• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enge Enadhu Kavithai - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love::love:
0d943d32d0da537686f1fe9e2e6275bd.jpg21910906_132309944080092_1175764679012646912_n.jpg
"அம்மா........" என்று ஜனனியின் அலறல் சத்தத்தை தொடர்ந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்க வெண்ணிலாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.


அப்போது நர்ஸ் ஒருவர் குழந்தையை கொண்டு வந்து வெண்ணிலாவிடம் நீட்ட தயக்கத்துடன் அந்த குழந்தையை வாங்கியவள் நெஞ்சம் புதிதாக ஒன்றை உணர்ந்தது.


குழந்தையின் ஸ்பரிசம் வெண்ணிலாவை புதிய ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றது.


அப்போது
"நிலா......." என்று தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்த வெண்ணிலா அங்கு வில்லியமை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகத் தோற்றமே காட்டியது.


வில்லியம் அவளது கையில் இருந்த குழந்தையையே பார்த்து கொண்டிருக்க குழந்தையை தன்னோடு அணைத்துக் கொண்டவள்
"இப்போ என்ன பிரச்சினை இங்க வந்திருக்க????" என்று கோபமாக கேட்டாள்.


"குழந்தையை ஒரே ஒரு தடவை நான் தூக்கி பார்க்கவா??" என்று வில்லியம் கேட்கவும்


அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா
"ஜனனியை ஏமாற்றி அவ வயிற்றில் பிள்ளையை கொடுத்துட்டு இத்தனை நாள் தலைமறைவாக இருந்துட்டு இப்போ எதுக்கு இங்க வந்த???" என்று கேட்க அங்கிருந்த கதிரையில் சோர்ந்து போய் அமர்ந்தான் வில்லியம்.


"நான் ஜனனியை ஏமாற்ற நினைக்கல......உனக்கும், சூர்யாவுக்கும் நாங்க பண்ண பாவம் தான் எங்கள இப்படி ஆக்கிடுச்சு...." என்று வில்லியம் கூறவும் அவனை நம்பாமல் பார்த்தாள் வெண்ணிலா.


"நான் ஜனனியை காலேஜ் டேஸ்ல இருந்து லவ் பண்ணேன்....ஆனா அவ சூர்யா கூடவே சுத்திட்டு இருந்தா.....எப்படியாவது ஜனனி கூட க்ளோஸ் ஆகிடனும்னு நான் வெயிட் பண்ணேன்.....அப்போ தான் ஒரு ரெஸ்டாரண்ட்ல ஜனனியை தனியா மீட் பண்ண கிடைச்சது....அங்க வச்சு தான் ஜனனி சூர்யாவை பத்தி, உன்னை பத்தி சொன்னா......அவளுக்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி அவ கூட எப்படியாவது சேர்ந்துடனும்தான் நான் எல்லாம் பண்ணேன்......ஆனா கடவுள் எனக்கு நல்ல படிப்பினை தந்துட்டாரு.....அன்னைக்கு உனக்கு போட்டோஸ் பத்தி போன்ல பேசிட்டு நான் வரும் போது என் பைக் ஒரு லாரியோட மோதி ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு......


