தெரிஞ்சது வில்லியம் தான்.....சூர்யாவையும், என்னையும் சேர்த்து பேச வைச்சதும் நான் தான்....." என்று ஜனனி கூற வெண்ணிலா சட்டென்று அவள் கையில் இருந்து தன் கையை எடுத்து கொண்டாள்.


"எனக்கு தெரியும் நிலா.....நான் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் இருக்காது......" என்று ஜனனி கூற


வெண்ணிலா அவள் வயிற்றைக் காட்டி
"குழந்தை....." என்று கேட்கவும்


"வில்லியம் என்னை வன் சைட்டா லவ் பண்ணி இருக்கான் அது எனக்கு தெரியல......உனக்கு ஒரு போட்டோஸ் கவர் வர்றதுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நானும், வில்லியமும் ஒரு பார்ட்டிக்கு போய் இருந்தோம்....அங்க வச்சு நான் ட்ரிங்ஸ் பண்ணிட்டேன்....அப்போ தான் வில்லியம் என்னை லவ் பண்ணுறத சொன்னான்....அப்போ எங்களை மீறி எல்லாம் போயிடுச்சு.....அதற்கு அப்புறம் நாங்க இதைப் பத்தி பேசல.....உங்களை பிரிக்க கிராபிக்ஸ் பண்ணி போட்டோஸ் அனுப்பலாம்னு டிசைட் பண்ணி உனக்கு அனுப்புனோம்.....அன்னைக்கு தான் கடைசியாக வில்லியமை நான் பார்த்தேன்.....அதற்கு அப்புறம் அவன் என்ன ஆனான்??? எங்கே போனான்??? எதுவும் தெரியல.....அன்னைக்கு வைபவ் பர்த்டே பங்சன்ல தான் நான் பிரக்னென்ட்னு தெரிய வந்திச்சு....ஆனால் அதை நீ தப்பாக புரிஞ்சுகிட்ட....உன் கிட்ட இதை சொல்ல வர்றதுக்குள்ள என் அம்மா, அப்பா என்னை விட்டு போயிட்டாங்க.....யாரும் இல்லாமல் அனாதையாக நின்னேன்.....அப்போ தான் நான் பண்ண எல்லாத் தப்பும் எனக்கு புரிஞ்சது.....எல்லார்கிட்டயும் எல்லாம் சொல்லிடலாம்னு நினைக்கும் போது உங்க இரண்டு பேர் லைஃப்லயும் ஏதேதோ ஆகிடுச்சு.....என்னை மன்னிச்சுடு நிலா....இந்த உண்மை எல்லாம் சூர்யாவிற்கும் தெரியும்.....அன்னையில் இருந்து சூர்யா என் கூட பேசுறதே இல்லை.....நான் பண்ண தப்புக்கு என்னை அவன் உயிரோட விட்டதே பெரிசு......நான் சூர்யாவை காதலிச்சேன்.....ஆனா எப்போ சூர்யா மனசுல நீ இருக்கேனு தெரிஞ்சதோ அன்னைக்கே நான் செத்துட்டேன் நிலா.....உங்களை பிரிக்கணும்னு கேவலமான எண்ணத்தோடு இதற்கு முன்னாடி சுத்திட்டு இருந்தேன்.....இப்போ யாரும் இல்லாத அனாதையாக நிற்குறேன்.....இனி நான் உயிரோடு இருப்பேனா இல்லையா தெரியல.....ஒரு வேளை நான் இறந்துட்டா என் குழந்தையை தயவுசெய்து என்னை மாதிரி பாசத்துக்கு ஏங்குற ஒரு பொண்ண வளர்க்காம எல்லாரோட அன்பும் கிடைக்குற மாதிரி பார்....த்து......க்கோ.........நி...லா......." என்றவாறு ஜனனி கண்களை மூடி மயங்க பதட்டம் கொண்ட வெண்ணிலா


"டாக்டர்.....டாக்டர்......" என்று கத்தி கொண்டே டாக்டரை அழைத்து கொண்டு வந்தாள்.


ஜனனிக்கு சிகிச்சை ஆரம்பித்து விட வெண்ணிலா இது நாள் வரை அவள் செய்த தவறுகளை எல்லாம் எண்ணி கண்ணீர் வடித்தாள்.


உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்

உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு

நேசமும் இரண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு

இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா

உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே
நானும் மருக
என்ன செய்வேனோ...?

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே

என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே

விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே

வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு

சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......


"நான் இனி சூர்யா முகத்தில் எப்படி முழிப்பேன்.....சந்தேகப்பட்டு நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்......சூர்யா.....சூர்யா......" என்று அழுது புலம்பிய வெண்ணிலா உடனடியாக தன் போனை எடுத்து சூர்யாவிற்கு அழைப்பு மேற்கொண்டாள்.


தூக்க கலக்கத்தில் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்து
"ஹலோ....." என்று கூற சூர்யாவின் குரல் வெண்ணிலாவின் கண்களில் கண்ணீரை சுரக்க செய்தது.


தன் தொண்டையை சரி செய்து கொண்ட வெண்ணிலா
"நான் நிலா பேசுறேன்......" என்று கூற மறுமுனையில் சூர்யா அமைதியாக இருந்தான்.


"ஜனனியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்.....விஜயா ஹாஸ்பிடல்......நீங்க வரமுடியுமா????" என்று வெண்ணிலா கேட்கவும்


மறுபுறம் கோபம் கொண்ட சூர்யா

"அவ உனக்கும், எனக்கும் பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு அவளை கொன்னு போட்டாலும் பரவாயில்லைனு நான் இருக்கேன்....நீ அவளுக்கு சேவகம் பண்ணிட்டு இருக்க அப்படி தானே??? முதல்ல அங்கே இருந்து கிளம்பி வீட்டுக்கு போற வழியை பாரு....." என்று விட்டு போனை வைத்து விட வெண்ணிலாவோ செய்வதறியாது போனையே வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.........
 




Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
Indha surya thangina orediya thaangaran ila kanduka matran...
Janani ah pathi frste purijirukanum ipo ipdi pesina epdi??
Nice ud sis..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top