அதற்கு அப்புறம் எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.....கண் முழிச்சு பார்க்கும் போது ஹாஸ்பிடல்ல இருந்தேன்.....எங்கே இருக்கேன்னு கூட தெரியல.....அப்போதான் எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார்......நான் அஞ்சு, ஆறு மாசமா கோமால இருந்தேனாம்.....அதுவும் நீலகிரில....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல.....யார் கிட்ட போய் என்ன பேசுறதுனே தெரியல.....அந்த நிமிஷம் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் ஞாபகம் வந்தது.....உனக்கும், சூர்யாவுக்கும் நாங்க பண்ண துரோகம் தான் இதற்கு எல்லாம் காரணம்னு புரிஞ்சது.....ஹாஸ்பிடல்ல இருந்து வெளியே வரும்போது என் போன் மட்டும் தான் என் கையில் இருந்துச்சு.....உடனே ஜனனிக்கு போன் பண்ணுனேன்.....அவ போன் வேலை செய்யல....சூர்யாவோட நம்பர் எனக்கு தெரியல....அதனால உனக்கு போன் பண்ணேன்......ஆனா நீ நான் என்ன சொல்ல வரேனு கேட்காமலேயே போனை வச்சிட்ட.....திரும்ப உனக்கு ட்ரை பண்ணா போன் சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு.....சென்னைக்கு வரலாம்னு பார்த்தா கையில் சுத்தமாக காசு இல்லை.....கிடைச்ச வேலையை செஞ்சு சென்னைக்கு வர காசு சேர்த்தேன்...ஒரு மா நேத்து தான் சென்னை வந்தேன்....ஜனனியை எப்படி பார்ப்பேனு யோசிச்சு யோசிச்சு தயங்கி அவ வீட்டுக்கு இப்போதான் போனேன்.....அங்கே இருந்தவங்க ஜனனியை இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதாக சொன்னாங்க.....உயிரை கையில் பிடிச்சுட்டு ஓடி வந்தேன்....." என்று வில்லியம் கூறியதை கேட்டு வெண்ணிலா மலைத்துப் போய் நின்றாள்.


"ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கஷ்டத்தை சந்திச்சு தான் திருந்தனும்னு கடவுள் நம்ம தலையில் எழுதி இருக்கார் போல......" என்று வெண்ணிலா கூற வில்லியம் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.


ஆனால் கடவுள் மேலிருந்து வெண்ணிலாவைப் பார்த்து
"உன்னோட டர்ன் இன்னும் முடியலயேமா....." என்று கூறியது அவளுக்கு தெரியாதே......


அப்போது ஐ.சி.யூ வில் இருந்து வெளியே வந்த டாக்டர்
"ஸாரி மா....அவங்கள எங்களால காப்பாற்ற முடியல....அவங்க ஆரம்பத்திலேயே ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைச்சிருந்தா எங்களால ஏதாவது பண்ணி இருக்க முடியும்.....ஐ யம் ஸாரி....." என்று விட்டு செல்ல


"ஐயோ ஜனனி......." என்று தன் தலையில் அடித்துக் கொண்டு வில்லியம் கத்தினான்.


நர்ஸ் வந்து வெண்ணிலாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு சென்று விட வில்லியம் அருகில் வந்த வெண்ணிலா
"இனி இப்படி கண்ணீர் விடுறதால எதுவும் மாறாது வில்லியம்.....இனிமேலாவது நாம பண்ண தப்பை உணர்ந்து திருந்தி வாழனும்னு நினைச்சுக்கோங்க....." என்று கூற


அவளை நிமிர்ந்து பார்த்த வில்லியம்
"என் ஜனனி போனதுக்கு அப்புறம் எனக்கு இங்கே என்ன இருக்கு???? நான் மறுபடியும் நீலகிரிக்கே போயிடுறேன்....." என்று கூற வெண்ணிலா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.


"அப்போ குழந்தை????" என்று வெண்ணிலா வில்லியமை பார்த்து கேட்கவும்


கண்கள் கலங்க அவளைப் பார்த்த வில்லியம்
"அந்த குழந்தையை பார்க்குற தகுதி கூட எனக்கு இல்லை நிலா....அது தான் நான் பார்க்க கூடாதுனு கொண்டு போயிட்டாங்க போல....." என்று கூற வெண்ணிலா என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றாள்.


குழந்தை வைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே நின்று கண்ணாடி தடுப்பின் ஊடாக குழந்தையை பார்த்த வில்லியம் தன் கண்களை துடைத்து கொண்டு வெண்ணிலாவின் அருகில் வந்து
"நாங்க உனக்கு பண்ண துரோகத்துக்கு என் கூட நீ இவ்வளவு பொறுமையாக பேசுனதே பெரிசு நிலா.....ஜனனிக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் நான் செஞ்சு முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புறேன்.....நீங்க குழந்தையை....." என்று கூறியவன் அதற்கு மேல் பேச முடியாமல் வாயை மூடிக்கொண்டு அழ அவனை கூர்மையாக பார்த்தாள் வெண்ணிலா.


"நீங்க இன்னும் திருந்தவே இல்ல வில்லியம்.....நீங்க பண்ண தப்புக்கு குழந்தையை அனாதையாக நிற்கணுமா???? குழந்தைக்கு அம்மா, அப்பா தெரியாம நாளைக்கு அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டு நிற்கனும்னா நினைக்குறீங்க நீங்க???" என்று வெண்ணிலா கோபமாக கேட்கவும் அவசரமாக இல்லை என்று தலை அசைத்தான் வில்லியம்.


"ஜனனியும், நீங்களும் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான்.....ஆனா அதுக்காக ஒண்ணுமே தெரியாத அந்த பச்ச மண்ண தண்டிக்கணுமா???? ஜனனி கடைசியாக என் கிட்ட ஒரு விஷயம் சொன்னா......என் குழந்தையை என்னை மாதிரி பாசத்துக்கு ஏங்குற குழந்தையா வளர விட்டுறாதேனு சொன்னா.....அவ எந்த அர்த்தத்தில் சொன்னானு தெரியல.....ஆனா எப்போ குழந்தையை நான் என் கையில் வாங்குனேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இனி இந்த குழந்தை என் பொறுப்பு......" என்று வெண்ணிலா கூறவும்


அவளை அதிர்ச்சியாக பார்த்த வில்லியம்
"நிலா....." என்று கூற வர அவனைக் கை காட்டி பேச வேண்டாம் என தடுத்தாள் வெண்ணிலா.


"அனாதை ஆசிரமத்தில் இருக்குற ஒவ்வொரு குழந்தைங்களும் உங்களை மாதிரி ஆட்களால அனாதையாக்கப்பட்ட குழந்தைங்க தான்.....அந்த குழந்தைங்க தினம் தினம் எத்தனை கஷ்டம், எத்தனை அவமானப்படுதுனு உங்களுக்கு தெரியுமா???? நீங்க ஈசியா சொல்லிடுவீங்க ஆசிரமத்தில் பார்த்துப்பாங்கனு......ஆனா அந்த பச்ச குழந்தைங்க பாசத்துக்காக எவ்வளவு ஏங்குதுனு யாராவது யோசிக்குறாங்களா??? இல்லையே!!!! இளமை வேகத்தில் நீங்க எல்லாரும் ஏதோ பண்ணிட்டு போயிடுவீங்க.....நாளைக்கு சமூகத்தில் தலை குனிந்து நிற்கப் போறது நீங்க இல்ல....இந்த குழந்தைங்க தான்....." என்று வெண்ணிலா கூற வில்லியம் தலை குனிந்து நின்றான்.


"கடைசியாக ஒண்ணு சொல்றேன் வில்லியம்.....இவ்வளவு நேரம் நீங்க கவலையாக பேசும் போது எனக்கு உங்க மேல இருந்த கோபம் குறைஞ்சது.....ஆனா எப்போ குழந்தையை பற்றி பேசுனீங்களோ அப்போவே உங்க மேல இருந்த கொஞ்ச மரியாதையும் போயிடுச்சு.....இனி நீங்களா கேட்டாலும் குழந்தையை உங்க கிட்ட கொடுக்க மாட்டேன்.....லீகலா இந்த குழந்தையை நான் தத்தெடுத்து என் குழந்தையா வளர்க்கப் போறேன்....." என்று வெண்ணிலா கூறவும் வில்லியம் வாயடைத்துப் போய் நின்றான்.


அதன் பிறகு ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து ஜனனியின் உடலை வில்லியம் எடுத்து சென்று விட வெண்ணிலா குழந்தையையே கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு நின்றாள்.


அப்போது திரும்பி அவளருகில் வந்த வில்லியம்
"இனி உங்க லைப்ல நான் வரமாட்டேன்.....என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடுங்க....." என்று விட்டு சென்று விட வெண்ணிலா சோர்வுடன் சுவற்றில் சாய்ந்து நின்றாள்.


அப்போது அவளது தொலைபேசி அடிக்கவும் எடுத்து பார்த்தவள் வெற்றியின் பெயர் திரையில் ஒளிரவும் அவனிடம் என்ன சொல்வது என்று யோசனையோடு போனை பார்த்து கொண்டு நின்றாள்.


போன் கட் ஆகி மறுபடியும் அடிக்க தயங்கி படியே போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.


"நிலா....நிலா....எங்கமா இருக்க???" என்று வெற்றி பதட்டத்துடன் கேட்கவும்


வெண்ணிலா தயக்கத்துடன்
"வெற்றி....அது....நான் ஹாஸ்பிடல்ல....." என்று கூற


"ஹாஸ்பிடலா???? என்ன ஆச்சு உனக்கு????" என்று பதட்டமாக கேட்டான் வெற்றி.


"எனக்கு ஒண்ணும் ஆகல....அது....நீ விஜயா ஹாஸ்பிடல் வா.....எல்லாம் நேர்ல சொல்லுறேன்....." என்று வெண்ணிலா கூறவும் அடித்துப் பிடித்து கொண்டு வெற்றி எல்லோரையும் அழைத்து கொண்டு விஜயா ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.


வரும் வழியில் சூர்யாவையும் ஹாஸ்பிடல்க்கு வருமாறு சொன்ன வெற்றி மின்னல் வேகத்தில் ஹாஸ்பிடலை வந்தடைந்தான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
காலையில் சூரியன் மெல்ல மெல்ல தன் கூட்டில் இருந்து வெளியே எட்டிப் பார்ப்பது போல வெளிச்சத்தை பரப்ப ஆரம்பிப்பதை வெண்ணிலா ரசித்து பார்த்து கொண்டு நிற்க
"நிலா......" என்று ஓட்டமும், நடையுமாக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவளின் அருகில் வந்தனர்.


"அம்மா....அப்பா....." என்று வியப்பாக அவர்களை பார்த்த வெண்ணிலா


வெற்றியின் புறம் திரும்பி
"நான் உன்னை மட்டும் தானே வர சொன்னேன்.....வீணா எல்லாரையும் ஏன் வெற்றி அலைய வச்ச????" என்று கடிந்து கொள்ள


அவளருகில் வந்த ஆண்டாள்
"நிலா உனக்கு ஒண்ணும் இல்லை தானே டா....." என்று அவளை மேலும் கீழும் ஆராய்ந்து பார்த்தார்.


"அம்மா எனக்கு ஒண்ணும் இல்லை மா.....இந்த லூசு வெற்றி கிட்ட நான் தான் சொன்னேனே......எனக்கு ஒண்ணும் இல்லேனு....." என்று வெண்ணிலா வெற்றியை முறைத்து பார்த்து கொண்டே சொல்ல


வெற்றியோ
"அப்போ எதுக்கு நீ ஹாஸ்பிடல்க்கு வந்த????" என்று கேட்டான்.


வெண்ணிலா காரில் வரும் போது ஜனனியை பார்த்தது முதல் வில்லியம் தன்னிடம் கடைசியாக பேசியது வரை கூறி முடிக்க அங்கே கனத்த அமைதி நிலவியது.


ஆண்டாள் கால்கள் தள்ளாட அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொள்ள அவரருகில் வந்த வெண்ணிலா
"அம்மா.....நானும் தப்பு பண்ணி இருக்கேன்.....சூர்யாவை, உங்க எல்லாரையும் புரிஞ்சுக்காம ஏதேதோ கிறுக்குத்தனமா பண்ணிட்டேன்.....என்னை மன்னிச்சுடுமா...." என்று கூறவும்


அவளது தலையை வருடி கொடுத்த ஆண்டாள்
"எனக்கு உன் மேல கோபம் இல்லடா.....என் பொண்ணு வாழ்க்கை இப்படியே போயிடுமோனு கவலை தான்....ஆனா இப்போ வாழ்க்கையில் நீயா ஒரு முடிவு எடுத்திருக்கடா நிலா....ஆனா இந்த முடிவு உன்னோட வாழ்க்கையை பாதிச்சுடுச்சுனா...." என்று கவலையுடன் கேட்க


அவரை பார்த்து புன்னகத்து கொண்ட வெண்ணிலா
"அம்மா.....நான் என் வாழ்க்கையில் எடுத்த ஒரே நல்ல முடிவு இந்த குழந்தையை பற்றி தான் இருக்கும்....அதனால இந்த முடிவு எனக்கு எந்த கெடுதலும் தராதுனு நம்புறேன்....." என்று கூற அவளை ஆனந்தக் கண்ணீரோடு அணைத்துக் கொண்டார் ஆண்டாள்.


"என் பொண்ணு நிலா எவ்வளவு விவரமாக பேசுறா.....எனக்கு இதை விட வேற என்ன வேணும்???" என்று ஆண்டாள் மற்றும் வெண்ணிலாவின் அருகில் வந்து அழகர் கூறவும்


அழகர் மேல் சாய்ந்து கொண்ட வெண்ணிலா
"தாங்க்ஸ் பா......தாங்க்ஸ் மா....." என்று கூற வெற்றி தன் தங்கையை பெருமிதமாகப் பார்த்தான்.


சூழ்நிலையை சகஜமாக்கும் எண்ணத்தோடு
"எங்கே என்னோட மருமகன்....அய்யோ மருமகனா மருமகளானு தெரியலையே....." என்று வெற்றி யோசிப்பது போல கூறவும்


அவனது தலையில் தட்டிய அபிநயா
"உங்களுக்கு கொஞ்சம் கூட இடம், பொருள், ஏவலே தெரியல.....எவ்வளவு செண்டிமெண்டா பேசிட்டு இருக்காங்க.....நீங்க மொக்கையா டவுட் கேட்குறீங்க.....எப்படி தான் நீங்க கிரிமினல் லாயர் ஆகுனிங்களோ......" என்று நொடித்து கொள்ள


அழகரோ ஆண்டாளிடம் கூறுவது போல
"பார்த்தியா என் பையன் திட்டு வாங்குறதும் என்னை மாதிரியே...." என்று கூறவும்


"இதெல்லாம் ஒரு பெருமையா???" என்று ஆண்டாள் தன் தலையில் அடித்துக் கொண்டார்.


இதை பார்த்து வெண்ணிலா மனம் விட்டு சிரிக்க அத்தனை நேரம் அங்கிருந்த கடின நிலை மாறி சந்தோஷ உணர்வு எல்லோர் மனதிலும் குடி கொண்டது.


வெண்ணிலா சந்தோஷமாக இருந்தால் விதிக்கு கை, கால் ஓடாது அல்லவா????


அதனால் தான் அந்த நேரம் பார்த்து சரியாக சூர்யாவின் கார் ஹாஸ்பிடல் காம்பவுண்டை தாண்டி உள் வந்தது.


வெற்றியை தூரத்திலேயே கண்டு கொண்ட சூர்யா அவர்கள் அருகில் வந்து சேர்ந்தான்.


அபிநயாவின் தோளில் சாய்ந்து அரைத் தூக்கத்தில் தூங்கி கொண்டிருந்த வைபவ் சூர்யாவை கண்டு கொண்டதும்
"சன் மாமா....." என்று பாய்ந்து இறங்கி கொள்ள எல்லோரது கவனமும் சூர்யாவின் புறம் சென்றது.


வெண்ணிலா சூர்யாவை கண்டதும் அவனை ஓடிச்சென்று கட்டி கொள்ள சூர்யா நடப்பது கனவா? நிஜமா? என்று புரியாமல் நின்றான்.


சூர்யாவின் கைகள் தன் மேல் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட வெண்ணிலா கவலையுடன் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ விறைப்பாக நின்று கொண்டிருந்தான்.


வெண்ணிலா ஏமாற்றத்துடன் அவனிடமிருந்து விலகி நிற்க வெற்றியின் அருகில் வந்த சூர்யா
"எதுக்கு வெற்றி வரச் சொன்ன???" என்று கேட்டான்.


வெண்ணிலாவையும், சூர்யாவையும் மாறி மாறி பார்த்த வெற்றி
"நிலா உன் கிட்ட ஏதோ சொல்ல வர்றா.....அத முதல்ல கேளு....." என்று கூறினான்.


"என்னை போன் போட்டு வரச் சொன்னது நீ......இப்போ யாரோ பேசணும்னு சொல்ற???" என்று சூர்யா கோபமாக கூறவும்
சூர்யாவின் யாரோ என்ற வார்த்தையில் வெண்ணிலா முற்றாக உடைந்து போனாள்.


"சூர்யா...." என்று அபிநயா அவனை அதட்ட


அவளை தன் பார்வையாலேயே அடக்கிய சூர்யா
"இன்னைக்கு நைட் எனக்கு ஜேர்மனுக்கு போற பிளைட்.....எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கும் போது போன் பண்ணி வர சொல்லி இப்படி என் டைமை வேஸ்ட் பண்ணுறீங்களே....." என்று கோபமாக கூறவும்


அவன் முன்னால் வந்து நின்ற வெண்ணிலா
"நான் யாரோவா தேவ்????" என்று கேட்டாள்.


வெண்ணிலாவின் கலங்கிய முகத்தை பார்க்க துணிவின்றி தன் முகத்தை வேறு புறமாக திருப்பி கொண்ட சூர்யா எதுவும் பேசாமல் நின்றான்.


"நான் பண்ணது தப்பு தான் சூர்யா.....உங்களை புரிஞ்சுக்காம......" என்ற வெண்ணிலாவை வித்தியாசமாக
பார்த்த சூர்யா
"என்ன திடீர்னு ஞானோதயம்???" என்று கேட்டான்.


வெண்ணிலா தலை குனிந்து கொள்ள அவள் தாடையைப் பற்றி அவள் முகத்தை நிமிர்த்திய சூர்யா "ஜனனி எல்லாம் சொல்லிட்டா போல....." என்று கேட்கவும் ஆம் என்று தலை அசைத்தாள் வெண்ணிலா.


"அது தானே பார்த்தேன்.....நீ சொந்தமாக யோசிக்க மாட்டியே....." என்று சூர்யா கூறவும் அவனை வேதனையுடன் பார்த்தாள் வெண்ணிலா.


"நான் என்ன நடந்தாலும் உன்னை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு போக நினைச்சது இல்ல.....ஆனா நீ ஒரே செக்கன்ல என்னை தூக்கி எறிஞ்சுட்டு போனே.....அதற்கு அப்புறம் தான் யோசிச்சேன்......எந்த தப்பும் பண்ணாம நான் ஏன் இப்படி இருக்கணும்னு.....அதனால தான் நீ ஒரு விஷயம் பண்ணா அதை திருப்பி உனக்கே கொண்டு வந்தேன்....நான் உன்னை எந்தளவுக்கு லவ் பண்ணேனு தெரியுமா உனக்கு......ஜனனி கூட என்னை.....எப்படி உன்னால இதை நம்ப முடிஞ்சது நிலா??? நான் வேற எந்த விஷயத்தை வேணா மன்னிச்சு மறந்துடுவேன்.....ஆனா ஜனனியோட குழந்தைக்கு....என்னை.....ஜனனியை நான் எந்தளவுக்கு நம்பினேன்....அவ தான் எனக்கு துரோகம் பண்ணுணா.....ஆனா நீ...." என்று சூர்யா குரல் கம்ம கூற வெண்ணிலாவின் கண்கள் கண்ணீர் அருவியாக வடிந்தது.


என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி

சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை

என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை

கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்

வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்

எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்

என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்

சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே

தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே

ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்

என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்

என்னை தீண்டாதே என்னை பார்காதே
ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்


"பாஸ்ட் இஸ் பாஸ்ட்.....நீங்க தான் லீகலா என்னை டிவோர்ஸ் பண்ணிட்டீங்களே மிஸ். வெண்ணிலா.....இனி திரும்ப இதை ஒட்ட வைக்க நினைக்காதீங்க....." என்று விட்டு சூர்யா வேகமாக வெளியேறி செல்ல போக அவன் முன்னால் வந்த நின்று வெற்றியும், அபிநயாவுமஎ அவனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.


வெண்ணிலாவோ திக் பிரமை பிடித்தாற் போல உறைந்து நிற்க ஆண்டாள் தலையில் கை வைத்து கொண்டு கதிரையில் தொப்பென்று அமர்ந்தார்.


அழகர் என்ன செய்வது என்று புரியாமல் தன் மகளை பார்த்து கொண்டு நிற்க நர்ஸ் ஒருவர் வந்து வெண்ணிலாவை அழைத்து கொண்டு சென்றார்.


சிறிது நேரத்தில் குழந்தையோடு வெண்ணிலா வெளியே வர சூர்யா அதிர்ச்சியாக வெண்ணிலாவைப் பார்த்தான்.


சூர்யாவின் அதிர்ச்சியை கண்டு கொண்ட வெற்றி ஹாஸ்பிடலில் நடந்தவற்றை கூற அவனோ பலவிதமான முகபாவனைகளை காட்டி விட்டு இறுதியில் கல் போல இறுக்கமாக நின்று கொண்டிருந்தான்.


வெண்ணிலாவின் அருகில் வந்த சூர்யா குழந்தையை ஒரு தடவை ஆழ்ந்து பார்த்து விட்டு கண்களை மூடிக்கொண்டான்.


கண்களை திறந்த சூர்யா வெண்ணிலாவை பார்த்து
"கடைசியாக உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்......" என்று கூறவும் அவளோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.


"அவசரப்படாதே.....ஒரு கன்டிசன்.....நீ மட்டும் தனியாக வா நான் உன்னை ஏத்துக்குறேன்....." என்று சூர்யா கூறவும்


"எனக்கு புரியல.....தனியாகனா???? எப்படி???" என்று கேட்டாள் வெண்ணிலா.


"ஜனனியை பற்றிய எந்த விடயங்களும் உன் கூட இருக்க கூடாது....." என்று சூர்யா கூற
அதிர்ச்சியடைந்து போன வெண்ணிலா


"குழந்தை....குழந்தை.....இல்லாமலா????" என்று கேட்கவும்
ஆம் என்று தலை அசைத்தான் சூர்யா.


"என்ன பேசுறீங்க சூர்யா???? குழந்தையை விட்டுட்டு வர்றதா??? இந்த குழந்தைக்கு நான் தான் பொறுப்பு....இது என்னோட குழந்தையா தான் நான் பார்க்குறேன்.....நீங்க வேணும்னே இப்படி பண்ணுறீங்க....." என்று விசும்பலோடு வெண்ணிலா கூறவும்


அவளை கண் சிமிட்டாது பார்த்த சூர்யா

"நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.....நைட் ஒன்பது மணிக்கு பிளைட்.....உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணுறேன்.....நான் சொன்ன படி தனியா வர்றதுனா எல்லாம் ரெடி பண்ணிட்டு ஏர்போர்ட் வா.....இல்லையா இன்னையோட இந்த சூர்யாவை மறந்துடு...." என்று விட்டு சென்று விட கையில் இருந்த குழந்தையை தன்னோடு அணைத்துக் கொண்ட வெண்ணிலா நடந்து செல்லும் சூர்யாவையே வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top